556 views

24.என் தளிர்மலரே

“போடா…!” என்று உள்ளுக்குள் அவனைப் பொரிந்து தள்ளிய இளந்தளிர். 

குடும்பத்துடன் வீட்டிற்குச் சென்றாள். 

வீட்டிற்குப் போனதும்,மூவரும் சிறிது நேரம் அமர்ந்து விட்டு , இரவு உணவு வேளைக்குத் தயார் செய்தனர். 

“இஷ்டத்துக்குப் பேசறான், ஜட்ஜ் பண்றான்” என்று இவள் முணுமுணுத்தது தங்கைக்கு அரைகுறையாக கேட்டது. 

“என்னாச்சு அக்கா?” வினவிய சுபாஷினியிடம், 

“ஒன்னும் இல்லடி” என்று கூறிவிட்டு சென்றாள். 

 உணவு தயாராகி விட்டதால், சிவசங்கரி, 

“சாப்பிட்டு நேரத்தோட தூங்குங்க. நாளைக்கு கிளம்ப முடிஞ்சா போங்க. டயர்டா இருந்தா லீவ் கூட போட்ருங்க” அவர்களுடன் உணவுண்டார். 

இளந்தளிர் கோவர்த்தனன் பேசியதை நினைத்து உள்ளுக்குள் திட்டிக் கொண்டே இருந்ததாலும், சுபாஷினிக்கோ தூக்கம் கண்ணைச் சுழற்றியதாலும் எதுவும் பேசாமல் சாப்பிட்டனர். 

சுபாஷினி அறைக்குள் வந்ததுமே உறங்கி விட்டாள். 

இளந்தளிரோ கட்டிலில் சாய்ந்து கொண்டு, “நான் பொய் சொல்றேன்னு சொல்றானே! இந்த விஷயத்தில் யாராவது பொய் சொல்லுவாங்களா?” 

அதற்கு மேல் யோசிக்க அவளது உடல் வலி ஒத்துழைக்காததால் உறங்கி விட்டாள். 

🌺🌺🌺🌺

மாலை இல்லத்திற்குப் பயணமாகிக் கொண்டிருக்கும் போது, வழியில் கோவர்த்தனனையும், ஹரீஷையும் பார்த்ததும், வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, இவர்கள் முன்னால் வந்து நின்றிருந்தாள். 

“ஹாய்” என்று புன்னகைத்தான் ஹரீஷ். 

அவனுக்கு ஹாய் சொல்லி விட்டு, மற்றையவன் புறம் திரும்பினாள். 

கோவர்த்தனனோ வாய் திறவாமல் இருக்க, 

“அதெப்படி பொய் ன்னு சொல்றீங்க?”என்று வம்பிழுக்கும் வகையில் கேட்டாள். 

அதைப் பார்த்து குறுநகை புரிந்தவன், 

“இப்போ வரை அதையே தான் நினைச்சுட்டு இருக்கீங்களா?” என்று கேட்கவும், 

“ஆமா.நான் யார்கிட்டயும் பொய்யே சொன்னதில்லை.ஆனா நீங்க என்னை அப்படி சொல்லி சொல்லியே ஹர்ட் பண்றீங்க” என்றாள் உடைந்த குரலில். 

அதைப் புரிந்து கொண்ட கோவர்த்தனன், 

“ப்ளீஸ்…! வீட்ல மேரேஜ் பத்தி பேசும் போது எனக்கு ஒன்னும் தோணல . ஆனா உங்கள் ஃபோட்டோ காமிச்சதும் நீங்க வொய்ஃப் ஆக வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். நானும் உங்களோட ஒரேயொரு குணம் மட்டும் பார்த்து சம்மதிக்கல. அன்னைக்கு ஹாஸ்பிடல் இன்சிடென்ட், செகண்ட் மீட்டிங்,ஹெல்ப் பண்ணினவங்க என்றாலும் மறக்காமல் தாங்க்ஸ் சொல்லிட்டு, அதுக்கப்புறம் அவங்க கிட்ட அடிக்கடி பேசனும்னு அவசியம் இல்லை,இந்த குணங்கள் பார்த்து ஃபிக்ஸ் ஆனேன்.உங்க வீட்டுக்கு வந்தப்போ என்கிட்ட பேசி கிளியர் செஞ்சீங்க. கஷ்டமாக இருந்தாலுமே ஒரு விதத்தில் சந்தோஷம் தான். உடனே நீங்கள் ஒத்துக்காம இந்த கோணத்திலயும் யோசிச்சு இருக்கீங்களே. உங்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று தான் ரெஸ்டாரெண்ட்ல பார்த்த அப்போ பேசல. அதுக்கு முன்னாடியே சுபாஷினிக்கு இன்னுமே ஹெல்த் இஷ்யூ ஆயிடுச்சு என்று அம்மா சொன்னாங்க. சோ ஜஸ்ட் விலகி இருந்தேன்”

இவன் இன்னும் தொடர்ந்து விளக்கமளிக்க எண்ணியதால், 

“ரொம்ப நேரம் நின்னுப் பேசிட்டு இருக்கோம். ஹரீஷூம் வெய்ட் பண்றான்.பக்கத்தில் இருக்கிற கடையில் போய் உக்காந்துப் பேசலாம் வாங்க.” என்று அழைக்க, இவள் தயங்கினாலும் தளிருக்குமே கால் வலித்தது அதனால் அவர்களுடன் கடைக்குள் சென்றாள். 

கோவர்த்தனன், “ஹரீஷ்! கால் வலிக்க நின்னது போதும். உள்ளே வா எதாவது சாப்பிடுவோம்”

என்று அவனையும் அழைத்துச் சென்றான். 

ஹரீஷின் முகத்தில் இளந்தளிர் மீதான பயம் பிரதிபலிக்க, 

“எதுக்கு இப்படி பேய் முழி முழிக்கிறீங்க? ப்ளீஸ் நார்மலா பிஹேவ் பண்ணுங்க” என்று சொல்ல, 

ஹரீஷ் மெலிதான புன்னகையுடன், 

“ஓகே சிஸ்டர். நீங்கப் பேசிட்டு இருங்க. நான் உங்களுக்கும் சேர்த்து எதாவது ஸ்நாக்ஸ் ஆர்டர் செய்துட்டு, என் ஃப்ரண்ட் ஒருத்தன் பக்கத்து பில்டிங்ல வேலை செய்றான். அவனைப் பாத்துட்டு வர்றேன். நண்பா வந்துடறேன்” என்று கிளம்பினான். 

அவனது நோக்கம் புரிந்தவர்கள் ஹரீஷை அனுப்பி வைத்து விட்டு, 

கோவர்த்தனன், “ஸ்நாக்ஸ் வரட்டும் சாப்பிட்டுட்டே பேசுவோம்”

“ம்ம்… சரி” என்றவள் அவனது புன்னகைக்கும் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தாள் இன்று. 

அவளுக்கான சிற்றுண்டியை வைத்து விட்டு, தனக்கும் ஒரு தட்டை எடுத்துக் கொண்டான்.

இவன் தட்டை வைத்த உடனேயே பார்வையை அவனிடத்தில் இருந்து பிரித்திருந்தாள். 

இருவரும் ஒரு வாய் உண்டதும்,

“கோயில்லப் பார்க்கும் போது நீங்க முறைச்சிட்டே இருந்தீங்க.ஆனா அதுல வெறுப்பு இல்லை. சோ நானும் ஜோவியலா பேச ட்ரை பண்ணேன்” என்று கூற, 

“நான் சொன்னதைப் பொய் ன்னு சொல்ல என்ன காரணம்?” என்று நேரிடையாக கேட்டாள். 

“பொய் தான். மறுபடியும் முறைக்காதீங்க.உங்க சிஸ்டர் விஷயத்தில் நான் ஹெல்ப் பண்ணியதால் ஏற்கனவே நான் உங்களுக்கு அறிமுகம் ஆகிட்டேன். அப்படியிருக்கும் போது, எதிர்பாராமல் என் ஃபோட்டோ உங்களுக்கு வரனா வரும் போது ஒரு தடுமாற்றம் தோன்றி இருக்கும். என்னோட ப்ளானா அப்படின்னு கூட கேட்டிங்க. ஹெல்ப் பண்ணியது நான் தான் என்று வீட்டில் சொல்லல. இதுக்கப்றம் ஒருவேளை தெரிஞ்சா இந்தப் பொண்ணுப் பாக்குற சடங்கு நம்மளோட ப்ளான்னுத் தப்பா நினைச்சுடுவாங்களோ! அப்படின்னு உங்களுக்கு ஒரு இன்செக்யூர் ஃபீல் ஆகியிருக்கு. அதனால் தான் பொய் ன்னு சொன்னேன். இது என்னோட புரிதல்.உங்க சைட் ரீசனை இப்போது நீங்களே சொல்லுங்க!” என்று அவளைப் பார்த்தான். 

கோவர்த்தனன் தன்னுடையப் புரிதலை அவளுக்கு உணர்த்தியிருக்க, இளந்தளிரோ, 

“நீங்க சொன்னதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை.அம்மாவும் அப்படி யோசிக்கிறவங்களும் கிடையாது” என்று இளந்தளிர் நிறுத்தவும், 

“அப்போ சரி. நான் உங்களை லவ் பண்றேன்.உடனே லவ் வரல.அதுக்கான எக்ஸ்ப்ளனேஷனும் குடுத்தாச்சு.உங்களுக்கு என் மேல் லவ் வந்தா தயங்காமல் சொல்லுங்கள்”என்று கூறினான். 

“வாட்…!” அந்த நிமிடத்திற்கு முன்பு வரை அவனுடன் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தவளது விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது. 

“யெஸ் இளந்தளிர்! உங்களோட கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.அதுனால் தான் என்னவோ பொண்ணுக்கு பார்க்க வந்தேன் போல. அது இப்போது தான் எனக்குப் புரியுது” என்று அவன் அடுக்கிக் கொண்டே போகவும், 

இளந்தளிர் அவன் கண்களையும், பேசும் அவனது இதழ்களையும் பார்த்துக் கொண்டு இருந்தாள் பேசா மடந்தையாக. 

“நான் ப்ரபோஸ் செய்த உடனே இதெல்லாம் பண்ணி உங்களை டிஸ்டர்ப் செய்ய மாட்டேன் இளந்தளிர். உங்களுக்கு எப்போ லவ் வருதோ இந்த உணர்வுகள் எல்லாம் என்கிட்ட இருந்து வெளிப்படும். அதுவரைக்கும் எனக்குள்ளேயே இருக்கும்” 

அவளது பார்வையை உணர்ந்தவன், 

“நம்ம ரெண்டு பேரோட அம்மாவும் நாம லவ் பண்றோம்ன்னு தெரிஞ்சா சந்தோஷம் தான் ஆவார்கள். அதனால் யாரும் இந்த விஷயம் தெரிஞ்சா தப்பா நினைக்க மாட்டாங்க.நானுமே உங்களைத் தொல்லை பண்ண மாட்டேன்.உங்க நம்பரையும் கேட்க மாட்டேன்.எல்லாருக்கும் நம்ம லவ்வை ரிவீல் பண்ணும் போது தான் உங்களோட மொபைல் நம்பர் உங்க அனுமதியோடு வாங்குவேன்” 

முடித்து விட்டான் போலும்! மங்கையவள் முகம் பார்க்க அவளோ அமைதியாக இருந்தாள். 

சில கணங்கள் கழித்து அவனது பார்வையை எதிர் கொண்டாள். 

“ம்ஹூம்!! ஒரு வழியாக சொல்லிட்டீங்க கோவர்த்தனன்.ஆனா நான் எக்ஸ்பெக்ட் பண்ணல. ப்ரபோஸலை எதிர்பார்த்தும் வரலை. அதான் ஷாக் ஆகிட்டேன்.பொண்ணுப் பார்க்கிற ஃபங்க்ஷன்லாம் முடிஞ்ச பிறகு இப்படி ஒரு சுவிட்சுவேஷன்…எதிர்பாராத விஷயம் நடந்திருக்கு.அதே மாதிரி நானும் நீங்க எதிர்பாராத பதிலைத் தான் சொல்லப் போறேன்.”

“பதில் தெரிஞ்சு தான் ப்ரபோஸ்ஸே பண்ணினேன் இளந்தளிர்” என்று சிரித்தான். 

“என்ன???” 

“ஆமா.கல்யாணம் பண்ணிக்கவே சம்மதிக்கல. லவ்வுக்கு மட்டும் க்ரீன் சிக்னல் கிடைச்சிடுமா என்ன? வெய்ட் பண்ண வேண்டியது தான்!”

“உங்களுக்கே எல்லாம் முதல்லயே தெரியும் போது என்கிட்ட பேசி டைம் வேஸ்ட் செய்துட்டு இருக்கீங்க” என்றாள். 

” சத்தியமா டைம் வேஸ்ட் இல்லைங்க. உங்களைப் பிடிச்சிருக்கு, நீங்க என்னோட லைஃப் பார்ட்னர் ஆக வந்தா எனக்கு ரொம்பவே ஹேப்பி தான். அதுக்காக உங்களை வற்புறுத்த முடியாது. ஐ க்னோ…”

“நீங்களே எல்லாத்தையும் இப்படி பகிரங்கமாக ஒத்துக்கிட்டா நான் என்னப் பண்றது கோவர்த்தனன்?” 

“ஹாஹா…! ஆமாம் இளந்தளிர். உங்களோட பதிலைத் தெரிஞ்சும் ஒரு நம்பிக்கையில் சொல்லியிருக்கேன். நீங்க இதுக்கப்றம் யோசிச்சு சொல்லுங்கள்” என்று சொல்லவும், 

 அவளோ, 

“நான் கிளம்பறேன் கோவர்த்தனன். பில் பே பண்ணிடறேன்” 

தவிர்க்க வேண்டிய விஷயம் போல அவனது காதலை நினைத்து விட்டாளோ? 

“நீங்க சொன்னதைப் பத்தி யோசிக்கிறேன்” எனக் கூறியவுடன் தான் அதைக் கருத்தில் வைத்துள்ளாள் என்று நிம்மதியாக உணர்ந்தவன், 

“போய்ட்டு வாங்க” பில்லைக் கொடுத்து விட்டு அவள் சென்றதும், நண்பனுக்கு அழைத்து, அவன் இருக்குமிடத்திற்குச் சென்றான். 

“இந்தா ஹரீஷ் ” என்று சிற்றுண்டி அடங்கிய பொட்டலத்தை அவனிடம் கொடுத்தான். 

“டேய் நீ ஏதாவது கோளாறா சொன்னியா? மறுபடியும் அவங்க நம்மளை வந்து மிரட்டுவாங்களா?” என்று கேட்டான் ஹரீஷ். 

“மிரட்டுவாங்களா? என்னடா கேட்குற?”

“ஆமா.இப்போ அப்படித்தான கேட்டாங்க! உங்க ப்ரைவசிக்காக நான் விலகிப் போனா நீ பண்ற அலும்பு இருக்கே!!! அவங்க தேடி வந்து கேட்குற அளவுக்கு எதையோ சொல்லியிருக்க” குறைபட்டுக் கொண்டான் ஹரீஷ். 

“அப்போ சொல்லல. வந்து கேட்டதுக்கு அப்பறம் தான் சொல்லியிருக்கேன்.அகைன் வந்தாங்க என்றால் அது நல்ல விஷயத்துக்காகத் தான் இருக்கும் நண்பா” 

“ம்ம்…ஓகே நல்ல விஷயமா அப்போ நானும் வெய்ட் பண்றேன்” என்றவன் நண்பனிடம் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை இப்போதும் கேட்டுக் கொள்ளவில்லை. 

ஆனால் விஷயம் சுமூகமாக முடிந்து விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டான் ஹரீஷ். 

🌺🌺🌺🌺

கோவர்த்தனன் காதலை வெளிப்படுத்தியதில் இருந்து இப்போது வரை இளந்தளிர் அதைப் பற்றி தான்  யோசிக்கிறாள். 

தன்னிடம் அவன் காதல் சொன்ன விதத்தை ரசித்தாள் இளந்தளிர். 

‘பதில் தெரிஞ்சுட்டே ப்ரபோஸ் பண்றது எல்லாம் உங்களால் மட்டும் தான் முடியும் கோவர்த்தனன்’ என்று நினைத்துச் சிரித்தாள். 

‘ஃபேமிலிக்குப் பிடிச்சிருந்தும் லவ்வோ, கல்யாணமோ வேணாம்னு சொல்றது நானா தான் இருப்பேன்’ என்பதை நினைத்துப் பார்த்துக் கொண்டாள். 

🌺🌺🌺

“ஒரு வழியாக மனதில் இருக்கிறதை கன்வே பண்ணியாச்சு ” என்று குதூகலமாக இருந்தான். 

அவனுடைய காதல் எப்போதும் அவளுக்குத் தொல்லையாகி விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தான். 

தன் காதலால் அவளுக்கு மேலும் பலம் தான் கூட வேண்டுமே தவிர, பலவீனமாக உணர்ந்திடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தான் கோவர்த்தனன். 

அவளது செல்பேசி எண்ணைக் கேட்பதில் தயக்கம் இல்லையென்றாலும், அது சரியான செயல் அல்ல என்பதால் அதைக் கேட்கவில்லை. 

இளந்தளிருடைய காதலில் திளைத்திட இப்பொழுது இருந்தே ஆசைப்பட ஆரம்பித்து விட்டான் கோவர்த்தனன். 

  • தொடரும்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்