Loading

2 – வலுசாறு இடையினில் 

 

“ஏலேய் பாண்டி .. சீக்கிரம் வேலைய முடி டா .. இன்னிக்கி அவன பிடிச்சி ஒரு வழி பண்ணாம விட கூடாது “, என மருதன் என்பவன், கரும்பு காட்டுக்கு மத்தியில் இருந்த பாதையில் முள்ளை போட்டு மேலே மண்ணை தூவி கொண்டு இருத்தனர் . 

 

“டேய் கண்டிப்பா இந்த எடத்துல தான் செய்யணுமா ? கரும்பு காடு அவனுக்கு ரொம்ப வசதியா இருக்கும் டா .. வேற எடத்த பாக்கலாம் ல ?”, பாண்டி என்பவன் கேட்டான் . 

 

“இதான் டா சரி .. இந்த இடம் தான் அவன அடிக்க முடியும் .. அவன் மட்டும் தான் கரும்ப வச்சி அடிப்பானா ? நம்ம அடிச்சாலும் கரும்பு அடிக்கும் “, மருதன் வன்மத்துடன் கூறினான் . 

 

“எனக்கு என்னமோ சரியா படல மருது .. டேய் வண்டி சத்தம் வருது .. வா அந்த பக்கம் போய் மறைஞ்சிக்கலாம் .. “, என பாண்டி அங்கிருந்த டிராக்டர் பின்னால் சென்று ஒளிந்தான். 

 

புல்லட் வண்டியின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் கேட்டது .. பாண்டி எதிர் பக்கம் பார்த்துக்  கொண்டு இருந்தான் . 

 

“ஏய் .. யாருடா அவன் டிராக்டர் பக்கத்துல ? டயர கழட்ட வந்தீங்களா டா ?”, என கேட்டபடி பாண்டிக்கு பின்னால் வந்து நின்று கேட்டான் சிம்ம வர்மன் . 

 

“அதுலாம் இல்லண்ணே .. சும்மா தான் நின்னுட்டு இருந்தோம் “, பாண்டி தயங்கி தயங்கி கூறினான் . 

 

“ஏலேய் நீ அந்த மேலூர் கார பைய்யன் தானே ? உனக்கு இங்க என்ன வேலை ?”, கையில் இருந்த காப்பை மேலே ஏற்றிய படி அருகில் வந்தான் சிம்ம வர்மன்.

 

அந்த நேரம் மருது சூரியை எடுத்து சிம்ம வரமனை நோக்கி பாய்ந்தான் . 

 

பாண்டி பயந்து கத்தவும் , வர்மன் திரும்பும் சமயம் கத்தி அவன் கையில் லேசாக கீறி ரத்தம் வந்தது . 

 

சிம்ம வர்மன் சிரித்தபடி, “ இதான் விஷயமா ? சம்பவம் பண்ண தான் காத்துட்டு  இருந்தீங்களோ ? வெடலை பசங்க கூடலாம் நான் சண்டை போடறது இல்லை .. உன் ஊர்ல ஆம்பள எவனாது இருந்தா கூட்டிட்டு வாங்க டா “, என சிரித்தபடி மருதுவின் தாக்குதலில் இருந்து விளையாட்டு போலவே நகர்ந்து கொண்டு பேசினான் . 

 

“உன்ன முடிக்க நானே போதும் டா “, மருது கோபத்துடன் பாய்ந்தான். 

 

“ஹாஹாஹா .. டேய் வெண்ணை .. மொதல்ல கத்திய ஒழுங்கா புடி டா .. “, வர்மன் அவன் கையை பிடித்து இழுத்து கத்தியை சரியாக பிடிக்க சொல்லி கொடுத்தான் . 

 

அதன் பிறகும் கால் மணி நேரம் கழித்தும், மருதுவால் வர்மன் அருகில் கூட நெருங்க முடியாமல் ஆவேஷம் கொண்டு தாக்க ஆரம்பித்தான் . 

 

“வர்மா என்னடா நடு ரோட்ல சண்டை கத்து தர ஆரம்பிச்சிட்ட  ?”, என கேட்டபடி ஒருவர் அங்கே வந்தார். 

 

“மேலூர் பயலுக சம்பவம் பண்ணலாம் வந்தானுங்க சித்தப்பு .. கத்திய கூட ஒழுங்கா பிடிக்க தெர்ல .. அதான் கத்து குடுத்துட்டு இருக்கேன் “, என பேசியபடி மருதுவின் கையை பிடித்து பின்னால் மடித்து , “ டேய் .. நீயெல்லாம் கொசு அளவுக்கு கூட பெறுமானம் இல்லாதவன் .. போ .. போய்ட்டு நல்லா சம்பவம் பண்ண கத்துகிட்டு வா .. “, என அவன் கை மணிக்கட்டை  திருப்பினான்  வர்மன் . 

 

“வர்மா .. இவனுங்கள இப்படியே விடக்கூடாது .. உன் மேல கை வைக்க வர அளவுக்கு தைரியம் வந்துரிச்சி.. ஒரு பஞ்சாயத்த போற்றுவோம் யா “, வந்தவர் கூறினார் . 

 

“அட என்ன சித்தப்பு நீங்க .. சின்ன பசங்களுக்காக பஞ்சாயத்துக்கு போனா நம்ம கௌரவம் என்ன ஆவறது ? நீங்க போங்க .. நான் ரெண்டு தட்டி அனுப்பிட்டு வீட்டுக்கு வரேன் .. சித்திய கோழி அடிச்சி நல்லா காரமா கொழம்பு வைக்க சொல்லுங்க .. “, என அவரிடம் கூறி அனுப்பினான்  . 

 

“சரி .. நான் வட்டி பயல  அனுப்பி வைக்கறேன். சீக்கிரம் வா வர்மா .. “

 

“இங்க பாருங்க டா .. நேரா கூனி ஆச்சி வீட்டுக்கு போய் கைய நீவிட்டு வீட்டுக்கு போங்க .. “, என கூறி விட்டு வண்டி எடுக்க சென்றான். 

 

“அண்ணே .. ஒரு நிமிஷம் “, என பாண்டி அவசரமாக வழியில் இருந்த முள்ளை எடுத்து ஓரமாக போட்டு விட்டு மருது அருகில் வந்து நின்றான் . 

 

“இது வேறயா டா ? உங்க அப்பா பேரு சிவசாமி தாணு ?”, பாண்டியை பார்த்து கேட்டான் . 

 

“ஆமாண்ணே .. “, பயந்தபடி மண்டையை ஆட்டி கூறினான் . 

 

“வந்து என்னை தோப்புல பாரு “, என கூறி விட்டு மீசையை நீவி விட்டு வண்டியில் கிளம்பினான் . 

 

வர்மன் தூரமாக சென்ற பின் தான் மருதுவின் வாயில் இருந்த துண்டை எடுத்தான் . 

 

வர்மன் மருதுவின் கையை திருப்பும் போதே துண்டை அவன் வாயில் அடைத்து இருந்தான் பாண்டி . 

 

“டேய் நாதாரி நாயே .. அவன அடிக்க உன்ன கூட்டிட்டு வந்தா நீ அவன் என்னை அடிக்கறப்ப வாய பொத்தற .. அம்மா .. வலி உயிர் போகுது டா .. “, என பாண்டியை எட்டி மிதித்தான் மருது . 

 

“கைய திருப்பனதோட விட்டாருன்னு சந்தோஷபடு டா .. வா கூனி ஆச்சி கிட்ட கூட்டிட்டு போறேன் .. “என பேசியபடி பாண்டி கைத்தாங்களாக  அவனை அழைத்து கொண்டு சென்றான் . 

 

“அவன சும்மா விட கூடாது டா .. “, மருது வலியில் சுணங்கியபடி கூறினான் . 

 

“உங்க அண்ணன் பிரச்சனைக்கு நீ ஏண்டா உள்ள போற ? கம்முன்னு படிக்கற வேலைய மட்டும் நம்ம பாக்கலாம் .. “, பாண்டி அவனை ஒதுங்கி இருக்கும்படி கூறிய படி ஆச்சி வீடு அருகில் வந்து இருந்தனர் . 

 

“அவன் என் அண்ணன்-அ அடிச்ச அடி அப்படி பாண்டி .. கால் ஊன ரெண்டு மாசம் ஆகும் ன்னு சொல்லிட்டாங்க டா .. அவன் படர அவஸ்தைய பாக்க முடியல அதான் அவன் காலை உடைக்கணும்ன்னு வந்தேன் ..”

 

“அப்பறம் எதுக்கு டா சூரிய கொண்டு வந்த ?”

 

“ஒரு பாதுகாப்புக்கு தான் .. ஆனா அதை எப்டி பிடிக்கணுமின்னு அவனே சொல்லி குடுத்து அசிங்கபடுத்திட்டான் டா பாண்டி “, வலியை தாள முடியாமல் அவன் கூறியது பாண்டிக்கு சிரிப்பை வரவழைத்தது. 

 

“எரும சாணி .. சிரிக்கவா செய்ற நீ ? “, என மீண்டும் அவனை எட்டி உதைத்தான் மருது. 

 

“நீ சொன்னதும் சிரிப்பு வந்துரிச்சி மாப்ள .. அவர சம்பவம் பண்ண நம்ம சுத்து ஊர்ல ஒருத்தனுக்கு கூட தில்லு இல்லடா, அதுவும் அவரு ஊருல போய்.. நினைச்சி கூட பாக்க கூடாது .. அப்டி பட்ட ஆள நம்ம சின்ன பசங்க சுலபமா சம்பவம் பண்ணிடலாம்ன்னு நினைக்கறது முட்டாள் தனம் டா .. வந்து உக்காரு  ஆச்சிய பாத்து கூட்டிட்டு வரேன் .. “, என வீட்டின் உள்ளே சென்றவன் கூன் விழுந்த ஒரு பாட்டியை வெளியே அழைத்து வந்தான் . 

 

“யாரு டா .. வர்மன் கிட்ட அடி வாங்கிட்டு வந்தியோ ? பொச கேட்ட மண்டுங்களா இருக்கீங்களே டா .. இவன் கிட்ட அடி வாங்கிட்டு வாரவனுக்கு நீவி விட்டே என் முதுகு கூன் விழுந்து போச்சி “, என திட்டிய படி சூடு செய்து எண்ணையை மருதுவின் கையில் நீவி முன்னாள் திருப்பினார் ஆச்சி . 

 

“ஏன் ஆச்சி எத்தன பேருக்கு அப்படி நீவி விட்டீங்கலாம் ? உமக்கு வயசாகி கூன் விழுந்ததுக்கு வர்மன்னே என்ன பண்ணும் ?”, பாண்டி மருதுவின் பின்னால் நின்று கேட்டான் . 

 

“வாரத்துக்கு இருபது பேரு வாரணுக டா பேராண்டி .. எல்லாத்தையும் திருப்பி விட்டுட்டு என்கிட்ட அனுப்பி வச்சிருவான் . பெண்ட் எடுக்கற சைக்கிள்கடையா  நடத்தறேன் ? முறுக்கரவனுக்கு நேராக்க தெரியாத ?”, என சலித்தபடி ஆச்சி மருதுவிற்கு எண்ணையை இரண்டு நாள் நீவி கொள்ள கொடுத்து அனுப்பினார் . 

 

“என்னத்தா ரொம்ப தான் சலிச்சிக்கற .. என் மச்சனால தானு உனக்கும் வியாபாரம் நடக்குது .. இல்லைனா இந்த அடி புடிச்ச எண்ணை வாங்க எவன் வருவான் ?”, என கேட்டபடி வட்டி என்கிற வைத்தியநாதன் அங்கே வந்தான் . 

 

“போடா அரைமண்டையா .. உன் நொண்ண போடற பிச்சை சோத்தையா  நான் பொறுக்கி திங்கறேன் .. எவனையும் இங்க அனுப்பாதீங்கன்னு எத்தன தடவ சொல்றது ..”, ஆச்சி அவனிடம் சீறினார் . 

 

“அடேங்கப்பா .. ஏன் ஆச்சி உன் புருஷன் கிட்ட கூட இப்படி தான் பொறி பறக்க பேசுவியோ ? அதான் மனுஷன் சின்ன வயசுலயே போய் சேந்துட்டாரு போல ”, என கேட்டபடி  லுங்கியை அவிழ்த்து கட்டியபடி முன்னே வந்தான் . 

 

“எடு சீவக்கட்டைய நாயே .. என் புருஷன பத்தி பேச இந்த சுத்து பத்து ஊருல ஒரு பயலுக்கும் அருகதை கிடையாது .. பொத்திக்கிட்டு போடா “, என ஒரு கட்டையை வட்டியை நோக்கி வீசியது . 

 

“உன் புருஷன நீயே தான் கொன்னு இருப்பன்னு இப்பவும் ஊருக்குள்ள பேசறது சரி தான் போல .. பேசிக்கிட்டு இருக்கறப்போவே   கட்டைய வீசுற ..”, வட்டி தாவி குதித்து தள்ளி நின்றான் . 

 

படார் என்று கதைவை தள்ளி தாழிட்டு விட்டு உள்ளே சென்று விட்டார் ஆச்சி . 

 

“இப்போவே இப்டி இருக்கு .. இன்னும் வயசுல இருந்து இருந்தா என்ன தூக்கி போட்டு இருக்கும் .. வட்டி உனக்கு இன்னிக்கி நல்ல நேரம் போல டா .. மர்டர் அட்டெம்ப்ட் ல இருந்து தப்பிச்சிட்ட “, என சத்தமாகவே பேசியபடி திண்ணையில் இருந்த ஒரு கூடையை எடுத்து கொண்டு கிளம்பினான் . 

 

அங்கிருந்து கிளம்பிய வர்மன் தன் மாந்தோப்பிற்கு  சென்றான் . 

 

“டேய் வெளக்கெண்ண .. எந்த எடத்துல குடுசைய போட சொன்ன எங்க போடற ? வந்தேன் வகுந்து அங்கனயே உனைய்யும் பொத்தச்சிருவேன் .. பிரி டா .. அந்த பக்கம் போய் கட்டு டா “, வேட்டியை மடித்து கட்டியபடி நடந்தான் . 

 

நிமிடத்திற்கு ஒரு முறை அந்த மீசையை நீவியபடி, காப்பை மேலே ஏற்றி சுற்றிலும் வேலை செய்பவர்களை பார்த்தபடி இருந்தான் . 

 

“ஏண்டா சொம்ப .. இத வாங்கிட்டு வர உனக்கு இவ்ளோ நேரமா ? எங்கடா அடி வாங்கிட்டு வர ?”, என வட்டியை பார்த்து கேட்டான் . 

 

“ஏன் மச்சான் பேசமாட்டா ? ஆமா நான் அடி வாங்குனது உனக்கு எப்புடி தெரியும் ? அந்த ஆச்சிக்கு எகத்தாளம் கூடிரிச்சு மச்சான் .. பேசிக்கிட்டு இருக்கறபோவே கட்டைய வீசுது “, என சுமந்து வந்த கூடையை வர்மா கூறிய இடத்தில் வைத்தான் . 

 

“நீ என்ன அதுக்கிட்ட வம்பிலுத்த ?”, வர்மன் அந்த கூடையில் இருந்த எண்ணை ஜாடிகளை வைக்கபுல்லில் சாயாமல் வைத்து கொண்டு இருந்தான் . 

 

“ஆமா அதுக்கு இப்ப தான் பதினாறு வயசு இழுக்கறாங்க வம்பு .. சரி அத விடு மச்சான் .. இந்த எண்ணைய என்ன பண்ண போறீங்க ?”

 

“வட்டி இதான் டா நான் நம்ம சூப்பர் மார்க்கெட்ல விக்க போற புது பொருள் .. நம்ம ஊருகாரவங்க பொருள நம்ம தான் விக்கணும் .. போய் நான் சொல்லி இருந்த அரிசி பருப்பு சரக்கு எல்லாம் எப்ப வருதுன்னு கேளு டா .. “

 

“ஓ .. சமுதாய சீர் திருத்தம் பண்ண போறீங்களா மச்சான் ? “

 

“வெங்காயம் .. பொத்திக்கிட்டு சொன்னத செய் டா வெண்ண”

 

“நீங்க ஊரு பெரிய தலைக்கட்டு .. சொன்னா கேட்டுக்கறேன் .. “

 

“டேய் .. “, என ஆள் காட்டிவிரலை நீட்டி அவனை மிரட்டி விட்டு மற்ற வேலை ஆட்களை மிரட்ட சென்று விட்டான். 

 

“போங்க போங்க .. உங்கள மெரட்ட என் தங்கச்சி சீக்கிரமே வரும் .. அப்போ உங்கள பாத்து கை கொட்டி நான் சிரிக்கறேன் .. “

 

“கைய ஒடைச்சி மரத்துல காக்கா ஓட்ட கட்டிருவேன் டா .. என்னைய மெரட்ட எவளுக்கு டா தில்லு வரும் .. கொன்னுடுவேன் .. போய் சொன்ன வேலைய பாரு டா என் ********”, என வந்து வட்டியை தலையில் அடித்து விட்டு வண்டி எடுக்க சென்றான் . 

 

“மச்சான் .. தங்கச்சிய பாக்கவா போறீங்க ?”, வட்டி தலையை தேய்த்தபடி கேட்டான் . 

 

“இப்டியே பேசிக்கிட்டு இரு .. வந்து உன்ன இந்த தோப்புக்கு ஒரம் ஆக்கிடறேன் “, என கண்ணாடியை போட்டு கொண்டு வண்டியை கிளப்பினான் சிம்ம வர்மன். 

 

அங்கே காலேஜில் நங்கை புன்னகை முகத்துடன் வினிதா இருக்குமிடம் சென்றாள் . 

 

“ஹே வினி .. எனக்கு வேலை கெடச்சிரிச்சி டி .. “, என கூறி சந்தோஷமாக அவளை பிடித்து சுற்றினாள் . 

 

“சூப்பரு நங்க.. வா கேண்டீன் ல உனக்கு பிரியாணி வாங்கி தரேன் .. மொத மாச சம்பளத்த என்கிட்ட குடுத்துரு டி “, வினிதா அவளை இழுத்து கொண்டு ஓடினாள். 

 

“உஷாரு தான் .. பத்து ரூவா பிரியாணி வாங்கி குடுத்துட்டு என்கிட்ட பத்தாயிரம் வாங்க பாக்கற .. “, என கூறியபடி இருவருக்கும்  பிரியாணி வாங்கி கொண்டு , சாப்பிட்டு முடித்ததும் ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தாள் நங்கை . 

 

“சரி வேலை கெடைச்ச விஷயத்த வீட்ல சொல்றியா இல்லயா ?”

 

“சொன்னா அவ்வளவு தான் வினி.. வேலைக்கும் போகணும் . அப்போ தான் கொஞ்சமாது என்வாழ்க்கைய வாழ முடியும் . ஆனா என்ன பண்றது ன்னு தான் தெர்ல.. “, நங்கை முகத்தில் வருத்தமும் கவலையும் நன்றாகவே தெரிந்தது .

 

“விடு நங்க .. இன்னும் 3 மாசம் இருக்கு .. பேசிக்கலாம் .. அதுக்குள்ள உன் அப்பா மாப்பிளைய கொண்டு வந்து நிறுத்த கூடாது ன்னு சாமி கும்பிட்டுக்க “

 

நங்கையின் அப்பாவும் அம்மாவும் ஜோசியர் வீட்டிற்கு சென்றனர் . 

 

“வாங்க வாங்க ஏகாம்பரம் ஐயா .. வாங்க மா “, ஜோசியர் . 

 

“ஜோசியரே .. பொண்ணுக்கு வரன் பாக்கலாம்ன்னு இருக்கேன் .. எப்படி பட்ட ஆளுங்கள பாக்கலாம் .. எப்போ கல்யாணம் முடியும்ன்னு சொல்லுங்க .. “ஏகாம்பரம் வேண்டா வெறுப்பாக கேட்டார் . 

 

“இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் முடிஞ்சிடும் ஐயா .. ஆனா .. “, என இழுத்தார் ஜோசியர் .   

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
18
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    14 Comments

    1. சூப்பர் சகி.. வர்மா தான் ஹீரோவா.. ! நல்ல திடமான ஹீரோதான்.. கூடவே நல்லவரும்.. இரண்டாவது எபி சூப்பர்.. ஜோசிய கார் என்ன சொல்லுவாரு..? புள்ளைக்கு லவ் மேரேஜ்னு சொல்லி கொடுமை படுத்த விட்ருவாரோ..? பாவம்.. ஏற்கனவே லூசு குடும்பம்.. இதுல என்ன ஆக போகுதோ..? சீக்கிரமே அடுத்த பதிவை போடுங்க..

      1. எவன் இவன்? பயங்கர முரடனா இருப்பான் பாேலயே! இது என்ன புது பிரச்சினை? ரைட்டர் ஜீ……
        ஒருதங்களுக்கு பிரச்சினை வரலாம். பிரச்சினையே வாழ்க்கை யா இருக்க வேண்டாம். இதில ஹூராே சார் வேற முரடனா இருக்காரு.

    2. Archana

      இந்த அப்பாக்கு என்ன தான் பிரச்சனையாம் அவளுக்கு ஒரு நல்லதையும் யோசிக்க மாட்டாரு, அவரா நல்லது செய்யரைன்னு நினைச்சிட்டு ஜோசியர் கிட்ட போனாலும் விளக்கெனையே குடிச்ச மாறி தான் அவள பத்தி பேசுவாராம்😑😑😑இதுக்கு அவ பொறந்த அப்போவே ஆசிரமத்துல்ல விட்டுருக்கலாம். அங்க அம்மா,அப்பா யாரும் இல்லைன்னாலும் நிம்மதியா வாழ்ந்திருப்பா போல.

    3. Nancy Mary

      அருமையான சுவாரஸ்யமான பதிவு சூப்பர்😃
      வர்மனோட தைரியம் அவனை கெட்டவனா ஊருக்குள்ள காட்டுனாலும் யாருமில்லாத பாட்டிக்கு ஒத்தாசையா ஒத்த நாளைக்கு இருபது பேரை வைத்தியத்துக்கு அனுப்புறதும் ஏதோ சில நல்லது பண்றதும் கல்லுக்குள் ஈரமா இப்படியொரு வீரமானு சிந்திக்க வைக்குது நங்கையோட கனவு மெய்பட போகுதானு யோசிச்சா அதுல கொள்ளி கட்டையை போட்டு கொளுந்தவே கிளம்பி வரானுங்களே முதல்ல இந்தமாதிரி ஜோஷியகாரனை போட்டு பொழக்கணும் அப்போதான் சமூகம் உருப்படும் எழுத்துநடையை நல்லா இருக்கு கதையும் எதிர்பார்ப்பை தூண்டுது சூப்பரா நகர்வு👏👏👏👏👏

    4. Janu Croos

      ஏன்பா வர்மா சண்டைக்கு உண்டான மரியாதை போச்சே பா உன்னால….நீயே அவனுங்களுக்கு எப்படி கத்திய புடிக்கனும்னு சொல்லிக்குடுத்து அவனுங்களோட சண்டை போடாறியே…இதெல்லாம் நல்லாவா இருக்கு….
      ஆமா வட்டி தங்கச்சக தங்கச்சகனு சொல்றானே யாரு அது….
      நங்கை நீ வேலைக்கு போக ஐடியா பண்ற அங்க உன் வீட்டுல உன்ன கல்யாணம் பண்ணி அனுப்ப பிளான் பண்றாங்க….என்னம்மா பண்ண போற….

    5. Sangusakkara vedi

      Semma….. Maruthu pandi sambavam panna vanthu sambavam aanathu semma…. Athulayum pandi Mulla eduthu vitathu la ultimate…. Varma character semma…. Thangachiya …. Apoboss love panrara… Avala merrattavum aal vara poghuthunu teriyala pola… Unga writing ah pakkum pothu enaku rendu writer thn strick aaghuranga…. Nenga athula oruthara irupenganu thonuthu .. pakkalam… En guess right ah nu