அத்தியாயம் – 2
“என்னவளே என்னை மறந்தது ஏனோ
எண்ணி வந்தேன் உந்தன்
நினைவுகள் தான்
என்னை சிதைத்தவள்
பின்பு அணைத்தவள்” என்று தன் போக்கில் பாடிக்கொண்டிருந்தான் குறிஞ்சி வேந்தன்.
“ம்ஹ்ம்ம்ம்ம்… பாத்தியாமா… சிதைத்தாளாம் அணைத்தாளாம்… இப்ப தெரியுதா … உன் மருமவப்பிள்ள ஏன் தேவதாசா சுத்துறான்னு… “ என்று எழில்வாணன் கோள்மூட்ட, எதிரிலிருந்து எழில்வாணனின் தாயோ , “இவன் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான்டா… டம்மி பீஸ்ஸூ…”
“ஓஹோ… சரிசரி… நான் டம்மி பீஸ்ஸூதான் அத்தா… ஆனா உன் புள்ளைக்குத்தான் பெரிய லைலா மஜ்னுனு நினைப்பு… நைட்டு ஃபிளைட்ல ஒரு ஏர்ஹோஸ்டஸ கேவலமா சைட்டடிச்சுட்டு இருந்தான். அந்தப் பொண்ணு கிட்ட வந்து டிஸ்ஸியூ குடுத்து வழியுது சார்னு குடுத்துட்டு போய்ட்டா… அப்ப யோசிங்க உங்க புள்ளையோட அருமை எப்படி வழிஞ்சிருக்கும்னு…”
குறிஞ்சி வேந்தனின் செயலில் எழில்வாணன் பேந்த பேந்த முழிக்க, வேந்தனுக்கோ ஒரே கொண்டாட்டமாகப் போனது.
‘ மாட்னியாடா பம்பரக்கா மண்டையா…’ என்று வாயசைத்தபடியே செல்ல, குறிஞ்சிவேந்தனுக்கு பின்னிருந்து எழில்வாணனின் தந்தை வெளியே வந்தார்.
எழில்வாணனின் நிலையோ, ‘தெரியாத்தனமா வம்பிழுத்ததுக்கு மிஸ்டர். ஆங்கிரிபேர்ட் வர்ற நேரம் பாத்து மாட்டி விட்டுட்டானே… அய்யோ பாக்குறாரே… பாக்குறாரே…’ மனதிற்குள் புலம்புவதாகவே இருந்தது.
“நீயெல்லாம் இன்னும் எப்படி என் உசுர வாங்கலாம்னு தான் யோசிச்சுட்டு இருப்பியா… டிரீட்மென்ட்க்கு போனமா வந்தமானு இருக்க தெரியுமா தெரியாதா…”
“ ப்பா… அவன் கோள்மூட்டி விடுறான் ப்பா… ஜூஸ் என் ஷர்ட்ல கொட்டிருச்சு. அதுக்கு ஜூஸ் வழிஞ்சுடுச்சு… துடைச்சுக்கோங்கனு டிஸ்ஸியூ குடுத்தாங்க… அது இவன் மாத்தி சொல்லுறான்… பிலீவ் மீ ப்பா…” எழில்வாணன் தன்நிலை விளக்கம் கொடுக்க, “கேவலம்… முன்னாடி இருக்குற ஜூஸ கூட ஒழுங்கா குடிக்கத்தெரியல. த்தூ” என்று அவன் தந்தையோ அவனைப் பொருட்டாய் எண்ணாது கடந்து சென்றுவிட்டார்.
அந்தத் தந்தைக்குத் தனது மகன்கள் மீது அபார நம்பிக்கை. இளம்வயதின் குதூகலத்தில் சைட்டடிக்கும் பேர்வழிகள் இன்னொரு பெண்ணிற்கு இடைஞ்சலாக இருந்திட மாட்டார்கள். ஆனாலும் அவருக்கு குறிஞ்சி வேந்தன் என்றால் கொஞ்சம் அதிக பாசம்.
எழில்வாணனை அவன் தாய் கொஞ்சம் அதிகமாக கவனிப்பார். அதனால் பாசத்திற்குப் பாசம் ஈடு என்பது போன்று…
“என்ன தம்பிப்பையா… வாயேன் கொஞ்சம் பெருஞ்சாணி வரை சுத்திட்டு வருவோம். உங்க ஹார்ட் பேர்ன் லாம் நம்ம ஊர் காத்து பட்டுட்டா சரியாப் போயிடும்…” என்று கூறி சிரிக்க,
“போகும்டா போகும்… உன் மண்டைல இரண்டு இடி நங்குனு இறக்குனா இன்னும் சிறப்பாக இருக்கும்…” எழில்வாணன் வேந்தனை அடிக்க விரட்ட, நூலகம்போல அமைதியாக இருக்கும் வீடு கலைந்த குப்பையாக மாறியது என்று தனியாகவேறு சொல்ல வேண்டுமா…
அடிதடிகள் முடிவிற்குவர, “ டேய் பெருஞ்சாணிலாம் வேணாம்டா… மார்னிங் மோழியடி பொற்றைக்கு போகலாம்டா… எனக்கு அது ரொம்ப நாள் ஆசை…” தன் விருப்பத்தைத் தமையனிடம் முன்வைத்தான் எழில்வாணன்.
“இல்ல எழில்… டாக்டர் கண்ணுக்கு ஸ்ட்ரெஸ் குடுக்க கூடாதுனு சொல்வியிருக்காங்க… எப்ப வேணாலும் டிரீட்மென்ட் ஸ்டாப் ஆக சான்ஸஸ் இருக்கு… பட் எனக்காக டிரீட்மென்ட் முடியுறவரைக்கும் பொறுமையா இரு… நானே கூட்டிட்டுப் போறேன். இப்போதைக்குத் திற்பரப்பு அருவியும் தொட்டிப்பாலமும் பாத்துட்டு வருவோமா…” எழில்வாணனின் நலன் கருதி சில விஷயங்களை மறுத்தாலும் அதற்கான மாற்று வழியும் சொல்லிவிட்டான். இதுதான் வேந்தனின் இயல்பு.
எழில் வாணன் கேட்ட இடம் ஒரு மலைப்பகுதி. மலை முகடுகள் அழகாய் நிமிர்ந்து நிற்க, காலையில் சலசலக்கும் மரங்களின் ஓசையும் அதிகாலையிலேயே பால்வெட்டு தொழிலிற்கு செல்லும் மனிதர்களும் என பார்க்கப் பார்க்கக் கண்கள் தெவிட்டாது நிறைந்திருக்கும் கேரளாவைத் தொடர்ந்து வரும் களியக்காவிளை, மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிகள்… கேரளாவுடன் ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகள். அழகிற்கு பஞ்சமில்லாத பகுதிகள் தான். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நகரமாக மாற்றப்பட்டு வருகின்றன. அதற்கும் நடுவில் சில இடங்களில் அதன் அவகுமாறாதே இன்றளவும் அப்படியே பேணப்பட்டு வருகின்றன.
தற்போதைக்கு எழிலிடம் சொன்னபடியே காலை உணவை முடித்துத் திற்பரப்பு அருவியும் தொட்டிப்பாலமும் காண அழைத்துச் சென்றான்.
*****
“ஹாய் ஹலோ வணக்கம் மக்களே… இதுவரைக்கும் சென்னையைப் பத்தி பேசிட்டு இருந்தோம் இல்லையா… அதுகூடவே நம்ம பேச்லர்ஸ்… என்னையபோல… ஹஹஹ… பேச்லர்ஸ்க்காக பேச்லர்ஸ் சொல்லும் ரெசிபி வீடியோஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்.
ப்ரென்ட்ஸ் நாங்க ஒருசிலர் பேசும்போது ஈசி ரெசிபிஸ் பத்தி பேசுவோம். பொண்ணுங்க தானேனு சொல்லப்டாது… இன்க்ளூடிங் பாய்ஸ்… நாங்க படிக்கும்போது ஒரே கிளாஸ்… ஒரே காலேஜ் ஒரே ஹாஸ்டல்ரூம்னு இருந்தோம். இப்போதைக்கு வேலைக்காக வேற இடங்கள்ல பரவி இருக்குறோம். எல்லா நேரமும் அம்மா அத்தை சொல்ற பெரிய ரெசிபிஸ் உபயோகமா இருக்காது. சம்டைம்ஸ் சட்டுனு செய்ய ஈசியா பேச்லர் ஸ்பெஷல் ஐடெம்ஸ் இருக்கும். அதைத்தான் இங்க வீடியோவா மாத்தலாம்னு இருக்குறேன்.
இது முழுநேர குக்கிங் சேனல் கிடையாதுடாவ்… போகுற போக்குல எதையாச்சும் எக்ஸ்பெரிமென்ட் பண்ணலாம்னு ஒரு ஐடியா… கமென்ட்ல நீங்க உங்களுக்கு தெரிஞ்ச ஈசி ரெசிபிஸ் போடுங்க… ட்ரையல போட்ரலாம்…என்ன ஓகேவா… உங்க கருத்த சொல்லிட்டுப் போங்க”
மடிக்கணினியில் தட்டச்சு செய்து வைத்தவைகளை ஒருமுறைக்கு இருமுறை நன்கு வாசித்து சரியான ஏற்ற இறக்கத்தில் வாசித்து அதை பூனையின் ஒலியில் மாற்றி வீடியோ தயாரித்திருந்தாள் விதுரா.
படிப்பு முடித்து வீட்டிற்கு வந்திருந்த நேரத்தில் பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டாகிராமில் ஒரு கணக்கை உருவாக்கி விலங்குகளின் குரலின் ஒலிவடிவத்தை பயன்படுத்தி வீடியோ தயாரித்து வந்தாள். சில நேரங்களில் தத்துவங்கள் சொல்பவள் கடைசியாக “சூப்பர் சென்னை” என்ற தலைப்பின்கீழ் வீடியோ வெளியிட்டிருந்தாள். இப்பொழுது “ட்ரையல் பார்போமா” என்ற தலைப்பின் கீழ் அடுத்த காணொளிகளைத் தயாரிக்கத் தொடங்கி விட்டாள்.
“ விது… ஒர்க்குக்கு டைமாகுது பாரு… அந்த வீடியோவையே கட்டிக்கிட்டு அழுதா போதுமா…” சிறுமுறைப்புடன் அவளெதிரில் வந்தமர்ந்தான் அவளின் பப்பு.
“வாடா பப்பு. நானு ஷிஃப்ட் மாத்தி வாங்கிட்டேன்டா… நைட் ஷிஃப்ட் தான். இந்த இரண்டு வாரமும் நைட் ஷிஃப்டே பாக்கலாம்னு இருக்கேன்”
“என்னவாம் திடீர்னு நைட் ஷிஃப்ட் வாங்கியிருக்குற…”
“அது வேற ஒன்னுமில்ல… நைட் ஷிஃப்ட் ஒர்க் பண்ணி ரொம்ப நாள் ஆனது போல ஒரு ஃபீல்டா... எவ்வளவு நாள் தான் இந்த சேஃப் சோன்லயே இருக்குறது… கொஞ்சம் வெளிய வந்து முன்னமாதிரி நல்லா என்ஜாய் பண்ணலாம்னு இருக்கேன் பப்பு. நீயும் இதுக்குமேல என் பின்னாடியே சுத்தாம எதனா வேலை பாருடா சில்லி ஃபெல்லோ”
‘இந்த பேய் அப்டிலாம் போகாதே… என்னமோ இருக்கு…’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டவன், அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு “கத்தரி… முத்தினா எங்கிட்டதான் வந்தாகணும். நீ ஏன் இப்படி கொறளி வித்தை காட்டுறேன்னு அப்போ பாத்துக்குறேன்டி… இப்ப குதூகலமா சுத்து”
அதற்கு அவளோ, “போடா போடா டஸ்ட் பின். ஓட் ஆர் யூ திங்கிங் அபௌட் மீ… இந்த விதுராவ நீ என்னனு நினைச்ச… ”
“ஜஸ்ட் அழுகுன டோமேட்டோனு தான் நினைச்சேன்” என்றிட
“அது ஒரு அழுகுன கொய்யாக்கா சொல்லுது. உன்கிட்ட எல்ப் மீ ப்ளீச்னு கேட்டதுலாம் அந்தக் காலம்… இனிமே நான் தான் ராஜா நான் தான் ராணி” என்றவள் எழுந்து அறையை விட்டு வெளியேறினாள்.
‘சரிதான் சைத்தான் எதோ வேலை பார்த்து வச்சிருக்கு’ என நினைத்தவன் , “பேயே உண்மைய சொல்லு புது பிஜி டாக்டர் யாருக்காச்சும் நைட் ஷிஃப்ட் போட்ருக்காங்களா… அதான் குதூகலமா போறியா” என்று கேட்டபடி கதவைத் திறந்து வெளியே வர, அங்கே அவனது குடும்பமே ஹாலில் அமர்ந்திருந்தது.
அவன் வெளியே வந்த சில நிமிடங்கள் தாண்டியும் எந்தவித பேச்சுமின்றி அமைதியாக இருந்தது. அவர்களின் அமைதியறிந்து அவனே, “அதான் மொத்தமா வந்துட்டிங்களே… இப்ப எதுக்கு சைலன்டா இருக்குறீங்க. என்ன கேக்கணுமோ இப்பவே கேட்டுருங்க” என்று பேச்சைத் தொடங்கி வைத்தான்.
அதோடு கூடவே, “விது… நீ வீட்டுக்கு வெளியே மறைந்திருக்குற மாதிரி நடிச்சது போதும். கேவலமா மாட்டிக்கிற பேயே. வந்து உட்காரு… இதுல உன் பங்கும் இருக்குனு எனக்கு தெரியும். வா வா” என்றழைக்க திருட்டுமுழியுடன் வந்து அமர்ந்தாள்.
“சரி இப்ப சொல்லுங்க உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கணும்” என்றவன் திரும்பி விதுராவைப் பார்த்தான். அந்தப் பார்வையில் ‘இது உனக்கானதும்கூட’ என்பது போல இருந்தது.
“எப்போ எங்க கூட வருவீங்க சித்து?” என்று அவனது அண்ணன் மகள் கேட்க, “வீட்டுக்கு வந்த மூன்று வருஷம் ஆகுது. அது உனக்கு நினைவு இருக்குதாடா. அப்படி என்னடா காதல் வேண்டிகெடக்கு. காதல் வந்து தொலைச்சா ஒரேடியா குடும்பமே வேணாம்னு இருந்துடுவியா என்ன? பெத்த அம்மாவையே வேணாம்னு சொல்ற அளவுக்கு…” என்று மேலும் அவனது தாய் பேசவர, “இதுக்குதான் நான் வரல” என்று பேச்சைத் இடைநிறுத்தினான்.
“என்ன பாக்குறீங்க. வீட்டுக்கு வந்தாலே நான் முக்கியமா இல்ல அவ முக்கியமானு கேக்குறீங்க. இன்னும் கல்யாணம் ஆகவேயில்ல… அதுக்குள்ள என்ன குத்துயிரா மாத்துவீங்க போல… அதான் எதுக்கு வம்புனு ட்ரான்ஸ்பர் வாங்கி வந்துட்டேன் ” என்றவன் குழந்தைகள் இருப்பதை உணர்ந்து தன் பேச்சை நிறுத்தி, “நித்தி குட்டி , அச்சு குட்டி… போய் வீட்டுக்கு வெளிய இருக்குற இடத்துல விளையாடுங்க. சித்து அப்புறம் வந்து உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறேன். ஓகேவா…”
குழந்தைகள் விளையாட சென்ற பின்னர், “தோ பாருங்க… அந்த நாள் கடைசியா நீங்க என்ன வார்த்தை சொன்னீங்கனு எனக்கு இன்னமும் நினைவு இருக்கு. கண்ணுல கனவோட நின்ன ஒரு பொண்ண உங்க வாய் வார்த்தை தான் தற்கொலைவரை கொண்டுபோச்சு. யார் வேணா மன்னிக்கலாம். நான் மன்னிக்க மாட்டேன். என் மனநிம்மதிக்காக தான் இங்க இருக்குறேன். இங்கேயும் வந்து நாட்டாமை பண்ண பாத்தீங்க…” என்றவன் சிறிது இடைவெளி விட்டு
“குடும்பம்னு பாக்க மாட்டேன். உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன். இப்ப என்ன வீட்டுக்கு வரணும். அதுதானே… பிள்ளைகளுக்காக அப்பப்போ வரேன்” என்றவன் வேறேதும் உண்டா என்பது போல பார்க்க, யாரும் மூடின வாய் திறந்தனர் இல்லை.
சிறிது நேர அமைதிக்குப் பின்னர் விதுரா பப்புவின் கரங்களைப் பிடிக்க, “ என்ன உன்ன விட்டு போகணுமா? நான் ஒன்னும் உனக்காக வீட்ட விட்டு வரல. உனக்காகவும் நான் இப்ப பேசல.
நான் உன்ன காதலித்தது உண்மை தான். இப்பயும் நான் உன்ன காதலிக்கிறேன். ஆனால் பருவ வயசு ஈர்ப்பு போய் இப்ப உன்ன என் ஃப்ரெண்டா மகளா பாக்குறேன். உன்ன தள்ளி வச்சு பாக்க விருப்பம் இல்ல. நீ இல்லாம வாழ்க்கையே இல்லனு உளற மாட்டேன். ஆனா காத்திருப்பேன்.
இதை நான் மூணு வருஷம் முன்னாடி உனக்குச் சொன்னேன். அதே விஷயத்தை இப்ப என்னோட ஃபேமிலி முன்னாடியும் சொல்லிட்டேன். இந்த மூணு வருஷத்துல நான் பண்ணுன எதாவது விஷயம் உனக்கு அன்கம்ஃபர்டபிளா இருந்துச்சுனா சொல்லு இப்பவே நான் போறேன்”
“பப்பு… நான் இப்ப என்ன சொல்றது. உன்மேல காதல் இருக்கானு கேட்டா கண்டிப்பா இல்ல. ஆனா உன்னோட அந்த அரவணைப்பு, அந்த எனக்கே எனக்கான பரிதவிப்பு , நட்பு எல்லாம் எனக்கு வேணும். என் வாழ்க்கைல கல்யாணம் னு ஒன்னு பண்ணுவேனானு தெரியல” என்றிட
“அது தெரியாமயே போகட்டும். இப்ப நீ எப்பவும் போல எனக்கே எனக்கான பேயா இரு போதும்” என்றவன் கண்களில் காதலைத் தாண்டி உண்மையான நேசம் கொட்டிக் கிடந்தது. அந்த நேசம் அவளைச் சுட்டாலும் அவன் ஏற்றுக்கொள்ள அவளுள்ளே பல தடைகள் வரிசைக் கட்டி நின்றன. அவை எவையுமே அறியாமல் இன்னும் அவளைத் தன்னுள் காதலால் புதைக்கும் வழிதேடினான் அவளின் பப்பு.
****
இங்கோ குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டரில் பல டியூபுகளுக்கு மத்தியில் படுத்திருந்தார் ஜான்போஸ்.
தொடரும்…
கதையைப் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் மக்களே… நன்றி
Super ma ❤️❤️ இவளுக்கு என்ன பிரச்சனை எதுக்கு அவன் காதல் accept பண்ண மாட்டிக்கா ❤️❤️ இவன் பேசுறது கேட்டு எனக்கே அவன பிடிச்சு போச்சு ❤️❤️ பேசாம இந்த பப்புவ எனக்கு கொடுத்துருமா ரைட்டரு❤️❤️
😂😂😂
பப்புவ உனக்கு தரதுல பிரச்சினை இல்ல… அதுக்கு பப்பு சம்மதிக்கணுமே 🥴😂
விதுரா ஏன் பப்புவோட காதலை ஏத்துக்க மாட்டிங்கறா.. அவ தேடறதும் யாரை.?
En iva pappu va accept pannala? Nantha ku enna treatment? Super sillu😍
Dhank u