Loading

22 – விடா ரதி… 

 

மாடிக்கு சென்றவள் அறையில் அவனைத் தேடினாள். அவன் இல்லை என்கவும் மேல் மாடிக்கு செல்ல, அங்கே நீர் தொட்டிக்கு ஏறிச் செல்லும் படியில் அமர்ந்து வயலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

“ப்பா… இங்க இருக்கியா நீ? நல்ல வியூ டா…. உனக்கு நல்ல ரசனை இருக்கு.. “, எனக் கூறிவிட்டு, அவனை இடித்துக் கொண்டு அருகே அமர்ந்தாள். 

 

அவன் எதுவும் பேசாது அவளை மட்டுமே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

அவனது பார்வைக் குறுகுறுப்பு ஏற்படுத்தவும், “என்னாச்சி ராக்கி? என்ன கோவம் உனக்கு?”, என அவனைப் பார்க்காமலே கேட்டாள். 

 

“எங்கம்மாவுக்கு வசிய மை வச்சிட்டியா டி?”

 

“உனக்கே நான் வைக்கல… உங்கம்மாவுக்கு எதுக்கு வைக்கப் போறேன்?”, சிரிப்புடன் கேட்டாள். 

 

“இவ்ளோ நாளா நான் எங்கம்மா நம்பிக்கைய சம்பாதிக்கலியா ரதி?”, கனமான குரலில் கேட்டான். 

 

“ஒரு தடவ சாவி என்கிட்ட குடுத்ததுக்கா இப்படி யோசிக்கிற நீ?”

 

“ஒரு தடவ கூட என்கிட்ட குடுத்தது இல்ல ரதி.. அதனால் தான் இப்படி யோசிக்கிறேன்…”

 

“பொதுவாவே வீட்டு நிர்வாகம் பொண்ணுங்ககிட்ட தான் இருக்கும் ராக்கி… அந்த வகையில காலம் காலமாக உன் பாட்டி, உன் அம்மான்னு பாத்துட்டு வராங்க…. பசங்க கைல குடுக்காம எல்லாம் இல்ல… ஆனா பொறுப்பு வரணும்ன்னு சில வேலை எல்லாம் நமக்கு குடுப்பாங்க… அப்படி எனக்கு வச்ச பரிட்சைல நான் பாஸ் பண்ணிட்டேன் போல… நீயும் அவங்க பரிட்சைல பாஸ் பண்ணதால தான் தனியா ரீடெயில் கடை வச்சி இருக்க… உன் டர்நோவேர் எல்லாம் எனக்கு தெரியாது ஆனா நீ தேறிடுவன்னு அவங்களுக்கு தெரியும்…”

 

அவன் பதிலேதும் கூறாமல் அவளது முகத்தைப் பார்த்தான். 

 

“ம் சொல்லு டா….”

 

அவன் அவளை முறைக்க, “அதாகப்பட்டது நீங்க எவ்ளோ தான் சம்பாதிச்சாலும் வீட்டு நிர்வாகம் சரியா இருந்தா தான், எல்லாமே நிலைக்கும். அதனால அடுத்து அத நான் பண்ணபோறதால இப்போ இருந்தே எனக்கு அத்தை டிரெய்னிங் தராங்கன்னு நினைக்கறேன்…. “

 

“அப்ப என் குடுமியும் உன் கைல தான்னு சொல்றியா நீ?”

 

“இதுல உனக்கு என்ன சந்தேகம் டா என் அன்பு புருஷா?”, அவனது கன்னத்தைக் கிள்ளிக் கேட்டாள். 

 

“ஆனாலும் இது பெண்ணாதிக்கம் தெரியுமா?”

 

“அப்படியா?”, எனக் கேட்டபடி அவன் மடியில் அமர்ந்து அவனது தோளில் கைகளைக் கோர்த்துக் கொண்டாள். 

 

“ஆமா…. ஆனாலும் எனக்கு இது பிடிச்சிருக்கு.. உனக்கும் அம்மாவுக்கும் செட் ஆகலன்னா தான் கஷ்டம்… அம்மாவும் ஆளுமை உள்ளவங்க.. நீயும் அப்படி தான்.. உங்களுக்குள்ள சுமூக நிலை இருக்கறது எனக்கு சந்தோசம் தான்….”, எனக் கூறிவிட்டு அவளது நெற்றியில் முத்தம் வைத்தான். 

 

“அப்பறம் ஏண்டா இங்க வந்து உர்ருன்னு உக்காந்து இருக்க?”, அவன் கன்னத்தைக் கடித்தபடிக் கேட்டாள். 

 

“எல்லாம் ஒரு பொறாமை தான்…. எனக்கு ஒரு தடவை கூட குடுக்காத சாவிய உனக்கு தூக்கி குடுத்தா வராதா என்ன?”, முறுக்கிக் கொண்டான். 

 

“சரி… உங்கம்மாகிட்ட வந்து இந்த முறுக்கு சீடை எல்லாம் காமி.. இப்ப வா சாப்பிடலாம்…. எனக்கு பசிக்குது டா….”, எனக் கூறிச் சிணுங்கினாள். 

 

“சிணுங்காத டி… அப்பறம் நம்ம மச்சீஸ் வீட்டுக்கு போக முடியாம போனா நான் பொறுப்பில்ல….”, என இடையைக் கிள்ளினான். 

 

“டேய் ஸ்டுப்பிட்…. எந்திரிச்சி வா… நான் முன்ன போறேன்…”, என அவன் எழும் முன் எழுந்து ஓடினாள். 

 

அவள் சென்று சாப்பாட்டு மேஜை மேல் தட்டு வைத்து தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தபோது மாமனாரும் மாமியாரும் சிரித்தபடி வெளியே வந்தனர். 

 

“எங்கம்மா அவன்?”, மாமனார் கேட்டார். 

 

“வராரு மாமா….”, சிரித்தபடிக் கூறினாள். 

 

“உன் மாமியா மனசுல இடம் பிடிச்சிட்ட… ரொம்ப சந்தோசம்.. அப்பப்ப இந்த மாமனையும் கவனிச்சிக்க ராசாத்தி….”, என அவர் கூறியதும் அவள் முகமெல்லாம் பூத்தது. 

 

“பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க மாமா… உக்காருங்க சாப்பிடலாம்…”

 

“நீயும் உக்காருத்தா…. நாமளே பரிமாறிக்கலாம்…”, வாஞ்சையுடன் அவர் கூறிய விதமும், குரலும் அவளுக்கு தன் தந்தையை நினைவுப்படுத்தியது. 

 

கல்யாணம் முடிந்த நாள் முதல் இன்று வரையிலும் ஒன்று விட்டால் ஒன்று என நாட்களும் வேலையும் ஓடியது. கொடைக்கானல் சென்றபின் ஒரு முறை தந்தை இல்லம் செல்ல வேண்டும் என நினைத்தாள் . 

 

அனைவரும் ஒன்றாக உணவுண்டு, சிரித்துப் பேசி மகிழ்வான தருணங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். 

 

மாலை நேரத்தில் இரு தோழிகள் வீட்டிற்கும் சென்றுவிட்டு உணவகத்தில் சென்று அமர்ந்து இருந்தனர். 

 

“ஏற்கனவே வயிறு ஃபுல்லா இருக்கு ராக்கி… “

 

“அதெல்லாம் சாப்பிடலாம் வா… நீதானே கேட்ட சூரி கடைல சாப்பிடணும்ன்னு…..”

 

“ஆமா… ஆனா ரெண்டு வீட்லயும் ஸ்நாக்ஸ் குடுத்து நெறப்பிட்டாங்களே….”, அவனியாபுரம் அய்யன் ஹோட்டல் உள்ளே சென்று அமர்ந்தனர். 

 

அசைவ உணவுக்கு பிரசித்தி பெற்ற அய்யன் ஹோட்டல், பார்த்ததும் பிடித்தது. உள் கட்டமைப்பு, சுத்தம், ருசி என அனைத்திலும் கொடிகட்டிப் பறந்தனர். 

 

இருவரும் பேசியபடியே அவர்களுக்கு விருப்பமான உணவுகளுடன், புதிய வகைகளையும் ருசிப் பார்த்தனர். 

 

ரதிக்கு ருசி பிடித்துவிட, முதலில் சாப்பிடலாம் பிறகு நடந்து வயிற்றை குறைத்துக் கொள்ளலாம் என நன்றாகவே சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்கும் வாங்கிக் கொண்டு வந்தனர். 

 

“அத்த… இந்தாங்க.. .நல்லா இருக்கும்… சூடா இருக்கு இப்பவே சாப்பிட்டுருங்க…”, எனக் கொடுத்துவிட்டு மேலே சென்றாள். 

 

“ரதி….. பூண்டு பால் காய்ச்சி குடிங்க ரெண்டு பேரும்….. வெளிய போற எடத்துல சாப்பிடறது நல்லா ஜீரணம் ஆகணும்….”

 

“சரிங்க அத்த…. துணி மாத்திட்டு வந்து வைக்கறேன்….”

 

அவன் உடை மாற்றிக் கொண்டு, மாடிக்கு சென்றுவிட்டான். இவள் உடை மாற்றிக் கொண்டு சிறிது நேரம் கழித்து கீழே சென்று பூண்டு பால் காய்ச்சிக் கொண்டு மாடிக்கு சென்றாள். 

 

“இந்தா ராக்கி….”, அவனுக்கு கொடுத்துவிட்டு அவளும் நடந்தபடிக் குடித்து முடித்தாள். 

 

“ரதி….”

 

“ம்ம்….. “

 

“இங்க வா….”

 

“என்ன ராக்கி?”

 

“நீ சந்தோசமா இருக்கியா?”

 

“இது என்ன கேள்வி?”

 

“சொல்லு டி..”, என அவளைப் பின்னிருந்து கட்டிக் கொண்டுக் கேட்டான். 

 

“ரொம்ப சந்தோசமா இருக்கேன்… இந்த வாழ்க்கைக்காக நான் ரொம்ப ஏங்கினேன்…. கிடைக்காதுன்னு நான் முடிவே பண்ண வாழ்க்கை எனக்கு அமைஞ்சி இருக்கு…. அந்த உணர்வ வார்த்தையா சொல்ல தெரியல ராக்கி..”, என அவனது மார்பினில் சாய்ந்துக் கொண்டாள். 

 

அவன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். பின்கழுத்தில் இதழ் பதித்து இன்னும் அவளை சிலிர்க்க வைத்தான். 

 

“நீ சந்தோசமா இருக்கியா ராக்கி?”

 

“நீயே சொல்லேன்…”, அவனது முகம் பார்க்கத் திருப்பி நிறுத்தினான் அவளை. 

 

“நீ தான் சொல்லணும்….”

 

“உனக்கு தான் என் மனசு நான் பேசாமயே புரியும்ன்னு சொல்வியே… இப்போ சொல்லு….”, என வம்பிலுத்தான். 

 

“இந்த கண்ல சிரிப்பு வந்துட்டா நீ சந்தோசமா இருக்கண்ணு அர்த்தம்.. ஆனா இன்னும் முழுசா அந்த சிரிப்பு வரல… ஏன்?”

 

“இந்த முகமும், கண்ணும் கூட இன்னும் முழுசா மலர்ந்து விகசிக்கல…. ஏன்?”, அவளது முகத்தை அளந்தபடிக் கேட்டான்.  

 

அவள் அமைதியாக வேறுபக்கம் பார்த்தாள். 

 

“நான் உன்ன காதலிச்சேன்… ஆனா அத நான் உணரல ரதி… இது தான் என்னோட பதில்… “, அவள் வெடுக்கென அவனது முகம் பார்த்தாள். 

 

அந்த முகத்தில் வலியும், உண்மையும் அவளுக்கு தெரிந்தன. அவனது உணராமை கொடுக்கும் வலியை அவன் சுமப்பது புரிந்தது. 

 

“இப்போ என் காதல முழுசா உணர முடியுதா ?”

 

“ரொம்பவே….”, எனக் கூறி அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

 

“என் உள்ளுணர்வு சரியா தான் சொல்லிருக்கு ….. “, மெல்லச் சொன்னாள். 

 

“ஆமா… நீ சரியா தான் புரிஞ்சிருந்த…. எனக்கு தான் அப்ப புரியல… நான் முழுசா உணரல….” எனக் கூறி இன்னமும் இறுக்கிக் கொண்டான். 

 

அவளுக்கு தான் மூச்சு முட்ட ஆரம்பித்தது. அவனின் பிடி அவளை மற்றொரு முறை பிரிந்துச் செல்ல விட்டுவிட மாட்டேன் என்பது போல இன்னமும் இறுகியது. 

 

“நான் வேலைக்கு போகட்டுமா வேணாமா ராக்கி?”, அவன் கவனத்தை மாற்றக் கேட்டாள் . 

 

“நான் வேணாம்ன்னு சொன்னா விட்ருவியா ?”

 

“சொல்லி தான் பாருங்களேன்…. “, நாக்கைக் கன்னச்கதுப்பில் துருத்திக் கொண்டுக் கேட்டாள்.. 

 

“அப்படியே உன்ன கடிச்சி சாப்பிடலாம் போல இருக்கு டி…. நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்.. ஆனா நீ நம்ம தொழிலும் கத்துக்கணும்.. அவ்ளோ தான்…. நாளைக்கு நான் நம்ம தொழில விரிவுபடுத்த போறப்போ எனக்கு உன் சப்போட் ரொம்ப முக்கியம்…. அத யோசிச்சி பாத்துக்கோ…..”, எனக் கூறியபடி அவளைப் பின்பக்க படிகட்டு வழியாக மாந்தோப்புக்கு அழைத்துச் சென்றான்.

 

இருவரும் வெளியே நடந்துச் செல்வதுக் கண்டு சாந்தம்மா தேவி சிரிப்புடன் கீழே இருக்கும் கதவுகளை அடைத்துவிட்டு உறங்கச் சென்றார்.  

 

கோப்பை வந்தடைந்ததும் நடுவே இருந்த குடிசையின் உள்ளிருந்தக் கயிற்று கட்டிலை வெளியே போட்டு, அவளை தன் மார்பின் மேலே படுக்க வைத்துக் கொண்டு முழுநிலவின் பால் ஒளியில் காதல் காய்ச்சல் கொண்டனர். 

 

உலகையே வென்ற உவகை அவனுக்கு, உலகமே தனது என்ற திருப்தி அவளுக்கு. இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக இணைத்துக் கொண்டு, வாழ்வின் அடுத்த கட்டத்தை அடைந்தனர். 

 

அடுத்த நாள் மதியம் உணவுண்டுவிட்டு இருவரும் கொடைக்கானல் கிளம்பினர். 

 

“ராக்கி…. நான் நாளைக்கு பெங்களூர் போகணும்… புராஜக்ட் முடிச்சிட்டு வருவேன்….”

 

“எவ்ளோ நாள் ஆகும்?”

 

“ஒரு மாசம் ஆகலாம்…. உனக்கு ஓகே தானே?”

 

“வீட்ல இருந்தே பண்ண முடியாதா?”, மறைத்துக் கொண்ட ஏமாற்றத்துடன் கேட்டான். 

 

“சீக்கிரம் முடிக்க சொல்லி இருக்காங்க… நான் அங்க இருந்தா தான் நேரம் கடத்தாம முடிக்க முடியும்.. வீட்ல இருந்து பண்ணாலும் முடிக்கற சமயம் நான் அங்கே தான் இருக்கணும்…. நீ சமாளிச்சிப்ப தானே?”, கவலையுடன் கேட்டாள். 

 

“ம்ம்….”, எனப் பெருமூச்சு விட்டபடி வெளியே சென்றான். 

 

திருமணத்திற்கு பின் வரும் முதல் பிரிவை இருவரும் வலியுடன் எதிர்கொண்டனர். 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்