Loading

20 – விடா ரதி… 

 

“என்னாச்சி ரகு .. ஏன் அங்க உக்காந்துட்டு இருக்கீங்க?”, எனக் கேட்டபடி இரவு உடை எடுத்துக் கொண்டு அவன் அருகே வந்தாள். 

 

“ஹோ.. இங்க இருந்து பாத்தா தோட்டம் தெரியுதா? நல்ல வியூ தான்….”

 

ஒலிப்பெருக்கியில் இனிமையான இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அவனிடம் இருந்து அழைபேசியை வாங்கித் தனக்கு விருப்பமான பாடல்களை ஒலிக்கச் செய்து, அவனின் கன்னம் கிள்ளிவிட்டுக் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள். 

 

அவன் இடம் விட்டு நகராமல் இன்னும் அப்படியே அமர்ந்துக் கொண்டு கீழே தெரியும் மல்லிகைப் பந்தலைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

இரவில் பூக்கும் மலர்களுக்கு தான் அத்தனை வாசனையை இறைவன் கொடுத்திருக்கிறான். அதனால் தானோ என்னவோ ஆணும் பெண்ணும் கூட இரவிலே பூக்கிறார்களோ? 

 

பெண்ணவள் உயிர் பூ வாசனையைத் தேடி…

தலைவன் தான் மனக்காய்ச்சல் கொண்டானோ? 

அவள் இதழின் மென்மையில் தலைவன் தொலைய..

உயிரன்பு கொண்ட ஆண்மையின் அண்மையில்…

பெண்மை தான் மகரந்தம் சூழ மலர்ந்ததோ? 

 

முகத்தில் தண்ணீரின் முத்துக்களோடு அவள் வெளியே வந்து அவன் அருகே இருந்த துவாலையை எடுக்க, அவன் அவளை அள்ளியெடுத்தான். 

 

“என்னாச்சிடா ராக்கி?”, அவன் முகத்தை அத்தனை அருகில் பார்த்ததும் ரசனையாகப் பார்வையைப் படரவிட்டாள்.   

 

அவனோ மலரை நாடும் வண்டாக மாறிக்கொண்டிருந்தான். அவளின் முகம் அவனுக்கு மட்டும் அத்தனை வசீகரமாகத் தெரிகிறதா அல்லது அவளே அப்படி தான் இருக்கிறாளா என்று தெரியவில்லை. 

 

அவள் காதலை வெளிப்படுத்திய தினம் முதலாக நாளொரு வண்ணத்தில் அவனைக் கிறங்கடித்துக் கொண்டிருக்கிறாள். இதோ இப்போதும் கூட இமைக்காமல் அவனை ரசிக்கும் அந்த விழிகள், அதைக் காண காண அவன் தான் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தான். 

 

“இவளோ நெருக்கமா இருக்கேன்.. வெக்கம் வந்து முகத்த மூட மாட்டியா டி?”, கிறங்கியக் குரலில் கேட்டான். 

 

“எதுக்கு வெட்கம் வந்தா முகத்த மூடணும்? என் புருஷன நான் ரசிக்கிறேன்…. இவளோ பக்கத்துல அடிக்கடி பாக்க முடியுமா என்ன?

வாய்ப்பு வரப்போ விடக்கூடாது….”, அவன் மீசையை நீவி விட்டு புருவத்தில் விரல் கோலமிட்டன. 

 

அவனும் அவள் முகத்தில் தன் விரலால் கோலமிட்டுக் கொண்டிருந்தான். இருவரும் இருவரின் அருகாமையை வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தனர். எத்தனை நேரம் கடந்ததோ தெரியவில்லை அவன் பாரம் மூச்சை அடைக்கவும் தான் அவனைத் தள்ளிவிட்டாள். 

 

“உங்கம்மா கையாள இரண்டு வேள சாப்டதும் எவ்ளோ வெயிட்டா இருக்க நீ.. நான் உனக்கு சாப்பாடு போடாமயா டா இருந்தேன்…. “, என அவனை வம்பிலுத்தாள். 

 

“எங்கம்மாவ தான் நல்லா கைக்குள்ள போட்டுகிட்டியே அவங்க செய்யற மாதிரி செஞ்சி கத்துக்க…. ஆனா உனக்கு தான் கஷ்டமா இருக்கும்…. என் அம்மா கையாள சாப்டு கூட உன் பாரம் ஏரல போலவே டி….”, என விஷமமாக அவன் பதில் கூறவும் கன்னம் சிவக்க ஆரம்பித்தது. 

 

“கெட்டபையன் டா நீ….”, என அவன் மார்பினில் முகம் புதைத்துக் கொண்டாள். 

 

“உனக்கு மட்டும் அப்படி தான்… ரொம்ப கெட்டவனா என்னை நீ மாற வைக்கற டி…. இன்னும் எவ்ளோ நாள் நான் நல்லவன் வேஷம் போடணும்?”, அவள் இடையை அழுத்தியபடி வினவினான். 

 

“நானா உன்ன நல்லவன் வேஷம் போட சொன்னேன்?”, என அவள் கேட்டுவிட்டு எழுந்துக் கொண்டாள். 

 

“ஹேய்… “, என அவன் அவளைத் துரத்திப் பிடிக்கவும், காதலின் அடுத்தக் கட்டம் நடந்தேறியது. 

 

கன்னங்கள் இதழியலின் பயிற்சி கூடமாக..

இருபது விரல்களும் உடல்களின் வரைப்படம் கண்டெடுக்க….

உயிர் கொதிக்கும் வெப்பம் தாளாமல் பூவையவள் தொய்ந்து சாய…

அகன்ற மார்பினன் அவளைத் தன்னுள் இறுக்கியணைக்க…

பாலாடைகளை விலக்கியபடி தலைவன் பூவையை நுகர….

பெண்மயில் தலைவனின் தீண்டலில் உயிர் பூக்க சிலிர்த்தெழ… 

ஆங்கோர் ஆழமான உழுதல் தான் உயிர்கள் மேற்கொள்ள….

அச்சங்கமத்தில் காதல் பெருக…. 

கூடல் முடிந்தும் காதலே மீதமிருக்க…..

காதலை பெருக்க தலைவியும் தலைவனை பின்பற்ற….

விடிந்தும் காதலின் கணக்கு புரியவில்லை…

சங்கமங்களும் முடியவில்லை…. 

 

இருவரும் உடலைத் தாண்டிய ஆத்ம தேடலையுணர்ந்துக் கொண்டிருக்க, இருவர் கண்களும் தழுவியபடியே இருந்தன. 

 

“தூங்கலாமா?”, அவன் கேட்டான். 

 

“மணிய பாரு… நான் குளிச்சிட்டு கீழ போறேன்…. “, என எழுந்தவளைத் தன்மேல் போட்டுக்கொண்டு, “கம்முனு படுத்து தூங்கு … அம்மா அப்பா வெளிய போய் இருப்பாங்க…..”, என மீண்டும் இதழியல் தொடங்கினான். 

 

“இன்னிக்கி வெளியே போறதா என்கிட்ட எதுவும் சொல்லலியே டா…. உன்கிட்ட எப்ப சொன்னாங்க?”

 

“நாம லைட் ஆஃப் பண்ணவே இல்ல…. பாட்டும் ஓடிகிட்டே இருக்கு… அவங்களுக்கு புரிஞ்சி இருக்கும்…. “, எனக் கூறவும் தான் அவற்றை அவளும் கவனித்து, அவனையே ஆடையாகப் போர்த்திக் கொண்டாள். 

 

“போடா….. பயங்கரமான கெட்ட பையன் நீ…”, சிணுங்கியபடிக் கூறினாள். 

 

“நீ மட்டும்…”, என அவன் ஆரம்பிக்கும் போதே இதழோடு இதழடைத்துவிட்டாள். 

 

“நீ தீராத போதை தான் டி….”, அவளின் காதில் கூறி தன் மார்பினில் உறங்க வைத்தான். 

 

இருவரும் மதியம் 2 மணிக்கு மேல் எழுந்துக் குளித்து கீழே வந்து சமைத்து வைத்திருந்த உணவை உண்டுவிட்டு காலாற வயலில் நடக்கச் சென்றனர். 

 

சாந்தம்மாதேவி மகனும், மருமகளும் முகம் பூக்க வருவதுக் கண்டு மனதிற்குள் கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டார். 

 

“சாப்பிட்டீங்களா ரெண்டு பேரும்?”

 

“சாப்பிட்டோம் அத்த….”

 

“சரி…. அப்படியே நம்ம தோப்பு பக்கம் கூட்டிட்டு போயி புள்ளைக்கு காட்டு ராசா…. நான் கூலி குடுத்துட்டு வீட்டுக்கு போறேன்.. நீங்க மெல்ல வாங்க போதும்…. நாளைக்கு வெள்ளன்ன எந்திரிக்கணும் … சீக்கிரம் வந்து தூங்கிடுங்க…”, சூசகமாகக் கூறியனுப்பி வைத்தார். 

 

“அத்த ரொம்ப ஸ்வீட் டா…”

 

“அப்ப நானு?”

 

“நீ கொஞ்சம் ஸ்வீட்.. கொஞ்சம் காரம்….”

 

“அஹான்…. இப்ப நான் சொல்லவா?”

 

“இப்போ நீ கம்முன்னு வந்தா போதும்… வாயவே திறக்காத…..”

 

“சரி இப்போ பேசல….. ஆனா…..”

 

“அந்த ஆனாவ நாம அப்பறம் பேசிக்கலாம்….”, எனக் கூறி அவன் முதுகில் கை வைத்து முன்னே தள்ளியபடி நடந்தாள். 

 

இருவரும் வயலில் வரும் வாசனையை நுகர்ந்து, காணும் பூக்களைப் பறித்து, அவள் தலையில் வகைக்கொன்றாகக் கூந்தலில் சூடி, மடியில் பழங்களை ஏந்திக் கொண்டு சூரியன் அஸ்தமித்த பிறகு இல்லம் வந்துச் சேர்ந்தனர். 

 

மாமியாருக்கு சமையலில் உதவி செய்து, அனைவரும் உண்டு முடித்து பாலுடன் தன் அறைக்குச் சென்றாள். 

 

“என்னடி நேத்து குடுக்கவேண்டிய பால இன்னிக்கி கொண்டு வர?”, அவன் கிண்டலாகக் கேட்டான். 

 

“அலங்காரம் பண்ணி கொண்டு வந்தப்ப லேட்டா வந்தவங்க எல்லாம் இப்போ வாய் பேச கூடாது…..”, அவளும் அவனைக் கிண்டலடித்துக் கூறினாள். 

 

“அன்னிக்கி நான் உனக்கு முன்ன அங்க இருந்திருந்தா இந்நேரம் நீ டெஸ்ட்-கிட் கொண்டு வந்திருப்ப….”, அவனும் சளைக்காமல் பதில் கொடுத்தான். 

 

அவள் அவனை முறைத்துவிட்டு, முடியாமல் சிரித்துவிட்டாள். 

 

“உன்ன எல்லாம் ஊருக்குள்ள நல்லவன்னு சொல்றாங்க….”, எனத் தலையில் அடித்துக் கொண்டாள். 

 

“நான் நல்லவன் தான் டி… அதுல உனக்கு என்ன சந்தேகம்?”, என ஒரு புருவம் உயற்றிக் கேட்டான். 

 

“ஆமாமா….”

 

“என்னடி இழுக்கற?”, என அவளை அருகில் இழுத்தான். 

 

“நீ இழுக்காத டா…. கம்முன்னு படுத்து தூங்கு…. நாளைக்கு 5 மணிக்கு எந்திரிக்கணும்… “, என அவனைத் தள்ளிவிட்டு விட்டு கட்டிலின் மறுபுறம் அவன் மேலே உருண்டு அந்த பக்கம் சென்றாள். 

 

“நீ சரியான ராட்சஸி டி…. சீக்கிரம் எந்திரிக்கணும்ன்னு சொல்லிட்டு என்மேல ஏண்டி உருண்டு போற?”

 

“நீ மலை மாதிரி நடுவுல படுத்து இருந்தா நான் எப்படி போறதாம்?”

 

“அந்த பக்கம் சுத்திட்டு போகவேண்டியது தானே?”

 

“டைம் இல்ல… குட் நைட் டா புருஷா….”, என அவனுக்கு காற்றில் முத்தங்கள் கொடுத்துவிட்டு படுத்துறங்கிவிட்டாள். 

 

நாயகன் தான் தூக்கம் தொலைத்து அவள் முகம் பார்த்தபடி நித்திரையின்றி விரதமிருந்தான். 

 

அடுத்தநாள் இருவரும் புது பட்டுடித்திக் கொண்டுத் தயாராகி பூஜைக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் சரிப் பார்த்துக் கோவிலுக்குக் கொடுத்தனுப்பிவிட்டு, நால்வரும் கிளம்பினர். வந்திருந்த சில உறவினர்களை எல்லாம் காலை உணவை முடித்து கோவிலுக்கு அனுப்பி விட்டு, எல்லாரும் வாகனத்தில் கிளம்பினர். 

 

“கருப்பா….. “, என கோவிலில் இறங்கியதும் சாந்தம்மா தேவி மனதார வணங்கி எழுந்தார். 

 

“கண்ணுங்களா… ரெண்டு பேரும் விழுந்து கும்பிடுங்க….. உள்ள அழகர பாத்து பூசைக்கு குடுத்துட்டு வாங்க… நான் இங்க பொங்கல் வைக்க ஏற்பாடு பண்றேன்…”, என அழகர் மலையில் வீற்றிருக்கும் 18ஆம்படி கருப்பணை வணங்கி கெடா வெட்ட ஆயத்தம் ஆகினர். 

 

பூசாரி சொன்னபடி அனைத்து பூசையும் செய்து முடித்து 5 கெடாக்களை பலி கொடுத்து முதல் தயாராகும் பொங்களையும் படைத்து அனைவரும் பயபக்தியோடு வணங்கி நின்றனர். 

 

கருப்பன் மனதார தன்னை அர்ப்பணித்துக் கொண்டு யாருக்கும் கெடுதல் செய்யவும் நினைக்காத உள்ளம் கொண்டவர்கள் வாழ்வை செம்மையுற செய்வான் என்பதில் ஐயமில்லை… 

 

கருப்பண்ணா ….. எங்களையும் இரட்சியுங்கள்….. அனைவரும் கருப்பண்ணின் அருள் பெறுவோம்…. 

 

“அய்யா கருப்பு… உன் அருளாள எம்புள்ளை கல்யாணம் அவன் மனசு படி நடந்துறிச்சி.. இனி அவங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்… புள்ளகுட்டி, தொழில்-ன்னு எல்லாமே சிறப்பா அமையணும்… நீ எப்பவும் எங்கள வழிநடத்தி கூட்டி போகணும்….. சீக்கிரம் எங்க வம்சம் வளர அருள் செய்யப்பா……”, என மனதார சாந்தம்மாதேவி வேண்டிக் கொண்டார். 

 

கருப்பன் கோவில் மணி நான் இருக்கிறேன் என்று உணர்த்தியது. ரகு மற்றும் ரதியின் உடல் சிலிர்த்து அடங்கியது. இருவரும் கருப்பணின் அரிவாள் கண்டு கும்பிட்டு எழுந்தனர். 

 

ஸ்வேதாவும், வருணும் பூஜை ஆரம்பிக்கும் தருவாயில் வந்துச் சேர்ந்தனர். சுந்தரியும் முகுந்தனும் பூஜை முடிந்தபின் தான் வந்தனர். 

 

“ஏண்டி இவளோ நேரம்?”, ரதி கடிந்தாள். 

 

“அவரு தங்கச்சி வீட்ல இருந்து இங்க வர வழி ஃபுல்லா ட்ராஃபிக் டி…. பூச முடிஞ்சிருச்சா?”

 

“முடிஞ்சது.. சரி ரெண்டு பேரும் போய் சாமி கும்பிட்டுட்டு வாங்க… நான் பந்தி கவனிக்க போறேன்….”, எனக் கூறிச் சென்றாள். 

 

ஸ்வேதா அவளுடன் இணைந்துக் கொண்டு சாமி கும்பிட்டுவிட்டு, அவர்களும் பந்தி பரிமாற சென்றனர். ஆண்களும் ஒரு பக்கம் இணைந்து கொள்ள, வந்திருந்த உறவு மற்றும் ஊர் கூட்டம் வயிறார உண்டு எழுந்தது. 

 

வீட்டிற்கு எடுத்துச் செல்லும் கும்பல் சமையல் செய்யும் கூடாரத்தில் நின்றிருக்க, அவர்களைச் சமாளிப்பதே பெரும் பாடாக இருந்தது. 

 

“ஆச்சி… நீ போய் உக்காரு.. எல்லாருக்கும் வீட்டுக்கு தனியா கொழம்பு கொதிச்சிட்டு இருக்கு… பாரு தனியா டப்பா வாங்கி வச்சிருக்காக… நீ கேக்கலன்னாலும் நாங்க குடுத்துவிடுவோம்… இங்க அடுப்புக்குள்ள விழுந்துறாத….”, என ரகு ஒரு கிழவியிடம் கூறிக்கொண்டிருந்தான். 

 

“என்ன ரகு… ஜாலியா இருக்க போல?”, எனக் கேட்டபடி முகுந்தன் அங்கே வந்தார். 

 

“ஏன் மச்சி? என்னைய சிக்க வச்சிட்டு எங்கப்பா அந்தப்பக்கம் போயிட்டாரு.. ஒருத்தர் கூட சொல்பேச்சு கேக்கறது இல்ல….. “

 

“ஹாஹாஹா.. .அப்படி கேட்டுட்டா மதுரைக்காரனுக்கு அவமானம் மாப்ள…. அந்த பக்கம் ஐஸ் குடுக்க ஆரம்பிச்சா இங்க கூட்டம் கொறஞ்சிடும்…”

 

“சரி குடுக்க சொல்லுங்க… ஒரு பந்தி கூட இன்னும் முடியல அதுக்குள்ள இங்க இப்படி…”

 

“விடுங்க… இதுக்கு எல்லாம் நாம அசரலாமா?”, என கூறியபடி முகுந்தன் ஐஸ்கிரீம் கொடுக்க ஆரம்பிக்கவும், நண்டு சிண்டு என அனைத்து வால் கூட்டமும் அங்கே ஓடியது. 

 

“டேய் ரகு… நல்லியே எனக்கு வரல டா…. ஒரு கை அள்ளி கொண்டா..”, பல்லு போன கிழம் ஒன்றுக் கத்தியது. 

 

“பல்லு செட்டே நிக்கல உனக்கு நல்லி கேட்குதா பெருசு? இந்தா ஈரல் வைக்கறேன் நல்லா சாப்பிடு..”

 

“டேய்… நல்லி வை டா…. நான் கடிப்பேன்…”

 

“கம்முன்னு இரு ராசா நீ … யோவ்… கறிய தின்னுட்டு பேசாம வீட்டுக்கு கிளம்பு…. சாராய கடை பக்கம் போன அப்படியே சுடுகாட்டுக்கு ஓடிரு…. போன தடம் கெடா வெட்டுக்கு வந்துட்டு இத தூக்கிட்டு போய் ஒரு லட்சம் ஆசுபத்திரில தண்டம் கட்டினேன்…. இதுல நல்லி கேக்குதோ நல்லி….”, என அந்த கிழவனின் மனைவித் திட்டிவிட்டுச் சென்றார். 

 

“வந்துட்டா…. எங்க போனாலும் விடாம கண்டுபிடிச்சிட்டு வந்துடறா ….ஒரு வாய் சோறு பிடிச்சமேனிக்கு திங்கவிடறாளா? டாக்டருங்க வேற கண்டதையும் சொல்லிடரானுங்க…”, எனக் கிழவனும் திட்டியபடி சாப்பிட்டு எழுந்தார். 

 

ரகு அவர்களின் சண்டையில் இருந்தக் காதலைப் பார்த்துச் சிரித்தபடி மற்ற வேலைகளைப் பார்க்கச் சென்றான். 

 

ரதி அங்கு வந்திருந்த அத்தனை சொந்தங்களிடமும் சிரித்த முகத்துடன் பேசி, கவனித்து, உணவு பரிமாறி, இதமாக நடந்துக் கொண்டது அவளின் மாமனாருக்கு பெருமையாக இருந்தது. 

 

“சாந்தா…. பாத்தியா நம்ம மருமவள?”

 

“அவளுக்கென்ன ராசத்தியாட்டம் இருக்கா…”

 

“அது இல்லடி… எப்புடி எல்லார்கிட்டயும் பதுவிசா நடக்குது பாத்தியா? நான் கூட வெளிநாட்ல வேல பாத்துட்டு வர புள்ள எப்புடி நம்ம வீட்டுக்கு ஒத்துபோவும்-ன்னு நெனைச்சேன்…. எவ்ளோ இணக்கமா நடந்துக்குது….நம்ம மவன் இனி நல்லா இருப்பான் டி… குடும்பத்த இந்த புள்ள பாத்துக்கும்…. யார்கிட்டேயும் சலிச்சிக்காம நின்னு பேசி வேல பாக்குது…”

 

“எம்மவன் சரியா தானே பொண்ண பாத்து இருக்கான்…. அதுங்க ரெண்டும் சந்தோசமா இருந்து பேர புள்ளைங்கள பெத்து குடுத்தா போதும்… “

 

“அதுலாம் ஆக வேண்டிய நேரத்துல ஆகும்… நீ ஒன்னும் கேட்டுகிட்டே இருக்காத… “

 

“நான் ஒன்னும் கேக்கல சாமி.. நீங்க போய் எல்லாருக்கும் குடுத்து விட குழம்பு ஆச்சா பாருங்க…. கோழி இன்னும் பத்து அறுக்க சொல்லி இருந்தேன் …. பசங்களுக்கும் அந்த சிநேகித புள்ளைங்களுக்கும் தனியா கறி மீனு எடுத்து வச்சிருங்க…. “, எனக் கூறி அடுத்த வேலைகளைப் பார்க்கச் சென்றார். 

 

அனைவரும் சாப்பிட்டு முடித்து, வந்த விருந்தினர்களுக்கு தனியாக குழம்பும், கறியும் போட்ட பையைக் கொடுத்தனுப்பி வைத்தனர். 

 

“சரிடி.. நாங்களும் கெளம்பறோம்…” எனத் தோழிகள் கிளம்ப, அவர்களுக்கும் பிரியா விடைக் கொடுத்தனுப்பி வைத்தனர். 

 

“மதுரைல தானே இருப்ப ரெண்டு நாள்? வீட்டுக்கு வாங்க….”, என அழைக்கவும் மறக்கவில்லை. 

 

“கண்டிப்பா வரோம் வருண்….”, ரகு உறுதியாகக் கூறி வீட்டினருக்கும் சேர்த்துச் சாப்பிடக் கொடுத்தனுப்பினான். 

 

அன்றைய நாள் மனமும் வயிறும் நிறைந்து அனைவரும் உறங்கினர். 

 

ரதியை தன் மார்பின் மேல் போட்டுக் கொண்டு ரகு உறங்க, அவனை ரசித்தபடி ரதி விழித்திருந்தாள். 

 

இருவரும் மாறி மாறி உறங்கா விரதமிருக்கிறார்கள், தங்களின் இணையின் அருகாமையை ரசித்தபடி…. 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்