Loading

அத்தியாயம் 18

“குட் ஈவினிங் சார்”

 

“வாங்க மேடம்”

 

“ஹான்!! சொல்லுங்க சார். என்ன சார் விசியம் எதும் சீக்ரட்டா??” கிளுக்கி சிரித்தாள் தேவகி.

 

” உன்னோட நேஷனல் பிராக்டிஸ் எப்படி போயிட்டு இருக்கு அண்ட் இன்னும் ஒன் மாசத்துல செமஸ்டர் வரப்போகுது படிப்புலாம் எப்படி இருக்குனு கேக்குறதுக்கு தான் கூப்பிட்டேன்.”

 

” அவ்வளவுதானா!! ஏன் சார் இதை நீங்க எல்லாருக்கும் முன்னாடியே கேட்கலாமே? நீங்க எல்லாரும் கெளம்புனதுக்கு அப்புறம் தனியா பேசணும் ன்னு சொல்லவும் நான் பலபல கற்பனையோட லாஸ்ட் ஹவர் ஃபுல்லா ஓட்டினேன்.”

 

“தேவி!! என்ன பாரு என்ன வேணும் உனக்கு என்கிட்ட இருந்து? சில லவ்வர்ஸ் போல உன்னை கட்டி பிடிக்கணுமா?? முத்தம் கொடுக்கணும்மா? இல்ல கல்யாணத்துக்கு முன்னாடியே எங்கேயாவது கூட்டிட்டு போயி பெத்தவங்கள மறந்து உன்னோட படிப்ப மறக்கவச்சு வேற எதாவது பண்ணனுமா??”

 

அவ்வளவு நேரம் விளையாட்டு தனமாக மரத்தின் கீழே இருந்த கல்பெஞ்சில் காலை தொங்க போட்டு ஆட்டிக் கொண்டும் காலால் மணலை எத்தி விளையாடிக் கொண்டிருந்தவள் சூர்யாவின் கேள்வியில் அதிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.

 

“ஏன் சார்!! இப்படி எல்லாம் பேசுறீங்க?”

 

” பாத்தியா இதுதான் என்னோட தேவி. இந்த பேச்சு அதிகப்படியா தோணுதுல??  இது தான் சமயம்னு நீயும் என்னோட இளஞ்சு, குலையாம என்னோட சின்ன வார்த்தை மாற்றத்தை கூட சரியா புரிஞ்சு என்னாச்சுன்னு கேள்வி கேக்குற பாத்தியா?? உனக்கு நான் கேட்கணும் டி. என் பிரவுனி க்கு என்ன ஆச்சு?? உன் மனசுல என்ன குழப்பம் இருக்கு. ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்குற?”

 

” நான் என்ன வித்தியாசமா நடந்துக்கிறேன். நல்லா தானே இருக்கேன்.” வார்த்தைகள் தந்தி அடித்தன.

 

” அத என் கண்ண பாத்து சொல்லு தேவி!! ஏன் என் கண்ண பார்த்து பேச மாட்டேங்குற? உன் கண் சிவப்ப நான் கண்டுபுடிச்சிடுவேனா??”

 

“அது…. ஒன்னுல.”

 

” தேவி உன்னோட இயல்பான நியாயமான ஆசைக்கு மதிப்பு குடுத்து தான் ராத்திரி உன்கூட பேசிட்டு தூங்க போறேன். ஆனா நீ பேசிட்டு போன் வச்சதும் தூங்குறதே இல்ல. என்னையே நினைச்சு உட்கார்ந்துட்டு இருக்க அதனாலதான் உன் கண்ணு சிவந்து போகுது சரியா? என்னையே நினைக்கிறேங்கறது எனக்கு புரியுது ஆனா என்னையே நினைச்சுட்டு இருந்தாலும் ஒரு கட்டத்துல அசந்து தூங்க தான் செய்வ. ஆனா நீ வேற என்னவோ யோசிச்சு பயந்து இருக்கன்னு எனக்கு நல்லாவே தெரியுது. “

 

“சார்ர்ர்?” மனதை படித்து கூறுபவனிடம் என்ன சொல்வது என்று இவளுக்கு புரியவில்லை.

 

” இப்ப சொல்லு உன் படிப்பு எப்படி போயிட்டு இருக்கு? “

 

” இல்ல கண்டிப்பா உங்க சப்ஜெக்ட்ல நான் பாஸ் ஆகிடுவேன். எல்லாரையும் பாஸ் ஆகணும்னு கூட நான் சொல்லி வச்சிருக்கேன். உங்களுக்கு எந்த கெட்ட பேரும் வராது சூர்யா சார்.”

 

“ஓ!! எனக்கு மத்த பிள்ளைகளை பத்தி கவலை இல்லை. ஒரு வாத்தியாரா எனக்கு எல்லா பிள்ளைங்களும் முக்கியம்தான். ஆனால் இப்போ நான் இங்கே பேசிட்டு இருக்கிறது என் தேவியோட சூர்யாவா மட்டும் தான். எனக்கு என் தேவி ரொம்ப முக்கியம். நீ சொல்லு நீ என் சப்ஜெக்ட்ல பாஸ் ஆயிடுவங்குறது எனக்கு நல்லா தெரியும். மற்ற பாடத்தில்???”

 

” ஏன் இப்போ முறைச்சி முறைச்சு பேசுறீங்க. எனக்கு என்னமோ போல இருக்குது மனசெல்லாம் பிசையுது உங்களுக்கென்ன நான் எல்லா பாடத்துலயும் பாஸ் ஆகணும் அவ்வளவுதானே? அட்லீஸ்ட் ஜஸ்ட் பாஸ் மார்க்காவது எடுத்து பாஸ் ஆகிடறேன். இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிட்டு பேசாதீங்க எனக்கு என்னமோ போல பயமா இருக்கு!!.”

 

“என்ன பயம் அதையும் நீங்களே சொல்லிடுங்க மேடம்?”

 

” இல்ல அது.. அது வந்து என்ன பிடிக்காம… என்னை விட்டுட்டு போயிடுவீங்களோனு பயமா இருக்கு!.”

 

” உனக்கு என்ன வயசு தேவி? எனக்கு என்ன வயசு சொல்லு?”

 

“எனக்கு பத்தொன்பது, உங்களுக்கு முப்பது ன்னு கேள்விப்பட்டேன். ஆனா நீங்க பார்க்க முப்பது வயசு மாதிரியே இல்ல சூர்யா சார். இருபத்தி அஞ்சு வயசு கூட சொல்ல முடியாது அவ்ளோ யங்கா இருக்கீங்க.”

 

” ஏண்டி நான் என்ன பேசிக்கிட்டு இருக்கேன்? இப்ப இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியமா? இங்க பாரு நீ சொன்ன மாதிரியே எனக்கு முப்பது வயசுதான். லவ் பண்ணி விட்டுட்டு போயி அடுத்த ஒரு பொண்ணு லவ் பண்ணி அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்ல. நான் அப்படிப்பட்ட ஆளும் இல்ல. எனக்கு ஒரே ஒரு லவ் அது நீ மட்டும் தான். அந்த நம்பிக்கை உனக்கு இல்லனா நம்ம பேசிக்கிறதுல அர்த்தமே இல்ல தேவி.”

 

“அய்யோ சார்!! இல்ல அப்படி இல்ல. எல்லாம் இந்த மீனாதான்.”

 

” ஏன் என்ன சொன்னா அவ உனக்கு?”

 

” உங்களுக்கு கல்யாண வயசு வந்துருச்சாம். நேஷனல் டீம் சார்பாக ஃபுட்பால் விளையாட  அஸாம் க்கு ட்ரைனிங் போகணும். ட்ரெயின் முடிச்சுட்டு, அங்கேயேதான் இந்தியா சார்பாக விளையாட போறோம். நேஷனல் டீம்ல ஜெயிக்குறவங்களுக்கு கோச்சர் ஜாப் உறுதி. ஒரு சிக்ஸ் மன்த் அசாம்ல தான் ட்ரெயின் போடுவாங்கலாம் ஜூனியர் கோச்சரா போடுவாங்க. அந்த சிக்ஸ் மன்த்ஸ் சர்டிபிகேட் வாங்கினதுக்கு அப்புறம் தான் நம்ம எந்த ஊரு, எந்த நாடு ஆசைப்படுறோமோ அங்க நம்மல கோச்சுரா அப்பாயின்மென்ட் பண்ணுவாங்க. இதுதான் ரூல்ஸ் இது எனக்கு தெரியும். இத நான் மீனா கிட்ட ஷேர் பண்ணிட்டு இருக்கும்போது ‘இப்படி நீ இவ்வளவு நாள் கழிச்சு வந்தீன்னா அதுக்குள்ள சூர்யா சார் யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு உனக்கு டாட்டா பை சொல்லிடுவாரு’ அப்படின்னு சொல்லி என்னைய ரொம்ப கன்ஃபியூஸ் பண்றா சார். அதான் உங்ககிட்ட கூட இதை நான் சொல்லல.

 

“ஓ அப்ப மேடம் என்ன பண்ணிலாம் ன்னு இருக்கீங்க?? நம்ம காலேஜ்லையே ஒழுங்கா விளையாடலனா இவங்க நேஷனல் டீம்கே கூட்டிட்டு போக மாட்டாங்க. அப்படியே நேஷனல் டீம் க்கு போனாலும் நம்ம இந்தியாவை கேவலமா தோக்கடிச்சு காலேஜுக்கும், நம்மள நம்பி கூட்டிட்டு போன அத்தனை பேர் மூஞ்சிலையும் கரிய பூசிட்டு அப்பாவியா வந்து லவ் பண்ணி மேரேஜ் பண்ணி செட்டில் ஆயிடலாம்னு இருக்கீங்க ரைட்?!?”

 

” சார் நான் யாரையும் நோகடிக்கனும், கரிய பூசணும் நினைக்கல சார். நான் என் லைஃபை பார்த்துக்கணும் நெனச்சேன். அந்த மீனு வேற சும்மா இல்லாம நீ போயிட்ட அப்படின்னா சூர்யா சார் ரொம்ப பீலிங்கா இருப்பாரு. அவருக்கு ஆறுதல் சொல்ற மாதிரி நான் போய் பேசி எப்படியும் நான் கரெக்ட் பண்ணிடுவேன் அப்படின்னு வேற வம்பு இழுத்துட்டு இருக்கா.”

 

அவ்வளவு நேரம் தேவகி பேசுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த சூர்யா இந்த கூற்றில் ஓங்கி விட்டான் ஒரு அறை தேவகியை.

 

“என்னடி நினைச்சுட்டு இருக்க நீனு. நானும் சின்ன பிள்ளைன்னு நீ இழுத்த இழுப்புக்கு எல்லாம் வந்துட்டு இருந்தா இவ்ளோ அசிங்கமா இவ்வளவு தப்பாதான் என்னைய பத்தி யோசிச்சு வச்சிருக்கியா?? அப்புறம் நீ என்னை லவ் பண்றேன்னு சொல்றதுல என்ன அர்த்தம் இருக்கு?? ஆக்சுவலா மத்தவங்கள எல்லாம் நான் தப்பு சொல்ல கூடாது டி. நீ மொதல்ல அட்ராக்ஷன்ல தான் என்னை லவ் பண்ற போல. உண்மையா  லவ் பண்ற யாரும் இப்படி எல்லாம் சந்தேகப்பட மாட்டாங்கடி.”

 

“சூர்யா சார்”

 

அறை வாங்கிய கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கண்ணெல்லாம் கண்ணீர் ததும்ப பாவமாக சூர்யாவையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் தேவகி.

 

“என் பேர சொல்லாதடி. உனக்கு என் மேல வந்தது உண்மையான லவ்வே கிடையாது. காலேஜ்ல எல்லா பொண்ணுங்களும் இவன் பின்னாடி சுத்துறாங்க. இவன் நமக்கு கிடைச்சா லக் அப்படின்னு சும்மா ட்ரை பண்ணிருக்க. உன்னைய நம்பி நான் தான் ஏமாந்து இருக்கேன். அப்படி தான் சொல்லணும். நீ தான் என்னை ஏமாத்திட்ட எந்த பொண்ணு கிட்டயும் விழுகாத நானே உன்னை லவ் பண்ணி இதோ இவ்ளோ பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டு இருக்கேன். என்ன நெனச்சிட்டு இருக்க நீ??என்னைய பத்தி தப்பா பேசவோ, என்னை இன்னொருத்தரோட சேர்த்து வச்சு பேசுவோ உனக்கு என்னடி உரிமையா இருக்கு? ஏன் கற்பு ஒழுக்கம் மானம் எல்லாம் பொண்ணுங்களுக்கு மட்டும் தான் இருக்கணுமா?? ஆம்பளைக்கு இருக்க கூடாதா?? ஸ்சல், காலேஜ், ஜாப் ன்னு கோயர்ட்ல ஆரம்பிச்ச என்னோட லைஃப் இப்ப வரைக்கும் ஆண்கள் பெண்கள் சேர்ந்து இருக்கிற இடமா தான் போயிட்டு இருக்கு. எந்த பொண்ணையும் ஒரு நிமிசம் நிமிர்ந்து பார்த்திருப்பேனா? இல்ல தப்பா தான் பேசி இருப்பேனா? என் கிரகம் உன்கிட்ட தான் என் மனசு தடுமாருச்சு. அதனால தான் இப்போ உன்கிட்ட வந்து பேசிட்டு நிக்குறேன்.”

 

“இல்ல சார் அவ தான்.”

 

” யார் சொன்னா என்னடி?? இப்ப நான் மீனாவ தப்பாவே சொல்ல மாட்டேன். அவளுக்கு பொறாமை கோபம் என்ன வேணாலும் இருக்கலாம். என்னைய லவ் பண்ற உனக்கு தானே என்னய பத்தி தெரியணும். நீ எந்த பையன் கூடயாவது பேசும்போது எனக்கு தப்பா தோணாது. கண்டிப்பா நீ நெருப்புன்னு எனக்கு தெரியும் உன் பக்கத்துல ஒருத்தரையும் வரவிடமாட்டேங்குறது எனக்கு தெரியும். நீ அஸ்ஸாம் க்கு போகணும் என்கிற விஷயம் எனக்கு இப்பதான் தெரியும். அப்படியே இருந்தாலும் நான் உன்னை நம்பி அனுப்புவேன். உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா அஸ்ஸாம் க்கு வந்து உன் கூட காவ காக்கிற வரைக்கும் என்னால முடியும். ஏன்னா நான் உன்ன உண்மையா லவ் பண்றேன் உன்னோட வெற்றி, தோல்வில எனக்கும் பங்கு இருக்குன்னு நினைக்கிறேன். இந்த நாட்டுக்காக நீ விளையாட போறதுக்கு நான் ரொம்ப சந்தோஷப்பட்றேன், பெருமைப்படுகிறேன். ஆனா உனக்கு அத பத்தி எதுவும் கவலை இல்லை. அவ சொன்னாலாம் இவளும் கேட்டாலாம்.

 

தன்னுடைய கைப்பேசியை எடுத்தவன் தேவகியை பார்த்துக்கொண்டே அவன் அம்மாவிற்கு அழைப்பு விடுத்து லவுட் ஸ்பீக்கரில் போட்டான்.

 

“சொல்லு சூர்யா.”

 

” இல்லம்மா நான் தேவகிய லவ் பண்றேன்னு உங்க கிட்ட சொல்லியிருந்தேனே ம்மா. “

 

” ஆமாண்டா அது தான் நான் உன் விருப்பம் ன்னு சொல்லிட்டேன்ல. ஆனா எனக்கு அந்த பொண்ணு குடும்பத்தோட சம்மதம் வேணும் அவ்வளவுதான். எனக்கும் அந்த பொண்ண புடிச்சு தான் இருக்கு. போட்டோ கூட காட்டுனியே. அழகான பொண்ணு டா. டெய்லி அவள பத்தி பேசியே என் காதுல ரத்தம் வர வைப்பியே. அவ முதல்ல காலேஜ் முடிக்கட்டும் சூர்யா. அவ ஏதோ ஃபுட்பால் நேஷனல் டீம்ல விளையாட போரான்னு வந்து குதிச்சியே. நம்ம குலதெய்வம் கோயில்ல கூட ஸ்பெஷல் பூஜை ரெடி பண்ணிருக்கேன்டா. அவ நல்லா முன்னேறட்டும் வாழ்க்கையில ஜெயிக்கட்டும் அதுக்கப்புறம் கல்யாணம் குழந்தை எல்லாம் பத்தி யோசிக்கலாம். அதுக்கு முன்ன அவ மனச எதும் கலைக்காதடா.”

 

” இல்ல இல்லம்மா சும்மா தான் கேட்க போன் பண்ணேன். சரி நீங்க சாப்டீங்களா? “

 

” சாப்பிட்டேன் சூர்யா. நீ இன்னும் வரலையே கேன்டீன்ல ஏதாவது சாப்பிட்டியா ஸ்பெஷல் கிளாஸ் எதுவும் இருக்கா?”

 

” இதோ நான் உங்க மருமக கூட தான் நின்னு பேசிட்டு இருக்கேன். அவளுக்கு சாப்பாடு வாங்கிகுடுக்க வந்தேன். அவளுக்கு ப்ராக்டீஸ் இருக்கு அதனால இங்கயே சாப்பிட்டு விளையாடுவா.”

 

” என்ன பழக்கம் சூர்யா இது படிக்கிற பிள்ளை கிட்ட காலேஜ்ல உக்காந்து பேசிட்டு இருக்கிறது.  அப்புறம் உங்களை பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? அவ பேரு என்னாகுறது சீக்கிரம் சாப்பாடு வாங்கி குடுத்துட்டு கிளம்பி வா டா. “

 

” சரி சரி மா. இதோ கிளம்பிட்டேன்.”

 

என்று அழைப்பை துண்டித்தவன் தேவகியை முறைத்து பார்த்துக் கொண்டு நின்றான்.

 

சூரியன் ஒளிரும்

ரித்தி 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Super akka ❤️❤️ பாவம் இருந்தாலும் அவன் அவள அடிச்சி இருக்க கூடாது 🤧🤧

      1. Author

        😂😂 ஆஹான் 😍😍