Loading

அத்தியாயம் 2

திடீரென்று குறுக்கே வந்து நின்ற இரு சக்கர வாகனத்தைக் கண்டதும் ப்ரேக் போட்ட காரோட்டி,
“யாருப்பா அது? ” அந்நபருக்கு அடி எதுவும் பட்டிருக்கிறதா? என்று பதறிப் போய் வந்தார்.

அதற்குள் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்த யக்ஷித்ராவும், நேத்ராவும் கூட அதிர்ந்து விட்டனர்.

“நீ இரு நேஹா! நான் பாத்துட்டு வர்றேன்” என்று வேகமாக காரிலிருந்து இறங்கினாள்.

“அடி படலயேங்க? ஏன் இப்படி ஸ்பீடா வந்தீங்க?”
நேஹாவின் கணவர் அற்புதனிடம் கேட்க,

அற்புதன், ” ரியலி சாரி சார்!” இவன் மன்னிப்பு வேண்ட,

அவர்களிடம் வந்த யக்ஷித்ரா தன் கணவன் அங்கே நிற்கவும், அவனுக்குக் காயம் எதுவும் ஏற்பட்டுள்ளதா? என்று கவனமாக ஆராய்ந்தாள்.

” காயம் எதுவும் ஆகலைல ? ” அவனருகில் சென்று பதட்டத்துடன் விசாரித்தாள்.

அப்போது தான் அற்புதனுக்குமே ‘அப்பாடா’ என்று மூச்சு விட முடிந்தது.

மனைவி நல்லபடியாகத் தான் இருக்கிறாள் என்று ஆசுவாசமடைந்தவன்,
“இல்லை யக்ஷி.காம் டவ்ன்.நீ ஃபைன் தான?”

“நான் நல்லா தான் இருக்கேன் ங்க” இவர்கள் சம்பாஷித்துக் கொண்டிருக்கையில் நேஹா கையில் குழந்தையுடன் வந்தாள்.

” என்னாச்சு யக்ஷி?” யக்ஷித்ராவிடம் கேட்டவாறே எதிரிலிருப்பவனைப் பார்க்க, அது அவளது கணவன் என்று தெரிந்ததும்,

” அற்புதன் சார்! நீங்க தான் காருக்கு முன்னாடி திடீர்னு வந்தீங்களா ? ஒன்னும் ஆகலயே? ” அவளும் பதறி விசாரிக்க,

“இல்லங்க ” – அற்புதன்.

“தாங்க் காட்! வீட்டுக்கு வந்துருவா தானே? அதுக்குள்ளத் தேடி வந்துட்டிங்க!”

என்று அவள் குறும்புடன் கேட்டாள்.

“ஹி ஹி! அது அவ ஃபோன்ல கத்துற சத்தம் கேட்டுச்சு அதான்”

“ஓஹோ! அதுக்குக் காரணம் இந்தப் பாப்பா தான்”  தூக்கி வைத்திருக்கும் மகளைக் கண்களால் காண்பித்தாள் நேஹா.

“ம்ம்.குட்டிப் பாப்பா என்னோட முடியைப் பிடிச்சு இழுத்தா. அதான் கத்திட்டேன். அதுல மொபைல் கீழே விழுந்துருச்சு” என்று யக்ஷித்ரா கூற,

நேஹா, ” உங்க வொய்ஃப் நல்லா இருக்காங்க. உங்க மேரேஜ் ஃபோட்டோவை யக்ஷித்ரா மெபைல்லப் பாத்துருக்கோம். இப்போ தான் நேர்ல மீட் பண்றோம். மீட் மை ஹஸ்பண்ட் மிஸ்டர். ஹரி. அண்ட் மை டாட்டர் தர்ஷா”

என்று அறிமுகம் செய்தாள்.

அவளது கணவனைப் பார்த்து, “ஹாய் ப்ரோ! ” என்று வணக்கம் தெரிவித்து, குண்டுக் கண்களால் தன்னைப் பார்க்கும் குட்டிப் பாப்பா திஷாவைத் தலையில் தடவிக் கொடுத்துக் கொஞ்சினான். 

” ஹலோ” என்று ஸ்ரீயும் ஸ்நேகப் புன்னகை வீசினார்.

“உங்க பைக் – லயே நான் வீட்டுக்கு வந்துடறேன் ங்க. ஸாரி நேஹா..! ” தோழியிடம் கெஞ்ச,

“தட்ஸ் ஓகே யக்ஷித்ரா. போய்ட்டு வா. பாய்”

நேஹா, ஸ்ரீ மற்றும் அவர்களது குழந்தையிடம் விடைபெற்று இவர்கள் பைக்கில் செல்லும் பொழுது,

“உங்களைப் பயமுறுத்திட்டேனோ?” – யக்ஷித்ராவின் குரலில் மன்னிப்புக் கோரலின் சாயல் தெரிய,

“ரொம்பவே பயந்துட்டேன்..! பட் சாரி திடீர்னு நான் அங்க வந்தது உனக்கு அன்கம்ஃபர்டபிளாகி இருக்கும்”

“அப்படி நானும் நினைக்கல. அவங்களும் நினைச்சுருக்க மாட்டாங்க “

” உங்களுக்கு அடி எதுவும் படல தான? ” இம்முறையும் அதே கேள்வியைக் கேட்டவளது தவிப்பை உணர்ந்தான் அற்புதன்.

“இல்ல ம்மா. அதுக்குள்ள தான் நானும் வண்டியை நிறுத்திட்டேன். அவரும் காரை ஸ்டாப் பண்ணிட்டாரே”

“இனிமே நான் வேலைக்குப் போகக் கூடாது – ன்ற கண்டிஷனை எதிர்பார்க்கனுமோ?”

பின்னாலிருந்து பேசுபவளைத் திரும்பிப் பார்க்க   நினைத்தாலும் அவள் கேட்டதற்குப் பதிலை வீட்டிற்குச் சென்றதும் சொல்ல நினைத்தான்.

‘பதிலையேக் காணோம்? மௌனம் சம்மதமோ! ப்ச்.. இப்படியே நினைச்சுத் தான் எதையும் வெளிப்படையாப் பேசித் தீர்த்துக்காம இருந்துடறோம்’

” நீ போய் கதவைத் திற. நான் பைக்கைப் பார்க் பண்ணிட்டு வர்றேன் “

இவளும் தனது கைப்பையில் இருந்த சாவி கொண்டு வீட்டைத் திறந்தாள்.

தண்ணீர் குவளைக் கண்களுக்குத் தென்பட்டதும் அதில் நீரை நிறைத்து,
வாயில் சரித்துக் கொண்டாள்.

அற்புதன் உள்ளே வந்ததும் அவனுக்கும் ஒரு குவளையில் நீரை நிரப்பிப் பருக கொடுத்தாள்.

அதை வாங்கிக் குடித்து முடித்தவுடன்,
” நீ வேலைக்குப் போகாதன்னு சொல்ல எனக்கு உரிமையில்லை ன்னு எப்பவோ சொல்லிட்டேன், சீக்கிரமா வீட்டுக்கு வா – ன்னு சொன்னதுக்கு ரீசன் : உன் மேல வச்சிருக்க அக்கறை தான். பொறுப்பே இல்லன்னு கூட சொல்லி இருக்கேன். அதுக்கு சாரி கேட்டுக்கிறேன். ஆனால் நீ கத்துனதும் என்னால பதறாம இருக்க முடில “

அதற்கு மேல் எதுவும் சொல்லாமல், அவளை மெதுவாக அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பு அவளுக்குத் தன்னவனுடைய தவிப்பை உணர்த்தியது.

” சாரி..” மிக மிருதுவாக முனகிய குரலில் அவனிடம் மன்னிப்புக் கேட்க, அற்புதன் அவளைக் குனிந்து பார்த்து,
” பரவாயில்லை ” என்று மட்டும் கூறி, அவளுடைய நெற்றியில் முத்தமிட்டான்.

ஜில்லென்றான மனதில் இவனளித்த நேசத்தை நிரப்பிக் கொண்டு, அவனுடைய அணைப்பிலிருந்து மெதுவாகத் தன்னை விடுவித்தவள்,

“டின்னர் செஞ்சுட்டீங்க போல! ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்”

இரவு உடை அணிந்து வந்து , டைனிங் டேபிளில் இருந்தப் பதார்த்தங்களைப் பார்வையிட்டாள்.

ஹாட் பாக்ஸில் இருந்த இட்லி, வெங்காய சட்னியையும் பார்த்தாள்.

சட்னியின் வாசனை அவளை உடனே சாப்பிட அழைப்பது போல் இருக்கவும் அவற்றைத் தட்டில் இடமாற்றினாள்.

தனக்கும் பரிமாறிக் கொண்ட அற்புதன்,
” அத்தையும், யாதவியும் சம்மதிச்சுட்டாங்களா யக்ஷி ?”

“இல்லை. நானும் விடாம கேட்டுட்டே தான் இருக்கேன் ங்க. அவங்க மனசு வைக்கிற மாதிரி தெரில.”

” அவங்க ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்காங்க. கொஞ்ச நாள் போகட்டும் ன்னு நாமளும் எவ்ளோ தான் வெய்ட் பண்றது? அப்பா, அம்மாவும் இதையே தான் கேட்டுட்டு இருக்காங்க. ஊருக்குப் போறதுக்கு முன்னாடி நாள் கூட பேசினோம்ல”

யக்ஷித்ரா, ” ஆமாம். நான் போய் பேசிக் கூட்டிட்டு வர்றேன் ங்க “

காலியானத் தட்டுகளையும், பாத்திரங்களையும் இருவரும் சமையலறை வாஷ்பேசினுள் வைத்து விட்டு , சயன அறைக்குள் வந்தனர்.

“அவங்க கண்டிப்பாக சம்மதிப்பாங்கள்ல அற்புதன்? “

நிச்சயமா ம்மா! நீ நாளைக்கேப் போய் பேசு. அத்தையையும், யாதவியையும் கன்வின்ஸ் பண்ணிடு. நானும் லீவ் போட்டுட்டு வர முடிஞ்சா வந்துடறேன்.இப்போ தூங்கு ம்மா ” அற்புதன் மனைவியின் கரங்களை மெல்லப் பற்றிக் கொண்டே தானும் தூங்க ஆரம்பித்தான்.

அவன் அளித்த நம்பிக்கை யக்ஷித்ராவையும் உறங்க வைத்தது.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்