Loading

அத்தியாயம்  18 ❤

மஹிமா ” ஹை… ! ஜாலி.. ! தாத்தாவும் இங்க வந்தா சூப்பரா இருக்கும் “. 

பாட்டியுடன் கதையளந்து கொண்டு இருந்தாள்.

சமையலை முடித்து விட்டு வெளியில் வந்த சுவர்ணலதா ,
” அம்மா சாப்பாடு ரெடி.பாட்டியும் , பேத்தியும் வந்து சாப்பிட்டுட்டு அப்பறம் உங்க கதையை கன்டினியூ பண்ணுங்க “

சந்திரா ” வாம்மா மஹி சாப்பிடலாம்  “

மஹிமா பாட்டியின் மடியில் இருந்து எழுந்து டைனிங் டேபிளை நோக்கி நடந்தாள்.

சந்திரா அவளைப் பின் தொடர்ந்து வந்து தனக்கான இருக்கையில் அமர்ந்தார்.

அங்கு தனது அம்மாவிற்காக சாதம், சாம்பார்,அப்பளம் , அவரைக்காய் பொரியல்… உருளைக்கிழங்கு மசியல் ,ரசம் , தயிர். அதற்குத் தொட்டுக் கொள்ள ஊறுகாய் என தாய்க்குப் பிடித்த உணவை சமைத்திருந்தார்.

அதைப் பார்த்துப் பூரித்துப் போன சந்திரா
” அம்மாடி  சுவர்ணா  ! எனக்குப் பிடிச்ச சாப்பாடு எல்லாம் இப்பவும் ஞாபகம் வச்சு பாத்துப் பாத்து சமைச்சு இருக்க ”  மகளிடம் பெருமையாக  கூறினார்.

சுவர்ணலதா ” அதெல்லாம் எப்படிம்மா ? எனக்கு மறந்து போகும் ”
அவருக்குப் பரிமாற ஆரம்பித்தார்.

மஹிமா சாப்பிடாமல் தட்டையே வெறித்துக் கொண்டிருக்க,

சுவர்ணலதா ” மஹி என்ன சாப்பிடாமல் தட்டையேப் பாத்துட்டு இருக்க  ? “

மஹிமா  ” ஒன்னும் இல்லம்மா “
சாப்பிட ஆரம்பித்தாள்.

சந்திரா ” மஹிம்மா… ! இருடா நான் உனக்கு சாப்பாடு ஊட்டி விட்றேன் “
அவளுக்கு  ஊட்டி விட ஆரம்பித்தார்.

அதை பூரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தார் சுவர்ணலதா.

கண்களில் இருந்து வந்த கண்ணீரை அவர்களுக்கு தெரியாமல் சேலைத் துடைத்து விட்டுக் கொண்டு தண்ணீரை டம்ளரில் ஊற்றினார்.

சந்திரா ” அம்மாடி சுவர்ணா வாடா.. ! உனக்கும் சாப்பாடு ஊட்டி விட்டு ரொம்ப வருஷம் ஆச்சுல்ல  ”  அவரையும் அழைக்க ,

சுவர்ணா மகிழ்ச்சியுடன் தலையசைத்து விட்டு அவரது அருகில் சென்று வாயைத் திறக்க சந்திரா தன் மகளுக்கும் சாதம் ஊட்டி விட்டார்.

சுவர்ணாவின் கண்களில் கண்ணீர் வழிந்தோட  அதை துடைத்து விட்டுக் கொண்டே இருவருக்கும் உணவூட்டி மகிழ்ந்தார் சந்திரா.

தனது அறையில் பெட்டில் ஒய்யாரமாய் படுத்துக் கொண்டு மொபைலில் மும்முரமாக பப்ஜி விளையாடிக் கொண்டு இருந்தான் கார்த்திக்.
திடீரென்று வந்த அழைப்பால் கடுப்பானான்.

‘ யார்டா அது  ! இன்ட்ரஸ்ட் ஆக கேம் விளையாடும் போது கால் பண்றது  ! ‘

சிடுசிடுப்புடன் நம்பரைப் பார்க்க சிவரஞ்சனி எனத் தெரிந்ததும் அட்டெண்ட் செய்தான்.

கார்த்திக் ” ஹலோ.. ! என்ன அதிசயமா கால் – லாம் பண்ற? ”
என்று நக்கலாக கேட்க,

சிவரஞ்சனி ” இன்னைக்கு நீ ஏன் காலேஜூக்கு வரல  ? மஹிமாவும் வரல  ? நான் மட்டும் தனியா க்ளாஸ்ல இருந்தேன்  “

என்று பொரிந்து தள்ள,

அவளது புலம்பல்களில் மஹிமா கல்லூரி வராத விஷயம் மட்டுமே அவனுக்கு தெளிவாகப் புரிய,

” மஹிமாவும் காலேஜூக்கு வரலயா  ?அவளுக்கு என்னாச்சு  ? ”
என்று வினவினான்.

இப்போது சிவரஞ்சனி நக்கலாக,
”  சார் அவளுக்காக அக்கறைலாம் பட்றாரே. நீ அவளை லவ் பண்றா மாதிரி நடிக்க தான் போற. அது ஞாபகம் இருக்கட்டும் “

கார்த்திக்  ” அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு.அவளைப் பாத்தாலே ரொம்ப இன்னசென்ட் – னு தெரியுது. அவளை ஏன் சேலஞ்ச் – குள்ள இழுத்து விட்ட  ? இதுல உனக்கு என்ன லாபம்  ? ”
அவளது குறிக்கோளை தெரிந்து கொள்வதற்காக கேட்டான்.

சிவரஞ்சனி ” அவ என்ன ஸ்கூல்ல படிக்கும் போது ஓவரா டார்ச்சர் பண்ணிட்டா. அதுக்குப் பழி வாங்க வேணாமா  ? அதான்  “

கார்த்திக் ” ஓஹோ… !
இதான் விஷயமா  “

சிவரஞ்சனி ” ஆமா. அவளைப் பாத்து ரொம்ப பயந்த பொண்ணுன்னு எல்லாம் நினைச்சுடாத.சரியான திமிர்புடிச்சவ. நீ சீக்கிரம் அவளை உன்ன லவ் பண்ண வைக்குற “

கார்த்திக் ” ஓகே. பப்ஜி விளையாடும் போது டிஸ்டர்ப் பண்ணாத. கட் பண்ணு “

அழைப்பைத் துண்டித்து விட்டு மீண்டும் விளையாடத் தொடங்கினான்.

‘ மஹிமாவை  லவ் பண்றா மாதிரி மட்டும் தான் நீ நடிக்கனும் கார்த்திக்.ஏன்னா நீ என்ன மட்டும் தான் உண்மையா லவ் பண்ணணும்.இதுல எதாவது தப்பு  நடந்துச்சு.என்னோட ஒரிஜினல் கேரக்டரைப் பாக்க வேண்டி வரும் ‘

கார்த்திக்கிடம் பேசுவது போல்  தனக்குள்ளேயேக் கூறிக் கொண்டு இருந்தாள்.

இவர்களது இந்த சதி வேலைகள் எதுவும் அறியாமல் மஹிமா சந்தோஷமாக  தனது பாட்டியின் கையால் உணவுண்கிறாள்.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்