1,062 views

“பாட்டி உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா?” என்ற பேத்தியை பார்த்த அன்னபூரணி ‘தெரியாது’ என்று செய்கை செய்து விட்டு,

“எதுக்குடா” என்றவரைப் போல் கார் ஓட்டிக் கொண்டிருந்த விக்ரமும் கண்ணாடியில் திவ்யாவின் முகத்தை பார்த்தான்.

“உங்க பேரன் கார் ஓட்டுற அழக பார்த்தா பார்க்காத தாத்தாவை போய் பார்த்திடுவேன் போல.” அக்னி மீது இருந்த கோபத்தில் காரை வேகமாக இயக்கிக் கொண்டிருந்த விக்ரமை சீண்டிப் பார்த்தது திவ்யாவின் வார்த்தை.

கண்ணாடி வழியாக அவளை முறைத்தவன், “உங்க அண்ணன் பேசின பேச்சுக்கு கார அவன் மேல ஏத்தாம வந்தேன்னு சந்தோஷப்படு.” என்றான்.

“நீங்க ஏத்த வர வரைக்கும் எங்க அண்ணன் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டான்.” என கூறினாள் திவ்யா.

“பேசாம வா இல்லன்னா பாதியிலயே இறக்கி விட்டு போயிடுவேன்.” என்று மிரட்ட,

“விட்டுட்டு போங்க யாருக்கு என்ன வந்துச்சு. ஒரு ஃபோன் பண்ணா போதும் எங்க அண்ணன் வந்துடுவான்.” என்று அண்ணனின் புராணம் பாடினாள்.

இருவரையும் அன்னபூரணி சமாதானப்படுத்த, கல்லூரி முன்பு வாகனத்தை நிறுத்தினான்.
“இங்க இருந்து நம்ம வீடு கிட்ட தான் திவ்யா. இனி அடிக்கடி இந்த பாட்டிய வந்து பார்த்துட்டு போ.” அன்புடன் கூற,

“கண்டிப்பா பாட்டி.” என்று அவருக்கு முத்தத்தை கொடுத்து விடை பெற்றவள்,

“வர மாமா” என்றாள் விக்ரமிடம்.

தலையைக் கூட அசைக்காமல் மீண்டும் அவளின் “மாமா” என்ற வார்த்தையில் குழப்பவாதி ஆனான். திவ்யா மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருக்க, கவனித்து விட்டார் அன்னபூரணி.

“ராசா! அடுத்த கல்யாணத்துக்கு அடி போடாத சாமி. இப்பதான் ஏதோ என் பொண்ணு பேச ஆரம்பிச்சிருக்கா.”: என்று பேரனின் எண்ணத்தை தடுத்தார்.

“நீங்க வேற பாட்டி. அந்த மாதிரி எந்த எண்ணமும் எனக்குள்ள இல்ல. அதுவும் அவன் தங்கச்சிய கல்யாணம் பண்ண வாய்ப்பே இல்லை. எனக்கெல்லாம் சும்மா ஸ்டைலா பொண்ணு வேணும்.” என்றவனின் பார்வை சென்று கொண்டிருந்த திவ்யாவை தான் வட்டமிட்டது.

***
அன்பினி ஃபோனில் ஜீவாவை அழைத்தாள். அவனோ நேற்று நடந்த நிகழ்வில் அழைப்பை ஏற்காமல் ஃபோனையே பார்த்துக் கொண்டிருக்க,

“ஃபோன் பண்ணா எடுக்கணும். இப்படியே பார்த்துட்டு இருக்க கூடாது.” என்ற அன்பினியின் குரலில் வெடுக்கென அலறி எழுந்து நின்றான்.

“பதறாத  உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனா இதுவே கடைசியா இருக்கணும். இனி ஒரு தடவ நான் ஃபோன் பண்ணி எடுக்காம மட்டும் இருந்து பாரு.” என்றவளுக்கு,

“எ..என்ன… மேடம் என்ன பண்ணுவீங்க.”என்றான் பயத்தை மறைத்துக் கொண்டு.

“ஆஹான்!  அங்க இருக்காளே ஷாலினி அவ வீட்டுல பேசி நானே என்னோட தலைமையில ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சிடுவேன். உனக்கே தெரியும் உன்னோட பாஸ் கல்யாணத்தையே நிறுத்துன ஆள் நானு.  அவ கல்யாணத்தை நடத்த மாட்டேனா என்ன.” என அன்பினி அழகாக ஜீவாவை மிரட்டினாள்.

“மேடம் இன்னைல இருந்து நான் உங்களுக்கு விசுவாசி. நீங்க சொல்றதை மட்டும் தான் நான் செய்வேன். இனிமே எனக்கு பாஸ் நீங்க தான். இப்ப சொல்லுங்க உங்க அடிமை நான் என்ன பண்ணனும்.” என்ற ஜீவாவின் பேச்சில் சிரிக்க தொடங்கிய அன்பினி,

“நல்லா வருவ ஜீவா. இன்னைக்கு இங்க ஒரு சம்பவம் நடக்கப் போகுது. அந்த சம்பவம் முடியிற வரைக்கும் நீயும் இங்க இருக்க யாரும் உள்ள வரக்கூடாது சரியா..” என்றவள் அவனின் பதிலை எதிர்பார்க்காது அக்னி அறை நோக்கி செல்ல,

“நீங்க போங்க மேடம் ஒரு பையனும் உள்ள வராத மாதிரி கதவை பிடிச்சிக்கிட்டு நிற்கிறேன்.” என்றான்.
அன்பினி மிதமாக திரும்பிப் பார்த்து சிரிக்க, அவனது மனசாட்சியோ காரி துப்பியது ‘என்ன வேலை பார்க்கிறாய்’ என்று.

அக்னியின் அறைக்கும் வந்தவள் “ம்க்கும்…! ” என்று குரலில் கணைப்பை கூட்டி தன் வரவை தெரிவிக்க,
தலை நிமிராமல்  வேலையில் கவனம் செலுத்தியவாறு “எதுக்காக இங்க வந்த.” என்றான் அக்னி சந்திரன்.

………

அவள் பதில் உரைக்காமல் இருப்பதை உணர்ந்தவன், “அன்பினிசித்திரை சண்ட போடுற மூடுல நான் இல்ல. எனக்கு நிறைய வேலை இருக்கு. நல்ல படியா சொல்ற இங்கிருந்து போயிடு ‌.” என்றான் முகத்தைப் பார்க்காது.

“நான் உன்னை கோபப்படுத்த ஒன்னும் வரல. சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்.”என்றவளின் வார்த்தையில் தலை தானாக நிமிர்ந்தது.

“நீ யாரு எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வர.”

“பொண்டாட்டி ” என்ற அன்பினி  வார்த்தையில் டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை அவள் மீது தூக்கி அடித்தவன், “ஜீவா”என்றழைத்தான்.

அக்னியின் குரலில் கொடுத்த வாக்கை மறந்தவன் கை கால்கள் வெடவெடக்க அவன் முன்பு நின்றான்.

“யாரைக் கேட்டு என் ரூம் குள்ள இவளை விட்ட . இனிமே இப்படி நடந்தா உனக்கு இங்க வேலை கிடையாது.” என்றுவிட்டு அன்பினியிடம்,

“உனக்கு அவ்ளோ தான் மரியாதை. கொண்டு வந்ததை எடுத்துட்டு ஓடிரு.” என்று எச்சரித்தான்.

“ப்ச்! அக்னி சாப்பாட்டை வீணாக்கக்கூடாது.” என்றவளுக்கு,

“அப்போ நீயே தின்னு தொல.” என்றான் அக்னி.

“புருஷன் பேச்சுக்கு மறு வார்த்தை ஏது ” என்றவள் அக்னியின் அருகில் அமர்ந்து, வாழை இலையை விரித்து கொண்டு வந்த உணவு மொத்தத்தையும்  இலையை மறைக்கும் அளவிற்கு ஒவ்வொன்றாக அடுக்கினாள்.

கையில் இருக்கும் வாட்ச்சை கழற்றி வைத்தவள் தண்ணீரை எடுத்து வைத்துக்கொண்டு  அழகாக சாப்பிட ஆரம்பித்தாள்.

காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்த அக்னி பசியில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, அருகில் இருந்து வரும் பிரியாணி, கோழிக்கறி குழம்பு வாசனை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. அவன் மனதை அறிந்தவள் போல் “அக்னி டேஸ்ட் எப்படி இருக்கு. சூப்பரா இருக்குல்ல…”என்றாள் வாய் முழுக்க சாப்பாட்டை வைத்துக்கொண்டு.

அங்கு நின்றிருந்த ஜீவா தான் “மேடம் சாப்பிடுறது நீங்க டேஸ்ட் எப்படி இருக்குன்னு சார் கிட்ட கேக்குறீங்க…”என அதி முக்கியமான சந்தேகத்தை கேட்க,

கோழி கால்களை கடித்து இழுத்தவள், “அதுவா ஜீவா உங்க சார் என் மனசுல தான இருக்காரு. அப்போ நான் சாப்பிடுற சாப்பாடு அவரை தாண்டி தான் என் வயிற்றுக்குள்ள போகும். அதான் டேஸ்ட் எப்படி இருக்குன்னு கேட்கிறேன்.” என்று அம்சமாக பதிலளித்தவள் எலும்பை உடைத்து உறிஞ்ச ஆரம்பித்தாள்.

அவள் பதிலில் முழி இரண்டும் மேலும் கீழுமாக உருண்டது ஜீவாவிற்கு. அரை நொடியில் பார்வை அக்னியிடம் செல்ல, கடும் கோபத்தில் முறைத்துக் கொண்டிருந்தான் அவன்.

தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் அக்னியின் பார்வையை அப்போது தான் உணர்ந்த ஜீவா” சாரி சார் “
என்றுவிட்டு நடையை கட்டினான்.

“இங்க பாரு நீ தேவை இல்லாம பண்ணிக்கிட்டு இருக்க. பழைய அக்னிய எதிர்பார்த்து என்கிட்ட விளையாடாத.” உறுதியாக தன் மனதில் இருப்பதை அவளிடம் சொல்லிவிட, கண்ணும் கருத்துமாக சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

உணவுகளால் மறைக்கப்பட்ட இலையை கண்டுபிடித்த பெருமை அன்பினியையே சேரும் என்பதைப் போல் இலையில் உள்ளதை அழகாக வழித்து உண்டவள் அக்னியை பார்த்து, ‘ ஓஓவ்வ்வ்” என ஏப்பம் விட்டாள்.

அவன் அருவருப்போடு முறைக்க, “முடிஞ்சுது.  வந்த வேலை  நல்லபடியா முடிஞ்சுது” என்றாள் இருக்கையில் நன்றாக சாய்ந்து.

“அப்புறம் அக்னி அடுத்து என்ன பண்ணப் போறோம்.” சாப்பிட்ட மிதப்பில் அவள் கேட்க,

“ச்சீ வெளியே போ!”   என்றான் அக்னி.

“நான் எதுக்கு” என்று இரண்டு வார்த்தை பேசியவள் அவனிடம் ஒரு நிமிடம் என்பது போல் சைகை செய்து, “ஓவ்வ்வ்” என்று ஏப்பம் விட்டாள் மீண்டும்.

காதுகள் கூச மடிக்கணினி வேகமாக மடித்தவன் திட்ட வரும் நேரம்
அவசரமாக உள்ளே வந்தான் ஜீவா .

” சார்! டெண்டருக்கு ரெடி  பண்ணி வச்சிருந்த போல்டரை காணோம் சார் . அது மட்டும் இல்ல ஆபீஸ்ல உள்ள எல்லா சிஸ்டமும் எரர் ஆகியிருக்கு சார். ” என்றதும் பதறியவன்,

“லேப்டாப்ல இருந்த போல்டர் எப்படி காணாம போகும். அது என்ன குழந்தையா தவழ்ந்து போக.” எதிர்புறத்தில் நின்றிருந்தவனிடம் வினா எழுப்ப,
“தெரியல சார்.” என்றான் பயத்தோடு.

“இந்த பதிலை கேக்கவா உன்ன வேலைக்கு வச்சேன். அதுசரி எப்படி ஒரே நேரத்துல எல்லா சிஸ்டமும் எரர் ஆகும்.” என்ற அக்னி அவனை பார்வையால் எடை போட்டான்.

“ஒன்னும் புரியல சார். இவ்ளோ நேரம் நல்லா இருந்த சிஸ்டம் டக்குன்னு ஒரே நேரத்துல எரர் காட்டுது. ஏதாவது நெட்வொர்க்  பிரச்சனையா இருக்கும்னு செக் பண்ணி பார்த்தேன் சார். எல்லாமே சரியா இருக்கு. டாக்குமெண்ட் போல்டரை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நான்தான் எடிட் பண்ணிட்டு இருந்தேன் . எப்படி போச்சுன்னு சத்தியமா தெரியல சார்.” என கண் கட்டி  சுற்றிவிட்ட குழந்தை போல் பாவமாக கூற,

“அறிவு இருக்கா இல்லையா ஜீவா. இந்த டெண்டர் எவ்ளோ  முக்கியம்னு சொல்லியிருந்தேன்னா  இல்லையா? இவ்ளோ சாதாரணமா வந்து சொல்ற.”என்ன கத்தியவன், 

“அந்த டாக்குமெண்ட்டை வேற எங்கயாவது சேவ் பண்ணி  வச்சியா?” 

கேள்விக்கு இல்லை என்று பதில் உரைத்த ஜீவாவை  முடிந்த அளவுக்கு திட்டி விட்டான் அக்னி. கோபம் குறையாதவன் டேபிளை போட்டு தட்டிக் கொண்டிருந்தான்.

அங்கு ஒருவன் கடுங்கோபத்தில் கத்திக் கொண்டிருக்க, அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல்,
“ஜீவா நான் வந்த வேலை முடிஞ்சுது கிளம்பட்டுமா.” என்ற அன்பினிசித்திரை  கை அசைத்தவாறு அறையில் இருந்து வெளியேறி மின்தூக்கி இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தாள்.

அது வரை கோபத்தில் கத்தி கொண்டிருந்தவனின் மூளையில் சட்டென மின்னல் அடிக்க, வேகமாக அன்பினியை நோக்கி ஓடத் தொடங்கினான்.
அவன் வரும் நேரம் மின்தூக்கி வந்துவிட, உள்ளே சென்ற அன்பினி தரை தளத்திற்கு செல்ல பொத்தானை அழுத்தினாள் கணவன் ஓடி வருவதையும் பொருட்படுத்தாமல்.

இரு கதவுகளும் ஒன்றாக இணைய, அக்னியின் கால்களால் தடைபட்டு மீண்டும் திறந்து கொண்டன. அவன் வருகையை  எதிர்பார்த்தது போல் கைகளை கட்டிக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அன்பினி சித்திரை.

“இப்ப இங்க நடந்ததுக்கு நீ தான காரணம்.” என்றவன் அந்த சிறு இடத்தில் நிற்பவளை இன்னும் நெருங்கி வர, பதில் சொல்லாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்  சித்திரை.

“உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்.”  அவளை தன் புறம் திருப்பியவன்,

“சொல்லு எதுக்கு இப்படி பண்ண.” என்றிட, கேள்வியை உதாசீனப்படுத்தினாள் உச்சிக்கொட்டி.

அன்பினிசித்திரை செய்கையில் கடுப்பான அக்னி அடிக்க கை ஓங்க,
“உனக்கு உன்னோட டாக்குமெண்ட் வேணாம்னா தாராளமா  என்னை அடிக்கலாம் அக்னி.” என்றாள் அவனை பார்க்காது.

 அவ்வார்த்தையில் கொதித்தவன் அவளை அடிப்பதற்கு பதிலாக மின்தூக்கியின் சுவற்றில் ஓங்கி நான்கு முறை குத்த, அது அதிர்ந்து அடங்கியது.

“இப்ப மட்டும் எனக்கு டெண்டர் டாக்குமெண்ட் கைக்கு வரல அப்புறம் மனுசனா இருக்க மாட்ட அன்பு ”
கோபத்தில் இருந்தவன் தன்னையும் அறியாமல்  “அன்பு”  என்றழைக்க,  அடுத்த நொடி அவனை இறுக்கி அணைத்து கொண்டாள் அன்பினி சித்திரை .

அவன் கோபம் எல்லையை கடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாத சித்திரை,
“இவ்ளோ கோவத்துலயும் அன்புன்னு சொல்ற. அப்போ உன் மனசுல  நான் தான இருக்கேன். அப்புறம் எதுக்குடா இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்க போன.” என்றதும் தான் தாமதம் அசையாது நின்றிருந்தவன் கழுத்தை சுற்றி இருந்த அவள் கைகளை பிடித்து கீழே தள்ளினான்.

மின்தூக்கி கண்ணாடியில் வேகமாக கை பட விரிசல் விட்டு  லேசாக கிழித்துக்கொண்டு ரத்தம் பீறிட்டது. எரிச்சலில் கைகளை பார்த்தவள் அதிர, அந்த இடத்தில் கை பிடித்த அக்னி,

“இனி ஒரு வார்த்தை பேசின மனுஷனா இருக்க மாட்டேன்.  பத்து நிமிஷம் டைம் தரேன். அதுக்குள்ள இங்க நடந்த பிரச்சினைய சரி பண்ணிட்டு கிளம்பிக்கிட்டே இரு. தேவையில்லாம ஏதாவது பேசி என்னை மிருகம் ஆக்காத . எப்பவுமே இதே பொறுமையோட இருக்க மாட்டேன் அன்பினிசித்திரை.” என்று அழுத்தம் கொடுத்தான்.

அன்பினிசித்திரை கையில் உள்ள ரத்தம் அக்னியின் கைக்கு இடம்பெயர்ந்தும் மனமில்லாமல் இன்னும் அந்த இடத்தில் அழுத்தத்தை கூட்டினான். எரிச்சலில் முகம் சுழித்து அவன் முகம் பார்த்தவள்,
“அக்னி வலிக்குது.” என்றாள்.

அசையாமல் பார்த்திருந்தவன் லேசாக உதடு வளைத்து சிரித்து, “அப்பனுக்காக பழி வாங்க பார்க்கிறியா. அது ஒரு நாளும் நடக்காது” என்று பிடித்திருந்த கையை கண்ணாடியில் ஓங்கி அடித்தான். விரல் முட்டியில் மீண்டும் கீறல் ஏற்பட வலி அதிகமானது. அதைவிட அதிகமாக அவனின் செயல் வலியை கொடுக்க,

“பத்து நிமிஷம் என்ன அக்னி அஞ்சு நிமிஷத்துல சரி பண்ணி தரேன். ஆனா எனக்கு நீ என்ன பண்ணுவ.” என்றாள் .

“அதான உன் புத்தி என்னைக்கும் மாறாது.  காரியம் இல்லாம எதுவும் பண்ண மாட்டியே. என்ன பண்ணனும்.”என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

“அது ஒன்னும் இல்ல அக்னி நேத்து என்னோட ஃபோன உடைச்சிட்ட. இப்ப பாரு நான் இந்த டப்பா ஃபோனை யூஸ் பண்ண வேண்டியதா இருக்கு. அதனால ஈவ்னிங் என்னோட கடைக்கு வந்து அழகா ஒரு ஃபோனை செலக்ட் பண்ணி தரணும். அவ்ளோதான் சிம்பிள்” என்றவள் தன் கையில் வலியும் ரத்தத்தை அவன் சட்டையில் துடைத்தாள்.

ஐவிரல்களும் சிகப்பு நிறத்தை அந்த சந்தன சட்டையில் கோடு கிழிக்க, அதை குனிந்து பார்த்தவன் தடை எலும்புகள் புடைத்தது. மீண்டும் துடைக்க சென்றவள் நெஞ்சில் கை வைத்து, “அன்ப இங்க இருந்து அனுப்பிட்டியா அக்னி.” என்று முகம் பார்க்க,

“என்னோட டாக்குமெண்ட்ட கொடுத்துட்டு கிளம்புன்னு சொன்னேன்.”என்றான் பற்களை கடித்து.

அவன் கோபத்தை உணர்ந்தும் அசராமல் அவள் நின்றிருக்க, அக்னியின் நிதானம் குறைய ஆரம்பித்தது. கோபத்தோடு நெருங்கியவன் மனதில் என்ன நினைத்தானோ அதற்குள்,

“சார் அஞ்சு மணிக்குள்ள டாக்குமெண்ட் ரெடி ஆகணும் மணி இப்ப மூணு” என்றான்.

சைலன்சர் சூட்டில் கால் வைத்தது போல் வெந்தவன், “கடைக்கு போலாம்”என்றான்.

“தட்ஸ் குட்.” என்ற அன்பினி யாருக்கோ போனில் தகவல் சொல்ல, அடுத்த நிமிடம் அவளால் ஏற்படுத்தப்பட்ட சிக்கல் சரியாக தொடங்கியது. அதை உணர்ந்து அக்னி அங்கிருந்து நடையைக் கட்ட,

ஜீவா தான், “மேடம் எப்ப வந்து இந்த வேலையை பார்த்தீங்க . இப்போ யாருக்கு போன் போடுறீங்க. இது எப்படி நடந்தது ஒண்ணுமே புரியல. கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன். உங்களுக்கு புண்ணியமா போகும்.” சென்றான் குழப்பத்தில்.

“தெரிஞ்சு என்ன பண்ண போற.”என்றவள் கையில் வலியும் ரத்தத்தை நிறுத்த வழி தேடிக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் அதைப் பார்த்த ஜீவா உடனே ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்து வந்து கொடுக்க, தனக்குத்தானே முதலுதவி செய்து கொண்டாள். அனைத்தும் முடியும் வரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த  ஜீவா மீண்டும் கேட்க,

“என்னோட ஃப்ரெண்டுக்கு சாஃப்ட்வேர் பிளாக் பண்றது எல்லாம் நல்லா தெரியும். அவன வச்சு வேலையை முடிச்சேன். அவன் இப்போ உங்க ஆபீஸ் எமர்ஜென்சி ரூம்ல தான் இருக்கான். இந்த வேலை நடக்க ஒரு அரை மணி நேரம் ஆகும்’னு சொன்னான்.  வேலை நடக்குற வரைக்கும் அக்னி கண்ணுல மாட்ட கூடாதுன்னு தான் அவனை எங்கயும் நகர விடாம சாப்பாட்டு நாடகத்துல உட்கார வைச்சேன். உங்க எம் டியும் என்னைய பார்த்துகிட்டே கேமராவை பார்க்காம விட்டுட்டாங்க. அவ்வளவு தான்” என்றவள் அங்கிருந்து நகர, ஜீவா தான் வாயை பிளந்து கொண்டு நின்றிருந்தான்.

***
வீட்டிற்கு  வந்த அக்னி நேராக தன் அறைக்கு சென்றான். அங்கு அவனுக்காக தயாராகி காத்திருந்த அன்பினி,
“எவ்ளோ நேரம் வெயிட் பண்றது அக்னி சீக்கிரம் கிளம்பி வா.” என்றாள்.

எந்த கோப முகத்தையும் அவளிடம் பிரதிபலிக்காதவன் பத்து நிமிடம் டைம் கேட்டு  குளியலறைக்குள் நுழைந்தான். அவன் தயாராகும் அழகை பின்னால் நின்று ரசித்து கொண்டிருந்தவள்,
“நம்பவே முடியல அக்னி நிஜமாவே நம்ம ஷாப்பிங்  போறோமா.” என்று எகிறிக் குதித்தாள் .

கண்ணாடி வழியாக பார்த்தவன்,
“ஆசையா ஒன்னும் உன் கூட வரல. சனியன தலையில கட்டிக்க விரும்பாம வரேன்.” என்றதும் முகம் வாடிவிட்டது அவளுக்கு.

“உண்மையை சொன்னதும் உடனே உன் முகம் பிரகாசமாயிடுச்சு.” என்ற குத்தலில் அவனைப் பார்க்காது திரும்பிக் கொண்டாள்.

அன்பினி நகர்வதை உணர்த்தவன் சீப்பை சுவற்றில் தட்டினான். அந்தத் தத்தத்தில் திரும்பியவளிடம், “நீ பண்ண வேலையால  ரொம்ப தலை வலிக்குது . ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா குடிச்சிட்டு, கிளம்பலாம்.” என்றான்.

மறுப்பு சொல்லாத அன்பினி
“டூ மினிட்ஸ் அக்னி  காஃபி எடுத்துட்டு வரேன்.” என்று சிறிது நேரத்தில் காஃபியோடு வர, அதை வாங்கி குடித்தவன் அவளுடன்  புறப்பட்டான்.

“மாமியாரே நாங்க ஷாப்பிங் போறோம்.” ஹாலில் மணிவண்ணன் அமர்ந்துக் கொண்டிருப்பதை பார்த்தவள் அத்தையிடம் சொல்வது போல் சொல்ல, திரும்பி பார்த்தார்.

அவ்வளவு சத்தத்தில் ஒட்டாத தன்மை ஏற்பட, உடனே அவர் முகம் வேறு பக்கம் திரும்பிக் கொண்டது. “பார்த்து போயிட்டு வாங்க.” என்று சமையலறையில் இருந்து குரல் கொடுத்தார் பரமேஸ்வரி .

“மாமியாரே! உங்களுக்கு ஏதாச்சும் வேணுமா.” என்றவளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை அவர். உதடு பிதுக்கி சலித்துக் கொண்டவள், “திவ்யா உனக்கு.” படித்துக் கொண்டிருக்கும் சின்னவளை  கேட்டாள்.

“உங்களுக்கு என்ன தோனுதோ வாங்கிட்டு வாங்க அண்ணி.”என்றவளை  அக்னி  முறைத்தான். அப்பார்வையை அறிந்து கொண்டவள் பேசாமல் உள்ளே சென்றுவிட,

“யாருக்கும் ஒன்னும் வேணாமாம் வா நம்ம என்ஜாய் பண்ணிட்டு வரலாம்.” என்றவள் அக்னியின் கையைப் பிடித்துக் கொண்டு சிரிக்க,

“ச்சீ எடு கைய” என்று சத்தமிட்டான் அக்னி. அதில் உள்ளே இருந்த பெண்கள் இருவரும் வெளியில் வந்தனர்.

“முறையாவா கட்டிக்கிட்டு வந்த உரிமையா கை பிடிச்சிட்டு போக‌. என் வீட்டுல இருக்க நாய்க்கு தேவையானதை வாங்கி தர மாதிரி போக போக்கிடம் இல்லாம என்கிட்ட வந்த உனக்கு வாங்கி தரேன் அவ்ளோ தான்.” என்றவன் அவளை விட்டு முன் நடக்க,

“அக்னி இதான் உனக்கு கடைசி. இனி யார் முன்னாடியாது என்னை இப்படி மரியாதை இல்லாம பேசினா நானும் பேசுவேன். உன்ன கல்யாணம் பண்ணிட்டு மனைவியா வந்திருக்கேன் அடிமையா இல்ல.” மிடுக்கான குரலில் கூறினாள் அன்பினி சித்திரை.

“மனைவியாவா?” என்றவன் “அப்பா நீங்க எனக்கு பார்த்த பொண்ணு இவளா?” என்று தந்தையிடம் கேள்வி கேட்டான்.

அவரோ இருவருக்கும் இடையில் நுழையாமல் அமைதி காக்க, “அம்மா நீங்க சொல்லுங்க இந்த பொண்ண தான் எனக்கு பார்த்தீங்களா.”  பரமேஸ்வரியிடம் கேள்வியை மாற்றினான்.

“அக்னி போற நேரத்துல சண்ட வேணாம். கூட்டிட்டு போ.” என்று அமைதியாக அவர் உரைக்க,

“என்னம்மா நீங்க கண்ட கழுதைக்கு காசு செலவு பண்ண போறேன் இதை பேசக்கூட எனக்கு உரிமை இல்லையா.” என்றவனின் பார்வை அன்பினியை தீண்ட,

“நீ ஒன்னும் எனக்கு செலவு பண்ண வேணாம். எங்கிட்ட காசு இருக்கு கூட வந்தா மட்டும் போதும்.” என்று கோபத்தோடு வெளியில் சென்று விட்டாள்.

***

காரில்  காதல் பாடல்கள் ஒலிக்க, மிதமான வேகத்தில் இயக்கி கொண்டிருந்தான் அக்னி சந்திரன். அனைவரின் முன்னும் தன்னை அவமானப்படுத்தியதில் கோபமாக அமர்ந்திருந்த அன்பினுக்கு நிமிடங்கள் கடக்க, நிதானம் பிறந்தது.  அக்னி உடனான இந்த பயணத்தை மனம் விரும்ப ஆரம்பித்தது. அதற்கு தோதாக காதல் பாடல்களும் ஒழிக்க,   பாடலை பாடியவாறு ரசித்தாள் தன்னுடன் வருபவனை.
அதை அக்னி உணர்ந்தாலும் வெளிக்காட்டாமல் சாலையில் கவனமானான்.

பார்வை நீண்டு கொண்டே செல்ல,
“இப்ப எதுக்கு என்னையே பார்த்துட்டு வர.”என கேட்டான்.

“நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு அக்னி. இப்பவும் நடந்ததை நம்ப முடியல. ரெண்டு பேரும் முதல் தடவையா வெளிய போறோம் எவ்ளோ ஹாப்பியா இருக்கு தெரியுமா”

“இருக்கத்தான செய்யும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டு அதுல வாழுறியே.” என்று வார்த்தையால் சுட, அமைதியாகி விட்டாள்.

ஷாப்பிங் மாலுக்கு முன்னால் காரை நிறுத்தியவன், “உன்னோட பர்ச்சேஸ் முடிய எவ்ளோ நேரம் ஆகும் . ” எனக் கேட்டான்.

“எதுக்கு அக்னி கேக்குற.” என்றவள் எதிரில் இருப்பவனின்   முறைப்பை உணர்ந்து, “ஒரு மணி நேரம் ஆகும்.” என்றாள்.

“சரி நீ ஷாப்பிங் பண்ணிட்டு இரு.  அரை மணி நேரத்துல  வந்துடுறேன்.” அங்கிருந்து புறப்பட,
தோள் இரண்டையும் குலுக்கி ‘என்னமோ பண்ணு’ என்ற பாவத்துடன் அவளும் ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்து கொண்டாள்.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
26
+1
4
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *