Loading

அத்தியாயம் 18

தனக்கே தெரியாமல் தாலி கட்டியவன் மீது ஆத்திரம் பெருகியது விஸ்வயுகாவிற்கு. ஆனால் சிறிதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

அவனை நேராய் நிமிர்ந்து பார்த்தவள், “இவள் கழுத்துல ஏன்டா தாலி கட்டுனோம்னு நினைச்சு நீ ஃபீல் பண்ற நாள் வரும் யுக்தா. அன்னைக்கு நீ ஏமாந்து போறதை நான் ரசிப்பேன்…” என்றவளின் இதழ்களில் இகழ்ச்சிப் புன்னகை பரவ, கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாக அமர்ந்தாள்.

இத்தனை அதிர்ச்சியிலும் கம்பீரம் குறையாமல் தன்னை எதிர்த்து சவால் விடும் பெண்ணவளை குரோதம் மறந்து ரசித்திருந்தது ஆடவனின் விழிகள்.

அந்நேரம் நரேஷின் இறந்த உடல் கிடைத்து விட்டதென்ற தகவல் வர, இருக்கையில் இருந்து எழுந்தவன் “உன் புருஷன் வேலை விஷயமா வெளில போறேன் பொண்டாட்டி. நான் வர்றதுக்குள்ள சமையல் எல்லாம் முடிச்சு உன் கடமையை ஆத்தி வைக்கிறியா?” என்றான் கிண்டலாக.

அதில் வெகுண்டு எழுந்தவள், “காபி கூட ஆத்த முடியாது… கடம ஆத்தணுமாம்ல கடம. போடா வெண்ணை. குடிகார சைக்கோ…” இன்னும் என்னவெல்லாம் பேசி இருப்பாளோ, மறுவார்த்தை பேசும் முன்னே, அவளது இதழ்கள் அவன் வசமிருந்தது.

எப்போதும் தள்ளிவிட்டு முறைப்பவள், இம்முறை அசையவே இல்லை. நெருப்பாய் தகித்த இதயம் அவனை எப்படியும் வீழ்த்தி தனது காலடியில் தள்ள திட்டம் போட்டிருக்க, அதே திட்டத்தை அவனும் தீட்டிக்கொண்டிருந்ததை பாவை அறியவில்லை.

அவளது ஒத்துழைப்பில் விழி உயர்த்தியவன், மெல்ல இதழ்களுக்கு விடுதலை கொடுத்து, “மஞ்சள் கயிறு மேஜிக்காடி பொண்டாட்டி. இந்த கோ – ஆபரேஷன்ல என்னை ரொம்ப அடிக்ட் ஆக்குற ஏஞ்சல்!” என்றவனின் குரலில் மோகம் வழிந்தோட மீண்டுமொரு முறை முத்தமிடக் குனிந்தான்.

இம்முறை அவன் கன்னத்தில் அடித்துத் தள்ளி விட்டவள், “குடிச்சுட்டு பக்கத்துல வராத, குடலைப் பிரட்டுது. உவேக்…” என முகத்தை சுளிக்க, “தினமும் இப்படி கிஸ் பண்ண விடுவேன்னு சொல்லு ஏஞ்சல். குடிக்கிறதையே நிறுத்திடுறேன்” என்றான் நெற்றியில் விழுந்த அவளது ஒற்றை முடியை காதோரம் சொருகியபடி.

அவனை முறைத்தவள், “இனி குடிக்காத” என்று கட்டளையிட, மனையாளின் ஒற்றை வார்த்தைக்கு கீழ்ப்படியும் கணவனாக, “உத்தரவு ஏஞ்சலியாரே!” என்றான் இடை வரை குனிந்து.

இப்போது புருவம் உயர்த்துவது அவள் முறையானது.

“நீ எனக்கு தாலி கட்டுனது மட்டும் என் வீட்டுக்குத் தெரிஞ்சுது. அந்த நரேஷ் விழுந்த ஆத்துல நீயும் டெட் பாடியா தான் இருப்ப. கேஸ் முடியிற வரை உயிரோட இருந்துக்கோ. அதுவரை நீ செஞ்ச இந்த பைத்தியக்காரத்தனம் யாருக்கும் தெரியக்கூடாது.”

“உனக்கு உன் பேமிலி மேல ஓவர் கான்பிடன்ஸ் ஏஞ்சல். என்னைப் பத்தி தெரிஞ்சும் உன் வீட்டுப் புராணத்தைப் பாடுறது தான் எனக்குச் சிரிப்பா இருக்கு” எனக் கேலி மின்ன கூறியதில், கண்ணைச் சுருக்கி முறைத்து வைத்தாள்.

“அண்ட் நானே சொல்லணும்னு தான் நினைச்சேன். நம்ம ரிலேஷன்ஷிப் இப்போதைக்கு கான்பிடன்ஷியலா இருக்கட்டும். எப்பவும் போல ஈவ்னிங் ஒன் அவர் எனக்குப் பொண்டாட்டியா இங்க வந்துட்டுப் போ! இந்த தர்ட்டீன்த் ஃப்ளோர் முழுக்க நம்ம ஓடியாடி ரொமான்ஸ் பண்ணலாம்” எனக் குரல் கிறங்க அவள் மூக்கோடு மூக்குரசினான் யுக்தா.

அவனது நெஞ்சில் கை வைத்து தள்ளியவள் “போய் கேஸை முடிடா சைக்கோ. ரொமான்ஸ் பண்ணப்போற மூஞ்சைப் பாரு…” என்று கிளம்பப் போக அவளைப் பிடித்து இழுத்தான்.

“ப்ச் என்னடா?” எரிச்சலுடன் விஸ்வயுகா வினவ, “கான்ஃபிடென்ஷியலா வச்சுக்கணும்னு முடிவு பண்ணதுக்கு அப்பறம் எல்லாமே பெர்ஃபக்ட்டா பண்ணனும் ஏஞ்சல்” என்றபடி, வெளியில் தொங்கிக்கொண்டிருந்த மாங்கல்யத்தை எடுத்து அவள் புடவைக்குள் மறைக்கப் போனான்.

நொடியில் அவன் செய்யப்போகும் காரியத்தைப் புரிந்து அவனது கையைப் பிடித்து விட்டவள், “டூ மச்சா போகாத…” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு தாலியை மறைத்துக் கொண்டாள்.

“எனக்கு இல்லாத உரிமையா…” செல்லமாக சிலுப்பிக்கொண்டவனை அறையத் துறுதுறுத்த கரத்தை வெகு கவனத்துடன் அடக்கிக்கொண்டவள், “போடா சைக்கோ புருஷா!” என்று அழகு காட்டி விட்டு கிளம்பினாள்.

—-

திருமணம் முடித்த கையோடு ஷைலேந்தரியை மைத்ரேயனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். காயத்ரி மகிழ்வில் மிதக்க, அகிலாவிற்கு தான் இதில் முழு சம்மதில்லை. அவன் அதனைக் கண்டுகொள்ளவும் இல்லை.

ஷைலேந்தரிக்கு தான் அனைத்தும் புது உணர்வாக இருந்தது. எத்தனையோ முறை தோழியாக இந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள். ஆனால் இந்த திடீர் திருமணமும் சடுதியில் மாறிப்போன உறவுமுறையும் அவளை லேசாய் சங்கடப்படுத்தியது உண்மை தான்.

புது மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற அகிலா, “போய் விளக்கேத்து” எனக் கடுமையான குரலிலேயே கூறினார்.

அவரது எண்ணத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாதா என்ன? இந்த திருமணம் அவருக்கு மகிழ்வைக் கொடுக்கவில்லை எனப் புரிந்திட, நானா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அடம்பிடிச்சேன் என்ற கோபத்தில், “இங்க பூஜை ரூம் எங்க இருக்குன்னு எனக்கு தெரியாது ஆண்ட்டி. என்னைக் கையைப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போறீங்களா” எனப் பவ்யமாகக் கேட்க, அவரோ முறைத்தார்.

இந்த வீட்டில் மூலை முடுக்கு கூட அவளுக்கு அத்துப்படி. தன்னை வெறுப்பேற்றுகிறாள் என்ற எரிச்சலில் “தானா வந்தவளுக்கு எல்லாம் சொல்லி வேற தரணும்” என முணுமுணுத்துக் கொண்டார்.

மைத்ரேயன் தான், அவளை கையைப் பிடித்து பூஜை அறையில் நிறுத்திட, ‘எல்லாம் உன்னால வந்தது’ என்ற ரீதியில் அவனை முறைத்தபடி விளக்கேற்றினாள்.

சிவகாமிக்கு மகளின் மீது கடுமையாக கோபம் வேறு. சௌந்தரோ, விஸ்வயுகாவிற்கு போன் செய்து ஓய்ந்து போனார். “இன்னும் அவள் போன் ஸ்விட்ச் ஆஃப்லயே இருக்கு அண்ணி” எனப் பதைபதைப்புடன் கூறினார்.

“எங்கயும் தொலைஞ்சு போய்ட மாட்டா. வந்தா வரட்டும் இல்லைன்னா எங்கயோ போய் தொலையட்டும்” என்று சினத்தைக் காட்டிவிட்டு அவர் கிளம்பிட, அவரை சமாதானம் செய்யும் நோக்கில் மோகனும் அவர் பின்னால் சென்றார்.

அஷோக் தான், கோபமாக சென்ற அண்ணியை சமன் செய்வதா, அல்லது மகளின் திருமணத்தை எண்ணி மகிழ்வதா என்ற குழப்பத்தில் யாரையும் தொந்தரவு செய்யாமல் ஒரு ஓரமாக நின்று கொண்டார்.

எந்த பக்கம் பேசினாலும் அவருக்கு தானே அடி விழும்!

சிறிது நேரத்திலேயே சௌந்தருக்கு விஸ்வயுகாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. “ஐ ஆம் அட் ஆபிஸ் சித்தப்பா” என்று… அதில் நிம்மதியுற்றவர், ஷைலேந்தரியின் தலையை கோதி விட்டு, “ரொம்ப கன்பியூஸ் ஆகிக்காதமா. நம்ம மைத்ரா தான. எல்லாம் செட் ஆகிடும்” என்று அறிவுரை கூறினார்.

அதே நேரம் நந்தேஷ் மைத்ரேயனைத் தரதரவென அறைக்குள் இழுத்துச் சென்று, வயிற்றிலேயே குத்தினான்.

“ஐயோ அவுச்” என்று மைத்ரேயன் வயிற்றைப் பிடிக்க, “எருமை மாடே! என்னடா கல்யாணப் பொண்ணை மாத்தி விளையாடிட்டு இருக்கீங்க. முன்னாடியே சொல்றதுக்கு என்ன?” என்று அதட்டினான் நந்தேஷ்.

“டேய் ஷைலாவை நான் ரொம்ப வருஷமா லவ் பண்றேன்டா. அவளை லவ் பண்றது அஸ்வினி ஆண்ட்டிக்கு கூட தெரியும். உன்கிட்டயும் விஸ்வூகிட்டயும் சொல்லலாம்ன்னா, ஆல்ரெடி வீட்ல நிறைய பிரச்சனை. இதுல இந்த லவ் மேட்டரால நமக்குள்ள எதுவும் ப்ராப்ளம் வந்துடுமோன்னு பயந்து தான் அமைதியா இருந்தேன். சரி நம்மளே சொல்லலைன்னாலும் நமக்கு வந்த பீலிங்ஸ் அவளுக்கும் வரும்னு வெய்ட் பண்ணுனேன். அந்த பரதேசிக்கு ஊர் உலகத்துல இருக்குறவன் எல்லாம் க்ரஷ் லிஸ்ட்ல இருக்கான். கூடவே ஒரு ஹேண்ட்ஸம் பாய் இருக்கேன் அதைக் கண்டுக்க கூட மாட்டுறா…” என உதட்டைப் பிதுக்கி குறைபட, நந்தேஷ் பொங்கிய சிரிப்பை அடக்கினான்.

“சரி எப்படியும் எவனும் அவளுக்கு கரெக்ட் ஆக மாட்டான்னு தான் நானும் அமைதியா இருந்தேன். சடனா எனக்கும் விஸ்வூக்கும் மேரேஜ் பிளான் பண்ணுனதும் ரொம்ப ஷாக் ஆகிட்டேன். யோசிக்க கூட வீட்ல டைம் தரலல. சரி அதைக் கேட்டாவது அவளுக்கு ஃபீலிங்ஸ் வரும்னு பார்த்தேன், ஃபீலிங்ஸ் வரல மேரேஜ்க்கு ரெடி ஆகுறேன் பேர்வழின்னு அவள் மூஞ்சில இருந்து குடம் குடமா ஃபவுண்டேஷன் தான் வழிஞ்சுது.

அதெப்படிடா அவளை மனசார விரும்பிட்டு விஸ்வூவை கல்யாணம் பண்ணிக்க முடியும்? அப்படியும் ஷைலாவுக்கு என்மேல இன்டரஸ்ட் இல்லைன்னு புரிஞ்சு, விஸ்வூவை கல்யாணம் பண்ணிக்கவே முடிவு பண்ணிட்டேன். ஆனா அதை நான் மட்டும் முடிவு பண்ணக் கூடாது. என்னைக்கோ ஒரு நாள், நான் ஷைலாவை விரும்புனது அவளுக்குத் தெரிஞ்சு அவளை சின்னதா ஹர்ட் பண்ணிட்டாலும் நான்லாம் என்னடா அவளுக்கு பிரெண்டு.

அதான், உண்மையை சொல்லிட்டேன். ஆல்ரெடி அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. இத யூஸ் பண்ணி ஸ்கெட்ச் போட்டு எனக்கும் ஷைலாவுக்கும் கல்யாணம் பண்ணிட்டா” என்று மூச்சிரைக்க கூற,

இங்கோ சௌந்தரின் கையைத் தட்டி விட்ட ஷைலேந்தரி, “யோவ் சித்தப்பா… கதற கதற கல்யாணம் பண்ணி வச்சுட்டு ‘நம்ம மைத்ரா நாளை நமதே’ன்னு டயலாக் விட்டுட்டு இருக்கியா. நீங்கலாம் செஞ்சது வரைக்கும் போதும் சாமிகளா. கிளம்புங்க… நான் பாத்துக்குறேன்” என்று குடும்பத்தாரை கையெடுத்து கும்பிட்டவள், அவர்களை விரட்டி அடிக்காத குறையாக கிளப்பி விட்டாள்.

பின், ‘இந்த ரெண்டு நாயும் எங்க போச்சு’ என்ற எண்ணத்தில் இருவரையும் தேடி அறைக்கு வந்தாள்.

மைத்ரேயன் மேலும் தொடர்ந்து, “ஆனா எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு மச்சான். விஸ்வூவைக் கல்யாணம் பண்ணிருந்தா அவளோட லைஃப் செட்டில் ஆகி இருக்கும். என்னைத் தவிர அவளை வேற யார் புரிஞ்சுக்க முடியும்… ப்ச், ரொம்ப செல்பிஷா இருந்துட்டேனோ?” எனக் கண்கலங்க கேட்க,

நந்தேஷ் “டேய் ஷைலாவைக் கல்யாணம் பண்ணிட்டு விஸ்வூவைப் பத்தி கவலைப்பட்டுட்டு இருக்க. அவளுக்கான லைஃப் கண்டிப்பா கிடைக்கும் ரொம்ப யோசிக்காத” என்று கண்டித்தான் நண்பனாக. அவனுக்காக ஆறுதல் உரைத்தாலும் நந்தேஷின் மனதிலும் அதே கவலை அரித்துக்கொண்டிருந்தது.

இந்த இறுதி உரையாடல்களை மட்டும் காதில் வாங்கியபடி உள்ளே வந்த ஷைலேந்தரிக்கு, அந்த உரையாடலில் கலந்து கொள்ள விருப்பமில்லை.

இப்போதுவரை இவன் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் விஸ்வயுகாவை திருமணம் செய்ய இயலவில்லை என்ற வருத்தத்துடன் இருக்கிறான் என சரியாக தவறாகப் புரிந்து கொண்டவளுக்குள், முணுக் முணுக்கென்ற வலி எழ, “மூடிட்டு ரெண்டு பேரும் வெளில போறீங்களா? நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும்” என்றாள் அதை மறைத்துக்கொண்டு.

மண்டபத்திற்கு வரும்போதே திருமணம் முடிந்து மாற்றுவதற்கென்று சல்வாரும் கொண்டு வந்திருந்தாள்.

நந்தேஷோ “சரி சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க” என்று வெளியில் செல்ல, மைத்ரேயன் அவளையே பார்த்தபடி “ரெஸ்ட் ரூம் அங்க இருக்கு.” என்று கைகாட்டினான்.

“ஓஹோ! எனக்கு தெரியாது. பிறந்ததுல இருந்து கோமால இருக்கேன் பாரு…”

“பூஜை ரூமை மறந்த மாதிரி, பாத்ரூமையும் மறந்துட்டியோன்னு நினைச்சேன்” என நக்கல் சிரிப்பை உதிர்த்தவனிடம், “செம்ம காமெடி. அப்பறமா சிரிக்கிறேன். கொஞ்ச நேரத்துக்கு இந்தப் பக்கம் வராத. ஐ நீட் பிரைவசி” என்றாள் முகத்தில் அடித்தாற்போல.

அதில் முகம் சுருங்கியவன், அவளைப் பாராமல் வெளியில் சென்று விட்டான். கணவன் என்ற முறையான பின்னும் அவளால் தன்னை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்ற குமுறலில் அவனும், தமைக்கை தந்த ஏமாற்றத்துடன் தன்னை திருமணம் செய்தவனுக்கு தன் மீது எந்தவொரு பிடித்தமும் இல்ல என்ற குத்தலில் அவளும்! மனதின் ஆழத்தில் எழுந்த காதலை மனதோடு மறைத்துக்கொண்டனர்.

அத்தியாயம் 19

 

“நரேஷோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தாச்சா?” அழுத்தக் காலடி ஓசையுடன் தனது உதவியாளரிடம் கேட்டபடி போஸ்ட்மார்ட்டம் அறைக்குள் புயலாக நுழைந்தான் யுக்தா சாகித்யன்.

அவன் பின்னாலேயே வந்த அருண், “சார் பாடி டோட்டலா டீ கம்போஸ் ஆகி இருக்கு. ஏதோ ஒரு பாறைல முட்டி அவனோட முகமே சிதைஞ்சு போயிருக்குன்னு டாக்டர் சொல்றாரு” என்றவனோ “இதுல நோட் பண்ண வேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு சார்…” என்றதும் யுக்தா என்னவென பார்த்தான்.

“அந்த ஆத்துல பாறையே இல்லை…” என்றதில்,

யுக்தா “ஐ ஸீ! இன்டரஸ்டிங்” என்றபடி சிதைந்து துர்நாற்றமெடுத்த பாடியை கிளவ்ஸ் அணிந்தபடி தொட்டுப் பார்த்து சோதித்தான்.

அருண் நாற்றம் தாள இயலாமல் மூக்கைப் பொத்திக்கொள்ள, யுக்தாவோ லேசாய் கூட மூக்கை மூடவில்லை.

‘இவருக்கு ஸ்மெல் எல்லாம் தெரியுமா தெரியாதா?’ என்ற சந்தேகத்துடனே அருண் அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கூற,

“இவன் தான் நரேஷான்னு டி. என். ஏ டெஸ்ட் எடுத்து கன்பார்ம் பண்ணுங்க. இன்னும் பைவ் டேஸ்ல வி. யூ மேட்ரிமோனி மூலமா நடக்க இருக்குற கல்யாணம் தான் நமக்கு டெஸ்டிங் பாயிண்ட். இவன் தான் சீரியல் கில்லரா எல்லா கொலையும் பண்ணுனவன்னா, அன்னைக்கு எந்த கொலையும் நடக்காது. நம்ம தேடுற ஆள் இவன் இல்லைனா, கண்டிப்பா ஏதோ ஒரு சஸ்பீஷியஸ் பாயிண்ட் நடக்கும். அதுவரை இன்வெஸ்டிகேஷன் ஆஸ்யூசுவல் போயிட்டு இருக்கட்டும். மீடியாவுக்கு இப்ப எதுவும் தெரிய வேணாம்” என்றவன் வெளியில் வந்து க்ளவுஸை கழற்றி விட்டு, பாக்கெட்டில் இருந்து ஸ்னிக்கர்ஸை எடுத்தான்.

அருண் எச்சிலை விழுங்கியபடி, “ஆனா ஆல்ரெடி மீடியா மோப்பம் புடிச்சு அவங்க இஷ்டத்துக்கு கதை அளக்குறாங்களே சார்” என்றிட,

“அதெல்லாம் வெறும் கதையா மட்டுமே இருக்கட்டும்… நம்ம சைட்ல இருந்து எந்த நியூஸும் எந்த தகவலும் போக கூடாது” என்று உறுதியுடன் கூறியவன், “யூ வாண்ட்?” என்று ஸ்னிக்கர்ஸை நீட்டிட அவன் வேகமாக தலையசைத்தான் வேண்டாமென்று.

‘போஸ்ட்மார்ட்டம் ரூம் வாசல்ல நின்னு எப்படி சாப்பிடுறானோ’ என நொந்தவன், “நான் ஆபிஸ்க்கு போறேன் சார்” என்று கிளம்பிவிட, சாக்லேட்டைக் கடிக்கப் போனவனுக்கு விஸ்வயுகாவின் நினைவு வந்தது.

“கருமம் ஹேண்ட்வாஷ் பண்ணிட்டு சாப்பிட மாட்டியா? டெட் பாடியைத் தொட்டுட்டு அப்படியே சாப்புடுற” எனப் புருவம் நெறித்து முறைப்பது போல் தோன்ற, அவனையும் மீறி அவனிதழ்கள் லேசாய் சிரிப்பில் வளைந்தது.

மீண்டும் சாக்லேட்டை மூடி பாக்கெட்டிற்குள் வைத்துக் கொண்டவன், கையை நன்றாக கழுவி சானிடைசரும் போட்டபிறகே ஸ்னிக்கர்ஸை வாய்க்குள் திணித்தான்.

“உன்னை அடிச்சு வளர்த்துருக்கணும்…” காலை வேளையில் பதுங்கி பதுங்கி வீட்டினுள் நுழைந்த விஸ்வயுகாவைப் பார்க்க பார்க்க சிவகாமியின் வயிறு பற்றி எரிந்தது.

அவளை அடிக்கப் போன சிவகாமியை சௌந்தரும் நந்தேஷும் தான் தடுத்தனர்.

“உன் தலையெழுத்து கடைசி வரை இப்படி தனியாவே இருக்கணும்னு… அனுபவி. நாளை பின்ன எல்லாரும் குடும்பம் குட்டின்னு ஆகிடுவாங்க. நீ மட்டும் செத்துப்போன அந்த உருப்படாதவ பேரை சொல்லிக்கிட்டே உன் வாழ்க்கையை நாசம் பண்ணிக்க. மைத்ராவோடயே இந்தக் கல்யாணம் நடக்கலைன்னா, இனி யாரையும் நீ கல்யாணம் பண்ணிட்டு வாழ முடியாது” என்று கோபம் அடங்காமல் கொந்தளித்தார்.

தனது மனைவியை பற்றிய பேச்சில் சௌந்தரின் முகம் இப்போது சினத்தை தத்தெடுத்தது.

“வார்த்தையைப் பார்த்து பேசுங்க அண்ணி” என எச்சரித்தவரிடம்,

“உன்னை சின்ன வயசுல இருந்து வளர்த்தவ நான். என் பேச்சை மீறி குப்பைல இருந்தவளை காதலிச்சுட்டு வந்து நின்ன. அப்பவும் உன்னை இந்த வீட்டை விட்டு ஒதுக்கி அனுப்பல. அவளால, ஸ்டேட்டஸ், மானம் மரியாதைன்னு இன்னும் என்னவெல்லாமோ பிரச்சனை வந்துச்சு. கடைசியா அவள் செத்தும் இந்த வீட்ல நிம்மதி இல்ல. இதெல்லாம் உன்னால சௌந்தர். நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி நீ நடந்துருந்தா, என் பொண்ணோட வாழ்க்கையும் வீணாகி இருக்காது” என்று பங்களா அதிர கர்ஜித்தார்.

சௌந்தரோ சிவகாமியின் கூற்றில் உடைந்தே போனார். அவரை உடைய வைக்கத் தானே சிவகாமியின் வார்த்தைகள் விஷத்துடன் வந்தது.

“இனி யாரையும் நீ கல்யாணம் பண்ணிட்டு வாழ முடியாது” எந்த அன்னையும் தனது மகளைப் பார்த்து கூறக்கூடாத வார்த்தை!

அந்த வார்த்தையிலே சில நொடிகள் உறைந்து அமர்ந்திருந்தாள் விஸ்வயுகா. அவளது விழிகள் தன்னிச்சையாக நெஞ்சாங்கூட்டில் ஒளிந்திருந்த மாங்கல்யத்தைத் தழுவியது.

பின் அஸ்வினியைப் பற்றி பேச்சில் வெகுண்டு எழுந்தவள், “ஜஸ்ட் ஸ்டாப் திஸ் மா. இன்னொரு வார்த்தை சித்தி பத்தி வந்துச்சுன்னா இங்க நடக்குறதே வேற!” என்று அனல் பார்வையில் தாயை சுட்டெரித்தாள்.

“என்ன மறுபடியும் லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடிப்போவியா. போறதுன்னா போ! ஜஸ்ட் அவுட்” என்று சிவகாமியும் விடாமல் சண்டைக்கு நிற்க, அதில் ஆத்திரம் தலைக்கேற டீ-பாயை காலால் எத்தி பறக்க விட்டு வெளியே சென்றவள், காரை அதிவேகத்தில் கிளப்பிச் சென்றாள்.

“விஸ்வூ” என கத்தியபடி நந்தேஷ் வரும்முன்னே அவளது கார் நிற்காமல் சென்று விட்டது.

மீண்டும் உள்ளே வந்தவன், “என்னம்மா இது… அவளுக்கு கல்யாணம் பண்ணிக்கப் பிடிக்கலைன்னா விட வேண்டியது தான. ஏன் இப்படி ஃபோர்ஸ் பண்றீங்க? இப்ப என்ன அவள் மட்டும் கல்யாணம் பண்ணிக்காம தனியா இருந்துடுவான்னு தான உங்க ஆதங்கம். அவள் கல்யாணம் பண்ணிக்கலைன்னா நானும் அவளுக்கு துணையா கல்யாணம் பண்ணிக்காம தான் இருப்பேன், என்னைக்கும் அவளோட அண்ணனா… என்று கத்தி விட்டவன், தங்கையைத் தேட வசதியாக தனது ராயல் என்பீல்டை எடுத்தான், தாயிடம் விட்ட சவாலை மறக்கடிப்பது போல பெண்ணொருத்தி அவனது வாழ்வில் வரப்போவது தெரியாமல்!

ஸ்டியரிங்கை நங்கென்று குத்தியபடி, காரை தாறுமாறாக ஓட்டினாள் விஸ்வயுகா. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக காரிலேயே சுற்றித் திரிந்தவளுக்கு நந்தேஷ் போன் செய்தான்.

“விஸ்வூ எங்க இருக்க? காரை எங்கயும் போய் முட்டி வைக்காத ப்ளீஸ்” என்றிட, “ம்ம்… லீவ் மீ அலோன். நான் ஆபிஸ்க்குப் போறேன். என் பின்னாடி வராத” என்று கண்டிப்புடன் கூறி விட்டு போனை வைக்க, தங்கையின் பேச்சை உடனே கேட்கும் விதமாக வண்டியை சடன் பிரேக் அடித்து நிறுத்தினான்.

அவனுக்குப் பின்னாலேயே நூல் பிடித்தது போல வந்த ஸ்கூட்டி ஒன்று அவன் பிரேக் போடுவதை எதிர்பாராமல் அவனது வண்டியில் முட்டி கீழே டொம்மென விழுந்து விட்டது.

‘என்ன அது சத்தம்’ எனத் திரும்பிப் பார்த்தவனின் கண்ணில் விழுந்தாள் அவள். குறிஞ்சி.

—-

எத்தனை நேரம் காரிலேயே இருப்பது… மைத்ரேயனுக்கு போன் செய்யலாம் என்றால், இப்போது தான் திருமணமே ஆகி இருக்கிறது. அதனால் எதுவும் செய்ய இலக்கற்று காரை நெடுஞ்சாலை ஓரத்தில் போட்டு விட்டு அப்படியே அமர்ந்திருந்தாள்.

விழிகளுக்கு இடையில் அஸ்வினியின் உருவம் வேறு வந்து அவளைக் குலைக்க, தலையைக் குலுக்கி விட்டு கண்ணைத் திறந்தவளின் கரங்கள் தானாக யுக்தா சாகித்யனுக்கு அழைப்பு விடுத்தது.

சிபிஐ அலுவலகத்தில் தனது அறையில் அமர்ந்து கிடைத்த தடயங்களை ஒன்று திரட்டி ஆராய்ந்து கொண்டிருந்த யுக்தா, மனையாளின் எண்ணைக் கண்டு போனை எடுத்தான்.

“என்ன பொண்டாட்டி… ஒரு நாள் கூட என்னை விட்டு இருக்க முடியலையா? காலைலயே போன் பண்ணிருக்க” எனக் கேலி மிதக்கக் கேட்டான்.

“கேஸ் பத்தி கேட்க தான் கால் பண்ணேன்” அவள் மிடுக்காய் பதில் அளித்ததில், “கேஸை பத்தி கேட்குறதுக்கு பதிலா கிஸ் பத்தி கேட்டா கிக்கா இருக்கும்” எனக் கிசுகிசுப்புடன் பேச, அவளிடம் பதில் இல்லை.

“எங்க இருக்க?” வாகனத்தின் இரைச்சல் கேட்டதில் யுக்தா விளித்தான்.

“ஹை வேஸ்ல!”

“ரூம்க்கு போகலாமா ஏஞ்சல்?” யுக்தா விஷமமாக கேட்டதில்,

“வாட்?” என்றாள் காட்டமாக.

“கேஸ் பத்தி டிஸ்கஸ் பண்றதுக்கு தான் ஏஞ்சல் கூப்பிட்டேன். ஐ ஆம் அ குட் கை யூ நோ!” எனக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டதில், “நீ தாலி கட்டுன விதத்துலயே தெரியுது. எவ்ளோவ்வ் நல்லவன்னு!” என நொடித்தாள்.

வெண்ணிற சீரான பற்கள் மினுக்க வசீகரப் புன்னகை வீசியவனிடம், “கேட்கணும்னு நினைச்சேன். எப்படி நீ என் ரூம் பாத்ரூம்குள்ள வந்த?” என்றாள் நினைவு வந்தவளாக.

“இப்பவாவது இந்த கேள்வி தோணுச்சே” எனக் கிண்டலடித்து விட்டே பதில் அளித்தான்.

“நீ அடிக்கடி நான் சிபிஐ ஆபிசர்ன்ற விஷயத்தை மறந்துடுற ஏஞ்சல்! ஐ கேன் டூ எனிதிங் அட் எனி டைம்” என்றவனின் பேச்சில் கர்வம் தெறித்தது.

“ஓஹோ, யாரை வேணாலும் கொல்லலாம். எங்க வேணாலும் எப்ப வேணாலும் போகலாம். ஈவ் டீசிங் பண்ணலாம், கட்டாயத் தாலி கட்டலாம். முன்ன பின்ன பார்த்துருக்காத ஒரு பொண்ணை டெய்லி ஒன் அவர் உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண கூப்பிடலாம். உன்னை இன்னுமா டிபார்ட்மென்ட்ல இருந்து தூக்காம இருக்காங்க. ஸ்ட்ரேஞ்ச்!” என மட்டம் தட்டினாள்.

“டேலண்ட் ஏஞ்சல் டேலண்ட். எஸ். எஸ். சி. சிஜிஎல் எக்ஸாம்ல ஹையஸ்ட் மார்க் எடுத்துருக்கேன்!” எனப் பெருமை பொங்க கூறியவனிடம்,

“ஹலோ மிஸ்டர். நீங்க எக்ஸாமினேஷன்காக படிச்ச இன்ஸ்டிடியூட் இந்தியாலயே நம்பர் ஒன் இன்ஸ்டிடியூட். குவாலிட்டி ட்ரெயினிங். என்னமோ தெரு விளக்கு வெளிச்சத்துல படிச்சு மார்க் வாங்குன மாதிரி தான்…” என்று மீண்டும் அவனைத் தாக்கினாள்.

கருவிழிகள் கூர்மையடைய “அது உனக்கு எப்படி தெரியும்?” என்றவனின் குரலில் தீவிரம் மிகுந்தது.

ஒரே நொடி கீழுதட்டை அழுந்தக் கடித்து ஒற்றை விழியை மூடித் திறந்தவள், “என்கிட்ட மோதுனவனைப் பத்தி நான் விசாரிக்காம இருப்பேனா சைக்கோ புருஷா!” என சமாளித்தாள் நக்கலாக.

“ம்ம்ஹும்… வேற என்ன விசாரிச்சீங்க ஏஞ்சலியாரே!” அவனிடமும் அதே கேலித்தொனி.

சற்றே தடுமாறியவள் பின், “சொந்தம் பந்தம் சொத்து சுகம்னு எதுவும் கிடையாது. நினைச்சத நினைச்ச நேரத்துல செஞ்சுட்டு, யோசிக்காம என்கவுன்டர பண்ணிட்டு, அதைப் பத்தின பயம் கூட கிடையாது. பிகாஸ், உனக்கு தான் பேக்ரவுண்டே கிடையாதே. சோ ஆப்வியஸ்லி சென்டிமென்ட்டும் கிடையாது. ஜெனெரலா சொல்லனும்னா வடிகட்டின சைக்கோ” என அடுக்கியவளின் கூற்றை சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், அவளது கார் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

‘இவன் எப்போ வந்தான்?’ என்ற ரீதியில் பெண்ணவள் அதிர்ந்திருக்க, அவனோ அவள் புறம் சரிந்து “எல்லாமே சொல்லிட்ட. கடைசியா, உன்னோட செல்ல சைக்கோ புருஷன்னு ஆட் பண்ணிக்கோ ஏஞ்சல். இந்த மீனாட்சியோட சொக்கன் இந்த யுக்தா சாகித்யன் ரைட்?” என ரசனை வழிய கேட்டவனை திகைத்துப் பார்த்தாள்.

தன்னை மீனாட்சியாகவும் அவனை சொக்கநாதனாகவும் உருவகப்படுத்தி தன் மீது உரிமைப் பார்வையை படர விட்டவனின் ஒவ்வொரு வார்த்தையும் அடி நெஞ்சில் துளித்தேனாக இறங்கியதை இருவருமே உணரவில்லை!

மோகம் வலுக்கும்!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
129
+1
6
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment