1,637 views

 

இரவு தாமதமாக தூங்கியதால் வேண்டா வெறுப்பாக கண் திறந்தாள் அகல்யா. அவள் கண் முழிக்கும் அழகை சயன போஸில் படுத்துக்கொண்டு ரசித்துக்கொண்டிருந்தான் ஆடவன். கணவனை பார்த்ததும் லேசாக அவள் இதழ்கள் விரிய, “ஹாப்பி பர்த்டே மை குயின்.” என்று முத்தமிட,

“ச்சீ எச்சி!” என்று அவன் எச்சில் பட்ட இடத்தை துடைத்தாள்‌.

முறைத்துக் கொண்டு எழுந்தவன் அவளை தூக்கிக் கொண்டான். “என்னங்க என்ன பண்றீங்க?” என கூச்சலிடும் மனைவியை குளியலறையில் விட்டவன், “குளிச்சிட்டு வாங்க பர்த்டே பேபி.” என்றான்.

“என்னங்க இதெல்லாம்?” என சிணுங்கும் மனைவியை உள்ளே தள்ளியவன் கதவை சாற்றினான்.

ஆனந்தமான சிரிப்போடு குளியலை முடித்தவள் வெளியில் வர, நேற்று அவன் தேர்வு செய்த உயர் ரக புடவை மெத்தையில் இருந்தது. கூடவே மேல் சட்டையும் தைத்து வைத்திருந்தது. ஆச்சரியம் அவளை சூழ்ந்து கொள்ள, கணவனை தேடி நடந்தாள். கதவு வெளிப்புறம் பூட்டி இருப்பதை அறியாதவள் அதை திறக்க முற்பட்டாள். மனைவி கதவின் அருகே வந்துவிட்டதை உணர்ந்தவன்,

“நேத்து இந்த புடவை உனக்கு புடிச்சு இருந்துச்சுன்னு எனக்கு தெரியும் லயா. உன்னை இன்னும் முழுசா காதலிக்கிறனான்னு கேட்டா பதில் இல்லை. ஆனா நீ என்ன ஆசைப்பட்டாலும் உடனே செஞ்சு கொடுத்துடுவேன். அதை கட்டிட்டு சொல்லு கதவை திறந்து விடுறேன்.” என்றான் காதலோடு.

பதில் கொடுக்க வார்த்தை இல்லாமல் கதவில் சாய்ந்து கொண்டிருந்தாள் அகல்யா. அவள் பதில் கொடுக்காமல் இருப்பதால் ஆடவன் குரல் கொடுக்க, “லவ் யூ ஈஷ்வா” என்று கணவனின் பரிசை உடலோடு உடுத்திக் கொண்டாள்.

நேற்று இரவு கூட தான் சொல்லும் பொழுது பதிலுக்கு அவளும் சொல்வாள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனான். இப்பொழுது அவன் எதிர்பார்க்காத நேரம் ஆசைப்பட்ட வார்த்தை கிடைத்துவிட, தொட்டு கட்டிக்கொள்ள முடியாமல் கதவோடு தன் உணர்வுகளை தக்க வைத்துக் கொண்டான்.

“லயா எனி ஹெல்ப்?”

“எனக்கு நல்லாவே புடவை கட்ட தெரியும்.” என பல்ப் கொடுத்தாள் கணவனுக்கு. இதழை சுழித்து தனக்குத்தானே ஒழுங்கு காட்டிக் கொண்டவன்,

“எனக்கு தெரியாது லயா… எப்படி கட்டணும்னு சொல்லி கொடுக்கிறியா.” என வெட்கமே இல்லாமல் மீண்டும் உள்ளே வரட்டுமா என்று மறைமுகமாக கேட்டான்.

“நீங்க எப்படி சுத்தி வளைச்சு கேட்டாலும் என் பதில்…. ஆணியே…” என்று முடிக்காமல் நகைத்தாள்.

“ரொம்பத்தான்” என்றவனுக்கு தரிசனம் கொடுத்தாள் புது புடவையோடு. கண்கள் வேகம் எடுத்து படமெடுத்துக் கொண்டது அவளை. கண்களால் ரசித்ததை சுட்டிக்காட்டியவன், “ரெடியாயிட்டு வா அகல் கோவிலுக்கு போயிட்டு வரலாம்.” என்றவனை இந்த முறை தன்னோடு அழைத்துச் சென்றாள்.

முழு அலங்காரத்தோடு புன்னகை முகமாக அவன் முன்பு நிற்க, “உண்மையாவே ரொம்ப அழகா இருக்க லயா. என் கண்ணே அதிகம் பத்துடுச்சு.” திருஷ்டி சுத்தி போட்டான்.

“ரொம்ப ஓவரா பண்றீங்க.” என வரும் வெட்கத்தை சாமர்த்தியமாக அவனுக்கு காட்டாமல் மறைத்தாள்.

“இன்னைக்கு ஒரு நாள் தான் லயா. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க.” என்று சிரிக்க வைத்தவன் முறைக்கவும் வைத்தான்.

ஜீபூம்பா இரண்டாவது வாழ்த்தை தெரிவிக்க மூவரும் கோவிலுக்கு சென்றார்கள். பாவம் செல்ல பிராணி மட்டும் காரில் இருந்து கொள்ள, கடவுளை தரிசித்து விரைவாக வந்தார்கள்.

“உங்க அலும்பு தாங்க முடியல.” செல்லமாக அழுத்து கொள்ளும் மனைவியை அழைத்துக் கொண்டு உணவகம் வந்திருந்தான். அவளுக்குப் பிடித்த உணவுகள் அங்கு இடம் பெற்றிருக்க, இனிமையான பேச்சுக்களோடு காலை உணவை முடித்தார்கள்.

சாப்பிட்ட கையோடு  மருத்துவமனைக்கு செல்ல, இருவரின் தோரணையை பார்த்து வியந்தார்கள். மனம் நிறைந்த பெரியவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

தயாளன் வீட்டிற்கு வர இன்னும் நான்கு நாட்கள் இருக்க, இன்றே வந்தாக வேண்டும் என அவசரமாக வேலைகளை முடித்தான். எதற்கு என்று மூவரும் கேட்க, மாலை சொல்வதாக நழுவினான். குழந்தை போல் காலையிலிருந்து பாவித்து கொண்டு இருக்கும் கணவனிடம்,

“நீங்க பண்றது எல்லாம் பார்த்தா ரொம்ப சிரிப்பா இருக்குங்க. காலம் போன காலத்துல என்னமோ இப்பதான் கைக்குழந்தைக்கு பிறந்தநாள் விழா நடத்துற மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க.”

“இந்த நாள் நீ எனக்கு குழந்தை தான் லயா. மீதி நாள் எல்லாம் நான் உனக்கு குழந்தை.” என்றதும் அவனை விட்டுப் பார்வையை அகற்ற அதிக நேரம் தேவைப்பட்டது அகல்யாவிற்கு.

அவள் ஆசைப்பட்டு கேட்டது போல் ஆசிரமத்திற்கு மதிய சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தான். அவள் பெயரில் சாப்பாடு விநியோகம் செய்யப்பட, அங்கு இருப்பவர்களின் ஆசிர்வாதத்தோடு மதிய உணவை அங்கேயே முடித்தார்கள். முடித்த கையோடு அழைத்துச் சென்றான் மாமியார் வீட்டுக்கு. இதுதான் முதல் முறை என்பதால் மருமகனை புன்னகையோடு வரவேற்றார் சுகன்யா.

தரணீஸ்வரனை பற்றி கேட்ட விஷயங்கள் கசப்பாக இருந்தாலும் ஒரே மருமகன் என்பதால் சிறப்பாக கவனித்தார். அதிலும் மகளின் முகத்தில் தெரியும் சிரிப்பை வைத்து இருவருக்குள்ளும் சுமுகமான உறவு இருக்கிறது என்பதை அறிந்து நிம்மதி அடைந்தார். மச்சான் அருண் ஜீபூம்பாவை பார்த்து மிரள, மச்சானை சேர்த்தணைத்து நண்பனாக்கி விட்டான் செல்லப்பிராணியோடு.

மாமியாருக்கு கண்ணை காட்டியவன் மனைவிய அழைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான். வீட்டில் கால் வைத்ததும் அவள் கண்களை மீண்டும் மூடினான். சிரிப்போடு நடந்தவளை தோட்டத்தில் நிற்க வைத்தவன் விழித்திறந்தான்.

அங்கு அவனால் வளர்க்கப்பட்டு உயிரை மாய்த்து மீண்டும் உயிர்பெற்ற மஞ்சள் வண்ண ரோஜாக்கள் அவள் உருவத்தில் மின்னிக் கொண்டிருந்தது. ரோஜா பூவில் இருக்கும் மனைவியின் முகத்தை காட்டி புன்னகைத்தவன்,

“பிடிச்சிருக்கா லயா!” என்றிட, அழுத்தமாக கட்டிக்கொண்டாள். தலையை வருடி கொடுத்து அவன் மீண்டும் கேட்க, முத்தத்தை மட்டுமே பதிலாக கொடுத்துக் கொண்டிருந்தாள்.

***
உடையை மாற்றிக் கொண்டு அவளை எங்கோ அழைத்துச் செல்வதாக வெளியேறினான். அகல்யா பலமுறை கேட்டும் பதில் சொல்லவில்லை. கண்ணை கட்ட வைத்து நேராக அழைத்துச் சென்றான் கம்பெனிக்கு.

கண்ணை விட்டு ஆடை விலகியதும் வியந்தாள் ஜீபூம்பாவை பார்த்து. தலையில் கேப் அணிந்து உடல் முழுவதும் வண்ண காகிதங்கள் சுற்றிக்கொண்டு வாயில் பிறந்தநாள் வாழ்த்து அட்டையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தது. புன்னகையோடு செல்லப்பிராணியை கட்டிக் கொண்டவள் இன்னும் வியந்து போனாள் தன் குடும்பம் மொத்தமும் அங்கு இருப்பதை பார்த்து.

பாவம் தயாளனை கூட விட்டு வைக்கவில்லை அவளின் கணவன். வீல் சேரில் அமர்ந்துக் கொண்டிருந்தார் மனைவியோடு. இரு வீட்டில் இருந்தும் சற்று முன்னர் தான் அவள் கிளம்பி இருக்க, என்ன நடக்கிறது என்று சந்தேகமாக கணவனை பார்த்தாள். தோள்களை குலுக்கி ஒன்றும் இல்லை என்றவன்,

“எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் இன்னைக்கு என் மனைவியோட பிறந்தநாள்’னு. அந்த செலிப்ரேஷன் ஓட இன்னொரு இனிப்பான செய்தியும் உங்களுக்கு சொல்ல போறேன்.” என்றவன் அகல்யாவை கைவளைவிற்குள் வைத்துக் கொண்டு,

“இனி இந்த கம்பெனி சம்பந்தமா முடிவெடுக்க போற உரிமை என் மனைவி மிஸஸ் தரணீஸ்வரனுக்கு மட்டும்தான் இருக்கு. நானோ இல்ல எங்க அப்பாவோ அதுல தலையிட மாட்டோம். அதோட அதிகார பூர்வ நடவடிக்கை இன்னும் ஆறு மாசத்துல நடந்திடும். சோ, உங்க புது எம்டிக்கு ரெண்டு வாழ்த்தா சொல்லுங்க.” என்ற பெரும் அதிர்வை அவளுக்கு கொடுத்தான். அன்று ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறான் என்று நினைத்தவள் உண்மையில் நம்ப முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.

மனைவியின் முகத்தை தட்டி இயல்புக்கு கொண்டு வந்தவன் அவள் முன்பு வைத்தான் (honey cake) தேன் கட்டிகையை. மாறாத திகைப்போடு அதை வெட்டியவள் யாருக்கு கொடுப்பது என்று கூட தெரியாமல் அப்படியே வைத்துக் கொண்டிருந்தாள். “லயா!” என உணர்வு கொடுத்தவன் தானே வாங்கிக் கொண்டான் கையில் இருப்பதை.

விடுமுறை தினம் என்றும் பார்க்காமல் வந்திருந்த ஊழியர்களுக்காக சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருந்தான் தரணீஸ்வரன். கொண்டாடப்பட்ட விழா நிறைவு பெறும் தருணம் வந்ததும், “அம்மா நீங்க அப்பாவ கூட்டிட்டு வீட்டுக்கு போங்க. நான் அத்தைய வீட்ல விட்டுட்டு வரேன்.” என்றான்.

***

கடல் அலைகள் காற்றோடு குளிரையும் பிறந்தநாள் கன்னிக்கு பரிசளிக்க, “என்னங்க நடக்குது ஒன்னும் புரியல.” என்று தலையை மடியில் வைத்தாள். இனியும் அவஸ்தையோடு வைத்துக் கொள்ள விரும்பாதவன் அன்றைய நாளை கூறினான்.

பணம் வாங்கிய கையோடு, “என்னை மன்னிச்சு நீங்க எப்போ பேசுறீங்களோ அப்போ பேசுங்கம்மா. நான் வேணும்னு எதையும் பண்ணல. எனக்கு அதுல இருந்து வர வழி தெரியல. இந்தா வழின்னு ஒருத்திய நீங்க என் கையில கொடுத்ததுக்கு அப்புறம் தான் நிறைய மாற்றம். உங்க மகன் இனி உங்க மகனா இருப்பான். எனக்காக இல்லனாலும் உங்க மருமகளுக்காக ஒன்னு கேட்பேன் மறுக்காம செஞ்சு கொடுங்க.” என்றவனை வெகு நாட்கள் கழித்து அவர் திரும்பி பார்க்க,

“அந்த கம்பெனி உங்களோட உழைப்பு தான் இருந்தாலும் அதை என் மனைவி நிர்வாகம் பண்ணனும்னு ஆசைப்படுறேன். நீங்க சும்மா ஒன்னும் கொடுக்க வேணாம். அதுக்கு என்ன வேணும்னு கேளுங்க என் மனைவிக்காகவும், அவளை எனக்கு கொடுத்த என்னோட அம்மாவுக்காகவும் வாழ்க்கை முழுக்க செஞ்சு கொடுக்கிறேன்.” என்றான் தெளிவாக.

அதற்கு என்ன அவசரம் என்று தயாளன் விசாரிக்க, “உடனே செய்யணும்னு அவசியம் இல்ல. நான் சொல்லும்போது நீங்க சிரிச்ச முகமா என் மனைவி பக்கத்துல நிக்கணும். அந்த உத்தரவ மட்டும் இப்ப கொடுங்க.” என்றான்.

அவரோ மனைவியை பார்க்க, பதில் சொல்லாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார் ஆதிலட்சுமி. பொறுத்திருந்து பார்த்த தரணி சம்மதம் கிடைக்காது என்ற எண்ணத்தில் நகர,

“நீ சொல்லி என் மருமகளுக்கு எதையும் செய்யணும்னு அவசியம் எனக்கு இல்லை. அவ என்னோட கம்பெனியில வேலை பார்க்கும் போதே மேல ஒசத்தி வச்சி அழகு பார்த்தவ நானு. இப்போ செய்ய யோசிக்க மாட்டேன். நீ கேட்காம இருந்திருந்தாலும் என்னோட அடுத்த நடவடிக்கை அதுவா தான் இருந்திருக்கும்.” என்றவருக்கு புன்னகையை பதிலாக கொடுத்துவிட்டு வந்திருந்தான்.

முழுவதையும் கேட்டவள் வழக்கமாக அவன்  செய்யும் செயலை செய்தாள் மடியில் படுத்து. “சந்தோஷமா இருக்கியா லயா.” என்பதற்கு அவள் ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

“எதையாவது செஞ்சி ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்னை சந்தோஷப்படுத்திடுவேன் லயா.” என்றான் உறுதியான புன்னகையோடு.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலங்க. என்னவோ நினைச்சி அந்த கம்பெனிக்கு வந்தேன். இப்போ… இங்க உங்க மடியில இருக்கேன். வாழ்க்கை ரொம்ப விசித்திரமா தெரிஞ்சாலும் நான் ரொம்ப கொடுத்து வச்சவன்னு தோணுது.”

இருவரும் எதையும் பேசிக்கொள்ளாமல் அப்படியே இருக்க, “எதுக்காக என் இடத்துல இன்னொரு பொண்ண வச்சீங்க. கொஞ்ச நாள் காத்திருந்தா நான் வந்திருப்பேன்ல. உங்க கூட இருக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதே அளவுக்கு எனக்கு முன்னாடி உங்க வாழ்க்கையில ஒரு பொண்ணு இருக்கான்னு நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்குங்க.

எனக்கு சொந்தமான அன்பை நீங்க எப்படி இன்னொருத்திக்கு கொடுத்திருக்கலாம். உங்க லயா வருவான்னு தெரியாதா இல்ல இவ ஒன்னும் சொல்ல மாட்டான்னு தைரியமா. பொறாமையா இருக்குங்க அவ மேல. என் புருஷன் மனசுல எனக்கு முன்னாடி இடம் பிடிச்சிட்டான்னு. என்ன இருந்தாலும் நீங்க அவளை தான காதலிச்சீங்க. நமக்கு கல்யாணம் ஆகாம இருந்திருந்தா இந்த மாதிரி என் கூட இருந்திருக்க மாட்டீங்கல.” அதற்கு மேல் பேச முடியாமல் கட்டிக்கொண்டு அழுதாள். அவனும் அழுகிறான் என்பதை அறியாது.

***

அழுது ஓய்ந்தவள் அவனை விட்டு விலகி, “சாரிங்க! உங்க கிட்ட இதை பத்தி பேசக்கூடாதுன்னு தான் நினைக்கிறேன். ஆனா, என்னையும் மீறி வந்துடுது. எப்பவாது நான் இந்த மாதிரி பேசுனா கொஞ்சம் பொறுத்துக்கோங்க.” என அவளின் மனநிலையை தெளிவாக உணர்த்தினாள்.

மனைவியின் மடியில் படுத்து கொண்டவன், “மன்னிப்ப மட்டும் தான் வாழ்க்கை முழுக்க உனக்கு சொல்ல முடியும். எனக்கு தெரியாது லயா… நீ வருவன்னு. தெரிஞ்சிருந்தா அப்பவே எனக்காக என் லயா இருக்கா நீ எனக்கு வேணாம் போடின்னு சொல்லி இருப்பேன். உன்னோட கண்ணீருக்கு காரணமா இருந்திருக்க மாட்டேன்.

நீ யாரையாது என் இடத்துல வச்சா தாங்கிக்க முடியாது என்னால. அப்படி இருக்க உனக்கு எவ்ளோ வலிக்கும்னு புரியுது. தப்பு பண்ணிட்டேன் லயா. உனக்கு துரோகம் பண்ண போறன்னு தெரியாம தப்பு பண்ணிட்டேன். இந்த ஒரு தடவை மட்டும் என் தப்ப கொஞ்சம் சகிச்சுக்க. வாழ்க்கை முழுக்க உன்ன மட்டுமே இந்த இடத்துல சுமந்துட்டு செத்துப் போயிடுறேன்.” என இதயத்தில் கை வைத்தான்.

அவள் பதில் பேசாமல் இருக்க, “உன்னால என்னை சகிச்சுக்க முடியாதுன்னு தோணுச்சுன்னா மறைக்காம சொல்லிடு லயா. உன்னை தொந்தரவு பண்ணாம விட்டு விலகிடுறேன். உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கைய…” முழுதாக முடிக்க முடியாமல் அவளை விட்டு எழுந்து விட்டான்.

தடுக்கும் மனநிலை அகல்யாவிற்கு இல்லாமல் போனதால் அமைதிக்காக்க, காற்றோடு காற்றாக தன் வலியை வெளியேற விட்டு மறைத்தவன் துணிவோடு அவளை நெருங்கினான். அப்போதும் உணர்வுகளை கொட்டாமல் அவள் அமர்ந்திருக்க, “உனக்கு பிடிக்கலைன்னா சொல்லிடு லயா விவாகரத்து நோட்டீஸ் கொடுத்திடுறேன்.” என்றான் தரணீஸ்வரன்.

பிறந்தநாள் பெண்ணின் பார்வை அவன் மீது விழ, பார்க்க தைரியம் இல்லாமல் திரும்பிக் கொண்டான். “வீட்டுக்கு போலாம்’ங்க.”  எதையும் பேசிக்கொள்ளாமல் இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.

வெகு நாட்கள் கழித்து வீட்டிற்கு உயிர் வந்தது போல் இருந்தது அனைவரும் இருப்பதாள். தயாளன் ஜீபூம்பாவோடு நன்றாக விளையாடினார் பிரிந்ததை சரி செய்து கொள்ளும் நோக்கோடு. மருமகளுக்கு பிடித்த உணவை செய்த ஆதிலட்சுமி காத்துக் கொண்டிருந்தார் இருவருக்காக.

இருவரையும் அவர் அன்போடு வரவேற்க, வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டு இரவு உணவை நிறைவு செய்தார்கள். இருவரும் அறைக்குள் செல்ல தயங்கினார்கள். அதிலும் தரணி பெரும் போராட்டமே செய்தான் மனதோடு. இப்போது வரை மனைவி மார்பில் தான் தினமும் துயில் கொள்கிறான். என்ன சம்பவம் தங்களை சுற்றி நடந்தாலும் இரவு நேர தூக்கம் மட்டும் இருவரையும் பிரிக்காமல் இருக்கும். அதை எண்ணி கலங்கியவன் இன்றைய நாளை கடக்க துணிவு இல்லாமல் தயங்கினான்.

மனைவியின் உணர்வுகளை அவள் வார்த்தையாக கேட்டவன் உள்ளம் உடைந்தது உண்மை. தன்னால் தான் மனைவி அழுகிறாள் என்ற எண்ணமும், தவறான வாழ்க்கையை எப்படி தேர்வு செய்தோம் என்ற குற்றமும், நல்ல பெண்ணை திருமணம் செய்து தவிக்க விடுகிறோம் என்ற ஆதங்கமும் அவனை மாற்றி… மாற்றி தாக்கிக் கொண்டிருந்தது.

பதில் தெரியாத காரணத்தினால் அவளோடு எப்படி ஒன்றாக உறங்குவது என்ற சிந்தனையில் தோட்டத்திற்கு சென்றுவிட்டான். அறையில் இருந்தவள் எண்ணம் கணவனை சுற்றியே இருந்தது. தாலிக்கட்டும் முன்பும், பின்பும் யாரை கண்டால் அருவருத்து போனாளோ அவனே எல்லாம் ஆனான் அவளுக்கு.

தரணி இல்லாமல் வாழ முடியுமா என்ற கேள்வி அவளுக்குள் உருவாக, புதைந்து போன ஆசை மெல்ல உயிர் பெற்றது. கூடவே அவனைப் போல் நீயும் திருமணமானவள் தான் என
உள்ளம் உரைக்க, பதில் சொல்லும் துணிவு இல்லாததால் அப்படியே அமர்ந்திருந்தாள்.

இடுப்பு வலி எடுக்க இயல்புக்கு மீண்டவள் மணியை பார்த்தாள். சரியாக நள்ளிரவை தொட இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் இருக்கிறது. எண்ணங்கள் கலைந்து கணவனை தேட ஆரம்பித்தவள் ஒவ்வொரு இடமாக சுற்றி அவனிடத்திற்கு வந்து சேர்ந்தாள்.

அகல்யாவின் உருவத்திற்கு ஏற்ப அலங்கரிக்கப்பட்ட ரோஜாக்கள் பக்கத்தில் அமர்ந்திருந்தான் தரணீஸ்வரன். அருகில் சென்றவள் அப்படியே நின்று விட்டாள், “வேணாம் லயா நான் உனக்கு. உன்னோட மனசுக்கு என்னை மாதிரி ஒரு அசிங்கத்தை கடவுள் புருஷனா கொடுத்திருக்கக் கூடாது. அவளை அந்த மாதிரி பார்த்த அன்னைக்கு எனக்கு எவ்ளோ வலிச்சு இருக்குமோ அதே மாதிரி தான இப்போ என்னோட இன்னொருத்தி வாழ்ந்து இருக்கான்னு நினைக்கும்போது உனக்கும் இருக்கும்.

நான் பட்ட வேதனைய வேற யாரும் படக்கூடாதுன்னு பல நாள் கடவுள் கிட்ட வேண்டி இருக்கேன். அப்படி இருக்க என்னை பார்த்துக்கிற சாமியா வந்த உனக்கு அந்த வலிய கொடுத்துட்டனே. நான் பண்ண பெரிய தப்பு உன் கழுத்துல தாலி கட்டுனது தான். கொஞ்ச நாள் மட்டும் டைம் கொடு இதை சரி பண்ணி ஆசப்பட்ட மாதிரி இந்த குப்பையில இருந்து உன்ன அனுப்பி வச்சிடுறேன். ஆனா நீ இல்லாம நான் எப்படி இருக்க போறன்னு தான் தெரியல லயா.” உணர்வு பூர்வமாக பேசிக் கொண்டிருந்தான்.

“உங்களை விட்டு எங்கயும் போறதா  எண்ணம் இல்ல ஈஷ்வா. நீங்க பண்ண தப்புக்கு வாழ்க்கை முழுக்க என் கூட வாழ்ந்து தண்டனை அனுபவைங்க.” என்றவளை அவன் திரும்பி பார்க்காமல் இருக்க,

“நாளைக்கு கம்பெனிக்கு போக வேணாமா. கண்டதையும் பேசிட்டு இருக்காம வந்து தூங்குங்க.” என்றவள் நகர்ந்துவிட்டாள்.

***

வெகு நேரம் கழித்து அறைக்கு வந்தவன் தடுமாறி உடையை மாற்றிக் கொண்டு வந்தான். கணவன் வருகையை அறிந்தவள்  பக்கத்தில் தலையணை போட்டு விட்டு திரும்பி படுக்க, பல யோசனைகளுக்கு நடுவில் தனக்கான தலையணை எடுத்துக் கொண்டு கீழே படுத்தான்.

திரும்பிப் படுத்திருந்தவள் உணர்வுகள் இன்னும் கணவன் பக்கத்தில் படுக்கவில்லை என்று உரைக்க, திரும்பிப் பார்த்தாள். அவள் முதுகை பார்த்தபடி படுத்துக் கொண்டிருந்தவன் மனைவி பார்ப்பதை அறிந்து திரும்பிக் கொண்டான்.

அளவு கடந்த கோபம் அவள் முகத்தில். எவ்வளவு நேரம் தன்னை விட்டு விலகி இருக்க முடியும் அவனால் ‌ என எண்ணிக்கொண்டவள் கண் எடுக்காமல் அவனைனே பார்த்துக் கொண்டிருந்தாள். மணி சரியாக ஒன்று முப்பது ஆனது. புரண்டு படுத்து தவித்துக் கொண்டிருந்தவன் அவளை திரும்பி பார்க்க, எரிச்சலான முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அவனை.

“லயா!” என்றதும் அவள் வெடுக்கென்று திரும்பிப் பார்த்துக் கொள்ள, “இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பக்கத்துல படுத்துக்கவா.” என்று உத்தரவு கேட்டான் அவளிடம்.

திரும்பிப் பார்த்து முறைத்தவள் மீண்டும் திரும்பிக் கொள்ள, அரை மணி நேர யோசனைக்கு பிறகு ஒரு வழியாக மனைவி அருகில் படுத்தான்.

ஆடவனின் வருகையை உணர்ந்தவள் கண்களை மூடிக்கொள்ள, தூரத்தில் இருந்து அவஸ்தை பட்டவன் அருகில் பெரும் அவஸ்தை பட்டான். ‘அவளை திரும்பச் சொல்வோமா’ என்று சிந்தித்தவன் தயக்கத்தில் கேட்கவில்லை.

சில நொடிகள் கழித்து அதே மனம் கேட்டுப்பார் என்றிட, “லயா!” என்று அவளை ஒட்டியவாறு படுத்தான். பதில் கொடுக்காமல் அகல் அப்படியே இருக்க, ஒரு கையை அவள் வயிற்றில் சுற்றிக்கொண்டு, “சாரி!” என்றான்.

வெடுக்கென்று கணவனின் கையை தள்ளிவிட்டாள். அதன்பின் கை போடும் முயற்சியில் அவன் ஈடுபடாமல் இருக்க, ஆடவன் புறம் திரும்பி படுத்தாள். தரணீஸ்வரன் கஷ்டமான பாவனையோடு  பார்த்துக் கொண்டிருக்க,

“அதான் இவ்ளோ நேரம் நான் இல்லாம இருந்துட்டீங்களே அப்புறம் எதுக்காக முழிச்சிட்டு இருக்கீங்க. என்னையெல்லாம் உங்களுக்கு எப்பவும் பிடிக்காது. டைவர்ஸ் கொடுத்து அனுப்பி வைச்சிடுங்க. வேற எவனையாது கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்றவளின் மார்போடு ஒடுங்கிப் போனான்.

கோபத்தில் கைகள் அணைத்துக் கொள்ளாமல் இருக்க, “எவனாது வந்தான் கொன்னுடுவேன். எனக்கு மட்டும்தான் இந்த இடம் சொந்தம்.” என்று அவளை இன்னும் பொம்மை போல் இறுக்க, வலித்தாலும் அசையாமல் இருந்தாள்.

மனையாளின் கோபம் குறையாது என்பதை உணர்ந்தவன், “பர்த்டே பேபிக்கு இன்னொரு கிப்ட் வச்சிருக்கேன்.” என்று பேச்சை மாற்றினான்.

புருவம் சுருங்கி அவள் கேள்விகளை தொடுக்க, “இதான்” என்றான் இதழை தன் இதழால் இழுத்து. இதை எதிர்பார்க்காதவள் அவனை அடித்துக் கொண்டு விலக பார்க்க, தனக்கானதை எடுத்துக் கொண்டே விட்டான்.

“பொறுக்கி!” என்று முடியை பிடித்து  ஆட்டிக் கொண்டிருக்க, “இந்த மாதிரி நீ கோபப்பட்டா கூட தாங்கிப்பேன். பீச்ல இருந்த மாதிரி மனசு உடைஞ்சு ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் விட்டுடாத லயா… தரணி தன்னை தான மாய்ச்சிப்பான். இப்பவும் நீ எனக்காக தான் இந்த இடத்தை கொடுக்குறன்னு தெரியும். ஆனாலும் ரோஷத்தோட வேணாம்னு சொல்ற தைரியம் எனக்கு இல்லை. மன்னிச்சிடு லயா” என்றவன் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் கட்டிக் கொண்டான்.

மார்போடு முத்தம் ஒன்றை பதித்து, “லவ் யூ லயா” என்றிட இவளது கைகள் அரவணைத்துக் கொண்டது.

இருவரும் வெகு நேரமாக அப்படியே இருந்தார்கள். தூக்கம் இன்று விடுமுறை கொடுத்து விட்டது போல் இருவருக்கும் வர மறுத்தது. சுகமான மனநிலையில், “தூங்கு லயா” என்றவன் அவளை தட்டிக் கொடுக்க,

“நீங்க தூங்குங்க.” என்றாள்.

“என்னன்னு தெரியல தூக்கமே வர மாட்டேங்குது.”

“எனக்கும் தாங்க.”

அதன் பின் இருவரும் பேசிக் கொள்ளாமல் இமைகளை மூடிக்கொண்டு துணையின் சிந்தனையில் சுழன்று கொண்டிருக்க, ஆடவன் கைகள் போர்வையைத் தாண்டி சென்றது. உணர்ந்து உணராது போல் படுத்திருந்தாள் அகல்யா. அதைக் கண்டு கொண்டவன் அவள் விழிகளை நோக்கி விட்டு மீண்டும் முன்னேறினான்.

இடையை பிடித்துக் கொண்ட கைகள் அந்த இடத்தை வருடிவிட, தலை வருடிக் கொண்டிருந்த அவளின் கைகள் நின்றது. கணவனின் கைகள் நிற்க விரும்பாததால் இடை முழுவதையும் அளந்தது. கூச்சம் கொண்ட உடல் அவன் தலையை இறுக்க பிடித்துக் கொள்ள, லேசான வலி உண்டானது தரணீஸ்வரனுக்கு.

உடனே வருடுவதை நிறுத்தியவன் அவள் விழிநோக்க, நெளிவை கொடுத்த கைகள் நின்றதில் அவசரமாக கண் திறந்தாள். இருவரின் விழிகளும் தாக்கிக் கொண்டது. அதில் கைகளை மீண்டும் தன் வேலையை தொடர, கூச்சம் தாங்காமல் திரும்பி படுத்து கொண்டாள்.

போர்வையை விலக்கியவன் அவள் முதுகை இந்த முறை குத்தகைக்கு எடுத்துக்கொள்ள, தாங்க முடியாத சுக வேதனையில் கணவனின் மார்போடு சேர்ந்துக் கொண்டாள். அடுத்த கட்டத்தை தொட இருவருக்கும் தயக்கம் உண்டாக, யார் முதலில் ஆரம்பிப்பது என்ற தயக்கத்தோடு நின்றார்கள்.

***

இருவரும் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு விடியற்காலை நான்கு மணியை கடந்து விட்டனர். மழைக்காலம் என்பதால் வேகமான சத்தத்தோடு மழை பெழிய ஆரம்பித்தது. அதில் உணர்வு பெற்ற இருவரும் மணியை பார்க்க, இரவு முழுவதையும் வீணாக்கிய கடுப்போடு ஒருவர் மீது ஒருவர் கோபம் கொண்டனர்.

கடுப்பை தனக்குள் தரணீஸ்வரன் வைத்துக் கொள்ள, “அய்யோ லயா!”   அவனைக் கிள்ளி தன் கோபத்தை தீர்த்துக் கொண்டாள் அகல்யா.

இதற்கு மேலும் படுத்திருந்தாள் வேலைக்கு ஆகாது என நினைத்தவள் கடுப்போடு எழ, “அவ்ளோ தானா?” ஏக்கமாக கேட்டான் கள்வன்.

“அப்படி என்ன இங்க நடந்துச்சு அவ்ளோ தானான்னு கேட்கிறீங்க.” முறைத்தவள் பிடித்திருந்த கையை பிடுங்கிக் கொண்டு குளியலறை சென்று விட்டாள்.

மனைவியின் வார்த்தையில் இருக்கும் கோபத்தை புரிந்து கொள்ள வெகு நேரம் தேவைப்பட்டது அவனுக்கு. சிறு புன்னகையோடு குளியலறை கதவை தட்டினான்.

“என்னங்க?”

“வெளிய வா”

“எதுக்கு?”

“பர்த்டே கிப்ட் தரணும்.”

“பிறந்தநாள் நேத்தே முடிஞ்சிடுச்சு.”

“இல்ல, இந்த கிப்ட் கொடுத்தா தான் முழுசா முடியும்.”

“என்ன கிப்ட்’னு சொல்லுங்க வரேன்.”

“அதெல்லாம் சொல்ல முடியாது நீ வெளிய வா.”

….

“இன்னும் என்னடி பண்ற உள்ள?”

….

“லயா!”

“இப்ப எதுக்கு கத்திட்டு இருக்கீங்க?. நான் குளிச்சிட்டு இருக்கேன்.” என்றதும் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டவன் வேகமாக கதவை தட்டினான்.

திறக்காமல் தன் வேலையை முடித்தவள், “வெளிய போங்க நான் டிரஸ் மாத்தணும்.” என்று குரல் கொடுத்தாள்.

“முடியாது”

“ப்ச்! ஏற்கனவே கடுப்புல இருக்கேன் நல்லா வாங்கி கட்டிக்காதீங்க.”

“நான் உன்னை விட கோபத்துல இருக்கேன் டி மரியாதையா வெளிய வா.”

“என்னவாம் இப்ப குடிகாரனுக்கு.”

“அடியே!”

“சும்மா தொல்லை பண்ணாம வெளிய போங்க.”

“லயா உனக்கான கிப்ட்ட வேஸ்ட் பண்ணாத.”

“இன்னுமா நீங்க போகல?”

….

“வீணா கோபப்படுத்தி பார்க்காதீங்க. நான் இப்ப கதவை திறப்பேன் நீங்க அங்க இருக்க கூடாது. இல்லன்னா இன்னைக்கு ரெண்டு பேருக்குள்ள பெரிய சண்டை வரும்.” என்றவள் மாற்று உடையை உடுத்திக் கொண்டு கதவை திறக்க தயாராக,

“ரொம்ப பண்ணாதடி. தரணி தர கிப்ட் தெரியாம பேசுறல… ஒரு நாள் இல்ல ஒரு நாள் என்னங்க தப்பு பண்ணிட்டங்கன்னு காலை பிடிச்சு கெஞ்சுவ பாரு.” என்று சிலுப்பிக்கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தான்.

வெளியில் வந்தவள் அவன் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அறையின் கதவை சாற்ற போனாள். தாழ்ப்பாள் போடப் போனவளை வேகமாக கட்டிப்பிடித்தவன் கட்டிலில் சாய்ந்தான். குறும்புக்காரன் சேட்டை புரியாமல் வசமாக சிக்கிக் கொண்டவள்,

“ஏமாத்தினீங்களா வெளிய போன மாதிரி. தள்ளுங்க! இல்லன்னா இங்க நடக்குறதே வேற.” என்று விடுபட முயன்றாள்.

“போகும்போது என்னடி சொல்லிட்டு போன?” அவளை கட்டிலில் சாய்த்தவன் மேலே படுத்துக்கொண்டு காதலோடு கேட்க,

“என்ன சொன்ன?” என்றாள் முறைப்போடு.

“அதான்டி அது”

“எது?” என்றவளை முறைத்தவன், “தெரியாத மாதிரி நடிக்காத லயா” என்றான்.

உடனே அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள, ஈரமான உடலோடு படுத்திருக்கும் மனைவி மீது பார்வை சென்றது. முகம் கழுத்து அருகே இருக்க, அதில் இருக்கும் நீர் துளிகள் ஏக்கமாக அழைத்தது தரணீஸ்வரனை. ஒவ்வொரு நீர்த்துளிக்கும் முத்தம் கொடுக்க நினைத்தவன் கழுத்தில் ஒரு இடம் பாக்கி இல்லாமல் பரிசளித்தான்.

கோபத்தில் இருந்தவள் கூச்சத்தில் அதை தடுக்க, “கிஃப்ட் லயா வாங்கிக்க.” என்று விட்டு தன் வேலைகளை தொடர்ந்தான்.

கழுத்தில் இருந்த நீர் பயந்து இடத்தை காலி செய்ய, மோகம் முழிக்கும் நேரம் தீர்ந்து போன நீரை மனதில் திட்டியவன் வேறு இடத்தை தேடி போனான். காதின் ஓரம் இல்லாத நீரை உருவாக்கினான் எச்சில் கொடுத்து. “என்னங்க” என்று சிணுங்கியவள் ஓசை குறைந்தது கைகள் இரண்டும் தேடலை தொடங்கியதில்.

“விடிஞ்சிருச்சு தரணி” என்றவள் முகத்தை தன் முகத்தருகே திருப்ப, கதிர் வீச்சுக்கள் பார்க்க விடாமல் சதி செய்தாலும் பார்த்தால் என்ன என்று ஆசையோடு இருவரும் பார்த்துக் கொண்டனர்.

நெற்றியில் ஆரம்பித்த முதல் சுற்றில் முத்தம் முகம் முழுவதையும் பலமுறை சுற்றி வந்துவிட, இதழ் தாக்குதலுக்கு தயாரானது உணர்வுகள். தடுத்துக் கொண்டிருந்தவள் தனக்கு ஒத்துழைப்பு தருவதை அறிந்து தன் புறம் திருப்பிக் கொண்டவன் இதழை சிதைத்தான்.

அத்துமீறும் அவன் கைகளுக்கு போட்டியாக இவளும் களத்தில் இறங்க, ஆண் ஆடை களைய ஆரம்பித்தது. பிறப்பெடுக்கும் உணர்வுகளில் மூச்சுக்காற்று பொசுங்கி போக… இருவரின் உடல்களும் இடம் மாறி கொண்டது. ஈர ஆடையோடு உணர்வுகள் பொங்கி எழுந்த ஆடவனின் ஆடையும் சேர்ந்து கொள்ள இருவரின் கைகளும் இணைபிரியாமல் அதை எடுத்து விட துவங்கியது.

தரணியின் ஆற்றல் சற்று வேகம் எடுக்க, திணறியவள் போதும் என்றாள். கேட்கும் மனநிலையில் இல்லாதவன் பேசும் உதட்டிற்கு சிறை தண்டனை கொடுக்க, அந்தக் கோபத்தை காட்டினாள்  தலையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு.

தங்களை சுற்றி நடக்கும் அனைத்தையும் மறந்தவர்கள் வேறொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டு மகிழ்வில் தங்களை மறந்து கொண்டிருக்க, கதவு பட்டென்று திறந்து இருவரையும் திடுக்கிட வைத்தது.

பதறி எழுந்த அகல்யா போர்வையை தன் மீது பொருத்திக்கொள்ள, திடுக்கிட்டவன் யார் வந்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்தான். பார்த்தவுடன் பற்கள் நரநரவென்று கடிக்க தொடங்கியது நிற்கும் ஜீபூம்பாவை கண்டு. அதுவோ எதையும் கண்டுகொள்ளாமல்  மெத்தையில் ஏறி அவன் மீது அமர்ந்துக் கொண்டது.

பயத்தில் முதலில் கவனிக்காத அகல்யா பின் கவனித்து சத்தமாக சிரித்து விட்டாள். அகல்யாவின் சிரிப்பில் ஜீபூம்பாவிற்கும் புன்னகை அரும்ப, மிகவும் பாசமாக தன் சிரிப்பை தரணிக்கு காட்டியது. அவனோ செல்லப் பிராணியை வெறிக்கொண்டு முறைத்திருக்க,

‘இவன் எதுக்கு நம்மள இப்படி பார்க்கிறான்.’ என்று பம்பியது வாயில்லா ஜீவன்.

இருவரின் பாவனைகளும் இன்னும் அவளுக்கு சிரிப்பை கொடுக்க, கட்டுப்படுத்த முடியாமல் போர்வைக்குள் தலையை நுழைத்துக் கொண்டு வயிறு வலிக்க சிரித்தாள். அவள் சிரிக்கிறாள் என்பதை உணர்ந்தவன் கோபம் முழுவதையும் ஜீபூம்பாவிடம் காட்டினான் அதன் கழுத்தை நசுக்கி.

பாசமாக உள்ளே வந்த தன்னை எதற்காக கொலை செய்ய பார்க்கிறான் என்ற திகைப்பில் ஜீபூம்பா அவனிடம் இருந்து போராடிக் கொண்டிருக்க, “கரடி! நாலு கால் கரடி. வேலை வெட்டி இல்லாத பயலே! எதுக்காகடா எங்க ரூமுக்கு வந்த. நானே இப்பதான் ஏதோ கரெக்ட் பண்ண பார்த்தேன்… கெடுத்துட்டியேடா படுபாவி. என் சாபம் உன்ன சும்மா விடாதுடா.” என்று அதைப் போட்டு கடிக்க, சிக்கிக்கொண்ட செல்லப்பிராணி கதறியது.

ஏற்கனவே வயிறு வலிக்க சிரித்துக் கொண்டிருந்தவள் இதையெல்லாம் கேட்டு கட்டுப்படுத்த முடியாமல் எழுந்து விட்டாள். “பாருடா! என் பொண்டாட்டி என்னை பார்த்து சிரிக்கிறா. அவளை கரெக்ட் பண்ண ராத்திரி முழுக்க தூங்காம போராடி இப்பதான்டா ஜெயிச்சேன். அதை கொண்டாட விடாம பண்ணிட்டியேடா படுபாவி. நீ கடைசி வரைக்கும் கன்னி பையனா தான்டா இருப்ப.” என்று கொடூரமாக தாக்க, தன் பல்லே தனக்கு உதவி என்று அவனை பிடித்து கடிக்க ஆரம்பித்தது ஜீபூம்பா.

“ஆஆ… டேய்! அண்ணன்னு கொஞ்சமாது மரியாதை இருக்காடா உனக்கு?” லேசாக கீரிய இடத்தை தடவிக் கொண்டு பாவமாக தரணீஸ்வரன் கேட்க,

“லொள்…லொள்!” என்றது.

“உங்களை பார்க்க பாவமா இல்லையாங்க.” ஜீபூம்பாவிற்கு வாய் இருந்தால் என்ன பதில் சொல்லி இருக்குமோ அதை அகல் சொல்ல,

“புருஷனுக்கு சப்போர்ட் பண்ணுடி.” என்று முறைத்தான் மனைவியை.

“பாரு ஜீபூம்பா உனக்கு சப்போர்ட் பண்றதுக்கு என்னை திட்டுறாங்க.” என்று செல்லப்பிராணி மூலம் பழி தீர்க்க அவள் தூபம் போட, ஏற்கனவே அண்ணன் மீது கோபத்தில் இருந்த தமையன் பாய்ந்து விட்டான்.

இருவரையும் தடுக்கும் நிலையில் அகல்யா இல்லை. சிரித்து வயிறெல்லாம் வலிக்கத் துவங்க சுவற்றில் சாய்ந்துக் கொண்டாள். அவள் சிரிப்பு சத்தத்தில் சண்டையை நிறுத்திய இருவரும் முறைத்துக் கொண்டு பார்க்க, கசங்கிய ஆடையும், கலைந்த தலையும் அவர்களை நகைச்சுவை ஆளாக பார்க்க சரியாக இருந்தது.

“தம்பி அண்ணனை மன்னிச்சிடுடா.” என்று செல்லப்பிராணியை அவன் தடவிக் கொடுத்து சமாதானம் செய்ய, நாக்கை நக்கி அதுவும் உடன்படிக்கை செய்து கொண்டது. இவர்களின் ரகசிய ஒப்பந்தத்தை அறியாதவள் இன்னும் சிரித்துக் கொண்டிருக்க, நாலு கால் ஜீவனும் ரெண்டு கால் ஜீவனும் ஒரே போல் நடந்து வந்தனர் அவளை நோக்கி.

ஜீபூம்பா போல் நடந்து வரும் கணவனின் செய்கையில் இன்னும் அவள் சிரிக்க, பக்கத்தில் வந்த இருவரும் அவளை பழி தீர்த்துக் கொண்டனர் பிராண்டி எடுத்து. இரண்டு நாய்களிடம் சிக்கிக் கொண்டவள் போராடி விடுபட்டாள் முறைத்துக் கொண்டு.

விடியல் நன்றாக விடிந்து சூரியனே வந்து விட்டான். இவ்வளவு முயற்சி செய்தும் முடியாமல் போனதால் தரணி மீண்டும் ஜீபூம்பாவை முறைக்க, கண்டுகொண்டதாக தெரியவில்லை வீட்டின் எஜமான். அவர்கள் அறையில் அகல்யாவோடு விளையாடிக் கொண்டிருந்தது. இருவரையும் பார்த்தவன் ஜீபூம்பா அறியாமல் மனைவியை சீண்ட,

“சும்மா இருங்க.” தடுத்து விட்டுக் கொண்டிருந்தாள்.

ஏதோ தனக்கு இதுவாது கிடைக்கட்டும் என்ற மனநிலையில் அவன் தீண்டல்களை தொடர்ந்து கொண்டிருக்க, “லொள்!” என்று ஓசை கொடுத்து அகல்யாவை காப்பாற்றியது செல்லப்பிராணி.

‘நாசமா போறவனே உன்னை இருடா தண்ணியில்லாத காட்டுக்கு கொண்டு போய் விடுகிறேன்’ என அதை திட்டிக்கொண்டு கம்பெனிக்கு கிளம்பினான்.

விளையாட்டை கைவிட்ட அகல்யா சமைக்க செல்ல, அங்கு ஆதிலட்சுமி ஏற்கனவே அதை தொடர்ந்து கொண்டிருந்தார். அவரோடு சகஜமாக பேசிக்கொண்டு காலை சமையலை முடித்தாள். மகன் மருமகளுக்காக பேசிய போதே இருவரும் மனம் ஒத்து வாழ்கிறார்கள் என்பதை அறிந்து கடவுளுக்கு நன்றி சொன்னவர் சீக்கிரம் நல்ல செய்தி வரவேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.

பல வருடங்கள் கழித்து அந்த வீடு இயல்பு நிலைக்கு திரும்பியது. சாப்பிட வந்து தரணி அன்னையைப் பார்க்க, அவரோ கண்டு கொள்ளாமல் கணவனுக்கு சாப்பாடு எடுத்துச் சென்றார். உடனே அவன் முகம் சுருங்கி விட,

“இதுக்கெல்லாம் வருத்தப்படாதீங்க. அத்தைக்கு உங்க மேல எந்த கோபமும் இல்ல. சும்மா நடிச்சிட்டு இருக்காங்க அப்படி இருக்க மாதிரி.” என்று கணவனை தேற்றினாள்.

“அம்மா பேசாம இருக்குறது என்னவோ மாதிரி இருக்கு லயா.” மிகவும் தீவிரமாக அவன் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, கணவனின் காதோரம் இதழை கொண்டு சென்றவள்,

“ஒரு பிள்ளை பிறந்தா எல்லாம் சரியாகிடுங்க. மேல போலாமா…” என்று கண்ணடித்தாள்.

உடனே அவன் மனநிலை மாறிவிட்டது. கண்ணில் பல இதய வடிவ பலூன்கள் பறக்க, “லயா!” என விரிந்த கண்ணோடு எழுந்து நின்றான்.

அவனை உசுப்பேத்தி விடும்படி மீண்டும் அவள் கண்ணடிக்க, “இன்னைக்கு ஃபுல் டே அந்த வேலை மட்டும் தான்.” என்றவன் ஆசையாக அவளை கட்டி பிடிக்க, கால் சட்டையை பிடித்து இழுத்தான் ஜீபூம்பா.

“இவன….” என அவன் மீண்டும் முறைத்துக் கொண்டே அதனிடம் மல்லுக்கு நிற்க, “விளங்கிடும்” என்று நொந்து கொண்டு அந்த இடத்தை காலி செய்தாள் அகல்யா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
65
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *