1,221 views

அன்பினி உடல் லேசாக வெளிக் காற்றில் நடுங்க ஆரம்பிக்க, “டிரஸ மாத்து அன்பு.” என்றான் அக்கறையாக.

அவனை விட்டு விலக மனம் இல்லாதவள் அப்படியே இருக்க,  நகரத்தினான். “ஆஹான் போ!” என்றவள் மீண்டும் கட்டிக் கொள்ள, பழைய அக்னி வந்துவிட்டான்.

“இதான் சாக்குனு உன் வேலையை காட்டாத நகரு.” என்ற தள்ளிவிட,

“சும்மா இருந்த பொண்ண கட்டி புடிச்சு கிஸ் பண்ணிட்டு நல்லவன் மாதிரி பேசாத. அன்னைக்கு ஆபீஸ்ல நான் பண்ணதுக்கு எப்படி எல்லாம் பேசின. இப்ப நீ பண்ணதுக்கு என்ன அர்த்தம்.” முகத்தை கழுத்தோடு அணைத்து மேல் பார்வையில் முறைத்துக் கேட்டாள்.

“வேலைய பாருடி போ.” என்றவன் மெத்தையில் அமர்ந்தான்.

கால்களை தரையோடு உதறிக் கொண்டு நடந்தவள் அவன் மீது அமர்ந்துக் கொண்டு, “நான் சும்மா தான இருந்தேன் நீ ஏன் வந்த. சும்மாவே இந்த மானங்கெட்ட மனசு உன் பின்னாடி தான் வருது இப்ப எப்படி சும்மா இருக்கும். ஒழுங்கா எனக்கு கோஆப்ரேட் பண்ணு.” என்றவள் கைகளை கழுத்தோடு சேர்த்துக் கொண்டு முத்தம் கொடுக்க முயல, அவள் உதட்டில் கை வைத்து தடுத்தான் அக்னி.

கணவனின் கைகளை கடிக்க, “ஆஆ.. பிசாசு  எதுக்குடி கடிச்ச.” கடித்த கைகளை உதறியவாறு அவன் கேட்க,

“நீ எதுக்கு என் முத்தத்தை வேஸ்ட் பண்ற.” என்றவாறு மீண்டும் கொடுக்க முயன்றாள்.

அன்பினியை தள்ளிவிட அவன் போராட கங்காரு குட்டி போல் கழுத்தைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். நின்றால் அவளும் நிற்பாள் என்ற எண்ணத்தோடு அக்னி எழுந்து நிற்க, வாகாக இடுப்பில் குழந்தையாய் கொஞ்சினாள்.

ஒருமுறை அக்னி விலக முற்பட்டால்… தண்டனையாக சிக்கும் இடத்தை எல்லாம் கடித்து காதைலை தழும்பாக கொடுத்தாள். கால்களை வலுக்கட்டாயமாக பிடித்தவன் நிற்க வைக்க, விட்டுக் கொடுப்பது போல் நின்றவள் ஒரு குதி குதித்து ஏறிக் கொண்டாள்.

அக்னியின் காதை கடித்தவள், “மாமா ஒரே ஒரு கிஸ் ப்ளீஸ்டா” என்று காதில் முத்தம் வைக்க, சிரித்தது அக்னியின் மனது.

இருந்தும், “கீழ இறங்குடி இல்லன்னா தூக்கி வீசிடுவேன்.” என்று அவளை தன்னிடமிருந்து பிரிக்க, கைகளை முழுவதும் அவன் பின்னங் கழுத்தில் போட்டவள்  இறுக்கிக் கொள்ள, இருவரின் முகமும் அருகில்.

அன்பினியின் ஈர உடல் அவன் சட்டையை தாண்டி உடலை அடைந்ததும் சிலிர்த்தது. ஆண் மனம் இணைந்துக் கொடுக்க இறங்கி வர, “என்னடா மாமா ரொம்ப பண்ற. இங்க வா.” என்று விரல்களை அவன் முடிக்குள் இணைத்துக் கொண்டவள் மீசை முடிகளை கடித்து இழுத்தாள்.

லேசான வலி அவன் முகத்தில். அதனால் அவளைப் பிடிக்காமல் இருந்த கைகள் இடுப்பை பிடித்து வதைத்தது. இப்போது வலி அவளுக்கும் உண்டானது. அதில் கண்மண் தெரியாமல் கன்னத்தை மாறி மாறி கடித்தவள் உதட்டுக்கு குறி வைத்தாள்.

அவளுக்குள் ஒரு தயக்கம் உருவாக அதற்கு பதில் உதட்டின் கீழ் தாடையில் முத்தம் ஒன்று வைக்க, இடுப்பை வதைத்துக் கொண்டிருந்த கைகள் சேர்த்தணைத்துக் கொண்டது. அக்னியின்  விழிகளை அன்பினியின் காதல் விழிகள் தாக்க தானும் அவ்வழியே தாக்க ஆரம்பித்தான்.

பேச்சுக்களுக்கு இடம் இன்றி இருவரும் அசையாமல் இருக்க உதடுகள் ஒட்டிக்கொள்ள துடித்தது. பால்கனி வழியாக வரும் ஊதக்காத்து  ஈர உடையில் இருப்பவளை நடுங்க வைக்க, ஆணவன் உடல் கதகதப்பை கொடுத்து சேர்த்துக் கொண்டது. இன்னும் நெருங்கி போனாள் அவனோடு. அக்னியின் முகத்தை விட அன்பினி முகம் மேல் இருந்தது. அவனுக்கு ஏற்றவாறு அவள் முகத்தை கீழிறக்க, அவளையே கீழ் இறக்கி தன் உதட்டோடு சேர்க்க முயன்றான்.

குலுங்கி கீழ் இறங்கியவள் தாமதிக்காமல் உதட்டு சாயம் இல்லாமல் வெறுமையாக இருந்த உதட்டை அவன் எச்சில் சாயத்தை பூசி அழகு படுத்த ஆரம்பித்தாள். கொடுத்தது அவளாக இருப்பினும் தொடர்வது கணவனாக இருந்தது. மெதுவாக ஆரம்பித்த முத்தம் வேகம் எடுக்க ஆரம்பித்தது. முதல் முத்தம் போல் இல்லாமல் இந்த முத்தம் சக்கரை குவியலாய் தித்தித்தது.

பெண்ணின் கைகள் தோளில் ஊன்றிக்கொண்டு  பின்னந் தலையை தன்னோடு சேர்த்து வைத்துக் கொள்ள, கணவனின் கைகள் இடுப்பை வளைத்து தன் உடலோடு ஒட்ட வைத்தது.‌ முத்தம் சிறு முனங்கல் ஆக மாறியது. அக்னியின் ஆண்மை வெளிவர துடிக்க, அதன் வேகம் தெரிந்தது அன்பினியின் உதட்டில். இதழ் மெல்ல வலிக்கத் துவங்கியது. பிரிய நினைத்து கால்களை கீழ் இறக்க முயல, மீண்டும் குலுங்கி அவனோடு சேர்ந்துக் கொண்டாள் அக்னியின் கை இறுக்கத்தில்.

முடி இருந்த அன்பினியின் விழிகள் அதில் திறந்து அவனைக் காண, அவனோ ஆரம்பத்தில் இருந்து அவள் முகத்தைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான். விழிகள் சந்தித்த பின் காதலின் பரிசு மீண்டும் வேகம் எடுத்தது. ஈர ஆடையில் கை வைத்தவன் அதை விளக்கினான் வெற்று உடலை தொட. மேனியில் கைபட்டதும் இன்னும் நெருங்கி சென்றாள்.

அவளின் நெருக்கம் என்னவோ செய்ய மேனியை மெய்சிலிர்க்க செய்தான் கூச்சம் மூட்டி. கழுத்தை பற்றி இருந்த கைகள் பிரிந்து தடை போட, அந்த தடையையும் தாண்டி ஊர்ந்தான் அக்னி. தடை போட்ட கைகள் அதில் அடங்கி போய்விட இதழ் சுவை தாண்டவம் ஆடியது இருவருக்கும்.

அழகான காதல் தருணம் எதிர்பார்க்காத விதமாக அமைந்து விட, இருவருக்குமான பிரச்சனை தூரம் சென்றது. அன்பினியின் ஆசை சட்டையின் பட்டன்களை அவிழ்க்க முயன்றது. விட்டுக் கொடுத்துப் போனான் அவளை தன்னிடமிருந்து சற்று பிரித்து. நெஞ்சில் கை வைத்து அவள் ஆசைப்பட்ட இடத்தை தடவ, அதில் சிலாகித்துப் போனான் அக்னி.

நிமிடங்கள் நில்லாமல் ஓடிய பெண்ணும் இதழைப் பிரிக்காமல் காதல் போர் புரிந்து கொண்டிருக்க, கதவு தட்டும் ஓசை பிரித்தது அவற்றை. விலகிய பின்னும் கூடி இருந்த முகம் நடப்பை உணர வைக்க நொடிகள் தேவைப்பட்டது. முதலில் தன்னிலை உணர்ந்த அக்னி அவள் முகத்தை பார்க்காமல் திரும்பிக் கொள்ள,

“அக்னி” என்று அழைத்து நெருங்கினாள்.

முதுகுக்கு பின்னால் அவள் இருக்க, இவ்வளவு நேரம் கூடியிருந்து விட்டு சிடுசிடுப்போடு பேச மனம் வரவில்லை அக்னிக்கு. விலக மனமின்றி தவித்துக் கொண்டிருந்தவன் நெருங்க, மீண்டும் விலகி நின்றான் கதவு தட்டும் ஓசையில். இந்த முறை அன்பினியும் உணர்ந்து கொண்டு விலகி நின்றாள்.

என்னவோ போலானது அக்னிக்கு அதில். ஆனாலும் கேட்கவோ, நெருங்கவோ விரும்பவில்லை. அவளை விட்டு நகர்ந்தவன் கதவை திறக்க, திவ்யா நின்றிருந்தாள்.

சங்கடப்பட்ட அக்னி என்ன கேட்பது என்று தெரியாமல் முழிக்க, “ரெண்டு பேரையும் அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க.” என்றாள்.

எதுவும் பேசாமல் தலையசைத்தவன் கதவை சாற்றாமல் உள்ளே வர, “என்ன நாத்தனாரே அங்கயே நிக்கிறீங்க உள்ள வாங்க.” என்று சாதாரணமாக பேசினாள் அன்பினி.

“வேணா அண்ணி ஃபோன தூக்கி போட்டு உடைச்ச மாதிரி என்னை தூக்கி போட்டு உடைச்சிட்டீங்கன்னா நானே பாவம் ஐம்பது கிலோ தாஜ்மஹால்.” கிண்டல் செய்வதாக நினைத்து அக்னி மறந்து போன ஒன்றை ஞாபகப்படுத்தி விட, குளிர்ந்த மேனி கொதிக்க துவங்கியது.

அதை பார்த்த அன்பினி, “நல்லா வருவ நாத்தனாரே அய்யனார சாமி ஆட விட்டுட்ட கூட நின்னு வேப்பிலை அடி.” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

முகத்தை ஒரு மாதிரியாக சுழித்த திவ்யா எதற்கென்று புரியாமல் அண்ணனை பார்க்க, புரிந்து கொண்டு வாயை மூடிக்கொண்டாள். வந்த வழியே பவ்யமாக ஓட நினைக்க, அவள் முடியை பிடித்தாள் அன்பினி.

“எங்க ஓடுற இங்க வா.” என்று அறைக்குள் தள்ளினாள்.

அவள் சாதாரணமாக தள்ள என்னவோ மலை மீது இருந்து விழுவது போல் “அண்ணா” என்று ஓடி அவன் மேல் விழுந்தாள்.

“குண்டம்மா பார்த்து வாடி.” என்று அக்னி தாங்கிக் கொள்ள,

“ஓஹோ! இந்த ஐம்பது கிலோ தாஜ்மஹால் பேரு குண்டம்மா வா.” நாத்தனாரின் செல்லப் பெயரை கண்டு பிடித்த பெருமை அன்பினி குரலில்.

அதில் அண்ணனை முறைத்தவள், “பொண்டாட்டி முன்னாடி கெத்து காட்டுறியா. இதான் உனக்கு லாஸ்ட் இன்னொரு தடவை என்னை குண்டம்மான்னு சொன்ன கொந்தளிச்சுடுவேன்.” என்றாள் அவனை சரிக்கு சமமாக முறைத்து.

“ஏனுங்க இனிமே என் நாத்தனாரை குண்டம்மான்னு சொல்லாதீங்க. அப்படி குண்டம்மான்னு சொல்றதா இருந்தா நானும் சண்டை போடுவேன். குண்டம்மா மாதிரியா இருக்காங்க என் நாத்தனார். குண்டா கொழு கொழுன்னு இருக்காங்க மனசாட்சி இல்லாம குண்டம்மான்னு சொல்றீங்க. இனிமே குண்டம்மான்னு சொல்லாதீங்க அவ்ளோ தான்.” என்று நாசுக்காக பலமுறை “குண்டம்மா” என அழைத்து விட்டாள் அன்பினி.

அவளின் பேச்சில் அக்னியே சிரித்து விட்டான். அதில் இன்னும் காண்டானாள் திவ்யா. இருவரையும் சேர்ந்து திட்ட, “என்னடி குண்டம்மா ஓவரா பேசுற.” என்று பழைய அக்னியாக அவளிடம் வாதாட,

“டேய்! குண்டமான்னு சொல்லாதடா.” கோபத்தோடு கூறினாள்.

“அடியே நாத்தனாரே! எவ்ளோ தைரியம் இருந்தா என் முன்னாடி என் புருஷன டா போடுவ.” என்று அன்பினி சண்டைக்கு பாய,

“என் அண்ணனை நான் எத்தனை டா வேணா போடுவேன் அதை எப்படி நீங்க கேட்கலாம்.” என்று அவளும் சண்டைக்கு முந்தினாள்.

மனைவியும், தங்கையும் தன் பேரை சொல்லி போட்டுக் கொள்ளும் பொய் சண்டையை புரிந்து கொண்ட அக்னிசந்திரன் இருவரையும் சேர்த்து,
“நடிப்பு திலகம் ரெண்டு பேருக்கும் நடிக்க சொல்லியா தரணும்.” வாரி விட, அவனிடம் மல்லு கட்ட ஆரம்பித்தார்கள்.

“அண்ணி இவன் ரொம்ப பேசுறான்.” என்று திவ்யாவும்,

“ஆமா குண்டம்மா. இந்த ஆங்கிரி பேர்ட் ஓவரா துள்ளுது காலை உடைச்சு மாவு கட்டு போற்றுவோம்.” என்று கணவனை கேலி பேசுவது போல் திவ்யாவையும் சேர்த்து பேசி விட்டாள்.

அதில்  அண்ணன் மீது இருந்து முறைப்பு அவளிடம் திரும்பிக் கொள்ள, “பார்த்தியா இவ கூட சேர்ந்துக்கிட்டு என்னையவே எதிர்க்க பார்த்த.” என்று காற்றடிக்கும் நேரம் பார்த்து தூற்றி விட்டான் அக்னி.

நாத்தனாரை சமாளிக்க, “அது இல்ல ஐம்பது கிலோ தாஜ்மகால் நாளைக்கு உனக்காக  குழிப்பணியாரம்  செஞ்சி தரேன்னு சொல்ல வந்தேன் அதுக்குள்ள வாய் வழுக்கி  விழுந்துடுச்சு.” என்று  பம்பினாள்.

அவள் பேச்சில் திவ்யா கேவலமாக பார்க்க, அக்னி சத்தமாக, “த்தூ” என்று விட்டான்.

மூவரும் ஒருவர் மாற்றி ஒருவர் வாரிக் கொண்டு பேச்சை வளர்க்க, ஈரமான அன்பினி ஆடை வெயில் இல்லாமல் காய்ந்து விட்டது. அதைக் கூட கவனிக்காமல் மும்முரமாக இருந்தாள் பேச்சில்.

அழைக்க சென்ற மகள் இன்னும் வராமல் இருக்க பரமேஸ்வரியே மேலே வந்தார். வந்தவர் வாசலில் நிற்க, மெத்தையில் அமர்ந்துக் கொண்டு மூவரும் அடிக்கும் லூட்டி தான் தெரிந்தது.

“திவ்யா நாளைக்கு காலேஜ் போற ஐடியா இல்லையா” வாசலில் நின்ற பரமேஸ்வரி கேட்க, மூவரும் திரும்பினார்கள்.

முகத்தை பாவமாக வைத்துக் கொண்ட திவ்யா, “அண்ணன் தாம்மா நாளைக்கு காலேஜ் போக வேணாம் உன்னை படத்துக்கு கூட்டிட்டு போறேன்னு பிரைன் வாஷ் பண்ணிட்டு இருக்கான்.” என்று ஒரு நடிப்பை வெளிப்படுத்த, அம்மா முன்பு பேசாமல் முறைக்க ஆரம்பித்தான் அக்னி.

“என்ன நாத்தனாரே என் புருஷனை போட்டு கொடுக்கிற. நீதான முதல்ல உன்னோட அம்மா அப்பா எங்கயும் கூட்டிட்டு போக மாட்றாங்க வீட்டுக்குள்ளயே வச்சி கொடுமை பண்றாங்கன்னு  கம்ப்ளைன்ட் பண்ண.” என்று அவளை விட அன்பினி பிரமாதமாக நடிக்க,

“அம்மா புருஷனும் பொண்டாட்டியும் எதுல ஒத்துமையோ இல்லையோ இதுல நல்ல ஒத்துமையா இருக்காங்க ம்மா.” என்றதும் இருவரும் ஒரு சேர பார்த்துக் கொண்டு சிரித்தார்கள்.

பரமேஸ்வரி மனம் இந்த சூழ்நிலையை விரும்பினாலும் கம்பெனியை தன்மகன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, ” உன்னை கிளம்ப சொல்லி பத்து நிமிஷம் ஆகுது.” என்றார்  மகளை பார்த்து.

அவளோ சமத்துப் பிள்ளையாக அங்கிருந்து நடையை கட்ட, மாமியாரைப் பார்த்து சத்தமாக ” ஆங்கிரி பேர்ட் எல்லா மாமியாரும் மருமக கிட்ட இருந்து மகனை பிரிக்க தான் பார்ப்பாங்க உங்க அம்மா அண்ணி கிட்ட இருந்து நாத்தனார பிரிக்க பார்க்கிறாங்க. வெரி பேட் ஹாபிட்.” என்று  கேலி பேசினாள் அன்பினி.

மருமகளை முறைக்க ஆரம்பித்தவர், “ரெண்டு பேரும் இப்ப வந்து சாப்பிட்டா காலையில சாப்பாடு கிடைக்கும் இல்லன்னா பட்டினி தான்.” என்றார்.

அன்னையின் வார்த்தையில் அக்னியும் தங்கையை போல் சமமாக எழுந்து விட, அதைப் பார்த்தவர் படி இறங்கினார். கதவு வரை சென்ற அக்னியின் சட்டை காலரை பிடித்தவள், “டிரஸ் மாத்திட்டு போ ஈரமா இருக்கு.” என்றாள்.

குனிந்து தன் உடையை பார்த்தவன், “எனக்கு ஒன்னும் இல்ல நீ டிரஸ் மாத்திட்டு வா வெயிட் பண்றேன்.” என்றான்.

திறந்திருக்கும் கதவை சாற்றியவள், “மாமா சேர்ந்து டிரஸ் மாத்துவோமா.” என்று முன்னர் இருந்தது போல் கைகளை அவன் கழுத்தில் மாலையாக்கிக் கொண்டு கேட்க, சுட்டெரித்தான் பார்வையால்.

அதில் அவள் முகம் சுருங்கி விட்டது. முகத்தை நிமிர்த்தி, “சாப்டுட்டு வந்து மீதிய பார்த்துக்கலாம். இல்லன்னா உன் மாமியார் திரும்பவும் வந்துடுவாங்க.” என்றதும் அமைதியாக கதவை திறந்து விட்டாள்.

அவள் அமைதி சங்கடத்தை கொடுக்க கதவை சாற்றியவன், “டிரஸ் மாத்திட்டு போகலாம்.” என்றான்.

ஆடைகளை மாற்ற மறந்த இருவரும் இதழ்களை மாற்றிக் கொண்டிருக்க, பரமேஸ்வரி சத்தத்தில் உடைகளை மாற்றிக் கொண்டு  சாப்பிட அமர்ந்தாள் அவனோடு. இருவருக்கும் பரிமாறிய பரமேஸ்வரி தன் அறைக்கு செல்ல,

“அத்தை நாளைக்கு காலையில நான் டிபன்  செஞ்சிடுறேன்.” என்றாள் அன்பினி.

திரும்பாமல் தலையசைத்தவர் தலை மறைந்து கொண்டது. வார்த்தையில் அவளைப் பார்த்து அக்னி, “உனக்கு சமைக்கலாம் தெரியுமா.” என்றான் சந்தேகமாக.

“நான் பொண்ணு தான சமைக்க தெரியாதா என்ன!”  என்றவள் புதிதாக தெரிந்தாள் அக்னிக்கு.

நொடி இடைவெளிக்குப் பிறகு, “அன்னைக்கு சாப்டியே அதுவும் நான் செஞ்சது தான்.” என்றாள்.

‘தெரியும்’ என்பது போல் தலையசைத்தவன், “கம்பெனில நான் பார்த்த அன்பினிக்கும் இங்க இருக்க அன்பினிக்கும் ரொம்ப வித்தியாசம்.” என்றவன் ஆராய்ச்சி பார்வையை அவள் மீது செலுத்த, முகம் உயர்த்தி பார்த்தாள் அன்பினி.

அவன் ஆராய்ச்சியை தொடர… தலை குனிந்தவள், “அந்த அன்பினிசித்திரை செல்வகுமார் பொண்ணு. இந்த அன்பினிசித்திரை அக்னிசந்திரனோட மனைவி. உன்ன கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணும் போதே உன்னை சுத்தி இருக்கிற எல்லாரையும் முழுசா நேசிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அதுவும் இல்லாம என் அப்பா பண்ண பாவத்தை தீர்க்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு.” என்றாள்.

அவள் எதையும் பேசாமல் இருக்க, “சாப்பிடு.” என்றவன் சாப்பிட ஆரம்பிக்க,

“எனக்கு ஒரு ஆசை செய்வியா!” என்றாள் ஏக்கத்தோடு.

அவன் பதில் பேசாமல் அமைதியாக இருக்க, “என்னை திட்டி வெளியலாம் போக சென்னல உன் அன்பு பாவம் இல்லையா ப்ளீஸ்.” கெஞ்சலோடு கொக்கி போட, வார்த்தை வேலை செய்தது அவனிடம்.

அவள் இருந்த நிலையை நினைத்து பார்த்தவன், “என்னன்னு சொல்லு முடிஞ்சா செய்றேன்.” என்றான்.

அதுவே அவளுக்கு மிகுந்த மகிழ்வை தர, வேகமாக ஓடினாள் சமையலறைக்கு. பார்வையை திருப்பியவன் அவள் என்ன செய்கிறாள் என்பதை ஆராய, பெரிய கிண்ணம் ஒன்றை எடுத்து வந்தாள்.

அக்னி புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, அவன் தட்டில் இருக்கும் இட்லியோடு சேர்த்து தன் தட்டில் இருப்பதையும் எடுத்து வைத்தாள் அந்த கிண்ணத்தில்.

“என்ன பண்ற?” அவன் புரியாமல் கேட்க,

கையசைத்து ஒரு நிமிடம் டைம் கேட்டவள் தன்னறைக்கு ஓடி சென்று கார் சாவியை எடுத்து வந்தாள். அதைப் பார்த்து இன்னும் குழம்பிய அக்னி கேள்வி கேட்பதற்கு முன், “வா!” என்று அழைத்துச் சென்றாள் வெளியில்.

அக்னியின் வீடு சிறு அளவு மூன்றடுக்கு மாடி வீடு.  அக்னியின் விபத்திற்கு பின் இன்னும் கடுமையாக உழைத்தார் மணிவண்ணன்.  இங்கு திரும்பி வந்ததும் வீட்டை வாங்கிய கையோடு பரமேஸ்வரிக்கு பிடித்தது போல் கட்டினார். மனைவியை மகாராணி போல் பார்த்துக் கொள்ள நினைத்தவர் சகல வசதிகளையும் சிறுக சிறுக சம்பாதித்து சேர்த்தார். தோட்டத்திற்கு முன்பு வாகனம் நிறுத்த சிறு போர்டிகோ அமைத்திருந்தார்.

நிற்கும் இரண்டு கார்களில் அக்னியின் காரை எடுக்கச் சொன்னவள் வெளியில் நின்றாள். அவன் குழம்பி அன்பினி சொன்னதை செய்தான். அன்று அவனைப் பார்ப்பதற்காக கார் நிறுத்தி இருந்த இடத்தில் அக்னியின் காரை நிறுத்தச் சொன்னவள் அதில் ஏறிக் கொண்டாள்.

“என்னதான் பண்ற?” அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அக்னி கேட்டு விட, “நீ வேலைக்கு வராத அந்த ஒரு வாரம் உனக்காக  இங்க வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.” என்றவள் அவன் முகத்தை ஆராய,

அவள் நிற்பதை தினமும் கவனித்து கிளம்பும் வரை தூங்காமல் இருந்த அக்னி எதையும் கண்டுகொள்ளாமல் சாதாரணமாக இருந்தான். அவன் முகபாவனையில் உள்ளுக்குள் சிரித்த அன்பினி, “அப்போ நம்ம எப்படி இருக்கணும்னு நிறைய கனவு கண்டேன். அதுல ஒன்னு தான் இது.” என்றவள் சாப்பாட்டு கிண்ணத்தை அவனிடம் கொடுத்து,

“ஊட்டி விடு மாமா.” என்றாள் காதல் பொங்க.

அவள் முக பாவனைகளும் பேச்சுக்களும்   தாக்கியது அக்னியை. ஊட்ட கைகள் பரபரத்தாலும் வேண்டாம் என்றது மூளை. அதில் சுதாரித்தவன்,

“நீ என்ன குழந்தையா! கார்ல உட்கார்ந்து நிலா சோறு சாப்பிட. பைத்தியக்காரத்தனமா பண்ணாத” என்று காரை விட்டு இறங்கியவன்  வீட்டிற்கு சென்று விட்டான்.

கார் கண்ணாடியை இறக்கியவள் மனம் கசங்க பார்த்தாள் செல்பவனை. அக்னி சென்று  அரைமணி  நேரம் ஆகி இருக்கும். அவன் வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்தவள் வருத்தத்தோடு பால்கனியை பார்க்க, அவனும் அங்கிருந்து பார்த்தான் மனைவியை.

அக்னி மேலே வரும்படி சைகை செய்ய காரை விட்டு இறங்கியவள், ‘ப்ளீஸ்’ என்று பாவனையை ஐவிரல்கள் நீட்டி காட்ட,

‘முடியாது’ என்ற தலையசைத்தான் அக்னி.

‘என் செல்லம் தான’ என்று கன்னம் கிள்ளி காண்பித்தவள், ‘ஒரு தடவை மட்டும்.’ என்றாள் சைகையால்.

‘கொன்றுவேன் டைம் ஆகுது மேல வா.’ வாட்ச் கட்டும் இடத்தில் சைகை செய்து அக்னி காட்ட,

‘உன் அன்பு பாவம்’ என்றாள் தலையை தொங்க போட்டு.

அவள் திரும்பிப் பார்க்கும் வரை அமைதியாக இருந்தவன், ‘விட்டா என்னை ஆக்கிடுவ பாவமா.’ என்று சைகை செய்ய, சிரித்து விட்டாள் அன்பினி.

‘லவ் யூ அக்னி.’ கையால் இதயம் உருவாக்கி அவன் முன்பு நீட்ட, பதில் சொல்லவில்லை அக்னி.

ஒரு மாதிரி ஆகிவிட்டது அவளுக்கு. முகம் சுருங்கி போக கார் எடுக்க எதிர்ப்புறம் வந்தாள். சாவி கொடுத்து உயிர் கொடுத்தவள் அதை இயக்காமல் அப்படியே இருக்க, ‘போடா ரொம்ப பண்ற’ என்றாள் மனதில்.

இனிமேல் வரமாட்டான் என்று உணர்ந்தவள் காரை நகர்த்த செல்ல, கதவைத் திறந்தவன் உள்ளே அமர்ந்தான். அவள் எதுவும் பேசாமல் காரை எடுக்க,

“இன்னைக்கு ஒரு நாள் தான். அது கூட திட்டினதுனால.” என்றிட, கண்கள் பளிச்சிட்டது அன்பினிக்கு.

கைபேசியில் வீடியோ ஆன் செய்தவள் மனம் துள்ளி குதித்தது. அவள் செய்கை ஒவ்வொன்றும் அக்னியின் மனதை அசைத்து பார்த்தது. ஏனோ அவள் முகத்தில் தெரியும் மகிழ்வு அவனை பெருமை அடைய செய்ய, என்றும் இப்படியே இவள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தான் கடவுளிடம். இவன் தான் பெரிதாக தண்டிக்க போகிறான் என்பதை அறியாமல்.

இட்லியை பிய்த்து எடுத்தவன் அவள் உதட்டை தாண்டி வாயினுள் திணிக்க,  ஒரு கிலோ இனிப்பை ஒரே வாயில் விழுங்கிய சுவையை உணர்ந்தாள் அன்பினி.

அடுத்த வாய் வாங்கியவள்‌ அவன் கையை பிடித்து, “லவ் யூ அக்னி”என்றதோடு முத்தம் கொடுக்க,
முறைத்தான் அவன்.

அதில் சிரித்தவள் எக்கி அவன் கண்ணில் இதழ் பதிக்க, முறைப்பு அடங்கிவிட்டது. அதை பார்த்தவள் கன்னத்தில் கொடுக்க, ஈரம் பட்ட இடத்தை துடைத்தான் அக்னி.

உதட்டை பிதிக்கியவள், “என் எச்சி பட்டா என்னவாம்.” என்று குறைபட,

“எச்சி பட்டா பரவால பைத்தியமே வாய்ல இருக்க எல்லாமே படுது‌.” என்றான் ஊட்டிக் கொண்டு.

அக்னி ஊட்ட கைகளை நீட்ட வாங்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். விழிகள் முறைத்தாலும் மனைவியை சமாதானப்படுத்த கன்னத்தில் இதழ் பதித்தான்.

‌ பதில் வாதம் புரியாமல் வாயில் இருப்பதை முழுதாக சாப்பிட்டு முடித்தவள், அக்னியின் முகத்தை பற்றி சாப்பிட ஆரம்பித்தாள் உதட்டை. தடை விதிக்காத அக்னி அவள் இதழை சுவைக்க, கிண்ணத்தில் இருக்கும் இட்லி அப்படியே இருந்தது வெகு நேரமாக.

மூச்சு முட்ட தானாகவே விலகினாள் அன்பினி. இதமான காதல் நேரம் இருவரையும் கடத்தி செல்ல, இப்போது அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள் அன்பினி. இடைப்பட்ட நேரத்தில் அக்னியின் பார்வை மாற ஆரம்பித்தது அவளிடம். கோபம் கட்டுக்கடங்காமல் இருப்பினும் காதல் அதை வசியம் செய்ய… மயங்கி போனான் மதியவன்.

நேற்று வரை அன்பினி அறிந்திருக்க மாட்டாள் ஒருவன் பின் இப்படி அலைவோம் என்று. காதல் அவளை முழுமையாக மாற்றி இருக்க, அதே காதலை காட்டி கணவனையும் மாற்ற ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடித்தவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்க,

“அக்னி ஒரு நிமிஷம் கீழே இறங்கு.” என்றவள் இறங்கினாள்.

அன்று தெரு விளக்கின் வெளிச்சத்தில் நின்ற இடத்தில் இப்போது நின்றவள் நிழலை பார்த்தாள். சுவாரசியமாக மனைவியை அக்னி நோக்க,

“அன்னைக்கு ரோட்ல என்ன டான்ஸ் ஆடிட்டு இருக்கேன்னு கேட்டல அது டான்ஸ் இல்ல இதான்.” என்று கை காட்டினாள் இருவரும் சேர்ந்து நிற்கும் நிழலை.

விலகி இருக்கும் நிழல் அவள் அசைவிற்கு ஏற்ப நெருங்கி வந்தது. நிழலாய் இருக்கும் காதலனை அதே நிழலாய் தொட்டாள். தன்னையே தொட்டது போல் உணர்ந்தான் அக்னி.
அன்பினி நிழல் விலக, பதறிய அக்னி நிழலை சேர்த்தான் நகர்ந்து நின்று.

இருவரும் நிழலாய் ஒட்டிக்கொண்டு நிற்க, நிஜத்தில் விலகி இருந்தார்கள்.கை காட்டி அவன் மேனி முழுவதையும் தடவி ரசித்தாள். உடல் சிலிர்க்க அவனும் நிழலாய் தொட, முத்த செய்கை செய்து அவள் ஆசையை தீர்த்துக் கொண்டாள்.

விழி அகலாத அக்னி நிழலாய் இருக்கும் நிஜத்தை ரசிக்க ஆரப்பிக்க , ஓடிச்சென்று கைபேசியை எடுத்து வந்து சேமித்தாள் நீங்காத நிழலாக. வித விதமாக புகைப்படம் எடுத்தவள்,

“அக்னி கைய இந்த மாதிரி வை.” என்று ஒரு பாதி இதய வடிவை அவள் காட்டினாள். புரிந்து கொண்டவன் நிழலை ஒன்று சேர்க்கும் விதமாக அவனும் பாதி இதயத்தை காட்ட…

அழகாக காட்சியளித்தது இருவரும் சேர்ந்து உருவாக்கிய நிழல் இதயம்.

அம்மு இளையாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
31
+1
5
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *