Loading

20 – வலுசாறு இடையினில் 

 

“ஜோசியரே.. இது என் பேரன் ஜாதகம் .. இது பேத்தி ஜாதகம் .. ரெண்டு பேருக்கும் எந்த நேரத்துல கல்யாணம் பண்ணா நல்லதுன்னு  சொல்லுங்க”, என கேட்டபடி நீலா ஆச்சி நமது ஜோசியரிடம் இருந்த நங்கை ஜாதகத்தை எடுத்து கொடுத்து கேட்டார். 

 

“அம்மா .. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமா? ஏகாம்பரம் வரலியா ?”, என ஆவலுடன் கேட்டார். 

 

“அவரு வேற வேலையா இருக்காரு.. இன்னிக்கி மூணாம் நாள் கல்யாணம். நேரம் மட்டும் நீங்க குறிச்சி குடுங்க”, என சிரித்தபடி கேட்டார். 

 

“என்னம்மா சொல்றீங்க? நாளு நட்சத்திரம் எல்லாம் பாத்து தானே சொல்ல முடியும். நேத்து இரத்தினம் ஒரு முகூர்த்தம் குறிச்சிட்டு போனரே .. அது யாருக்கு?”, என குழப்பத்துடன் கேட்டார். 

 

“யாரோ யாருக்கோ குறிச்சிட்டு போனத பத்தி இப்போ ஏன் பேசணும்? என் பேரனுக்கு இப்போ பாருங்க. நேரம் கம்மியா இருக்கு. நான் இனிமே தான் தாலி செய்ய சொல்ல போகணும்.. “, என அவரை வேறு எதுவும் பேச விடாமல் அவசரப்படுத்தினார். 

 

“இருங்க மா.. பாத்துடறேன்.. ஏகாம்பரம் ஒரு வார்த்தை சொல்லல பாருங்க .. அவரு பொண்ணுக்கு நானும் தான் வரன் தேடிட்டு இருக்கேன்”, என மீண்டும் அதே புரணத்தை பாட ஆரம்பித்தார். 

 

“ஜோசியரே.. அவரு கல்யாண வேலைல பிசி.. அதான் நாங்க வந்துட்டோம்ல .. நீங்க சீக்கிரம் முகூர்த்தம் பாருங்க”, என வட்டி ஒரு பக்கம் பேசினான். 

 

“ரெண்டு ஜாதாகமும் அம்சமா பொருந்தி இருக்கு.. காலைல பத்து மணிக்கு மேல நேரம் நல்லா இருக்கு மா.. எங்க கல்யாணம் வச்சி இருக்கீங்க?”, என நேரத்தை கூறிவிட்டு கேட்டார். 

 

“நம்ம கோவில்ல தான். மறக்காம வந்துடுங்க ..  பந்தல் போட்டு பெருசா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இருக்கோம் … நாங்க விருந்துக்கு தான் எல்லாரையும் கூப்பிட போறோம்.. அப்போ வந்து மொறையா அழைக்கறேன் ஜோசியரே .. “, என கூறிவிட்டு தட்சணையை அள்ளி வைத்து கொடுத்துவிட்டு சென்றார் ஆச்சி. 

 

“ஏன் ஆச்சி அந்த ஆள பாட்டுக்கு கல்யாணத்துக்கு வா ன்னு சொல்லிட்டு வர.. நமக்கே கல்யாணம் எங்க எப்டி நடக்கும்னு தெரியாது.. இதுல இந்த நேரம் பாக்கறது  எல்லாம் தேவையா?”, என வட்டி கேட்டான். 

 

“எல்லாமே நேரம் காலம் பாத்து தான் டா நடக்கணும். நான் சொல்ற நேரத்துல பொண்ண கொண்டு வந்து மணமேடைல ஒக்கார வைக்க வேண்டியது உங்க வேலை.. நம்ம வீட்டு பொண்ண ரொம்ப தவிக்க விடக்கூடாது.. “, என ஆச்சி கூறிவிட்டு நகை கடைக்கு சென்றார். 

 

“ம்க்கும் .. நீயும் உன் பேரனும் பண்ற அழிச்சாட்டியம் இருக்கு பாரு.. அந்த ராஜதுரை பையன் என்ன ஆக போறானோ? “, என அவனை நினைத்து கவலை கொண்டான் வட்டி. 

 

“எந்திரிச்சே நிக்க முடியாதவனுக்கு இப்ப எதுக்கு டா கல்யாணம் ? ஊர்ல வேற பொண்ணா இல்ல? அந்த எடுபட்டபய சொல்றான்னு இந்த தங்கதுரை ஏன் கூட சேர்ந்து ஆடறான்?”, ஆச்சி அவர்களை வறுத்தார். 

 

“யாருக்கு தெரியும்? ஏதோ டீலிங்க் ஓடுது ஆச்சி.. “

 

“ஆமா டா .. காலம் காலமா உங்களுக்கு நடுவுல நடக்கற டீலிங்குக்கு நாங்க பலி ஆகணுமோ ?”, என வெறுப்புடன் கேட்டார் ஆச்சி. 

 

“நீங்க தானே ஆம்பள தான் ஒசத்தி ஒசத்தின்னு தலைல தூக்கி வச்சி வளத்தறீங்க.. அதான் பூரா பயலும் உங்கள பொருளாக்கி வேடிக்க பாக்கறான்..”

 

“அது என்னமோ உண்ம தான் டா.. யாரு அப்புடி ஒரு வழக்கத்த ஏற்படுத்தினாங்கன்னு இப்ப வரைக்கும் புரிபடல.. இந்த காமாட்சி மாதிரி ஏகாம்பரம் பொண்டாட்டி கணக்கா யாராவது அப்ப இருந்து இருப்பாங்க போல எல்லா ஜன கூட்டத்துளையும்.. அதான் அந்த வழக்கம் எல்லா ஊருளையும் இருக்கு .. சரி நம்ம கதைக்கு வருவோம்.. என் மருமக நகை எல்லாம் பாலிஷ் போட்டாலும் சரி அழிச்சிட்டு புதுசா பண்ணாலும் சரி.. பரம்பர நகைய மட்டும் மாத்தாம மிச்சம் எல்லாம் அவன் இஷ்டத்துக்கு பண்ணிக்க சொல்லு.. இந்த பொட்டில தான் எல்லாம் இருக்கு. நான் தாலி செய்ய குடுத்துட்டு பொடவை எடுக்க போறேன்.. வந்து என்னைய தொந்தரவு செஞ்சா கொன்றுவேன் பாத்துக்க .. “, என ஒரு பழங்கால பெரிய மர பெட்டியை கொடுத்தார். உடன் வேறு ஒரு பெட்டியும்  இருந்தது. 

 

“நீ மட்டுமா சேலை எடுக்க போற?”, அவற்றை எல்லாம் சரி பார்த்து கொண்டு கேட்டான். 

 

“ஆமா டா.. வினிதா புள்ள வாறேன்னு சொல்லி இருக்கு”

 

“சரி .. அந்த புள்ளைக்கும் ரெண்டு பொடவ எடுத்து குடு..”

 

“எனக்கு தெரியும் டா பேராண்டி.. என் வீட்டு ஜீவன வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற புள்ள அது.. அத சும்மா வெறுங்கையோட விடுவனா? அந்த புள்ள கல்யாணத்துல அப்பன் வீட்டு சீரூ எல்லாமே நம்ம தான் பண்ண போறோம். நேத்தே சிம்மன் சொல்லிட்டான்..” , என முகம் முழுக்க விகசித்த புன்னகையுடன் கூறினார் ஆச்சி. 

 

“நேத்து தான் அப்பத்தாவும் பேரனும் ஒண்ணு சேந்தீங்க அதுக்குள்ள இவ்வளவு பேசியாச்சா ?”, என வட்டி கிண்டல் செய்தான். 

 

“கண்ணு வைக்காத டா .. கடை வந்துரிச்சி நிப்பாட்டு வண்டிய “

 

“வாங்க மா.. காலைலயே வந்து இருக்கீங்க.. என்ன வேணும் சொல்லுங்கம்மா?”, கடை முதலாளி பவ்வியமாக நின்று கேட்டார். 

 

“தாலி செய்யணும்.. நம்ம குடும்ப முறை தெரியும் ல?”

 

“தெரியும் மா.. யாருக்கு கல்யாணம்? நம்ம வர்மன் தம்பிக்கா ?”, என அவரும் அடுத்த கேள்வி கேட்டார். 

 

“இவனுங்கள.. வேலை சொன்னா அத செய்யாம நம்மலையே கேள்வி மேலே கேள்வி கேக்கறாங்க.. இப்போ என்ன சொல்றது ஆச்சி?”, வட்டி அவரின் காதை கடித்தான். 

 

“ஆமா பா .. என் பேரனுக்கு தான்.. நாளைக்கு வேணும்.. கொஞ்சம் அவசரம் தான். யாருக்கும் சொல்லல.. ஊர் விருந்துல தான் எல்லாருக்கும் சொல்லணும். கொஞ்ச நேரத்துல என் பேரன் வருவான். அவன் இஷ்டபடி நகை எடுக்கட்டும். பரம்பர நகைக்கு மட்டும் மொளாம் பூசணும்.. அவங்கிட்ட எதுவும் கேக்கவேணாம் .. பொறுமையா நான் இன்னொரு நாள் வரேன் .. சரியா?”, என ஆச்சி அவர்கள் அடுத்து எதுவும் பேசமுடியாதபடி பேசி முடித்தார். 

 

“சரிங்க மா .. இப்போ நல்ல நேரம் தான். ஒடனே நான் ஆசாரி கிட்ட சொல்லி செய்ய சொல்றேன். நாளைக்கு விடி காலைல தயாரா இருக்கும். எத்தன பவுனு மா கொடிக்கு போடலாம்?”, என தன் வேலைக்கான விவரங்களை கேட்டார். 

 

“நல்ல புது டிசைனா செய்ங்க.. பேரன் கொடி டிசைன் பாத்து சொல்வான். ரொம்ப பெருசா கழுத்துல தெரிய வேணாம். கணமா இருந்தாலும் சுத்தளவு சின்னதா இருக்கட்டும்… என் பேரன் விருப்பம் தான் அதுவும்”, என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். 

 

வர்மன் சில நிமிடங்களில் அங்கே வந்தவன் அனைத்தையும் அலசி ஆராய்ந்து விட்டு, நங்கைகக்கு எது பொருந்தும்? எது பொருந்தாது என யோசித்து அவளுக்கு தேவையான அனைத்தும் வாங்கினான். 

 

“மச்சான் .. கடைய எழுதி வாங்கிடுவீங்க போலவே ?”, வட்டி கேலி செய்தான். 

 

“உன் தங்கச்சி மட்டும் என்னய ஏத்துகிட்டா சொரங்கம் கூட தோண்ட நான் ரெடி மாப்ள ..”, என வர்மன் லேசாக நகைத்தபடி கூறினான். 

 

“சரிதான்.. இங்கயும் இனி மீனாட்சி ஆட்சி தான்”, என இருவரும் கேலி செய்தபடி அனைத்தும் வாங்கி முடித்து அங்கிருந்து கிளம்பினர். 

 

“பாட்டி.. இந்த நெறம் அவளுக்கு நல்லா இருக்கும்.. இது அவளுக்கு பிடிக்கும்.. இது அவளுக்கு பிடிக்காது.. இப்டி இருந்தா அவ கட்டுவாளான்னு தெரியாது..”, என வினிதா ஆச்சியை ஒரு வழி செய்து கொண்டு இருந்தாள். 

 

“எல்லாத்தாயும் அவ ஒரே நாள்ல கட்ட போறது இல்ல டி .. முகூர்த்தத்துக்கு மட்டும் நீ இப்ப பாரு.. அதுலாம் அவல கூட்டிட்டு வந்து பாத்துக்கலாம்”, என கலைத்து அமர்ந்து கூறினார் ஆச்சி. 

 

“அவல கூட்டிட்டு வந்து எப்ப எடுப்பீங்க? வாய தொறந்து எதையும் கேக்கமாட்டா பாட்டி அவ.. எல்லாத்தாயும் மனசுல வச்சி மருகி மருகி ஒடம்பு தான் எளைக்கும்.. அதுவும் இந்த கூத்துல நானும் இருக்கேன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவாளோன்னு பயமா இருக்கு பாட்டி..”, என கடைசி வரிகளை மட்டும் அவரின் அருகில் வந்து கூறினாள். 

 

“அதுலாம் நான் பாத்துக்கறேன் .. நீ இப்ப ஒரு இருவது பட்டு, அப்பறம் அந்த பேன்சி பொடவ ஒரு இருவது, அப்பறம் தினம் போட சுடிதாரு, சாதா பொடவ எல்லாம் கொஞ்சம் எடு.. மிச்சம் அப்பறம் பாத்துக்கலாம்..”. என அவளை வேறுபக்கம் அனுப்பி விட்டு முகூர்த்த புடவை அவரே எடுத்தார். 

 

“அப்பா .. ஈஸ்வரா.. நல்லபடியா என் பேர புள்ளைங்களுக்கு இந்த கல்யாணம் நடந்து ரெண்டு பேரும் சந்தோஷமா நிறைஞ்சி வாழணும்”, என மனதிற்குள் வேண்டியபடி அவரும் அடுத்த வேலையை கவனிக்க சென்றார். 

 

வர்மனிடம் அடிவாங்கிய கோபத்தில் போதை மருந்து உட்கொண்டு கிடந்த ராஜனை, அவர்கள் கடையில் வேலை பார்க்கும் ஒருவன் வந்து வீட்டில் கொண்டு வந்து விட்டான். 

 

“அம்மா.. ஐயா ..”, என வெளியில் ராஜனை திண்ணையில் படுக்க வைத்துவிட்டு உள்ளே குரல் கொடுத்தான். 

 

“யாருப்பா?”, என கேட்டபடி வேணி வெளியே வந்தார். 

 

“அம்மா இல்லைங்களா ?”, என தயக்கத்துடன் கேட்டான். 

 

“என்ன பச்ச.. இந்த நேரத்துல வந்து இருக்க?”, என கேட்டபடி காமாட்சி வெளியே வந்தார். 

 

“நம்ம தம்பி ..” என ஆரம்பித்து அதற்கு மேல் எப்டி கூறுவது என தெரியாமல் தயங்கி  ராஜன் படுத்து இருக்கும் திண்ணையை கைக்காட்டினான். 

 

“அய்யோ .. என் புள்ளைக்கு என்ன ஆச்சி? என்ன இப்டி அடிபட்டு இருக்கு? ஏன் கண்ணு எல்லாம் மேல சொருகி இருக்கு?”, என பதற்றமாக கேட்டார். 

 

“கள்ளிகாட்டுக்கு பக்கத்துல தம்பி விழுந்து கெடந்துச்சிம்மா .. எவ்ளோ எழுப்பியும் கண்ண தொறக்கல.. எனக்கு பயமா போச்சி அதான் வீட்டுக்கு தூக்கி  வந்தேன். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க மா.. தம்பி இப்டி இருக்கறது பாத்தா பயமா இருக்கு”, என அவன் மனதில் பட்டத்தை கூறினான். 

 

இதற்கு இடையில் வாணி தண்ணீர் கொண்டு தெளித்து அவன் வாயில் புகட்ட முயன்றும் எதுவும் பயனளிக்கவில்லை. வேம்பு பாட்டியும் காமாட்சியின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார். 

 

அங்கிருந்த ஆட்களை வைத்து வாணி தான் அவனை மருத்துவமனை தூக்கி கொண்டு சென்றார். நங்கையும் உடன் சென்று மருத்துவரிடம் விவரம் கேட்க வெளியே நின்றாள். 

 

சிகிச்சை முடிந்து வெளியே வந்த மருத்துவர், “பையன் கைல நெறைய பணம் குடுப்பீங்களாம்மா?”, என கேட்டார். 

 

“அவன் செலவுக்கு கேக்கறப்ப குடுக்கறது தான்.. இப்போ அவன் எப்டி இருக்கான் ? “, என காமாட்சி தவிப்புடன் கேட்டார். 

 

“கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவான்.. “, என அவர் கூறிவிட்டு நங்கையை வரும்படி அழைத்தார். 

 

“டாக்டர்..”, என நங்கை ஆரம்பிக்கும் முன், “ இங்க பாருங்கம்மா.. பதினாறு வயசு பையன் கைல தேவைக்கு அதிகமா பணம் குடுத்தா இப்டி தான் ஆவாங்க.. ஹை ஆல்கஹால் கன்ஸ்யூம் செஞ்சி இருக்கான். போலீஸ் கேஸ் தான் குடுக்கணும். இது இவனுக்கு எங்க கெடச்சதுன்னு  தெரியல”, என டாக்டர் பொறிய தொடங்கினார். 

 

“டாக்டர்.. அவனுக்கு யாராவது தெரியாம குடுத்து இருக்கவும் வாய்ப்பு இருக்கு. போலீஸ் வரைக்கும் இப்ப போகவேணாம்.. “, என வாணி முந்திக்கொண்டு பேசினார். 

 

“சரி.. ரெண்டு மணிநேரம் கழிச்சி கூட்டிட்டு போகலாம்.. இன்னொரு முறை இப்டி வந்தா நானே போலீஸ்க்கு  கால் பண்ணுவேன்”, என எச்சரித்து அனுப்பி வைத்தார். 

 

அங்கே காமாட்சி கண்ணீருடன் மகன் அருகில் அமர்ந்து தலை கோதிகொண்டு இருந்தார். 

 

“இவன் எந்த ஸ்கூல் படிக்கறான் தமிழு?”, வாணி கேட்டார். 

 

“நம்ம ஊர்ல தான் சித்தி.. ************** ஸ்கூல்”

 

“சரி .. அம்மாக்கு இதுலாம் தெரிய வேணாம்.. உங்கப்பா எங்க இன்னும் காணோம்?”, என கேட்டார். 

 

“தெர்ல சித்தி..”, என கூறிவிட்டு அமர்ந்தாள். 

 

“தமிழு உன் ஃபோன் குடு.. சித்தப்பாக்கு ஃபோன் பண்ணனும் ..” 

 

“என்கிட்ட ஃபோன் இல்ல சித்தி.. வீட்ல லேண்ட்லைன் தான் இருக்கு.. ராஜன் கிட்ட ஃபோன் இருக்கும் .. அவன் பேண்ட் ல இருக்கா பாக்கறேன்” , என எழுந்து உள்ளே சென்று அவன் தொலைபேசி இருக்கிறதா என்று பார்த்தாள். 

 

அவனின் எந்த பொருளும் அவனிடம் இல்லையென அப்போது தான் அவனின் தாயும் கவனித்தார். யாரோ நகைகளுக்காக அவனை போதை பொருள் எடுக்க வைத்து திருடியதாக அவர்களே ஒரு முடிவுக்கு வந்தனர். 

 

“யாரோ களவாணி பய என் மகனுக்கு என்னமோ குடுத்து எல்லாத்தாயும் திருடிட்டான் போலவே.. என் புள்ளைக்கு எதுவும் ஆகக்கூடாது ஆத்தா”, என காமாட்சி மீண்டும் ஒப்பாரி வைத்தார். 

 

“அக்கா.. சும்மா ஏன் அழுவுற? அதன் டாக்டர் அவனுக்கு ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டாரே .. அமைதியா இரு.. பையன் தூங்கட்டும்.. வா வந்து வெளிய ஒக்காரு”, என வாணி அவரை அமைதிபடுத்து வெளியே அழைத்து சென்றார். 

 

“நிஜமா திருட தான் இப்டி நடத்து இருக்குமா?”, என நங்கையும் தனக்குள் யோசித்தபடி ஹாஸ்பிடல் போனில் இருந்து வினிதாவிற்கு அழைத்தாள். 

 

“ஹலோ .. யாரு ?”, வினிதா. 

 

“வினி.. நான் தான் டி நங்கை.. நான் ************* ஹாஸ்பிடல்ல இருந்து பேசறேன்”, என நங்கை கூறியதும்,” ஓடி போக ஏன் ஹாஸ்பிடல் போற நங்க? பஸ் ஸ்டாண்ட் போக வேண்டியது தானே?”, என வினிதா கேட்டாள். 

 

“எருமா மாடே.. வாய மூடு. நான் சும்மா சொன்ன நீ நிஜமா என்னய பஸ் ஏத்தி அனுப்பிடுவ போல? இந்த ராஜன இங்க சேத்தி இருக்கு”, என அவளை திட்டிவிட்டு விவரம் கூறினாள். 

 

“அவன யாரு போதை மருந்து குடுத்து தூக்கிட்டு போக போறா? மிஞ்சி போனா 5 பவுன்.. அதுக்கு அந்த திருடன் இவ்ளோ செலவு செஞ்சி இவன தூக்கிட்டு கள்ளிக்காடு வரைக்கும் வேற போவானா ? இந்த எருமையே தான் ஏதாவது குடிச்சிட்டு அங்க போய் விழுந்து இருக்கும். போதைல இருக்கறவன் கிட்ட எவனோ ஆட்டைய போட்டு இருக்கான்..”, என வினிதா தனக்கு தோன்றியத்தை கூறினாள். 

 

“நானும் அப்டிஉ தான் நினைச்சேன் வினி.. ஆனா அம்மா இப்டி  பொலம்பிச்சா  அதன் இப்பிடியும் நடக்க வாய்ப்பு இருக்குன்னு நினைச்சேன்”

 

“அவன் சாராய பாட்டில் ல சாராயம் குடுச்சா கூட உங்கம்மா அவன் பச்ச தண்ணி தான் குடிக்கறான்ன்னு சூடம் அணச்சி சத்தியம் பண்ணுமினு உனக்கு தெரியாதா?”

 

“சரி என்னமோ இருக்கட்டும். என் அப்பாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்த சொல்லி இங்க வர சொல்லு..”, என நங்கை அடுத்த பேசிச்சிற்கு சென்றாள். 

 

“வீட்டுக்கு போய் நீங்க யாரும் இல்லைன்னா அங்க வந்து சேருவாரு.. என்னையெல்லாம் உங்கப்பனுக்கு ஃபோன் பண்ண சொல்லாத… நான் கடுப்புல ஏதாவது சொல்லிடுவேன்”

 

“சும்மா ஸீன் போடாம ஃபோன் பண்ணு டி.. என்னமோ எங்கப்பாவுக்கு தெரியாம எனக்கு நீ நல்ல வாழ்க்கை அமச்சி குடுத்துருவ? வாய் பேசாம சொல்றத பண்ணு.. நான் வீட்டுக்கு வந்துட்டு கால் பண்றேன்.. பை”, என நங்கை ஃபோன் கட் செய்து விட்டு சித்தியிடம் சென்றாள். 

 

“சித்தி.. “

 

“வா தமிழு. உங்க அப்பாகிட்ட பேசிட்டியா?”, என கேட்டார் வாணி. 

 

“இல்ல சித்தி அவருக்கு லைன் கிடைக்கல. என் ஃப்ரெண்ட்க்கு ஃபோன் பண்ணி விஷயம் சொல்லிட்டேன். அவ அப்பா கிட்ட சொல்லிடுவா..” ,என கூறியபடி இருவரும் மருந்துக்கடை வந்து நின்றனர். 

 

டாக்டர் எழுதி கொடுத்த மருந்து மாத்திரை வாங்கி கொண்டு ராஜன் இருக்கும் அறைக்கு இருக்கும் பக்கம் நடக்க ஆரம்பித்தனர்.  

 

“ஏன் தமிழு உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா?”, என வாணி மெதுவாக நடந்தபடி கேட்டார். 

 

“இப்போ கேட்டு என்ன ஆக போகுது சித்தி? எல்லாம் விதி படி தானே நடக்கும். இந்த ஊர்ல பொண்ணா பொறந்ததுக்கு நான் எதுவும் ஆச படக்கூடாது.. எதுவும் என் விருப்பபடியும் நடக்காது”, என விரத்தியுடன் கூறினாள். 

 

“ஏன் தமிழு இப்டி பேசற?”, வாணி அவளின் குரலில் இருக்கும் வலியும் விரக்தியும் கண்டு கேட்டார். 

 

“நீங்க வெளி ஊர்ல இருக்கீங்க சித்தி. அதனால உங்களுக்கு இந்த ஊரு ஆளுங்கள பத்தி தெரியாது. எங்கப்பாவ பத்தியும் தெரியாது. விடுங்க.. என் நிலைமை மாற போறது இல்ல. நீங்க இப்ப எந்த ஊர்ல இருக்கீங்க சித்தி?”, என வேறு பேச்சை ஆரம்பித்தாள். 

“உன் சித்தப்பா எப்பவும் ஊரு ஊரா சுத்திக்கிட்டு தான் இருப்பாரு. ஒண்ணும் சொல்லவும் முடியாது. அரசாங்க உத்தியோகம். அவன் இங்க போ.. அங்க போன்னு சொன்னா போய் தான் ஆகணும் ..”

 

“என்ன வேலைல இருக்காரு சித்தப்பா? நான் சின்ன பொண்ணா இருந்தப்போ பாத்தது. உங்கலையும் இப்ப தான் உங்க கல்யாணத்துக்கு அப்றம் பாக்கறேன்”

 

“ஹாஹாஹா.. என்ன செய்ய தமிழு.. கல்யாணம் முடிஞ்ச கையோட வடநாட்டு பக்கம் மாற்றல் வந்துச்சி.. இப்போ தான் ஒரு ஆறு மாசமா இந்த பக்கம் வந்து இருக்கோம். எப்ப வேணா பொட்டிய தூக்க சொல்லிட்டு வருவாரு. நானும் எல்லாத்தாயும் தயாரா வச்சி இருக்கணும்”, என பெருமூச்சு விட்டபடி கூறினார் வாணி. 

 

“இப்போ என் கல்யாணத்துக்கு வருவாரா சித்தி சித்தப்பா?”

 

“தெரியல தமிழு.. முன்ன போ நான் அப்றம் வரேன்னு தான் என்னைய அனுப்பி வச்சாரு.. வருவாருன்னு தான் நெனைக்கறேன்.. நீ இங்க அம்மாவ கெளம்ப ரெடி ஆகிய சொல்லு.. நான் டாக்டர ஒரு தடவ பாத்துட்டு வந்துடறேன் ..”, என கூறிவிட்டு டாக்டர் அறைக்கு நடந்தார் வாணி. 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்