202 views

அத்தியாயம் – 2

கண்ணில் எவ்வித உணர்வுமின்றி ராஜத்தோரணையில் அழுத்தமாக காலடியுடன் உள்ளே வந்த துரியோதனை ஒரு வித கலக்கத்தோடு பார்த்தனர் கைதிகள் அனைவரும்.

ராஜாவாக தான் அவர்கள் உயிரை பாசக்கயிறு போட்டு பிடிக்கும் எமதர்மராஜாவாக தெரிந்தான். அவர்கள் பாவனையின் அர்த்தம் புரிந்தாலும் அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அரங்கத்தின் மையத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தான், அவனது அருகாமை இளவரசியை கூட சற்று அசைத்து பார்த்தது என்று சொன்னால் மிகையாகாது.

அவனது விழியசைவில் தன்னை மீட்டவள், எழுந்து மாயோன் பொழில் சிறை பறவைகளுக்கு அறிவிக்கை விடுக்க ஆயத்தமானாள்.

“மாயோன் பொழில் சிறைவாசிகளுக்கு இந்நாட்டின் முடிச்சூடா இளவரசியின் முத்தான வணக்கம். ஓராண்டு காலம் நீங்கள் அனைவரும் காத்திருந்த நாள் இதோ வந்துவிட்டது.

லட்சக்கணக்கானவர்கள் பங்கு பெற்ற தேர்வில் தகுதி பெற்று இங்கே நீங்கள் அனைவரும் எதிர்பார்ப்பது முழுமையான விடுதலையை தானே.

நமது ஒப்பந்தம் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நம்புகிறேன், இருப்பினும் ஒருமுறை போட்டியின் விதிமுறைகளை கூறும் முன் நினைவூட்ட வேண்டியது எனது கடமையாகும்.

தற்போது ஒவ்வொரு குழுவிலும் இருப்பவர்களை கணக்கிட்டால் சுமார் ஆயிரம் பேர் இங்கே விடுதலைக்காக காத்திருக்கின்றீர். இவ்வருடம் புதிதாக வந்திருக்கும் முப்பத்தி ஏழு பேரும் அதில் அடக்கம்.
இங்கே வந்து இரண்டு வருடத்திற்கு பிறகே மாயோன் பொழில் விடுதலை போட்டியில் பங்கு பெற முடியும். இதுவே நமது முதல் விதி.

இரண்டாம் விதி, எக்காரணத்தை கொண்டும் இங்கிருந்து தப்பிக்க முயற்சிக்க கூடாது அப்படி முயற்சித்தால் அந்த நொடியே உங்களுக்கான மரணதண்டனை எந்த பாகுபாடுமின்றி அவ்விடத்திலேயே அளிக்கப்படும்.

மூன்றாம் விதி, இங்கு வந்த ஐந்து வருடத்திற்குள் நீங்கள் போட்டியில் முதல் கட்டத்தையாவது தாண்டியிருந்தால் மட்டுமே இங்கேயே இருக்க அனுமதி. ஐந்தாவது வருடத்தின் போட்டியில் தேர்வு பெறாதவர் அரசு மரியாதையுடன் வெளியேற்றப்படுவீர்.

நான்காம் விதி, ஒரு நாளில் உங்களுக்கு விதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே சொற்களை பயன்படுத்தி பேசவேண்டும். அதாவது உங்கள் பேச்சுரிமையை மாயோன் பொழிலே நிர்ணயம் செய்யும். அதற்கு மேல் நீங்கள் பேசவேண்டும் என்றால் உங்களுக்கு அளிக்கப்படும் டாஸ்க்களை நிறைவேற்றி கூடுதலாக சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.

ஐந்தாம் விதி, எதிர்பாலினத்தினர் இங்கு இல்லாதப்பட்சத்தில் சக கைதிகளின் விருப்பம் இல்லாமல் அவர்களை பாலியல் வன்கொடுமை ஒருவர் செய்தார் எனில் கடுமையான தண்டனையை பாரபட்சம் காட்டாது நாட்டின் தளபதியால் நிறைவேற்றப்படும்.

இறுதியாக, போட்டியில் பங்குபெறும் பொழுது தங்களுக்கு ஏற்படும் சேதாரத்துக்கு மாயோன் பொழிலோ? உங்கள் அரசாங்கமோ? எந்த பொறுப்பும் ஏற்றுக்கொள்ளாது. உங்கள் உறவினரோ? உங்களை சார்ந்தவரோ? எந்தவித பிரச்சனையும் செய்யாது அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சரி இனி உங்களுக்கான போட்டியை பற்றி பார்க்கலாம். இன்னும் பத்து நாட்களில் முதல் கட்டப்போட்டி நடக்க இருக்கிறது. ஆயிரம் நபரில் இருந்து முதல் சுற்று இறுதியாக வெறும் முந்நூற்றி ஐம்பது நபரே தேர்ந்தெடுக்கப்படுவீர்.

அதனை தொடர்ந்து அடுத்த மூன்றாவது நாள் இரண்டாம் கட்டப்போட்டி நடைபெறும், அதன் இறுதியில் பதினோரு நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்.

இறுதி சுற்றில் வெற்றி வாகைச்சூடும் நபருக்கு அனைத்து தண்டனையும் தள்ளுபடி செய்து, உங்கள் அரசாங்கத்திடம் இருந்து பல சிறப்பு சலுகைகள் பெற்று தரப்படும்.

மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு நீங்கள் செல்லும் போது, உங்களுக்கென தனி அங்கீகாரம் கிடைக்க மாயோன் பொழில் ஒரு வழிச் செய்யும்.

ஒவ்வொரு போட்டிக்கு முன்பு அந்த போட்டியை பற்றிய குறிப்பும் அதன் விதிமுறைகளும் உங்களுக்கு தெரிவிக்கப்படும். போன வருடம் போல வெளியில் இருந்து உங்களை உற்சாகப்படுத்த வெளியாட்களை அனுமதிக்கப்படுவார்கள்.

ஒருமுறை போட்டிக்குள் காலடி வைத்து விட்டால், பாதியில் ஒரு நபரால் வெளியேற இயலாது. போட்டியில் முழுவதுமாக பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம்.

ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களுக்கான பிரத்யேகமாக வரும் அறிக்கையின் பின் பக்கத்தில் எழுதிக்கொடுக்கவும், அதற்கான பதில் அடுத்த அறிவிப்பின் போது பதிலளிக்கப் படும்.” என்று அன்றைய நிகழ்ச்சியில் நீளமான உரைக்கு முற்றுப்புள்ளி வைத்து அவள் இருக்கையில் அமர்ந்தாள் மாயோன் பொழில் இளவரசி.

அவள் வந்ததும் எழுந்தவன், “உங்களுக்கான தனி அறிவிப்பு உங்கள் அறையில் வைக்கப்பட்டிருக்கிறது, ஒருமுறை படித்துப்பார்த்து கையெழுத்திட்டு உங்கள் பிரிவு தலைமை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்கவும். இப்பொழுது நீங்கள் உங்கள் அறைகளுக்கு சென்று, இன்றைய டாஸ்களுக்கு ஆயத்தமாகலாம்” என்று முடிக்கவும் அவரவர் கலைந்து அவரவர் கட்டிடத்தை நோக்கி நடக்க, விஜய் மட்டும் அந்த அரங்கத்தின் மையத்தில் நின்றவளை பார்த்தவாறு நின்றிருந்தான்.

“விஜய் இன்னும் என்னடா இங்க நின்னு பண்ற? டாஸ்க்கு லேட்டானால் புனிஷ்மென்ட் இருக்குனு மறந்துவிட்டதா?”
“மறக்க கூடிய விஷயமா அது! எனக்கு மறக்கவெல்லாம் இல்லை. எனக்கு இளவரசிக்கும் இந்த ப்ரெசிடெண்ட்டுக்கும் நடுவில் ஒரு உறவு இருக்க மாதிரி இருக்கு!”

“அதைப்பற்றி யோசிக்கும் நேரமா இது? சீக்கிரம் வா! சாப்பிடும் பொழுது இதைப்பற்றி பேசிக்கொள்ளலாம்” என்று அவனை இழுத்து சென்றான் செழியன்.
இருப்பினும் இரண்டு வினாடிகள் தாமதமாக சென்றுவிட அவர்கள் அறை பூட்டப்பட்டுவிட்டது.

இருவரும் தங்களை நொந்தவாறு, அருகே இருந்த பொத்தானை அழுத்த நேரம் தவறியதால் அவர்களுக்காக ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருப்பதை அங்கிருந்த சிவப்பு வர்ண எழுத்துக்கள் சுட்டிக்காட்டியது.
எல்லாம் தலையெழுத்து என்று தலையில் அடித்துக்கொண்ட செழியன், அதில் கூறியதை செய்யும் இடத்திற்கு சென்றான்.

விஜய்யின் மனமோ அவனை காறித்துப்ப துடைத்துப்போட்டு செழியனை பின் தொடர்ந்து சென்றான். ஆதவனின் செழுமை அந்த சிமெண்ட் தரை முழுவதும் ஆதிக்கம் செலுத்த, அங்கு போடப்பட்டிருந்த அமைப்பிற்கு சென்றனர்.

ஒருமுறை முழுவதும் அவ்விடத்தை பார்த்தான் செழியன், முதலில் கருங்கற்கள் தங்கள் இருப்பை காட்டும் விதமாக நூறு மீட்டர் படுத்து மட்டுமே சவாரி செய்யும் அமைப்பை தாண்டினால், அடுத்து நூறு மீட்டர் உப்பு பாதையை உருண்டு மட்டுமே கடக்க முடியும். அதை தாண்டி நூறு மீட்டர் மலைமேடு அமைப்பில் இருக்கும் பாதையை மண்டியிட்டு கடந்து எதிரே இருக்கும் பொத்தானை அமுக்கி நிறைவு செய்தால் மட்டுமே உணவு முதல் அன்றைக்கான வேலைகள் அனைத்தையும் செய்ய அவனுக்கு அனுமதி. அதில் ஒன்று தவறினால் கூட கூடுதல் டாஸ்க் அவன் பெயரில் ஏற்றப்படும் அதை செய்து முடிக்காவிடில் உணவு மறுக்கப்படும்.

திரும்பி விஜயை முறைத்து அவனது டாஸ்கை செய்ய, விஜயோ அவனது டாஸ்கை பார்த்து விழி விரித்தான். அவனுக்கும் அதே முந்நூறு மீட்டர் தொலைவே ஆனால் அவனுக்கான தடுப்புகள் செழியன் போல் அல்லது வேறு அமைப்பை கொண்டிருந்தது. அவன் விதியை திட்டி அதை பார்க்க, ஏழடி சுவர் அவனை மறைத்திருந்தது.

‘அந்தப்பக்கம் என்ன ஏழரை இருக்குனு தெரியலையே இவனுக்கு மட்டும் இவ்வளவு ஈஸியா இருக்கே’ என்று மனதில் நினைக்க மட்டுமே முடிந்தது பின் அதை சொல்லி செழியனிடம் யார் வாங்கிக்கொள்வது?

ஆழ்ந்த மூச்செடுத்து பக்கவாட்டில் தொங்கிய கயிறை பிடித்து வழுக்கும் அந்த சாய்ந்த சுவரில் கஷ்டப்பட்டு ஏறி அந்தப்பக்கம் செல்ல, அடுத்த தடையாக வழுக்கு பாதை இருந்தது பலமுறை வழுக்கி விழுந்து, எழுந்து விழுந்து என்று மற்றுமொரு நூறு மீட்டரை தாண்டி அடுத்த தடுப்பிற்கு செல்ல அந்த பாதை முழுவதும் சகதியாக இருந்தது. ஏற்கனவே விழுந்த இடமெல்லாம் உள்ளுக்குள் வலிக்க, அவ்விடத்தை எப்படியாவது தாண்டிவிட வேண்டும் என்று பேரும் பாடுப்பட்டு தாண்டி செல்ல அங்கு ரத்தக்காயங்களுடன் படுத்திருந்த செழியனை பார்க்க மனமெல்லாம் கனத்தது.

தனது கவனச்சிதறலால் இவனும் தண்டனை அனுபவித்து கஷ்டப்படுகிறானே என்று நொந்து அத்தனை வலியிலும், செழியனை தூக்கப்போக,
“விஜய் லேட்டாக போது சைன் பண்ணனும் அந்த அறிவிக்கையில் வா!” என்று கஷ்டப்பட்டு எழுந்து தத்தி தத்தி நடந்து சென்றான் செழியன்.

இருவரும் அவர்கள் அறைக்கு செல்ல அவர்களுக்கான மருத்துவக்குழு அங்கே காத்திருந்தது. இவர்களும் தாமதிக்காமல் குளித்து வந்து காயங்களுக்கு மருந்திட்டு உள்ளே செல்ல பேனாவுடன் அறிவிப்பு கடிதம் மேஜையில் வைக்கப்பட்டிருந்தது.

இதை எல்லாம் எப்பொழுதும் தான் செய்வார்களோ என்று கேள்வி எழுந்தாலும் உடல்வலி அதற்கு மேல் சிந்திக்க விடாமல் அவர்களை படுத்த, கையெழுத்திட்டு அருகே இருந்த பெட்டியில் திணிக்க அது பாந்தமாக உள்ளே சென்றுவிட்டது.

காலையுணவிருக்கான அழைப்பு வர, இருவரும் வலிகளை பொறுத்துக்கொண்டு உணவறைக்கு சென்றனர். இங்கே வந்ததில் இருந்து அவர்கள் கற்றுக்கொண்டது இங்கே உயிர் வாழ உணவு முக்கியம் அதுவும் இவர்களது தண்டனைகளை அனுபவிக்க கூடுதல் சத்து அவர்களுக்கு முக்கியம்.

எனவே உணவை மட்டும் எதற்காகவும் தவிர்க்கமாட்டார்கள். உணவை உண்டு முடித்து தங்கள் அறைக்கு சென்றவர்கள், சிறிது ஓய்வெடுத்தனர். அவர்களுக்கான வேலை எப்பொழுதும் வேண்டுமானாலும் வரக்கூடும், கிடைக்கும் நேரத்தில் மனத்திற்கும் உடலிற்கும் ஓய்வளிப்பது மிக முக்கியம்.

தூங்கி எழுந்த விஜய்க்கு செழியனின் நிலையை காண ஆவல் ஏற்ப்பட, முகத்தை கழுவி அவன் அறைக்கு சென்றான். அப்பொழுது தான் கண்ணை விழித்த செழியன் விஜயை பார்த்து சிரித்து, “போன தடவையோட அடிக்கொஞ்சம் அதிகமோ?” என்று கிண்டல் செய்தான்.

“இப்போ நம்ப மாயோன் பொழிலில் தானே இருக்கோம் எனக்கு என்னவோ, எமலோகம் லைட்டில் இருக்க மாதிரியே இருக்கு?” என்ற விஜயிடம்

“டேய் மார்னிங்கான உன் வார்த்தைகளை பேசி முடிச்சுட்ட இதற்கு மேல் பேசணும்னா டாஸ்க் செய்யணும்!” என்று செழியன் நினைவு படுத்த வாயை மூடிக்கொண்டு அவனிடம் செய்கையில் பேச ஆரம்பித்தான்.

“இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு! நீ வாய்விட்டு பேச! ஏதாவது செய்து டாஸ்க் வாங்கி என்னையும் டாஸ்க் செய்ய வைத்துவிடாதே! உடம்பெல்லாம் ரணமா இருக்கு!” என்று என்று வலியின் பிடியில் உரைத்தான் செழியன்.

“சாரி!” என்று செய்கையால் கூறி அங்கிருந்து நாற்காலியில் அமர இருவரும் பார்வையால் மற்றவரின் காயத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரம் அந்த கட்டிடமே பச்சை விளக்கால் ஒளிர ஆரம்பித்தது.

‘யாரு டா அந்த புது ஆடு மாயோன் பொழிலில் தலையை விட்டது’ என்று அனைவரும் மனதில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொண்டிருந்த ஜீவனோ சந்தோசமாக பாதி தெரிந்தும் தெரியாதுமாக நரகத்தின் வாயிலில் காலடி வைத்தான்.

 

சென்ற பகுதிக்கு கருத்து மற்றும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. 

 

மாயோன் பொழில் சற்று வித்தியாசமான கதை களம். Violence ஆக இருக்கும் என்பதை பதிவு செய்து கொள்கிறேன். ஆக்ஷன் திரில்லர் வகை சார்ந்தது. 

 

போக போக கதையின் போக்கிற்கு இது தேவை என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  7 Comments

  1. Sangusakkara vedi

   Ada Ada ada parunga sir en chellaththa mayon pozhil la no paliyal vankidumai nu potrukan…. Super la ini yaaravathu paliyal van koduma panni parunga da pappom…. My mind voice en thalaya mathikama enna thairiyam iruntha intha vijay ilavarasiya sight adipan… En chlm pathucha pakkala ya nu teriyalaye … Sari vidu aana en thuri chlm manasu yaruku varum… Kayathoda varuvanga nu medical kid ah avangalukku munnadi vara vachu haiyooo evlo nalla manasu…. Nan la unaku fan ah irukura vara Unnao yarum adaikka mudiyarhu chlmme… Yar pa athu puthu entry?????

  2. Archana

   சில்க்கு🤩🤩🤩🤩 செம்ம மாஸா இருக்கு என்ன பர்ஃபாமன்ஸ் பண்ணுறாங்க. டாஸ்க்கும் தராங்க வலிக்கு மருந்தும் தராங்க கொடுமை பண்ணிட்டு தட்டி,தாலட்டி கொடுக்க யாருக்கு மனசு வரும்😝😝😝😝😝 இந்த விஜய், செழியன் டயலாக் அப்ப தூய தமிழும், நம்ம நார்மல் தமிழும் மிக்ஸ் ஆகுது அது என்னன்னு மட்டும் செக் கரோ🙂🙂🙂🙂

  3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். மிகவும் திகிலாகவும் மர்மமாகவும் உணர வைப்பது போன்று அமைந்துள்ள தங்களின் எழுத்து நடையும், வசனமும். மிகவும் அசத்தல். பயமாகவும் அதே நேரம் ஆர்வமாகவும் அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  4. Uma Sumiravan

   வித்தியாசமான கதைக்களம். காயமும் ஏற்படுத்திவிட்டு அதற்கு மருந்தும் இடுகிறார்கள். இன்டிரெஸ்டிங். அவர்கள் இருவரது நட்பு ஆழமாக இருக்கிறது. அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  5. Oosi Pattaasu

   ஒட்டுமொத்தமும் ரிஸ்கு, மாயோன் பொழில்ல ஒன்னு மிஸ் ஆனாலும் டாஸ்க்கு…

  6. kanmani raj

   பேருதான் மாயோன் பொழில், பொழைக்கலாம் நினைச்சு உள்ள வந்தா அது ஒரு மரண ஜெயில்…