184 views

அத்தியாயம் 17 

 

பல விதமான சங்கடங்கள் ஏற்பட்டாலும், சில குடும்பங்களில் உறுப்பினர்கள் அனைவரும் எப்போதும் ஒற்றுமையாகவே இருப்பர். அதேபோல் தான், இளந்தளிரின் குடும்பமும். 

 

சுபாஷினி செய்த தவறு , மன்னிக்கப்பட்டு விட்டதால், மறந்தும் விடுவர்.இனி வரும் எதிர்காலத்திலும் அதைச் சொல்லிக் குத்திக் காட்டுவது என்பது அவர்களைப் பொறுத்த வரையில் என்றுமே நிகழாத, நிகழக் கூடாத ஒன்று. 

 

இளந்தளிர்  தோழி மிதுனாவின் இரண்டு நாட்கள் விடுப்பின் போது, மிகவும் அவசியமான நேரங்களில் மட்டுமே அலைபேசியில் தொடர்பு கொண்டு , சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொண்டாள். 

 

விடுமுறை முடிந்து, மிதுனாவும் வழக்கம் போல, அலுவலகம் வந்து விட, இளந்தளிருக்கு அதுவுமே நல்ல மனநிலையைக் கொடுத்தது.  

 

🌺🌺🌺🌺🌺🌺🌺

 

இடையிலான நாட்களில், கோவர்த்தனனும் கல்யாணத்திற்கு விருப்பம் தெரிவித்திருந்தான். 

 

” ஹரீஷ் கிட்ட சொல்லிட்டியா? இதைக் கேட்டு அவனுக்கும் ரோகினி பொண்ணுப் பாக்க ஆரம்பிச்சுடுவாங்கள்ல? ” 

சிரித்துக் கொண்டே சொல்ல, 

 

” ஹா ஹா..! அவன் கிட்ட இன்னும் சொல்லல ம்மா. சொல்லிட்டா போதும் அவங்க கண்டிப்பாக ஹரீஷுக்குப் பொண்ணுத் தேட ஆரம்பிச்சுடுவாங்க ” தானும் சேர்ந்து சிரித்தான். 

 

சுமதியும் மகன் கூறியதைக் கேட்டதும், ‘ரோகினியிடம் பேசி அவரையும் பெண் பார்க்கும் நிகழ்வின் போது, அழைத்துச் செல்லலாம், தனக்கும் துணையாக வருவார் ‘ என்று நினைத்தார். 

 

” ரோகினி பொண்ணுப் பாக்கக் கூட வந்தா ஒத்தாசையா இருக்கும் கோவர்த்தனா! நீ ஹரீஷ் கிட்ட விஷயத்தைச் சொல்லி வையி.நானும் ரோகினி கிட்ட கால் பண்ணி கேட்டுப் பாக்குறேன் “

என்று அவனை அலுவலகம் அனுப்பி வைத்து விட்டு, ஹரீஷின் அம்மாவுக்குக் கால் செய்தார். 

 

ஹரீஷிடம் தெரிவித்தான் கோவர்த்தனன், 

” உங்க வீட்லயும் உனக்குப் பொண்ணுப் பார்க்க ஸ்டார்ட் பண்ணிடுவாங்க டா ஹரீஷா! ” 

 

” அது சரி!  நீயும், அம்மாவும் நல்லது செஞ்சிட்டீங்க! நீ என்ன ப்ளான் – ல சுத்திட்டு இருக்க? தளிர் – ன்ற நிக் நேம் – லாம் கண்ணு முன்னாடி வந்து போகலயா? “

 

” வந்து போகுது தான் டா. என்னப் பண்ண சொல்ற? அன்னைக்கே மறக்க முயற்சி பண்றேன்னு சொல்லிட்டேனே! அதுக்கும் மேல, நான் பண்ணின உதவிக்கு, கிரெடிட்டோ , கைம்மாறோ கேக்குறா மாதிரி இருக்குமே! அவங்க அவாய்ட் செய்துட்டுப் போனதையும் ,

தியேட்டர்ல நடந்ததையும்

 பாத்த தான ? “

 

” ம்ம்..! ஆமா நண்பா. நீ இந்தப் பொண்ணோட  ஃபோட்டோ பாத்தியா?”

 

” இல்லை. பொண்ணுப் பார்க்கப் போற அன்னைக்குப் பாக்கனும் “

 

ஹரீஷ், ” பை சான்ஸ். அந்தப் பொண்ணுக்கும், உனக்கும் சம்மதம் இல்லன்னா என்னப் பண்ணுவ ? ” 

 

” இந்த ஒரு சம்பந்தமே அமைஞ்சிடாதே ” என்று கோவர்த்தனன் சொல்ல, 

 

” அப்போ ஓகே! ” 

 

ரோகினியிடம் கோவர்த்தனனின் அம்மா பொதுவாக நலம் விசாரித்து விட்டு, தகவலைச் சொல்லி கேட்க, 

அவரும், 

” போகலாம் க்கா. எந்த தேதியில் பொண்ணு வீட்டுக்குப் போகப் போறோம்? ” 

 

என்று விசாரிக்க, 

 

” பேசிட்டு சொல்றேன் ரோகினி. நன்றி ம்மா ” 

 

” இருக்கட்டும் க்கா.நாள் தெரிஞ்சதும் தகவல்  சொல்லுங்க ” என்று  நம்பிக்கை அளித்துப் பேசினார். 

 

🌺🌺🌺🌺🌺🌺

 

” உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லி சாரி – யும் கேக்கனும் க்கா? ” 

சுபாஷினி ஆரம்பித்த போதே, 

 

” அன்னைக்கு ஹாஸ்பிடல் – ல உங்களோட பேரை சொல்லி, இன்ட்ரொடியூஸ் பண்ணிட்டேனே! அதை எதுல சேர்க்குறது க்கா? எனக்கே ரொம்ப ரொம்ப கில்ட்டியா இருக்கு!  அம்மாவும், நீங்களுமே எவ்ளோ கான்ஷியஸ் ஆக இருக்கீங்க. எனக்கு ஏன் க்கா இதெல்லாம் சமயம் பார்த்து, மறந்து போகுது. ” 

 

மீண்டும் மீண்டும் தன்னைக் குற்றம் சொல்லிக் கொள்பவளைக் கண்டு இரக்கம் கொண்டாள் அக்கா. 

 

” இதை நானும் உன்ட்ட சொல்லனும் – னு இருந்தேன் சுபா! “

 

” அன்னைக்கு ஒருநாள் வேலை முடிஞ்சு  ஈவ்னிங் வீட்டுக்குள்ள நுழைஞ்சதும்  என்னை முறைச்சுட்டு, பேசாம போனியே அதுக்கு இதான் ரீசனா – க்கா? ” நீர் நிறைந்த நயனங்களுடன் கேட்டவளிடம், 

 

இளந்தளிர், ” யெஸ்” 

 

‘ தன்னால் ஒவ்வொரு தடவையும் நேர்ந்து கொண்டிருக்கும் அனர்த்தங்களின் அளவு கூடிக்கொண்டே இருப்பதால் , பாவம் அதைத் தாங்க இயலாது, அவளது மனம் முழுவதிலும் தகிக்க ஆரம்பித்து விட்டது. 

 

” அழுதுடாத சுபா!  அம்மாவும், நானும் சொன்ன அட்வைஸ் எல்லாம் போதுமான அளவுக்கு உன்னோட மூளைல இருக்கு. இதுக்குத் தனியா எதையும் நான் சொல்ல மாட்டேன். எல்லாமே அனுபவங்கள் தான்! ” 

 

இதற்கு மேல் அவளும் தான் சமாதானம் செய்தே ஓய்ந்து விட்டாள். 

 

சுபாஷினி தமக்கைக்கு ‘ இனி இந்த நிகழ்வு பற்றி மூச்சு விட மாட்டேன் ‘ என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டாள். 

 

அந்தளவிற்கு மன்னிப்பு கேட்டே இளந்தளிரை சோர்ந்து போகச் செய்து விட்டாள் சின்னவள். 

 

சுபாஷினி முகத்தைக் கழுவுவதற்காக அறையிலிருந்து வெளியேறும் போது, சிவசங்கரி உள்ளே நுழைந்தார். 

 

அவரைப் பார்த்ததும், 

” முகம் கழுவிட்டு வர்றேன் மா ” என்று சொல்லி விட்டுப் போனாள். 

 

உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தவர் , 

”  இந்தா மாப்பிள்ளையோட ஃபோட்டோ! பாத்துடு. கூடிய சீக்கிரம் பொண்ணுப் பாக்க வந்துடுவாங்க ” அறிவிப்பைக் கொடுத்து விட்டுச் செல்ல, 

 

அவள் செல்பேசியின் திரையில் ஒளிர்ந்த அந்த ஆணின் புகைப்படத்தைப் பார்த்ததும், 

” என்னது! இவரா ! ” 

 

 அந்நேரத்தில், சுபாஷினி இவளது முகத்தில் தோன்றிய திடுக்கிடலைக் கண்ணுற்று, அவளும் செல்பேசியைப் பார்த்தாள். 

 

” கோவர்த்தனன் சார்! ” 

 

அக்காவைப் பார்த்திட,  இளந்தளிரோ, 

‘ நம்முடைய ஃபோட்டோவைப் பார்த்ததும், அவன் என்ன ஃபீல் பண்ணி இருப்பான்? ‘

 

இந்த சிந்தனை தான் அவளுள் சுழன்று கொண்டு இருந்தது. 

 

‘என்னைப் போலவே தான் திகைப்பானா? அல்லது அவனுக்கு முன்பே தெரிந்து இருக்குமோ? ‘ 

 

” அக்கா… ! ” காதுக்குள் கிசுகிசுத்தாள் தங்கை. 

 

” ஆங்..! ” பதில் வந்து விட, 

 

” கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் இவரைப் பத்திப் பேசினோம்.  இவரே உன்னைப் பொண்ணுப் பாக்க வரப் போறாரே! “

அவளை உலுக்கிட, 

 

இளந்தளிர் ,

” எனக்குமே இதை நம்ப முடியல . வரட்டும் பாத்துக்குவோம் “

 

” ஃபோட்டோவைப் பாத்தாச்சா இளா? ஃபோனைக் குடு. நல்ல நாளாப் பார்த்து வரச் சொல்லனும் “

 

” பாத்தாச்சு ம்மா. இந்தாங்க “

 

அவர் அதை வாங்கிக் கொண்டு அகன்று விட, 

 

‘ இதெப்படி நடக்கும்? ‘ 

 

‘ இவர்களின் பெண் பார்க்கும் படலத்தில் நடக்கவிருப்பது என்னவாக இருக்கும்? ‘

 

🌺🌺🌺🌺🌺🌺

 

” கோவர்த்தனா பொண்ணு பேரு இளந்தளிர். நீ இன்னும் ஃபோட்டோ பாக்கலைல? ” சுமதி கேட்க, 

 

” இளந்தளிரா! அம்மா ஃபோட்டோ குடுங்க ” கேட்டு வாங்கிப் பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தவன், 

 

” தளிர்! ” மெல்லியதாக, ரசனையாக அவளுக்குத் தான் வைத்தச் செல்லப் பெயரை முணுமுணுக்க, 

 

” என்ன கோவர்த்தனா ? ” 

 

“அம்மா இவங்க என் ஃபோட்டோவைப் பார்த்து ஓகே சொல்லிட்டாங்களா? “

 

தன்னுடைய புகைப்படத்தைப் பார்த்து விட்டாளா ? என்பதை தெரிந்து கொள்ளத் தான் எத்தனை ஆர்வம் இவனுக்கு. 

 

சுமதி, ” பொண்ணுக்கும் விருப்பம் தான் கோவர்த்தனா ” 

 

‘ தளிருக்கும் விருப்பமா? ‘ 

 

பெண் பார்க்கும் படலத்தின் போது, அவளை சந்திக்க, மிகவும் ஆர்வமாக உள்ளான் கோவர்த்தனன். 

 

-தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *

    2 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.