1,046 views

அன்பினி அசையாமல் கைகள் இரண்டையும் முட்டியில் வைத்து கொண்டு தலைக்கவிழுந்து அமர்ந்திருக்க, அவளோடு நெருங்கி அமர்ந்தவன் “அன்பு” என கைகளை தொட்டான். 
 
 
அக்னி சுதாரிப்பதற்குள் தலை நிமிர்ந்தவள் புயலாய் கன்னத்தை சாத்திவிட்டு மீண்டும் தலை குனிந்தாள். விண்வென்று வலி கொடுத்த போதிலும், “சாரி அன்பு” என்று மீண்டும் தொட,
 
சத்தம் அறை முழுவதும் பளிர் என்று கேட்டது அவள் அடித்த அடியில். நிமிர்ந்தவள் முகம் சிவந்திருந்தது அழுகையில். கண்கள் குங்குமம் பூசியது போல் சிவப்பு நிறத்தில் இருக்க முதல் தடவை பார்க்கிறான் அன்பினிசித்திரை அழுது. மனம் எல்லாம் அதில் பதற, தொடுவதற்காக கையை உயர்த்தினான். 
 
“இன்னொரு தடவை என்னை தொட்டினா இந்த இடத்துல இருந்து அப்படியே குதிச்சு செத்துருவேன்.”என்றவள் வாசகத்தில் கையை தன் புறம் எடுத்துக் கொண்டான் அக்னி. 
 
“என்னடா நினைச்சிட்டு இருக்க நான் என்ன உனக்கு கொத்தடிமையா. நானும் பார்த்துட்டு இருக்கேன் உன் இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்க. என்ன உனக்கு மட்டும் தான் கோபம் வருமா? என் கோபத்தை காட்டினா தாங்குவியா நீ” என்றவள் அவன் சட்டையை பிடித்து உழுக்க,
 
பிடித்திருக்கும் அவள் கை மீது கை வைத்தவன் பேச முயல வேகமாக அந்த கையை தட்டி விட்டவள், “சொல்றேன்ல என்னை தொடாதன்னு.” என்று தன் கோபம் மொத்தத்தையும் கொட்டினாள் அவனிடம். அவள் அடிக்கும் ஒவ்வொரு அடியையும் வாங்கிக் கொண்டவன் அமைதியாக பார்த்திருந்தான். 
 
 
“ஊர்ல உன்ன விட்டா வேற ஆம்பளையே இல்லையா! உன் பின்னாடி வந்ததால ஆணவத்துல பண்ணிக்கிட்டு இருக்க. எல்லார் முன்னாடியும் உன்ன அவமானப்படுத்த எவ்ளோ நேரம் ஆகும் எனக்கு. மனசுல இருக்க காதல் அதை செய்யவிடாம தடுக்குது.” என்றவள் அழுகையில் மீண்டும் தலை கவிழ்ந்தாள்.
 
அமைதியாக அழுது கொண்டிருந்தவள் சத்தமிட்டு அழுக, “அன்பு எவ்ளோ வேணா அடி அழுகை
மட்டும் செய்யாதடி. நீ அழுது நான் பார்த்ததே இல்லை.” என்றவன் அவள் தலையை நிமிர்த்த முயன்றான்.
 
 
வேகமாக அவனை தரையில் தள்ளி விட்டவள், “உன்ன லவ் பண்ண நாள்ல இருந்து இப்ப வரைக்கும் அழுதுட்டு மட்டும் தான் டா இருக்கேன்.” என்று கத்தினாள். 
 
கோபம் குறையாதவள் தரையில் விழுந்தவன் சட்டையைப் பிடித்து, “என்னடா அப்படி நான் தப்பு பண்ணிட்டேன்?… சொல்லு என்ன தப்பு பண்ணிட்டேன்?” என்று நேராக அவன் முகத்தை பார்த்து,
 
 
 
“நீ ஹாஸ்பிடல்ல இருக்கும் போது நான் தான் வந்து பணம் கொடுத்தன்னு தெரிஞ்சு தான அன்பு அன்புன்னு உருகுன. அந்த வார்த்தை தான் அன்னைக்கு உன்னை கிஸ் பண்ணு காரணம் தெரியுமா?”என்ற அன்பினியின் ஆக்ரோஷமான சத்தம் கீழே இருக்கும் அனைவருக்கும் கேட்டது. 
 
 
அன்னபூரணி அழுகையோடு தன் மகளைக் காண, அவரோ சங்கடத்தோடு அமர்ந்திருந்தார். நந்தினி செய்வதறியா நிலையில் தன் மகனை அழைத்து உடனே வர சொல்லி இருந்தார். 
 
 
 
 
மணிவண்ணன் எதையும் கேட்க விரும்பாமல் வெளியில் சென்று விட, திவ்யா தன்னறையில் இருந்தாள்.
 
 
“அன்னைக்கு மண்டப வாசல்ல என் காதலை சொல்லும் போது மூஞ்சில அடிச்ச மாதிரி உன்னை எனக்கு பிடிக்கலன்னு சொல்லிட்டு போக வேண்டியது தான ஏண்டா அமைதியா போன.” என்றதும் தலை கவிழ்ந்தான் அக்னி.
 
 
அதை பார்த்து இன்னும் கோபம் ஏறியது அன்பினிக்கு. கன்னத்தில் அறைந்தவள், “என்ன பாருடா.” என்று மீண்டும் அடித்தாள்.
 
அவன் நெஞ்சில் கை வைத்தவள், “மனச்சாட்சியோட சொல்லுடா நீ என்னை லவ் பண்ணல.” என்று கேட்க, மௌனமாக தலை அசைத்தான் அக்னி.
 
அடித்த கன்னத்தில் மீண்டும் அடித்து, “உண்மையா லவ் பண்றவன் தான் தாலிய கழட்ட வருவானா? அத்தனை பேருக்கு முன்னாடி அவமானப்படுத்துவனா? ஒட்டிக்கிட்டு வந்த, ஓடி வந்தன்னு அசிங்கமா பேசுவானா?” அடித் தொண்டையில் சீறினாள்.
 
“அன்பு!” என்று அக்னி ஆரம்பித்ததும் அடக்கி வைத்திருந்த அத்தனை கோபத்தையும் காட்டினாள் கை வலிக்கும் வரை அடித்து.
 
 
“இனி ஒரு தடவை என்னை அன்புன்னு சொன்ன என் கையாலயே கொன்றுவேன்.”என்றவள் கேள்விகளை தொடர்ந்தாள்…
 
 
 
 
“நான் உன்னை ரசிக்கிறேன் உன் பின்னாடி வரேன்னு தெரியும். நீ ஆபிஸ்ல இல்லாத நாள் உன் வீட்டு வாசல்ல நாய் மாதிரி உனக்காக காத்துட்டு இருந்தேன்னு தெரியும். எனக்கு எல்லா உண்மையும் தெரியும்னு நல்லா தெரியும். நீ என்னை காதலிக்கிறது எனக்கும் தெரியும்னு தெரியும். எல்லாம் தெரிஞ்சு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ண போன நீ நல்லவன். என்ன நடந்தாலும் பரவால்ல காதலிச்சவனை கைபிடிக்கணும்னு போராடி கட்டிகிட்ட நான் கெட்டவள் அப்படி தான.” என்று வெறிக்கொண்டு கத்த துவங்கினாள்.
 
அந்த நேரம் உள்ளே வந்த விக்ரம் என்னவென்று விசாரிக்க, மகனிடம் எதையும் சொல்லாத நந்தினி அங்கிருந்து வெளியேறினார்.
 
“வாழ்க்கையில நான் பண்ண பெரிய தப்பு உன்னை காதலிச்சது தான். அதைவிட பெரிய தப்பு முதல் தடவை நீ என்னை அசிங்கப்படுத்தும் போது திருப்பி கொடுக்காம விட்டது.” என்ற அன்பினியின் குரலில் விவரிக்க முடியாத வலி சூழ்ந்து கொண்டது. 
 
“சாரி” சத்தம் வெளிவராமல் அக்னி உதட்டோடு முனங்க அவை கேட்டது அன்பினிக்கு. 
 
“சாரி சொல்லிட்டா எல்லாம் முடிஞ்சிடுச்சு அப்படித்தான அக்னி. ஒவ்வொரு தடவையும் யாரு முன்னாடியாவது அசிங்கப்படுத்திட்டு தனியா வந்து சாரி கேட்க வேண்டியது. இனியும் உன் வார்த்தையை நம்பி என்ன நானே அசிங்கப்படுத்திக்க தயாரா இல்லை.” என்றவள் அவனை விட்டு நகர,
 
கைப்பிடித்து தடுத்த அக்னி, “பனிஷ்மென்ட் கொடு அன்பு ஏத்துகிறேன்.” என்றான் கண்கள் கலங்க.
 
 
“நீ என்ன தப்பு பண்ண பனிஷ்மென்ட் கொடுக்க. தப்பு பண்ணது எல்லாமே நான்தான். தன்மானத்தை இழந்துட்டு உன்கிட்ட வந்ததுக்கான தண்டனையை நான் தான் அனுபவிக்கணும்.” 
 
“இனிமே இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன் அன்பு.” 
 
” என்ன வேணா பண்ணு அக்னி. இனி நான் உன் கூட இருந்தா தான எனக்கு தெரியும்.” என்ற வார்த்தையில் அவசரமாக எழுந்த அக்னி, “அன்பு ” என்றான் அதிர்வோடு. 
 
 
“எனக்கு நீ வேணாம். உன்னை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. எனக்கு நீ தகுதியானவன் இல்லை. நம்ம விவாகரத்து பண்ணிக்கலாம்.” என்றாள் அழுகையோடு.
 
“ஏய்!” என்றவன் வேகமாக அவள் அருகில் செல்ல,
 
“இதுக்கு மேல ஆர்கியுமென்ட் வேணான்னு நினைக்கிறேன். நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது அக்னி பிரிஞ்சிடலாம்‌.” என்றவள் தன் ஆடைகளை எடுத்து வைக்கும் வேலையில் இறங்கினாள்.
 
“அன்பு இந்த சண்டைக்கு எல்லாம் டிவோர்ஸ் ரொம்ப அதிகம் டி.” என்றவன் அவள் எடுத்து வைக்கும் ஆடைகளை மீண்டும் அலமாரியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
 
“வேற எதுக்கு டிவோர்ஸ் வேணும் அக்னி. புருஷன் என்ற உரிமையில நீ பல பேருக்கு முன்னாடி என்னை அவமானப்படுத்துவ அதெல்லாம் பொறுத்துக்கிட்டு குடும்பம் நடத்தனுமா. ” பேசிக்கொண்டு தன் பொருட்களை பெட்டியில் அடுக்கினாள்.
 
அதை மீண்டும் எடுத்து அலமாரியில் வைத்தவன், “இனிமே பண்ண மாட்டேன் அன்பு ஒரு தடவை மட்டும் மன்னிச்சு விடு ப்ளீஸ்.” என்றான்.
 
“உன்னை மன்னிக்க நான் யாரு.” 
 
“என் பொண்டாட்டி.”
 
“எதை வச்சு பொண்டாட்டி னு சொல்ற. நான் என்ன உன் அம்மா பார்த்த பொண்ணா இல்ல உன் அப்பா பார்த்த பொண்ணா. ஓடி வந்தவளுக்கு எல்லாம் பொண்டாட்டி ஸ்தானத்தை கொடுக்காதீங்க மிஸ்டர் அக்னி.” என்று அவன் மனதை சரமாரியாக தாக்கினாள்.
 
பேச முடியாமல் அமைதி காத்த அக்னி, “எல்லா தப்பும் என்னோடது தான் அன்பு. இனிமே சத்தியமா உன்கிட்ட கோபப்பட மாட்டேன். இந்த ஒரு தடவை மட்டும் எனக்காக விடு அன்பு.” என்று கெஞ்ச, அதையெல்லாம் உதாசீனம் படுத்திய அன்பினி அவனையும் மீறி தன் பொருட்களை எடுத்து வைத்தாள்.
 
“கோர்ட்ல சந்திப்போம்.” என்றவள் கதவை திறக்க, வேகமாக அக்கதவை மூடியவன் கெஞ்ச துவங்கினான் விடாமல். அவள் கண்டு கொள்ளாமல் கதவை திறப்பதிலேயே மும்முரமாக இருக்க, அவள் முன்பு முட்டி போட்டவன்,
 
“ப்ளீஸ் டி போகாத. ” என்றான்.
 
அவள் பதில் பேசாமல் வேறு புறம் திரும்பிக் கொள்ள, “இதுக்கு முன்னாடி பண்ண எல்லாத்துக்கும் நான் பொறுப்பு ஏற்றுக்கிறேன். ஆனா இன்னைக்கு நடந்தது என்னையும் மீறி நடந்துடுச்சு அன்பு. அந்த மகேஷ் நீ என்னை விட்டு போயிடுவன்னு சொன்னான். அந்த கோபத்துல அவனை நல்லா அடிச்சிட்டு இங்க வந்தேன். கோபம் குறையுறதுக்கு முன்னாடி நீ வந்து பேசவும் கண்ட்ரோல் பண்ண முடியாம அப்படி பண்ணிட்டேன் அன்பு. சத்தியமா சொல்றேன் வேணும்னு பண்ணல டி.” என்றவனுக்கும் கண்கள் கலங்க, அவள் வயிற்றோடு முகத்தை புதைத்துக் கொண்டான். 
 
 
இந்த முறை அன்பினியின் மனம் சிறிதும் இறங்கவில்லை. அவன் அழுவதை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் விலகியவள், “எதுக்கு இந்த டிராமா அக்னி. உன் வேலையை நீ பாரு என் வேலையை நான் பார்க்கிறேன்.” என்று கதவை திறந்தாள்.
 
அவள் பின்னால் நின்ற அக்னி கழுத்தை வேகமாக பிடித்து தன் புறம் திருப்பி, “சொல்லிட்டே இருக்கேன் கண்டுக்காம போற என்னடி திமிரா.” என்று கோபத்தை உமிழ,
 
“இதான் நீ உன்ன என்னைக்கும் மாத்த முடியாது.”என்று விலக முயன்றாள்.
 
துளிர்விட்ட கோபம் அதிகரிக்க, “தெரிஞ்சு தான கல்யாணம் பண்ண இப்ப என்ன புதுசா! கதவை தாண்டி கால் போச்சு வெட்டிடுவேன்.” என்றான்.
 
அதில் அன்பினிக்கு கோபம் துளிர் விட, “உன்னால முடிஞ்சா பண்ணி பாரு.” என்று அவனை தள்ளி விட்டவள் ஒரு அடி நகர,
 
“என்னை மீறி போய்டுவியா நீ” என்றான் அவளை பின் நின்று அணைத்தவாறு.
 
“விடுடா” என்று அன்பினி துள்ளி குதிக்க, அதைக் கண்டு கொள்ளாமல் கதவை சாற்றியவன் தூக்கிக் கொண்டான் கைகளில். 
 
“நீயா வந்து கல்யாணம் பண்ணுவ நீயா கிளம்பி போவ என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. மரியாதையா என் கூட குடும்பம் நடத்து.” என்று அவளை மெத்தையில் தூக்கி போட்டான். 
 
உடனே எழுந்து அமர்ந்தவள் அவன் கன்னத்தில் ஓங்கி அடித்து, “உன்னோட திமிருக்கு நான் அடங்கிப் போவன்னு நினைக்காத. மரியாதையா விலகி இரு. இல்லன்னா அவ்ளோ தான்.” என்று மிரட்டினாள்.
 
காதில் வாங்காதவன் அவள் மீது கை போட்டுக் கொண்டு மெத்தையில் சரிந்தான். படுத்த வேகத்தில் மீண்டும் எழுந்த அன்பினி அவனை சீற்றத்தோடு எதிர்கொண்டாள். அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்ட அக்னி,
 
“அதான் அடிச்சிட்டல சண்டை முடிஞ்சுது வா தூங்கலாம்.” என்றான் சாதாரணமாக. 
 
அருவருப்பான பார்வையை அவன் மீது செலுத்தியவள், “நீ எல்லாம் என்ன ஜென்மம்.” என்று கட்டிலை விட்டு இறங்கினாள்.
 
அவள் சென்று விடுவாளோ என ஓடியவன், “அன்பு போதும் எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம் இப்ப நீ கோவமா இருக்க.” என்று கட்டிப்பிடிக்க,
 
அவன் கைக்கு சிக்காமல் விலகியவள் , “தொடுற வேலை வச்சுக்காத.” என்றாள் மிரட்டலோடு.
 
“என்னடி பண்ணுவ தொட்டா.” என்றவன் வலுக்கட்டாயமாக அவளை சிறை பிடிக்க,
 
“அத்தை” என்று கத்த துவங்கினாள்.
 
அன்பினியின் வாயை மூடியவன் ‘கத்தாதே’ என்பது போல் சைகை செய்ய அந்த கையை கடித்து கோபத்தை தீர்த்துக் கொண்டவள் மீண்டும் “அத்தை” என்று அழைக்க வர சிறை பிடித்துக் கொண்டான் பேச்சுக்களை.
 
அன்பினி சரமாரியாக அடித்துக் கொண்டிருக்க, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவள் உதட்டை சுவைக்க துவங்கினான். 
 
 
தன்னை விடாமல் தாக்கிக் கொண்டிருக்கும் கைகளை பிடித்துக் கொண்டவன் தனக்கு போதும் என்று தோன்றும் வரை இடைவிடாமல் வதைத்தான். அவள் மூச்சு காற்றுக்கு சிரமம் கொள்கிறாள் என்பதை உணர்ந்து விலகியவன், 
 
“அப்படியெல்லாம் என் பொண்டாட்டிய தொடாம இருக்க முடியாது. நான் தொடுவேன் எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. உனக்கு பிடிக்கலைன்னா நீ தொடாத போடி.” என்று தள்ளிவிட்டு மீண்டும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.
 
அன்பினி கண்களில் இருந்து நீர் கொட்டுவதை உணர்ந்தவன், “அழாத அன்பு.” என்று அந்த கண்களுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான் தொடர்ந்து.
 
“ப்ச்!” என தள்ளிவிட்டு அன்பினி அவனை விட்டு நகர, “எங்கடி போற இங்க வா மாமா கிட்ட.” என இழுத்துச் சென்றவன் கண்ணாடி முன்பு நிறுத்தினான். 
 
அன்பினி தோள்பட்டையில் முகம் வைத்தவன், “அன்பு சாரி” என்று தனக்கு வாகாக இருக்கும் கன்னத்தில் முத்தம் வைக்க, திருப்பிக் கொண்டாள் தலையை அவள்.
 
 
“இங்க பாரு.” 
 
“பாரு டி.” என்று அவள் முகத்தை திருப்பி கண்ணாடியை பார்க்க வைத்தவன், “எவ்ளோ அழகான ஜோடி பொருத்தம். இதை போய் வேணாம்னு டிவோர்ஸ் கேக்குறியே” என ஐஸ் வைத்தான்.
 
அதை ஏற்காத அன்பினி முறைக்க, “அப்படியெல்லாம் ரொமான்டிக்கா பார்க்காத கிஸ் பண்ணிடுவேன்.” என்றதும் இன்னும் முறைத்தாள்.
 
“என்னடி புருஷன் பேச்சைக் கேட்காம அப்படியே பார்த்துகிட்டு இருக்க.” என அவள் கன்னத்தை கடிக்க, ஓங்கி அறைந்தாள் அன்பினி.
 
வாங்கிக் கொண்டவன் சிரித்த முகத்தோடு கடித்த இடத்தில் முத்தம் வைத்து, “நீ அப்படி அடி நான் இப்படி அடிக்கிறேன்.” என்று தன் முத்தத்தை தொடர்ந்தான் முகம் எங்கும்.
 
தடுத்துக் கொண்டிருந்த அன்பினியின் கைகளை பின்னால் பிடித்துக் கொண்டவன் கண்ணாடியை பார்த்துக் கொண்டு, “உண்மையா மனம் வருந்தி கேட்கிறேன் அன்பு சாரி‌. உனக்கு கோபம் போகலைன்னா எவ்ளோ வேணா அடிச்சு திட்டு. போறன்னுலாம் சொல்லாதடி வலிக்குது.”என்றவனின் விழிகளை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அன்பினி.
 
 
அவள் பார்க்கிறாள் என்பதை உணர்ந்தவன், “லவ் யூ சோ மச் அன்பு.” என்றான் காதலோடு.
 
 
அதைக் கேட்டவள் பதில் ஏதும் உரைக்காமல் மௌனமாக அழுது தலைகுனிய, தன் புறம் திருப்பியவன், கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்து முத்தமிட்டான்.
 
“தயவு செஞ்சு என் உணர்வோட விளையாடாம தள்ளிப்போ!” அன்பினி உருக்கமாக கூற,
 
“அதே தாண்டி உனக்கும். என்னை விட்டு போறன்னு சொல்லி சாகடிக்காம கூடவே இரு.” என்று இடை நிறுத்தாமல் அவளோடு இணைந்து செல்ல, விலக முயற்சித்துக் கொண்டே இருந்தாள்.
 
 
“சும்மா இரு அன்பு” என்ற அக்னி காயம் பட்ட மனைவியின் மனதை மாற்றும் எண்ணத்தோடு மருந்து இட்டுக் கொண்டிருக்க, எதிர்ப்புகள் குறைந்தது அவளிடம்.
 
இருப்பினும் கண்ணில் மட்டும் நீர் அருவி போல் கொட்டிக் கொண்டிருக்க, குழந்தை போல் தூக்கிக் கொண்டவன், “நீ அழாம இருக்கணும்னா நான் என்ன பண்ணனும்னு.” என்றான் காதோரம்.
 
 
“என்னை விட்டு மொத்தமா போயிடு.” என்றாள்.
 
“முடியாது” என அக்னி கட்டிக் கொள்ள, பதில் பேசாமல் அவள் அமைதியாக இருந்தாள். கதவை திறந்தவன் வெளியில் யார் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தான். யாரும் இல்லாமல் இருக்க தூக்கிக்கொண்டு படி இறங்கினான்.
 
வெளியில் வந்ததும் பதறிய அன்பினி, “விடு யாராது பார்க்கப் போறாங்க.” என்று இறங்க முயன்றாள்.
 
“பார்த்தா பார்க்கட்டும்.” என்றவன் அவள் கதறுவதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் நடு ரோட்டிற்கு வந்து விட்டான். 
 
அவஸ்தை ஆக உணர்ந்தவள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக இறங்க முயன்றாள். அவளுக்கு சிரமம் வைக்காதவன் இறக்கி விட, “கொஞ்சம் கூட அறிவில்லையா உனக்கு.” என்றதோடு வீட்டிற்கு செல்ல நகர, நடுரோட்டில் மண்டியிட்டான் அக்னி.
 
 
பதறி விலகியவள் அவனை எழும்படி கூற, கையை வலது புறம் நகர்த்தினான் அக்னி. அவன் கையிருக்கும் பக்கம் பார்வை திரும்ப அவள் சொல்லிக் கொடுத்த நிழல் உருவங்கள் அவளையே ஆச்சரியப்படுத்தியது. அன்பினி நின்று கொண்டிருக்க, ஒரு காலை மடக்கி மண்டியிட்டு இருக்கும் அக்னி லேசாக சிரிக்க அதில் நிழல் அசைய ஆரம்பித்தது.
 
 
அன்பினி பார்ப்பதை அறிந்தவன் அவள் கையை தாங்கிக் கொள்ள கை நீட்ட, நிழலில் அப்பட்டமாக காதல் தெறித்தது. அந்த நிழல் உருவங்களை பார்த்துக் கொண்டிருந்தவள் மனம் அவன் புறம் சாய கைகளை நீட்டினாள் நிழலை சேர்க்கும் படி. நிஜத்தில் இருவரின் கைகளும் நெருங்காமல் இருக்க, ஆண்டாண்டு காலம் உலக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண் மண்டியிட்டு கை பிடித்துக் கொண்டு பெண் நின்றிருக்கும் காதல் சின்னம் அரங்கேறியது அங்கு நிழலில்.
 
 
அதை மேலும் அழகுப்படுத்தினான் இணைந்திருக்கும் கைகளுக்கு முத்தம் கொடுக்கும் உருவத்தை அவளுக்கு காண்பித்து. கண்ணில் விழாமல் நீர் சிந்தி கொண்டிருக்க, 
 
 
“நான் செஞ்ச எல்லாத்தையும் நியாயப்படுத்த விரும்பல. ஆனா உன்னை நேசிக்கிறது உண்மை. ஆசைப்பட்டு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க போகல என் சூழ்நிலை உன்கிட்ட விருப்பத்தை சொல்ல விடாம பண்ணிடுச்சு. ஒருவேளை அந்த பொண்ணு என் வாழ்க்கைக்குள் வந்திருந்தா நிச்சயம் என் குடும்பத்திற்காகவும் என்ன நம்பி வந்த பொண்ணுக்காகவும் வாழ்ந்திருப்பேன். ஆனா இந்த நிமிஷம் உன் முன்னாடி இருக்க அக்னி எப்பவும் அந்த வாழ்க்கைக்கு தேவைப்பட்டிருக்க மாட்டான். 
 
 
எனக்கு தெரியல அன்பு எப்படி புரிய வைக்கிறதுன்னு. மனசு முழுக்க நீ இருக்க நிஜத்துல காட்ட முடியல. அம்மா கிட்ட கோபத்துல தான் அப்படி சொன்னேன் உன் இடத்துல வேற எந்த பொண்ணு இருந்திருந்தாலும் நிச்சயம் தாலி கட்டி இருக்க மாட்டேன். தெரிஞ்சே தப்பு பண்ணிட்டேன் என்ன பண்ணா நீ என்னை மன்னிப்பன்னு சொல்லுடா பண்றேன்.” என்று அவளிடம் மன்னிப்பைப் பெற மன்றாடினான்.
 
 
அவள் பதிலுக்காக அக்னி ஏக்கமாக பார்த்திருக்க, சொன்னாள் இதுவரை அடிக்காத கன்னத்தில் அடித்து. உடனே அக்னியின் ஐவிரல்களும் கன்னத்தை குளிர்விக்க ஒட்டிக்கொள்ள… ஓடினாள் தன்னறைக்கு திரும்பி.
 
 
 
பெருமூச்சு விட்டவன் அவள் பின்னே ஓடிவந்து சரியாக தன் அறை வாசலில் கால் வைக்கும் நேரம் கரண்ட் கட் ஆனது. அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியாமல், “அன்பு” என்றழைக்க, அடுத்த நொடி வேகமாக மோதினாள் அவனோடு.
 
இறுக்கமாக கட்டிக் கொண்டவன் அவள் அழுவதை உணர்ந்து சமாதானப்படுத்தினான். இருவரும் ரகசியமாக தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்க சரியாக கேட்காத ஆதங்கத்தில் சுவர் முதல் அங்கிருந்து சிறு பொருட்கள் வரை ஆதங்கப்பட்டு கொண்டது.
 
 
“மன்னிச்சிட்டியா!” என்றவனுக்கு மறுப்பாக தலையசைத்தாள் அன்பினி.
 
“என்ன பண்ணா மன்னிப்ப.” என்றவனுக்கு அவள் சொன்ன பதிலில் சிரிப்பு தான் வந்தது. அக்னி சிரிப்பதை உணர்ந்து அவள் விலக பார்க்க விடாமல் அணைத்துக் கொண்டவன், “எவ்ளோ கிஸ் பண்ணனும்.” என்று.
 
“போதும்னு சொல்ற வரைக்கும்.” என்றவள் நெஞ்சில் முத்தம் வைக்க, “பனிஷ்மென்ட் எனக்கு தான் உனக்கு இல்ல.” என்று அவள் கொடுத்த முத்தத்தை அவளுக்கே கொடுத்து திணற வைத்தான்.
 
 
வெளிச்சம் இல்லாத அறை அவனுக்கு தோதாக அமைந்து விட கைகளின் உதவியால் அங்கங்களை அணுவணுவாக ரசித்தான் முத்தம் கொடுத்து. அன்பினி போதும் என்ற பின்னும் விடாமல் முத்தத்தால் மன்னிப்பு கேட்டவன் இனி வருங்காலத்தில் செய்யப் போகும் தவறுக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்க முடிவெடுத்தான் மெத்தையில் சாய்த்து.
 
ஆடைக்கு மேல் தன் ஆதிக்கங்களை செலுத்தியவன் சொக்கி போனான் அவள் சினுங்களில். வெட்கம் சட்டென பிறப்பெடுக்க, தடுத்தே ஓய்ந்து போனான் அக்னிசந்திரன். வந்த வெட்கம் தோல்வியோடு அவர்களை விட்டு நகர்ந்தது. உடையை தாண்ட வேண்டும் என்று அவன் மனம் மன்றாட உடனே செவி சாய்த்தான் ஊடுருவி. தடுக்க வரும் கைகளுக்கு அன்பு கட்டளையாக முத்தத்தை பதிக்க அவை கூச்சத்தோடு வழிவிட்டது. கலைந்த ஆடைகளோடு அவள் மன்னித்துக் கொண்டிருக்க, இப்போது செய்யும் தவறுக்கு எப்போது மன்னிப்பு கேட்க போகிறானோ அக்னிசந்திரன்.
 
மதி மயங்கி அவனோடு சரிந்தவள் உடைகளை ஒப்படைத்தாள் விடுதலை கொடுக்கும் கைகளுக்கு. வெற்றி பெற்றவன் தன்னுடைகளை அவள் உடைகளோடு சேர்த்தான் தரையில். ஆடைகள் தேவைப்படாத தேகம் முத்தங்களை வண்ணங்களாக பூசிக்கொள்ள கொடுத்த இடமெல்லாம் பூரிக்க ஆரம்பித்தது இருவருக்கும். தலை முதல் பாதம் வரை அவனின் ஆதிக்கங்களே நிறைந்திருந்தது. தன்னவளை முந்தவிடாமல் முந்தி கொண்டவன் விடாமல் உதட்டால் யுத்தம் செய்ய காயம் படாமல் வலியை உணர்ந்தாள் பல் தடத்தால். 
 
 
இருட்டில் ஆரம்பித்த இல்லறம் மின்சாரம் வந்த பின்னும் தொடர்ந்தது. அவளின் வெட்கத்தை இன்னும் தூண்டும் விதமாக மேனியை முழுவதுமாக காட்டிக் கொடுத்தது துண்டித்த மின்சாரம் உயிர்பெற்று. ஆணவன் அதில் சிரித்தான் என்றால் பெண்ணவள் அவஸ்தையில் அவன் விழிகளை மூடினாள். 
 
தனக்கான உயிர் ஓவியத்தை காணாமல் தடுத்த விரல்களை கடித்து எச்சரித்தவன் முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டான் தன் ஆசைகளை கொட்டி. இருவருக்குள்ளும் மணவாழ்க்கை அடுத்த கட்டத்தை எடுத்து வைத்திருக்க மறுநாள் காலை அன்பினி எடுக்க போகும் அவதாரத்தில் வதங்கி வாட போகிறான் அக்னிசந்திரன்.
 
 
அம்மு இளையாள்.
 
 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
22
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *