215 views

அத்தியாயம் 19

இளந்தளிர் தன்னைக் கூரிய பார்வையால் துளைத்துக் கொண்டு இருப்பதைக் கண்டும், வெளியே கலவரத்தைக் காட்டிக் கொள்ளாது, இதழோரத்தில் மென் நகையை மட்டுமே ஒட்டிக் கொண்டு நின்றிருந்தான் கோவர்த்தனன். 

“நீங்க தான என்னைப் பத்தி உங்கள் வீட்ல சொல்லி, உங்க ஃபோட்டோவையும் எங்கள் வீட்டுக்கு அனுப்பி வச்சீங்க?” எடுத்தவுடனேயே இந்தக் கேள்வியை எதிர்பாராதவன், ஸ்தம்பித்துப் போய் தான் நிற்க, 

“சொல்லுங்க? நீங்க தான இதெல்லாம் செஞ்சது?”  விடாப்பிடியாக கேட்டவளைப் பார்த்து, 

“இல்லங்க.உங்க ஃபோட்டோ காமிக்கும் போதே இவங்களா – ன்னு

ஷாக் தான்! “

இப்போதும் அதே வியப்புடன் கண்களை அகல விரித்துக் கூறியவனைப் பார்த்தவள், 

“ஓஹோ! இவங்களா – ன்னா?எந்த அர்த்தத்துல சொல்றீங்க?” 

“உங்க சிஸ்டரை ஹாஸ்பிடல்ல சேர்த்தது மூலமாகத் தான நம்ம இரண்டு பேரும் இன்ட்ரோ ஆனோம். தென்,மூனு தடவை எதேச்சையாக மீட் செய்து இருக்கோம்.சோ,

” நீங்களும் என்னை அவாய்ட் பண்ண நினைச்சிருக்கும் போது, இந்த டைம் -ல இதை எக்ஸ்பெக்ட் பண்ணல”

‘நீ அவனைத் தவிர்ப்பதை அன்றே தெரிந்து கொண்டான்’என்பதைக் கேட்கும் போது ,

‘புரிந்து கொண்டு விலக நினைத்தான் போலும்?’

இப்போது இவளது கண்களில் மென்மை பிரதிபலிக்க, 

“சுபாஷினியையும் ஹால்லப் பார்த்தேன்.ஹெல்த் கண்டிஷன் பெட்டர் தான?” 

“அவ நல்லா, ஆரோக்கியமா இருக்கா. அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம்”என்று கூறி குரலைச் செருமிட,இவன் கேட்கத் தயாரானான். 

“சுபாஷினி மயக்கம் போட்டு விழுந்தது, நீங்க காப்பாத்துனது எல்லாத்தையும் அம்மாகிட்ட சொல்லியாச்சு” என்றதும், அவர்கள் அம்மாவிடம் அவ்விஷயத்தைக் கூறியது இவனுக்கு சந்தோஷமே! ஆனால் இன்னுமொரு விஷயம் உள்ளது என்பதைப் போல் அவள் இவனைப் பார்க்கவும், 

“என்னது?” 

“அவளைக் காப்பாத்துனது பையன் தான்னு சொன்னோமே தவிர,அது நீங்க தான் – னு இன்னும் சொல்லல”

‘அட ஆமாம்!இந்த ஒரு மிக மிக முக்கியமான விஷயம் உள்ளதல்லவா!’

இரு சகோதரிகளும் எனது புகைப்படத்தைப் பார்த்ததுமே அவர்களுடைய அம்மாவிடம் சொல்லியிருந்தால், அப்போதே அவர் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கக் கூடும், நானுமே இவர்கள் சொல்லியிருக்க வாய்ப்புள்ளது என்பதையும் கணித்திருக்க வேண்டும்! அந்த நிகழ்வு அன்றோடு முடிந்து விட்டது என்பது போலத்தான் நானும் பெண் பார்க்க வர சம்மதித்து, இங்கு வந்துள்ளேன்! ‘ 

கோவர்த்தனன், “என் ஃபோட்டோ பாத்தவுடனே கூட சொல்லியிருக்கலாம்ல ங்க?” 

“சொல்லியிருக்கலாம் தான். ஆனா அதை சொல்றதுல உங்களுக்கு எதாவது இஷ்யூ இருந்தால் , என்னப் பண்றதுன்னு யோசிச்சேன். நான் உங்களை அவாய்ட் பண்ணினது உங்களுக்கே தெரிஞ்சுடுச்சே! அப்பறமும் அம்மாகிட்ட சொன்னா, உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லனும்னு கேட்பாங்க, இந்த குணத்தை மட்டுமே வச்சு உங்களுக்கும், எனக்கும் கல்யாணம் பண்ணி வச்சுடலாமான்னுக் கூடத் தோன்றதுக்குச் சான்ஸ் இருக்கு.அப்படி யோசிச்சா உங்களோட மத்த குணாதிசயங்கள் தெரியாமலேயே போய்டுமே!”

அந்த ஒரே குணத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இவனைத் தன் மணாளனாக யோசித்துப் பார்க்கக் கூடாது என்று இவள் நினைத்தாள். 

அதுமட்டுமின்றி, இவனது ஞாபகங்கள் வரும் போதெல்லாம் இளந்தளிரே அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துள்ளாளே! 

‘ஆக இவள் அந்த மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தது வழிப்போக்கர்களாய் மட்டும் போதும். திருமணம் செய்து கொண்டு வாழ்வதற்கு இன்னும் தன்னைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள்’

இவள் வரையில் அது நியாயம் தான்! ஆனால் அவனுக்குத் தான் சிறு ஏமாற்றம் ஆகி விட்டது. 

“அதனால தான் எங்கிட்ட முதல் கேள்வியை அப்படிக் கேட்டீங்களா?”

அவனது இறுகிய குரலைக் கேட்டும் இளகாத மனம் படைத்தவள்,”ஆமா. எனக்கு ஒரு டவ்ட் இருந்துச்சு”

“அதுக்குப் பதில் இதான் ங்க.நானே வலியப் போய் உங்களைப் பத்தி எங்கம்மா கிட்ட சொல்லல. என் ஃபோட்டோ எப்படி உங்கள் வீட்டுக்கு எதிர்பாராமல் தரகர் மூலமாக கிடைச்சுச்சோ, அதே மாதிரி தான் உங்க ஃபோட்டோவும் எங்கள் வீட்டுக்கு வந்துச்சு. 

அப்போவும் அம்மாகிட்ட கூட கேட்டேன்” உங்களுக்கு சம்மதமா ன்னு! ” நீங்கள் சம்மதிச்சுட்டீங்க ன்னு சொன்னாங்க, ஆனா அந்த சம்மதம் என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லல – ன்னு இப்போ புரிஞ்சுடுச்சு ங்க ” 

“அந்த இன்சிடெண்ட் – ஐ எங்கம்மா கிட்ட இன்னும் நான் சொல்லல!இன்னைக்கு வீட்டுக்குப் போனதும் சொல்லிடுவேன் நீங்களும் அது நான் தான் – னு சொல்லிடுங்க” 

மேலும் அவளிடம் , 

“உங்களை மாதிரியே நானும் நல்லா யோசிச்சுப் பார்த்துட்டு, எனக்குச் சம்மதம் இருந்தா மட்டும் சரி – ன்னு சொல்றேன்”

அவளது முடிவை அவன் எதிர்பார்க்கவில்லை என்பது இதிலேயே தெரிந்து விட, இருவரும் மௌனமாக வெளியேறினர். 

எதிர்ப்பார்ப்போடு தங்களை ஏறிட்ட மற்றவர்களிடம், 

“அம்மா! வீட்டுக்குப் போய்ப் பேசிட்டு முடிவைச் சொல்லுவோம்” அனைவருக்கும் பொதுவாக நன்றியை சமர்ப்பித்து விட்டு, வெளியே சென்றான். 

அங்குள்ளவர்களுக்கு இவனுக்குச் சம்மதம் இல்லையோ? என்று தோன்றிட, இளந்தளிரைப் பார்த்தனர்.

அவளோ,”உள்ளேயும் அதே தான் சொன்னாரு.யோசிக்கட்டும்”என்று மட்டும் சொல்லி, சுமதி மற்றும் ரோகினியிடம் ஒரு புன்னகையுடன் சிவசங்கரியின் அருகில் நின்று விட, 

அவர்கள் இருவரும், 

“நாங்க  கிளம்பறோம்”என்று வெளியேறி விட்டனர். 

சிவசங்கரி, “இளா..என்னாச்சு?அந்தப் பையன் ஏன் முகத்தை தூக்கி வச்சுட்டுப் போறாரு?இரண்டு பேருக்கும் விருப்பம் இல்லையா?” 

“அம்மா!அதுக்கு முன்னாடி இதைச் சொல்லனும்”சுபாஷினியை ஒரு பார்வை பார்த்து விட்டு, 

“இவளை அன்னைக்குக் காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்ந்தது கோவர்த்தனன் தான்”என்று கூறி விட்டாள். 

சுபாஷினி அதிர்ந்து அக்காவும் பார்க்க, சிவசங்கரிக்கோ இதுவும் தன்னிடமிருந்து மறைக்கப்பட்டு விட்டதே! என்று ஆதங்கம் தோன்றிற்று. 

“அந்தப் பையனை திடிர்னு வரவழைச்சிருந்தா, நீ இதை இவ்ளோ லேட் ஆக சொல்றதுல நியாயம் இருந்திருக்கும்.ஆனா அப்படியும் நடக்கல. அன்னைக்கே முழு உண்மையையும் சொல்லாம விட்டுட்ட!”காட்டமாகக் கேட்டவர் சுபாஷினியை முறைத்தார். 

கோவர்த்தனனிடம் சொல்லிய அதே காரணத்தை இவரிடம் கூறினாள். 

“கோவர்த்தனன் கிட்ட நன்றி சொல்லிட்றேன்.ஒரு தடவை நடந்து, பரவாயில்லை – ன்னு விட்டேன். இப்போ என்னப் பண்றதுன்னு நீயே சொல்லு இளா?” 

அழுத்தம் திருத்தமாக, 

“இந்த விஷயம் இந்தளவுக்கு வரும்னு  நானுமே எதிர்பார்க்கல ம்மா!இதை எல்லாத்தையும் ஒன்னு விடாமல், எதையும் மறைக்காமல் அன்னைக்கே உங்ககிட்ட சொல்லி இருந்திருக்கனும்.நான் தப்புப் பண்ணிட்டேன் ம்மா”

விழிகள் பனித்திட கூறிய மூத்தவளைப் பார்த்தார் சிவசங்கரி. 

சுபாஷினியோ,”என்னால் தான்!” கதறிக் கொண்டே மூர்ச்சையாகி விட்டாள்.

🌺🌺🌺🌺🌺🌺

சுமதியை சோபாவில் அமர வைத்து அவரது கரங்களைப் பற்றி, 

இளந்தளிர் மற்றும் சுபாஷினியைத் தான் சந்தித்தது முதல் இன்று பேசியது வரை விரிவாகக் கூறினான். 

சுமதி,”நீ நல்லது தான் ப்பா செய்து இருக்க?அப்பறமும் அந்தப் பொண்ணுக்கு இப்படித் தோனுச்சோ?” 

“நான் உங்கள் பையன் ம்மா.என்னைப் பத்தி உங்களுக்கு நல்லாத் தெரியும்.ஆனா அவங்களுக்கு நான் ஒரு தடவை உதவி செய்த ஆள்.அவ்வளவே தானே ம்மா” 

இவனது புரிதல் அவருக்கும் புரிந்து விட ,”சரிப்பா.நீ இப்போ இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறியா? இல்லையா?

பொண்ணு வீட்ல எதுவும் சொல்லாம வந்துட்டோமே?”

“அவங்க வீட்ல இருந்து பதில் வரட்டும் மா. அது வரைக்கும் நானும் எதுவும் சொல்லல” 

தலைக் கோதி விட்டுக் கொண்டே , அவனது சிறு வயது குறும்புகளை ஞாபகப்படுத்தி மகனது சுணக்கத்தைக் குறைக்கத் தொடங்கி விட்டார். 

🌺🌺🌺🌺

மூர்ச்சையாகி விழுந்த சுபாஷினியின் தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, 

“சுபா!” 

“ம்மா…!இவள் எழுந்திரிக்கிறா மாதிரி தெரில.தண்ணீர் கொண்டு வாங்க”என்று அவரிடம் சொல்லி மீண்டும் அவளை எழுப்பினாள். 

சிவசங்கரி தண்ணீருடன் வந்ததும், 

அவள் முகத்தில் தெளித்து, கன்னத்தைத் தட்டிக் கொண்டே , 

“சுபா எழுந்திருடா”

தாயும் , மகளும் சின்னவளை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

மெல்லத் தன் விழிகளைத் திறந்தவளை முந்திக் கொண்டு,

“சுபா! எழுந்திரு”என்று அவளை சோபாவில் படுக்க வைத்தாள். 

“அக்கா!”என்று தொடங்கியவளை , 

“ஒன்னும் இல்லடா..தூங்கு”என்று சிவசங்கரியும், தளிரும் ஆளுக்கொரு புறம் அமர்ந்து கொண்டு, அவளது கரங்களைப் பிடித்து தடவிக் கொடுத்த படி இருந்தனர். 

 சுபாஷினி உறக்கத்தில் ஆழ்ந்து விட்டதை அறிந்தவர்கள்,”கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் நிறுத்தி வைப்போம் இளா.சுபாவுக்கு இதுவே ரொம்ப டிஸ்டர்ப் ஆகும்.அவ நார்மல் ஆன பிறகு, மேற்கொண்டு முடிவு எடுப்போம். மாப்பிள்ளை வீட்டுக்குக் கால் செய்து உடனே முடிவு சொல்ல முடியலன்னு, நேரம் கேட்போமா?”

மகளைப் பார்க்க, அவளுமே அதே யோசனையில் தான் இருந்தாள் போலும்! 

“கேட்கலாம் மா” என்று இவள் சொல்லவும்,சுமதிக்குக் கால் செய்தார் சிவசங்கரி. 

  • தொடரும்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *