297 views

என் அன்பானவரின் நினைவுகள், ஆசிகள் மற்றும் தன்னம்பிக்கையுடனும் புது வருடத்தில் கால் பதிக்கிறேன். உங்களுக்கும் என் அன்பான  வாழ்த்துகள் 🎉🎊

❤❤❤

அத்தியாயம் 22

விழிகள் தெறித்து விழுந்தது போன்று மனைவியைப் பார்த்தான் பிரித்வி.

“உன்னை தான் யா ! எழுந்திரு!” என்று அவனை எழுந்து நிற்கச் சொன்னாள் அதிரூபா.

“என்னம்மா?” என்று மெல்ல
அவள் புறம் எழுந்து நின்றான்.

“இன்னைக்கு  யார் கூட மீட்டிங் நடந்துச்சு?” என்று மிரட்டிக் கேட்டாள் மனைவி.

அவளுக்குக் கணவன் இதை தன்னிடம் மறைத்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“ஆஃபீஸ் மீட்டிங்…” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் பிரித்வியின் காது அதிரூபாவின் கரங்களில் சிக்கிச் சின்னா பின்னமாகத் தயாரானது.

“ஆஆ!!!” என்று அலறினான் பிரித்வி.

அந்த சத்தம் கேட்டு கீழிருந்த மூவரும் மாடிக்கு விரைந்தனர்.

“பிரித்வி! ரூபா! யாருக்கு என்ன ஆச்சு? ஏன் அலறுறீங்க?” என்று படபடவென கதவைத் தட்டினர்.

“ஒன்னும் இல்லை அத்தை. அவருக்குக் காது வலிக்குதாம்! அதனால் வலியில் கத்துறார்.நான் ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கேன். சரி ஆகிடும்” என்று உள்ளிருந்தவாறே பதில் சொன்னாள் அதிரூபா.

“என்ன சொல்றா இவ?” என்று குழம்பியபடியே கேட்டார் சகுந்தலா.

“அவங்களுக்குள்ளே ஏதோ சண்டை போல சகு! நாம தலையிட வேண்டாம். வாங்க கீழே போகலாம்”என்று மனைவி மற்றும் மகளை அழைத்துக் கொண்டு கீழே சென்று விட்டார் மகேஸ்வரன்.

“அம்மா!” என்று கத்தப் போனவனை வாயைக் தன் கையால் மூடி விட்டாள் அதிரூபா.

“மூச்! எங்கிட்ட பொய் சொல்றீங்கள்ல?” என்று தன் கையை அவனிடமிருந்து நீக்கி விட்டு , கட்டிலில் அமர்ந்தாள்.

தன் காதை நீவி விட்டுக் கொண்டு, மனைவியின் அருகில் உட்கார்ந்தவன்,”அதி!” என அவளது கன்னம் தொட்டு தன் பக்கம் திருப்ப முயற்சித்தான்.

“போங்க பிரித்வி!” என்று அவனிடம் வீஞ்சிக் கொண்டாள் பெண்ணவள்.

“சாரி ம்மா! தன்வந்த்தோட அத்தியாயம் முடிஞ்சுடுச்சு. அவன் நம்மளோட தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட மாட்டான்.அதனால் தான்..” என்க,

“இதே தான் நீங்க காஜலோட விஷயத்திலும்  சொன்னீங்க! அப்படின்னா இதெல்லாம் எங்கிட்ட பகிர்ந்துக்கிறதில் எந்தப் பிரயோஜனமும் இருக்காதுன்னு முடிவு பண்ணிட்டீங்க போல!” என்று நலிந்த குரலில் கூறினாள் அதிரூபா.

“இல்லடா. ரெண்டுமே நமக்கு டென்ஷன் கொடுக்கிற விஷயங்கள்! அதைப் பேசி என்ன ஆகப் போகுது?” என்றான் பிரித்வி.

“ஓஹ்! காஜல் பழைய மாதிரி இல்லைங்க. அவ எங்கிட்ட ரொம்ப தெளிவாகப் பேசினா. தப்பித் தவறிக் கூட என்னை  ஹர்ட் பண்ணல. அதுனால இனிமேல் நான் அவ கூட நல்ல ஃப்ரண்ட் ஆக இருப்பேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். அப்பறம் அந்த தன்வந்த்! அவனைப் பத்தி காஜலே ஷேர் பண்ணினா. அவ கர்ப்பமாக இருக்கிறதைச் சொல்லி அவரை மாத்துறேன்னு சொன்னா. அப்படியிருக்கும் போது நீங்க மட்டும் இந்த மாதிரி காரணங்கள் சொல்றது நல்லா இல்லை பிரித்வி!” என்று குமுறினாள்.

அவள் கூறியதைப் புரிந்து கொண்ட பிரித்வியோ,”மன்னிச்சுக்கோ டா. இனிமேல் இதைப் பண்ண மாட்டேன். ப்ளீஸ் நீ கோவிச்சுக்காதடா ம்மா!” என்று அவளை அணைத்துக் கொண்டு சமாதானப்படுத்தினான் கணவன்.

“ம்ஹூம்!” என்று சிலிர்த்துக் கொண்டவளது காதில் “ஐ லவ் யூ அதி!” என்று மிருதுவான குரலில் தன் காதலைத் தெரிவித்தான் பிரித்வி.

அதில் அரும்பிய புன்னகையை அரும்பாடு பட்டு மறைக்க முயற்சி செய்தாள்.

விரிந்திருந்த இதழோரத்தைத் தன் உதடு கொண்டு ஈரம் செய்தவன்,”நாளைக்கு வந்து எல்லாத்தையும் சொல்லுங்க , கேட்டுக்கிட்டே இருப்பேன்னு சொன்னியே! சொல்லட்டுமா?” என்று புருவத்தை வருடி விட்டுக் கொண்டே கேட்டான் பிரித்வி.

“அப்படியா சொன்னேன் ங்க!” என கணவனது மீசையில் அழுந்த முத்தம் ஒன்றைப் பதித்துக் கேட்டாள்.

“ஆமாம் அதி!” என்று பதில் வழங்கிக் கொண்டே , கன்னத்தைப் பற்றி நிமிர்த்தினான்.

“என்னென்ன சொல்லப் போறீங்க?” என்று மையல் நிறைந்த குரலில் வினவினாள் மனைவி.

“அதைச் சத்தமாக எல்லாம் சொல்ல முடியாது!” என்று கட்டிலில் படுத்தவன், அவளைத் தன் மேல் படர்த்திக் கொண்டான் பிரித்வி.

இதழ்களுக்குத் தற்காலிகமாக இடைவெளி கொடுத்து விட்டு, “நீ முழு மனசோட சம்மதம் சொல்லுவியா அதி?” என்று அவளிடம் அனுமதி கேட்டான் கணவன்.

“அப்போ நீங்க கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டீங்கள்ல?” என்று குறும்புடன் கேட்டவளது மறைமுகமான சம்மதத்தைப் புரிந்து கொண்டான்.

“என்னோட  முத்தம் கொடுக்கப் பிடிக்கிற ஸ்பெஷல் இடம் எது தெரியுமா?” என்று அவளது கண்களைப் பார்த்துக் கூறினான் பிரித்வி.

அதையும் செயலில் சொல்லட்டும் என்று அவனையே பார்த்தாள் மனைவி.

மெதுவாக அதிரூபாவின் நெற்றி நோக்கிச் சென்றவன், புருவங்களின் மத்தியில் கூடலின் போது எங்கேயோ காணாமல் போயிருந்தது அவளது பொட்டு. அது இருந்த இடத்தில் தன் அதரங்களைச் சேர்த்தான் பிரித்வி.

அவனை இழுத்து தன் செவ்விதழ் கொண்டு, மீசையின் மத்தியில் உதடுகளால் ஒத்தடம் கொடுத்தாள்.

கலைந்து போன உடைகளுடன், களையான முகத்துடனும் ஜொலித்தாள் அதிரூபா.

கணவனுடைய ஸ்பரிசங்கள் யாவும் காதலாய்த் தன்னை தீண்டிக் கொண்டு சென்றதை ,  தன்னவனைப் பார்வையால் வருடிக் கொண்டே உணர்ந்து கொண்டிருந்தாள் அல்லவா!

விழிகளை மூடினால் அவனுடைய காதல் பார்வையைக் காணத் தவறி விடுவேனோ? என்று பிரித்வியின் சிகையைக் கோதி விட்டுக் கொண்டு, அவனது நேசப் பார்வையை ரசித்தாள்.

போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு, மனைவியின் உடையைச் சரி செய்து விட்டு  உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான் பிரித்வி.

🌸🌸🌸

பிரித்வியைப் பார்த்து விட்டு வந்ததற்குப் பிறகு, அமைதியாக தன்னறையில் இருந்தவனிடம் வந்த காஜல்,

“ஹாஸ்பிடலுக்குப் போகலாமா ங்க?” என்று கேட்டாள் காஜல்.

அதைக் கேட்டு அசைந்து கொடுக்காமல் இருந்தான் தன்வந்த்.

“சரி விடுங்க. நானே போய்க்கிறேன்” என்றவளைத் தீயாக முறைத்தவன்,

“என்னை மட்டும் தப்பு சொல்ற? நீ நம்ம குழந்தையை வச்சுப் பிளாக்மெயில் பண்ணிட்டு இருக்கிற காஜல்!” என்று மனைவியைக் கடிந்தான் தன்வந்த்.

ஆமாம்.எனக்கு நீங்க முக்கியம் ங்க! நாம ரெண்டு பேரும் எந்தப் பாவமும் செய்யாமல் இருந்தால் தான் நம்மக் குழந்தை நல்லா வளரும்.எனக்கு உங்களோட மாற்றம் தேவைப்படுது. அது வரைக்கும் நம்மக் குழந்தைப் பிறக்குற வரைக்கும் அது மட்டும் தான் உங்களுக்கு முக்கியமாக இருக்கனும். அடுத்து வரப் போற எல்லா மாசமும் நீங்க தான் என் கூட செக்கப் வரனும்.பழி வாங்குறதுக்கு மட்டும் அவ்வளவு மெனக்கெடுறீங்கள்ல!
குழந்தையை வளர்க்கிறதிலும் உங்ககிட்ட அந்த மெனக்கெடலை நான் பார்க்கனும்” என்று சொல்லி முடித்தாள் காஜல்.

அதைப் பொறுமையாக கேட்ட அவளுடைய கணவனோ, “வா ஹாஸ்பிடலுக்குப் போகலாம்” என்று வெளியேறினான்.

அவளுக்கு இப்போதே தலை சுற்றியது. கணவனைப் பின் தொடர்ந்து காரை நோக்கிச் சென்றாள் காஜல்.

“என் பக்கத்தில் உட்கார்” என்று கூறி டிரைவர் சீட்டில் அமர்ந்தான் தன்வந்த்.

“மெடிக்கலில் ப்ரக்னென்சி டெஸ்ட் கிட் வாங்கிப் பார்க்கனுமா? இல்லைன்னா ஹாஸ்பிடலுக்கேப் போகலாமா?” என்று அவளிடம் வினவினான்.

அதைக் கேட்டதும் யோசித்துப் பார்த்த காஜல், ‘அந்தக் கிட் – இல் குழந்தையின் வரவைப் பார்த்தால், அதைப் பத்திரமாக எப்போதும் தன்னுடன் வைத்துக் கொள்ள முடியுமே! என்ற ஆசையில்,

“அதை ட்ரை பண்ணிப் பார்த்துட்டுப் போகலாமா ங்க?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் காஜல்.

“ம்ம். சரி.. நான் போய் வாங்கிட்டு வர்றேன். நீ இறங்கி வீட்டுக்குள்ளே போ” என அவளை இறங்கச் செய்து விட்டு மருந்தகத்திற்குப் போனான் தன்வந்த்.

கொஞ்ச நேரத்திலேயே திரும்பி வந்த கணவனிடம் இருந்து அந்தப் பொருளை வாங்கிக் கொண்டு கழிப்பறைக்குள் புகுந்தாள்.

நிமிடங்கள் கரைந்தும், மனைவி வெளியே வருவது போல் தோன்றவில்லை ஆதலால்,”காஜல்!” என்று அழைத்துப் பார்த்தான்.

கதவைத் திறந்து கொண்டு வந்தவளின் கண்களில் நீர் நிரம்பி இருந்தது.

தன் கரத்தில் பொத்தி வைத்திருந்ததை அவனுடைய கரத்திற்கு மாற்றினாள் மனைவி.

அதிலிருந்த இரண்டு சிவப்பு வர்ணக் கோடுகளைப் பார்த்தக் கணத்தில், அதை நெஞ்சோடு சேர்த்து தழுவிக் கொண்டான் தன்வந்த்.

“லவ் யூ ம்மா!” என்று அவளது விழிநீரைத் துடைத்து விட்டான்.

“நான் சொல்றதை இப்போதாவது கேட்பீங்களா?” என்றாள் காஜல்.

“நம்மக் குழந்தை வரப் போறதால் இல்லை! எப்பவுமே நீ எனக்காக யோசிச்சு சொல்றதை நான் கேட்பேன் ம்மா!” என்று
அவளது விரல்களில் முத்தமிட்டவன்,

“உங்க அப்பா, அம்மா அப்பறம் என் பேரன்ட்ஸ் ரெண்டு பேர் கிட்டயும் ஒரே நேரத்திலேயே விஷயத்தைச் சொல்லுவோம் காஜல்!” என்று மனைவியை ஆரத் தழுவிக் கொண்டான் தன்வந்த்.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்