258 views

அத்தியாயம் 21

மறுநாள் காலை வருவதற்குள் முந்தைய நாள் இரவு,

“பத்திரமாகப் போயிட்டு வா அதி! எதுக்கும் நீ வீட்டுக்கு வர்ற வரைக்கும் அங்கே நடக்கிறதை எல்லாம் எனக்கு அப்டேட் பண்ணு” என்று மனைவியிடம் கண்களால் கெஞ்சினான் பிரித்வி.

“என்னங்க நீங்க? காஜல் வர்றாங்கறதுக்காக இப்படி சொல்லாதீங்க!” என்று கடிந்து கொண்டாள் அதிரூபா.

“நீ யாஷிகாவை மட்டும் பார்க்கப் போவதால் இருந்தாலும் நான் இதையே தான் சொல்லி இருப்பேன்!” என்று அழுத்தமாக கூறினான்.

“நம்பிட்டேன் ங்க!” என்று உதட்டைச் சுழித்துக் கொண்டு கூறியவளைப் பார்த்த பிரித்வி,”எனக்காக இதைப் பண்ண மாட்டியா அதி?” என்று மனைவியிடம் யாசித்தான்.

கனிவான் பார்வையுடன்,
“உங்களுக்காக நான் செய்றேன் பிரித்வி. நீங்க என்னோட நம்பரை ட்ராக் பண்ணுங்க. வேற எதாவது ட்ராக்கிங் டிவைஸ் (கண்காணிப்பு சாதனம்) இருந்தாலும் கொடுங்க” என்று அவனிடம் கேட்டாள் அதிரூபா.

அவள் நிச்சயமாக நக்கலாகப் பேசவில்லை. உண்மையாகத் தான் கூறி இருந்தாள்.அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டான்.

“என்னாச்சு பிரித்வி?” என்று அவன் கரங்களில் நெகிழ்ந்து கொண்டே கேட்டாள் அதிரூபா.

“ஐ லவ் யூ அதி!” என்று நிமிர்ந்து அவளுடைய கண்களைப் பார்த்துக் கூறினான்.

ஏற்கனவே அவனைத் தவறாக எண்ணி விட்டோமோ என்றவளது தவிப்போ, இந்தக் கணத்தில், அவன் உதிர்த்த ஒற்றை வார்த்தையில் உருகி மறைந்து போவதை உணர்ந்தாள் அதிரூபா.

“சாரி பிரித்வி!” என்று அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

“ஹேய்! சாரி எதுக்கு?” என்று அவளது இடையை வருடிக் கொண்டே கேட்டான்.

“ஏதோ நான் தான் உங்களைப் புரிச்சுக்கலையோ – ன்னு குற்ற உணர்வாக இருக்கு!”

கணவனை இதற்கு மேல் தவிக்க விட மனம் வரவில்லை. அதனால், எல்லா சங்கடங்களையும், குழப்பங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ள வாய்ப்புக் கிடைத்து விட்டதாக எண்ணினாள் அதிரூபா.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல ம்மா! என் சூழ்நிலை அப்படி ஆகிப் போச்சு.நீ இப்போ சாரி கேட்கிறது தான் எனக்குக் கஷ்டமாக இருக்கு” என்றான்.

“இந்த ஒரு தடவை என்னோட மன்னிப்பை ஏத்துக்கோங்களேன்?” என்று அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

“ஓகே! உன் சாரியை ஏத்துக்கிட்டேன்”

“நீங்க ஏதாவது எங்கிட்ட கேட்கனுமா?”

“ம்ஹூம்! எதுவும் இல்லை அதி! சொல்ல தான் நிறைய இருக்கு” என்று தன்னவளின் இடையைக் கிள்ளினான் பிரித்வி.

“என்னங்க!” என்று அவனது கரங்களை மென்மையாக தடுத்தவள்,

“நாளைக்கு எல்லாத்தையும் சொல்லுங்க! நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். இப்போ தூங்குங்க” என்று அவனது மார்பில் சாய்ந்து கொண்டே உறங்க ஆரம்பித்து விட்டாள் அதிரூபா.

உறங்குவதற்கு முன்னால், முகத்தைக் கழுவி இருந்ததால் பொட்டு வைக்க மறந்திருந்தாள் அதிரூபா.அந்த புருவங்கள் இரண்டையும் இணைக்கும் இடத்தின் மையத்தில் தன் இதழ்களைப் பதித்தான் பிரித்வி.

“ஏங்க!” என்று அரை உறக்கத்தில் இருந்த மனைவிச் செல்லமாக மிரட்டியதும், அமைதியாக தூக்கத்தில் மூழ்கிப் போனான் பிரித்வி.

🌸🌸🌸

கணவனின் இதழ்களுக்குள் புதைந்துக் கிடந்த தன் அதரங்களை மென்மையாக விலக்கிக் கொண்டாள் அதிரூபா.

“பிரித்வி! நான் சீக்கிரமாக வந்துடுவேன்.
நீங்களும் போய், சக்ஸஸ்ஃபுல் ஆக மீட்டிங் அட்டெண்ட் பண்ணிட்டு வாங்க” என்று விடை கொடுத்து விட்டு தன் இரு சக்கர வாகனத்தில் பூங்காவிற்கு விரைந்தாள் அதிரூபா.

மற்றவர்களுக்கு அவள் சகஜமாக யார் துணையும் இன்றி, செல்வது போலத் தான்  இருக்கும். ஆனால், பாதுகாப்பு வளையங்கள் பல தன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருப்பது அவள் மட்டுமே அறிந்த விஷயம்.

🌸🌸🌸

தன் செல்பேசியைக் கைப்பையில் வைத்துக் கொண்டே,
“நான் சொன்னது நியாபகம் இருக்குல்லங்க?” என்று தன்வந்திடம் கேட்டாள் காஜல்.

“ம்ம்! இருக்கு. நீ ஜாக்கிரதையாகப் போயிட்டு வந்திரு”

“எனக்கு எந்த ஆபத்தும் வர்றதுக்கு வாய்ப்பு இல்லைங்க” என்று வேண்டுமென்றே கூறினாள்.

“தெரியும். நீ கர்ப்பமாக இருந்தால் மயக்கம் வரும்ல அதுக்கு சொன்னேன்!” என்றான் தன்வந்த்.

“அப்படியே வரும் போது ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு வந்துடவா?”

“வேண்டாம் காஜல். நான் வந்ததும் ஈவ்னிங் ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்” என்று குழந்தையாக இருந்தால் அதைப் பற்றி முதலில் தனக்கும் தெரிய வேண்டும் என்ற உணர்வு அவனுக்குள் இருந்ததால் தான் அவ்வாறு கூறினான்.

“சரி. நான் காரில் போகலாம் தான? அதுக்கு அனுமதி இருக்கா?”

“காஜல்!”

“ஏன் எல்லாரையும் இவ்ளோ கஷ்டப்படுத்துறீங்கன்னு தெரியலை தன்வந்த்! இதுக்கு மேல நான் இங்கே நின்னா மனசில இருக்கிறது எல்லாம் கொட்டிடுவேனோனு பயமா இருக்கு. நான் கிளம்பறேன்!” என்று அவள் வாயிலை நோக்கி நடந்த சமயம்,

“வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் கொட்டிடு காஜல்! நான் கேட்கத் தயாராக இருக்கேன்!” என்று மனைவியை வழியனுப்பி வைத்தான்.

🌸🌸🌸

தன் மகிழுந்தை அதற்குரிய இடத்தில் நிறுத்தி விட்டு, விடுதியின் உள்ளே சென்றான் பிரித்வி.

அங்கே ஏற்கனவே வந்திருந்த தன்வந்த்,
“வெல்கம் பிரித்வி!” என்று அவனை வாயார வரவேற்றான்.

“ஹாய் தன்வந்த்!” என்று ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த அந்த விடுதியை நோட்டமிட்டுக் கொண்டே அவனுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் பிரித்வி.

“பயப்படாதே! நான் எந்த பிளானும் வச்சுக்கிட்டு வரல” என்று இகழ்ச்சியாக கூறினான் தன்வந்த்.

“நான் நோட்டம் பார்த்தது எனக்காக இல்லை தன்வந்த்! நீ பண்ற இல்லீகல் வேலையால் பாதிக்கப்பட்டவங்க உன்னைப் போட்றப் போறாங்களோன்னு தான் கவனிச்சேன்!” என்று வெகு நக்கலாகப் பேசினான் பிரித்வி.

“ப்ச்! என்னப் பேசனும்?” என்று எரிச்சலாக கேட்டான்.

“என்னை ஆக்ஸிடன்ட் பண்ணது நீ தான்னு எனக்கு நல்லாவே தெரியும் தன்வந்த்!” என்றான்.

“அதுக்கு என்ன இப்போ?” என்று மிக அலட்சியமாக கூறினான்.

“அது தான் கடைசியாக இருக்கனும். இனிமேல் என் பர்சனல் விஷயத்தில் தலையிடாமல் , பழைய மாதிரி தொழிலில் மட்டும் போட்டிப் போடுன்னு சொல்ல தான் கூப்பிட்டேன் தன்வந்த்!”

“ஓஹ்! யோசிக்க வேண்டிய விஷயம் தான் பிரித்வி. ஆனால் உன்னை நான் கொலை பண்ண ட்ரை பண்ணியது நான் தான்னு தெரிஞ்சும் ஏன் இந்த சலுகை?”

“எனக்கு உன்னோட தொழிலில் போட்டிப் போட ரொம்ப பிடிக்கும் தன்வந்த். நீ லீகல் ஆக என் கூட மோதிட்டு இருந்தப்போ அவ்ளோ ஆர்வமாக நானும் உனக்கு சரி சமமாகப் போட்டிப் போடுவேன்.உனக்கும் அது அப்போவே தெரிஞ்சு இருக்கும். இப்போ என்னாச்சு?” 

“ஒன்னும் இல்லையே!”

“இங்கே வர்றதுக்கு முன்னாடி நாள் கூட நீ என்னை எதாவது செய்ய முயற்சி பண்ணினா உடனே சுட சொல்லி இருந்தேன். ஏன்னா ஒரு தடவை நீ என்னைக் கொலை பண்ண முயற்சி செய்து மிஸ் ஆகியிருக்கு. ஆனால் இப்போ அந்த எண்ணம் எனக்குச் சுத்தமாக கிடையாது. ப்ளீஸ் தன்வந்த்! நீ மாறிப் பாரு. இல்லீகல் எல்லாத்தையும் விட்டுட்டு, என் கூட நேருக்கு நேராக நின்னு மோது! அதை தான் உங்கிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன்!” என்று அவனிடம் கோரிக்கை விடுத்தான்.

அவனிடம் எதுவும் சொல்லாமல், “நான் கிளம்பறேன் பிரித்வி!” என்று அமைதியாக கூறி விட்டுப் போனான் தன்வந்த்.

அவனுடைய மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருக்க முடிவெடுத்து , அங்கிருந்து கிளம்பி விட்டான் பிரித்வி.

🌸🌸🌸

இதே சமயம், பூங்காவினுள் சென்றதும்,”ஹாய் யாஷ்!” என்று நண்பியைக் கட்டிக் கொண்டாள் அதிரூபா.

அவர்கள் இருவருக்கும் வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் ஆனந்தம் இழையோடியது.

“ரூபா! பார்த்துப் பல மாசம் ஆனாலும் அப்படியே இருக்கிற!” என்றாள் யாஷிகா.

“நீங்க ரெண்டு பேரும் என்னையும் கொஞ்சம் பார்க்கலாம்!” என்று அங்கே வந்தாள் மூன்றாமவள்.

“காஜல்!” என மற்ற இருவரும் ஒன்று சேர்ந்து சந்தோஷக் கூச்சலிட்டனர்.

 

“அப்பறம் லைஃப் எப்படிப் போகுது? நீங்க தான் கல்யாணம் ஆனவங்க உங்களோட பொதுவான அனுபவத்தைச் சொன்னா எனக்கு உதவியாக இருக்கும்?” என்று கேட்டாள் யாஷிகா.

“ஏன் அடுத்தக் கல்யாணப் பொண்ணாக மாறப் போறியா யாஷ்?” என்றாள் அதிரூபா.

“இருக்கும் ரூபா! அதான் கேட்கிறா” என்று கூறினாள் காஜல்.

“ஆமாம் ஃப்ரண்ட்ஸ்! அதுக்குத் தான் கேட்கிறேன்” என்று உண்மையை ஒப்புக் கொண்டாள் யாஷிகா.

“ஹேய் வாழ்த்துக்கள்” என்றனர் மற்ற இருவரும்.

“நன்றி…! உங்க கல்யாணத்துக்கு ட்ரீட் வைங்கன்னு கூப்பிட்டு வந்துட்டு என் கல்யாணத்துக்கு நான் ட்ரீட் கொடுக்கப் போறேன். சோ, இன்னும் கொஞ்ச நேரத்தில் நல்ல அசைவ ஹோட்டலுக்குப் போயிடலாம் ஃப்ரண்ட்ஸ்!”

“நானும் இன்னைக்கு உங்களுக்கு கண்டிப்பாக ட்ரீட் கொடுக்கனும்! ஏன்னா, நான் கன்சிவ் ஆக இருக்கேன்னு நினைக்கிறேன்!” என்று தன்னுடைய நல்ல செய்தியையும் அவர்களிடம் பகிர்ந்தாள் காஜல்.

“வாவ்!! அப்போ எனக்குத் தான் டபுள் டமாக்கா ட்ரீட்!” என்று ஆர்ப்பரித்தாள் அதிரூபா.

“உன் முறை வரும் போது எல்லாத்துக்கும் சேர்த்து நாங்க உன் பேங்க் பேலன்ஸைக் காலி பண்ணிடறோம்” என்று யாஷிகாவும், காஜலும் புன்னகைத்தனர்.

“வச்சிட்டாப் போச்சு!” என்று சிரித்தாள் அதிரூபா.

“சாப்பிட்டு முடிச்சதும் வேற ஒரு விஷயமும் நான் உங்ககிட்ட சொல்லனும் ஃப்ரண்ட்ஸ்” என்றாள் காஜல்.

குறும்புத்தனத்தைக் கை விட்ட மற்ற தோழிகள்,”ம்ம்! ஓகே காஜல். நமக்கு நிறைய நேரம் இருக்கு. நீ  எங்ககிட்ட எதையுமே ஷேர் பண்ணலாம்”என்றவர்கள் உணவு விடுதிக்குச் சென்றார்கள்.

காஜலும், யாஷிகாவும் தான் உணவிற்கானப் பணத்தைச் செலுத்தினார்கள்.

தன் பங்கையும் கொடுக்க முன் வந்த அதிரூபாவிடம்,”எப்படியும் இனிமேல் அடிக்கடி மீட் பண்ண தான போறோம். அப்போ நீ பில் கொடு” என்று கூறி தடுத்து விட்டனர்.

மீண்டும் அதே பூங்காவிற்கு வந்தவர்கள்,
சிமெண்ட் பலகையில் அமர்ந்ததும்,
“தன்வந்த் தான் என்னோட ஹஸ்பண்ட்னு உனக்குத் தெரியும் தான ரூபா?” என்று ஆரம்பித்தாள் காஜல்.

“தெரியும் காஜல்” என்று இயல்பாக கூறினாள் அதிரூபா.

ஏதோ பெரிய விஷயம் போல என்று அமைதியாகப் பார்வையிட்டாள் யாஷிகா.

“அவர் தான் பிரித்வியைக் கொலை பண்ண … ” என்றதும்,

“அது பழைய கதை காஜல். இப்போ எதுக்கு?” என்று அவளை அமைதிப்படுத்த முயன்றாள் அதிரூபா.

அவள் கூறியதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்து விட்டாள் யாஷிகா.

“இப்போ புதுசா ஒன்னு சொல்லவா ரூபா? இதே நேரத்தில் தன்வந்த்தும், பிரித்வியும் மீட்டிங் அரேன்ட்ஜ் செய்து இருக்காங்க” என்றாள் காஜல்.

“நீ… என்ன சொல்ற?” என்று பரிதவித்தாள் அதிரூபா.

“யெஸ்! இந்நேரம் மீட்டிங் முடிஞ்சு இருக்கும்” என்று தனக்கும், தன்வந்த்திற்கும் நடந்த உரையாடல்களை அவளிடம் கூறினாள்.

“இதை எப்படி சரி பண்றது காஜல்?” என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் அதிரூபா.

அதிர்ச்சி விலகாது இருந்த தோழியின் முதுகைத் தடவிக் கொடுத்தாள் யாஷிகா.

“அவர்கிட்ட நான் பேசியதுக்கு பலன் இருக்கும் ரூபா! பிரித்வியும் சமாதானம் பேசத் தான் போயிருப்பார்” என்றாள்.

“அவர் எங்கிட்ட சொல்லவே இல்லை காஜல்!” என்று வருந்தினாள் அதிரூபா.

“ஏற்கனவே ஆக்ஸிடன்ட் அளவுக்கு வந்திருக்காரே என் புருஷன். அதனால்,  பிரித்வி உங்கிட்ட சொல்ல முடியாமல் சங்கடப்பட்டு சொல்லாமல் இருந்திருப்பார் ரூபா!”

“ம்ஹ்ம்!” என்று ஒருவாறு அமைதியடைந்தாள் அதிரூபா.

“ரெண்டு பேரும் இதை ஜாக்கிரதையாக கையாளனும். குழந்தையைக் காட்டி தன்வந்த்தை நான் மாத்துறேன் ரூபா” என்று உறுதியளித்தாள் காஜல்.

“ஃபீல் பண்ணாதீங்க” என்று தனக்குத் தெரிந்த அளவிற்கு இருவரையும் தேற்றினாள் யாஷிகா.

பின்னர், தங்களது வீட்டு விலாசங்களைப் பகிர்ந்து கொண்டு விடைபெற்றுச் சென்றனர் மூவரும்.

அறையில் காலை நன்றாக காலை நீட்டி சொகுசாக அமர்ந்திருந்த கணவனைப் பார்த்து,”யோவ்! எழுந்திரு!” என்று பத்ரகாளியாக நின்றிருந்தாள் அதிரூபா.

‘இப்போ தான் மலையேறி இருந்தாள்! அதுக்குள்ளே நான் என்னப் பண்ணி வச்சிருக்கேன்னு தெரியலையே?’ என்று திடுக்கிட்டு எழுந்தான் பிரித்வி.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்