209 views

அத்தியாயம் 16 

இனிமையான அதிகாலை…! அழகான வானிலை…!

இன்றும் இவற்றை ரசித்து, கொண்டாட இளந்தளிருக்கும், சுபாஷினிக்கும் தான் மனம் இசைந்து கொடுக்கவில்லையே!

முந்தைய இரவின் நிகழ்வு இருவரையுமே பதறிக் கலங்கச் செய்திருக்க, இப்போதும் தாயைக் காண இவர்களுக்கு சற்று கவலையாகவே இருந்தது.

எழுந்ததில் இருந்து, ஒவ்வொரு வேலையையும் மௌனமாகவே செய்து முடித்தனர் மூவரும்.

” இளா! இன்னும் ஒரு தடவை நல்லா நேரம் எடுத்து யோசிச்சு, முடிவைச் சொல்லு. அவசரம் இல்லை ” சிவசங்கரி மகளிடம் கூற,

அவளும்,
” ஈவ்னிங் சொல்றேன் – மா. போய்ட்டு வர்றேன். சுபா பாய் ” தங்கையிடமும் ஒரு வார்த்தைக் கூறி விட்டுச் சென்றாள்.

” அம்மா ! நானும் கிளம்பறேன் “

செல்லாமல் கால்கள் அதே இடத்தில் இருக்க,

சிவசங்கரி ” நேத்தே எல்லாம் சொல்லியாச்சுன்னு நினைக்கிறேன் சுபா!. படிப்பில கவனம் செலுத்து. போய்ட்டு வா “

இளந்தளிர் அருகிலிருந்த மிதுனாவிற்கு அன்று போல், இன்று முகத்தில் சோர்வையோ, பதட்டத்தையோ , வேறெந்த உணர்ச்சியையோ தெரியும் படி இருந்து விடக் கூடாது என்று நினைத்திருக்க,

மிதுனா , ” ஹாய் இளா! ”
என்று புன்னகைக்க,

” ஹாய் மிது “

” இரண்டு நாள் நான் ஆஃபிஸூக்கு லீவ் இளா! இன்னைக்கு லீவ் க்கு அப்ளை செய்யனும் “

” அப்படியா ! என்ன விஷயம் மிது ? “

” என்னோட பாட்டி என்னப் பார்த்து ரொம்ப மாசமாச்சு – ன்னு சொல்லி கூப்பிட்டு இருக்காங்க. அதனால் கோயம்புத்தூர் போகனும் இளா. அப்பா, அம்மா காலைலயே கிளம்பிட்டாங்க. நான் ஈவ்னிங் லீவ் சொல்லிட்டுக் கிளம்பிப் போகனும். இரண்டு நாட்கள் நீ மேனேஜ் செய்துக்குவ தான? “

” நான் பாத்துப்பேன் மிது. நீ ஊருக்குப் போய் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா ” என்று கூறி, அவள் விடுப்பு எடுப்பதற்கான வேலையைச் செய்ய, இளந்தளிரும் அவளைத் தொந்தரவு செய்யாமல், விடுபட்ட வேலைகளை மேற்கொண்டாள்.

அரை மணி நேரம் கழித்து,
” இளா ! நான் லீவ் மெயில் பண்ணிட்டேன். டீம் லீட் கிட்டயும் இன்ஃபார்ம் பண்ணிட்டேன்.நான் சாயந்தரம் கிளம்பினதும், உனக்கு மெசேஜ் பண்றேன். வொர்க் – ல எதாவது டவ்ட் இருந்தா எனக்குக் கால் பண்ணு இளா “

” ஓகே மிது. பாத்துப் போய்ட்டு வா. ஹேப்பி ஜர்னி! “

🌺🌺🌺🌺🌺🌺

” நிறைய தடவை யோசிச்சுட்டேன் மா. அவசரத்தில் எடுத்த முடிவும் இல்லை, சம்மதிச்சா உங்கள கோபம் தீரும்னு எடுத்த முடிவும் இல்லம்மா. கல்யாணம் செய்ய மென்டலி தயாராகிட்டேன் மா. “

மனதளவில் யோசித்து, சம்மதம் தெரிவித்து விட்டாள் என்ற நிம்மதியில்,

” தரகர்கிட்ட கேட்டு, அவர் மாப்பிள்ளையோட ஃபோட்டோவை அனுப்பினா ,  உன் மொபைலுக்கு அனுப்பறேன். பாத்துட்டு சொல்லு “

அந்தப் பேச்சு முடிவுற்றதும் தானாக அம்மாவிடம் சென்ற சுபாஷினி,
” அம்மா ! சோகமா  இருக்காதீங்க!! எனக்கு ஏதோ மாதிரி இருக்கு. இனி ஒரு தடவை கூட நான் இப்படி இருக்கவே மாட்டேன்! நீங்க எவ்ளோ வேதனைப்பட்டுட்டு இருக்கீங்க ன்னுப் பார்க்கும் போது கஷ்டமா இருக்கு. என் மேல் அடுத்து நீங்க வைக்கிற நம்பிக்கையை நிச்சயம் காப்பாத்துவேன் மா. ” என்று அதையே சொல்லி அழுது அரற்றிய மகளைக் கட்டிக் கொண்டு,

” சுபா..! நான் உன்னை நம்புறேன் டா. அழக் கூடாது..! ” சிவசங்கரி அவளைத் தேற்ற ஆரம்பித்து விட, இளந்தளிருக்கும் தங்கையின் அழுகை மனதை என்னவோ செய்ய,

” குட்டி தங்கச்சி அழாதடா! “
முதுகை நீவி விட்டுக் கொண்டு கூற,

அழுகை சற்று மட்டுப்பட்டதும்,
  ” பாரு சுபா! இதை இத்தோட விட்ரனும். நீ சும்மா சும்மா கண்ணைக் கசக்கிக்கிட்டே இருந்தா தான் எனக்குக் கவலையாக இருக்கும் “

” அழ மாட்டேன் மா ” என்று அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அவளது நெற்றியில் முத்தமிட்டு , மீண்டும் மகளை அணைத்துக் கொண்டார் சிவசங்கரி.

அடுத்துப் பார்க்க வேண்டியது இளந்தளிரின் திருமண சுப விஷயத்தைத் தான்!

முன்னரே கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்லி விட்டதால், இப்போதும் அதுவே சரி என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த அசௌகரியமான நாட்கள் கழிந்து , இல்லத்தில் அமைதி நிலவியது. வீட்டில் நிகழ்ந்தவை, கோவர்த்தனைப் பற்றிய ஞாபகங்களைப் பின்னுக்குத் தள்ளி விட, வழிப்போக்கனைக் கடந்து செல்வது போல், அவனது நினைவுகளையும் மறக்கத் தொடங்கினாள் இளந்தளிர்.

அவனைக் காணாது தவிக்கவும்,
பார்த்ததும் அவனுள் தொலைந்து போய் விட நினைப்பதும் தனக்கு ஒத்து வராது! இதில், தங்கையை உற்சாகப்படுத்த, சுபாஷினியுடன் அதிக நேரம் செலவிட்டாள்.

🌺🌺🌺🌺🌺🌺

” டேய் அண்ணா! ” மைதிலி தான் தமையன் ஹரீஷை அழைத்துக் கொண்டு இருந்தாள்.

” டேய் – னு சொல்லி கூப்பிட்டுட்டு, எதாவது வேணும்னு கேளு அப்பறம் உனக்கு இருக்கு ! “எச்சரிக்கும் விதத்தில் பேசினான் ஹரீஷ்.

” அச்சச்சோ! ” உடனே தன் அழைப்பில் மரியாதையை வரவழைத்துக் கொண்டு,

” அண்ணா…! அன்பு அண்ணா…! உனக்குத் தான் தெரியுமே என்னோட லேப்டாப் சர்வீஸுக்குக் கொடுத்து இருக்கேன் – னு ” என்று அசடு வழியக் கூற ,

” ஆமா. நல்லாவே தெரியுமே! அதைப் போய் வாங்கிட்டு வரனுமா ? “

” இல்லை ண்ணா. சர்வீஸ் பாத்து முடிக்க த்ரீ டேய்ஸ் ஆகும். உன்னோட லேப்டாப் குடு – ண்ணா? “

” ஓஹோ..! என்னோட லேப்டாப் தான் டம்மியாச்சே! நீ கூட பல தடவை கழுவி ஊத்தி இருக்கியே! இப்ப மட்டும் அதைக் கேட்டு வந்திருக்க ? “

” இம்ப்பார்ட்டண்ட் ப்ரோக்ராம் போட்டு, அவ்ட்புட் கொண்டு வரனும். நாளைக்கு மாடல் ப்ராக்டிகல் இருக்கு ண்ணா “

” மாடல் ப்ராக்டிகலா? முதல்லயே சொல்றதில்லையா நீ! ரூம் – ல இருக்குப் போய் எடுத்துக்கோ “

” தாங்க்யூ ஹரீஷா! ” குறும்பாய்க் கூறிவிட்டு, அவனுடைய அறையிலிருந்த மடிக்கணினியை எடுத்துக் கொண்டாள் மைதிலி.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *