1,630 views

“சார் என்னோட வேலை முடிஞ்சுருச்சு வீட்டுக்கு கிளம்புட்டுமா.”இரண்டு நாட்களாக அலுவலக வேலையில் சுழன்றவன் ஓய்வு எடுக்கவும், அன்னை அழைத்ததற்கான காரணத்தை தெரிந்து கொள்ளவும் விடை பெற உத்தரவு கேட்க,

 

“இது என்ன சந்திரா கேள்வி தாராளமா கிளம்பு. அப்புறம் ஒரு நாலு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வந்தா போதும். அதுவரைக்கும் இங்க நடக்க வேண்டியதை நான் பார்த்துக்கிறேன்.” என்றார் செல்வகுமார். 

 

அவரிடமிருந்து விடை பெற்றவன் கதவை திறக்கும் நேரம், உள்ளே வர கதவை திறந்தாள் அன்பினி சித்திரை. அக்னிசந்திரன் கதவை திறந்த வேகத்தில் முன்னே இருந்தவள் தடுமாறி அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டாள். மகள் விழுவதை பார்த்த செல்வகுமார் உதவிக்கு வருவதற்கு முன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

 

“ஏய் அடிமை! இந்த மாதிரி பண்ணதுக்கு தான அடி 

கொடுத்தேன் அப்ப கூட புத்தி வரலையா உனக்கு.” என்றவளை,

 

“என்ன சந்திராவ அடிச்சியா” என கோபமாக கேட்டார் செல்வகுமார்.

 

” அடிச்சியான்னு கேட்காதீங்க எதுக்கு அடிச்சேன்னு கேளுங்க ப்பா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பண்ணானே அதே மாதிரி ரெப்ரெஷ் ஆகலாம்னு பின்னாடி பக்கம் போகும் போது டச் பண்ணான். அதான் அடிச்சேன்.” என்றாள் கூலாக.

 

“யாரைப் பத்தி பேசுறன்னு தெரிஞ்சுட்டு பேசு.  சந்திரா நீ சொல்ற மாதிரி ஒரு நாளும் நடந்துக்க மாட்டான். உன்கிட்ட மட்டும் இல்ல வேற எந்த பொண்ணு கிட்டயும் தப்பா நடந்துக்க மாட்டான். ஒழுங்கா அவன் கிட்ட மன்னிப்பு கேளு.” கர்ஜனை விடாமல் தெறித்தது அவர் பேசிய தோரணையில்.

 

“வாட் நான்சென்ஸ்! இவன் என்னோட ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஒரு எம்பிளாய். கேவலம் இவன் கிட்ட மன்னிப்பு கேட்க சொல்றீங்க.” என்றதும்,

 

“அன்பினி திரும்பத் திரும்ப சந்திராவை பத்தி தப்பா பேசாத. பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன்.” என்றார் செல்வகுமார்.

 

“நீங்க என்னைக்கு பொண்ணுன்னு பார்த்து இருக்கீங்க எப்ப பாரு இவன் தான உங்களுக்கு பெருசா தெரியுறான். உங்களுக்கு வேணா இவன் பெரிய உத்தமனா இருக்கலாம் என்னை பொறுத்த வரைக்கும் இவன் ஒரு சீப் கேரக்டர்.” தந்தைக்கு போட்டியாக அவளும் குரலை உயர்த்திப் பேச,

 

“அன்பினினீனீ!” என மகளை அதட்டினார் .

 

“சார் கோபப்படாதீங்க பொறுமையா இருங்க.” தன் முதலாளியை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான் அக்னிசந்திரன். அதைப் பார்த்து இன்னும் கோபம் அதிகமானது அன்பினி சித்திரைக்கு. 

 

” நீ எதுக்கு சந்திரா அவ அடிச்சதை என்கிட்ட சொல்லல.” என ஆதங்கமாக கேட்பவருக்கு பதில் சொல்ல முயலும் முன்,

 

“என்னமோ நான் மட்டும் அடிச்ச மாதிரி சீன் போடுறீங்க அவனும் தான் என்னை அடிச்சான்.” என்று கடுப்பாக கூறினாள்.

 

“வாய மூடு அன்பினி அவனை பத்தி எனக்கு நல்லா தெரியும். வீணா பொய் சொல்லாத. பெண்களை மட்டும் இல்ல ஆண்களை கூட மரியாதையா நடத்துற ஆள் சந்திரா. அவன் உன்ன அடிச்சானா?” மகளிடம் கேள்வி கேட்க, அருகில் நின்றிருந்த அக்னிசந்திரனுக்கு சிரிப்பு தாங்கவில்லை.

 

அதை கண்டு கொண்டவள், “அப்பா அங்க பாருங்க எப்படி நக்கலா சிரிக்கிறான்னு. இவனா நல்லவன்” என்றவள் அவனை நோக்கி கையை காட்ட,

 

சிரித்தவன் முகம் சாதாரணமாக மாறி விட்டது. “டேய்! எதுக்குடா இப்படி நடிக்கிற.”என அவனை அடிக்க பாய்ந்தாள் அன்பினி சித்திரை.

 

அவளின் கைபிடித்து தடுத்தவர், “போதும் அன்பினி இதுக்கு மேல அவனை பத்தி எதுவும் பேசாத. எனக்கு உன்ன பத்தியும் தெரியும் அவன பத்தியும் தெரியும். இந்த கம்பெனிய நிர்வாகம் பண்ற உரிமை மட்டும் தான் உனக்கு இருக்கு. அவன் கிட்ட எந்த உரிமையும் இல்ல ஞாபகம் வச்சுக்க.” என்ற வார்த்தையில் உஷ்ணம் ஏற வேகமாக அங்கிருந்து வெளியேறினாள். 

 

கோபத்தில் கை கால்களை வீசி நடந்தவள் எதிரில் வருபவர்களை திட்டிக்கொண்டே படியிறங்கிக் கொண்டிருக்க, எதிரில் வந்து கொண்டிருந்தான் விக்ரம். அவனைப் பார்த்தும் கண்டு கொள்ளாமல் நகர்ந்தவளை,

 

“அன்பினி”என்று அழைத்தான் விக்ரம். 

 

நிற்காதவள் படி இறங்கிக் கொண்டு இருந்தாள். அவள் வேகத்திற்கு ஈடாகி நெருங்கியவன், “அன்பினி எதுக்கு இவ்ளோ கோவமா இருக்க என்ன ஆச்சு.” என்று விசாரித்தான். 

 

“விடு விக்ரம் நான் உனக்காக தான் சென்னைக்கு வந்தேன். இங்கு நடக்கிறதை பார்த்துட்டு பொறுமையா இருக்க முடியாது. நான் கிளம்புறேன் .”  உதறிக் கொண்டு நடந்தவளை வலுக்கட்டாயமாக நிறுத்தியவன் என்ன நடந்தது என்று விசாரித்தான்.

 

“அன்பினி வந்த ஒரு நாளுக்கே உனக்கு எப்படி இருக்குன்னா கடந்த ரெண்டு மாசமா நான் எவ்ளோ டார்ச்சர் அனுபவச்சிருப்பேன்னு யோசிச்சு பாரு. அப்பா கிட்ட ரொம்ப நல்லவனா நடந்துக்கிறான். ஆனா மனசுக்குள்ள என்னமோ திட்டம் வச்சிருக்கான். அனேகமா இந்த கம்பெனியை மொத்தமா ஆட்டைய போட தான் இந்த மாதிரி நடந்துக்கிறான்னு தோணுது. என்னால சமாளிக்க முடியலன்னு தான் உன்னை கூப்பிட்டேன். நீ என்னடான்னா வந்த அன்னைக்கே தெறிச்சு ஓடுற. அவ்ளோ தானா உன் வீரம்.” என்ற அண்ணனை,

 

“விக்ரம் என்னை பத்தி தெரிஞ்சுமா இப்படி ஒரு வார்த்தையை சொல்ற.” முறைப்போடு கேட்டாள்.

 

“வேற என்ன சொல்ல சொல்ற. அவனுக்கெல்லாம் நீதான் சரியான ஆளுன்னு நம்பி வர சொன்னேன். அவன ஓட வைப்பன்னு பார்த்தா நீ ஓடுற. பேசாம நானும் கிளம்புறேன் இந்த கம்பெனிய அவனே எடுத்துக்காட்டும்.”  விக்ரம் இப்போது படியிறங்க ஆரம்பித்தான்.

 

அவன் வார்த்தையில் இருக்கும் உண்மையை உணர்ந்தவள் தோல்வியை தழுவ விரும்பாது, “நில்லு விக்ரம்” என அண்ணனை தடுத்து நிறுத்தினாள்.

 

வீம்பு பிடித்தவன் அவள் பேச்சைக் கேட்காமல் இறங்க, “கொஞ்சம் மூட் அவுட் ஆகிட்டேன் வேற ஒன்னும் இல்ல. அவன இந்த ஆபீஸ விட்டு விரட்டிட்டு தான் நான் கிளம்புவேன் போதுமா.” என்ற பின் தான் அடங்கினான் விக்ரம். 

 

அக்னியை துரத்தும் வரை இருவரும் கண்கொத்தி பாம்பாக கண்காணிக்க வேண்டும் என தங்களுக்குள் ஒப்பந்த உடன்படிக்கை போட்டுக் கொண்டவர்கள்  மீண்டும் தந்தை அறைக்கு சென்றார்கள்.

 

அங்கு, “சாரி சந்திரா என் பொண்ணு இப்படி பண்ணுவான்னு  நான் எதிர்பார்க்கவே இல்லை. அவளுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.” என்று கைகூப்பும் முதலாளியின் கையை தடுத்தவன்,

 

“என்ன சார் நீங்க இப்படி எல்லாம் பண்ணி என்னை சங்கடப்படுத்துறீங்க. அவங்க பண்ணதை நான் அப்பவே மறந்துட்டேன் சார், விடுங்க.” என்று விட்டுக் கொடுத்த பெருமிதத்தோடு பேசிக் கொண்டிருந்தான் அக்னி சந்திரன்.

 

 

அவன் நடிப்பை பார்த்த அன்பினி உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள். அருகில் நின்றிருந்த விக்ரமுக்கும் நடந்தது தெரியும் என்பதால் அவன் தங்கையை பார்க்க, “இவனுக்குள்ள ஆயிரம் சிவாஜி இருக்காரு விக்ரம் ” என்று பொறுமினாள் .

 

இருவரும் நிற்பதை பார்த்த செல்வகுமார் முறைப்போடு தன் இருக்கையில் அமர்ந்துக் கொள்ள, “அப்பா நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல. பெத்த பிள்ளைங்களை அசிங்கப் படுத்துறீங்க அதுவும் எவனோ ஒருத்தன் முன்னாடி.” தந்தையின் உதாசீனத்தை பொறுத்துக் கொள்ள முடியாத விக்ரம் ஆதங்கத்தோடு வார்த்தையை விட்டான்‌.

 

செல்வகுமார் சந்தேகிக்கா வண்ணம் அவன் அருகில் நெருங்கிய அக்னிச்சந்திரன், “நான் வேணா முன்னாடி நிக்காம பின்னாடி நிக்கவா சின்ன முதலாளி.” எனக்கு கமுக்கமாக சீண்டினான்.

 

அண்ணன் தங்கை இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, “என் பிள்ளைங்களா இருக்கிறதால தான் நீங்க பண்றதை பார்த்துட்டு சும்மா இருக்கேன். அந்த பொறுமைய காப்பாத்திக்கிட்டா ரொம்ப நல்லது.” என்றவர் அக்னியிடம்,

 

“நீ கிளம்பு அக்னி டைம் ஆகுது.” என்றார்.

 

“எங்க?” என அன்பினி கேட்க,

“வீட்டுக்கு மேடம்.” என்று பவ்யமாக பதில் அளித்தான் அக்னி.

 

“உன்ன பத்தி அப்பா  பெருமையா பேசுறதை பார்த்து என்னமோன்னு நினைச்சேன். இப்படி பொறுப்பே இல்லாம கிளம்பி போற. அவ்ளோ தானா உன்னோட சென்சியாரிட்டி.” என்றவளை திட்ட வரும் செல்வகுமாரை தடுத்த அக்னி,

 

“இதுல என்ன மேடம் சென்சியாரிட்டி மிஸ் ஆச்சு. ரெண்டு நாளா நீங்க வர்றதால வேலைய கவனிச்சிட்டு இங்கயே இருந்துட்டேன். அதான் இப்போ வீட்டுக்கு போறேன் நாளைக்கு வந்துடுவேன்.” என்று விளக்கம் கொடுத்தான்.

 

“அதெல்லாம் சரிதான் ஆனா என்னால ஒரு நாளை வேஸ்ட் பண்ண முடியாது. இந்த ஆபிஸ பத்தின ஃபுல் டீடைல்ஸ் எனக்கு வேணும் அதெல்லாம் கொடுத்துட்டு நீ வீட்டுக்கு கிளம்பு.” என்றவள் தன்னறைக்குச் சென்று விட, அவள் பின்னால் விக்ரமும் சென்றான். 

 

 

செல்வகுமார் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லியும் கேட்காதவன் முழு தகவல்கள் அடங்கிய பென்டிரைவை எடுத்துக்கொண்டு அவள் அறைக்கு சென்றான். 

 

 

கதவை தட்டியவன் உள்ளே வரலாமா என்று உத்தரவு கேட்க, அவன் ஓசை கேட்டதும் கையில் இருக்கும் ஃபோனை காதிற்கு கொடுத்தவள்   பேச ஆரம்பித்தாள். பத்து நிமிடங்களுக்கு மேலாக காத்துக் கொண்டிருந்தவன் உத்தரவு கேட்காமல் உள்ளே நுழைந்தான். 

 

 

தன் உத்தரவு இல்லாமல் உள்ளே வந்தவனை பார்த்தவள், “அடிமை என் பர்மிஷன் இல்லாம எதுக்குடா உள்ள வந்த.” என அவன் அருகில் சென்றாள். 

 

“நீங்க தான மேடம் உள்ள வர சொன்னீங்க.” என்ற அக்னியின் வார்த்தையில்  நடப்பதை பாதியில் நிறுத்தியவள்,

 

“நான் எப்படா அடிமை சொன்னேன்.” என புரியாமல் கேட்டாள்.

 

“இப்பதான் மேடம் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி.” என்றவன் அவள் உத்தரவு இல்லாமல் இருக்கையில் அமர,

 

“உள்ள வர்றதுக்கே இன்னும் பர்மிஷன் தரல. இதுல  உட்கார வேற செய்ற எந்திரிடா.” என்று அவன் சட்டை கலரை பிடித்தாள். 

 

காலரில் இருக்கும் கைகளை இரும்பாக பற்றியவன் தோள் மீது வைத்து, “இங்க தான் மேடம் நேத்துல இருந்து வேலை பார்த்ததுல தோள்பட்டை ஒரே வலி அமுக்கி விடுங்க.” என்றவன் இரண்டு பட்டன்களை கழட்டி  சட்டைக்கு பின்னால் காலரை இறக்கி விட்டான்.

 

 

“என்னை என்ன உன் வீட்டு வேலைக்காரின்னு நினைச்சியா? மரியாதையா  வெளிய போடா.” என்று அவன் சட்டையை பிடித்து வெளியில் தள்ள முயற்சித்தாள்.

 

 

“மேடம் நீங்க தான என் மேல கைய வச்சிங்க. சரி பாசமா வைக்கிறீங்கன்னு அமுக்கி விட சொன்னேன் இது ஒரு தப்பா.” என்று சிரித்தான். 

 

“ஆமா நீ பெரிய ஆணழகன் பாரு உன் மேல ஆசைப்பட்டு கை வைக்க.” என்றதும்,

 

“அப்புறம் எதுக்கு மேடம் இன்னும் என்னை டச் பண்ணிட்டு இருக்கீங்க.” அவள் பிடித்திருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி கேட்டான் அக்னிசந்திரன்.

 

உடனே கையை எடுத்தவள், “மரியாதையா வெளிய போய் நில்லு நான் பெர்மிஷன் கொடுத்ததும் உள்ள வா.” என்று இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

 

 

சட்டையை சரிப்படுத்திக் கொண்டவன் முதலில் இருந்து ஆரம்பித்தான் கதவைத் தட்டி. இருக்கையில் அமர்ந்துக் கொண்டு கால் மேல் கால் போட்ட அன்பினி சித்திரை, “உள்ள வா அடிமை.” என்று உத்தரவு கொடுத்தாள்.

 

“சாரி மேடம் வந்து இருக்கிறது உங்க வீட்டு நாய் அடிமை இல்ல. இந்த ஆபீஸ் எம்டியோட பிஏ அக்னி சந்திரன். இப்ப சொல்லுங்க உள்ள வரலாமா.” என்று ஓசை வந்ததும் பற்களை பலமாக கடித்தாள். விட்டாள் மிக்ஸியில் போட்டு அரைத்தது போல் தூள் தூளாகி விடும் போல் அவள் பற்கள். 

 

 

தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள் “உள்ள வா” என்றாள்.

 

இந்த முறை பந்தாவாக உள்ளே நுழைந்தவன், “இந்தாங்க மேடம் நீங்க கேட்ட ஃபுல் டீடைல்ஸ் இதுல இருக்கு.” என்றான்.

 

அதை வாங்காமல் கைகளை கட்டிக்கொண்டு அவனை மேலிருந்து கீழாக பார்த்துக் கொண்டிருந்தாள் அன்பினை சித்திரை. பத்து நிமிடங்கள் அமைதியாக இருந்தவன் அவளுக்கு முதுகை காட்டியபடி நின்றான். 

 

அதில் குழம்பியவள், “என்ன பண்ற” என வினா தொடுக்க,

 

“இல்ல மேடம் ரொம்ப நேரமா முன்னாடி பக்கத்தையே ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க அதான் பின்னாடி திரும்பி நின்னு என் பின்னழகை காட்டுனேன். நல்லா பார்த்து எவ்ளோ மார்க்’னு சொல்லுங்கள் மேடம்.” என்றான் எகத்தாளம் துள்ள.

 

“ச்சீ!” என்றவள், “உனக்கு இருக்குடா பெரிய ஆப்பா.” என்றாள்.

 

“சீக்கிரமா உங்க அன்பு பரிச கொடுங்க மேடம். ஒரே ஆர்வமா இருக்கு.” என கண்கள் மின்ன திரும்பியவன், “உத்தரவு கொடுத்தீங்கன்னா நான் கிளம்பிடுவேன்.” என்றான்.

 

“கிளம்பலாம் என்ன அவசரம் அடிமை.  வந்து இதுல இருக்க டீடெயில்ஸ் எல்லாத்தையும் எக்ஸ்பிளைன் பண்ணு.” என்றாள் கால்களை ஆட்டிக் கொண்டு.

 

உதடு பிதுக்கியவன் “செஞ்சிட்டா போச்சு” என்றபடி அவள் அருகில் நின்றான். 

 

அன்பினி முறைக்க, “லேப்டாப் உங்க பக்கத்துல தான் இருக்கு இங்க நின்னு தான் எக்ஸ்பிளைன் பண்ண முடியும். கேட்டா கேளுங்க இல்லன்னா நான் கிளம்புறேன்.” என்று நகர பார்த்தான்.

 

“நின்னு தொல.”என்றவள் சற்று நகர்ந்து அமர்ந்தாள்.

 

“பாருடா மேடம் பவுச” என அவளை வெறுப்பேற்றினான். முறைத்து பார்த்தவளை கண்டு,

 

“ஸ்கிரீன் அங்க இருக்கு மேடம்.” என்றான் சிரிப்போடு. 

 

அதுவரை இருந்த விளையாட்டுத்தனங்களை கைவிட்ட அக்னிசந்திரன் பென்டிரைவை லேப்டாப்பில் இணைத்து அனைத்து தகவல்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சொல்ல ஆரம்பித்தான். செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் அவன் தீவிரமாக கத்திக் கொண்டிருக்க ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தாள் அன்பின் சித்திரை.

 

 

அதை கவனித்தவன் போனை பிடுங்கிக் கொள்ள, “அடிமை எதுக்குடா போன பிடுங்குன கொடு.” என்று அவன் கையில் இருந்தது பறிக்க முயன்றாள்.

 

“இங்க ஒருத்தன் தொண்டை தண்ணி வத்த கத்திக்கிட்டு இருக்கேன் நீ என்ன வேடிக்கை பாத்துட்டு இருக்க பைத்தியம்.” என்றதும் சுள்ளென்று   கோபம் வந்துவிட்டது அன்பினி சித்திரைக்கு.

 

“ஸ்டுப்பிட் இந்த மாதிரி வார்த்தையை என்கிட்ட யூஸ் பண்ணாத. அப்புறம் ஆம்பளன்னு கூட பார்க்க மாட்டேன் வாய கிழிச்சிடுவேன்.” என்றாள் விரல் நீட்டி.

 

அவளை ஒருமாதிரியாக பார்த்தவன் “மேடம் ஃபாரின் ரிட்டர்ன்னு  சொன்னாங்க குப்பத்து ராணி ரேஞ்சுக்கு வாய் போகுது.” என்றான் அந்தப் பார்வையை விடாது.

 

“உன் மூஞ்சிக்கு இந்த பேச்சே ரொம்ப அதிகம் மூடிக்கிட்டு எக்ஸ்ப்ளைன் பண்ணு. நான் கவனிக்கிறதும் கவனிக்காம போறதும் என்னோட விருப்பம். உன் வேலைய மட்டும் செஞ்சிட்டு போய்கிட்டே இரு.” உடனே பதிலடி கொடுத்தாள்.

 

அதன்பின் எதுவும் பேசாதவன் முழு தகவல்களையும் மூச்சு விடாமல் சொல்லி முடித்தான். கடைசி பத்து நிமிடங்களை மட்டும் கவனித்தவள் அவனை விடக்கூடாது என்பதற்காக வராத சந்தேகங்களை  கேட்க ஆரம்பித்தாள்.

 

 

மதியம் இரண்டு மணிக்கு கிளம்ப வேண்டியவன் ஆறு மணி ஆகிய பின்னும் கிளம்பவில்லை. ஒரே சந்தேகங்களை ஆயிரம் முறை கேட்டாள் புரியவில்லை என்று. வேலை விஷயத்தில் எப்பொழுதும் தன்னை முழு ஈடுபாடோடு காட்டிக் கொள்ளும் அக்னிசந்திரன் அவள் விளையாட்டுக்கு கேட்கிறாள் என்பதை உணர்ந்தும் பொறுமையாக அதே நேரம் தெளிவாகவும் விளக்கிக் கொண்டிருந்தான்.

 

இதற்கு நடுவில் பரமேஸ்வரி நான்கு முறை அழைத்து விட்டார் தன் மகனை. சைலன்ட் மோடில் போட்டவன் ஏழு மணிக்கு தான் அதை கையில் எடுத்தான். 

 

அன்னையிடம் மன்னிப்பு வேண்டியவன் அரை மணி நேரத்தில் வந்து விடுவதாக கூறினான். அதுவரை அமைதியாக இருந்தவள் தன் அண்ணன் விக்ரமை அழைத்தாள்.  

 

வந்தவன் காரணம் கேட்க, “விக்ரம் நம்ம சைட் பத்தி நீ சொன்னதும் இதோ இந்த அடிமை சொன்னதும் வேற வேறையா இருக்கு. எனக்கு ஒன்னும் புரியல ரெண்டு பேரும் ஒரே இடத்துல நின்று எனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க.”என்றாள் விக்ரமுக்கு கண்ணைக் காட்டி.

 

புரிந்து கொண்டவன் சிரிப்போடு, “அன்பினி இவன் ஒரு ஆளுன்னு கேட்டுட்டு இருக்க நான் சொல்றது தான் சரி. இவனுக்கு அப்பாவ காக்கா பிடிக்கவே நேரம் சரியா இருக்கும் எங்க இருந்து சைட்டை பத்தி தெரிஞ்சுக்குவான்.”என்றான் அவன் உழைப்பை சீண்டிப் பார்க்கும் நோக்கோடு. 

 

வேலையில் எப்போதும் நேர்மை தவறாமல் இருக்கும் அக்னி சந்திரனுக்கு இவ்வார்த்தை கொதிப்பை கொடுக்க, “சார் மைண்ட் யுவர் வேர்ட்ஸ். என்னோட வேலைல எந்த குறையும் இருக்காது. நான் சொன்னதுல என்ன தப்பு இருக்குன்னு சொல்லுங்க தப்பா இருந்தா திருத்திக்கிறேன். ” என்றான் கோபமாக. 

 

 

“விக்ரம் நான் கூட இவனுக்கு சொரணை இல்லாம சிரிச்சிட்டே இருக்கான்னு தப்பா நினைச்சுட்டேன். பாரேன் சாருக்கு கோவத்தை.” என்றவள் அவனைப் பார்த்து,

 

“இன்ட்ரஸ்டிங் அடிமை கமான் இன்னும் எதிர்பார்க்கிறேன் .” என அவனை சீண்டினாள் அன்பினி‌.

 

“என்னோட கோபம் உங்களுக்கு வேடிக்கையாக தான் தெரியும் மேடம். ஏன்னா நீங்க கால் மேல கால் போட்டு ஓசியில உழைப்பை திருடி சாப்பிடுற ஜென்மங்கள். எங்களை மாதிரி மனசையும், உடம்பையும் வருத்தி வேலை செஞ்சா அப்போ புரியும் இந்த கோபம் எதுக்குன்னு.” என்றதும் அவன் சட்டையைப் பிடித்தான் விக்ரம்.

 

“யாருடா ஓசின்னு சொல்ற. இது எங்க அப்பா சொத்து இதை நாங்க அனுபவிக்கிறோம் உனக்கு ஏன்டா இவ்ளோ பொறாமை. அடுத்தவனுக்கு சொந்தமான சொத்த உனக்கு சொந்தமான சொத்து மாதிரி அனுபவிச்சிட்டு இருக்க நீ தான் ஓசி. நீ பார்க்கிற வேலைக்கு எங்க அப்பா எவ்ளோ சம்பளம் தராருன்னு தெரியாதுன்னு நினைச்சியா எங்களுக்கு. ” என கோபத்தோடு பேசிக் கொண்டிருக்க அவனுக்கு தோதாக,

 

“அப்படி சொல்லு விக்ரம் இவன் பார்க்குற வேலைக்கு இரண்டு ஆள் சம்பளம். கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம நம்ம காச எடுத்து அவன் குடும்பத்தை வளர்க்கிறான். இதுல இவனுக்கு கோபம் ஒன்னு தான் குறை.” என்றாள்.

 

 

அக்னியின் பொறுமை முற்றிலும் காற்றில் பறந்தது. செல்வகுமார் கொடுக்கும் சம்பளத்தை வேண்டாம் என்று பல நாட்கள் மறுத்து இருக்கிறான். இந்த சம்பளத்தை வைத்து தான் அவன் குடும்பத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை அவனுக்கு இல்லை. அப்படியே இருந்தாலும் ஒரு நாளும் அதற்கு ஆசைப்பட மாட்டான். ஒவ்வொரு மாதமும் செல்வகுமார் தரும் சம்பளத்தை அப்படியே குழந்தைகள் காப்பகத்திற்கு கொடுத்து விடுவான். இதை செல்வகுமாரும் நன்கு அறிவார். 

 

 

தன் தன்மானத்தை சீண்டிப் பார்க்கும் இருவரையும் கண்டு சினம் கொண்டவன் விக்ரம் கைகளை பிரித்து தள்ளி விட்டான். தள்ளிவிட்ட கடுப்பில் அவன் மீண்டும் அடிக்க செல்ல, லாவகமாக அதை பற்றி கொண்ட அக்னி,

 

“இதுதான் உங்களுக்கு நான் தர கடைசி எச்சரிக்கை. இனி ஒரு தடவை என்னை பத்தியும், என் வேலைய பத்தியும், முக்கியமா என் குடும்பத்தை பத்தியும் ஒரு வார்த்தை பேசக்கூடாது. பேசினா இந்த அக்னி நடவடிக்கை ஆக்ரோஷமாக இருக்கும்.” என்றான் அன்பினி சித்திரையை பார்த்துக் கொண்டு. 

 

அதற்கெல்லாம் அஞ்சாத அன்பினி, “என்னடா பண்ணுவ.” என்றாள் திமிராக.

 

“அண்ணன் தங்கச்சி இரண்டு பேரையும் ரோட்ல உட்கார வைத்து பிச்சை எடுக்க விடுவேன்.” என்றான் அவனும் போட்டியாக.

 

 

“பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இந்த வேலை அனுப்பிட்டா நீ தான் தெருத்தெருவா பிச்சை எடுக்கணும்.” என்ற விக்ரமை பார்த்தவன்,

 

“அப்படியா! என்னை இந்த வேலைய விட்டு அனுப்பிடுவீங்களா.” என்ற அக்னி தோரணையில் அவ்வளவு கர்வம்.

 

“அனுப்புறது அவ்ளோ கஷ்டமா அடிமை.”  அன்பினை அவன் அருகில் நெருங்க,

 

“தலைகீழ நின்னாலும் உன்னால முடியாது.” இரண்டு அடி முன் வைத்தவன் அவள் நெருங்குவதற்கு முன் நெருங்கி நின்று கூறினான்.

 

“அதையும் பார்த்திடலாமா” என்றவளுக்கு,

 

“நிச்சயமா பார்க்கலாம்.” என்றான் அக்னிச்சந்திரன்.

 

“அப்போ சரி சவால் விடுறோம் இன்னைல இருந்து ஒரு மாசத்துக்குள்ள இந்த ஆபீஸ விட்டு உன்ன ஓட வைக்கிறோம்.” என்றாள் வருங்காலத்தில் அவன் பின்னால் அலையப்போகிறோம் என்பதை அறியாமல்.

 

சம்மதமாக தலையசைத்தவனுக்கு, “அதுவரைக்கும் நமக்குள்ள நடக்கிற எதையும் நீ அப்பா கிட்ட சொல்லக்கூடாது.” பின்னால் நின்றிருந்த விக்ரம் கூறினான்.

 

 

சத்தமிட்டு சிரித்த அக்னிசந்திரன், “தோல்வி பயம் இப்பவே வந்துடுச்சு போல.” என்று அவன் தோள் மீது கை வைக்க, தட்டி விட்டான் விக்ரம்.

 

 

விழுந்த கைகளை மீண்டும் எடுத்து தோள் மீது வைத்தவன், “கவலைப்படாதீங்க நமக்குள்ள நடக்கிறதை  நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். ஆனா ஒன்னு கடைசியில் தோல்வி உங்களுக்கா தான் இருக்கும்.” என்றான்.

 

 

“அதையும் பார்க்கலாம்டா அடிமை. நீயா இந்த ஆபீஸ விட்டு சொல்லிக்காம ஓடி போற நாள் ரொம்ப சீக்கிரம் வரும்.” என்றவளுக்கு சிரிப்பை பதிலாக கொடுத்தவன்  வெற்றி குறியீட்டை கைகளில் காட்டி வாழ்த்துகளோடு அகன்றான் அங்கிருந்து.

 

செல்பவனை பார்த்துக் கொண்டிருந்த தங்கையிடம், “அன்பினி இவன சும்மா அனுப்பக்கூடாது எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தி அனுப்பனும்.” என தூபம் போட்டான் விக்ரம்.

 

“அதைத்தான் நானும் யோசிச்சேன் விக்ரம். இவனுக்குள்ள என்னமோ ஒரு திட்டம் இருக்கு அதை கண்டுபிடிச்சி மொத்தமா அடிச்சு அனுப்பனும்.” என்றாள் அவளுக்குள் அவன் வர போவதை உணராமல்.

 

அம்மு இளையாள் ‌

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
27
+1
1
+1
6

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  1 Comment

  1. கௌசல்யா முத்துவேல்

   படிச்ச பிள்ளைங்க மாதிரியா பேசுதுங்க🤦‍♀️🤦‍♀️!!.. கேட்க முடியலை!!!.. அக்னி யாரா இருப்பான்னு தெரிலையே!!!..