216 views

கதை நிறைவடையும் தருவாயில் உள்ளது நண்பர்களே!

அத்தியாயம் 17

அன்று… 

“நீங்க என்னை லவ் பண்றீங்களா?” என்று ஆச்சரியப்பட்டாள் அதிரூபா. 

அவன் காதலைச் சொன்ன தருணத்தில் அதிர்ச்சி அடைந்தவள், இப்போது ஆச்சரியம் அடைந்திருந்தாள். 

சிறு புன்னகையுடன் அவளை ஏறிட்ட பிரித்வி, 

“ஆமாம் அதிரூபா. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு! ரொம்ப பிடிச்சிருக்கு! இதெல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாத உணர்வு. ஆனால், உன்னைப் பார்த்ததுமே லவ் வரலை!” என்று அவளுக்குத் காதலைச் சரியான முறையில் புரிய வைக்க முயற்சித்தான். 

“பார்த்ததுமே லவ் வரலை சரி! நாம அவ்ளோ சீக்கிரம் க்ளோஸ் ஆகலை.அப்பறம் எப்படி? அதுவும் காஜல் வந்து புரபோஸ் பண்ணும் போது, நீங்க என்னைக் காதலிக்கிறேன்னு சொல்லியிருக்கீங்க! அது எனக்குப் பிடிக்கலை” என்று  தயவு தாட்சண்யம் பாராமல், பட்டென்று கூறி அவனது காதலை மறுத்து விட்டாள் அதிரூபா. 

அதனால் முகம் வெகுவாக சுருங்கிப் போன முகத்தோடு, 

“ஓஹ்! அப்போ நீ என்னை லவ் பண்றேன்னு அக்சப்ட் பண்ணிக்க மாட்ட அப்படித்தான?” என்று அவள் பொய்யாகத் தன்னை மறுத்து விட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கேட்டான் பிரித்வி. 

“ஹலோ! நான் உண்மையிலேயே உங்களை லவ் பண்ணலை. அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க பிரித்வி” என்று கோபமாக கூறினாள் அதிரூபா. 

“ஹேய் வெயிட்! நீ சொன்னதை நான் புரிஞ்சுக்கிட்டேன். தாங்க்ஸ் அண்ட் பை” என்று முடித்துக் கொண்டான் பிரித்வி. 

“வெயிட் பிரித்வி!  காஜலோட லவ்வை மட்டும்  மறுத்துட்டு, எனக்கு இன்னொரு சுவிட்ச்சுவேஷனில் புரபோஸ் பண்ணி இருக்கலாமே? இதுக்குப் பதில் சொல்லுவீங்களா?” 

இதற்குப் பதில் வேண்டும் என்பது போல, எதிர்பார்ப்புடன் நின்றிருந்தாள் அதிரூபா. 

“அவகிட்ட நான் நிறைய தடவை சொல்லி, டயர்ட் ஆகிட்டேன் அதிரூபா. நீ அவளை முன்னிறுத்தி, எங்கிட்ட இப்படி கேட்கிறது ஹர்ட் ஆகுதும்மா! உனக்குப் புரியாதா?” என்று அவளைச் சமாதானப்படுத்த முயற்சித்தான். 

ஆனால் அவளோ, “எனக்குப் பதில் சொன்னதுக்குத் தாங்க்ஸ் பிரித்வி” என்று கூறிவிட்டு, உடனே தன் வகுப்பிற்குப் போய் விட்டாள் அதிரூபா. 

எப்படியெல்லாம் அவளிடம் காதலைப் பகிர வேண்டும் என்று பல யோசனைகள் வைத்திருந்தான். அவற்றையெல்லாம் மனதிலேயே போட்டுப் புதைத்து விட்டு சோர்வுடன் சென்று விட்டான் பிரித்வி. 

இங்கோ, “எப்படி பிரித்வி?” என்று பலமுறை  புலம்பிக் கொண்டு , பல மணி நேரங்களுக்கு மேலாக அங்கேயே அமர்ந்திருந்தாள் காஜல். 

“ஆமாம் யாஷ்! டவுட் கிளியர் பண்ணிக்கிறதுக்காகப் போனால், எனக்குப் புரபோஸ் பண்ணிட்டான்! நான் ஒரு அதிர்ச்சியில் இருந்தால், அந்தக் காஜலுக்கு அதை விட அதிகமான ஷாக்! ஆளையே காணோம். இன்னும் அவ கிளாஸூக்கு வரவே இல்லை. பிரித்வியையும் காணோம்” என்று தன்னுடைய தோழி யாஷிகாவிடம் கூறினாள் அதிரூபா.

“பாரேன்! இது தான் சான்ஸூன்னு உனக்குப் புரபோஸ் பண்ணிட்டான். ஆனால், அவனை இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லை ரூபா! முதல் முதலில் உன்கிட்ட தான் லவ் சொல்லி இருக்கான்” என்று கூறினாள். 

“நானும் அவன் கூட தானே படிக்கிறேன். ஆனால் இதெல்லாம் எனக்குத் தெரியாதே! நீங்க எல்லாம் இதை எப்படிநோட் பண்றீங்க?” என்று மற்ற தோழிகளிடம் ஆச்சரியமாக கூறினாள் அதிரூபா.

“இந்தக் கிளாஸில் இருந்துக்கிட்டு, நீ எதை தான் நோட் பண்ணி இருக்கிற? இங்கே நிறைய நடக்குது. அதை தெரிஞ்சுக்கனும்னா ஒரு சில ஸ்பை (உளவாளிகள்) இருக்காங்க. முதல்ல அவங்க கூட ஃப்ரண்ட் ஆகனும்” என்றாள் சக தோழி பூஜா.

“அய்யோ! எனக்கு அந்த வினையே வேண்டாம் பூஜா! நான் நிம்மதியாக இருக்கேன். இதை கவனிக்க ஆரம்பிச்சா எனக்குத் தான் டைம் வேஸ்ட் ஆகும்” என்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டாள் அதிரூபா. 

அதைப் பார்த்து தோழிகள் அனைவரும் சிரித்துக் கொண்டனர். 

தன் காதல் முறிந்து போன சோகத்துடனும், விரக்தியுடனும் வகுப்பிற்குச் செல்லப் பிடிக்காமல், வீட்டிற்குப் போய் விட்டாள் காஜல். 

அவளுடைய அம்மா தன் தங்கையின் வீட்டிற்குச் சென்றிருந்ததால், காஜல் தன் தந்தையை தாஜா செய்து, பிரித்வியுடன் தன் திருமணத்தை உறுதி செய்து விட்டு, தாயிடம் இதைப் பற்றிக் கூறலாம் என நினைத்திருந்தாள். 

ஆனால் தற்போது நடந்ததோ வேறு ஆயிற்றே! இதை எப்படி தாய் உமையாளிடம் கூறுவது? என்று விஷயத்தை அப்படியே அவரிடமிருந்து மறைத்து விட முடிவெடுத்தாள் காஜல். 

ஏற்கனவே பிரித்வியின் அணுகுமுறையாலும், பதிலாலும் காசிநாதனுக்கு அவனைப் பிடிக்கவில்லை.இப்போது மகளை அவன் மறுத்தது தெரிந்ததும் , காசிநாதனுக்கு நிம்மதியாகத் தான் இருந்தது. 

அதனால்,”வேற நல்ல பையனைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கிற வரைக்கும் ,  நீ பிரித்வியை மறக்க ட்ரை பண்ணு காஜல்” என்று தன் பெண்ணுக்கு அறிவுரை வழங்கினார் காசிநாதன். 

அவரே மகள் ஒரு வாரம் கல்லூரிக்கு வர மாட்டாள் என்று விடுப்பு சொல்லி விட்டார். 

🌸🌸🌸

இன்று… 

“கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க பிரித்வி?” என்றாள் அதிரூபா.

“இப்படி நீ கேட்கிறதைப் பார்த்ததும், எனக்கு நம்மளோட காலேஜ் டேய்ஸ் (நாட்கள்) ஞாபகத்திற்கு வந்துடுச்சு அதி!”  என்றான் அவளுடைய கணவன். 

தனக்கும் அந்த ஞாபகங்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தது தான், ஆனால் அவற்றில் கவனத்தைப் பதித்து விட்டாள் இங்கு இவன் பதிலளிக்காமல் டிமிக்கிக் கொடுத்து விடுவான் என்று முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டாள் அதிரூபா. 

“ஆஹான்! நீங்க ரொம்ப சீரியஸாக இருக்கீங்களாக்கும்! சரி அதி! நான் பதில் சொல்றேன்” என்று  மனைவிக்காக, அவனும் தன் முகத்தை சீரமைத்துக் கொண்டான். 

“உன்னைப் புரபோஸ் பண்றதுக்காக அந்த சுவிட்சுவேஷனை தேர்ந்தெடுத்தது தான் தப்பு அதி! அதுவும் என்னால் ரொம்ப நாள் காத்திருக்க முடியல. அதனால் தான் அன்னைக்கு நீ காஜல் கூட எங்கிட்ட பேச வந்த அப்போவே லவ்வை சொல்லிட்டேன்” 

சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு, 

“நீ காஜல் கூட வராமல் இருந்திருந்தாலும், நானே உன்னைத் தேடி வந்து காதலைச் சொல்லி இருப்பேன்” என்று எடுத்துரைத்தான் பிரித்வி. 

பிறகு அவனே, என் வாயாலேயே நான் உண்மையைச் சொன்ன அப்பறமும் உனக்கு நம்பிக்கை வரலைன்னா!!” என அத்துடன் நிறுத்திக் கொண்டான். 

கணவனுடைய வேதனை படிந்த முகத்தைப் பார்த்து, 

“அப்பறம் எதுக்கு என்னைப்  பழி வாங்குறதுக்காக, பிளான் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க பிரித்வி?” என்று உக்கிரத்துடன் கேட்டாள் மனைவி. 

“பழி வாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டேனா? இவ்ளோ நாளா உனக்கு அப்படித் தான் நினைப்பு இருக்கா?” என்று திடுக்கிடலுடன் கேட்டான் பிரித்வி. 

“நினைப்பு இல்லை.உண்மையாகவே  அதுக்காக தான் நீங்க என்னைக் கல்யாணம் செய்துக்கிட்டீங்க!” என்று முறையிட்டாள் அதிரூபா. 

இறுகிய முகத்துடன், 

“நம்ம கல்யாணம் நடந்த அன்னைக்கே இதுக்கான ஒவ்வொரு விளக்கத்தையும் உனக்குச் சொல்லிட்டேன் அதி! அப்படியும் எதையும் நீ நம்புற மாதிரி இல்லை! நான் ஒன்னும் உன்னைக் கார்னர் செய்து, இந்தக் கல்யாணத்தை நடத்திக்கல. சும்மா டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போடலாம்ன்னு  ஆசைப்பட்டு தான், கல்யாணத்தப்போ உன்னைச் சீண்டி விளையாடினேன். என்னோட பொண்டாட்டின்ற உரிமையில் தான் அதெல்லாம் பண்ணினேன்” என்று விரக்தியில் கூறினான் அவளது கணவன். 

“நீங்கப் பொய் சொல்லலைன்னு நான் எப்படி நம்புறது?” என்று கேட்டு, இன்னும் அவனை நம்பவில்லை என்பதை உறுதிப்படுத்தினாள் அதிரூபா. 

“உன்னைக் கார்னர் செய்து, பழி வாங்கனும்னு நினைச்சு இருந்தால், இந்நேரம் உன்னோட உணர்வுகளும், இந்த நிமிர்வான பேச்சும் காணாமல் போயிருக்கும் அதி!” என்றான் பிரித்வி. 

அவன் கூறுவது உண்மை தானே? தன்னைப் பழி வாங்க நினைத்துக் காயப்படுத்தி இருந்தால், ஒடுங்கிப் போய் தான் அமர்ந்திருப்பாள் ஒழிய, இப்படி நேருக்கு நேர் நின்று அவனைக் குறுக்கு விசாரணை செய்திருக்க மாட்டாளே! 

“அப்படி காயப்படுத்துறது மனுஷத்தன்மையும் இல்லைன்றது எனக்கு நல்லாவே தெரியும் அதிரூபா” என்று உறுதியாக கூறினான். 

தன் உடலில் ஏற்பட்ட காயங்களை விட, தன்னவள் மனதில் தோற்றுவித்தக் காயங்களால் உடைந்து போனான் பிரித்வி. 

தன்வந்த்தின் பிரச்சினை கூட , அவர்களுக்கு இப்போது முதன்மையானதாக இல்லை. தங்களுக்குள் இருக்கும் குழப்பங்கள் தான் இருவருடைய மனதையும் அரிக்க ஆரம்பித்து விட்டது. 

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்