672 views

அத்தியாயம்  2 ❣️

தெருவை அடைந்த இளந்தளிர் தனது பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ,  தங்கை சுபாஷினிக்காக பத்து ரூபாய்க்குச் சாக்லேட் வாங்கி விட்டு , அறைக்குத் திரும்பினாள்.

ங்கே இரண்டாவது ட்ரிப்ஸ் ஏறி முடிந்திருந்த நிலையில் , சுபாஷினி கண் மூடி இருந்ததைப் பார்க்கவும் அருகில் சென்றாள் இளந்தளிர். 

” சுபா ,உனக்குச் சாக்லேட் வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு ” 

அவளது தலையைக் கோதி , விட்டுக் கொண்டே , கையிலிருந்த சாக்லேட்டை அவளிடம் கொடுப்பதற்காக எழுப்பினாள்.

விழிகளை மெல்லத் திறந்தவள் கைகளில் அக்கா கொடுத்தச் சாக்லேட்டைப் பார்த்து இதழ்கள் மகிழ்ச்சியில் விரிந்தது.

” தாங்க்ஸ்க்கா !” 

இளந்தளிரைக் கட்டிக் கொண்டாள்  சகோதரி.

” ம்ம். நர்ஸ் வந்தாங்களா ? என்ன சொன்னாங்க ? பில் எவ்ளோ ஆச்சுன்னு தெரிலயே ? கிரெடிட் கார்ட்ல பணம் இருக்கான்னும் பாக்காம வந்துட்டேனே !” 

அடுக்கடுக்காக அவளிடம் வந்த கேள்விகளுக்கு பொறுமையாக சுபாஷினி பதிலளித்தாள்.

” அக்கா ! என்னை அட்மிட் பண்ணின சாரே பில்லைக் கட்டிட்டாரு.ஃபர்ஸ்ட் ட்ரிப் ஏறும் போதே இன்னும் எத்தனை ட்ரிப்ஸ்னு கேட்டு ஃபுல் அமவ்ண்ட்டைக் குடுத்துட்டாரு ” 

கோவர்த்தனன் இவளது தங்கையின் மருத்துவ செலவிற்கு பணம் கட்டியதை இவள் எதிர்பார்க்கவில்லை , அதுபோல் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

” அவன் எதுக்கு பில்லைக் கட்டனும் ? நீ வேணாம்னு ஸ்ட்ராங் ஆக சொல்லி இருக்க வேண்டியது தான ?”

 தங்கையையும் திட்டியவள் அவனது செல்பேசி எண் கூட கைவசம் இல்லை .ந்தப் பணத்தை நிச்சயம் திருப்பிக் கொடுத்திட வேண்டும் என்று எண்ணியவள் , 

” அம்மாகிட்ட என்ன சொல்றதுன்னே தெரியல!ரொம்ப நேரம் ஆச்சு ?அவங்க கால் பண்ணலயே அதோட நிம்மதி.இல்லைனா லேட்டா வர்றதுக்கு ரீசன் சொல்லனுமே ?” 

ஒரே நாளில் இளந்தளிர் எத்தனை விஷயங்களுக்குத் தான் தீர்வை யோசிப்பாள் ! 

அவள் சொல்லி முடிக்கும் முன் செல்பேசி ஒலித்தது.

எடுத்துப் பார்த்தவளின் முகமோ பேயறைந்தாற் போலானது.

” அம்மாவா கால் பண்றாங்கக்கா ?” 

தமக்கையின் முகம் கோணலைப் பார்த்தே கண்டு கொண்டாள் சுபாஷினி.

” ஆமா சுபா.போச்சு போச்சு ! ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்பி இருந்தா கூட பரவாயில்லை.ஆனா அம்மா கிட்ட இன்னும் பதினைந்து நிமிஷம் ஆகும்னு சொன்னா அவ்ளோ தான் ! ” 

தங்களது நேரம் என்று தலையில் கை வைத்த படி அமர்ந்து இருந்தனர் சகோதரிகள்.

” அட்டெண்ட் பண்ணாம இருந்தா அதுக்கும் திட்டுவாங்க.எடுத்துப் பேசறேன் ” 

ஒரு முடிவோடு அட்டெண்ட் செய்து காதில் வைத்தாள்.

” ரெண்டு பேரும் ஃப்ரண்ட் வீட்டுக்குப் போனீங்களா ? ஃபாரீன் போனீங்களா ? சின்னவ எங்க? அவ கிட்ட ஃபோனைக் குடு.நான் பேசறேன் ” 

தாயின் கடுமையான கோபத்தை அவர் சத்தமாக பேசும் பொழுதே புரிந்து விட்டது சுபாஷினிக்கு.

அதுவும் இளந்தளிர் ஸ்பீக்கரில் போட்டு இருந்ததால் ,தெளிவாக கேட்க முடிந்தது. 

” ஹலோ !!! ”  தாயின் குரலில் சுபாஷினி பதறியடித்துக் கொண்டு ,

” அம்மா உடனே வீட்டுக்கு வர்றோம்.ப்ளீஸ்மா . கால் கட் பண்ணிடறேன் ” 

அவர் அடுத்து பேச வருவதற்குள் அழைப்பைத் துண்டித்த சுபாஷினி ட்ரிப்ஸ் ஏறி முடித்ததால் செவிலியரை அழைத்து அதை எடுக்கச் சொன்னார்கள்.

அங்கிருந்து முடிந்தளவு வேகமாக கிளம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

வாசலிலேயே கைகளைப் பிசைந்து கொண்டு பதட்டமாக நின்றிருந்த அவர்களது தாய் இருவரையும் பார்த்ததும் ,

” வாங்க வாங்க !  இவ்ளோ சீக்கிரமே வர்ற அளவுக்கு என்ன அவசரம் ? இரண்டு மணி நேரம் கழிச்சு வந்து இருக்கலாமே ? ” 

மகள்களை நினைத்துப் பரிதவித்துப் போன தாயுள்ளத்தைப் பற்றி அறியாதவளா இளந்தளிர் ! 

” அம்மா இவ !  ”  தொடங்கிய மூத்த மகளைப் பார்த்து முறைத்தார் சிவசங்கரி.

” என்ன தான் மனசில நினைச்சுட்டு இருக்கிங்களோ தெரில ? ரெண்டு பிள்ளைகளையும் நினைச்சு மனசெல்லாம் பதறுது !  ” 

அழுகாத குறையாகப் பேசினார்.

” நீ ஏன் வர லேட் பண்ணுன ? உன் ஃப்ரண்ட் வீடு கிட்ட தான இருக்கு ? ” 

சுபாஷினியைக் கேட்டவர் பிறகு இளந்தளிரையும் விசாரித்தார்.

“கூட்டிட்டு வர்றேன்னு போனவ , நீ கூட சீக்கிரம் வரனும்னு நினைக்கலயா  ?” 

சுபாஷினி அக்காவைப் பீதியில் பார்த்தால் என்றால் , இளந்தளிரோ தங்கையைக் கோபமாகப் பார்த்தாள்.

” காலைல சுபாஷினி  சாப்பிடாம வேற போனாளே  ! உனக்கு என்ன ரொம்ப முக்கியமான வேலையோ ? நாலு வாய்ச் சோற்றை சாப்பிட்டுப் போனா என்னவாம் ?” 

மூச்சு விடாமல் பேசிக் கொண்டு இருந்த சிவசங்கரிக்கு சுபாஷினியின் கைகளில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு இருந்த அடையாளம் தெளிவாகத் தெரிந்தது.

” ஏய் ! என்ன ஆச்சு சுபா ? கையில் இது என்ன ?  ட்ரிப்ஸ் போட்டு இருக்காங்க ? ” 

கைகளைப் பற்றிய தாயின் உள்ளம் துடித்தது.இருவரும் இன்னும் என்னென்ன விஷயங்களைத் தன்னிடம் சொல்லாமல் மறைத்து உள்ளார்களோ ! என்று வேறு அவருக்கு சிந்தனையில் ஓடியது.

“அம்மா ! இவ சாப்பிடாம போனதால மயங்கி விழுந்துட்டா ! ஒரு பொண்ணு தான் ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்க.ட்ரிப்ஸ் ஏறி முடிச்சு ,  டிஸ்சார்ஜ் ஆக தான் லேட் ஆகிருச்சு ! ” 

ஒருவழியாக சிவசங்கரி கேட்ட கேள்விக்கு இளந்தளிர் பதில் கூறி விட்டாள்.

இரண்டாவது மகள் மயங்கி விழுந்து விட்டாள் ! என்று கேட்ட சிவசங்கரிக்கு சுபாஷினியைப் பார்த்து கோபத்தை விட வேதனை தான் ஏற்பட்டது.

” இதுக்குத் தான் சாப்பிட்டுப் போ – ன்னு சொன்னேன். கேட்குறியா நீ ? ஏன் இளந்தளிர் உனக்கும் இது முன்னாடியே தெரிஞ்சதால தான உடனே கிளம்பி வண்டியை எடுத்துட்டுப் போன ?” 

“ஆமாம் மா ” 

தலைகுனிந்து பதில் சொன்னாள் இளந்தளிர்.

” போய் முகத்தைக் கழுவிட்டு ட்ரஸ்ஸை மாத்துங்க ” 

மகள்களிடம் பொதுவாக கூறிவிட்டு , சுபாஷினியிடம் ,

” மத்தியானம் சாப்பிடு” 

இதை மட்டும் கூறிவிட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.

” என்னக்கா ! அம்மா அடிப்பாங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்ணேன்.ஒன்னுமே சொல்லாம போறாங்க ?” 

ஐயமாகத்  தளிரிடம் வினவினாள்.

” நீ செஞ்சது அப்படி ! ஒழுங்கா சாப்பிட்டுப் போறதுக்கு என்ன உனக்கு ? அப்பா இல்லாம அம்மாவும் , நாமளும் எவ்ளோ கஷ்டப்பட்றோம்.இதுல நீ புரிஞ்சுக்காம இப்படி பண்ணினா அவங்களுக்கு கூடுதல் கஷ்டம் தான் வரும்.புரிஞ்சு நடந்துக்கோ சுபா. போய் தூங்கு ” பொறுப்பான அக்காவாக புத்திமதி சொன்னவள் உடை மாற்றச் சென்றாள்.

” அக்கா சொல்றதும் கரெக்ட் தான் ” 

தன்னையே நொந்து கொண்டு ,

 போய் உறங்கியவள் மதிய உணவு வேளையில் தான் கண் விழித்தாள்.

” நீ சமாளிக்கிறதால தான் அவளுக்கு பொறுப்பு வர மாட்டேங்குது.பொம்பளைப் பிள்ளை ரோட்ல மயங்கி விழுந்து இருக்கா ! நல்லவேளை யாரோ முகம் தெரியாத அந்த பொண்ணுக்கு நல்ல மனசு.அதான் போனா போகுதுன்னு விடாம ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கா.இல்லைனா இவ நிலைமை என்னவாகி இருக்கும்னு யோசிச்சுப் பாரு ! ” சிவசங்கரிக்கு இன்னும் மனம் பொறுக்கவில்லை.

” கோவர்த்தனன் சாரை தான் அம்மா பொண்ணுன்னு நினைச்சுப் பேசிட்டு இருக்காங்களா ? பையன்ற விஷயம் மட்டும் தெரிஞ்சுச்சு. நான் மாட்றது மட்டும் இல்லாம பாவம் எனக்காக அக்காவும் திட்டு வாங்குவா ! ” 

தாய் பேசியது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் அவர் சரியாகத்தான் கூறுகிறார்.

நான் தான் பொறுப்பில்லாமல் இருக்கிறேன்.இனியும் இந்த மாதிரி நடந்து விடக்கூடாது என்று நினைத்தவள் சிவசங்கரி மற்றும் இளந்தளிர் உரையாடிக் கொண்டு இருந்த இடத்திற்கு விரைந்தாள்.

” சாரிம்மா.நான் பண்ணுனது எவ்ளோ பெரிய தப்புன்னு நீங்க பதறித் , துடிச்சுப் போய் பேசுறதுலயே புரிஞ்சுடுச்சு.இனிமே இப்படி எப்பவும் நடக்காதும்மா.எல்லா தப்பும் என்னோடது தான் அக்காவைத் திட்டாதீங்க ” 

ஒரு தப்பும் செய்யாமல் மௌனமாகத் தனக்காக அக்கா திட்டு வாங்குவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை சுபாஷினியால்.

அவளது தழுதழுத்தக் குரலைக் கேட்டதும் சிவசங்கரிக்கு கோபம் மட்டுப்பட்டது.

” இதுக்கு அப்பறம் இப்படி எதுவும் என் காதுக்கு வரக் கூடாது.வந்து சாப்பிடுங்க” 

அவர் சமாதானம் ஆகி விட்டதற்கு இதுவே அறிகுறி.

சாப்பிடும் போது இளந்தளிரை மெதுவாக அழைத்தாள் சுபா.

”  அக்கா என்னை ஹாஸ்பிடல்ல சேர்த்தது பொண்ணு இல்லை பையன்னுத் தெரிஞ்சா அம்மாவோட ரியாக்ஷன் எப்படி இருக்கும் ? ” 

அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டு விட்டு தமக்கையைப் பார்த்தாள்.

“இப்போ நீ அமைதியாக சாப்பிடலன்னு வை , நாளைக்குக் காலைல நீ குடிக்கிற பூஸ்ட் கட் ஆகிடும். வேணாம்னா நல்லா பேசு ” சிரித்துக் கொண்டே கூறிய தளிரை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

” அடிப்பாவி அக்கா ! இருந்தும் இருந்தும் நான் குடிக்குற பூஸ்ட் தான் உனக்கு குறையாத் தெரியுதா ? உன் சங்காத்தமே வேணாம் போ ” 

அவசரமாக கை கழுவிக் கொண்டு எழுந்து விட்டாள்.

” அதுக்குள்ள எழுந்துப் போறா !  நல்லா சாப்பிட்டாளா ? ” 

சுபாஷினி நன்றாக சாப்பிடுகிறாளா ! என்பதைக் கண்காணிக்க ஆரம்பித்து விட்டார் சிவசங்கரி.

“மூனு தடவை சாப்பாடு போட்டு சாப்பிட்டாச்சும்மா.இதுக்கு மேல வயித்துல இடம் இல்லை ” 

பதிலளித்து விட்டு இளந்தளிரும் , அவளும் உறங்கும் அறைக்குச் சென்றாள்.

இளந்தளிர் உணவருந்தி விட்டு , அவளும் அங்கு சென்று சேர சுபாஷினிக்கு ட்ரிப்ஸ் போட்டது அவ்வப்போது வலித்தது.

” இந்த வலிக்கு ஒழுங்காக நான் சாப்பிட்டே போயிருக்கலாம். முடியலக்கா ” 

வலியில் முகம் சுருங்கிய தங்கையைக் கனிவுடன் பார்த்த இளந்தளிர் , 

” கொஞ்ச நேரம் அப்படித்தான் இருக்கும்.பொறுத்துக்கோ.நாளைக்கு காலேஜ் போறியா ? இல்லைன்னா வீட்ல இருந்து வலி குறைஞ்சதும் போ “

தங்கை குணமானதும் கல்லூரி செல்லட்டும் என்று எண்ணினாள்.

” நாளைக்கு எழுந்திரிக்க முடியுதான்னு பாக்குறேன்க்கா.அப்பறம் காலேஜ் போறதைப் பத்தி யோசிக்கிறேன். ஆமா அந்த கோவர்த்தனன் இருக்காரே செம்ம ஜாலி டைப் தெரியுமா ? எங்கிட்ட நல்லாப் பேசினாரு ” 

சுபாஷினியை அழுத்தமாகப் பார்த்தவள் , ” இனிமே இப்படி என்கிட்ட பேசாத சுபா. எனக்குப் பிடிக்கல ” 

கூறி விட்டு மடிக்கணினியை இயக்க ஆரம்பித்தாள்.

” சாரிக்கா ” 

மன்னிப்பு வேண்டி விட்டு கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.வாயையும் தான் ஏடாகூடமாக இதுபோல் பேசி விட்டால் தமக்கையிடம் மற்றுமொரு தடவை திட்டு வாங்க வேண்டுமே ! 

கோவர்த்தனன் தான் வேலை செய்யும் அலுவலகத்தில் உயரதிகாரியின் முன்னால் பவ்யமாக நின்றிருந்தான்.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *