Loading

24 – விடா ரதி… 

 

சனிக்கிழமை மாலை வேலை முடிந்து ரதி கிளம்பும் போது பிரேம் @ பரம் அவள் முன் வந்து நின்றான். 

 

“ரதி.. ஒரு நிமிஷம்….”

 

“என்ன விஷயம் பரம்….”, கைக்கடிகாரத்தைப் பார்த்தபடிக் கேட்டாள். 

 

“உங்கள நான் லவ் பண்றேன்…. உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைபடறேன்….”, என அவன் கூறியதும்  அவள் அவனைப் பைத்தியத்தைப் பார்ப்பது போல பார்த்தாள். 

 

“எனக்கு கல்யாணம் ஆகிருச்சி.. இந்த நெனைப்போட சுத்தாதீங்க…. போய் வேலைய பாருங்க…. “, கண்டிப்போடுக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 

“அப்படி எல்லாம் என்னால உன்ன விட்டுற முடியாது…. நீ எனக்கு வேணும்.. எனக்கு மட்டுமே சொந்தமா வேணும்… அவன விட்டுட்டு எங்கூட வந்துடு…. “, எனக் கண்களில் வெறியோடுக் கூறினான். 

 

“நான் சொல்றது காதுல விழலியா உனக்கு? நான் மரியாதையா பேசும்போதே போயிடு … இல்லனா வேற மாதிரி ஆகிடும்….”, கண்களில் கோபம் ஏறக் கூறினாள். 

 

“நீ இப்படி கோபமா பாக்கறப்ப எனக்கு எப்படி டெம்ப்டிங் அஹ் இருக்கும் தெரியுமா?”, கண்ணியமின்றி பார்வையும் வார்த்தைகளும் அவன் பேச தொடங்கியதும் அவனைக் கன்னத்தில் அடித்து இருந்தாள். 

 

“இடியட்…. இர்ரிட்டேட் பண்ணாம கம்முனு போயிடு….. “

 

“உன் புருஷன பாக்க அவ்ளோ ஆவலா உனக்கு? அவன் மேல அவ்ளோ காதலா? நானும் தான் டி வச்சி இருக்கேன் உன்மேல நிறைய காதல்….”

 

“உனக்கு இருக்கறதுக்கு பேரு காதல் இல்ல… வெறும் லஸ்ட்… அத காதல்னு சொல்லாத…. உனக்கு விளக்கிச் சொல்லணும்னு எந்த அவசியமும் எனக்கு இல்ல…. வழியவிட்டு நகரு…”, பல்லைக் கடித்தபடிப் பேசினாள் . 

 

“உன்ன அவ்ளோ சுலபமா இங்க இருந்து போக விடமாட்டேன்… .”, எனக் கூறியபடி அவளின் மூக்கில் போதை மருந்தைத் திணித்தான். 

 

அந்த அரை கிராம் வெள்ளை பொடி அவளின் மூக்கில் சிறிது பட்டதும் அவளின் நினைவு கொஞ்சம் கொஞ்சமாகத் தப்பியது. அவளைப் படிகட்டு வழியாகத் தூக்கிக்கொண்டு வந்து காரில் கிடத்தி ஸ்டார் ஹோட்டலுக்கு கடத்திச் சென்றான். 

 

பப் (pub) கலாச்சாரம் பெருகிய பிறகு ஆணும் பெண்ணும் போதையில் தள்ளாடியபடி நடப்பதும், மயங்குவதும் மற்றொருவர் தூக்கிச் செல்வதும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழக்கமாக இருந்தது. ஹோட்டல் காரிடாரில் அவள் மயங்கிய நிலையில் அவன் தோளில் சாய்ந்துச் செல்வது யாருக்கும் சந்தேகத்தைக் கொடுக்கவில்லை. 

 

அவன் முன்பே ஏற்பாடு செய்திருந்த அறைக்கு அவளைத் தூக்கிச் சென்றுப் படுக்க வைத்துவிட்டு, அவளின் பொருட்களை எல்லாம் மீண்டும் அலுவலகம் வந்து பின்பக்க படிகட்டு வழியாகவே வந்து அவளின் இடத்தில் வைத்துவிட்டுச் சென்றான். அவளது ஃபோன் மட்டும் முன்பே அலுவலகத்தில் ஒரு குப்பை தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டான். 

 

இவன் வந்து சென்ற போது எல்லாம் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. அதனால்  அவன் ரதியிடம் நின்று பேசியது முதல் எதுவும் அதில் பதிவாகவும் இல்லை. 

 

பிரேம் சந்தோசமாக அந்த அறைக்கு மீண்டும் சென்று அவளைப் பார்த்தபடி மது அருந்தத் தொடங்கினான். 

 

“கல்யாணம் ஆனதும் அந்த கலை முகத்துல வந்துருச்சு டி உனக்கு…. நீ இங்க இருந்தப்பவே உன்னை நான் பாத்துட்டு இருந்தேன்… நீ அப்ரோட் போனதும் கூட எனக்கு பெருசா ஒன்னும் தெரியல…. ஆனா நான் ஒரு மாசம் வேலை பாக்க நீ இருந்த இடத்துக்கு வந்தேன் பாரு.. .அங்க உன்னை பாத்துட்டு சொக்கிட்டேன் டி… நெறைய பொண்ணுங்கள நான் பார்த்திருக்கேன். ஏன் படுத்தும் கூட இருக்கேன்.. ஆனா நீ தனி ரகமா தெரிஞ்ச… உன் கண்ணும், அந்த கண்டிப்பு பார்வையும் வேற யாருகிட்டயும் வராத போதைய எனக்கு குடுத்துச்சி… உன்ன யாருமே நெருங்க முடியல… அவ்ளோ கண்டிப்போட பார்வையே தள்ளி நிக்க வைக்கும்… நீ சிரிச்சா இப்போ ரொம்ப அழகா தான் இருக்க… காத்திருந்து, அப்பறம் கெடைக்காதுன்னு நினைச்ச காதல் உனக்கு கை சேந்த சந்தோசம்…. உன் முகத்துல நல்லாவே தெரியுது டி… நானும் தான் உனக்காக காத்திருக்கேன்…. நீ எப்படி அதுக்குள்ள கல்யாணம் பண்ணலாம்? நீ அங்க இருக்கன்னு நான் அங்க வரதுக்கு ஏற்பாடு பண்ண போன கேப்-ல நீ இப்படி பண்ணலாமா? தப்பு தானே?”, மயங்கி கிடப்பவளிடம் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தான்.  

 

ரகு ரதி சொன்ன இடத்திற்கு வந்து அவளை அழைத்தான். வெகு நேரமாக அவள் அழைப்பை எடுக்கவில்லை எனவும் அவளது அலுவலகம் வந்து விசாரித்தான்.  

 

“அவங்க சாயிந்தரமே கிளம்பிட்டாங்க சார்…. “

 

“இல்லையே.. அவங்க தங்கி இருக்க இடத்துக்கும் இன்னும் வரல… அவங்க டீம் யாராவது இங்க இருக்காங்களா?”

 

“இல்ல சார்… இன்னிக்கு அவங்க டீம் பாதி பேருக்கு லீவ். மேடம் மட்டும் தான் மதியம் இருந்தாங்க… ரெஜிஸ்டர் அப்படி தான் காட்டுது…. நீங்க இங்க வந்த சமயம் அவங்க அங்க போயிருக்கலாம்… கொஞ்சம் வெயிட் பண்ணி பாருங்க…. “, எனக் கூறி அவனை அனுப்பி வைத்தாள். 

 

“ரேகா… இந்த மொபைல் எனக்கு பக்கத்து டெஸ்க் குப்பை தொட்டில கிடந்தது. இவங்க ரதி மேடம்  தானே?”, என அந்த திரையைக் காட்டிக் கேட்டாள் ஒரு பெண்.

 

“ஹேய்.. இப்போ ஒருத்தர் போனார்ல அவர கூப்பிடு ஓடு.. நான் அவங்க டெஸ்க் பாத்துட்டு வரேன்…”

 

“என்னங்க வர சொன்னீங்களாம்…”, ரேகா வந்ததும் கேட்டான். 

 

“சார்.. மேடம் ஃபோன் இங்க குப்பை தொட்டில இருந்தது… அவங்க பொருள் எல்லாமே இங்க தான் இருக்கு… எனக்கு சந்தேகமா இருக்கு.. நீங்க எங்க மேனேஜர்கிட்ட பேசுங்க…”, என மடமடவென அந்த பெண் அழைத்துக் கொடுத்தாள். 

 

“போலீஸ்கிட்ட போலாமா?”, ஃபோன் கொடுத்த பெண் கேட்டாள். 

 

ரகுவிற்கு சில நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை. அவள் காணவில்லை என்பதே இன்னும் அவனுக்கு முழுதாகப் புரியாமல் குழம்பி நின்றான். 

 

“என்ன சொல்றீங்க? அவ கிளம்பிட்டான்னு நீங்க தான் சொன்னீங்க இப்ப?”

 

“நான் சாயிந்தரம் ஷிப்ட் சார்… நான் வரமுன்ன பகல் ஷிப்ட் ஆளுங்க கிளம்பிடுவாங்க…. அவங்க பேரு பகல் ஷிப்ட்ல பாத்துட்டு தான் சொன்னேன்.. ஆனா இவ ஃபோன் கொண்டு வந்து குடுத்ததும் தான் எனக்கு சந்தேகம் வந்துச்சி… “

 

“எனக்கு ஒண்ணுமே புரியல.. .கொஞ்சம் தண்ணி குடுங்க..” , எனத் தண்ணீர் வாங்கி பருகியவன் அந்த கம்பனி எம்.டியிடம் பேசவேண்டும் எனக் கேட்டான். 

 

“மேனேஜர் லைன்ல இருக்காரு சார்.. பேசுங்க…”, என அந்தப் பெண் போனைக் கொடுத்தாள். 

 

“ஹலோ…. நான் ரதி ஹஸ்பண்ட் ரகு பேசறேன்…. “

 

“ஹலோ சார்…. நீங்க கவலப்படாதீங்க… நான் வந்துட்டு இருக்கேன்…. செக்யூரிட்டி சேம்பர்ல வெயிட் பண்ணுங்க வந்துடறேன்… .நான் வந்த அப்பறம் நீங்க போலீஸ்கிட்ட சொல்லலாம்…. “

 

“எனக்கு உங்க எம்.டிகிட்ட பேசணும்….”, கோபமும், தவிப்பும் தனக்குள் அடக்கியபடிக் கூறினான். 

 

“சார்.. பிளீஸ்…. அவர் ஊர்ல இல்லை…. அவருக்கு தகவல் பாஸ் பண்ணிட்டேன்.. பார்த்ததும் கூப்பிடுவாங்க… நீங்க டென்ஷன் ஆகாம இருங்க… நான் பக்கத்துல வந்துட்டேன்…”, எனக் கூறி வைத்தார். 

 

“எனக்கு ரதி டீம் மேட்ஸ் அஹ் பாக்கணும்.. . எல்லாரையும் வர சொல்லுங்க…”, அடுத்து யோசித்துக் கூறினான். 

 

“சார் அவங்கள எல்லாம் எப்படி…?”, அந்த பெண் தயங்கியபடிக் கேட்டாள். 

 

“நாள் முழுக்க அவங்களோட தானே வேலை பாக்கறாங்க…. ? அவங்க பிராஜக்ட் மேனேஜர் காணோம்ன்னு அவங்களுக்கு தெரியுமா தெரியாதான்னு எனக்கு தெரியணும்… எல்லாரையும் வர சொல்லுங்க…. “

 

“அதுக்கு பெர்மிஷன் வாங்கணும் ….”, அந்த பெண் தயங்கியபடிக் கூறினாள்.  

 

ரகு முறைக்கவும் அவள் மேனேஜர் எண்ணுக்கு அழைக்கவும் அவர் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. 

 

“ஹலோ சார்… நான் வசந்த்… மேனேஜர்…. கவலைப்படாதீங்க… மேடம் எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிச்சிடலாம்… ரேகா.. மொபைல் எங்க இருந்தது?” வரிசையாக சில விசயங்களைக் கேட்டறிந்துக் கொண்டு ரகுவுடன் கண்காணிப்பு கேமரா பதிவாகும் இடத்திற்குச் சென்றான். 

 

அங்கே ரதி தனது பொருட்களை எடுத்துக் கொண்டு வாசல் வரை வந்தது வரை பதிவாகியிருந்தது. அதற்கு மேல் சில நிமிடங்கள் எதுவும் பதிவாகவில்லை. 

 

அதைக் கண்டதும் ரகு தன் கல்லூரி நண்பன் பெங்களூரில் டி.எஸ்.பியாக இருப்பவனுக்கு அழைத்து விவரம் கூறினான். 

 

அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு 20 காவலர்கள் வந்து நின்றனர்.  

 

“நான் நவநீதன்…. டி.எஸ்.பி ஆஃப் பெங்களூர்… மறுபடியும் அந்த ரெக்கார்டிங் பாக்கலாமா?”, என வேலையில் இறங்கினான். 

 

ரகு உள்ளுக்குள் தவித்தபடி அமர்ந்திருந்தான். அவளைப் பத்து நாட்களாகக் காணாமல் தவித்த தவிப்பை விட, இப்போது அவள் எங்கே இருக்கிறாளோ என்ற தவிப்பு அதிகமாக இருந்தது. 

 

“கடவுளே.. .அவள நான் பத்திரமா பாத்துப்பேன்… அவள என்கிட்ட கொண்டு வந்து சேத்திடு…. உனக்கு ஆயுசுக்கும் நான் நன்றி செலுத்தரேன்…”, என மனதிற்குள் மருகியபடி அமர்ந்து அங்கு நடப்பதை பாத்துக் கொண்டிருந்தான். 

 

ரதியின் டீம் மேட்ஸ் அனைவரும் அடுத்த ஒரு மணிநேரத்தில் அங்கு வந்தனர். காவலர்கள் அவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர். 

 

“டீம்ல எல்லாரும் வந்தாச்சா?”, நவநீதன் கேட்டான். 

 

“பிரேம் மட்டும் வரல சார்… அவரு இன்னிக்கி லீவுன்னு சொல்றாங்க….”, காவலர் கூறினார். 

 

“என்ன பிரச்சினைன்னு தெரியணும்.. அவரையும் கிளம்பி வரசொல்லி ஃபோன் பண்ணுங்க…. “

 

“மச்சி…. “, தன் நண்பன் தோளைத் தொட்டான். 

 

“மச்சான்… அவளுக்கு ஒன்னும் ஆகாதுல? “, பயத்துடன் கண்கள் கலங்கக்கேட்டான். 

 

“ஒன்னும் ஆகாது டா… நீ இந்த பத்து நாள் நடந்தது எல்லாம் ஒன்னு விடாம சொல்லு..”, எனத் தனியாக அமரவைத்துக் கேட்டான். 

 

அவள் ஊருக்கு கிளம்பியது முதல் இன்று மாலை வரையிலும் செய்த அழைப்புகள் முதல் புலன செய்திகள் வரை அவன் நவநீதனிடம் காட்டி மொத்தமும் கூறினான்.. 

 

“சிஸ்டர் ஆஃபீஸ்ல யாராவது பிரச்சினை பண்றாங்கன்னு சொல்லியிருக்காங்களா?”, யோசனையுடன் கேட்டான். 

 

“இல்ல மச்சி. எங்களுக்கு கல்யாணம் ஆகி இன்னும் ஒரு மாசம் கூட ஆகலடா…. அவ அப்ரோட்ல தான் இருந்தா.. கல்யாணத்துக்காக தான் இங்க வந்தா.. .அப்பறம் இங்கேயே இருந்து செய்ய வேலைய மாத்திகிட்டா…. பிரச்சனைன்னு அவ எதுவும் சொல்லவே இல்ல….”

 

“உங்க கல்யாணம் கலாட்டா கல்யாணம் தானே?”

 

“ஆமா டா…. நான் தான் அப்படி பண்ணேன்.. அவ என்னை இன்னும் விரும்பறான்னு தெரிஞ்சி நானே தான் எல்லாமே ஏற்பாடு செஞ்சேன்… லைஃப் இப்போ தான்டா ஆரம்பிச்சோம்…. அதுக்குள்ள….”, என அவன் கண்களில் நீர் வழிந்தது. 

 

“வேற யாராவது பிரச்சினை பண்ணாங்களா? கல்யாணம் விசயமா? உங்க கல்யாண முடிஞ்சி?”

 

“இல்ல டா…. வழக்கம் போல சிலர் முன்னாடி பின்னாடி பேசினாங்க.. ரதி ஒருத்தன அடிச்சிட்டா கொடைக்கானல்ல.. அவன் வரதட்சணை கொடுமை கேஸ்ல உள்ள இருக்கான்…. “

 

“என்ன அது ? யாருன்னு தெளிவா சொல்லு…”

 

ரகு அவனின் பெயர் முதல் முகவரி வரை அனைத்தும் கொடுத்தான். நவநீதன் தன் அதிகாரம் மூலமாக அங்கே விசாரிக்க ஏற்பாடு செய்து அவர்கள் இதை செய்யவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டான். 

 

“இது நல்லா பிளான் பண்ணி யாரோ செஞ்சிருக்காங்க…. அவங்க கைப்பையோட கிளம்பினது நல்லாவே தெரியுது.. மறுபடியும் யாரோ அத கொண்டு வந்து இங்க வச்சிட்டு போயிருக்காங்க…. அது யாருன்னு தெரிஞ்சா போதும்…. நீ பயப்படாம இரு…. “, என விசாரணைகள் நள்ளிரவு தாண்டியும் வேகமாக நடந்துக் கொண்டிருந்தது. 

 

பிரேம் தனது தொலைபேசியை அணைத்து வைத்திருந்ததால், அவனுக்கு அழைப்பு செல்லவில்லை. இங்கு நடக்கும் கலவரம் எதுவும் அவனுக்கு தெரியவும் இல்லை. 

 

ரதி மயக்கம் தெளிந்து மெல்ல கண்விழிக்க, தலை பாரமாக இருப்பதை உணர்ந்தாள். அவள் எதிரில் மதுகுப்பியோடு பிரேம் அமர்ந்தவாக்கில் உறங்கிக் கொண்டிருந்தான்.  அவனைக் கண்டதும் நேற்று நடந்த அனைத்தும் நினைவிற்கு வந்தது. கோபம் முதலில் பிறக்க, இருக்கும் இடத்தைப் பார்த்துவிட்டு, இப்போது கோபத்தைக் காட்டும் சமயமல்ல என்பதை உணர்ந்தாள். 

 

அவள் தள்ளாடியபடி எழுந்து நிற்கமுடியாமல் நிற்க, தலைச் சுற்றி மீண்டும் மெத்தையில் விழுந்தாள். அவள் விழுந்த அதிர்வில் அவனும் எழுந்துக் கொண்டான். 

 

“ஹேய்.. அதுக்குள்ள எந்திரிச்சிட்ட….? இரு.. இங்க வா…. ஓடாத… இங்க வா…”, அவள் பின்னோடு அவனும் அவளைத் தொடர்ந்தான். 

 

“ஒழுங்கா என்னை போக விடு… இல்ல உன்ன..” , எனக் கோர்வையாக பேசமுடியாமல் மீண்டும் தலைச் சுற்றி கீழே விழுந்தாள்.  

 

“நான் தான் சொல்றேன்ல ரதி… இரு.. நாம்ம இங்க சந்தோசமா இருக்கலாம்… நைட் எல்லாம் எவ்ளோ சமத்தா நீ தூங்கின தெரியுமா? அப்போ உன்ன தொட நெனைச்சேன் டி… ஆனா எனக்கு நீ சுய நினைவோட இருக்கறப்ப தான் தொடணும்ன்னு ஆசை… வா.. இங்க… கல்யாணம் ஆனதும் என்னை விட்டு போயிடலாம்ன்னு நினைச்சா விட்டுறுவேனா?” வா இங்க… “, என அவளைப் பிடித்துத் தூக்கி வந்து மெத்தையில் கிடத்தினான்.  

 

அவளைப் பெண்டாள முயற்சித்தான். அவள் அவனைத் தடுத்து தவிர்த்து மீண்டும் எழுந்து ஓட முனைந்து வேகமாக அறைக் கதவை நோக்கி ஓடினாள். 

 

கதவில் கை வைக்கும் போதும் அவளது பின் மண்டையில் அவன் மது பாட்டிலால் அடிக்க ரத்தம் வெளியேற மயங்கிச் சரிந்தாள். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
10
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்