Loading

                  சூரியதேவ் பெயருக்கு ஏற்றது போல, அந்த சூரியதேவன் போல கோபம் கொள்பவன். எனினும் அன்பானவன். சகாதேவன் மற்றும் ராதிகாவின் தவ புதல்வன். செல்ல மகன் எது செய்தாலும் அதட்ட மாட்டார்கள். காரணம் அவன் செய்வது எப்போதும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை ஒன்று மட்டும் தான்.

ஆனால் அதுவே அவன் வாழ்வை மாற்ற போகிறது என்று அவர்கள் அப்போது அறிய வாய்ப்பில்லை. அவனை வர்ணிக்க வேண்டும் என்றால், சொல்லிக்கொண்டே போகலாம். அடங்காத கேசம், எப்போதும் எதையோ தேடும் கூறிய பார்வை, புகை பிடிப்பதால் சற்று கறுத்த உதடுகள், தினம் செய்யும் உடற்பயிற்சியின் காரணமான கட்டுடல் தேகம். மாநிறதிற்கு சற்று அதிகமான நிறம்.

படங்களில் வருவது போல, பல கோடி சொத்திற்கு ஓரே வாரிசு அவன் தான். ஆனால் ஆணவம் என்பது துளி கூட இல்லாதவன். தன் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அனைவரையும் தன் நண்பர்களாக பார்ப்பவன். அதில் சாய் கொஞ்சம் ஸ்பெஷல் தான் அவனுக்கு.

அவனை பற்றி சகலமும் அறிந்த ஒரே ஒருவன் தான் ஜெய் ஆகாஷ். சூர்யாவின் உயிர் தோழன். சிறு பிள்ளையில் இருந்தே நண்பர்கள். அவனின் சுக துக்கங்கள் அனைத்திலும் பங்கு கொள்பவன்.

சூர்யாவின் பிரச்சனைகளை அனைத்தையும் சரி செய்பவன் தான், காரணம் அதை உருவாக்குவதும் அவன் தான். சூர்யாவை போலவே குணம் கொஞ்சம் விளையாட்டு தனமும் அதிகம்.

        தியாரதித்தி, உண்மையில் ஒளியும் அவளே ரதியும் அவளே. சூர்யாவின் ரதி. சாந்தம், அமைதி இது இரண்டின் பொருளே அவள் தான் என்று கூறுவோர் தான் அதிகம். எது இல்லாமல் போனாலும் அவள் முகத்தில் உள்ள அந்த சாந்தம் குறைந்ததே இல்லை. அடுத்தவர் மேல் காட்டும் அன்பிலும், அக்கரையிலும் அவளுக்கு இணை அவளே.

அவளுக்கும் ஜெய் ஆகாஷ் தான் ஒரே நண்பன். அவனிடம் தான் சற்று கடுமையாக, கேலியாக எல்லாம் அவள் பேசுவாள். எனினும் முடிந்தவரை தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்த மாட்டாள் அவனிடம் கூட..

எந்த அளவிற்கு பாசமோ அதே அளவிற்கு கோபமும் வரும். ஆனால் அதை அனைவர் முன்பும் வெளி படுத்த விரும்ப மாட்டாள்.
அடுத்தவர் செய்யும் தவறுக்கும் தன்னையே தண்டித்து கொள்பவள். சூர்யாவின் சோ கால்டு அன்பு மனைவி.

**********

அனைவரும் அவரவர் வேளையில் படு பிசியாக இருக்க. ஜெய் மட்டும் தனது அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு, சூர்யா மற்றும் தியா இருவரையும் எப்படி சேர்ப்பது என்று திவிரமக சிந்தித்து கொண்டு இருந்தான். இது கடந்த இரண்டு வருடமாக நடப்பது தான். அவனும் இல்லாத தன் மூளையை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் தன் நண்பன் சூர்யாவிற்காக செய்து விட்டான்.

ஆனால் எதுவும் வேலை செய்யவில்லை. தியாவின் முடிவும் மாற வில்லை. சூர்யாவும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை, காரணம்.. இவை எல்லாம் பழகி விட்டது அவனுக்கு. ஆனால் ஜெய் தான் இன்று வரை தனது முயற்சியை கைவிட வில்லை.

மேலும் தான் செய்யும் வேலைக்காக சூர்யா மற்றும் தியா இருவரிடமும் நன்றாக வாங்கி கட்டி கொள்ளவான். அப்போதெல்லாம், “இதுக்கு மட்டும் ஒன்னு சேந்துருங்க”, என்று பொதுவாக கத்திவிட்டு ஓடிவிடுவான்.

இது ஜெய்யின் கையெழுத்து வாக்கியம் என்றும் சொல்லலாம். எப்போது மாட்டி கொண்டாலும், தப்பிக்க முடிந்த வரை பொய்களை அள்ளி விடுவான். ஒருவேளை வசமாக சிக்கிக் கொண்டால், “இதுக்கு மட்டும் புருஷனும் பொண்டாட்டியும் ஒன்னு சேந்திருங்க”, என்று சொன்னால் போதும் அதற்கு மேல் தியா அங்கு இருக்க மாட்டாள்.

ஆனால் சூர்யாவிடம் நன்றாக நாலு மிதிகளை வாங்கி கொள்வான். எனினும் இன்று வரை அவன் செய்யும் அனைத்தும் அவர்கள் இருவரும் சேர வேண்டும். மகிழ்ச்சியாக வாழ வேண்டும், என்ற ஒரே எண்ணத்தில் தான். சோ நாம் அவனை பாராட்ட தான் வேண்டும்.

எப்போதும் போல, இன்று அதே தான் சிந்தித்து கொண்டு இருந்தான். “இன்னைக்கு அவங்க கல்யாண நாள்.. சோ நம்ம தெளிவா பிளான் பண்ணா சேர்த்து வச்சர்லாம்.”, என்று மூளையை கசக்க, “இதே தான் நீ போன வருஷமும் சொன்ன.. ஆனா என்ன நடந்தது”, என்று அவன் மனசாட்சி கேள்வி எழுப்ப, அவனும் சிந்தித்தான், ஒரு வருடம் முன்னாள் நடந்ததை,

சென்ற வருடம் இதே நாள்,

தியா மற்றும் சூர்யாவின் முதல் திருமண நாள்,

“பாஸ் நா சொல்றத கேளுங்க.. ஏதாவது பண்ணி தேவ இல்லாம வாங்கி கட்டிக்காதீங்க சொல்லிட்டேன்”, என்று பயந்தவாறு சொல்லிக்கொண்டு இருந்தான் சாய்.

“டேய்.. நீ முதல்ல வாய மூடு.. இல்ல பேச வாயே இல்லாம பண்ணிருவேன்..”, என்று சாய்யை மிரட்டி விட்டு, தன் வேலையை தொடர்ந்தான், ஜெய் ஆகாஷ்.

“சரி.. பாஸ் மாடிக்கிட்டீங்கனா நானும் உங்க கூட உதவி பண்ணுனேன்னு சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு ப்ரோமிஸ் பண்ணுங்க அப்போ தான் ஹெல்ப் பண்ணுவேன்”, என்று டீலிங் பேச, அவனை முறைத்து விட்டு, “சரி டா சொல்ல மாட்டேன்.. ஒழுங்கா வந்து உதவி பான்னு”, என்று அவனையும் கூட்டு சேர்த்து கொண்டு, தன் வேலைகளை தொடர்ந்தான்.

“நீங்களும் இப்டி வித விதமா யோசிச்சு ஏதாவது பண்ணிட்டே இருக்கீங்க.. அனா எல்லாம் சோதப்பிருது.. இருந்தும் முயற்சியை கைய் விடாம இருகிங்கலே எப்டி பாஸ்..”, என்று தீவிரமாக கேட்க..

அவன் கேள்வியில் ஜெய் புன்னகைத்தான், “எல்லாம் அவங்க சேந்தர மாடங்களான்னு ஒரு நட்பாசை தான் டா.. தியா எப்டி இருந்தா தெரியுமா.. வாயே மூட மாட்டா.. வயாடின்னு எல்லாரும் சொல்லுவாங்க.. ஆனா இப்போ மேடம்க்கு பேரு சாந்தருபிணி.. எல்லாம் இந்த சூர்யாவால வந்தது..”, என்று மூச்சை இழுத்து விட்டவன், தன்னை கட்டு படுத்தி கொண்டு,

“அவனும் என்ன பண்ணுவான்.. எல்லாம் விதி.. அதான் நான் இவ்ளோ கஷ்ட படறேன்..அவங்கள சேர்த்து வைக்க”, என்று சொன்னவனை பார்க்க சாய்க்கு பெருமையாக இருந்தது.

“எனக்கு ஒரு டவ்ட்டு பாஸ்.. அது எப்டி யாருக்கும் எதுவும் தெரியாத மாதிரி ரெண்டு பேரும் மெயின்டேயின் பன்றாங்க?..”, என்று தன் சந்தேகத்தை கேட்க,

“டேய்.. இப்படியே பேசிட்டே இருக்க போறியா இல்ல வேலைய பார்க்க போறியா”, என்று அதட்ட சாய் கப் சிப் என்று ஆகிவிட்டான்.

மறுபடியும் வேலைகளை தொடர, சாய் “நீங்களாச்சும் சொல்லுங்களேன் பாஸ் அவங்க ரெண்டு பெருக்கும் என்ன தான் பிரச்சனை? தியா என் சூர்யா கூட பேச மாட்டறா? அப்றம் எதுக்கு கல்யாணம் மட்டும் பண்ணிகிட்டா? பாவம் பாஸ் சூர்யா.. ஏன் தான் இந்த தியா இப்டி இருக்காளோ? ச்சை..” என்று அவன் நொந்து கொள்ள,

“வாய முடு சாய்.. உனக்கு தியா வ பத்தி என்ன தெரியும் அவ எப்படி பட்ட பொண்ணு தெறியுமா? அவ கிடைக்க உன் சூர்யா தான் புண்ணியம் பண்ணி இருக்கனும். அப்றம் உன் சூர்யா ஒன்னும் பாவம் கிடையாது அவன் ஒரு பாவி.. அவனலாம் சும்மா குடுத்தா கூட யாரும் வாங்கவும் மாட்டாங்க..கல்யாணமும் பண்ணிக்க மாட்டாங்க.. என் தியாவ தவிர.. அவ்ளோதான் என்னால சொல்ல முடியும்.. வேற எதுவும் என்கிட்டே கேட்காத”, என்று ஸ்ட்ரிக்டாக சொல்லி விட்டான், ஜெய்.

அதற்கு மேல் சாயும் எதுவம் பேச வில்லை, “ஆமா அது என்ன சாய்? சூரியாவ மட்டும் பேர் சொல்லிக் கூப்டுட்டு..  என்ன மட்டும் கொள்ள கூட்டத்து தலைவன கூப்படற மாதிரி பாஸ் பாஸ்ன்னு சொல்லற”, என்று அவனிடம் குறை பட,

“அதுவா பாஸ் நீங்களும் நான் தான் எம்.டின்னு சொல்லாம ஒரு ஆபீஸ் ஸ்டாப் மாதிரி கொஞ்சம் நாள் நடிச்சுட்டு.. அப்றம் ஒரு நாள் அப்டியே கெத்தா நான் தான் உங்க பாஸ்ன்னு சொல்லிருந்த.. அதுக்குள்ள உங்க கூட நான் பிரன்ட் ஆகி  இருந்த.. உங்கல பேர் சொல்லி என்ன, “டேய் ஜெய் எருமை”ன்னு கூட கூப்பிட்டு இருப்பேன்.. என்ன பண்றது நீங்க தான் நேரா எம்.டி சிட்ல நல்லா ஜம்முனு உக்காந்து கிட்டிங்களே.. நான் என்ன பன்னுவேன் பாஸ்”, என்று முகத்தை பாவமாக வைத்து கொள்ள,

ஜெய் தான் அவனை கொலை வெறியாக பார்த்தான். அதில் அசடு வலிந்து விட்டு “ஐயோ வேலைய பாருங்க பாஸ்.. என்ன அப்றமா சைட் அடிக்கலாம்” என்று முகத்தை முடிக் கொள்ள, அவனை “தூ” என்று துப்பி விட்டு வேளைகளைத் தொடர்ந்தான்.

ஆம் சூர்யா தன் அலுவலகத்தில் பொறுப்பில் அமர்வதற்கு முன், அங்கு வேலை செய்யும் அனைவருடனும் தனக்கு ஒரு சகஜமான நிலை வேண்டும் என்று எண்ணினான்.

எனவே, தான் யாரென்று சொல்லாமல் இரண்டு மாத காலம் ஒரு பணியாளர் போலவே தன் அலுவலகத்தில் பணியாற்றினான் அப்போது கிடைத்தது தான் சாயின் நட்பு.

சிறிது நாட்கள் கடந்த பின்பு, தான் தான் யார் என்பது கூறி, தனது அடையாளத்தை வெளிப்படுத்தினான். இருப்பினும் சாயுடன்  அதே நட்பை தொடர்ந்தான். எனவேதான் சாய் இன்னும் சூர்யாவிடம் உரிமையாக நடந்துகொள்கிறான்..

அனைத்து வேலைகளையும் முடித்த பின், சூர்யா தியாவின் வீட்டில் இருந்து வெளியே வந்தனர், சாயும், ஜெயும். “இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா”, என்று சாய் சந்தேகமே கேட்க..

“ஆகலன.. அடுத்த ஐடியா யோசிக்க வேண்டிதான். “, என்று சொல்லிவிட்டு அவன் முன்னே செல்ல, “அடப்பாவி.. ஒரு முடிவோட தான் நீ இருக்கியா.. ஏதோ இவர் தங்கச்சி ரிது அழகா இருக்கான்னு.. சைட்  அடிக்கலாம்ன்னு.. இந்த ஆஃபீஸ்க்கு வந்தா இந்த பாஸ் இவ்ளோ கொடுமை படுத்தறாரு.. இனிமேல் இவன் பக்கமே போக கூடாது டா சாய்.”, என்று மனதில் எண்ணி கொண்டு இருக்க..

“அப்டி எதுவும் பண்ணுன.. அப்றம் உன்னோட ரிதுவ மறந்தற வேண்டி தான் டா சாய்”, என்று தூரத்தில் இருந்து ஜெய்யின் குரல் கேட்க..

“என்ன மனசுல நினைக்கறதெல்லாம் சொல்லறாரு.. ஐயோ..”, என்று பதறியவன் அவன் பின்னே ஓடினான்.

இவரகள் இருவரும், சூர்யா மற்றும் தியாவிற்காக அந்த வீட்டை அலங்கரித்து இருந்தனர். இது அவர்களின் முதல் திருமண நாள் அல்லவா அதற்குத் தான். ஆனால் அனைத்தும் வீணாகப் போனது தான் பரிதாபம்.

அன்று இருவரும், ஒரே நேரத்தில் தான் வீட்டை அடைந்தனர். ஒன்றாகவே உள்ளே  செல்ல, அங்கிருந்த அலங்காரங்களை பார்த்த சூர்யா தலையில் அடித்து கொண்டான். “இவனுங்கள..”, என்று பல்லை கடிக்க,

தியா அதை பார்த்து பெரிதாக எந்த ரியாக்ஷனும் காட்ட வில்லை, அனைத்து அலங்காரங்களையும் கலைத்தவள். அவர்கள் வாங்கி வந்து சென்று இருந்த கேக்கை மட்டும் எடுத்து பிரிட்ஜ்யில் வைத்து விட்டு தன் வேலைகளை பார்க்க சென்று விட்டாள்.

தியாவிற்கு உணவை வீண் செய்வது பிடிக்காது. கோவதையும் வருத்தத்தையும் உணவின் மீது எப்போதும் காட்ட மாட்டாள்.
அவள் எடுத்து வைத்த கேக்கை சூர்யா திருட்டு தானாமாக தின்று விட்டு, இப்படி ஏற்பாடுகள் செய்ததற்கு ஜெய்யையும் சாய்யையும் துரத்தி துரத்தி சூர்யா அடித்தது வேறு கதை.

கடந்த கால நினைவுகளை, எண்ணி பார்த்து விட்டு, “இன்னைக்கு நான் போட்டு இருக்க பிளான்ல நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வாய போலக்க போறீங்க..”, என்று சத்தமாக சொல்லி கொண்டு இருக்க,

“இல்ல பாஸ் நம்ம வயா தான் போலக்க போறாங்க..”, என்று கூறிய சாய்யை முறைத்தான் ஜெய்..

அவன் திட்டம் என்ன?

தன்னை கிண்டல் செய்த சாய்யை முறைத்து கொண்டு இருந்தான், ஜெய்.

அவனோ அதை பொருட்படுத்தாமல், “பின்ன என்ன பாஸ்.. இருக்கற வேலை எல்லாம் விட்டுட்டு,  நம்ம போன டைம் அவங்க வீட்டுல போய் எல்லா டெக்கரேஷனும் பண்ணுனோம்.. ஆனா என்ன ஆச்சு.. சூர்யா கிட்ட நல்லா நாலு மீதி வாங்குனது தான் மிச்சம்..”, என்று போன முறை சூர்யா அடித்த இடங்களை பார்த்த படி சொல்ல,

“டேய்.. வாய கழுவு முதல்ல, எப்போ பாத்தாலும் இப்படியே சொல்லிட்டு இருந்த அப்றம் ரிதுவ ஆபிஸ் வர வேணாம்ன்னு சொல்லிடுவேன்.. பாத்துக்கோ”, என்று அவன் தோளில் கையை போட்ட படி சொல்ல,

ஜெய் சொன்னதில் மிரண்டவன், “ஐயோ.. பாஸ் இந்த ஐடியா சூப்பரா வேலை செய்யும் நீங்க வேணுன்னா பாருங்க”, என்று  அண்டர் பல்ட்டி அடிக்க,

“நீ சொல்லலனாலும்.. அதான் நடக்கும்.. இந்த முறை என்னோட பிளான் கண்டிப்பா சக்சஸ் ஆகும்”, என்று உறுதியாக சொல்ல,

“நீங்க இப்படியே சொல்லிட்டே இருங்க.. அவங்களுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணி வைச்சா கூட இப்படித்தான் இருப்பாங்க”, என்று மனதில் எண்ண,

“ஒன்னும் பிரோப்ளேம் இல்ல டா சாய் அது வரைக்கும் நம்ம இப்டி பிளான் பண்ணிட்டே இருக்கலாம்.. என்ன.. அவங்க சேர்ந்த பிறகு தான் உன் கண்ணுல ரிதுவ காமிப்பேன்.. எப்டி வசதி”, என்று புருவம் உயர்த்தி கேட்க,

“அட.. என்ன பாஸ் நீங்க.. நான் மனசுல நினைக்கறதெல்லாம் சரியா கண்டு பிடிங்க.. ஆனா யரோடத சரியா சொல்லனுமா.. அதை சொல்லாதீங்க..”, என்று அவன் மறைமுகமாக சொல்ல,

“நீ இப்டி பேசறதுக்கே ஒரு நாள் நல்லா வாங்க போற பாரு டா”, என்று அவனை அதட்ட,

“சரி.. டா சாய் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டயா?.. இல்லையா..?”, என்று கேட்ட ஜெய்யை பார்த்த சாய், “அதெல்லாம் டன் பாஸ்.. நீங்க கவலை படாதீங்க..”, என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.

அவன் சென்ற, பிறகு.. “யரோடத சொல்லனுமா அதை சொல்லாதீங்க”, என்ற அவனுடைய நக்கல் பேச்சு நினைத்து பார்க்க, ஸ்வாதியின் முகம் தான் அவன் முன் வந்து சென்றது. தலையை சிலுப்பி தன்னை நிலை படுத்தி கொண்டான்.

அதே நேரம் அந்த அழுவலத்தினுள் நுழைந்தாள், ஸ்வாதி.  முதலில் தியாவை பார்த்தவள் அவளிடம் சென்றாள். “என்ன மேடம்.. வேலை அதிகமா.. போன் கூட பண்ணல”, என்றபடி அவள் அருகில் அமர,

“அதெல்லாம் இல்ல ஸ்வாதி.. இப்போ தான் உனக்கு போன் பண்ணலாம்ன்னு நினைச்சேன்.. அதுக்குள்ள நீயே வந்துட்ட”, என்று அவளிடம் சமாளிக்க, “ஹான்.. நம்பியாச்சு.. நம்பியாச்சு..”, என்று அவளை நம்பாத பார்வை பார்க்க,

“சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. என்ன உங்க ஆள பாக்காம இருக்க முடியலையா.. ஆஃபீஸ்கே வந்துட்டா..”, என்ற தியாவின் நக்கலில், அவளை பொய்யாக முறைத்தாள் ஸ்வாதி.

“சரி.. சரி முறைக்காம போ.. போய் உன் ஆளப் பாரு..”, என்று தியா சொன்னது தான் தாமதம் ஜெய்யின் அறையை நோக்கி சென்றாள், ஸ்வாதி. வெளியே இருந்து கதவை தட்ட, “எஸ்.. கம் இன்”, என்ற குரல் வந்த உடன் உள்ளே சென்றாள்.

ஸ்வாதியை அங்கு எதிர் பார்காதவன், “நீ.. நீ.. எங்க இங்க”, என்று தடுமாற, அவன் தடுமாற்றத்தை ரசித்த படி, உள்ளே வந்தாள்.

“அத்தை உங்களுக்கும் ரிதுக்கும் சாப்பாடு குடுத்து விட்டாங்க..”, என்று அவனுக்கு பதில் சொல்ல, “ஓ.. சரி குடு”, என்றான் அவளை பார்க்காமல்.

“ஹான். சாப்பாட கைலயா குடுக்க முடியும், வந்து உக்காருங்க.. நானே பரிமாறுறேன்”, என்று சொல்லி அதே அறையில் இருந்த மேஜையை நோக்கி சென்றாள்.

“சரி.. அப்போ ரிதுவயும் கூப்பிடு..”, என்று அவளிடம் தனியாக மாட்டிக்கொள்ள கூடாது என்ற எண்ணத்தில் சொல்ல, “ரிது இங்க இல்ல.. நா உள்ள வரும் போதே பார்த்துட்டேன்.”, என்று கூறிவிட்டு அவனை பார்க்க, அவன் இன்னும் தன் இடத்திலேயே இருந்தான்.

“இப்போ வர போறீங்களா இல்லையா..”,” என்று அவள் மிரட்டுவது போல சொல்ல, அவனும் ஓடிவிட்டான் அவளிடம். உண்மையான பயத்தில் தான். “வெரி குட்.. இப்போ உக்காருங்க..”, என்று நாற்காலியை நோக்கி கையை காட்ட, அவனும் சாவி கொடுத்த பொம்மை போல செய்தான்.

அவன் அமர, அவனுக்கு உணவை பரிமாறினாள், அவனும் நல்ல பிள்ளை போல சாப்பிட ஆரம்பித்தான். அவளும் அருகில் இருந்து அவனுக்கு வேண்டியதை பறிமாறினாள்.

“நீங்க ஈவினிங் எப்போ வருவிங்க”, என்று கேட்க, அப்போதுதான் நியாபகம் வந்தவனாக, “உ.. உன்.. உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்.. இன்னைக்கு சூர்யா தியாக்கு அண்ணிவெர்சரி, அதுக்கு ஆஃபீஸ்ல சின்னதா ஒரு பார்ட்டி இருக்கு.”, என்று பயந்தவாறு சொல்ல,

“சோ.. இதான் உங்க அடுத்த பிளானா.. என்று அவள் கேட்கவந்தவள் அவன் முறைபடஹி பார்த்து, “இல்ல இதான் உங்க அடுத்த பிளானான்னு கேட்க வந்தேன்” என்று சமாளிக்க , ஆம் என்பது போல தலையை ஆட்டினான். “உங்களுக்கு எதுக்கு இந்த ஆகாத வேலை..”, என்று அவனுக்கு ரசத்தை உற்றியவாறே அவள் வினவ , அவன் அமைதியாக இருந்தான்.

“இதுக்கு மட்டும் பதில் வராதே..”, என்று சலித்து கொண்டவள், “சரி ஈவினிங் ரொம்ப நேரம் ஆகுமா..”, என்று மீண்டும் கேட்க, “ரொம்பலாம் ஆகாது ஒரு 9 குள்ள வந்துடுவேன்”, என்று சொல்லும் போதே உண்டு முடித்து இருந்தான்.

அவளும் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு, “சரி சூர்யா கிட்ட, அடி வாங்காம சீக்கிரம் வந்து சேருங்க..நான் கிளம்பறேன்.”, என்று கூறியவள், அங்கிருத்து கிளம்பினாள். 

“இவ வேற வீனா பயம் காமிச்சுட்டு இருக்கா” என்று நொந்தவன் யோசிக்க தொடங்கினனான் அடுத்த திட்டத்தை.

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்