21 – விடா ரதி…
“என்னடி இன்னும் தூங்கலியா நீ?”, என அரைக்கண் விழித்துப் பார்த்தவன் அவள் உறங்காதிருக்கவும் கேட்டான்.
“தூங்கணும்…. நீ தூங்கு…”, என அவனது கண்களை மூடினாள்.
“நான் தூங்கிட்டு தான் டி இருக்கேன்… நீ தான் இன்னும் தூங்கல… நாளைக்கு வருண் வீட்டுக்கும், சுந்தர் வீட்டுக்கும் போயிட்டு வந்துடலாம்….. நாள கழிச்சி நம்ம கொடைக்கானல் கிளம்பலாம்.. நீயும் ஊருக்கு போகணும்ல..”
“அதுலாம் நாளைக்கு பேசிக்கலாம் நீ தூங்கு டா…” , எனக் கூறி அவன் வாயை மூடினாள்.
அவனுக்கு தூக்கம் நன்றாகத் தெளிந்திருந்தது. “என்னடி செல்லம்…? என்னாச்சி இந்த பேபிக்கு ?”, என அவள் பக்கம் பார்த்துப் படுத்தபடிக் கேட்டான்.
“நீ தூங்கறப்போ செம்ம அழகா இருக்க டா… அந்த சிரிப்போட நீ தூங்கறது பாக்க பாக்க ஆசையா இருக்கு…”, என அவனது கன்னத்தைக் கிள்ளியபடிக் கூறினாள் .
“ஆசையா இருந்தா இப்படி பண்ணனும்..”, என கூறி அவள் கழுத்தில் இதழியல் தொடங்கினான்.
“ராக்கி…. போடா… நான் உன்ன ரசிச்சு பாத்துட்டு இருக்கறத டிஸ்டர்ப் பண்ற நீ….”, எனச் சிணுங்கியபடி அவனை விலக்க முயற்சித்துத் தோற்று, அவனோடு ஒன்றத் தொடங்கினாள்.
அதன் பின் ஆங்கோர் கூடலின் அரங்கேற்றம் நிகழ்ந்த பின் தான் நான்கு விழிகளும் உறக்கம் தழுவின..
அடுத்த நாள் காலை 9 மணிக்கு தான் இருவரும் துயில் களைந்து எழுந்தனர். ரதி மணியைப் பார்த்துவிட்டு, அவசரமாக தலைக்குக் குளித்துவிட்டு கீழே ஓடினாள்.
மாமியார் சமையற்கட்டில் மும்முரமாக பலகாரம் செய்துக் கொண்டிருந்தார்..
“குட் மார்னிங் அத்த…. சாரி…. அசதில தூங்கிட்டேன்…”, என அசடு வழிந்தபடிக் கூறி நின்றாள்.
“அங்கேயும் இப்படி தானா?”, என முறைப்புடன் சாந்தம்மாதேவி கேட்டார்.
“இல்ல.. அங்க எல்லாம் 6.30 மணிக்கு எந்திரிச்சிருவேன்…. இங்கே நீங்க டீ வச்சி தருவீங்கன்னு நெனைப்புல தான் அதிகமாக தூங்கறேன் போல..”, என அவர் கொடுத்த டீயை சுவைத்தபடி திட்டில் அமர்ந்தாள்.
“ம்ம்… மாமியாங்கற பயம் இல்ல டி உனக்கு …. இடுப்ப உடைக்கற அளவு வேல வாங்கினா தான் நீ சரிபட்டு வருவ போல…”
“ஏற்கனவே உங்க மகன் இடுப்ப உடைக்கறதால தான் லேட்…..”, என அவள் முணுமுணுத்தது அவருக்கு தெளிவாகக் கேட்டது.
“இந்தா இந்த கீரையை ஆயிஞ்சி வை.. நா வயல பாத்துட்டு வரேன்….. இட்லி சுட்டு வச்சி இருக்கேன்… உன் புருஷன எழுப்பி சாப்ட்டு வேலைய பாரு…. உங்க மாமா வந்தா நான் மாந்தோப்பு பக்கட்டு இருக்கேன்னு சொல்லி வர சொல்லு…. “, எனக் கூறிவிட்டுச் சென்றார்.
இட்லிக்கு வெங்காய சட்னியும், கொத்தமல்லி சட்னியும் செய்திருந்தார். முதலில் அவள் சாப்பிட்டு விட்டு கணவனை எழுப்பச் சென்றாள்.
“ராக்கி… எந்திரி டா…. மணி 10 ஆச்சி…..”
“இன்னும் கொஞ்ச நேரம் டி…. “
“பிச்சிடுவேன்… எந்திரி மொத…. உங்கம்மா வந்தா நான் தான் திட்டு வாங்கணும்….”
“உன்னால தான் லேட்… அதனால நீயே திட்டு வாங்கிக்க….”
“நான் என்னடா பண்ணேன்?”
“ராத்திரி………”, என அவன் ஆரம்பிக்கும் போதே அவனது வாயை அடைத்தவள், “எதுவும் பேசாம கம்முன்னு எந்திரிச்சி குளிச்சிட்டு வந்தா சாப்பாடு இல்லனா பட்னி கெட…” , என விழியை உருட்டி மிரட்டினாள்.
அவனது பார்வை ரசனையாக அவளது முகத்தில் உலாவரத் தொடங்கியது. தன்னை மிரட்டும் இதழும், விழிகளை உருட்டி பேசும் விதமும் அவனை ஈர்க்க, அவளை அப்படியே தூக்கி தன் போர்வையில் புகுத்திக் கொண்டான்.
“கம்முன்னு இரு டா…. அத்தை எனக்கு வேலை குடுத்துட்டு போய் இருக்காங்க…..”, என அவனிடம் இருந்து விடுபட்டுத் தூரமாக நின்றாள்.
அவன் சிரிப்புடன் அவளின் முந்தானையை இழுக்க, “சமத்து பையனா நடந்துக்கோ டா… போ.. .சீக்கிரம் குளிச்சிட்டு வந்து சாப்பிடு….. “, என அவனை தாஜா செய்து முத்தம் கொடுத்துக் குளிக்க அனுப்பிவிட்டு கீழே சென்று அவனுக்கு தோசை வார்க்க ஏற்பாடு செய்தாள்.
“ஹேய்… என்ன டி தோச இப்படி பொடி தோசையா இருக்கு?”, என அவளின் அருகே தட்டில் பிச்சிப் பிச்சிக் கிடந்த தோசையைப் பார்த்துக் கேட்டான்.
“இந்த தோசை கல்-ல தோசை எடுக்கவே வரமாட்டேங்குது….. “, மீண்டும் தோசை கல்லோடு ஒட்டிக் கொண்டு வரமாட்டேன் எனச் சதி செய்தது.
“இது பழைய கல்… இதுல நீ எவ்ளோ வெங்காயத்தை தேய்ச்சாலும் தோசை வராது…. அந்த பக்கம் இருக்கு பாரு அத எடு…”, எனக் கீழே இருந்த ஷெல்பில் கைக் காட்டினான்.
“ஹோ…. சரி அங்க உக்காரு…. நான் சுட்டு கொண்டு வரேன்….”, எனக் கூறி அந்த கல் சூடானதும் மாவை ஊற்றிப் பரப்பினாள்.
“இங்கேயே உக்காந்துக்கறேன் .. நீ சாப்டியா?”, எனக் கேட்டான்.
“மம்.. இட்லி நானே காலி பண்ணிட்டேன்.. அதான் உனக்கு தோசை ஊத்தரேன்….”, என ஒரு கண் மூடி நாக்கைக் கடித்தபடிக் கூறினாள்.
“அடிப்பாவி…. பரவால்ல சாப்டு சாப்டு….”, என அவள் காதுகளில் ரகசியம் பேசி அவளிடம் அடி வாங்கியபடி திட்டில் அமர்ந்துச் சாப்பிடத் தொடங்கினான்.
“உன்ன எல்லாம்….. கம்முன்னு சாப்பிட மட்டும் வாய தொற …. எத்தன மணிக்கு சுந்தரி அண்ட் ஸ்வே வீட்டுக்கு போலாம்?”
“மதியம் மேல 4 மணிக்கு போலாம்.. ரெண்டு வீட்டுக்கும் போயிட்டு அப்படியே வெளிய சாப்டுட்டு வந்துடலாம்…. சரியா?”
“ஓகே… எனக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கணும்…. கேட்ஜட்ஸ் வாங்கணும்…. “
“நாளைக்கு போய் வாங்கிக்கலாம்… மதியம் சாப்டு கோடை கிளம்பிக்கலாம்…. நீ டிரெயின்-க்கு புக் பண்ணிட்டியா?”
“இல்ல டா….. நாளைக்கு ஆபிஸுக்கு கால் பண்ணி கேட்டுட்டு புக் பண்ணிக்கறேன்….”, என இயல்பாக இருவரும் பேசுவதே ரதிக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.
ஒரு காலத்தில் அவனிடம் பேச ஆசையும் ஆவலும் இருந்தும், தயக்கத்தினால் பேசாமல் இருந்து ஏங்கிய தருணங்கள் அவளது மனக்கண்ணில் வந்துச் சென்றது.
இந்த நிமிடங்களைத் தன் இதயத்திற்குள் பத்திரமாகச் சேமித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன டி அதுக்குள்ள ட்ரீம் போயிட்டியா?”, அவள் பதில் பேசாமல் அவனது முகத்தைப் பார்த்தபடி இருப்பதுக் கண்டுக் கேட்டான்.
“இல்ல…. ஏதோ யோசனை…. சரி பர்சேஸ் நாளைக்கு பண்ணிக்கலாம்…. “, எனக் கூறி அவனது வயிற்றை நிரப்பிய பின் தான் வெளியே அனுப்பினாள்.
“அம்மா எங்க போய் இருக்காங்க?”
“மாந்தோப்பு பக்கமா போறதா சொன்னாங்க ராக்கி… மாமா வந்தா அங்க வரச்சொல்லி சொல்லிட்டு போனாங்க.. இன்னும் மாமாவும் வரல….”
“அப்பா மில்லுக்கு போய் இருப்பாரு….. சரி உனக்கு எதாவது வாங்கிட்டு வரவா?”
“அவங்க ரெண்டு பேர் வீட்டுக்கு ஸ்வீட் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வந்துடு…. “
“நான் உனக்கு வேணுமான்னு கேட்டேன் டி….”, முறைத்தபடி மீண்டும் கேட்டான்.
“ம்ம்…”
“என்ன வேணும்?”
“இங்க ஒன்னு டாட்டா கிஸ் வேணும்..”, எனத் தனது கன்னத்தைக் காட்டினாள்.
“அதென்ன கஞ்சத்தனமா ஒன்னு….. வா நெறைய தரேன்… “, என முகம் முழுதும் முத்திரைகள் பதித்து அவளிடம் சொல்லிக்கொண்டுப் புறப்பட்டான்.
அவள் மதிய சமையலுக்கு தேவையானவற்றை எல்லாம் தயார் செய்து அடுப்பில் வைக்கும்போது சாந்தம்மாதேவி வீட்டிற்கு வந்தார்.
“அம்மாடி… தண்ணி கொண்டு வாம்மா…”, என அவர் கேட்கவும் சொம்பில் தண்ணீர் கொண்டு சென்றுக் கொடுத்தாள்.
அவர் வேர்த்துக் கலைத்து வந்திருப்பது கண்டு, “ஏன் அத்த இவ்ளோ கஷ்டப்படறீங்க? ஆள போட்டு பாத்தா உங்களுக்கும், மாமாவுக்கும் இவளோ அலச்சல் இருக்காதுல்ல …”
“அந்த ஆள மேய்க்க நம்ம தான் போகணும்… நம்ம தொழில் நம்ம கையால நம்ம கண் பார்வைல வந்து தான் நடக்கணும். அப்ப தான் அசலும் லாபமும் என்னனு புரியும்… நீ சொல்வியே கம்ப்யூட்டர்ல நீங்க தட்டச்சு பண்ணத சரிபார்க்க ஒரு கூட்டம் இருக்கும்னு.. . இது அப்படி தான்…. நம்ம கொஞ்சம் அசால்ட்டா இருந்தாலும் அசலு கூட கைக்கு வராது…. இந்த அறுவடை சீசன் எல்லாம் ரகு வந்து பாத்துக்குவான்…. இந்த தடவை தான் நானும் உங்க மாமாவும் கொஞ்சம் அலச்சல் படறது…. கல்யாண வேலையெல்லாம் அவனே செஞ்சிட்டான் அதனால பெரிய வேலை இல்லை ….”
“விடுங்க அத்த.. இனிமே நானும் வந்து இதுலாம் கவனிச்சிக்கறேன்…..”, எனக் கூறிவிட்டு சமைக்க நின்றாள்.
“இரு டி.. கீரை நான் செய்றேன்…. நீ ரசமும், கூட்டு பொரியல் மட்டும் செய்….”
“ஏன் அதையும் நானே பண்றேன் அத்த…”
“நீ தானே டி உனக்கு கீரை பிடிக்கும்ன்னு சொன்ன… அதான் நான் அத செஞ்சி தாரேன்… சாப்ட்டு பாத்துட்டு சொல்லு….”, எனக் கூறினார்.
“சரிங்க அத்த…..”, எனச் சிரிப்புடன் கூறிவிட்டு, இருவரும் ஊர் கதைகள் பேசியபடியே வேலைகளைச் செய்து முடித்தனர்.
ரகு அப்பா இருக்குமிடம் அறிந்து சென்று மில் முதலாளியிடம் விலைப் பேசி, நெல்லை இறக்கிவிட்டு, பழக்கடைக்கு தேவையான மாங்கனிகளைப் பிரித்தனுப்பி பணத்தை வாங்கிக் கொண்டு, மீதி பழங்களைச் சிறு வியாபாரிகளிடம் கொடுக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்துவிட்டு தந்தையுடன் இல்லம் வந்தான்.
“அம்மா….. இந்தாங்க மாங்கனி வித்த பணம்… மீதி மண்டில இருந்து வந்துடும்.. அரிசியும் ஒரு வாரத்துல வந்ததும் சூப்பர் மார்க்கெட் ஆளுங்க வருவாங்க.. அவங்ககிட்ட வெலய நிர்ணயம் பண்ணிட்டு லோட் அனுப்புங்க…. சோளம், கம்பு, ராகி எல்லாம் இயற்கை முறைல பண்றதால வெலைய கூட்டி தான் சொல்லணும்.. நீங்க எப்பவும் போல சொல்லிடாதீங்க…. நான் செங்கன்கிட்ட மிச்ச வயல் வேலை எல்லாம் சொல்லிட்டேன்.. அப்பாகிட்டயும் நோட்டு குடுத்துட்டேன்…. சந்தேகம் இருந்தா ஃபோன் பண்ணுங்க….. அரிசிய இந்த முறை பூச்சி மருந்து போடாம தான் வளக்கணும்… விதை நானே வாங்கிட்டு வரேன்… வழக்கம் போல அந்த கண்ணாயிரம் கடைல வாங்காதீங்க… அவன் லோடு இறக்கிட்டான்னு இந்த தடவை பேச கூடாது…. அவன் அனுப்பினா நீங்க திருப்பி அனுப்புங்க….”, என நீளமாக பேசியபடி அவன் வருவது பார்த்து அவளுக்கு தான் ஆச்சர்யம் தாளவில்லை.
“இவளோ நீளமா பேசுவீங்களா நீங்க?”, என அவனிடம் கேட்டாள்.
“பணத்த ரதிகிட்ட குடு… அம்மாடி.. இந்தா சாவி.. பீரோவுல வச்சிட்டு வா….”, என சாந்தம்மா தேவி கொடுத்ததும் அவர் கணவரே ஆச்சர்யமாகப் பார்த்தார்.
“என்னம்மா நான் கேட்டா கூட சாவிய தரமாட்ட…. அவ இங்க வந்தே நாலு நாள் கூட ஆகல அவகிட்ட தர…”, அதிர்ச்சியுடன் கேட்டான்.
“அவ தான் இனிமே இந்த குடும்பத்த கட்டி காப்பாத்த போறா…. அவகிட்ட தராம…?”
“என்கிட்ட கூட நீ குடுத்ததே இல்லயே சாந்தா?”, அவர் கணவர் கேட்டார்.
“உங்க கைல சாவி இருந்த வரைக்கும் நாம எப்புடி இருந்தோம்?”, என முறைப்புடன் கேட்கவும் அவர் அமைதியாகிவிட்டார்.
இதையல்லாம் கேட்டும் கேட்காமல் அவள் பாட்டுக்குச் சொன்னதைச் செய்துவிட்டு சாவியை அவரிடம் கொடுத்தாள்.
அப்பாவும், மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டுச் சென்றனர்.
“ஏன் அத்த மாமாவ அப்டி சொன்னீங்க?”, வருத்தத்துடன் கேட்டாள்.
“உங்க மாமா ரொம்ப நல்லவரு டி… கட்டினா என்னை தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சி கட்டினாரு… ஆனா எல்லாரையும் சட்டுன்னு நம்பிடுவாரு… அதனால் ஏகப்பட்ட நெலம் சொத்து எல்லாம் கையவிட்டு போயிருச்சு.. நான் வந்தப்ப இருந்ததுல இப்போ பாதி கூட இல்ல…. அப்பறம் என் மாமியார் போன அப்பறம் தான் நிர்வாகம் என் கைக்கு வந்துச்சி… அப்பயிருந்து இழுத்து பிடிச்சி இந்த அளவுக்கு நிறுத்தி இருக்கோம்…. இன்னிக்கும் கஷ்டம்னு கேட்டா கைல இருக்கற காச தூக்கி குடுத்துடுவாரு…. இவனும் கொஞ்சம் அப்படி தான்… இப்போ கொஞ்சம் தெளிவா இருக்கான்…. நீயும் உஷாரா இருந்து குடும்பத்தை மேல கொண்டு வரணும்… சரியா?”
“கண்டிப்பா அத்த… இது நம்ம குடும்பம்.. நம்ம தான் பாத்துக்கணும்….”
“இந்த பேச்சு தான் நீ…. அவன மட்டும் விரும்பாம எங்களையும் விரும்பி ஏத்துக்கற.. நீ நல்லா இருப்ப டி… சரி உன் புருசன் மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருப்பான். போய் சமாதானம் செஞ்சி கூட்டிட்டு வா… நானும் என் புருஷன சமாதானம் பண்ணி கூட்டி வரேன்.. எல்லாரும் ஒன்னா உக்காந்து சாப்ட்டுக்களாம்….”, எனக் கூறிச் சென்றார்.