16 – விடா ரதி…
சவிதாவை வழியனுப்பிவிட்டு அறைக்குள் வந்த ஸ்வேதாவை வருண் கட்டிக்கொண்டான்.
“என்னங்க இது? விடுங்க… இது ப்ரெண்ட் வீடு….”
“யாரு இல்லைன்னு சொன்னா? உன் ப்ரெண்ட் ஹப்பி உன் ப்ரெண்ட் அஹ் கொஞ்சறப்போ நான் உன்ன கொஞ்சக்கூடாதா?”, வருண் இன்னும் இறுக்கமாக அணைத்தபடிக் கேட்டான்.
“அவரு கொஞ்சி என்ன பண்றது அவ குழப்பம் தீர்ந்தா தான் அவங்க வாழ்க்கைக்கு நல்லது…”, கணவனை அணைத்தபடி மதியம் ரதி அவளிடம் கூறியதன் சாராம்சம் மட்டும் கூறினாள்.
“செஞ்சிருந்தா சொல்லி இருப்பாரு… இல்லைங்கறதால சொல்லாம இருக்கலாம் இல்லையா?”
“லவ் பண்ணாம இருந்திருந்தா ஏன் இவள காதலிக்கலன்னு சொல்லணும் அப்போ?”, அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.
“ஆமால்ல ஏன்…. ஒரு வேளை இவ ரொம்ப டீப் அஹ் போய் இருந்தா ஏமாற்றம் தாங்காமுடியாம போயிறக்கூடாதுன்னு சொல்லி இருக்கலாம் இல்லையா?”
“அப்போ அவரு அவ உணர்வுகளை புரிஞ்சிட்டு இருந்து இருக்காருன்னு தானே அர்த்தம்… அவருக்கு இவமேல விருப்பம் இல்லாம ஏன் அவரும் அவள பாக்கணும்? பெருசா இல்லைன்னாலும் சின்ன சின்ன விஷயங்கள் செய்யணும்…?”
“இதுலாம் பொதுவா எல்லாரும் பண்றது தான் டி புஜ்ஜி…. “
“சரியா அவ பஸ் ஸ்டாப் போறப்போ இவரும் போனது, தினம் சாயிந்தரம் கடைக்கு வெளிய வரது, இவ சங்கடப்பட்டா கூட்டத்த கலைக்கறது, வண்டிய நகத்திட்டு அவ போறவரை பாத்துட்டு சிரிக்கறது…. ஒரு நாள் அவள பாக்கலன்னாலும் கண்ல காட்டற தேடல், கோவம் இப்டி நிறைய நேசிக்கறதுக்கான அடையாளங்களை ஏன் காட்டணும்?”
“இவளோ இருக்கா? நானே நீ வந்தா வண்டிய நகத்தமாட்டேன்.. கண்டிப்பா சைட் அடிக்கற பொண்ணுக்காக தான் இதுலாம் பசங்க பண்ணுவாங்க… இவள பாக்கணும், இவளும் பாக்கணும்ன்னு யாரும் தினம் அப்படி வரமாட்டாங்க தான்… இதுலாம் எதேர்சையா நடக்கற விசயம் இல்ல தான்… அவருக்கும் இவமேல விருப்பம் இருந்திருக்க வாய்ப்பு அதிகம் தான் நீ சொல்றது வச்சி பாக்கறப்ப அப்படி தான் தோணுது…. ஆனாலும் யார் அந்த கருப்பாடு?”, இப்போது வருணை ஸ்வேதா பின்னிருந்துக் கட்டிக்கொண்டு அமர்ந்தாள்.
“அவ குழப்பம் நியாயம் தான் வருண்… அவ உள்ளுணர்வு மேலயே அவளுக்கு சந்தேகம் வந்தா வாழ்க்கைல ரொம்பவே தடுமாற்றம் வரும்…”
“இதுக்கு ஒரே வழி அவரு வாய திறந்து சொல்லணும், இல்லையா இதபத்தி தெரிஞ்சவங்க சொல்லி அது சரியான்னு இவர்கிட்ட கேட்டு உறுதி பண்ணிக்கணும்….. “
“ஆமாங்க….”
“சரி நீ அவளுக்கு என்ன சொன்ன?”
“இதுலாம் ஓரமா ஒதுக்கி வச்சிட்டு வாழ ஆரம்பி.. காலம் வந்தா தானா எல்லாம் தெரியும்ன்னு சொன்னேன்…”
“இதுவும் சரி தான்…. இத யோசிச்சிட்டு இருந்தா வாழ முடியாது…. ஆனாலும் இவங்க லவ் ஸ்டோரி செமல்ல…. சேரமுடியாதுன்னு நினைச்ச காதல் கைசேர்ந்துரிச்சி…..”
“ஆமாங்க… அவ முகத்துல இப்போதான் பழைய சிரிப்பு வர ஆரம்பிச்சி இருக்கு…. இப்படியே அவ இருந்துடுவாளோன்னு ரொம்ப கவலப்பட்டேன்.. இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு… இவளும் செட்டிலாகிட்டா, சுந்தரியும் செட்டிலாகிட்டா…. இனிமே நாங்க கேர்ள்ஸ் டிரிப் போவோமே…”, எனக் கணவனின் கன்னத்தைக் கடித்தாள்.
“ஆ…..”, வருண் கத்தும் சத்தம் வெளியே கேட்கவும் ரதி சிரித்தபடி வெளியே செல்ல, ரகு அவளைப் பின்தொடர்ந்துச் சென்றான்.
“உன் பிரெண்டு பிஸியாகிட்டாங்க போல.. நாமளும் பிஸி ஆகலாமா பேபி?”, என அவள் காதருகில் கிறக்கமாகக் கூற, அவள் தான் விலுக்கென்று பின்னால் குதித்து நின்றாள்.
“ஏண்டி ?”, அவள் அப்படி குதித்ததும் அவன் திருதிருவென்று விழித்தபடிக் கேட்டான்.
“பயந்துட்டேன் ராக்கி.. இப்படியா பின்னாடி இருந்து பேசுவீங்க?”, என ஆழ சுவாசம் எடுத்துத் தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.
“அப்போ இப்படி பேசவா?”, என அவளை முன்னால் இழுத்து இடையைக் கட்டிக்கொண்டுக் கேட்டான்.
“அவங்க வெளிய வந்துடப்போறாங்க டா… விடு… “, அவள் திமிர திமிர இறுக்கம் தான் கூட்டிக்கொண்டே இருந்தான் அவள் கணவன்.
“யப்பா…. மூச்சு முட்டுது டா… “
“ரெண்டு நாளைக்கு முன்ன நீ என்னை மூச்சி முட்ட வச்சியே அத விடவா டி என் டிலைட்ஃபுல் கிஸ்ஸி…… அது எவ்ளோ செமயா இருந்தது தெரியுமா? அவ்ளோ வேகம் எப்படி டி வந்துச்சி உனக்கு? “, என அவளை அருகே இழுத்தபடி அவன் கேட்கவும், அவளுக்கு தான் குப்பென இரத்தம் பாய்ந்து கன்னம் சிவக்க வைத்தது.
“சும்மா இரு டா… அதையே நீ சொல்லி கட்டிட்டு இருக்காத….. “, சிணுங்களாக அவளின் பதில் வெளிவந்தது.
“அட .. என் பொண்டாட்டிக்கு வெக்கம் எல்லாம் கூட வரும் போலவே… “, என அவன் அவள் இதழை நெருங்கவும் பின்னால் இருந்து இருமல் சத்தம் கேட்டது.
“விடுங்க…. “, என பின்னால் நின்ற வருணை பார்த்துவிட்டு அவசரமாக விலகினாள்.
ரகுவும் அவனைக் கண்டு அசடு வழிந்தபடி அவளை விட்டுவிட்டு, “வாங்க ப்ரோ…. உங்க வொர்க் இன்னிக்கி முடிஞ்சதா?”, என சகஜமாக பேச ஆரம்பித்தான்.
“நாளைக்கு தான் முடியும் ப்ரோ.. வாங்க சாப்பிடலாம்…. அதுக்கு தான் கூப்பிட வந்தேன்.. ஸ்வே மேல போன ரதி மேல இருக்கான்னு நினைச்சிட்டு….”, சங்கோஜமான சூழ்நிழையில் நுழைந்த காரணத்தை கூறினான்.
“சரி சரி….. வாங்க சாப்பிடலாம்…. எனக்கும் இன்னிக்கி செம பசி…. “
“கடைல வேலை அதிகம்ன்னு மதியம் கூட நீங்க சாப்பிட வரல….. அது முடிஞ்சதா?”
“முக்கால்வாசி முடிஞ்சது.. அடுத்த வாரம் பர்சேஸ் போகணும் அதுக்கு தான் ஸ்டாக் பாத்துட்டு இருந்தோம்…”, எனக் கடை விவரங்களைப் பேசியபடி இருவரும் உள்ளே வந்தனர்.
அதற்குள் ரதியும் தன்னை சமன்படுத்திக்கொண்டு, சப்பாத்தி போட்டுக் கொண்டிருந்தாள்.
ஸ்வேதா பரிமாற ரதி சப்பாத்தி, தோசை, ஆம்லெட் என கேட்பவற்றை போட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“நாளைக்கு நீங்க ஃப்ரீயா இருந்தா குணா குகை போயிட்டு, அந்த பக்கம் எஸ்டேட் பாத்துட்டு வரலாம்….”, வருண் கேட்டான்.
“நான் வேலை முடிச்சிட்டு 10.30 மணிக்கு வரேன் வருண்… அந்த டைம் ஓக்கேயா ?”
“டபுள் ஓகே ரகு….”
“அப்போ சுந்தரிய கேட்கவா அவளும் ஹப்பி கூட வந்தா நீங்க மூணு பேரும் செட் ஆகிடுவீங்க…”, ரதி அடுப்பின் முன் நின்றபடிக் கேட்டாள்.
“உங்களுக்கு நாங்க 3 பேரும் செட் ஆகனும் அதானே? அவங்க ஃப்ரீயா இருந்தா வர சொல்லுங்க… எல்லாரும் போலாம்…”, ரகுவும், வருணும் சிரித்தபடிக் கூறினர்.
சுந்தரிக்கு அழைத்து விஷயத்தை கூறவும், அவள் கணவனிடம் கேட்டுவிட்டு காலையில் அங்கு வருவதாகக் கூறினாள்.
“காலைல டிஃபன் இங்க வந்துடுங்க …. நான் ரெடி பண்ணிடறேன்….. “
“இல்ல வேணாம் ரதி… நாங்க இங்க மறுவீடு வந்திருக்கோம், அதனால் இங்க சாப்ட்டு வந்துடறோம்.. இல்லைன்னா எங்கம்மா பாட்டு பாட ஆரம்பிச்சிடும்…. இன்னொரு நாள் உன் வீட்டுக்கு சாப்பிட வரோம்…”, எனச் சொல்லி சுந்தரி காலையில் 10 மணிக்கு வருவதாகக் கூறி வைத்தாள்.
“மேடம் பயங்கர பிஸியா இருக்காங்க போல….”, ஸ்வே சிரித்தபடிக் கேட்டாள்.
“ஆமா ஸ்வே…. பாரேன் டக்குன்னு பேசிட்டு வச்சிட்டா…. குடும்ப பொறுப்பா மாறிட்டாளோ?”
“மாறி இருப்பா தான் ரதி… அவரு அவ முகம் கோணாம இருக்க நெறைய விசயம் பண்றதா முன்னேயே சொன்னா….. அவங்க இவ வேலை வசதி பாத்து, நிச்சயம் உறுதி பண்ற தேதி வச்சதுன்னு நெறைய சொன்னா…..”
“இதுலாம் எனக்கு சொல்லவே இல்ல டி அவ… “, ரதி ஆதங்கத்துடன் கூறினாள்.
“உறுதி பண்ணதே உனக்கு சொல்லலியா?”
“இல்ல… எங்கம்மா அப்பாவுக்கு ஆக்சிடென்ட்.. உடனே வானு இவரு பண்ண டிராமால தான் நான் ஓடி வந்தேன்…. அவ கல்யாணம் உறுதி பண்ணதும் தெரியாது, என் கல்யாணம் முடிவு பண்ணதும் தெரியாது….”
“ஹாஹாஹா… இது நல்ல கதை தெரியுமா ரதி… நாளைக்கு உன் பேர பசங்களுக்கு நல்லா கதை சொல்லலாம்…. ரொம்ப ராவடி கட்டின-ன்னு மட்டும் அவ சொன்னா… ஏன் டி அப்டி பண்ண?”
“திடீர்னு கல்யாணம் அதுவும் இவரோடன்னு சொன்னா நான் என்ன பண்றது? இவருக்கு கல்யாணம் ஆகிரிச்சின்னு நினைச்சி ஒரு வருஷம் முன்ன தான் ஆகலன்னு தெரியும். இருந்தாலும் ஒரு பயம் பதட்டம்… அதுவும் இல்லாம இவரு என்னைய லவ் பண்ணலன்னு சொன்னது எல்லாம் மனசுக்குள்ள உறுத்திக்கிட்டு இருக்கறப்போ நான் என்ன பண்றது…? என் கல்யாண ஃபோட்டோ பாரு என் மூஞ்ச என்னாலேயே பாக்க முடியல.. அப்பிடி தெகச்சி நின்னுட்டு இருந்தேன்…. இப்போ தான் கொஞ்சம் நார்மல் ஆகிட்டு வரேன்…… எப்பா… இப்போ நினைச்சாலும் மயிற்கூச்சம் வருது தெரியுமா…. எல்லாரும் போட்ட பிளான்னு இங்க வந்ததும் தெரிஞ்சது, செம கோவம், வருத்தம் குழப்பம்ன்னு போக கல்யாணமே முடிஞ்சி போச்சி…. எதுவுமே என் மைண்ட்ல நிக்கல…..”
படபடவென அவள் பேசிய விதமும், அவளின் வருத்தமும் அதில் நன்றாக உணர முடிந்தது. இதை ஹாலில் இருந்து ரகுவும், வருணும் கேட்டுக் கொண்டு தான் இருந்தனர்.
“ரகு.. நாம ஒரு வாக் போகலாமா?”
“போலாம் வருண்…. ரதி நாங்க வாக் போயிட்டு வரோம்….”
“ஒரு நிமிஷம் இருங்க…..”, என உள்ளிருந்து தண்ணீர் பாட்டில், ஒரு லிஸ்ட், ஒரு கட்டப்பை கொண்டு வந்துக் கொடுத்தாள்.
“ரகு.. இதுலாம் வரப்போ வாங்கிட்டு வந்துடுங்க… இந்தாங்க தண்ணி..வெளிய குடிக்காதீங்க….. “
“கடைசில இத வாங்க தான் அவ்ளோ அக்கறையா நிக்க சொன்னியா?”
“மெனு போட்டா மட்டும் போதாது, அதுக்கு தேவையானது வாங்கிட்டும் வரணும்…. “, என அவனுக்கு மட்டும் தெரியும்படி பழித்துகாட்டிவிட்டு அனுப்பிவைத்தாள்.
ரகுவும், வருணும் மெல்ல பனி மூடும் சாலைகளின் நடுவில் நடந்தனர்.
“கல்யாண வாழ்க்கை எப்படி போகுது ரகு? ரதி கூட செட் ஆக ஆரம்பிச்சுட்டீங்களா?”
“அவளோட செட் ஆகறதுங்கறத விட அவளோட இயல்புல நானும் இயல்பா மாறிட்டேன்-ன்னு சொல்லலாம்…. என்னோட இத்தன வருஷ தனிமையுணர்வு இந்த ரெண்டு வாரத்துல காணாம போயிருச்சு…. “, மெல்லிய சிரிப்புடன் கூறினான்.
“ரதிக்கு நீங்க பல வருஷ காதல்.. அவ உங்களுக்கு?”
“ஹாஹா… ரதி ஸ்வேதாகிட்ட பேசினத நானும் கேட்டேன் வருண்…. “
“அவ குழப்பம் தீர்க்க என்ன செய்ய போறீங்க? “
“அவள காதலிக்க போறேன்….”, கண்கள் மின்னக் கூறினான்.