Loading

ஹாய் டியர்ஸ்… ரொம்ப சாரி… வீடு shifting பண்ணதுனால ஹெவி வொர்க். லேப்டாப் எடுக்கவே முடியல. இன்னும் வொர்க் போய்கிட்டே இருக்கு. அதுக்கு இடைல ஒரு யூடி குடுத்துடலாம்னு ஓடி வந்துட்டேன் 😍 படிச்சுட்டு கமெண்ட் சொல்லுங்க டியர்ஸ்…

அத்தியாயம் 18

தன்னை இறுக்கி அணைத்துக் கொண்டு நகர விடாமல் ரசித்தவனின் செயலில் மைதிலிக்கும் இரசாயன மாற்றங்கள் நிகழத் துவங்க,

மீண்டுமொரு முறை பிரஷாந்த் கேட்டான், “கிஸ் பண்ணிக்கவா?” என்று.

பாவையின் நெருக்கத்தை ஸ்பரிசித்த பின்னும், அவளும் மறுக்காமல் அவனது இழுப்பிற்கு வந்த பின்னும், உணர்வுகளை அடக்கி ஆள அவன் துறவியல்லவே!

அவளை முத்தமிட வேண்டுமென்ற ஆசை பல்கிப் பெருக, ஆர்வத்துடன் பார்த்தான்.

அவன் கேட்டதை மறுக்கும் எண்ணம் இல்லையென்றாலும் சரியென்று கூறவும் ஏதோ ஒன்று தடுத்தது.

ரகுவின் நினைவா? என்று கேட்டால், அவளால் அதற்கு விளக்கமளிக்க இயலவில்லை. இத்தனை வருடங்களும் மனதை அழுத்தி வருத்திக் கொண்டிருந்த அழுத்தங்களெல்லாம் அவனிடம் கொட்டி விட்ட பின் எங்கு சென்று மறைந்ததென்றே தெரியவில்லை அவளுக்கு. அவளது மனம் இப்பொழுது புது வெள்ளைத் தாளை போல நிர்மலமாக இருந்தது.

அதில் மீண்டும் குழப்பத்தையும் காயத்தையும் ஏற்றிக்கொள்ள வேண்டுமா அல்லது அவள் மீது உயிராக இருக்கும் ஆடவனின் அன்பை செதுக்கிக் கொள்ள வேண்டுமா என்பதை அவளே முடிவு செய்ய வேண்டும்.

அவள் வெகு நிமிடங்களாக அமைதியுடன் அவனது சட்டைப் பட்டனையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததைக் கண்ட பிரஷாந்த், “நெத்தில மட்டும்?” எனக் கெஞ்சல் தொனியில் கேட்க, அதில் என்ன உணர்ந்தாளோ மெல்லத் தலையை மட்டும் அசைத்தாள்.

அவள் இசைந்த நொடியில், உருண்டு அவளைத் தரையில் கிடத்தி, அவன் அவளின் மீது படர்ந்து விட, கண நேரத்தில் நடந்த நிகழ்வில் மைதிலி கண்களை அகல விரித்தாள்.

அவ்விழிகளுக்குள் தன்னை முழுதாக இழந்து விட்ட பிரஷாந்த், கட்டை விரலால் அவள் கன்னத்தின் மென்மையை மெல்ல வருடி விட்டு, “பேண்டஸி கதைகள்ல வர்ற மாதிரி காதலிக்க முடியுமான்னு எனக்குத் தெரியல மைலி. அந்தக் காதலெல்லாம் ஒரு புள்ளிக்கு மேல ரெண்டாம்பட்சம் ஆகலாம். ஆனா, உன் மேல இருக்குற காதல் என்னைக்கும் செகண்டரி ஆகாது, டில் மை லாஸ்ட் ப்ரத்… என் உயிர் உன்கிட்ட மட்டும் தான் நிரந்தரமா இருக்கும்! ஐ மேட்லி லவ் யூ மைலி” என ஆழ்ந்த குரலில் தனது காதலை வெளிப்படுத்தியவன், அவள் நெற்றி மத்தியில் மீசை அழுத்த, தனது முதல் முத்தத்தை பரிசளித்தான்.

ஏற்கனவே அவனது வார்த்தைகளில் நெகிழ்ந்திருந்தவள், பரிசுத்த அன்பின் வெளிப்பாக கொடுத்த முத்தத்தில் அவனிடமே முழுதாய் சரணடைந்து கொண்டிருந்தாள்.

அவன் காதல் கொடுக்கும் நெகிழ்ச்சியோ, அவனது அண்மை உணர்த்தும் பாதுகாப்போ, அல்லது நெற்றி முத்தத்தின் நிறைவோ எதுவோ ஒன்று அவளை உருக்கி வறண்டு போன விழிகளில் அமுதத்தை சுரக்க வைத்தது.

பாரம் சுமப்பவர்களுக்கு தானே அது அழுகை! கண்ணீர்!

ஆடவனின் காதலெனும் பாரத்தை சுகமென சுமப்பவளுக்கு அக்கண்ணீரும் அமுதம் தானே!

அந்நேரம் வெளிக்கதவு திறக்கப்பட, “டேய் காண்டாமிருகம்” என்று அழைத்தபடி உள்ளே நுழைந்தாள் தேவஸ்மிதா.

அவளுடன் வந்த அமர மகரந்தன், “வீட்டைத் திறந்து போட்டுட்டு, காரை கூட ஆஃப் பண்ணாம எங்க போய் தொலைஞ்சான் இவன்” என பதறியபடி “மைதிலி” என அழைக்க, இருவருக்குமே அவர்களது அழைப்புக் கேட்கவில்லை.

அமரும் தேவாவும் எதேச்சையாக அடுக்களையை எட்டிப் பார்த்து அவர்கள் இருந்த நிலையைக் கண்டு சற்றே திகைத்துப் பின் சட்டென வெளியிலேயே சென்று விட, அப்போது தான் மைதிலியும் அவர்களது வரவை உணர்ந்து “ஐயோ அமர்…” என்று பிரஷாந்தை உலுக்கினாள்.

வெளியிலோ தேவாவும் அமரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

“புள்ளையை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ரொமான்ஸ் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டான் என் ஃப்ரெண்ட்டுன்னு நினைக்கும் போது, மீ சோ ப்ரௌட்” என்று ஆர்ம்ஸை தூக்கிக் காட்ட,

“ம்ம்க்கும் உன் ப்ரெண்டாச்சே என்னலாம் கிறுக்குத் தனம் செஞ்சானோ…” எனப் போலியாய் முறைத்து சலித்தான் அமர்.

“ஹலோ அமர காவியம்… உங்களுக்கும் உங்க ஃப்ரெண்டுக்கும் தான் காதல் அறிவை ஆண்டவன் கம்மியா குடுத்து இருக்கான். எங்களுக்கு அப்படி இல்லை, உங்களுக்கும் சேர்த்து நாங்க தான பல பித்தலாட்டம் பண்ண வேண்டியதா இருக்கு” என அவனிடம் சண்டை வளர்க்க, இங்கோ இருவரும் அவசரமாக எழுந்தனர்.

மைதிலியின் முகம் சிவந்திருக்க, பிரஷாந்திற்கு இன்னும் முத்த ஆசை தீரவில்லை.

‘கரடிங்க… இவ்ளோ நாளா செருப்படி வாங்குறப்ப எல்லாம் வராம, லவ் மோட் செட் பண்றப்ப வந்து கெடுத்து விடுதுங்களே’ எனப் புலம்பினாலும், மைதிலியின் முகத்தில் தெரிந்த தெளிவு அவனை நிம்மதியாக்கியது.

இத்தனை நேரம் அவனுடன் கட்டி அழுது, அவனுடன் இழைந்ததெல்லாம் இப்போது ஒரு வித வெட்கத்தை வரவழைக்க, அவனை நிமிர்ந்து பாராத மைதிலி, “வெளில போய்ட்டாங்க போல இருக்கு நான் போறேன்” என்று துப்பட்டாவை சரி செய்தபடி வேகமாக வாசலுக்குச் சென்றாள்.

அவள் பின்னே மந்திரித்து விடப்பட்டவன் போல பிரஷாந்தும் செல்ல, இருவரின் முகத்தையும் பார்த்து அமரும் தேவாவும் தான் அதிர்ந்தனர்.

“ஹே என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்?” என அமர் பதற்றத்துடன் கேட்க,

இருவரும் திருதிருவென விழித்தனர்.

மைதிலி கன்னத்தில் ஒட்டி இருந்த கண்ணீர் துளிகளை இயல்புடன் துடைத்தபடி “என்ன ஆச்சு அமர்?” எனக் குழப்பமாகக் கேட்க,
தேவஸ்மிதா “என்ன ஆச்சா? ரெண்டு பேர் முகமும் அழுது வீங்கி கண்ணெல்லாம் சிவந்து இருக்கு. அவன் நெத்தி புடிச்சு இருக்கு. உன் கன்னத்துல கை அச்சு பதிஞ்சு இருக்கு. நீ என்னனா அசால்ட்டா என்ன ஆச்சுன்னு கேட்குற” என்று பொங்கினாள்.

அதில் பிரஷாந்தும் மைதிலியும் ஒருவரை ஒருவர் அவசரமாகப் பார்த்து கொண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டனர்.

பிரஷாந்த்தோ “அது அது… ஒன்னும் இல்ல. சும்மா பேசிட்டு இருந்தோம்” என்று நெளிய, மைதிலியின் கன்னமிரண்டிலும் ரோஜாப்பூக்கள் பூத்தது.

ஏதோ நடந்து அது சரியாகி விட்டது என்று உணர்ந்து கொண்ட அமர், “பார்த்தா சும்மா பேசிட்டு இருந்த மாதிரியே தெரியலயே?” என்று கேலி செய்ய, மைதிலி தலையை நிமிர்த்தவே இல்லையே.

பிரஷாந்த் அதற்கும் மேலாக, “ச்சீ போங்கள்” என வெளிப்படையாக வெட்கப்பட்டுக்கொண்டான்.

தேவஸ்மிதா தான், “அமர்… இதுங்க ரொமான்ஸ் எல்லாம் பண்ணல. இவ அவன் தலையை உடைச்சு இருக்கா. இவன் அவளை அறைஞ்சு இருக்கான். ரெண்டும் அடுப்படில குஸ்தி சண்டை போட்டுட்டு இருந்துருக்குங்க. அதை போய் தப்பா நினைச்சுட்டோம்னு நினைக்கிறேன்…” என்று பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கிட,

பிரஷாந்த், “ஆமா இந்த அம்மா அப்படியே ரொமான்ஸ்ல பி. ஹெச். டி வாங்கிடுச்சு” என்று நொடித்தான்.

அதற்கு தேவாவோ மெலிதாய் நாணம் கொண்டு, “பி. ஹெச். டி வாங்கல தான். ஆனா ப்ரொமோஷன் வாங்கியாச்சு…” என்று வெட்கத்தை மறைக்க அமரின் தோள்பட்டையில் முகத்தை மறைக்க, பிரஷாந்தின் முகம் மகிழ்வில் மிளிர்ந்தது.

“ஹேய் வாவ்!” எனத் துள்ளிக் குதிக்காத குறையாக பிரஷாந்த் கத்தினான்.

மைதிலி அதில் தான் நிமிர்ந்து “என்ன ப்ரொமோஷன் தேவா? வேலைலயா?” எனப் புரியாமல் கேட்க,

“ஐயோ” எனத் தலையில் அடித்துக் கொண்ட அமர், “நீ அத்தையாகப் போற மைதிலி. இப்பவாவது பல்ப் எரியுதா” என்றான் தந்தையான மிளிர்வு பரவ.

“ஹே காங்கிரேட்ஸ்…” என அவளும் மகிழ்ந்து “ஆமா ரெண்டு பேரும் ஹனிமூன் தான போனீங்க. ரெண்டு நாள்ல வந்துட் டீங்க?” எனக் கேட்டதில்,

தேவா, “ரெண்டு நாள் தான் பிளான் பண்ணிருந்தோம் மைதிலி. இன்னைக்கு காலைல வந்ததும் டவுட் வந்து செக் பண்ணேன். இனி தான் ஹாஸ்பிடல்கும் போகணும். உங்களுக்கு காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணி ஓஞ்சு போய்ட்டோம்!” என்றாள் மலைப்பாக.

பிரஷாந்த், “சரி நீ உள்ள வந்து உட்காரு. இந்த கண்டிஷன்ல நீ எவ்ளோ நேரம் நிப்ப…” என்று அவள் நிற்பது பொறுக்காமல் உள்ளே அழைத்துச் சென்றவன், அவனே பழச்சாறும் கலந்து கொண்டு வந்தான்.

அமர் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“என்ன நடந்துட்டு இருக்கு? தயா எல்லாம் சொன்னான். உன் பேரண்ட்ஸ் அடங்கவே மாட்டாங்களா?” என்று எரிச்சல் பட்டான்.

அவனது தங்கையின் தெளிந்த வாழ்க்கையில் உடைந்த கண்ணாடித் துகள்களாக பழைய வாழ்க்கையின் மிச்சம் அவளைக் குத்திக்கொண்டே இருப்பதில் அதீத வருத்தம்.

இப்போது பிரஷாந்தும் பாதிக்கப்படுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. அதனால் எந்த விதமான உதவியும் செய்யத் தயாராக இருந்தான்.

பிரஷாந்தின் முகம் கன்றி விட, மைதிலி “மிரு நினைச்சா அவங்களோட பண பலத்தை பறிக்க முடியும் அமர்” என்றாள்.

“ம்ம் அதுக்கு மிருவை வச்சு என்ன செய்யணுமோ செய்யலாம் மைதிலி” என்றவன் பிரஷாந்திடம் “நீ எதையும் யோசிக்காத பிரஷாந்த். இதான் பிரச்சனைன்னு அன்னைக்கே என்கிட்ட சொல்லிருக்கலாம்ல. நான் என்ன அவ்ளோ செல்ஃபிஷா? உனக்காக என் தங்கச்சியை கோர்ட்டுக்கு அனுப்ப முடியாதுன்னா சொல்லப் போறேன்” என்று கடிந்து கொண்டான்.

“சே… அதெல்லாம் இல்ல அமர். நீங்க ஹனிமூன்கு கிளம்பிட்டு இருக்கிறப்ப இதைச் சொல்லி உங்களை அப்செட் பண்ண வேணாம்னு தான் சொல்லல” என்றவனுக்கு மனது ஒரு மாதிரியாக இருந்தது.

அமரும் தேவாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, தேவஸ்மிதா “சொல்லுங்க” என்று கண்ணைக் காட்டினாள்.

அதில் தொண்டையை செருமிக் கொண்ட அமர், “பிரஷாந்த்… மத்த ரெண்டு வில்லாவும் நீ பார்த்து வாங்குனது தான். சொல்லப்போனா நாங்க இருந்த வீடை விட்டு வர அப்பாவுக்குப் பிரியமே இல்ல. அது அவர் வாங்குன வீடுன்றதுனால கொஞ்சம் சென்டியா ஃபீல் பண்ணாரு. ஆனா, நான் அவங்களை கன்வின்ஸ் பண்ணுனது மிதுவுக்காக தான்.

உங்க எல்லார் கூடவும் பக்கத்துலயே இருக்கணும்னு அவள் ஆசைப்பட்டதுனால தான், நீ அதுக்கான ஸ்டெப் எடுத்து வச்சது தெரிஞ்சு, அதை நான் மறுக்கல. இப்போ கேஸ்ல இருக்கிற வில்லால உங்களால நிம்மதியா இருக்க முடியாது. ஆல்ரெடி அந்த கமியூனிட்டிக்குள்ள வேற வில்லா இருக்கான்னும் பார்த்துட்டேன். எதுவும் அவெய்லபிளா இல்ல. நீ இவள் பேருக்கு எழுதிக் குடுத்த வில்லாவை திரும்பி உன் பேருக்கே எழுதிடலாமே. இதெல்லாம் முடியிற வரை உனக்குன்னு ஒரு வீடு இருக்கணும் பிரஷாந்த். அது நீ வாங்குனது…” என்று பேசி முடிக்க, பிரஷாந்த் கடுமையாக முறைத்து வைத்தான்.

“நான் என்னமோ சும்மா எழுதிக் குடுத்த மாதிரி பேசுற… வீடு வேணும்னா நான் வாங்க மாட்டேனா. அங்க இல்லைன்னா என்ன பக்கத்துல வேற இடத்துல வாங்கிட்டுப் போறேன். நீயும் தயாவும் குடுத்த பணம் என்கிட்ட அப்படியே தான் இருக்கு” என்று காட்டத்துடன் கூற,

தேவாவோ “நானும் உனக்கு சும்மா தரேன்னு சொல்லல. குடுத்த பணத்தை திரும்ப குடுத்துட்டு அதை உன் பேர்ல மாத்திக்கோ. நாங்க அமர் வீட்டுக்கே போறோம். இந்த பிராப்ளம் முடியவும்…” என்று சொல்லிக்கொண்டே போக,

“போதும் நிறுத்து தேவா. இந்த கேவலமான ஐடியா உன்னோடது தான. இதை பேச தான் காலைல இருந்து என்னை வலை வீசி தேடி, ஹாஸ்பிடல் கூட போகாம இங்க வந்து உட்காந்து இருக்கியா. ஒரு மண்ணும் வேணாம். சும்மா லூசு மாதிரி பேசாதீங்க ரெண்டு பேரும்” என்று பொருமிட,

அமர் தான், “நீ வேற வீடு வாங்க முடியாதுன்னு இதை பேச வரல. நீ ஆசைப்பட்டு வாங்குனது அது. அந்த ஒரு காரணத்துக்காக தான்…” என்றதும், அவனைத் தடுத்து நிறுத்தினான்.

“இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வுன்னு நான் ஏற்கனவே யோசிச்சு வச்சுட்டேன் அமர். இனி இதை பத்தி பேச வேணாம் ப்ளீஸ்” என்று முடிவாகக் கூறி விட, அத்தனை நேரம் அமைதியாக இருந்த மைதிலி பிரஷாந்த்தை புருவம் சுருக்கிப் பார்த்தாள்.

தேவா, “என்ன யோசிச்ச?” என வினவியதில், “அதை செஞ்சுட்டு சொல்றேன். நீங்க ஹாஸ்பிடல் போய் கன்பார்ம் பண்ணிட்டு சொல்லுங்க. ட்ரீட் முக்கியம்” என்று பேச்சை இலாவகமாகத் திருப்பி விட, அமர் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி எழுந்து, “நீ லூசுத்தனமா எந்த முடிவும் எடுக்க மாட்டன்னு நம்புறேன்” என்று தேவாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

மைதிலிக்கும் முக்கிய வேலை இருப்பது அப்போது தான் நினைவு வர, “கோர்ட்டுக்குப் போகணும். கிளம்பலாமா?” எனக் கேட்டதில், இருவரும் கிளம்பினர்.

“பிரஷாந்த் என்ன முடிவு எடுத்துருக்க?” காரில் அமர்ந்ததும் மைதிலி கேட்க, “ஆல்ரெடி முடிவு பண்ணது தான மைலி. பாத்துக்கலாம்” என்று நேரடியாகப் பேச மறுத்து, “என் பேரை ஏன் இப்படி ஃபுல்லா கூப்பிட்டு டைம் வேஸ்ட் பண்ற. என்னை மாதிரி செல்லமா கூப்பிடலாம்ல” என உதட்டைக் குவித்தான்.

“நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுற?” அவள் அவனை முறைத்ததில், “நானே நல்ல சீன் பாதில முடிஞ்சுதேன்னு கடுப்புல இருக்கேன். இதுல மூடை ஸ்பாயில் பண்ற டாபிக் எல்லாம் எதுக்கு மைலி…” என்றான் சலிப்புடன்.

அதில் அவளுக்கும் கன்னம் சிவக்க, “எப்ப பாரு ஃப்ளர்ட் பண்ற டாபிக் தான் உனக்குப் பிடிக்கும்” என்று போலியாய் கோபம் கொண்டாலும், மனதில் அடியாழம் வரை தீண்டியது அவனது குறும்புகள்.

“அதான எனக்கு ஃபுல் டைம் ஜாபே. உங்கிட்ட மட்டும் ஃப்ளர்ட் பண்ண எனக்குப் பிடிக்கும் மைலி” என்றவன் கியர் போட்டு விட்டு, அவள் கையை எடுத்து அவன் கைக்குள் வைத்துக் கொண்டான்.

புன்னகைத்த இதழ்களை அவனுக்கு காட்டாமல் மறுபக்கம் திரும்பிக் கொண்டவளிடம், “சரி எனக்கு செல்லப் பேர் வை மைலி” என்று சிறுவன் போல அடம்பிடிக்க, “அதெல்லாம் எனக்கு வைக்கத் தெரியாது” என்று தலையாட்டிக் கொண்டாள்.

“இதுக்காக மூணு மாச கோர்ஸா போக போற. ஆல்ரெடி புழக்கத்துல இருக்குற செல்லப்பேரை சூஸ் பண்ணி வை. டார்லிங், டியர், ஹனி, செல்லம், பட்டு, தங்கம் பிளா பிளான்னு நிறைய இருக்கு. டவுட் இருந்தா கூகிள்ல சர்ச் பண்ணிப்பாரு மைலி. நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கும்” என்று ஐடியா வேறு கூற,

தலையில் அடித்துக் கொண்டவள், “கூகிள்ல சர்ச் பண்ணி செல்லப்பேர் வைக்கவா? விளங்கிடும்” என்று நொடித்தாள்.

“அதான் உன் மண்டையில ஸ்டாக் இல்லைல… அப்பறம் என்ன?” என்று அதரம் சுளிக்க,

“இல்லைன்னு சொன்னேனா?” எனக் கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

“பாருடா. அப்போ, ஆல்ரெடி யோசிச்சு இருக்கியா? சொல்லு சொல்லு” என்று ஆர்வமாகக் கேட்டவனிடம், குறும்பு மேலிட “அதான் ஆல்ரெடி சொன்னேனே தார்னி டெவில்னு…” என்றாள் கேலியாக.

“அவ்ளோ தானா? நான் கூட வேற புதுசா யோசிச்சு இருந்துட்டியான்னு நம்பிட்டேன்… ப்பே!” என்று உர்ரென சாலையைப் பார்த்து காரை ஓட்ட, அடக்கப்பட்ட சிரிப்புடன் மைதிலி ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்தாள்.

சில நொடிகளுக்கு மேல் அவன் அமைதியை ஏற்றுக்கொள்ள மனம் வராமல், வாயைத் திறக்கும் போது அவள் இறங்க வேண்டிய இடமும் வந்து விட, அவனை ஓரக்கண்ணில் பார்த்தபடி இறங்கியவள், சற்று குனிந்து ஜன்னல் வழியே அவனைப் பார்த்து “பை ரஷு” என்று கூறி விட்டு, மடமடவென உள்ளே நடந்தாள்.

“பை” என்று போலிக்கோபத்தை தொடர்ந்தபடி சொன்னவனின் விழிகளில் சட்டென மின்னல் வெட்ட, “ஹே மைலி என்ன சொன்ன?” என்று கார் கதவைத் திறந்து கத்தினான்.

“பை சொன்னேன்டா தார்னி டெவில்” என்று திரும்பிப் பார்க்காமலேயே பதில் அளித்தவளின் இதழ்களில் காரணமற்றப் புன்னகை நிரந்தரமாக வீற்றிருந்தது.

அதே புன்னகை அவனிடமும் தென்பட, தலையாட்டி சிரித்துக் கொண்டவன், “கேடிடி நீ…” என ரசனையுடன் தன்னவளை எண்ணியபடியே அலுவலகம் அடைந்தான்.

அடுத்த இரு நாட்களும், மைதிலிக்கு முக்கியமான வழக்கு வேலை இருந்ததில், இரவு தாமதமாகவே வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள்.

காலையிலும் “கேஸ் ஸ்டடி பண்ணனும்…” என்று அவசரமாக பிரஷாந்த் கொடுக்கும் காலை உணவை உண்டு விட்டு கிளம்ப அவளை நிறுத்திய பிரஷாந்த், “ஹே தண்ணியைவாவது பொறுமையா குடிச்சுட்டுப் போ மைலி” என்றாள்.

“நாளைக்கு நான் எடுத்து இருக்குற மேஜர் கேஸோட லாஸ்ட் ஹியரிங் ரஷு. டிஃபன்ஸ் லாயர் பிக் ஷாட். ப்ராப்பர் எவிடன்ஸ இப்ப தான் கலெக்ட் பண்ணிருக்கேன். அதை கோர்ட்ல சப்மிட் பண்ற வரை நிம்மதியா இருக்க முடியாது. மகியை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிடு. ஈவ்னிங் வேலை இருந்தா மகேஷை பிக் அப் பண்ண சொல்லு. நீ அலையாத” என்று கணவனுக்கு உத்தரவுகளைக் கொடுத்தவள், அவனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த மகிழினியிடம் குனிந்து,

“அங்கிளை டிஸ்டர்ப் பண்ண கூடாது மகி. சமத்தா இருக்கணும். ஓகே வா” என்று அவளுக்கு முத்தமிட்டு நிமிர்ந்ததும் பிரஷாந்த் எங்கோ பார்த்தபடி கன்னத்தைத் தேய்த்துக் கொண்டான்.

“நானும் சமத்தா தான் இருப்பேன்…” என்று இழுத்ததில், அத்தனை டென்ஷனும் காற்றில் பறக்க, இதழோரம் புன்னகை பூத்தது மைதிலிக்கு.

“நீ எவ்ளோ சமத்துன்னு எனக்கும் தெரியுமே!” என முணுமுணுத்துக் கொண்டவள், கோர்ட்டை எடுத்துக்கொண்டு கிளம்ப, வேகமாக வாசலுக்கு வந்த பிரஷாந்த், “ஹே மைலி… ஆல் தி பெஸ்ட்!” என்றான்.

அதில் திரும்பி புருவம் சுருக்கியவள் “எதுக்கு?” எனக் கேட்க,

“கேஸ்ல ஜெயிக்க தான்” என்றதில், முதன்முறை தனது மனதிற்கு நெருக்கமான ஒருவரிடம் இருந்து கிடைத்த தொழில் ரீதியான ஊக்குவிப்பு அவளுக்கு புதுமையான உற்சாகத்தைத் தந்தது.

“தேங்க்ஸ் ரஷு” மலர்ந்த புன்னகையுடனே பதில் அளித்தவளுக்கு அவனுக்கு ஒரு முத்தம் தர ஆவல் பிறந்தது. மகிழினிக்கு முத்தமிடும் போது அவனும் ஆர்வம் பொங்க பார்த்த பார்வை அவளை அசைத்தாலும் அதற்கு அவளாக முன்னேற ஒரு தயக்கம் பிறக்க அந்த ஆவலை தனக்குள்ளேயே அடைக்கிக் கொண்டவள், “லேட் ஆச்சு கிளம்புறேன்… நீயும் சாப்பிட்டுடு. வீடை எல்லாம் நான் நைட்டு வந்து க்ளீன் பண்ணிக்கிறேன். நீயா எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யாத ரஷு…” என்று இயல்புடன் பேசுவது போல கூறி விட்டு நகர்ந்தாள்.

அவளை கையைக் கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்தபடி ரசித்தவன், அவளை நகர விடாமல் கையைப் பிடித்துக் கொண்டான்.

விழிகளை அகல விரித்த மைதிலி, “ரஷு… என்ன?” எனத் தடுமாறும் போதே அவளை இழுத்து கன்னத்தில் அழுத்தமாக தன்னிதழைகளைப் பதித்தான்.

இறந்த செல்களுக்கு உயிர் கொடுத்தது அம்முத்தம்.

உயிர் இழந்த உணர்வுகளுக்கு புது ஜென்மம் கொடுத்தது ஆடவனின் நெருக்கம்.

கண்ணை மூடி அதனை ஏற்றுக்கொண்டவள், குனிந்த தலை நிமிராமல் “வாசல்ல நின்னு என்ன செய்ற. யாரும் பார்த்துட போறாங்க…” என்று திக்கி திணறி கூறி விட்டு, வண்டியை எடுத்துக்கொண்டு ஓடியே விட்டாள்.

அப்போதும் இருவரின் உள்ளங்களிலும் இன்பச் சாரல் வீச தவறவில்லை.

மைதிலி எடுத்த வழக்கு வேலையும் முடிந்திருக்க, அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு பிரஷாந்த்திற்கு அதிக வேலை துளைத்து எடுத்தது.

இரவு அவன் தாமதமாக வர வேண்டிய சூழ்நிலை வர, வீட்டையும் மகியையும் முழுக்க முழுக்க மைதிலியே பார்த்துக் கொண்டவள், காலை உணவை கூட கத்தரித்து விட்டு கிளம்ப முயல்பவனை மிரட்டி உண்ண வைப்பாள்.

“உனக்கும் சேர்த்து தான சமைச்சேன். பிரேக் பாஸ்ட் ஸ்கிப் பண்ணாம ஒழுங்கா சாப்பிடு ரஷு” என்றவளை நிமிர்ந்து பார்க்காமல், “இல்ல மைலி. ஆபிஸ்ல கிளையண்ட் மீட்டிங் இருக்கு. அங்க சாப்ட்டுக்குறேன்” என்று கிளம்பி விட, அவனை யோசனையாகப் பார்த்தாள் மைதிலி.

இரண்டு நாட்களாக அவனைப் பார்க்கிறாளே! தன் மீது பதித்த விழிகளை அங்கும் இங்கும் திருப்பக் கூட மாட்டானே. இப்போது என்ன வந்தது இவனுக்கு? என்ற சிந்தனையுடன், அவனது அருகாமை தந்த வலியும் அவளை மெல்ல மெல்ல கூறு போட்டது.

பின் அவளே, ‘ப்ச்… ச்சே நான் ஏன் கண்டதை யோசிக்கிறேன். எனக்கு வேலை இருக்கும் போது அவன் இப்படி எல்லாம் யோசிச்சு இருந்தா என்னால நிம்மதியா வேலை பார்த்திருக்க முடியாது. இப்போ அவனுக்கு ஒர்க் பாலன்ஸ் வேணும்னா, அவனுக்கு அந்த ஸ்பேஸை நம்ம தான் குடுக்கணும்…’ என்று மனஸ்தாபங்களுக்கு வழி விடுக்காமல், தாம்பத்யத்தின் சூட்சமமான தனது துணையின் தனித்தன்மையான வாழ்வுக்கு இடையூறாக இல்லாமல், இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர்.

அன்று மகிழினியைப் பள்ளியில் இருந்து மகேஷே அழைத்துக்கொள்ள, பிரஷாந்தும் சீக்கிரமாகவே அலுவலகத்தில் இருந்து கிளம்பி அவன் வீட்டிற்குச் சென்று விட்டான்.

தேவஸ்மிதா கருவுற்றிருப்பதில் அனைவருமே மகிழ்வில் இருக்க, அமர் அவளைத் தரையில் கூட நடக்க விடாமல் தாங்கினான்.

“ஐயோ எனக்கு வாந்தி வாந்தியா வருது ராம்!” என தேவையானி ‘டோனி’ல் நொந்து கொண்டிருந்தவளை சமன் செய்து உண்ண வைப்பதற்குள் அமருக்கு விழி பிதுங்கி விட்டது பாவம்.

“மதியத்துல இருந்து ஒண்ணுமே சாப்பிடாம இருக்க மிதும்மா. கொஞ்சம் சாப்பிட்டுட்டு அப்படியே தூங்கிடு. வாமிட் வராது…” எனக் கெஞ்சி கொஞ்சி அவளுக்கு ஊட்டி விட,

திவ்யஸ்ரீ தான், “என்னடி ஓவரா பண்ற. இன்னும் ஒன்பது மாசம் இருக்கு. அதுக்குள்ள அந்த மனுஷனை காவி வாங்க விட்டுருவ போல. வாந்தி எடுத்தாலும் பரவால்ல ஒழுங்கா தின்னு தொலை…” என்று தங்கையைக் கடிந்ததில்,

“நீ மூடிட்டு போடி. உனக்கு மாம்ஸ் ஊட்டி விடலைன்னு பொறாமை…” என்று சிலுப்பினாள்.

தயானந்தன் தான், “பேசுறதுக்கு மட்டும் நல்லா வாயைத் திற. சாப்பிட சொன்னா வாயை கம் போட்டு ஒட்டிடு” என்று முறைக்க,

“அடேய் நானே ஒரு ஃபுட்டி தான்டா. முடிஞ்சா சாப்பிட மாட்டேனா?” என்றாள் பாவமாக.

“அமர்… இவள் நீ ஊட்டுனா மட்டும் நாலு வாய் வாங்குறா. நீ இல்லாத நேரம் பச்சைத் தண்ணி கூட குடிக்க மாட்டுறா” என கோர்த்து விட,

அமர் தேவாவை மூக்கு விடைக்க முறைத்தான்.

அவளோ முகத்தைப் பரிதாபமாக வைத்தபடி, “நான் என்ன பண்றது அமர காவியம். உன் முகத்தைப் பார்த்தா தான் சோறு தண்ணி உள்ள இறங்குது. இல்லன்னா ஒரு மாதிரி இருக்கு தெரியுமா?” என்று உதட்டைப் பிதுக்க, அதில் அமர் கோபம் விடுத்து சிரித்து விட்டான்.

அத்தனை நேரமும் அவர்களது வாக்குவாதத்தை கன்னத்தில் கை வைத்து சுவாரஸ்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்த பிரஷாந்த்,

“அடச்சி, அவார்டா கொடுக்குறாங்க… இப்படி நடிக்கிற” என்று கேலி செய்திட, சரியாக அப்போது மைதிலியும் வந்து விட்டாள்.

அவளைக் கண்டதும் விழிகள் மின்ன, “அட இன்னைக்கு என்ன ஏழு மணிக்குலாம் வந்துட்ட மைலி…” எனக் கேட்டவனை சப்பென அறைந்தவளின் முகத்தில் கோப ரேகைகள் தாண்டவமாடியது.

அதனை எதிர்பார்த்தவன் போல, கன்னத்தில் கை வைத்து தாடையை அங்கும் இங்கும் திருப்பி அட்ஜஸ்ட் செய்த பிரஷாந்த்,
“அடிக்கிற கை தான் அணைக்குமா மைலி…” என்று உதடு குவித்து கேட்டான்.

அவன் மீது கொலை வெறியில் இருந்தவள், “செருப்பை கழட்டி அடிக்கும்” என மூச்சிரைக்க சினத்தைக் கக்கியதில், ‘செருப்பை எப்படி ஒழிச்சு வைக்கிறது’ என்ற தீவிர சிந்தனைக்குள் ஆழ்ந்தான் பிரஷாந்த்.

உயிர் வளரும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
84
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்