Loading

ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ்… எல்லாரையும் ரொம்ப நாள் வெயிட் பண்ண வச்சுட்டேனா🙈  நானும் climax முடிச்சுட்டு போடணும் ன்னு நினைச்சு டைப் பண்ணா என் பையன் என்னை சுத்தல்ல விடுறான்🤭 சோ நெக்ஸ்ட் யூடி லாஸ்ட் யூடி யா போடுறேன் drs. Niraya msgs, cmnts எல்லாமே பார்க்க மட்டும் தான் முடியுது. ரியாக்ட் பண்ண முடியல drs. But I m so happy for your love and support. Keep supporting me. Next ud rendu naal la poda try panren. Apdi Ilana adutha rendu naal la poduren 😝. பையனுக்கு பேர் வச்சாச்சான்னு சிலர் கேட்டீங்க. இப்ப தான் வச்சோம். ஹாஷிர் ஷயான். 🤩

அத்தியாயம் 21:

சிறிது நேரம் முன் வரை, தன் தீண்டலில் சுகித்திருந்தவளின் முகத்தில் சிறிதேனும் மறுப்பு தெரிந்திருந்தாலும், நிச்சயம் விலகி இருப்பான்.

ஆனால், இப்போது அவன் கட்டாயப்படுத்தியது போன்று, அவள் விலகி இங்கு வந்து உறங்குவதைக் கண்டு பொறுமை இழந்தான் தீரஜ் ஆத்ரேயன்.

கடும் சீற்றத்துடன், சோபாவிற்கு அருகில் இருந்த கண்ணாடி டீ – பாயை ஓங்கி மிதித்திருக்க, அது சுக்கு நூறானது.

திடீரென கேட்ட சத்தத்தில் பதறி எழுந்த சஹஸ்ரா, கண்ணில் தீப்பொறி பறக்க அவளை முறைத்திருந்தவனைக் கண்டு விழித்தாள்.

அதனைப் பொருட்படுத்தாது, “உனக்கு நான் எப்பவுமே பொறுக்கியா தான் தெரியுவேன்ல. பிடிக்கலைன்னா, பிடிக்கலைன்னு போக வேண்டியது தானடி. நான் ஒன்னும் உன்ன கட்டாயப்படுத்தல. அதை விட்டுட்டு, இங்க வந்து படுத்துருக்க!” என்றவனுக்கு ஆதங்கம் பொங்கியது.

பின்னந்தலையை தவிப்புடன் கோதிக் கொண்டவன், “இப்ப என்ன? உன்னை உன் அம்மா வீட்ல விடணும் அதான. வா இப்பவே விடுறேன். ஆனா, என் குழந்தை பத்திரம்.” என விரல் நீட்டி எச்சரித்தான்.

முதலில் அவன் பேசுவதே புரியாமல் குழம்பியவள், அதன் பிறகே நிலவரம் உணர்ந்தாள். அவன் பேசிய வார்த்தைகள் அவளுக்கு கோபத்தையும், கண்ணீரையும் ஒரு சேரக் கொடுக்க, தீரஜின் மீது குற்றப்பார்வை வீசியவள், கீழே கொட்டிக் கிடந்த பால் டம்பளரையும் ஒரு பார்வை பார்த்தாள்.

மனையாளின் பார்வை செல்லும் திசையில் அவனும் விழிகளைத் திருப்பிட, அங்கு டீ – பாய் மீது அவள் ஆற வைத்திருந்த பால் டம்பளர் அவன் தட்டி விட்டதில் சிதறி இருந்தது.

புருவ முடிச்சுடன், மீண்டும் அவளைக் கண்டதில், அவள் கண்ணில் நீர் வழிய, “பசிச்சுச்சு. அதான் பால் குடிக்க வந்தேன். சூடா இருந்ததால ஆற வச்சேன். எனக்கே தெரியாம டயர்ட்ல தூங்கிட்டேன்.” என முறைப்புடன் கேவியவள், மெல்ல வயிற்றைப் பிடித்துக் கொண்டு எழுந்து, மாடிக்கு சென்று விட்டாள்.

அவள் செல்லும் வரை பிரம்மை பிடித்தது போல நின்றவன், தன்னையே அறைந்து கொண்டான்.

‘சே! முட்டாள், முட்டாள்! என்ன காரியம் பண்ணி வச்சுருக்க. ஏற்கனவே அவள் இருக்குற கண்டிஷன்க்கு அவளை டயர்ட் ஆக்குனதே தப்பு. இவ்ளோ நேரம் எதுவும் சாப்பிடாம இருந்துருக்கா, அதை கூட கவனிக்காம… அவளையும் திட்டி… ப்ச்!’ என்று புலம்பி, தலையில் அடித்துக் கொண்டான்.

பின், அடுத்த ஐந்தே நிமிடத்தில் ப்ரெட்டை வைத்து சாண்ட்விச் தயாரித்தவன், அறைக்கு செல்ல, அங்கு அவள் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தாள்.

அவனை நிமிர்ந்து பாராமல், “நான் ரெடி தான் என்னை அம்மா வீட்ல விடு.” என்றாள்.

“சஹி…” என ஏதோ பேச வரும் முன்,

“நீ சொன்னது மாதிரி எனக்கு தீரனை தான் பிடிச்சு இருந்துச்சு. அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். போதுமா! இதான உனக்கு வேணும். நல்லா கேட்டுக்க. எனக்கு உன்னை பிடிக்கல. ஐ ஹேட் யூ! இப்ப கூட உன்ன சகிச்சுட்டு தான் இருந்தேன். முதல்ல என்னை கொண்டு போய் விடு, இல்லன்னா நானே போய்க்கிறேன்.” சீறலும் அழுகையும் கலந்தே கத்தியவள்,

இறுதியாக, “கவலைப்படாத எனக்கு என்ன ஆனாலும் குழந்தையை பத்திரமா பாத்துப்பேன். இவ்ளோ நாள் நீயா வந்து பார்த்த. நான் தான பாத்துக்கிட்டேன். இனிமேலும் பார்த்துப்பேன்.” எனக் கன்னத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள்.

மனையாளின் கூற்றில் தேகம் இறுகியவனுக்கு, அப்போதும் அவள் வேதனையில் பேசுகிறாள் என்று புரியவில்லை.

“சரி. இதை சாப்பிடு. நான் டிராப் பண்றேன்.” என முணுமுணுத்தவனிடம்,

“வேணாம். இப்படி தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன, இப்ப இவ்ளோ நேரம் ஆகிடுச்சு. இனிமே உன் பேச்சை நம்புறதா இல்ல.” என்னும் போதே, சில நிமிடங்களுக்கு முன் நிகழ்ந்த கூடல் அவளுள் தேனாக இனித்தது.

தன்னிச்சையாக வெட்க ரேகைகளும் சூழ்ந்து கொண்டதில், விழிகளை தாழ்த்திக் கொள்ள, அவனும் அவளை பாராமல், “நிஜமா டிராப் பண்றேன். சாப்பிட்டுட்டு வா.” என்றவன், சிரத்தையாக கார் சாவியை கையில் எடுத்துக் கொண்டான்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபத்தை அடக்கிய சஹஸ்ரா, அவன் செய்து வைத்த சாண்ட்விச் – ஐ ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டே இறங்கினாள். பின்னே… அத்தனை பசி! அப்போது தானே அவனிடம் சண்டை பிடிக்கவும் தெம்பு இருக்கும்.

அமைதியே உருவாக, அவனுடன் காரில் சென்று அமர்ந்தவள், சவிதாவையும் அழைக்கவில்லை. துணிமணிகளையும் எடுத்துக் கொள்ளவில்லை.

“உன் பேக் எடுக்கல?” காரை கிளப்பியபடி தீரஜ் கேட்ட கேள்விக்கு, முறைப்பை மட்டுமே பதிலாக தந்தாள்.

அம்முறைப்பை ஒரு முறை ஊடுருவியபடி, பயணத்தைத் தொடர, பாதி வழி செல்லும் போதே, தீரஜின் விழிகள் அவ்வப்பொழுது அவளைத் தழுவியது.

கணவனின் பார்வையை உணர்ந்தாலும் திரும்பாமல் வீராப்பாக அமர்ந்திருந்தாள் சஹஸ்ரா.

‘கொஞ்சம் கூட மண்டைல மசாலாவே இல்ல. இவன்லாம் என்னதான் பெருசா பிசினஸ் பண்ணுனானோ. இதுல இந்த மாங்கா மண்டையன் கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை லவ் பண்ணிருக்கான். அதை கூட ஒழுங்கா எக்ஸ்போஸ் பண்ணல. இந்த லட்சணத்துல எப்படி எல்லாம் லவ் பண்ணனும்ன்னு லிஸ்ட் வேற போட்டுருக்கான். எதையாவது புருஞ்சுக்குறானா? மனுஷ குரங்கு!’ வாய்க்குள்ளேயே அவனை திட்டி தீர்த்தாள்.

‘நல்லா பார்த்துக்கிட்டே வா! ஒரு வாரத்துக்காச்சு அம்மா வீட்ல இருந்து உன்னை தவிக்க விடுறேன் பாரு!’ என சபதம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே, காரின் வேகம் குறைந்தது.

‘ம்ம்ஹும்… இவன் என்ன சமாதானம் பண்ணுனாலும் அதை அக்செப்ட் பண்ணிக்க கூடாது. என்ன பேச்சு பேசுறான்? இடியட்.’ என்றே விறைப்பாக வேடிக்கை பார்க்க முயலும் போதே, கார் தன் ஓட்டத்தை முற்றிலும் நிறுத்தி இருந்தது.

தீரஜின் கண்களும் அவளை விட்டு நகராது இருக்க, ‘திரும்பி பார்க்காத’ என அவளின் விழிகளுக்கு அவளிட்ட கட்டளைகளை தவிடு பொடி ஆக்கிய கண்கள், அவனைக் கண்டிருக்க, அவனோ பாவையின் இதழ்களின் மீது பார்வையை படரவிட்டிருந்தான்.

‘இந்த பார்வைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல!’ என எண்ணினாலும், உள்ளுக்குள் பரவிய குளிரைத் தடுக்க இயலவில்லை.

‘கிஸ் குடுத்து ஏமாத்த பாக்குறான் சஹா. ஏமாறாத.’ என்றே மூளை எச்சரித்தாலும், அவன் அருகில் நெருங்க நெருங்க, இமைகள் தானாக மூடிக் கொண்டது.

அவனோ, வெகு நிதானமாக, அவளின் இதழோரம் ஒட்டி இருந்த சீஸ் – ஐ பெருவிரலால் அழுத்தி துடைத்து விட்டு நகர்ந்து, காரை ஸ்டார்ட் செய்ய, கண்களை திறந்த பாவையோ பேந்த பேந்த விழித்தாள்.

அவ்வளவு தான்! கோபம் கரையை கடக்க, “யூ…! யூ!” என அவனைத் திட்ட வார்த்தைகள் கிடைக்காமல், கரங்களால் அவனது திண்ணிய தோள்களை அடிக்கத் தொடங்கிட, முதலில் அமைதியாக அதனை ஏற்றவன், அவள் நிறுத்தாததை உணர்ந்து, தடுத்தான்.

“ஸ்ட்ரெய்ன் பண்ணாத சஹி. வேணும்ன்னா வீட்டுக்கு வந்து கம்பர்ட்டபிள் – ஆ உட்காந்து அடிச்சுட்டு போ!”

“அப்ப கூட நான் போய்டணும். அப்படி தான?” உதட்டை குவித்து முறைக்க,

“நான் போக சொல்லல. நீ தான் போறேன்னு சொன்ன. நீ தான் என்னை பிடிக்கலன்னு சொன்ன.” என்றவனின் குரலில் ஏக்கம் மிதந்தது.

“ஆமா, இப்பவும் சொல்றேன் எனக்கு உன்னை பிடிக்கல. என்னை போகவிடாம, மிரட்டி உன் கூட இருக்க வச்சவனை தான் எனக்கு பிடிச்சு இருந்துச்சு. என்னை போக சொல்ற உன்னை பிடிக்கல.

என்ன ஆனாலும், நான் எவ்ளோ சண்டை போட்டாலும் என்கூடவே இருந்தவனை தான் எனக்கு பிடிச்சுருந்துச்சு. இத்தனை மாசமா, என்னை விட்டு எங்கயோ போய் இருந்த உன்னை எனக்கு பிடிக்கல பிடிக்கல!” என கூறி முடிக்கும் முன்னே, கண்ணீர் கண்ணை நிறைத்தது.

அதில் ஒரு கணம் அதிர்ந்தவன், “எனக்கு மட்டும் ஆசையாடி உன்னை விட்டு தள்ளி இருக்கணும்ன்னு அதுவும் இந்த நேரத்தில… முன்னாடி கூட, எவ்ளோ கோபம் இருந்தாலும், உனக்கு என் மேல காதல் இருக்குன்னு நம்புனேன். ஆனா, நீ ப்ரெக்னன்ட் ஆனதை கூட எனக்கு தெரிஞ்சுக்க உரிமை இல்லையாடி? என் மேல அவ்ளோ வெறுப்பா? அதை ஏண்டி மறைச்ச?” என்றான் ஆதங்கத்துடன்.

அவன் வார்த்தைகள் தெரிவித்த வலி, அவளுள்ளும் இறங்கிட, உதட்டை அழுந்தக் கடித்தவள்,

“நான் மறைக்கணும்ன்னு நினைச்சு பண்ணல. எப்படி சொல்றதுன்னு தெரியல. எந்த உரிமைல சொல்றதுன்னும் தெரியல. என்கூட வாழறதுக்கு முன்னாடியே, நீ யாருன்னு உண்மையை சொல்லிருந்தா நானும் சொல்லிருப்பேன்.” என விழி சிவக்க அவனைப் பார்த்தாள்.

அவனோ புருவம் இடுங்க, “என்னடி பழிக்கு பழி வாங்குறியா? நான் தான் சொன்னேனே, உன்னை நான் ஏமாத்தணும்ன்னு நினைச்சு மறைக்கல.” என்னும் போதே,

“நீ ஏமாத்துனன்னு நானும் சொல்லல, ஆனா நான் ஏமாந்தது உண்மை தானடா?” என அவன் சட்டையை பிடித்தவள்,

“நான் தெரியாம தான் கேக்குறேன். என்னை லவ் பண்ணேன்னு சொன்னீல, அப்போ நான் யாரை நினைச்சு உன்கூட வாழ்ந்தாலும் பரவாயில்லையா? ஏன்டா என்னை இப்படி அசிங்கப்படுத்துற! அப்பவே உண்மையை சொல்லிருந்தா, முதல்ல நான் கோபப்பட்டுருப்பேன். அப்பறம் புருஞ்சுருப்பேன்ல. என் காதலையும் என் உறவையும் ஏண்டா இப்படி கொச்சைப்படுத்தி வச்சுருக்க. ரொம்ப வலிக்குது தீரா! நீன்னு நினைச்சு நான் உன்கூட வாழல. அதுவே எனக்கு ரொம்ப வலிக்குது. அந்த வலி உனக்கு எப்பவுமே புரியாது!”
என உடைந்து கத்தியவள், முகத்தை மூடி அழுது தேம்பினாள்.

ஆடவன் தான் சிலையாகி இருந்தான். அவனும் இப்படி ஒரு கோணத்தை சிந்திக்கவில்லை. அவள் தன்னை விட்டு செல்லக் கூடாது என்று சிந்தித்தானே தவிர, அவளது உணர்வுகளை உணர மறுத்து விட்டான்.

இப்போது உணர்கையில் தான், அவன் உண்மையை மறைத்தது பெரும் பிழையென்றே புரிந்தது.

முற்றிலும் தளர்ந்தவன், “சஹி… நான்… நான் வேணும்ன்னு… மறைக்கல… நீ என்னை விட்டு போய்டுவியோன்னு! நீ அவனை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கட்டன்னு… சஹி! நான்…” என ஏதேதோ கூற வந்து எதையும் பேச இயலாமல் முதன் முதலில் தடுமாறினான் தீரஜ் ஆத்ரேயன்.

சட்டென நிமிர்ந்தவள், “நான் ஒன்னும் அவனை பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கல. உனக்கு பயந்து தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

நீ மட்டும் அன்னைக்கு என்கிட்ட ஒழுங்கா பேசிருந்தா, நான் உன்னை தப்பா நினைச்சுருக்க மாட்டேன். எங்க திரும்பி வந்து நீ பிரச்சனை பண்ணுவியோன்னு பயந்துருக்க மாட்டேன்.

என் அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டா, மத்தவனுங்க மாதிரி நீயும், எனக்கும் சவிக்கும் பிரச்சனையா வருவியோன்னு பயந்தேன்.

அந்த நேரத்துல, ‘என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டன்னு’ தீரன் தான் சொன்னான்.

உன் கேரக்டரை அசாசினேட் பண்ணி தான், அவன் என்னை கார்னர் பண்ணுனான். எனக்கு என்னடா தெரியும் உன்ன பத்தி… நீயா வந்து சொல்லாம நான் எப்படிடா புருஞ்சுக்குறது? எனக்கு அப்போ என் வாழ்க்கையை விட, சவியோட பாதுகாப்பு தான் முக்கியம்ன்னு தோணுச்சு. நான் செஞ்சது முட்டாள்தனம் தான். ஆனா, என்னை அப்படி ஒரு நிலைமைக்கு தள்ளுனதே நீ தான்.

நான் எனக்கு தெரிஞ்சு செஞ்ச ஒரே தப்பு, உனக்கு எல்லாம் மறந்தப்ப, நம்ம லவ் மேரேஜ் செஞ்சோம்ன்னு சொன்னது மட்டும் தான்.

அப்போ நான் ஏன் அப்படி சொன்னேன்னு இப்ப வரை எனக்கு புரியல. நான் தீரன் கூட அவ்ளோவா பேசிக்கிட்டது கிடையாது. பிசினஸ் தவிர எனக்கும் அவனுக்கும் பெருசா பேச்சுவார்த்தை எதுவுமே இருந்தது இல்ல.

ஆனா, அன்னைக்கு ஹாஸ்பிடல்ல உன்னை பார்த்ததும், எனக்கு நீ புதுசா தெரிஞ்ச. உன் கண்ணுல காட்டுன ஆர்வம், பாசம், உரிமை எல்லாமே எனக்கு புதுசா தான் இருந்துச்சு. சொல்லப்போனா எனக்கு பிடிச்சு இருந்துச்சு.

அதனாலேயோ என்னவோ, அதுக்கு அப்பறம் உண்மையை சொல்லலாம்ன்னு நினைச்சப்ப கூட என்னால சொல்ல முடியல. ஏன்னா, நான் உன்ன லவ் பண்ணேன். முழுக்க முழுக்க உன்னையும் உன் கேரக்டரையும் நீ என் மேல வச்ச காதலையும் தான். உன்ன முழுசா நம்புனேன் தீரா. அவனை மாதிரி நீயும் என்னை இன்சல்ட் பண்ணிட்ட தான?” என மனதில் இருந்த வேதனை முழுதையும் கொட்டித் தீர்த்தவள், ஏங்கி ஏங்கி அழுதாள்.

செய்து வைத்த காரியத்தின் வீரியம், தன்னவளை இந்த அளவு பாதித்திருப்பதை உணர்ந்தவனுக்கு, ஆயாசமாக இருந்தது. அப்போதே, உண்மையை சொல்லாமல் விட்ட மடத்தனம் அவனை கொய்ய, கூடவே, தீரன் தன்னை பெண் பித்தனாக உருவகப்படுத்தியது நெஞ்சை பிடுங்கும் வலியை கொடுத்தது. அவன் சுயநலவாதி என்று தெரியும் தான். ஆனால் இந்த அளவு எதிர்பார்த்திருக்கவில்லை.

தமையன் இழைத்த துரோகம் ஒரு புறமும், தன்னவளுக்கு அவனறியாமல் இழைத்த துரோகம் ஒரு புறமும் அவனை வேதனைப் படுத்த, ஸ்டியரிங்கை இறுக்கிப் பற்றியபடி,

“சாரி சஹி. நான்… நான் செஞ்சது பெரிய தப்பு தான். ஐ ஆம் சாரி. முட்டாள் நான் தான். எனக்கு வேணும்ன்னு நினைக்கிறவங்களை எனக்குன்னு காப்பாத்திக்க தெரியல சஹி. அவனையும் சரி. உன்னையும் சரி. ஐ லாஸ்ட்!” கண் சிவக்க, உடைந்த குரலில் ஜன்னலோரம் பார்வையை திருப்பி பேசியவனுக்கு, குற்ற உணர்வு அரித்தது.

ஒரு நொடி அவனை அழுத்தமாக பார்த்தவள், அவனது கன்னத்தை அவள் புறம் திருப்பி,

“இப்பவும் சொல்றேன் எனக்கு உன்னை பிடிக்கல. நான் என்ன செஞ்சுருந்தாலும் ‘உன்னை ஏமாத்தணும்ன்னு நினைக்கல. நீ என்கூட தான் இருக்கணும்’ ன்னு பிடிவாதம் பிடிச்சவனை தான் எனக்கு பிடிச்சு இருந்துச்சு. ஐ ஜஸ்ட் ஹேட் யூ! எனக்கு என் தீரா தான் வேணும்.” என தலைசாய்த்து பார்த்தவளைக் கண்டு, அவனுள் நேசம் பொங்கியது.

மறுநொடி தன் இறுகிய அணைப்பில் அவளை மயங்க வைத்தவன், “சாரி பிரின்சஸ். ரொம்ப ரொம்ப சாரி. அப்போ இருந்த குழப்பத்துல உங்கிட்ட புரியவைக்கணும்ன்னு கூட எனக்கு தோணல பிரின்சஸ். சாரிடி.” என இதழ்கள் மன்னிப்பை வேண்டினாலும், அவளது நெற்றி முதல் நாடி வரை முத்தங்களையும் பரிசளித்தது.

அவன் கன்னங்கள் ஏந்திய கண்ணீரை துடைத்து விட்டவள், “நானும் சாரி. குழந்தை வந்ததை மறைச்சுருக்க கூடாது…” என வாடிய முகத்துடன் கூறியவள், பின் நிலையை சீராக்கும் பொருட்டு,

“அடுத்த பேபி வரும் போது, முதல்ல உங்கிட்ட…” எனக் கூற வந்தவள், வெட்க புன்னகையுடன், “உங்ககிட்ட தான் சொல்லுவேன் ஓகே வா?” என்றாள் அவனது நெஞ்சில் முகத்தை புதைத்து. 

பெண்ணவளின் வெட்கத்தில் வசீகர நகை வீசிய தீரஜிற்கு, மனமெங்கும் மகிழ்ச்சி பரவ, “அடுத்த பேபிக்கு இப்பவே பிளான் பண்ணலாமா பிரின்சஸ்?” என்று கேட்டபடி அவளது காதில் ஊதினான்.

கூச்சத்தில் நெளிந்து விலகியவள், “ரொம்ப தான் ஆசை.” என சிலுப்பிட,

“ம்ம். ரொம்ப ஆசை தான். மறுபடியும் சாண்டவிச் செஞ்சு தரவா… உன்னை டயர்ட் ஆக்கிட்டு!” என்றான் கண் சிமிட்டி.

“அச்சோ! போங்க தீரா!” என வெட்கத்தில் குழைந்தாள் சாஹஸ்ரா.

அதை வெகுவாய் ரசித்தவன், கண்ணை சுருக்கி, “என்னை சகிச்சுட்டு தான் இருந்தியாடி” என்றான் பொய் கோபத்துடன்.

அவளோ, அவனது முடியை பிடித்து ஆட்டி, “பாலை காய்ச்சி குடிக்கலாம்ன்னு வந்தவளை, ஏதோ உன்னை பிடிக்காம உங்க கூட இருந்த மாதிரியே பேசுனா, நான் எப்படி பேசுறதாம்? கொஞ்சம் கூட பொறுமையே இல்ல தீரா உங்களுக்கு.” என அதட்டினாள்.

அசடு வழிந்த தீரஜ் தான், “எனக்கு பொறுமை சாதாரணமாவே கம்மி தான். உன் விஷயத்துல ரொம்ப கம்மிடி…” என்று கழுத்து வளைவில் வாசம் பிடித்தவன்,

“என்னடி… திடீர்ன்னு மரியாதை எல்லாம் குடுக்குற… எனக்கும் இப்ப உன்னை பிடிக்கல.” என்றான் மூக்கை சுருக்கி.

அழகாய் புன்னகைத்தவள், அவனது எண்ணம் புரிந்து, “என்னை பிடிக்கலைன்னு சொல்லி தான் பாரேன். உன்னை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி, லவ் டார்ச்சர் பண்ணிடுவேன்.” என விழிகளை உருட்டி மிரட்டிட, பக்கென சிரித்து விட்ட தீரஜ்,

“நானும் அதுக்கு தான் வெய்ட் பண்றேன்” என்றான் கிசுகிசுப்பாக.

அதில் இருவருக்குமே புன்னகை எழ, தீரஜ், “இப்ப உன்னை டிராப் பண்ணவா வேணாமா?” என யோசனையுடன் தாடையை தடவ, அவள் ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள்.

சிரிப்பை அடக்கியபடி, “இப்படி அடிக்கடி முறைக்காதடி, அப்பறம் என் குட்டி பேபியும் உன்னை மாதிரி முறைச்சுக்கிட்டே பிறக்க போகுது.” என வாஞ்சையுடன் அவள் வயிற்றைல் தடவிப் பார்த்துக் கொள்ள, அவளுக்கும் சிலிர்த்தது.

சில நொடிகள் இருவரின் விழிகளும் பல கதைகள் பேசி இருக்க, அதே மோன நிலையுடன் காரை எடுக்க எத்தனித்தவன், எதிரில் நின்றவனைக் கண்டு சலித்தான்.

ஆண்ட்ரூஸ் தான், அந்த நள்ளிரவு நேரத்திலும் அவர்களை பின்தொடர்ந்து வந்திருந்தான். தெருவிளக்கு வெளிச்சம், அவனின் விழிகளில் வழிந்த வஞ்சத்தை தெளிவாகக் காட்ட, அவனைக் கண்டு பயம் எழுந்தாலும் கூடவே எரிச்சல் வந்தது சஹஸ்ராவிற்கு.

“இவனுக்கு என்ன தான் வேணுமாம் தீரா? ஏன் தேவை இல்லாம உங்களையும் என்னையும் அட்டாக் பண்றான்” எனக் கேட்டாள்.

“இவனுக்கு நான் வேணுமாம்…” என்றான் முன் நெற்றி முடிகளை கடுப்புடன் பின்னால் தள்ளியபடி.

அந்நிலையிலும், அவனின் பாவனைகளை ரசித்தவள், “புரியல!” என்றதில்,

“ப்ச்… அவன் என்னை ஆதுன்னு நினைச்சுட்டான்டி. எவ்ளோ சொன்னாலும் நம்ப மாட்டேங்குறான்.” என தலையில் அடித்துக் கொள்ள, அப்பொழுதும் அவள் புரியாமல், “சரி அப்படியே நினைச்சுட்டு போகட்டும் அதனால என்ன?” என்றாள் யோசனையாக.

“ஐயோ” என நொந்தவன், “தத்தி, என்னை ஆதுன்னு நினைச்சு லவ் டார்ச்சர் பண்றான் சஹி” எனப் பாவமாக கூற, முதலில் திகைத்து விழித்தவள், பின் சத்தமாக சிரித்து விட்டாள், நேரப் போகும் அதிர்ச்சியை உணராமல்.

யாரோ இவன்(ள்)
மேகா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
25
+1
80
+1
8
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்