Loading

அத்தியாயம் – 2

சென்னையின் பிரதான சாலையை கிழித்துக்கொண்டு போனது ஆத்மிகாவின் புகாட்டி திவோ.
“கம் ஆன் ஆத்மி… இன்னும் ஸ்பீடா போ…. ” என்ற ஆரவரத்துக்கு ஏற்றார் போல சற்று வேகத்தை அதிகப்படுத்தினாள்.

ஒரு மணி நேரத்தில் வர வேண்டிய கல்லூரிக்கு அரை மணி நேரத்தில் வந்து இறங்கினர் ஆத்மிகாவும் அவளுடைய தோழமைகளும். காரை பார்க் செய்துவிட்டு அவள் வரும் வரை காத்திருந்து அவளோடு வகுப்பறைக்கு சென்றனர்.

வெகு நேரமாக அவளுக்காக காத்திருந்த விக்ரம், அவளை கண்டதும் அவளிடம் வந்தான்.
“எவ்வளவு நேரம் வெயிட் பண்றேன். சீக்கிரம் வரமாட்டியா?” என்று அவள் கையை அழுத்தமாக பற்றினான்.

அவன் பிடித்தது வலித்தாலும் சுற்றி இருப்பவர்களை கருத்தில் கொண்டு, “டிராபிக்ல மாட்டிக்கிட்டோம் விக்ரம்” என்று மெதுவாக கையை இழுத்துக்கொண்டாள்.
அதில் சிறிது கோபம் எட்டிப் பார்க்க, “உன் கையை நான் பிடிக்க கூடாதா ஆது?” என்று நொடியில் தன் பாவனையை மாற்றி வருத்தப்பட்டான் விக்ரம்.

“என்ன விக்ரம் இப்படி சொல்லுற. நீ பிடிச்சதுல கை லேசா வலிச்சுது”
“சாரி பேப் சாரி. ஹார்ஷா பிஹேவ் பண்ணிட்டேனா” என்று பதறினான்.

“இல்லை விக்ரம். லைட்டா தான். வா போகலாம்” என்று அவனது கவனத்தை திருப்பினாள். இல்லையென்றால் இதையே இன்று முழுக்க பேசி அவளாகவே எனக்கு வலிக்கவே இல்லை சாரி என்று சொல்ல வைத்து விடுவான்.

அவரவர் இருக்கையில் அமர்ந்து நாளை முடிக்க வேண்டிய ஸ்கிரிப்ட்டை பற்றி பேசிக்கொண்டிருக்க, முதல் வகுப்பிற்கான மணி ஒலித்தது. அவர்கள் அதற்கு அசராது தங்கள் கருத்தை விவாதிக்க, வகுப்பறையுள் நுழைந்தான் அவன். அவ்வளவு நேரம் பேசிய வாய்கள் அனைத்தும் பூட்டிக்கொண்டது. மாணவிகள் அவனழகில் மயங்கியும் மாணவர்கள் யாரிவன் என்று தோரணையிலும் அமர்ந்திருந்தனர்.

கையில் இருந்த அட்டெண்டன்ஸை லாவகமாக பிடித்து, அவன் பாட்டிற்கு பெயர்களை வாசிக்க கைகளை உயர்த்தி தங்கள் இருப்பை காட்டினர். அட்டெண்டன்ஸ் எடுக்கும் வரை காரியத்தில் கண்ணாக இருந்தவன்,
“ஹாய் கைஸ். நான் ஆரவ் உங்களோட மீடியா ஓரியென்டேசன் ப்ரோபசர். ஒன் பை ஒன்னா எழுந்து உங்களை சார்ட்டா இன்ட்ரோ பண்ணிக்கோங்க.”

அந்த வகுப்பு பாதி தங்களை அறிமுக படுத்திக்கொள்வதிலும் மீதி சிறு சிறு கேள்வி பதில்களிலும் நிறைவேறியது. அவன் சென்றதும் தான் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டாள் ஆத்மிகா. அவன் அவனே தான் என்று ஆரவ்வின் வருகை அவளை முற்றும் குழப்பி மூச்சிறைக்க வைத்தது.

பழைய நினைவுகள் மறந்துவிட்டது என்று அவள் நினைத்த அனைத்தும் சிறு தடங்கல் இல்லாமல் மனதில் ஓட ஆரம்பிக்க அவள் மனம் துவண்டு விட்டது. வேகமாக எழுந்து வெளியே சென்றவள் அவனை தாண்டி முன்னே சென்றாள். யாரோ ஒருத்தியை போல அவளை கடந்து ஆசிரியர் அறைக்குள் சென்றவனை வெறித்து பார்த்தாள். நொடி கூட அங்கே நிற்க முடியாமல் வகுப்பறைக்கு சென்று அவள் பையை எடுத்துக்கொண்டு யாரிடமும் எதையும் கூறாமல் காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

காரை பார்த்தவாறு நின்றிருந்த ஆரவிற்கு, அவளது தோற்றம் முதல் விக்ரமின் காதல் வரை அனைத்தும் வலியை கொடுத்தது. வேண்டாம் என்று சென்றவளை இப்படி தான் காண வேண்டுமோ என்று உள்ளுக்குள் மரிந்து போனான்.

***

வேகமாக காரை ஓட்டிய ரித்தீஷை தன் வார்த்தையால் குத்திக் கிழிக்க ஆரம்பித்தாள் நேத்ரா.
“ரித்தீஸ் நீ எனக்கு தான பி.ஏ? இல்லை டைரக்டர் சாணக்கியனுங்கா?”

“மேடம் அது…..”
“ஸ்டாப் யுவர் எஸ்பிளானேசன். வர வர யாரு யாருக்கெல்லாம் நீ பயந்து நடுங்க போறியோ?”
“எப்பவும் எந்த ஸ்பீட்ல போவியோ அதே ஸ்பீட்ல போ. இல்லனா நீ இறங்கு நானே டிரைவ் பண்ணிக்கிறேன்.” என்று அவள் கத்த மிதமான வேகத்தில் காரை செலுத்தினான்.

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்வதற்குள் நந்தாவிடம் இருந்து இருபது அழைப்பு ரித்தீஸ்க்கு வந்துவிட்டது.
அதையெல்லாம் சட்டை செய்யாத நேத்ரா காதில் ப்ளூடூத்தை மாட்டி பாட்டை ரசிக்க ஆரம்பித்தாள். கண்ணாடி வழியே பார்த்தவனுக்கு மனதில் கேட்க ஆயிரம் கேள்வி இருந்தாலும் கேட்க முடியாத நிலையில் அல்லவா அவன் இருக்கிறான்.

வழி முழுவதும் அவனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மனதில் ஓட்டி பார்த்தவள், இறங்கி அவனை நோக்கி நடந்தாள்.

பைட் சீனுக்கான ஸ்கிரிப்ட்டை ஸ்டண்ட் மாஸ்டரிடம் கொடுத்து அது எப்படி அமைய வேண்டும் என்று அவரிடம் எடுத்துரைத்து திரும்ப, “ஹாய் சார்” என்று அவன் முன் போய் நின்றாள்.

‘இடியட்’ என்று வாயசைத்தவன், “கேரவன்ல வெயிட் பண்ணுங்க வரேன்”
‘டெவில்’ என்று மனதில் திட்டியப்படி அவளது கேரவனுக்கு விரைந்தாள்.

அவள் உள்ளே நுழைந்ததும் புயல் வேகத்தில் உள்ளே வந்து, “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க நேத்ரா?”
“ஹான் உண்மைய சொல்லவா பொய் சொல்லவா?

“இடியட். இந்த கேரக்டர்ல நடிக்க எத்தனை பேர் தவம் இருக்காங்க தெரியுமா? யூஸ்லெஸ் பெல்லொவ் உன்னை போய் தெரியாம சூஸ் பண்ணிட்டேன்.”
“அச்சோ இப்போ ஒன்னும் பண்ண முடியாதே!” என்றாள் நக்கலாக.

“இங்க பாரு உன் நக்கல் எல்லாம் வேற யாருகிட்டயாவது வச்சுக்கோ”
“உங்ககிட்ட வைச்சுகிட்ட என்ன பண்ணுவீங்க? அடிப்பீங்களா?” என்று நக்கலாக பேச அவன் விட்ட அறையில் இரண்டடி பின்னே சென்று விழுந்தாள்.

“ஏய்” என்று கத்தியவளை,
“யாருகிட்ட உன் திமிர காமிக்கிற. கால் சீட் கொடுக்கும் போதே டைமிங் எல்லாம் இல்லை. எப்போ ஷூட் இருக்கோ வரணும்னு தானே பேசிருந்தோம். இப்போ என்ன டி ஓவர் மயிரா பண்ணிட்டு இருக்க?”

“சாணக்கியன் மரியாதையா பேசுங்க!”
“உனக்கு என்ன டி மரியாதை? நல்லா உன் அப்பா பேரை யூஸ் பண்ணி உழைக்காம மேல போய்டலாம்னு நினைக்கிறியா?”

“திஸ் இஸ் டூ மச் சாணக்கியன்”
“ஒழுங்கா நடிக்க முடியும்னா நடி இல்லை போய்கிட்டே இரு. மொக்கை ஹீரோயினை கூட என்னால டாப் ஹீரோயினா மாத்த முடியும். என்னமோ பெரிய இவனு நீயே உன்னை நினைச்சுட்டு இருக்க! போடி” என்று வெளியே சென்றுவிட்டான்.

அவமானமாக இருந்தது நேத்ராவிற்கு எப்படியாவது அவனை பழிவாங்க நினைத்தவள் அத்தனை யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். கலைந்த கேசத்தை சரி செய்து முகத்தில் மாஸ்க் போட்டு வேகமாக காரை நோக்கி சென்றாள் . அவள் செல்லும் காட்சியை பார்ப்பவர்களுக்கு ஏதோ இருவருக்கும் நடுவே காரச்சாரமா நடந்தது புரிந்தாலும் மேலும் அதை கிண்ட முடியாத நிலை .

மொத்தமாக அவனை வீழ்த்த வஞ்சதை மனதில் பூசி கொண்டாள். காதல் என்று அவனிடம் போய் நின்றது தவறோ அதனாலோ என்னவோ தன்னை மிகவும் கீழ்த்தரமாக நடத்துகிறான் என்று நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை .

நேராக நித்திலனிடம் சென்றவள், “அண்ணா நான் படத்தில இருந்து விலகிக்கிறேன். அதுக்கான நஷ்டத்தை நானே கொடுத்தறேன். என்ன ப்ரோஸஸோ நீங்க பார்த்து பண்ணிருங்க.” என்று நிறுத்தி நிதானமாக பேசினாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், “அடிச்சானா?” என்றான்.
பதில் கூறாது அவனையே பார்த்தவள், “நான் வீட்டுக்கு போறேன்” என்று எழுந்தவள் பின்னே வந்து நின்றான் சாணக்கியன்.

எழுந்து அவன் சட்டையை நித்திலன் பிடிக்க மெதுவாக அதை விலக்கியவனை முறைத்து,
“நீ கிளம்பு நேத்ரா” என்று அவளை அனுப்பி வைத்து சாணக்கியனிடம் பேசினான்.

“அவ பண்ணது தப்பாவே இருந்துட்டு போகட்டும் நீ யாரு டா அவளை அடிக்க. பொம்பள பிள்ளை மேல கை வைக்கிறது என்ன பழக்கம். இதை உன்கிட்ட எதிர்ப்பார்கல. அவ இந்த படத்தில இருந்து விலகிக்கிற. உனக்கு யாரை போட்டு எடுக்கணுமோ எடுத்துக்கோ. அக்ரீமெண்ட் கான்செல் பண்ற போர்மலிட்டி அப்போ சொல்லுறேன்.”

“எனக்கு நேத்ரா தான் நடிச்சு கொடுக்கணும்.”
“என்ன டா விளையாடுறியா? இவ்வளவு ஆனதுக்கு அப்பறம் அவ எப்படி ஓகே சொல்லுவா?”

“நான் பேசுறேன்.” என்றவனை வெட்டவா குத்தவா என்று பார்த்தான்.
“கோவத்தில் கை நீட்டிட்டேன். தப்பு தான். நான் மன்னிப்பு கேட்டு அவளை நடிக்க வைக்கிறேன். இதை உங்கப்பா காதுக்கு போகாமல் பார்த்துக்கோ”

“என்ன எழவோ பண்ணி தொலை. இன்னொரு தடவை அவள் மேல கை வைச்ச பிரண்ட்னு கூட பார்க்க மாட்டேன் கொன்றுவேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தவனின் குரல் நீ மீறினால் எதையும் செய்வேன் என்ற கோபம் புதைந்திருந்தது.
“சரிங்க சார்” என்று பயந்ததை போல் பாவனை செய்து, நேத்ராவிடம் பேச எண்ணி அவளது அலுவலகத்திற்கு சென்றான்.

‘உன் தங்கச்சியை அடிச்சிட்டு உங்கிட்டயே சாதாரணமா பேசுறான். நீயும் அமைதியா இருக்க. வெக்கமா இல்லையா?’ என்று நித்திலனின் மனசாட்சி அவனை காரித்துப்பியது.
தங்கச்சியை விட ஒரு நூல் நண்பனின் மேல் பாசம் அதிகமாக இருந்தது. இதை அறிந்ததாலோ என்னவோ தனக்காக அவனிடம் நியாயம் கேள் என்று நேத்ரா கேட்கவில்லை.

நித்திலனுக்கு சாணக்கியன் மீது அப்படி என்ன பாசமோ? நித்திலனுக்கு மட்டுமா இல்லை நேத்ராவுக்கும் அவன் மீது அளவு கடந்த காதல் தான். இல்லாமலா தனக்கு வேண்டாம் என்று ஒதுக்கிய நடிப்பை தனது லட்சியமாக எடுத்திருக்கிறாள்.

‘அன்னைக்கு அவ்வளவு பேசிட்டு எந்த மூஞ்சிய வைச்சிகிட்டு டி என் முன்னாடி தைரியமா வர? என் காதலுக்கும் சரி என் கதைக்கும் சரி நீ கொஞ்சம் கூட தகுதியானவ இல்லை. இந்த மானங்கெட்ட மனசு தான் அதை புரிஞ்சுக்காம உன் பக்கம் யோசிக்குது. எல்லாத்துக்கும் இன்னைக்கு ஒரு முடிவு கட்டுறேன். அது தான் நம்ப எல்லாருக்கும் நல்லது என்று விவகாரமாக ஒரு முடிவை எடுத்து அவளை உயிரோடு வதைக்க முடிவெடுத்து விட்டான்.

அலுவலகத்திற்கு வந்த நேத்ராவின் மனம் முழுவதும் அவளவனே நிறைந்திருந்தான்.
‘அப்போ நம்ப காதல் எல்லாம் நீங்க சொன்ன மாதிரி நடிப்பு தானா? என்னை விட கவி தான் உங்களுக்கு முக்கியமா? நான் உங்களுக்கு எப்பவும் வேண்டாமா?’ என்று மனதிற்குள் கதறினாள். வாய்விட்டு அழுகக்கூட முடியாத அவளது வாழ்க்கையை முற்றிலும் வெறுத்தாள்.

“நேத்ரா!” என்ற சாணக்கியனின் அழைப்பில் நிமிர்ந்தாள்.
“சொல்லுங்க சார்”
“சாரி உன்கிட்ட அப்படி நடந்துகிட்டதுக்கு. அதுக்காக நீ பாதில விலகாதே”

“உங்களால் தான் சுமாரான ஹீரோயின கூட சூப்பர் ஹீரோயினா மாத்த முடியுமே! இப்ப என்ன என்கிட்ட வந்து, போகாதனு பேசிட்டு இருக்கீங்க? உங்களுக்கு தான் போறேன்னு சொல்ற யாரையும் பிடிச்சு வைக்கிற பழக்கம் இல்லையே சார். திருந்திட்டீங்களா என்ன?”

“தேவையில்லாம பேசாத டி. நான் நம்பள பத்தி பேச வரல. என் படத்தை பத்தி பேச வந்திருக்கேன்”
“எனக்கு தான் தெரியுமே. எப்பவும் நீ ஒரு சுயநலவாதினு”

“என்ன தான் டி உன் பிரச்சனை? எதுக்கு என் உயிரை எடுக்கிற? என்னை நிம்மதியா விட மாட்டியா?”
எட்டி அவன் சட்டையை பற்றியவள், “நானா டா உன் பின்னாடி சுத்தினேன்? நானா டா லவ் சொன்னேன்? நானா டா நீ இல்லனா உயிர விட்ருவேன்னு சொன்னேன். நானா டா என் தேவை முடிஞ்சதும் டிஸு பேப்பர் மாதிரி கசக்கி போட்டேன். த்து நீயெல்லாம் என்கிட்ட பேசவே தகுதி இல்லை போய்ட்டு!” என்று ஆங்காரமாக கத்தினாள்.

“ஹே என்ன டி சம்பந்தம் இல்லமா பேசுற? நான் என்ன கேக்குறேன் நீ என்ன பேசுற? நான் பர்சனல் பத்தி பேச வரல எனக்கு என் ப்ரோபஷன் முக்கியம். முடிவா சொல்லு நடிக்க முடியுமா முடியாதா?
“எனக்கு ரெண்டும் ஒன்னு தான். முடியாது டா உன்கூட என்னால வேலை பார்க்க முடியாது. என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்றவள் அவன் சட்டையை பற்றி கேரவனில் அவன் கொடுத்த அறையை திருப்பி ஒன்றுக்கு இரண்டாக கொடுத்தாள்.

 

….. வளருமா காதல்……

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்