Loading

அத்தியாயம் 16

“என்னோட பிரவுனிய, எனக்கு பார்த்த உடனே ரொம்ப பிடிச்சு போச்சு. வாயில ஈப்போறது கூட தெரியாம என்னைய ஜொள்ளு ஒழுக பார்த்துக்கிட்டே இருந்தல்ல அப்போவே உன்ன நான் பாத்துட்டேன்.”

 

” அப்போ உங்களுக்கு என்ன பாத்ததுமே புடிச்சு போச்சா சார்?!?”

 

” பின்ன துரு துருனு ஒரு நிமிஷம் கூட நிக்காம ஓடிக்கிட்டு அந்த பசங்க கூட நீ பண்ண சேட்ட. அதுவும் அந்த தெத்து பல்லு தெரிய சிரிச்சது தூரத்தில் இருந்து உன்ன நான் பார்த்துக்கொண்டே தான் வந்தேன். அஞ்சு அடில சாக்லேட் கலர் டெடி பியர் மாதிரி இருக்க உன்ன பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு தெரியுமா. ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்!’ கிட்டக்க வர வர தான் உன் பார்வை என்ன சொல்லுதுங்கறது எனக்கு தெரிஞ்சுச்சு. சரி உன்ன கொஞ்சம் சீண்டிப் பார்ப்போம் ன்னு தான் கிட்ட வந்து உன்ன பாப்பா ன்னு கூப்பிட்டது. ரோட்ல போற யாரோ ஒரு பொண்ண டக்குனு கை நீட்ட முடியுமா?? என்னவோ தெரியவில்லை உன்னை பார்த்ததுமே எனக்கானவ ன்னு எனக்கு தோணுதுனால தான் இப்படி பப்ளிக் ரெஸ்பான்ஸ் இல்லாம இருக்கன்னு கோவமும், உரிமையும் ஒன்னா வந்து கை ஓங்கிட்டேன். “

 

” அப்புறம் ஏன் சார் என்ன இத்தனை மாசமா அலைய விட்டீங்க. “

 

” அடிங்க எத்தனை மாசம் டி. நாலு மாசம் இருக்குமா அவ்வளவு தானே?? உன்ன பார்த்ததும் ரொம்ப புடிச்சி இருந்துச்சு தான் ஆனா உன்ன மறுபடி எப்போ பார்க்குறது ன்னு தேடிட்டு இருந்த எனக்கு காலேஜ்ல உன்ன என் ஸ்டூடண்டா பாப்பேன்னு நான் என்ன கனவா கண்டேன். எனக்குனு ஒரு எத்திக்ஸ் இருக்குடி. எப்படி என்னோட ஸ்டுடென்ட்ட நான் தப்பா பார்க்கிறது அப்படின்னு ஒரு மனசுல போராட்டம் பண்ணாலும், நீ அவள ஸ்டுடென்ட்டா பாக்குறதுக்கு முன்னவே லவரா பாத்துட்டன்னு இன்னோரு மனசு சொல்லுச்சு. சரி உன் படிப்பு முடியுறவர உன்கிட்ட என் லவ் சொல்லவேண்டான்னு தான் நினச்சேன். ஒன் இயருக்கு தானே நீ ஸ்டுடென்ட் அதுக்கப்புறம் உன்னை நான் லவ் பண்றதுக்கோ, கல்யாணம் பண்றதுக்கு எந்த பிரச்சினையும் இருக்காதுன்னு தான் இப்போ சொல்லிட்டேன். “

 

“அப்போ நம்ம லவ் செலிப்ரட் பண்ண எங்கயாச்சும் அவுட்டிங் போலாமா சார்?”

 

“ஹாஹா!! என் அழகு பிரவுனி இன்னும் ஒரு மாசத்துல செமஸ்டர் வருது உனக்கு. நீ அரியர் இல்லாம பாஸ் ஆகணும் அதுல கான்செண்ட்ரேட் பண்ணு. அப்புறம் கண்டிப்பா போலாம். தென், உன்னோட அழுகையை பார்க்க முடியாம தான் நான் லவ் பண்றத உங்கிட்ட ஒத்துக்கிட்டேன். சோ, ஒன் இயருக்கு நம்ம ஸ்டுடென்ட் அண்ட் டீச்சரா இருக்கிறது தான் நல்லது. உனக்கு அப்படி லவ் பண்ணனும் ன்னு ஆசை இருந்ததுன்னா உன் படிப்பு முடிச்சிட்டு ஆசை தீர ரெண்டு வருஷம் லவ் பண்ணிட்டு கூட கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா நீ காலேஜ் முடிச்சு வர வரைக்கும் எனக்கு நீ ஸ்டூடண்ட் மட்டும் தான் வேற எந்தவித ஆசையும் வளத்துக்காதே. இப்போவே அதெல்லாம் தெளிவா சொல்லிடறேன்.”

 

“சார்ர்ர்ர்.”

 

” வேணாண்டா தங்கம். நம்ம யாருக்கும் பேட் எக்ஸாம்பிளா இருக்கக்கூடாது. உன்னோட படிப்பும் உன்னோட ஃபுட்பால் எனக்கு ரொம்பவே முக்கியம். நான் என்னோட செல்ல பிரவுனிய பார்த்ததுமே விழுந்துட்டேன் ஒத்துக்கிறேன். ஆனா என்னோட எதிர்க்ஸ் எல்லாம் மீறி நான் லவ் பண்றத ஈகோவை விட்டு ஒத்துக்கிட்டதெல்லாம் என்னோட ஸ்டேட் பிளேயர்காக தான். நீ ஃபுட்பால் பிளேயரா சக்ஸஸா இருக்கிறது தான் எனக்கு சந்தோஷம். அதுக்கு எந்த பாதிப்பும் இல்லாம இருக்கனும். அது மட்டும் இல்லாம சிங்கிளா இருக்கறதெல்லாம் ஒரு வரும் காலேஜ் லைஃப் நல்லா என்ஜாய் பண்ணு. நம்ம ரெண்டு பேரும் லவ் பண்ணறது எல்லார்கிட்டயும் எக்ஸ்பிரஸ் பண்ணனும்னு அவசியம் இல்ல. உனக்கு தெரியும் நான் உனக்கு உண்மையா இருப்பேன்னு. எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. அதனால இன்னும் ஒன் இயர் தான் இந்த காலேஜ் லைஃப் அதுக்கப்புறம் ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ் வந்து காலேஜ் லைஃப்க்கு போக முடியாதான்னு ஏங்க வச்சுரும். சோ அதுவரைக்கும் நீ ஜாலியா என்ஜாய் பண்ணு நான் எந்த டிஸ்டர்பும் பண்ண மாட்டேன். “

 

“ம்ம்ம்!!”

 

” என்ன மேடம் உம்முன்னு ஆயிட்டீங்க கோவமா?”

 

“இல்ல இல்ல!! நீங்க ரொம்ப ரொம்ப அழகா பேசுறீங்க. எனக்கு நீங்க பேசுறது கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு.”

 

“ஹாஹா!! அப்படியா அப்போ சரி நீ காலேஜ் வொர்க் எல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டு சொல்லு டெய்லி ஒன் ஹாவர் போன் பேசலாம் இப்போ ஹாப்பியா என் பிரவினிக்கு.”

 

“ரொம்ம்ம்ப ஹாப்பி. ஐ லவ் யூ சூர்யா சார்!!”

 

“ஐ லவ் யூ சோ மச் என் க்யூட்டி!!”

 

இளம் காதலர்கள் போல பேசிக்கொண்டாலும் எந்தவித சரசமான உரையாடல்களும், அத்திமீறிய பேச்சுகளும் இல்லாமல் இருவரும் இனிமையாக பேசினார்கள். அதற்கு என்னவோ முழு காரணம் தேவகி தான்.

 

அத்தனை அவசரமாக காதலில் விழுந்தவள், அத்தனை அவசரமாக இவனிடம் வெளிக்காட்ட துடித்தவள் பேச்சில் அவ்வளவு நிதானமாகவும் அனாவசிய பேச்சுகள் இல்லாமலும் ஒரு ஆணிடம் அவன் ஆசைகளை எந்த விதத்திலும் தூண்டாமலும் அவ்வளவு நேர்த்தியாக பேசினாள். சூர்யாவுக்கு என்னவோ இந்த தேவகியை மிக மிக பிடித்துப் போனது.

 

சூர்யாவிடம் பேசிவிட்டு பிறகு நண்பர்களிடமும் இவருக்கும் நடந்த உரையாடல்களை எந்த அளவுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அந்த அளவிற்கு பகிர்ந்து கொண்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.

 

அன்று ஆரம்பித்தது இவர்களின் காதல் வாழ்க்கை. தினமும் காலையில் “குட் மார்னிங் பிரவினி” என்று பல ஹார்ட்டின் வைத்த பொம்மைகளை அனுப்பி ஆரம்பிக்கும் உரையாடல், இரவில் அவளின் “குட் நைட் சார். ஐ லவ் யூ” என்பதில் தான் முடியும்.

 

அது என்னவோ ஒவ்வொரு உரையாடலின் இறுதியில் ‘ஐ லவ் யூ’ என்று கூறாமல் அவள் அந்த உரையாடலை முடித்ததே இல்லை. அவனும் எத்தனையோ முறை நீ சொன்னால்தான் எனக்கு தெரியுமா என்றெல்லாம் சொல்லியும் பார்த்தாச்சு ஆனாலும் ஒவ்வொரு முறையும் அழைப்பை துண்டிப்பதாக இருந்தாலும் சரி, இல்லை உரையாடலை முடிக்கும் பொழுதும் சரியாக அதை கூறிவிடுவாள்.

 

தினமும் பதினைந்து நிமிட இடைவெளியில் லைப்ரரியில் சந்திப்பதும் பிறகு வீட்டிற்கு கிளம்பும்பொழுது அவர்களின் ஆஸ்தான மரத்தடியில் அமர்ந்து சற்று நேரம் உரையாடி விட்டு கிளம்புவதுமாக இருப்பார்கள்.

 

எல்லோரிடமும் சிடுசிடு என்று ஒதுங்கி நிற்கும் சூர்யா, இன்னொரு பக்கம் தேவகியிடம் கனிந்து பேசுவதும் அருகில் உட்காரும் அளவிற்கு ஏன் இந்த இணக்கம் என்று எல்லோர் கண்ணையும் உருத்தாமல் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசப்பட்ட பேச்சு இப்போது கல்லூரி முழுவதும் இவர்களின் காதல் காட்டு தீ போல பரவியது.

 

அது காலேஜ் பிரின்ஸ்பல், கரஸ்பாண்ட் வரைக்கும் சென்றது. அதை அறிந்த சூர்யா அவர்களாக கூப்பிட்டு கேட்கும் முன் தானாக விளக்கி விடுவது நல்லது என்று தோன்றவே கரஸ்பாண்ட் நேஷனல் டீம் பிளேயர்ஸ் லிஸ்ட் உடன் தலைமை ஆசிரியர், கோச் என்று மீட்டிங்காக கூடிருந்தார்கள் தலைமை ஆசிரியர் அறையில். அப்போது அவர்கள் பேசி முடித்த கையோடு சூர்யாவும் அனுமதி கேட்டு உள்ளே சென்றான்.

 

” எக்ஸ்கியூஸ் மீ சார்!!”

 

“வாங்க சூர்யா!!!”

 

“குட் மார்னிங் சார்!! உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.” தயங்கி தயங்கி பேச்சை ஆரம்பித்தான்.

 

இவர்களுக்கும் அந்த செய்தி பரவலாக வந்தது. சூர்யாவின் மேல் நன்மதி இருப்பதால் கூப்பிட்டு விசாரிக்கும் அளவிற்கு வைத்துக் கொள்ள மாட்டான் என்பதனால் இவர்கள் கண்டு கொள்ளவில்லை.

 

“சொல்லுங்க சூர்யா சார்!!”

 

” அது இல்ல நீங்க அல்ரெடி கேள்வி பட்டிருப்பீங்க இருந்தாலும் நான் முறையா சொல்றது தான் நல்லது. செகண்ட் இயர் ஸ்டேட் பிளேயர் தேவிகி இருக்காங்கல்ல அவங்களும் நானும் லவ் பண்றோம் கல்யாணம் பண்ணிக்க போறோம். எங்க வீட்ல நான் பர்மிஷன் வாங்கிட்டேன். அவ வீட்ல ஸ்டடிஸ் முடிச்சதும் நான் பேசுவேன் இந்த விஷயம் காலேஜ்ல ஸ்பிரெட் ஆகிடுச்சு. ஒரு ஸ்டூடன்ட் ப்ரொபசர லவ் பண்றது இங்க நிறைய பேருக்கு அது ஒரு தப்பான எக்ஸாம்பிளா இருக்கக் கூடாது. அதனாலதான் நான் ரொம்ப கண்ட்ரோலா இருந்தேன். அவகிட்ட லவ் எக்ஸ்பிரஸ் பண்ண கூடாதுன்னு பட் அன்பார்ச்சனேட் வேற வழி இல்லாம எக்ஸ்போஸ் பண்ணிட்டேன். இதனால் அவளோட படிப்புக்கோ இல்ல ஃபுட்பால் மேட்ச்கோ, நம்ம காலேஜ் ஓட பேருக்கோ கண்டிப்பா எந்த பாதிப்பும் வராது அதுக்கு நான் கேரன்டி. பட் நீங்க யாரும் இந்த விஷயத்துல என்னையும் அவளையும் தப்பா எடுத்துக்க கூடாது என்பதற்காக நான் இன்போர்ம் பண்றேன்.”

 

கரஸ்பாண்டன்ட், ” சூர்யா நீங்க இவ்வளவு திக்கி திணறி பேசணும் பர்மிஷன் கேட்கணும் ன்னு எந்த அவசியமும் இல்ல. நீங்க இந்த காலேஜ்ல ப்ரொபசரா இருக்குறதுக்கு முன்னாடியே ஸ்டூடண்டா இருந்தவரு. ட்ரைனிங் லட்சராக இருந்தவர். உங்களோட ஒழுக்கதுக்காக தான் நான் உங்களுக்கு இங்கே ஒர்க் கொடுத்தேன் அது உங்களுக்கு நல்லாவே தெரியும். சோ லவ் எல்லாம் உங்க பர்சனல் மேட்டர் அதையும் தாண்டி நம்ம காலேஜுக்கு எந்த கெட்ட பேரும் வரக்கூடாது. நீங்க இவ்வளவு ஸ்ட்ரோங்கா சொல்றதுனால ஓகே பைன் தான். எதுவா இருந்தாலும் வெளியில போய் பார்த்துக்கோங்க அவ்வளவுதாங்க எங்களோட அப்ளிகேஷன் தவிர மத்தபடி இதெல்லாம் உங்க பர்சனல் மேட்டர் கண்டிப்பா நீங்க எந்த ஒரு ஸ்டூடண்டுக்கும் கெட்ட முன் மாதிரியா இருக்க மாட்டீங்கிறது என்னோட நம்பிக்கை.”

 

” தேங்க்யூ சோ மச் சார் நான் எப்படி நீங்க எடுத்துக்குவிங்கற ஒரு பயத்துல தான். “

 

தலைமை ஆசிரியர், ” கம் ஆன் சூர்யா உங்களால தான் இப்போ நம்ம காலேஜ் நேஷனல் டீமுக்கு செலக்ட் ஆகி இருக்காங்க. எனக்கு கோச் சொன்னார் நீங்களும் அவரும் போய்தான் தேவகி வீட்ல பேசி அவங்கள கூட்டிட்டு வந்தீங்க அப்படின்னு. அவங்களோட ஸ்டடீஸ் லிஸ்ட் எடுத்து பார்த்தா பெருசா ஆரியர் அந்த மாதிரியும் இல்ல ஒரு நேஷனல் பிளேயர் அண்ட் ஆவரேஜ் ஸ்டூடன்ட் அவங்க அது ஓகே தான். நீங்க லவ் பண்ணப்போவே எங்க காதுக்கு அந்த நியூஸ் எல்லாம் வந்தாச்சு அவங்களோட எந்த பிஹேவியர்லையும் சேஞ்சஸ் இல்ல சோ அதனால எங்களுக்கு எந்த பிராப்ளம் இல்ல. நீங்க பயப்படணும்னு அவசியம் இல்ல. அண்ட் தென் இன்னும் ஒன் இயருக்கு இதே மாதிரி நீங்க ஸ்மூத்தா கொண்டு போயிடுங்கன்னா காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் அது உங்க பர்சனல் லைஃப்பா மாறிடும் அத பத்தி ஒரு அப்ஜெக்ஷனும் எங்களுக்கு இருக்காது.”

 

“தேங்க்யூ சார்!!”

 

மரியாதையாக வணக்கம் கூறியவன் எழுந்து கிளம்பிவிட்டான். அவ்வளவு நேரம் யோசனையாக சூர்யா பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்த கோச், அவன் கிளம்பவும் கரஸ்பாண்டிடமும், தலைமை ஆசிரியரிடமும் நன்றி கூறிவிட்டு சூர்யாவின் பின்னே அவரும் சென்று விட்டார்.

 

சூரியன் ஒளிரும்

ரித்தி 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. சூர்யா அவனோட பக்கத்தை ரொம்ப சரியா எடுத்து சொல்லிட்டான் இப்ப இந்த கோச் எதுக்கு அவன் பின்னாடியே ஓடிட்டு இருக்காரு??

      1. Author

        😂😂😂 தேவகி காத்து ஒட்டிற்கும் 😂

    2. Paardaa en aalu romba நல்லவனா இருக்கானே ippo thaan innum romba pidikkuthu avana ❤️❤️ இருந்தாலும் anniyare thambiya நல்லா வளர்த்து இருக்கீங்க 🫣🫣

      1. Author

        அந்நிய சக்தியே தூரம் போ 😂😂😏😏