649 views

ரகுவரன் 23

மனைவியின் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு சுவற்றில் தலை சாய்த்தவன், “பொண்டாட்டி இப்பவும் சொல்றேன்… நான் சொன்னது எனக்கு வேணும். நீ சம்மதிச்சா சந்தோஷமா இல்லன்னா கட்டாயப்படுத்தி.” அவன் போக்கில் பேசிக் கொண்டிருக்க,

“கட்டாயப்படுத்தி பண்ற அளவுக்கு அப்படி என்ன செய்யப் போற மருமகனே.” என்ற அழகுசுந்தரத்தின் ஓசையில் திடுக்கிட்டு  அமர்ந்தான்.

சுவற்றில் காதை வைத்து ஒட்டு கேட்கும் தோரணையோடு அமர்ந்திருந்தார் அழகுசுந்தரம். அவரைப் பார்த்ததும் புரிந்து கொண்டான் மகிழினி பேசியதை கேட்க அமர்ந்திருக்கிறார் என்று. புதிதாக கிடைத்த மாமனாரை அவன் கேவலமாக பார்க்க,

“நீதான் விஷயத்துக்கு வராம இழுத்து அடிச்சுட்டு இருக்க. என் பொண்ணாவது விஷயத்தை முழுசா சொல்லுவா தீர்த்து வச்சுட்டு உன்னை இங்கிருந்து கிளப்பி விடலாம்னு பார்த்தேன், முடியல.” என்று பதமாக இளித்து வைத்தார்.

“உங்க வயசுக்கு பண்ற வேலையா இது?”

“பொழுது போக வேணாமா” என்றார் அசால்டாக அழகுசுந்தரம்.

“உங்க பொழுதுபோக்குக்கு நானும் என் பொண்டாட்டியும் அவல் பொறியா.”

“வயசானவன் சந்தோஷத்திற்காக நமுத்து போன பொறியா இருந்தா கூட தப்பு இல்ல மருமகனே.” என்றதும் அவரை அடிக்க ஏதாவது இருக்கிறதா என்று தேடினான்.

“நீ தேடுறது இந்த வீட்ல இருக்காது. எப்போ நீ உள்ள வந்தியோ அப்பவே என்னை தாக்க பயன்படுத்துற எல்லா பொருளையும் தூக்கி போட்டுட்டேன்.” பல நாள் பழகியவர்கள் கூட ரகுவரனை இந்த அளவிற்கு புரிந்து வைத்திருக்க மாட்டார்கள். இந்த இடைப்பட்ட ஒரு நாளில் மருமகனின் குணத்தை முழுவதுமாக தெரிந்து கொண்டவர் தன் உயிரை காப்பாற்றும் அனைத்து வழிகளையும் தயார்ப்படுத்தி வைத்தார்.

“உங்களுக்கெல்லாம் இந்த ரகுவரன் காமெடியா போய்ட்டான்ல.” என்றவன் வருத்தப்படுவது போல் முகத்தை வைக்க,

“வருத்தத்தோட வருத்தமா கடந்த காலத்தையும் சொல்லிட்டா நல்லா இருக்கும் மருமகனே…” அவன் காதில் பொறுமையாக விஷயத்தை போட்டார்.

கோவமான பார்வையை மருமகன் வீசியதும் பல்லை காட்டியவர், “அப்படி என்ன தான் பிரச்சனைன்னு யோசிச்சு மண்டை வலிக்குது. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு சொல்லட்டா ஒரு குடும்பத்தை சேர்த்து வைச்ச பெருமை என்னை வந்து சேரும்.” என்றதோடு நிறுத்தாமல் நச்சரித்துக் கொண்டே இருந்தார் கடந்த காலத்தை கேட்டு.

அவரின் நச்சரிப்பை தாங்கிக்கொள்ள முடியாத ரகுவரன் ஒரு கட்டத்திற்கு மேல் இறங்கி வர, “மருமகனே பார்க்ல உட்கார்ந்து பேசலாமா.” என்றார் பவ்யமாக.

இறங்கி வந்தவன் மீண்டும் மலையேறிக் கொண்டு முறைக்க, “என்னப்பா இப்படி பார்க்குற… காத்தோட்டமா உட்கார்ந்து பேசலாம்னு நினைச்சது ஒரு குத்தமா.” என்றிட,

“காத்தோட்டமா உக்காந்து பேசவா நீங்க என்னை கூப்பிடுறீங்க.  உங்களை மாதிரியே கதை கேட்க ஆர்வமா இருக்க அந்த நாலு பேரும் கேட்கணும்னு தான.” என போட்டு உடைத்தான்.

தன் எண்ணத்தை அறிந்துக் கொண்ட ரகுவரனை விட்டு தள்ளி அமர்ந்தவர், “பாவம்பா நாலு பேரும் என்னை மாதிரியே வயசானவங்க. வேலைய முடிச்ச ரெண்டு பேர் வீட்டுக்கு கூட போகாம உனக்காக காத்துட்டு இருக்காங்க. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கதைய சொல்லுப்பா.” என்றவரை என்ன சொல்லி திட்டுவது என்று கூட புரியவில்லை ரகுவரனுக்கு.

கெத்தான சிங்கமாய் இருந்த ரகுவரன் ஐந்து வயதான தாத்தாவிடம் சிக்கிக்கொண்டு அல்லோலப்படுகிறான். அமைதியாக இருக்கும் ரகுவரனை பேசியே வழிக்கு கொண்டு வந்தவர் அடுக்குமாடி கட்டிடத்தில் இருக்கும் பூங்காவிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு காவலாளிகள் நால்வரும் அமர்ந்திருந்தார்கள் ஆர்வத்தோடு. அழகுசுந்தரத்தை முறைத்துக் கொண்டே வந்த ரகுவரன் திடுக்கிட்டு நின்றான் படம் பார்க்கும் தோரணையோடு பதார்த்தங்களை வாங்கி வைத்திருக்கும் நால்வரையும் கண்டு.

“அட வாப்பா… கதை கேட்கும் போது பசிக்கும்ல.” ரகுவரனை இழுத்துச் சென்றார்.

மனைவியை மனதினுள் கண்டபடி திட்டிக் கொண்டே அவர்களுக்கு நடுவில் அமர்ந்தவன் மகிழினி மனதில் நினைத்த அனைத்தையும் சொல்லிவிட்டு மேற்கொண்டும் தொடர்ந்தான்.

****

தப்பித்து உள்ளே சென்ற மகிழினி  எட்டி கணவனை நோட்டமிட்டாள். மகளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே கையில் இருக்கும் காபியை ஓரமாக வைக்க, “அப்பா காபிய வேஸ்ட் பண்ண கூடாது குடிங்க.” என்றாள் இளவரசி.

சின்னவள் முன்பு எதையும் காட்ட முடியாமல் ஒருவாய் வைத்தவன் முகத்தை அஷ்ட கோணலாக வைத்தான் கரிக்கும் உப்பால். அதைக் கண்டு உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவள் வெளியில் குத்தாட்டம் போட கதவை சாற்றினாள்.

மனதிற்குள் குத்துப் பாடல் ஒன்றை பாடிக்கொண்டவள் தன் போக்கில் ஆடிக் கொண்டிருக்க, கதவு திறக்கும் ஓசை கேட்டது. உற்சாக மிகுதியில் திரும்பியவள் பதறி அடித்து கட்டில் மீது ஏறினாள் ரகுவரன் உள்ளே வந்ததால்.

முறைத்துக் கொண்டே தாழ்ப்பாள் போட்டவன் சைகை செய்தான் தன்னிடம் வருமாறு. தலையாட்டி போக்கு காட்டியவள், “மரியாதையா வெளிய போயிரு இல்லன்னா காத்திடுவேன்.” என்றாள்.

பதில் பேசாமல் கத்துமாறு சைகை செய்தவன் கட்டில் மீது ஏறினான். கணவனின் செயலில் இன்னும் பதறிப்போன மகிழினி தாவி குதித்து தரையில் விழ, அவளை உரசிக்கொண்டு அவனும் கீழ் விழுந்தான். சுதாரித்துக் கொண்டவள் எழ முயல, வளைத்து பிடித்தவன் தரையில் படுக்க வைத்தான்.

“மானுனுனூனூனூஉஉஉஊஊ”

“மானு அப்பா என்னை அடிக்கிறாங்க சீக்கிரம் அம்மாவ காப்பாத்து.” மகள் தன்னைக் காப்பாற்ற வருவாள் என்று துணைக்கு அழைத்தாள்.

காட்டு கத்தலாக கத்தினாலும் மகள் வரமாட்டாள் என்பதை அறியாதவள் விடுபட போராட, வாய் திறந்து பேசாதவன் அவள் கை இரண்டையும் தூரம் தள்ளி வைத்தான். கண்கள் விரிய, “ப்ளீஸ் ரகு… தெரியாம பண்ணிட்டேன் என்னை விட்டுடு.” விடாமல் கெஞ்சி கொண்டிருந்தாள்.

இவ்வளவு கதறலை கேட்ட பின்பும் கூட ரகுவரனின் முறைப்பு அடங்கவில்லை. வயிற்றில் சாவகாசமாக அமர்ந்தவன் அவள் இரண்டு கைகளையும் ஒரு கையால் பிடித்துக் கொண்டு கன்னத்தில் லேசாக அடிக்க, “அடிக்கிறான்…. அடிக்கிறான் யாராவது வந்து காப்பாத்துங்க. என்னை கொன்னுடுவான் போல சீக்கிரம் வாங்க. கொல…கொல…” அதன் பின்பு வார்த்தை உதிக்க உதடுகள் அவள் வசம் இல்லை.

இரு இதழ்களுக்கு நடுவில் தன் இதழ்களை நுழைத்தவன் இவ்வளவு நேரம் தேக்கி வைத்திருந்த உப்பு தேநீரை அவள் வாயில் ஊற்ற, குமட்டிக் கொண்டு வந்தது மகிழினிக்கு. அதைக் கூட வெளிப்படுத்த நேரம் கொடுக்காதவன் தன்னிடம் இருந்த அனைத்தையும் அவளிடம் இடம் மாற்றி விட்டு வயிற்றில் அமர்ந்தான்.

வாயில் இருந்த மொத்தத்தையும் துப்பினாள் கணவன் மீது. முறைப்பு இன்னும் அதிகமானது அவனிடம். அதைக் கண்டு கொள்ளாதவள், “டேய்! பொறுக்கி எந்திரிடா.” என்றிட,

“எதுக்குடி எனக்கு உப்பு போட்ட காப்பிய கொடுத்த?” நியாயம் கேட்டான் மனைவியிடம்.

“நீ எதுக்குடா நேத்து நைட்ல இருந்து சாப்பிடாம இருக்க?”

“நான் சாப்பிடாம இருந்தா உனக்கு என்னடி பிரச்சனை?”

“சீன் போடாதடா ரகுவரா எங்க போனாலும் பொண்டாட்டி கிட்ட வந்தாகணும்.”

“நான் எதுக்காக உன்கிட்ட வரணும். அதான் நேத்தே மொத்தமா உன் மனசுல இருக்க எல்லாத்தையும் கொட்டிட்டியே. இனி உன்னையும் உன் பசங்களையும் நான் தொந்தரவு பண்ண மாட்டேன்.”

“அவ்ளோ தானா”

“அவ்ளோ தான்” என்றவாறு எழ முயன்றான்.

அவன் ஆடையில் கை வைத்து தன்னிடம் எழுந்தவள், “ரகுவரா நேத்து உன் பொண்டாட்டிய கிஸ் பண்ணாம எப்படிடா தூங்குன?” என்றவள் பார்வை வசியம் செய்தது அவனை.

பதில் சொல்லாமல் எழ முயன்று கொண்டே இருந்தான் ரகுவரன். இன்னும் தன்னோடு சேர்த்துக் கொண்டவள் பின்னந்தலையில் விரல்களை கோர்த்துக் கொண்டு, “ரகுவரா நேத்து நீ இல்லாம தூங்க முடியலடா.” என்றாள் ஏக்கமாக.

“விடுடி” முன்பு இருந்தது போல் முறைப்பு இல்லாமல் போனாலும் வார்த்தை மட்டும் வீம்பாக வந்து கொண்டிருந்தது.

“விடுறேன் ஒரு கிஸ் கொடுத்துட்டு போடா”

“ப்ச் விடு!” உதறி தள்ளி எழுந்து நின்றான்.

ஒட்டும் பசை போல் அவளும் எழுந்து நின்று தோள் மீது மாலையானாள். தடுக்காமல் ரகுவரன் விரைப்பாக நிற்க, “என்னடா ஓவரா பண்ற… கிஸ் கேட்டா தரமாட்டியா?” மிரட்டல் செல்லமாக வெளிவந்தது.

“தள்ளி போடி” தள்ளிவிட்டவன் வேகத்திற்கு விலகி நின்றவள் அதைவிட அதிக வேகத்தில் அவன் மார்போடு சேர்ந்து கொண்டாள்.

தன்னை அணைக்காமல் இருக்கும் கணவனின் கைகளை பற்றி தன் உடலோடு சேர்த்துக் கொண்டவள், “நீ தரலன்னா போடா” என்றுவிட்டு நேற்றிரவு தராத முத்தத்தை காதலோடு கொடுக்க ஆரம்பித்தாள்.

வீம்பு பிடித்துக் கொண்டிருக்கும் கணவனால் குறையுள்ள முத்தமாக உணர்ந்தவள் அவனை செயல்பட வைக்க, “ரகுவரா” என்றாள் உதட்டை கன்னத்தில் உரசி.

வீம்பு கொண்டவன் திரும்பிக் கொண்டான். கழுத்தில் ஊர்வலம் சென்றவள் கிடைக்கும் இடத்தில் எல்லாம் முத்தம் வைக்க, கைகள் ஆடைக்குள் நுழைந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் நுழைய விடாமல் ரகுவரன் கைகள் மறுக்க, “கொஞ்ச விடுடா தொல்லை பண்ணாத.” என்றாள் காதலோடு.

இடம் கொடுக்காதவன் அவள் கைகளை வெளியேற்ற முயல, உதட்டை பற்றியவள் சிறு வலி வர இழுத்தாள். உதட்டின் தசைகள் பெண்ணவளின் பற்களில் சிக்கிக் கொள்ள, போராடியவன் தோற்றுப் போய் கைகளை எடுத்துக் கொண்டான். உடனே இதழ்களை விட்டவள் அவனோடு முகத்தை ஒட்டி வைத்து சிரித்தாள்.

தன்னருகே மிக மெல்லிய குரலில் கேட்கும் மனைவியின் சிரிப்பில் கோபத்தை கைவிட்டவன் லேசாக இடுப்பை சுற்றி வளைக்க, மகிழினியின் பார்வை நேருக்கு நேராக சந்தித்தது அவனை.

வீம்பான பார்வை கொஞ்சம் மாறியது போல் உணர்ந்தவள் இரு இமைகளுக்கும் முத்தம் கொடுக்க, கணவனின் கைகள் முன்னேறியது. இன்னும் அதிகரிக்கும் எண்ணத்தோடு மூக்கின் நுனியில் இதழ் பதித்து கன்னம் இரண்டிற்கும் நகர்ந்தாள். உவர் தேநீர் அவள் இதழ் பட்டதும் தேன் மிட்டாய் தித்திப்பாக… உடல் உரசி நின்றவன் வாசம் பிடித்தான் அவளோடு நெருங்கி நின்று.

தன் வேலை இனி குறைவு என்பதை நன்குணர்ந்து கொண்டவள் அவன் காதின் நுனியை கடித்து, “உம்மா உம்மா பண்ணுவோமா….ரகுவரா” என்ற முணுமுணுப்பை கொடுக்க, கைகள் இறுக்கமாக ஆடையை கிழிக்கும் அளவிற்கு கட்டிக் கொண்டது.

சோதிக்கும் இதழ்களை ஆணின் இதழ்கள் பற்றிக் கொள்ள… காட்டுதீ மேனியெங்கும். நில்லாமல் ஒருவர் மாற்றி ஒருவர் இதழ்களை நோகடித்துக் கொள்ள, நேற்று இரவு செய்யாத காதலையும் சேர்த்து தீர்த்தார்கள் முடிந்தவரை.

மூச்சுக்காக ஒதுங்கி நின்றவர்கள் மீண்டும் முத்தத்தை பின் தொடர விரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பார்வைகள் உத்தரவு கொடுத்ததும் காந்த இதழ்கள் ஒன்றோடு ஒன்று ஊர்ந்து செல்ல… மயக்கும் மனைவியை தன்னோடு அள்ளிக்கொண்டவன் முத்தம் கொடுக்காமல் இதழ்களை உரசியே நோகடித்தான்.

தாக்குப் பிடிக்க முடியாமல் கட்டிலில் அவனோடு சரிந்தவள் முத்தத்தை கையில் எடுக்க. மனைவியின் எண்ணம் புரிந்தவன் அவளை முந்திக் கொள்ள முயல, போட்டி போட்டு வெல்ல முயன்றாள் மகிழினி. இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் விடாமல் யுத்தத்தை தொடர, “அம்மா” என்ற பிள்ளைகளின் ஓசையில் பதறி அடித்து விலகினார்கள்.

அப்போதுதான் ரகுவரனுக்கு கொண்ட வீம்பு ஞாபகத்திற்கு வர, இணங்கி சென்ற மடத்தனத்தை நொந்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
27
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்