அத்தியாயம் 22
“டெட் பாடில சந்தேகப்படுற மாதிரி காயம் ஆர் சம்திங் எல்ஸ்?” போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை கையில் வைத்துத் திருப்பியபடி மருத்துவர் சுதர்மனிடம் வினவினான் யுக்தா சாகித்யன்.
மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்ட சுதர்மன், “நான் முதல்ல கம்ப்ளீட்டா அனலைஸ் பண்ணனும்னு தான் உங்ககிட்ட இத்தனை நாள் டைம் கேட்டேன் யுக்தா. பொதுவா எல்லாருமே பாய்சன்னால இறந்துருக்காங்கன்றது காமன் தியரி. பட் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான விளைவுகள் இருக்கு” எனத் தொண்டையை செரும யுக்தா கூர்மையாக பார்த்தான்.
“இதுவரை அஞ்சு டெத் நடந்து இருக்கு…
முதல்ல நடந்த ரெண்டு டெத்தும் பார்க்கலாம்.
ரோஜா அண்ட் வெங்கடேஷ்… ரோஜாவுக்கு ஸ்டமக் அப்செட் இருந்துருக்கு. நேத்து நைட்டுல இருந்தே. அவங்க சாப்பிட்டது தான் ஏதோ சேரல. பட் டெத் வரைக்கும் கொண்டு வந்து விட்டுருக்குன்னா… மே பி இட் ஹேப்பண்ஸ்.
வெங்கடேஷுக்கு இறக்கப் போற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாசியா, வாமிட்டிங் இருந்ததா அவங்க ப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. கல்யாணத்துக்கு முந்தின நாள் நைட்டு ப்ரெண்ட்ஸ் கூட அன்டைம்ல சாப்பிட்டது தான் காரணமா இருக்கும்னு தோணுது. ஆனா க்ளியர் தியரி தெரியல.
அடுத்து நடந்த ரெண்டு டெத்.
ரேஷ்மா அண்ட் சுரேஷ்.
ரேஷ்மாவுக்கு ஏற்கனவே ஸ்கின் அலர்ஜி இருந்துருக்கு. அவங்க இறந்த சில மணி நேரங்களுக்கு முன்னாடி அலேர்ஜி ராஷஸ் எல்லாம் அதிகம் ஆகி இருக்கு…
சுரேஷ்! இறக்கப் போற சில நிமிஷத்துக்கு முன்னாடி உடம்புல உணர்வே தெரியல… ஹார்ட் பீட் அதிகமா இருக்குற பீல்ன்னு வீட்ல சொல்லிருக்காரு. அண்ட் நோட் திஸ், எப்பவும் பண்றதை விட அன்னைக்கு மார்னிங் ஹெவி ஒர்கவுட் பண்ணிருக்காரு. அது அவரை அபெக்ட் பண்ணிருக்கலாம்.
அப்பறம் கடைசியா நடந்த மணப்பெண்ணோட கொலை. வனஜா.
அவங்களுக்கு கெமிக்கல் / மேக் அப் இதெல்லாமே அலர்ஜி. ஆனாலும் அவங்க வீட்ல பிரைடல் மேக் அப் லைட்டா பண்ணலாம்னு ஒரு டெஸ்ட் மேக் அப் பண்ணிருக்காங்க. அதுல இருந்தே அவங்களுக்கு கை காலெல்லாம் பர்னிங் சென்சேஷன் இருந்துருக்கு. பட் எப்பவும் போடுற அலர்ஜி டேப்லட் போட்டுட்டு கண்ட்ரோல் பண்ணிட்டு இருந்துருக்காங்க. அது ரொம்ப சிவியர் ஆகி ஆர்கன்ஸ் எல்லாம் அஃபெக்ட் பண்ணிருக்கு.
99 பெர்சன்ட் இது எல்லாம் கோ இன்சிடெண்ட்டா நேச்சுரலா நடந்த டெத்தா இருக்கலாம். அந்த ஒரு பெர்சன்ட் இது எல்லாமே கொலையா இருந்தா கண்டிப்பா ஆண்களை வேற ஒரு ஆளும் பெண்களை வேற ஆளும் தான் கொலை செஞ்சு இருக்கணும்… பிகாஸ் லுக் அட் திஸ்… இந்த ரிப்போர்ட்ல இருக்குற போட்டோல ஆண்கள் ரெண்டு பேரோட கழுத்துல ரொம்ப மெல்லிசான ஊசி குத்துன தடம் இருக்கு. ஆனா அதுனால இறப்பு நேரல. அதைப் பத்தி நீங்க தான் விசாரிக்கணும்” என்று ஒவ்வொரு இறப்பிற்கான காரணத்தையும் தெளிவாக உரைத்தார்.
“சோ வாட்ஸ் யுவர் கன்க்ளூஷன் டாக்டர்? நீங்க சொல்றதை பார்த்தா இதெல்லாமே நேச்சுரல் டெத்னு சொல்ற மாறி இருக்கு” எனப் புருவம் சுருக்கி அவன் வினவ, “ஹார்ட் டூ பிலீவ். பட் அதான் உண்மை யுக்தா” என்றான் சுதர்மன்.
“வாட் தி பஃக்… அதெப்படி கோ இன்சிடென்ட்டா எல்லாருமே நேச்சுரலா சாவாங்க. அதுவும் இறந்து போன எல்லாருக்கும் வயசு 35 க்குள்ள தான். ராஷஸ், புட் பாய்சன் இதெல்லாம் ஒரு மனுஷனை இறப்பு வரைக்கும் கொண்டு போகுமா டாக்டர்” என எரிச்சலுடன் வினவினான்.
“வை நாட் யுக்தா. சின்ன காய்ச்சல் தலைவலியா இருந்தாலும் அதை சரியா கவனிக்காம போனா அது ரொம்ப சிவியரான நிலைமைக்கு கொண்டு வந்து விடும். எவ்ளோ அனலைஸ் செஞ்சாலும் எல்லாரோட இறப்பும் கொலைக்கான மோட்டிவ்னு சொல்ல முடியல. வெரி சாரி…” என்றவர் இம்முறை கண்ணாடியைக் கழற்றி விட்டார்.
“என்னோட முதல் சந்தேகம் நரேஷ் மேல தான் இருந்துச்சு. அவன் டெலிவெரி பண்ணுன ஃபுட்ல கலப்படம் இருக்கலாம்னு எல்லாத்தையும் தரோவா செக் பண்ணுனோம். அவனை விசாரிக்கும் போது இறந்தும் போய்ட்டான். அவன் தான் இதெல்லாம் செய்றான்னு நினைச்சுட்டு இருக்கும் போதே, அவன் செத்தும் இன்னொரு கொலை நடந்து இருக்குன்னா, அப்போ நடந்து முடிஞ்ச டெத்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை ஓகே… ஆனா என் ஏஞ்சலை கொலை பண்ண வந்தான்?” என்றான் நெற்றியை குழப்பத்துடன் தேய்த்தபடி.
“சாரி… ஹூ இஸ் தி ஏஞ்சல்?” சுதர்மன் புரியாமல் கேட்க, அதன்பிறகே தனது குழப்பத்தை அவரிடம் கொட்டிக்கொண்டிருப்பது புரிய சிறு புன்னகையுடன் எழுந்தான்.
“ஏஞ்சல்… மை வைஃப்!” எனக் கர்வத்துடன் உரைத்தவன், அதே குறுஞ்சிரிப்பு மாறாமல் வெளியில் சென்றான்.
அந்நேரம் அவனது எண்ணத்தின் நாயகியே அவனை அழைத்தாள்.
“யுக்தா என்ன ஆச்சு? ஏதாவது லீட் கிடைச்சுதா?” எனக் கேட்க,
“என் ஹையர் ஆபிஸர்ஸ் கூட எனக்கு இன்னும் போன் பண்ணி கேஸ் பத்தி கேட்கல. நீ ரொம்ப ஆர்வமா இருக்கியே ஏஞ்சல்!” எனக் கேலி நகை புரிந்தான்.
கீழுதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டவள், “அடிபட்டு இருக்குறது என் பிசினஸ் ஆச்சே” என்றிட,
“ம்ம்…” என்றபடி மருத்துவர் கூறியதை அவளிடம் கூற, “அப்போ எல்லாமே நேச்சுரல் தானா?” என்றாள் ஆசுவாசமாக.
“இருக்கலாம். பட் ஐ டோன்ட் திங்க் சோ!” எனத் தோளைக் குலுக்கினான்.
“ஏன் ஏன்… போஸ்ட் மார்ட்டம் பண்ணுன டாக்டரே கொலைன்னு சொல்லல. யாரும் மண்டபத்துக்குள்ள நுழைஞ்சு கொலை செஞ்ச ஆதாரமும் இல்லை. அப்பறம் என்ன?”
“ஸ்ஸீ யுகா. சில கிரைம்க்கு ஆதாரம் இருக்காது. அது க்ரைம்னு கூட யாரும் ஒத்துக்க முடியாது… ஆனா என்னால அப்படி விட முடியாது. என் இன்டியூஷன் ஒரு விஷயத்தை சரின்னு சொன்னா அது ஒன் ஹண்ட்ரட் பெர்சன்ட் சரியா தான் இருக்கும். அதே மாதிரி தான் இந்த மேட்ரிமோனி தொடர்பான இறப்பு எல்லாமே கொலை தான்னு அடிச்சு சொல்லுது. பாப்போம்!” என்று யோசனையுடன் பேசியவனுக்கு வேறு ஒரு அழைப்பு வந்ததில், “இம்பார்ட்டண்ட் இன்வெஸ்டிகேஷன். கேட்ச் யூ சூன் ஏஞ்சல்” என போனை வைக்கப்போனான்.
அவளோ அழைப்பைத் துண்டிக்காமல், “அதான் இதுல இன்வெஸ்டிகேட் பண்ண ஒன்னும் இல்லையே. அப்பறம் என்ன… ஏதோ கோட்டையை கட்டி இழுக்க போறவன் மாதிரி சீன் போடுற…” என்று கிண்டலாக அவனை மட்டம் தட்ட,
“உன் சைக்கோ புருஷனுக்கு இது ஒன்னு மட்டும் கேஸ் இல்லம்மா. பெண்டிங்ல நிறைய கேஸ் இருக்கு. நிறைய பெண்டிங் பெனாலிட்டி குடுக்க வேண்டியது இருக்கு” என்ற வார்த்தையை அழுத்திக் கூறியவன், “ஈவ்னிங் என் வீட்ல மீட் பண்ணலாம்… வித் ஹாட் கிஸ்ஸஸ்” என்று அலைபேசியிலேயே முத்தத்தைப் பறக்க விட்டவனின் முகத்தில் வன்மம் தீயாய் வளர்ந்தது.
—-
“என்னடி சொல்றான் உன் ஒன் மினிட் புருஷன்?” ஷைலேந்தரி அவளையே ஆர்வமாக பார்த்துக் கேட்க, மைத்ரேயன் முகம் சுளித்து “ஹான் வாட்?” என்றான்.
“உனக்குத் தெரியாதுல மண்டபத்துல என்ன நடந்துச்சு தெரியுமா?” என அனைத்தையும் விளக்க மைத்ரேயன் விஸ்வயுகாவை முறைத்தான்.
“அவன் மூஞ்சிலயே நாலு குத்து குத்த வேண்டியது தான விஸ்வூ! அவன் உன்கிட்ட ஓவரா அட்வான்டேஜ் எடுக்குறான் சொல்லிட்டேன்” என்று எகிற, “இவ்ளோ பேசுறியே நீ போய் அவன் மூஞ்சில குத்தேன்… முடியாதுல… கெத்துடா என் சிபிஐ சைட்டு” என்று ஷைலேந்தரி சிலாகித்ததில் மைத்ரேயனுக்கு வந்ததே கோபம்.
“அவ்ளோ பிடிச்சு இருந்தா டைவர்ஸ் தரேன். அவனையே போய் கட்டிக்கோ” என்று கத்தி விட, ஒரு கணம் முகம் மாறியவள் மறுநொடியே “டேய் டேய் நடிக்காத. என் மேல பழியைப் போட்டு என்னை டைவர்ஸ் பண்ணிட்டு நீ கமுக்கமா இவளை கரெக்ட் பண்ண பாக்குறியா? விட மாட்டேன்டா விட மாட்டேன். இந்த ஷைலேந்தரியை நீ காமெடி பீசா பார்த்துருப்ப, கலர்ஃபுல் ட்ரெஸ்ல பார்த்துருப்ப, தீயா வேலை செஞ்சு பார்த்திருப்ப. வில்லியா பார்த்துருக்கியா… பாத்துருக்கியா? இனிமே பார்ப்ப” என்று சிங்கம் சூர்யாவின் தோரணையில் அவள் வசனத்தை அடித்து விட, அதற்குமேல் எங்கே அவளிடம் கோபம் கொள்வது.
மைத்ரேயன் சிரித்தே விட்டான். “போடி பிசாசே!” என்று அவள் கையில் கிள்ள, விஸ்வயுகா அவளது முதுகிலே அடித்து, “நானும் மைதாவும் வெறும் ப்ரெண்ட்ஸ் அவ்ளோ தான். அதுக்கு மேல எங்களுக்குள்ள எந்த ஹார்ட் பீலிங்க்ஸும் இல்ல. இன்னொரு தடவை கரெக்ட் பண்றான் அது இதுன்னு பேசுன வாயை உடைச்சுடுவேன்” என்றவள் கேலியாய் ஆரம்பித்து கண்டிப்புடன் முடித்தாள்.
“பாருடா… அந்த சிபிஐ உன் புருஷன்னு உருட்டுனப்ப வராத கோபம், இவனை வச்சு பேசும் போது மட்டும் வருதாக்கும்…” என தமக்கையைக் கேலி செய்கிறேன் பேர்வழியென அவளது உள்ளுணர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட, விஸ்வயுகா முறைத்தாள்.
ஆனால், ஷைலேந்தரிக்கு மனமே இலேசானது போலொரு உணர்வு. இருவருக்குள்ளும் எந்த பீலிங்ஸ்ஸும் இல்லையென்றால், இந்த திருமணம் நின்று போனதில் மைத்ரேயனுக்கும் எந்த வருத்தமும் இல்லையென்று தானே அர்த்தம்! அந்நிமிடமே தன்னவனானவனை ஓரக்கண்ணில் பார்த்தாள் ஷைலேந்தரி.
அவனும் அந்நேரம் அவளையே தான் ரசித்துக்கொண்டிருக்க, விழிகள் தீண்டிய நொடியில் அவள் மனதினுள் மின்னல் மழை பொழிந்தது.
சட்டென பார்வையை மாற்றிக்கொண்டவளுக்குள் சிறு தடுமாற்றம். என்ன ஏதென்று தான் புரியவில்லை. இத்தனை யோசித்தவள், அந்தக் கல்யாணமே ஒரு நாடகம் என்பதை தான் யோசிக்க மறந்து விட்டாள்.
இந்தக் கலவரம் நடந்து கொண்டிருக்கும்போதே குறிஞ்சி நந்தேஷைப் பார்க்க அலுவலகத்திற்கே வந்து விட்டாள்.
“சார் உங்ககிட்ட ஒரு ஹெல்ப் தான கேட்டேன். ஏன் இப்படி அவாய்ட் பண்றீங்க? உங்களுக்கு லாஸ் ஆகாம நான் பாத்துக்குறேன். ப்ளீஸ் சார்!” என கோபமும் கெஞ்சலும் கலந்து மூச்சிரைக்க அவனைப் பார்த்தாள் குறிஞ்சி.
நந்தேஷ் ஏற்கனவே தலைவலியில் அமர்ந்திருக்க, “ஹெலோ உங்களை நான் ஒரே ஒரு தடவை தான் பார்த்தேன். அதுக்கு அப்பறம் உங்களை எப்ப நான் அவாய்ட் பண்ணுனேன் அழகி. இப்ப உங்களுக்கு கல்யாணத்தை நிறுத்துற அளவு என்ன பிரச்சனை?” என்றான் நிதானமாக.
“என் பேர் அழகி இல்ல குறிஞ்சி” என்று பல்லைக்கடித்து அவள் திருத்தி விட்டு, “எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை மிஸ்டர் நந்தேஷ். அதுக்கு மேல விளக்கம் சொல்ல முடியாது” என்றதில்,
“இங்க பாருங்க… கல்யாண ஏற்பாடு தான் நாங்க பண்ண முடியும். ரெண்டு குடும்பமும் பேசி சம்மதிச்சப்பறம் உங்க குடும்ப விஷயத்துல நுழைஞ்சு கல்யாணத்தை நிறுத்துற அளவு எங்களுக்கு உரிமை இல்ல. உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நீங்களே உங்க வீட்ல பேசி நிறுத்திக்கோங்க” எனக் கண்டிப்புடன் கூறினான்.
“உங்க மேட்ரிமோனி மூலமா தான் மாப்பிள்ளை ஃபிக்ஸ் ஆகியிருக்கு”
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? உங்க விருப்பம் இல்லாமலா உங்க ப்ரபைலை வீட்ல குடுத்து இருப்பாங்க” எனக் கோபத்துடன் அவன் வினவ, “ஆமா” என்றாள் பரிதாபமாக.
அது அவனை சற்று இளக்கியதோ என்னவோ, “இப்ப நான் என்ன செஞ்சா இந்த கல்யாணம் நிக்கும்” என மெல்லமாகக் கேட்டான்.
அக்கேள்வியில் அவள் முகம் மலர்ந்து விட, “அது தெரியல. ஆனா ஏதாவது ஹெல்ப் பண்ணுங்களேன்” என்று கண்ணைச் சுருக்கிக் கெஞ்சியவளை முறைக்க மட்டுமே முடிந்தது அவனால்.
“ப்ளீஸ் கோச்சுக்காதீங்க மிஸ்டர் நந்தேஷ். அந்த மாப்பிள்ளையைப் பார்த்து பேசி நிறுத்த ட்ரை பண்ண முடியுமா… என் வீட்ல ஜென்ட்ஸ் யாரும் இல்ல. வேற யார்கிட்ட கேட்குறதுன்னும் தெரியல. அதான்…” எனத் தயக்கத்துடன் இழுத்தவளை என்ன சொல்லி தவிர்ப்பது என்று புரியாமல், “ஓகே பட் ட்ரை தான் பண்ணுவேன். அவன் புருஞ்சுக்கிட்டா ஓகே…” என்றதில் “டபிள் ஓகேங்க” என்றாள் புன்னகையுடன்.
“அப்போ நாளைக்கு ஈவ்னிங் அஞ்சு மணிக்கு பெசன்ட் நகர் பீச்க்கு வர சொல்றேன். நீங்களும் வந்துடுங்க” என்று நேரத்தைக் கூறி விட்டு அவள் கிளம்பி விட, ‘இது என்ன புது இம்சையா இருக்கு’ என்று தலையில் அடித்துக்கொண்டான் நந்தேஷ்.
குதூகலத்துடன் வெளியில் சென்ற குறிஞ்சி, அவளது ஸ்கூட்டி பெப்பில் அமரும் முன், யாருக்கோ தம்ப்சப் வெற்றிக்குறியை அனுப்பி விட, அது நேராக யுக்தா சாகித்யனுக்கே வந்தது.
அதனைப் பார்த்ததும் இழிவாய் புன்னகைத்துக் கொண்டவன், “குட் ஜாப்!” எனக் குறுஞ்செய்தியில் அவளைப் பாராட்டி விட்டு, மனையாளைப் பார்க்கச் சென்றான்.
சதியால் யுக்தாவும் யுகாவும் ஒருவரை ஒருவர் நெருங்க, அவர்களே எதிர்பாரா வண்ணம் விதியும் அவர்களது நெருக்கத்திற்கு வித்திட்டது.
அ[IT_EPOLL id=”1″][/IT_EPOLL]த்தியாயம் 23
விஸ்வயுகாவின் அலுவலக பார்க்கிங்கில் காரில் அமர்ந்தபடியே அவளுக்கு போன் செய்து கீழே வரச் சொன்னதில், அவளும் யுக்தாவின் காரில் ஏறி அமர்ந்தாள்.
“எதுக்கு அஞ்சரைக்கே வந்து நிக்கிற. உன்னை மாதிரி மாச சம்பளமா வாங்கிட்டு இருக்கேன். எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு…” என்று கடுகடுத்தவளிடம்,
“அதுல முதல் வேலையே உன் புருஷனை குளுகுளுன்னு வச்சுக்குறது தான ஏஞ்சல்” எனக் கொஞ்சினான்.
கார் நேரடியாக அவனது வீட்டிற்கே சென்றது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கார் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் பின்னால் வந்து கொண்டிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி, சரட்டென யுக்தாவின் காரை சேஸ் செய்து பக்கவாட்டிற்கு வந்து சடாரென ஒரு இடி இடித்தது.
அதனை உணர்ந்து யுக்தா காரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முன், முகம் தெரியாதவன் இடித்த இடியில் கார் நெடுஞ்சாலையில் சுழன்று கொண்டிருக்க, வீல்கள் நான்கும் கீறிச்சென்ற சத்தம் கிளப்பி இறுதியில் டிவைடரில் டங்கென முட்டும் முன்னே காரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டான்.
அவர்களின் நல்லநேரமோ என்னவோ, எப்போதும் சரக்குகளை தாங்கிச் செல்லும் லாரி எதுவும் அந்த நேரத்தில் சாலையில் வரவில்லை.
யுக்தா ஒரு நொடி கண்ணை மூடித் திறந்து தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு அருகில் பார்க்க, நேர்ந்த அதிர்வில் விஸ்வயுகா சீட்டின் பின்னால் அழுத்தமாகச் சாய்ந்து கண்ணை இறுக்கி மூடி இருந்தாள்.
நெற்றியில் ஒரு மெல்லிய இரத்தக் கோடு வியர்வையுடன் கலந்து வழிந்தது.
“ஏஞ்சல்… ஆர் யூ ஓகே” சுருக்கென தைத்த வலியுடன் யுக்தா அவள் தலையைத் தொட, அவள் நன்றாக பயந்திருப்பது அவளது சீரற்ற மூச்சுக்களைக் கொண்டே உணர்ந்தான்.
“யுகா? லுக் அட் மீ” என அவள் கன்னத்தைப் பிடிக்க, மெல்லக் கண்ணைத் திறந்தவள் வலியில் நெற்றியைப் பிடித்தாள்.
“நீ ஓகே தான? ஹாஸ்பிடல் போகலாமா” என்று அவனை மீறிய தவிப்பு வெளிப்பட, “வேணாம்… வீட்டுக்குப் போகலாம். ஹாஸ்பிடல் வேணாம்” என்றாள் முகத்தைச் சுருக்கி.
யுக்தா அதிவேகத்தில் எக்சிக்யூவி சென்ற திசையை நெருப்புப் பார்வை பார்த்து விட்டு, “ப்ளட் வருது ஏஞ்சல். பர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டு…” என்று அவன் கூறும்போதே, ஏற்கனவே பயந்திருந்தவள் விழிகளை மருட்சியுடன் உருட்டி,
“ம்ம்ஹும் வீட்டுக்கு” என நடுக்கத்துடன் கூற, “ஓகே ஓகே டூ மினிட்ஸ் வீடு வந்துடும்” என்று மீண்டும் காரைக் கிளப்பி லெஃப்டில் வளைத்து சொன்னது போன்றே இரு நிமிடத்தில் அபார்ட்மெண்ட்டை அடைந்தான்.
பத்து வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட அபார்ட்மெண்ட் தான். ஆனாலும் பொலிவு குறையாமல் மொத்தமாக 50 வீடுகளைக் கொண்டிருந்தது.
இரண்டாம் முறை வரும்போது தான் அதையே கவனித்தாள் அவள். தலைவலி வேறு பிய்த்து எடுத்தாலும் மனதில் தோன்றிய கேள்வியைக் கேட்டு விட்டாள்.
“இந்த சின்ன இடத்துல இத்தனை வீடு இருக்கே. பிரீதிங் ஸ்பேஸே இருக்காதுல…” என்றதில் நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தவன், “நீ கொஞ்சம் அரை மயக்கத்துல இருக்க தெளிவாகிட்டுக் கேளு. தெளிவா பதில் சொல்றேன்” என்று வீட்டினுள் அழைத்தான்.
அவன் சொன்னது போன்றே வலியில் தள்ளாடியபடி தான் நடந்தாள். அவளை சோபாவில் அமர வைத்தவன், துரிதமாக முதலுதவிப்பெட்டியை எடுத்து வந்து அவள் காயத்திற்கு மருந்திட்டாள்.
“ஆஆ வலிக்குதுடா சைக்கோ” என்று அவனது கையைத் தட்டி விட, அவளை இழுத்து தன் மடி மீது அமர்த்திக் கொண்டவன், அவள் கையை எடுத்து அவனது பின்னந்தலையில் வைத்து விட்டான்.
ஒரு கையால் அவள் இடையை சுற்றி வளைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டவன், “சீட் பெல்ட் போட்டு உட்கார மாட்டியாடி. ஹெவி இஞ்சூரி ஆகிருந்தா என்ன ஆகியிருக்கும். இடியட் ஏஞ்சல்” என்று அக்கறையுடன் அதட்டினான்.
“எரியும்! என் முடியை டைட்டா பிடிச்சுக்கோ. ஆடா”. என்று உத்தரவிட்டபடியே மீண்டும் இரத்தத்தைத் துடைத்து மருந்திட, அவளோ “ஸ்ஸ்ஸ்ஸ்” என வலியில் கத்தி அவன் முடியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
ஒரு கையால் தோள்பட்டை சட்டையை உரிமையாய் பற்றிக்கொள்ள, அவள் கத்தியதும் அவளது மெல்லிடைக்கு அழுத்தம் கொடுத்து அமைதிப்படுத்தினான்.
“அவ்ளோ தான் முடிஞ்சுதுடி” என்று பஞ்சில் மருந்தை வைத்து காயத்தில் அழுத்தி பிளாஸ்டர் போட்டு ஒட்டி விட்டவன், “சாஞ்சுக்கோ…” என்று அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
வலியில் முகத்தைச் சுளித்தவள், “இட்ஸ் பெயினிங். நான் நந்துவை வர சொல்லி வீட்டுக்குப் போறேன்” என்று எழ முயற்சிக்க, விடாப்பிடியாகப் பிடித்து இழுத்தான்.
“டேய் ஏன்டா” அவள் நிமிர்ந்து முறைத்ததில், “எங்கடி போற? ஏன் இதை பார்த்தா உனக்கு வீடு மாதிரி தெரியலையா? இல்ல குட்டியா இருக்குறதுனால ப்ரீத் பண்ண முடியலையா?” என அவள் கேட்ட கேள்விக்காக குத்தலாக மொழிந்தான்.
இம்முறை அவள் முறைத்தாள். இன்னுமே அவள் கரங்கள் நடுங்கிக்கொண்டு தான் இருந்தன.
“ஏன் இவ்ளோ ஷிவர் ஆகுற ஏஞ்சல். காம் டவுன்…” என அவள் முதுகில் தடவிக் கொடுத்தவன் மீண்டும் அவளை நெஞ்சில் சாய்த்து மார்போடு புதைத்துக் கொண்டான்.
“அபர்ணாவோட ஆக்சிடெண்ட்டை நேரா பார்த்ததுல இருந்தே எனக்கு ஆக்சிடெண்ட்னா பயம்” என்றவள் காலைக்குறுக்கி அவனோடு பிணைந்து கொள்ள, இன்னும் வாகாக இறுக்கினான்.
“ம்ம்ஹும்… இருட்டுன்னா பயம், ஆக்சிடெண்ட்னா பயம், டெட் பாடி பார்த்தா பயம்… இன்னும் லிஸ்ட்ல என்னவெல்லாம் இருக்கு யுகா ஏஞ்சல்” ஆடவனின் இதழ் சூடு பெண்ணின் நெற்றியில் படுமாறு கேட்டான்.
நிறைய சொல்வாள்… சொல்லும் நிலையில் அவளும் இல்லை. கேட்கும் நிதானத்தில் அவனும் இல்லை.
அவளிடம் இருந்து மௌனமே வெளிப்பட, “உன் ஆப்பனென்ட்ட எல்லாம் அடிச்சு தூக்கிட்டு ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் போட்டு இருக்க உன் பிசினஸ்ல. போல்ட் அண்ட் தைரியம் இல்லாம இதை பண்ண சாத்தியம் இல்லை. ஸ்ட்ராங் பிசினஸ் வுமன்க்குள்ள ஒரு தெனாலி இருக்குறது தான் இடிக்குது” என்றதில் அவன் முகத்தை விலக்கி வைத்தவள் “என்ன இடிக்குது?” என்றாள் புரியாமல்.
அவனோ மீண்டும் அவன் கன்னத்தோடு அவள் கன்னத்தில் அழுத்தி இழைந்தான்.
“ஒருவேளை பயந்த மாதிரி நடிக்கிறியோன்னு” என்று யுக்தா கிண்டலாகக் கேட்க, “சைக்கோ உன் முள் தாடி குத்துது” என்று வெடுக்கென தள்ளி விட்டவள், “நடிக்கிறேன்னே வச்சுக்கோ. முதல்ல தள்ளு. நான் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்குறேன்” என்று எரிச்சலாய் எழுப் போனவளை நகரவே விடவில்லை அவன்.
“ஜஸ்ட் கிட்டிங் ஏஞ்சல். இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் பயந்தா வாழவே முடியாது. லைஃப்ல நம்மளை அஃபெக்ட் பண்ற ஏதோ ஒன்னு, ஏதோ ஒரு இழப்பு நடந்துக்கிட்டே தான் இருக்கும். அந்த காயத்தோட வாழப் பழகிட்டா, அதுக்கு அப்பறம் எவ்ளோ பெரிய விஷயமா இருந்தாலும் நம்மளை மனசளவுல பாதிக்காது” என்று அவள் தலையைக் கோதி விட்டு எங்கோ வெறித்தபடி உரைத்தான்.
சடாரென எழுந்து அமர்ந்தவள், அவனைத் திகைப்பாகப் பார்த்தாள்.
எண்ணங்கள் அங்கும் இங்கும் அலைந்து அஸ்வினியிடம் வந்து நின்றது.
அபர்ணா இறந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. இன்னும் விஸ்வயுகா அதன் பாதிப்பில் இருந்து வெளிவந்திருக்கவில்லை.
சரியாக உண்ணாமல், உறக்கம் வராமல் தவித்தவளை அஸ்வினியின் அரவணைப்பே தேற்றியது.
“என்ன யுகாம்மா இது… நடந்தது ஒரு ஆக்சிடெண்ட். கஷ்டமா தான் இருக்கு. ஆனா இப்படியே இருந்தா எப்படி?” என்று வருத்தத்துடன் அவளைக் கட்டிக்கொண்டார்.
“இல்ல சித்தி. கொஞ்சம் முன்னாடி போய் அவளைப் பிடிச்சு இருந்தா இந்த ஆக்சிடெண்ட் நடந்து இருக்காது. ட்ரிங்க் பண்ணிட்டு இவ்ளோ ஸ்பீடா கார் ஓட்டுவான்னு நாங்க எதிர்பார்க்கல சித்தி. கண்ணை மூடுனா அவள் தலை உடைஞ்சு காருக்குள்ள இறந்து கிடந்தது தான் ஞாபகம் வருது. பயமா இருக்கு சித்தி” என்றாள் பாவமாக.
“அச்சோ! முதல்ல நீ இந்த எண்ணத்தை எல்லாம் தூக்கிப் போடு. நம்மளோட முயற்சிக்கும் மேல எவ்வளவோ நடக்கும் ஏஞ்சல். எல்லாத்துக்கும் நம்ம தான் காரணம்னு நினைச்சா, நம்மளால நிம்மதியா இருக்க முடியாது. இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் பயந்தா வாழவே முடியாது. லைஃப்ல நம்மளை அஃபெக்ட் பண்ற ஏதோ ஒன்னு, ஏதோ ஒரு இழப்பு நடந்துக்கிட்டே தான் இருக்கும். அந்த காயத்தோட வாழப் பழகிட்டா, அதுக்கு அப்பறம் எவ்ளோ பெரிய விஷயமா இருந்தாலும் நம்மளை மனசளவுல பாதிக்காது” மெல்ல அவள் கூந்தலை தடவிக்கொடுத்து அவளை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தார்.
அதையே தான் யுக்தா சாகித்யனும் செய்தான்.
தன்னையே அதிர்வாய் பார்த்தவளைக் குழப்பத்துடன் ஏறிட்டவன், “ஏன் இப்படி ஃப்ரீஸ் ஆகி பார்க்குற. தலைவலிக்க போகுது ஏஞ்சல். கம்… கொஞ்ச நேரம் தூங்கு” என அழைத்ததில் அவள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததில் சீண்டலையே ஆயுதமாக எடுத்தான்.
“நீ என்கிட்ட கேட்ட கேள்விக்கு இப்போ பதில் சொல்லவா?” கேலிப்புன்னகையுடன் வினவினான் யுக்தா.
“என்ன கேட்டேன்?” புருவம் இடுங்க அவள் கேட்க,
“அபார்ட்மெண்ட்க்குள்ள வரும் போது என்ன கேட்ட?” எனத் துருவினான்.
சில நொடிகள் செலவழித்து சிந்தித்தவள் பின் நினைவு வந்தவளாக, “இந்த சின்ன இடத்துல இத்தனை வீடு இருக்கே. பிரீதிங் ஸ்பேஸே இருக்காதுன்னு கேட்டேன்…” என்று முடிக்கும்முன்னே அவள் இதழ்களைச் சிறைப்பிடித்து மூச்சுத் திணற வைத்தவன், பின் அவனே மூச்சும் கொடுத்தான்.
இதழொற்றலின் அழுத்தம் நேரம் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே செல்ல, வஞ்சத்தின் பிடியில் நெருங்கி வந்த இருவருக்குமே அதனை விலக்கத் தோன்றவில்லை.
சில நிமிடங்களை இன்ப முத்தத்தின் வழியில் கரைய விட்டே பிறகே விலகி அவள் முகம் பார்த்தவன், சிவந்திருந்த இதழ்களையும் கன்னங்களையும் கண்டு போதை தலைக்கேறி போனான்.
“இப்ப பிரீதிங் ஸ்பேஸ் இருக்காடி… யூ ஆர் காட்ஜியஸ் ஏஞ்சல்” என உளறியவன், ஒற்றை விரல் கொண்டு அவள் நெற்றி தொடங்கி வருடத் தொடங்கினான்.
“உன் ரௌண்டு கண்ணு, பட்டன் நோஸ், கிஸ் பண்ண தூண்டுற ஹார்ட் ஷேப் லிப்ஸ், கழுத்தெலும்பு தெரியிற மாதிரி நீண்ட கழுத்து… வாவ்! யூ ஆர் ஜஸ்ட் மேட் மீ கிரேஸி ஆன் யூ ஏஞ்சல்” என்றபடியே அவள் கழுத்தில் அழுந்த முத்தமிட்டான்.
அவனை விலக்க வேண்டுமென மூளை கட்டளையிட்டாலும், ஏனோ அவனை விட்டு நகரவே தோன்றவில்லை விஸ்வயுகாவிற்கு.
இன்னும் இன்னும் அவனது நெருக்கத்தையே கேட்டு ஏங்கிய மனதை கண்டு திடுக்கிட்டவள், சட்டென அவனை உதறிவிட்டு எழ முனைய அதற்கு அவன் அனுமதி தரவேண்டுமே!
மோகம் அடங்காமல் மீண்டுமொரு முறை அவள் இதழ்களை நாடி தாகம் தீர்த்தான் கயவன்.
முத்தம் கொடுத்த மயக்கத்தில் தலைவலி மறந்து அவள் அவனது நெஞ்சில் சாய்ந்தே உறங்கிப் போனாள்.
அவள் உறங்கிப்போன சில நொடிகளிலேயே யுக்தாவின் விழிகளில் தீவிரம் அரங்கேறியது.
அருணிற்கு போன் செய்தவன் ஹஸ்கி குரலில் “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பூந்தமல்லி ஹைவேல ஒரு ஆக்சிடெண்ட் நடக்க இருந்துச்சு. என் காரை ஹிட் பண்ணுனவனோட முழு விவரம் பைவ் மினிட்ஸ்ல எனக்கு கிடைக்கணும். ஆளே கிடைச்சாலும் ஓகே தான். தென், நான் சொன்ன கேஸ்க்கான இன்வெஸ்டிகேஷன் எப்படி போயிட்டு இருக்கு. எனி லீட்?” என அதிகாரத்துடன் உத்தரவிட்டு கேட்க,
“சியூர் சார்… அந்த கேஸ்க்கான இன்வெஸ்டிகேஷன் போயிட்டு இருக்கு சார். சஸ்பெக்ட்டோட போன் ரெகார்ட் எடுத்தாச்சு. அதுல சபீஷியஸா எதுவும் இல்ல. இன்னும் நிறைய டீடெய்ல் தேவைப்படுது” என்றான்.
“ம்ம். அந்த டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ண தான் போராடிட்டு இருக்கேன்” என்று தனது மார்பை மஞ்சமாக்கி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்ணவளின் இடையை வருடி விட்டான்.
அருணோ “எதுவும் என்கவுன்டர்ல இருக்கீங்களா சார்? இவ்ளோ ஹஸ்கி வாய்ஸ்ல பேசுறீங்க” என்ற பிறகே பெண்ணவளின் உறக்கம் கலையக்கூடாதென்று அமைதியாய் பேசுவது புரிய தன்மீதே கோபம் கொண்டான்.
‘தூங்கிட்டு இருக்குறவகிட்ட எதுக்கு அக்கறை இருக்குற மாதிரி நடிக்கிற யுக்தா’ என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டவன், “அதெல்லாம் இல்ல” என்று கம்பீரத்துடன் கூற, லேசாய் அவள் அசைவது உணர்ந்து, சட்டென குரலைத் தாழ்த்தி, “நான் கேட்ட தகவலை எடு அருண். ஃபாஸ்ட்” என்று மீண்டும் ஹஸ்கி குரலில் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
மோகம் வலுக்கும்
மேகா