Loading

ஹாய் டியர் ப்ரெண்ட்ஸ்… எல்லாரும் எப்படி இருக்கீங்க. எனக்கு இப்ப ஹெல்த் பரவாயில்ல. ஆனா, முன்னாடி மாதிரி ரெகுலர் யூடி வராது டியர்ஸ். இந்த ஸ்டோரி இன்னும் ஆறு எபிசோட் தான் இருக்கு. ஏற்கனவே முடிச்ச கதைதான். ஆனா. ஸ்பெல்லிங் செக் பண்ணி போடணும்ன்னு தான் லேட் ஆகுது. அப்பறம் பாதி எடிட் பண்ணிட்டு, மீதி எடிட் பண்ணாம போட்ட மாதிரி இருக்கும். அதான், கிடைக்குற டைம்ல ஒவ்வொரு எபிசோட் ஆ எடிட் பண்றேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள் மீதி ஆறு எபிசோடும் போடுறேன் டியர்ஸ். தீயில் தென்றலாய் உறவிதுவோ வாரத்துல ஒரு யூடி போடுறேன். ஆனா எப்பன்னு கேட்காதீங்க… 🙊🙊இன்பாக்ஸ்ல நிறைய பேர் மெஸேஜ் பண்ணிட்டே இருக்கீங்க எல்லாருக்கும் என்னால ரிப்ளை பண்ண முடியல டியர்ஸ். சோ ப்ளீஸ் போஸ்ட் பாலோ பண்ணிக்கோங்க. மிஸ் யூ ஆல். சீக்கிரம் ஜிஷுவோட வரேன். 💕💕

 

கயல், வெட்கத்துடன் ஜீவாவின் இதழ்களை முற்றுகை இட, லேசாக அவன் இதழில் ஒற்றி எடுத்தவளுக்கு கன்னம் சிவந்து விட்டது.

அமைதியாய் உறங்கும் அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், சிறு வயதிலேயே எவ்வளவு கஷ்டம், விரக்தி. தாயின் அரவணைப்பு இல்லாமல் எப்படி கஷ்டப்பட்டுருப்பாரு… என்று அவன் கன்னத்தை வருடி வருந்தியவளுக்கு அவனின் காதலை அவன் வாயால் கேட்ட தருணமே அவன் மேல் இருந்த கோபம் உருகிய பனியாய் மறைந்திருந்தது.

‘என்னை கஷ்டப்படுத்தும் போது அவரும் கஷ்டப்பட்டாரா’ என்று மனதில் நிம்மதியாய் உணர்ந்தவள், அவன் காதலித்த பெண், தம்பியை ஏமாற்றிவிட்டாள் என்று நினைத்தே, தன்னிடம் அப்படி நடந்துகொண்டார்… என அவனின் செயல்களை அவளின் காதல் கொண்ட மனம் நியாயப்படுத்த, அவனிடம் இன்னும் கேட்டு தெளிவுப்படுத்த நிறைய விஷயம் இருந்தது.

இருந்தும், அவனின் காதலை அவன் வாயாலேயே சொல்ல வேண்டும் என்று நினைத்தே, அவன் பேசியதைப் பற்றி கேட்டுக்கொள்ளவில்லை.

அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவள், “லவ் யு ஜீவா” என்று கிசுகிசுப்பாய் சொல்ல, அவனும் உறக்கத்திலேயே அவள் மடியை கட்டி கொண்டு, “லவ் யு கயல்” என்று, திரும்பி படுத்தான்.

அதில் திகைத்தவள் அதன் பிறகே அவன் உறக்கத்தில் உளறுகிறான் என்று உணர்ந்து, மெலிதாய் சிரித்துக் கொண்டாள்.

பின், அப்படியே பின்னாடி சாய்ந்து அவளும் உறங்கி விட, மறுநாள், உறக்கத்தில் இருந்து விழித்த ஜீவாவிற்கு அவளின் மடி மேலும் சுகமாய் இருந்தது.

‘என்ன தலைகாணி… இப்படி மெத்து மெத்துன்னு இருக்கு.’ என்று கண்ணை விழித்தவன், அதன் பிறகே அவளின் மடியில் படுத்திருக்கிறோம் என்று உணர்ந்து எழுந்து பார்க்க, அவள் அமர்ந்த படியே உறங்கிக் கொண்டிருந்தாள்.

“காட் நைட் ஃபுல்லா இப்படியேவா தூங்குனா… சே! கால் வலிச்சுருக்குமே” என்று தன்னையே திட்டி விட்டு, அவளை தலையணையில் சாய்த்து, காலை நீட்டி படுக்க வைத்தவன், அன்றலர்ந்த மலராய் சிவந்திருந்த இதழ்களைக் கண்டான்.

அதனைத் தொட எத்தனித்தவன், பின், ‘வேணாம் வேணாம் ஏற்கனவே இவள்கிட்ட மாட்டிகிட்டேன். இதுல இப்போ வேற முழிச்சா அவ்ளோதான்… ஆனா, இவளுக்கு என்ன ஆச்சு திடீர்னு. என்னை மன்னிச்சுட்டாளா இல்லையா’ என்று மனத்தினுள்ளேயே பட்டிமன்றம் நிகழ்த்தியவனுக்கு எஸ்டேட்டில் இருந்து போன் வர, அவசரமாய் குளித்து விட்டு கிளம்பினான்.

கீழிறங்கி வந்தவன், அங்கு பூவரசியும் கார்த்தியும், சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து, “என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

கார்த்தி பூவரசியை முறைத்தபடி, “அவள்கிட்டயே கேளுங்க அண்ணா… என்ன சாகசம் பண்ணுனான்னு” கோபமாக கூற,

ஜீவா புரியாமல் பூவரசியிடம் “என்ன பண்ணுன?” எனக் கேட்க,

அவள், “நான் ஒன்னும் பண்ணல. உங்க தொம்பி தான் தேவை இல்லாம கத்துறாரு…” என்று முகத்தை சுருக்கினாள்.

“என்னது நீ ஒன்னும் பண்ணலையா.. அண்ணா இவள் என்ன பண்ணுனா தெரியுமா?” என்று மீண்டும் கார்த்தி எகிற,

அதில் ஜீவா கடுப்பாகி, “ப்ச் இப்போ என்ன ஆச்சுன்னு சொல்ல போறீங்களா இல்லையா…” என இருவரையும் முறைத்தான்.

“அண்ணா, இவள் அந்த மரத்துல ஏறி குரங்கு மாதிரி தாவிகிட்டு இருந்தாள். ஜஸ்ட் மிஸ். விழுந்துருந்தா அப்படியே போய் சேர்ந்துருப்பா” என்றதும்,

அவள், “யோவ், நான் ஒன்னும் வேணும்னு ஏறல… அங்கன ஒரு குருவி கூடு கட்டிருந்துச்சு. அதோட முட்டை கீழ விழுகுற மாதிரி இருந்துச்சு அதான் அதை சரியா வைக்க ஏறினேன். நான்லாம் காட்டுல இதை விட பெரிய மரத்துல எல்லாம் ஏறிருக்கேன்…” என்றாள் அசட்டையாக.

கார்த்தி, “உன் காட்டுக்குள்ள நீ எப்படி வேணாலும் இருந்துக்க. இங்க இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காத. அப்பறம் உனக்கு எதாவது ஆச்சுன்னா, உன் குடும்பமே எங்கட்ட தான் சண்டைக்கு வருவாங்க” என்று முறைக்க, அதில் அவள் மேலும் பேச வர,

“நிறுத்துறீங்களா…!” என அதட்டிய ஜீவா, “பூவரசி இனிமே நீ இந்த மாதிரி பண்ணாத, உனக்கு எதாவது மரத்தில ஏறணும்னா தோட்டக்காரர் இல்லைன்னா வாட்ச்மேன் கிட்ட சொல்லு… புரியுதா. காலேஜ் கிளம்பலையா. சீக்கிரம் கிளம்பு…” என்று அனுப்ப, அவள் கார்த்தியை முறைத்துக் கொண்டே சென்று விட்டாள்.

பின் கார்த்தி புறம் திரும்பிய ஜீவா, “கயல் தூங்குறா அவளை எழுப்பாத” என்று கட்டளையாக சொல்லி விட்டு சென்றான்.

வெகுநேரம் கழித்தே கண் விழித்த கயல், மணி 10 ஐ காட்ட, அதில் பதறி அடித்து எழுந்தவள் ‘சே இவ்ளோ நேரமா தூங்குனோம்… ஜீவா எங்க போனாரு…’ என்று அவசரமாக கிளம்பி கீழே வர, ஹாலில் கார்த்தி மட்டும் நடை பழகிக் கொண்டிருந்தான்.

அவளை பார்த்ததும் “குட் மார்னிங் அண்ணியாரே… என்ன நல்ல தூக்கமா?” என்று நக்கலாக கேட்க, அவனை முறைத்து,

“என்னை எழுப்பிருக்கலாம்ல. நீ சாப்ட்டியா? பூவரசி எங்க…?” என்று கேள்விகளை அடுக்கினாள்.

“ஐயோ உன்ன எழுப்ப கூடாதுன்னு உன் ஆத்துக்காரர் ஆர்டர் போட்டுட்டு போயிருக்காரு…” என்று சிரிப்புடன் கேலி செய்தவன், “நான் சாப்பிட்டேன், அவளும் காலேஜ் போய்ட்டா…” என்றான்.

Lமுதலில் அவன் சொன்னதில் சிவந்தவள், அதை மறைத்துக் கொண்டு, “ஜீ…”என்று ஆரம்பித்துப் பின் “உங்க அண்ணா எங்க?” என்று தயங்கியபடி கேட்டாள்.

“அண்ணா காலைலயே எஸ்டேட் போய்ட்டாங்க…” என்று சொல்லும் போதே, கார்த்திக்கு ஜீவா போன் செய்திருந்தான்.

“அண்ணா தான்” என்றபடி போனை லௌட் ஸ்பீக்கரில் போட,

“கார்த்தி, கயல் எந்திரிச்சுட்டாளா” என்ற ஜீவாவின் குரலில், கயலிடம் அமைதியாக இருக்க கூறி வாயில் விரல் வைத்து சைகை காட்டி விட்டு, “இல்ல அண்ணா இன்னும் தூங்குறா. சரியான கும்பகரணியா இருப்பா போல. நான் வேணா எழுப்பி விடட்டுமா” என்று கிண்டலடித்தான்.

“ப்ச் அதெல்லாம் வேணாம். நீ டிஸ்டர்ப் பண்ணாத…” என்றவன்,

பின் ஏதோ யோசித்து விட்டு, “சர்வன்ட்கிட்ட சொல்லி, ரூம்க்கு சாப்பாடை குடுத்து விட சொல்லு. அவள் எந்திரிச்சதும் சாப்பிடட்டும்” என உத்தரவிட்டு போனை வைக்க, அவனின் அக்கறையில் மெலிதாய் புன்னகைத்தாள் கயல்விழி.

கார்த்தி தான், “லவ் ஓவர் டோஸ்ல பொங்கி வழியுது…” என்று கயலை கேலி செய்தவன், அவள் முறைப்பதை பொருட்படுத்தாமல்,

“பட் கயல், நான் சொன்ன மாதிரி என் அண்ணனை பார்த்ததும் ஃப்ளாட் ஆகிட்டில… எப்படி என் அண்ணன்?” என்று காலரை தூக்கி விட்டான்.

“அய்யே ரொம்ப தான். சரியான பிராடு… வில்லன்” என்று திட்டியதில், கார்த்தியோ, “ஹா ஹா… கயல் என் கெஸ் கரெக்டுன்னா அடுத்த பத்து நிமிஷத்துல அண்ணா திரும்ப கால் பண்ணுவாரு பாரு…”என சிரித்தான்.

“ஆமா அவருக்கு வேற வேலை இல்ல பாரு..” என்று சிலுப்பிக் கொண்டு, சாப்பிட சென்றவள், சாப்பிட்டு முடிக்கும் முன்னே, கார்த்தி சொன்னது போல ஜீவா போன் செய்திருந்தான்.

‘நான் சொன்னேன்ல’ என்ற ரீதியில் கயலைப் பார்த்து கொண்டே போனை எடுத்தவன், “சொல்லுங்க அண்ணா” என்று கேட்க,

மீண்டும் “கயல் எந்திரிச்சுட்டாளா… சாப்பாடு குடுக்க சொன்னியா.” என்று அதே பல்லவியை பாடினான்.

“குடுத்தாச்சுன்னா ஆனால் அவள்…” என்று சொல்லும்போதே, “கார்த்தி!” என ஜீவா கண்டிப்பாக அழைக்க,

அதில், “அது அண்ணி இன்னும் எந்திரிக்கல” என்று வார்த்தையை திருத்தினான் கார்த்தி.

ஜீவா யோசனையுடன் போனை வைத்து விட,

கயல் அவனை முறைத்து “எதுக்குடா பொய் சொன்ன…?” என்றாள்.

“அண்ணாவுக்கு உன்மேல எவ்ளோ அக்கறை பார்த்தியா” என்று குறும்பாக கூற, அதில் அவள் மனதில் மகிழ்ந்தாலும், வெளியில்

“ரொம்பதான் அக்கறை, ஏன் எனக்கு தான் போன் இருக்குல்ல, எனக்கு போன் பண்ணி கேட்க வேண்டியது தான. எல்லாம் ஈகோ…” என்று அவனைத் திட்ட, மீண்டும் ஜீவா கயலின் எண்ணிற்கே போன் செய்திருந்தான்.

அதில் கார்த்தி வாய் விட்டு சிரித்து, “நீ திட்டுனது அண்ணா காதுக்கு கேட்டுடுச்சோ” என்று கேலி செய்ய, அவள் போனையே வெட்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கார்த்தி, “எடுத்து பேசு படி(buddy)” என்று சொல்லிவிட்டு, அவளுக்கு தனிமை கொடுத்து அறைக்கு சென்று விட, கயலுக்கு இதயமெல்லாம் வேகமாகத் துடித்தது.

கை நடுங்க போனை எடுத்தவள், அமைதியாய் இருக்க, ஜீவாவும் அமைதியாகவே இருந்தான்.

அவள் பேசுவது போல் இல்லை என்று உணர்ந்ததும், ஆழ்ந்த குரலில் “கயல்” என்று அழைக்க,

அவள் “ம்ம்” என்று மட்டும் சொன்னாள்.

‘நேத்து நைட் தான் என்னையவே மிரட்டுனா இப்போ வாயில இருந்து காத்து தான் வருது’ என்று மனதுக்குள் சிரித்து விட்டு, “எந்திரிச்சுட்டியா?” என்று கேட்க, அவள் ம்ம் என்றாள்

“சீக்கிரம் சாப்பிடு ரொம்ப லேட் ஆச்சு” என்று கண்டிப்பாக கூற,

அவள் அதற்கும் “ம்ம்” கொட்டினாள்.

“அப்படியே எனக்கு முத்தம் குடுத்துடு” பேச்சுவாக்கில் குறும்பாக ஜீவா கேட்டிருக்க, அவன் சொன்னதை கவனிக்காமல் அதற்கும் ம்ம் என்றவள், அதன் பிறகே அவன் சொன்னதை உணர்ந்து கொண்டு, “என்னது???” எனத் திகைத்தாள்.

அதில் அவன் சத்தம் வராமல் குலுங்கி குலுங்கி சிரித்தபடி, “என்ன என்னது?” என்று மிரட்டலாகக் கேட்க,

அவளுக்கோ நான் கேட்டது உண்மைதானா இல்லயா என்று பெரும் குழப்பமே வர, “இப்போ என்ன சொன்னீங்க?” என்று கேட்டாள்.

“நான் எதுவும் சொல்லலையே ஏன் உனக்கு எதாவது கேட்டுச்சா”

“ம்ம்ஹும் இல்ல” என்றவளுக்கு, அவனின் குரல் குறும்பாக வருவது போல் இருக்க, “பிராடு… எவ்ளோ வில்லத்தனம் பண்றான்” என்று மனதில் திட்டிக்கொண்டு “நான் வைக்கிறேன்” என்று போனை பட்டென்று வைத்து விட்டாள்.

ஜீவா போனையே பார்த்து சிரித்து விட்டு, போனில் இருந்த அவளின் புகைப்படத்திற்கு அழுத்தி முத்தம் கொடுத்து, “லவ் யு ஸ்வீட் ஹார்ட்… சீக்கிரம் உன் கோபத்தை குறைக்கிறேன்.” என்று குஷியாக நினைத்து கொண்டவனுக்கு அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

மதியம் வரை பொழுதை கடத்தியவனுக்கு சரியாக கிளம்பும் நேரத்தில் வேலை வந்துவிட, அதனை முடித்து விட்டு கிளம்ப, மதிய நேரத்தை தாண்டி விட்டது.

அவசரமாகக் கிளம்பி, வீட்டிற்கு சென்றவனின் கண்கள் கயலையே தேடி அலைபாய,

கார்த்தியோ, அவனுக்கு பின்னாடி பார்த்து “கயல் எங்க அண்ணா?” என்று கேட்க, ஜீவா புருவத்தை சுருக்கி, “கயல் எங்கன்னு என்கிட்ட கேட்குற? அவள் வீட்டுல தான இருப்பா” என்றான்.

“அண்ணா, அவள் உங்களுக்கு சாப்பாடு கொடுக்க தான் அப்போவே எஸ்டேட் கிளம்புனாள். அப்போ அவளை நீங்க பார்க்கலையா” பதட்டத்துடன் அவன் முடிக்க

ஜீவா அதிர்ந்து, “என்னது அவள் வந்தாளா நான் பார்க்கவே இல்ல” என்றவன், விறுவிறுவென காரை எடுத்துக் கொண்டு, அவளைத் தேடிச் சென்றான்.

காரில் போகும்போதே எஸ்டேட்டிற்கு போன் செய்து கேட்க, அவள் அங்கு வரவில்லை என்ற தகவல் வந்ததும், கயலுக்கு போன் செய்தான்.

அவளின் மொபைல் சுவிட்ச் ஆஃப் என்று வர, டிரைவருக்கு அழைத்ததில் அவரும் எடுக்கவில்லை. ஜீவாவிற்கு மனதெல்லாம் படபடவென அடிக்க, காரை ஓட்ட முடியாமல் கையெல்லாம் நடுங்கியது.

‘கயல் எங்க இருக்குற கயல். என் கண்ணு முன்னாடி வந்துடுடி. நீ எனக்கு வேணும்டி”‘என்று மனதில் புலம்பிக் கொண்டே, சாலையில் அவளை தேடியபடி செல்ல, ஒரு இடத்தில் மட்டும் கூட்டம் கூடி போலீஸ் நின்று கொண்டிருந்தது.

அதனைப் பார்த்தவன் வேகமாக அங்கு சென்று கூட்டத்தை விலக்கி “என்ன ஆச்சு” என்று கேட்க, அவர்கள், “ஆக்சிடென்ட் சார். அந்த பொண்ணு பிழைக்குமோ என்னவோ…” என்று பரிதாபப்பட, ஜீவாவிற்கு ஒன்றுமே ஓடவில்லை.

‘இல்ல இல்ல என் கயலா இருக்காது. என் கயல்க்கு ஒன்னும் ஆகாது’ என எச்சிலை விழுங்கியபடி சற்று முன்னேறி சென்றவன், அங்கு அவன் வீட்டு, மகிழுந்து மரத்தில் மோதி மலையில் அந்தரத்தில் நிற்பதை பார்த்தவனுக்கு உயிரே இல்லை.

“கயல் கயல்” என்று கத்தியபடி, காரில் அவளை தேட அங்கு அவள் இல்லை என்றதும், அங்கிருந்தவர்களிடம் “இந்த கார்ல இருந்த பொண்ணு எங்க…கயல் எங்க” என்று கத்தினான்.

அப்பொழுது அஸ்வினை அங்கு பார்த்த ஜீவா, அவன் சட்டையைப் பிடித்து, “என்ன பண்ணுனடா கயலை…? என் கயல் எங்கடா. சொல்லு என்ன பண்ணுன. உனக்கு என் மேல தான கோபம். என்னை என்ன வேணாலும் பண்ணிருக்க வேண்டியது தானடா. அவள் என்னடா பண்ணுனா. எங்க அவள் சொல்லு” என்று வெறிபிடித்தவன் போல கத்தினான்.

அஸ்வின் அவன் சட்டையில் இருந்து அவனின் கையை எடுத்து விட்டு, “ஹாஸ்பிடல்ல” என்று சொல்ல, அதில் அதிர்ந்தவன், “என்ன ஆச்சு அவளுக்கு?” என்றான் நடுங்கிய குரலில்.

அஸ்வின் ‘வா’ என்று அவனின் காரில் அழைத்து சென்றான். ஜீவாவிற்கு சுற்றி நடப்பது எதுவும் புரியவில்லை. எங்கு போகிறான் என்று கூட தெரியவில்லை.

ஒரு மருத்துவமனை அருகே காரை நிறுத்த, ஜீவா கார் நிற்பதற்கு முன்னே, வேகமாக இறங்கி, உள்ளே சென்று “கயல் கயல்” என்று தேடி, ரிசெப்ஷனில் விசாரிக்க, அஸ்வினோ எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாய் வந்தான். அந்த ரிசெப்ஷன் பெண், “ஐ சி யு” என்று சொல்லி முடிக்கும் முன்பே, அவன் அங்கிருந்து பறந்திருந்தான்.

மனமெங்கும் கயலுக்கு என்ன ஆகி இருக்கும் என்ற பதட்டத்துடன் சென்றவன், ஐசியு கண்ணாடி வழியே பார்க்க, அங்கிருந்து அவனுக்கு எதுவுமே தெரியவில்லை.

“ஸ்வீட் ஹார்ட்… கயல்” என்று அந்த கதவையே தட்ட, “ஜீவா” என்ற கயலின் குரல் அவனுக்கு பின்னிருந்து கேட்டது.

அவளின் குரலில் திரும்பிய ஜீவாவிற்கு, கயலைக் கண்டதும் தான் மூச்சே விடமுடிந்தது. அவளை ஓடிச் சென்று அணைத்தவன், “ஸ்வீட் ஹார்ட். ஸ்வீட் ஹார்ட்! உனக்கு உனக்கு ஒன்னும் இல்லைல” என்று உடலெல்லாம் நடுங்கிய படி, அவளை மேலிருந்து கீழ் வரை ஆராய்ச்சி செய்தான்.

அவளுக்கு ஒன்றும் இல்லை என்று உணர்ந்த பிறகே நிம்மதி ஆகி, மீண்டும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, “கயல் கயல்” என்று திணறியவனுக்கு அதற்கு மேல் பேசக்கூட முடியவில்லை.

கயல், அவனின் பதட்டத்தில் ஒன்றும் புரியாமல், “என்ன ஆச்சு ஜீவா? எனக்கு ஒன்னும் இல்ல. நான் நல்லா தான் இருக்கேன். உங்களுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்க,

“நான் செத்துட்டேன்டி. உனக்கு உனக்கு ஏதோ ஆகிடுச்சுனு… நான்… நான்” என்றவன், அவள் முகம் எங்கும் முத்த மழையை பொழிந்து, அவள் இதழிலும் விடாமல் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தவன், அவளை முரட்டுத்தனமாய் அணைத்து “லவ் யு கயல். ஐ லவ் யு டி…! ஐ லவ் யு சோ மச் டி கயல்! என்னை விட்டு போயிடாதடி…” என புலம்பினான்.

மீண்டும் அவளின் முகத்தைத் தாங்கி, முத்தங்களை கணக்கின்றி அள்ளிக் குவித்து, அவள் இடையை விடாமல் பிடித்து, இறுக்கி அணைத்தவன் அவளின் கழுத்திலேயே புதைந்து கண்ணீரில் நனைக்க, கயலோ, வேறு ஒரு உலகத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

அவன் காதலை சொன்ன தருணம், அவள் மனதில் பொக்கிஷமாய் பதிய, அவனின் முத்தங்கள் அவன் கொடுத்த இடத்தில் எல்லாம் வேரூன்றி குறுகுறுக்க., அவனின் முதுகில் கையை படர விட்டவளுக்கு அவனுக்கு திடீரென என்ன ஆகிற்று என்று தான் புரியவே இல்லை.

அவன் முதுகை தடவிக் கொடுத்து, “ஜீவா ரிலாக்ஸ். நான் எங்கயும் போகல உங்க கூட தான் இருக்கேன்” என்று அவனை அமைதிபடுத்த,

ஜீவா நிமிர்ந்து, “நீ எப்படி கயல் இங்க? அங்க கார் அப்படி மரத்துல மோதி நிற்கவும் நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா…” என்றவன், தவிப்பாக அவளின் நெஞ்சில் சாய, அவனின் தவிப்பையும், தனக்காக அவன் துடிக்கும் துடிப்பையும், கண்டவளுக்கு சில்லென்று இருந்தது.

அவன் தலையை கோதி விட்டு, “ஆக்சிடென்ட் எனக்கு இல்ல ஜீவா. வேற ஒரு பொண்ணு தெரியாம காரை நடுவுல விட்டுட்டாங்க. அதுல தான், கார் மரத்துல மோதிடுச்சு. நம்ம டிரைவருக்கும் லேசா அடி. அந்த பொண்ணுக்கும் நல்ல அடி. நான் தான், அந்த பொண்ணை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு…” என்று சொல்லி முடிக்கும் முன், அவளின் முகத்தைத் தாங்கி, மீண்டும் தவிப்புடன் முத்தம் இட ஆரம்பித்தவன், நிறுத்தவே இல்லை.

கயலும் அவனின் அதிக பட்ச இதயத் துடிப்பை உணர்ந்து அமைதி காக்க, அவன் முடிக்கவே மாட்டேன் என்ற ரீதியில் அவள் இதழ்களையும் ஆக்கிரமிக்க, அஸ்வின் தான் கடுப்பானான்.

“க்கும்” என்று அவன் தொண்டையை கணைக்க. அதன் பிறகே இருக்கும் இடம் உணர்ந்து ஜீவாவை விலக்கினாள். ஜீவாவும் அவளிடம் இருந்து விலகி அஸ்வினை முறைத்தான், ‘இவளுக்கு ஒன்றும் இல்லை’ என்று சொல்வதற்கு என்ன என்று தான்…!

அப்பொழுது மருத்துவர் ஐசியுவில் இருந்து வந்து, அந்த பெண் பிழைத்து விட்டாள் என்று சொல்ல, அஸ்வின், “டாக்டர், நான் விசாரிக்கனும். இப்போ பேச முடியுமா அவங்களால” என்று கேட்க, அவர், “ஒரு ஒன் அவர் கழிச்சு போய் பாருங்க.” என்றதும், அவன் ஜீவாவை முறைத்து விட்டு, கயலையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, வெளியில் சென்றான்.

கயல்,” ஜீவா, கார் மலைல இருந்து விழுக போகும் போது அஸ்வின் தான் என்னை காப்பாத்துனாரு. அப்பறம் தான் அந்த லேடிக்கு அடிபட்டுருக்கவும், ஆம்புலன்ஸ்ல என்னையும் ட்ரைவரையும் அனுப்பி விட்டாரு” என்று சொல்ல, ஜீவா தான் அவன் எதுக்கு ஹெல்ப் பண்ணுனான் என்று தீவிரமாக சிந்தித்தான்.

வெளியில் சென்ற அஸ்வின்க்கு தான் கடுப்பாக இருந்தது. மேலும் கயல் பேசியதும், கோபத்தை கொடுத்தது. அப்படி இருந்தும் தான் ஏன் அவளை காப்பாத்தினோம் என்று தன் மேலேயே கோபம் எழுந்தது.

கயல், ஜீவாவிற்கு சாப்பாடு கொடுக்க போகும் வழியில் தான், அஸ்வினை பார்த்தாள்.

உடனே அவனை நிறுத்தி, அவனிடம் பேச வேண்டும் என்று சொல்ல, அவளை முறைத்து விட்டு கிளம்பியவனை தடுத்து,

“நான் உன்கிட்ட பேசணும் அஸ்வின். ஒரு அண்ணியா!” என்று தீர்மானமாக பார்க்க,

அவன் “ஏய் யாரு அண்ணி? அவன் எனக்கு அண்ணனே இல்ல. அப்பறம் நீ மட்டும் எப்படி எனக்கு அண்ணியாவ. ஒழுங்கா கிளம்பி போய்டு” என்று மிரட்ட,

“நான் போகமாட்டேன். நீ ஏதோ ஒரு விஷயத்தை தப்பா புருஞ்சுருக்க. உன் அண்ணாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அண்ட் எனக்கு ஜீவாவை பத்தி நல்லாவே தெரியும், அவர்கிட்ட பிரச்சனை பண்ற யாரா இருந்தாலும் உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாரு. ஆனால் நீ அவருக்கு இவ்ளோ தொந்தரவு கொடுத்தும், அமைதியா இருக்குறாருன்னா கண்டிப்பா…” என்று சொல்லவரும் முன்,

அஸ்வின், “ஓ! என்னை எதாவது பண்ணிடுவான்னு மிரட்டுறியா… எங்க செஞ்சுபார்க்கட்டும்.” என்றவன், “ஹ்ம்ம் என் அம்மாவையும் கொன்னுட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம…” என்று கோபமாக கூறியவனை தடுத்தாள் கயல்.

“நிறுத்திறியா…! என்ன எப்போ பார்த்தாலும் கொலை பண்ணிட்டாரு கொலை பண்ணிட்டாருன்னு சொல்ற. ஹான்? அவரு எதுக்கு அவரு அம்மாவையே கொலை பண்ணனும். சொல்லு.அப்படியே அவரு உன் அம்மாவை கொலை செஞ்சுருந்தாலும் உன்னையும் அதே மாதிரி பண்றதுக்கு எவ்ளோ நேரம் ஆகிட போகுது. இங்க பாரு அஸ்வின்… எனக்கு என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரியாது. ஆனால் நீ அவரை தப்பா புருஞ்சுருக்கன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியுது “

“நீ போலீஸ் தான? கண்ணை மூடிக்கிட்டு எதையும் நம்பாம, ஒரே ஒரு தடவை உண்மை எதுன்னு தேடி பாரு. இது நான் ஜீவாவுக்காக. அவரை நீ புருஞ்சுக்கனுன்றத்துக்காக சொல்லல. உனக்காக தான் சொல்றேன். அவரு குடும்பம் இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டாரோ அதே மாதிரி, நீயும் அம்மா இல்லாம கஷ்டப்பட்டுருப்ப, ஒரு அண்ணியா…

நீ என்னை அண்ணியா நினைச்சாலும் இல்லைன்னாலும் என் கடமையை நான் செய்வேன். கார்த்தி எனக்கு எப்படியோ அப்படிதான் நீயும். ஒரே ஒரு தடவை யோசி… ப்ளீஸ்” என்றவள் காரில் ஏற, அப்போதுதான் அந்த பெண்மணி வந்த கார், பிரேக் பிடிக்காமல், கயலின் காரை இடித்து, குப்புற அடித்து விழுந்தது.

கயலின் காரோ, மலையில் மரத்தில் மோதி, விழுகின்ற நிலையில் இருந்தது. முதலில் அவள் செத்தா சாகட்டும் என்று நினைத்து அஸ்வின் அங்கிருந்து கிளம்ப தான் நினைத்தான்.

ஆனால் அவளின் ‘அண்ணி’ என்ற வார்த்தை அவனுக்குள் ஏதோ ஒரு குடைச்சலைக் கொடுக்க, பின், சென்று அவளை காரில் இருந்து தூக்கி விட்டான். அவளும் அவன் காப்பாற்றுவான் என்று எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் வியந்த பார்வையிலேயே புரிந்தது.

கயலை அழைத்துக்கொண்டு வெளியில் வந்த ஜீவா, அங்கு அஸ்வின் நிற்பதைக் கண்டு, “தேங்க்ஸ்! என் வைஃப் – அ காப்பாத்துனதுக்கு” என்று சொல்ல, அவன் அவனைப் பாராமல் வேறு எங்கோ பார்த்தான்.

கயலோ சும்மா இராமல், “அட என்ன ஜீவா… எதுக்கு தேங்க்ஸ்லாம் சொல்றீங்க. அவரு அவரோட அண்ணியை தான காப்பாத்துனாரு.” என்று நக்கலாக கூற, அஸ்வின் “யாருக்கு யாரு அண்ணி…” என்று பல்லைக்கடித்து முறைத்தவன், கோபமாக அங்கிருந்து நகர்ந்தான்.

அவள் தான், “ப்பா அண்ணன் தம்பிகளுக்கு கோபம் மட்டும் பொசுக்கு பொசுக்குன்னு வந்துருது. கோபம் வந்தா யாரு என்னன்னு பார்க்குறது இல்ல, என்ன பேசுறோம்னு யோசிக்கிறது இல்ல. தப்பு பண்றோமா இல்லையானு கூட தெரியறது இல்ல…” என்று கிண்டலாக இப்போது ஜீவாவைத் தாக்க,

அவன் ‘ஐயோ இவள் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாளே’ என்று மனதில் புலம்பி விட்டு,”ஸ்வீட் ஹார்ட் காருக்கு வாயேன்” என்று உள்ளே இழுத்துச் சென்றான்.

அவளோ “எதுக்கு ஜீவா இப்படி இழுத்து வர்றீங்க?” என்று புரியாமல் கேட்க, அவன் அவளை இழுத்து, அணைத்து, “ஆமா டி… எனக்கு தெரியல நான் தப்பு பண்றேனா இல்லையான்னு. ஆனால் தப்போ ரைட்டோ உன்னை மட்டும் விட்டுக்குடுக்க மாட்டேன்!” என்றான் அழுத்தமாக.

அவள், அவனிடம் இருந்து பிரிந்து, “இன்னும் நீங்க முழுசா சொல்லி முடிக்கல! உங்களுக்கும் அஸ்வின்க்கும் என்ன பிரச்சனை…?” என்று கேட்க,

“இன்னும் நீ என்னை மன்னிச்சிட்டியான்னு சொல்லல…! லவ் யூ சொன்னேன் அதுக்கும் பதில் சொல்லல. முதல்ல, நீ பதில் சொல்லு அப்புறம் நான் சொல்றேன்” என்றான் குறும்புடன்.

அதில் செவ்வனமாய் சிவந்து விட்டவள், “சரியான வில்லன்” என்று முணுமுணுத்தாள் வெட்கத்துடன்.

நேசம் தொடரும்…
-மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
51
+1
4
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்