Loading

துருவ் கேட்டதில் முதலில் அதிர்ந்தவள், பின், அவனின் நலுங்கிய குரலில், அனைத்தும் மறந்து, அவனிடம் சரணடைந்தாள்.

அவள் கொடுத்த முத்தத்தில் உருகியவன், அவள் அவன் மேல் கொண்ட நம்பிக்கையில் சிலிர்த்து விட்டு, மேலும் மேலும் அவள் இதழில் புதைத்தான்.

சிறிது நேரம் கழித்து அவளை விட்டு விலகியவன் அவன் கொடுத்த முத்தத்தில், அவள் சிவந்து நின்றிருப்பதை கண்டு, “ஹனி” என்று கிசுகிசுப்பாய் அழைத்தான்.

அவள் அசையாமல் நிற்பதை கண்டதும், மெலிதாய் புன்னகைத்தவன், அவளை இரு கைகளாலும் தூக்கினான்.

அவளுக்கு வெட்கமும், கூச்சமும், மேலும் இது மட்டும் அஜய்க்கு தெரிந்தால் தன்னை சட்னி ஆக்கி விடுவான் என்ற பயமும் ஒருங்கே தோன்ற, அதையெல்லாம் மறைத்துக் கொண்டு அவனை காதலுடன் பார்த்தாள் உத்ரா.

அவன் தூக்கியதும், அறைக்குத் தான் அழைத்துச் செல்ல போகிறான் என்று அவள் நினைத்திருக்க, அவன் வெளியில் சென்று காரில் அமர வைத்தான்.

உத்ரா புரியாமல், துருவைப் பார்க்க, அவன் எதுவும் சொல்லாமல் காரை ஓட்டினான்.

“எங்க துருவ் போறோம்” என்று அவள் கேட்க,

“நம்ம ஃபர்ஸ்ட் நைட் – அ செலிப்ரேட் பண்ண” என குறும்பாக கூறியதும், “சீ போடா” என்று அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடி கொண்டாள்.

வெகு நேரம் கழித்து, காரை நிறுத்த, அது தெரிந்தும், அவனைப் பார்க்க முடியாமல் கண்ணை மூடி கொண்டே இருந்தாள்.

துருவ் அவளை அங்கிருந்து தூக்கி ஒரு இடத்திற்கு செல்ல, அங்கு சென்றும் அவளை கையில் வைத்து கொண்டு அவள் முகத்தை மட்டுமே பார்த்து கொண்டிருந்தான்.

அதன் பிறகே சுயநினைவு வந்து அவள் கண் விழிக்க, அந்த அறையை பார்த்து அசந்து விட்டாள். கூடவே ஒரு இனம் புரியா பயமும் எழுந்தது.

அந்த அறை முழுதும், மெழுகுவர்த்தி ஏற்றி இருக்க, பன்னீரின் மணம் அந்த அறை எங்கும் பரவ, அந்த அறையையே சுற்றி சுற்றி பார்த்தாள்.

“வாவ் சூப்பரா இருக்கு துருவ். இதை எப்போ அரேஞ் பண்ணுனீங்க” என்று கேட்க, அவன் பதிலேதும் சொல்லாமல், அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

பின், அவளின் கண்ணை மூடி, அறைக்கு வெளியே அழைத்து சென்று .. “கண்ணை திற ஹனி” என்று கையை எடுக்க, அவள் அதிர்ந்து நின்று விட்டாள்.

ஏன் எனில், அவள் இருந்தது ஒரு கப்பலில் தான். கருப்பு போர்வை போர்த்தியது போன்று சுற்றிலும் கருங்கடலாய் இருக்க, சில்லென்ற பனிக்காற்று அவள் உடலை ஊடுருவ, முழு நிலவு மெலிதான வெளிச்சத்தை அங்கு பரப்பிக் கொண்டிருந்தது.

அப்படியே கன்னத்தில் கையை வைத்தவள், “ஹையோ நம்ம கடலுக்கு நடுவுல இருக்கோமா. அச்சோ துருவ்… என்னால நம்பவே முடியல. அவ்ளோ அழகா இருக்கு.” என்று விழி விரித்து, வியந்தாள்.

அவளையே ரசித்தவன், அவளை முழுங்கும் பார்வை பார்க்க, அந்த பார்வையில் பெண்ணவள் திணறினாள்.

மெதுவாய் அவள் அருகில் வந்தவன், அவள் நெற்றியில் தொடங்கி முத்தங்களை வைத்து, கழுத்தில் சென்று முடித்தான்.

அவள் அணிந்திருந்த துப்பட்டாவை தூக்கி எறிந்தவன் உத்ராவின் கழுத்தில் முகம் புதைக்க, உத்ராவிற்கு, பயம் ஒரு பக்கமும், அவனின் அருகாமை தந்த மயக்கம் ஒரு புறமும் இம்சை செய்தது.

இருந்தும் அவனுக்கு ஒத்துழைக்க, திடீரென்று அவள் கழுத்தில் ஏதோ ஊர்வது போல் இருந்தது.

கண்ணைத் திறந்து  பார்த்தவள் கண்டது, துருவ் அவள் கழுத்தில் ஏதோ ஒரு செயினை போட்டு கொண்டிருந்ததை தான்.

ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த முழிக்க, அவன், “ஹனி இது என்ன தெரியுமா. நான் உனக்கு போடுற தாலி செயின். இது உண்மையிலேயே தாலி தான். நான் செயின்ல கோர்த்து உனக்கு போட்டு விட்ருக்கேன். இது தாலின்னு வெளில இருந்து பாக்குற யாருக்கும் தெரியாது. உனக்கும் எனக்கும் மட்டும் தான் இது தெரியும்.

பாத்துக்கோ உதி. இப்போ இருந்து இந்த நிமிசத்தில இருந்து, நீ எனக்கு மட்டும் தான் சொந்தம். உன் ஒவ்வொரு அணுவும் எனக்கு மட்டும் தான் சொந்தம்.

அம்மா, அப்பா, சொந்தம், பிரெண்ட்ஸ் இவங்க முன்னாடி நமக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி, பஞ்ச பூதங்கள் சாட்சியா இப்போ நம்ம கல்யாணம் நடந்துருக்கு.”

அங்கிருக்கும் மெழுகுவர்த்தியை காட்டி, “அந்த நெருப்பு சாட்சியா, அந்த ஆகாயம் சாட்சியா, இந்த கடல் சாட்சியா, அந்த நிலவு சாட்சியா, இந்த இயற்கை சாட்சியா, நம்மளை தொடுற இந்த காற்றோட சாட்சியா, நம்ம இப்போ ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்…” என்று ஆழ்ந்த குரலில் பேசிவிட்டு,

“இந்த செயின் எந்த காரணத்துக்காகவும், எந்த சூழ்நிலையிலயும், நான் உன் பக்கத்துல இருந்தாலும், இல்லைனாலும் உன் கழுத்தை விட்டு இறங்க கூடாது. இது உன் நெஞ்சுல உரசுர ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு செகண்டும், உனக்கு என் ஞாபகம் மட்டும் தான் இருக்கனும்.

உன் ஒவ்வொரு செல்லுலையும், எப்பவும் என் ஞாபகம் மட்டும் தான் இருக்கணும். உன் மனசு முழுக்க, ஒரு மில்லி செகண்ட் அளவு கூட நீ என்னை மறக்க கூடாது,

ஹனி… லவ் யு டி… லவ் யு சோ மச் டி பொண்டாட்டி” என்று அவன் பேசி முடிக்க, அவள் தான் அவனின் காதலிலும், அவளின் மேல் அவனுக்கு இருக்கும் பொசெசிவ் நெஸ்சையும் கண்டு மலைத்து விட்டாள்.

அவனின் ஒவ்வொரு வார்த்தையும் அவள் ஆழ் மனதில் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியது.

என்ன பதில் பேசுவது என்று கூட தெரியாமல், இப்போது அவன் என்னதான் பண்ண போகிறான் என்றும் புரியாமல் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்க,

துருவ் புன்னகைத்து, “என்ன ஹனி..  எனக்கு நீ வேணும்னு சொன்னதும் தப்பா நினைச்சுட்டியா. வெறும் 5 நிமிஷ சுகத்துல தான் நீ என் உயிருனும், நீ என் சொந்தம்ன்னும்… நீ என்னை அப்போதான் ஞாபகம் வச்சுருப்பன்னும் நான் எப்படிடி நினைப்பேன்.” என்று விட்டு, ஆழமாய் அழுத்தமாய் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

“இந்த முத்தம் ஒண்ணு போதும்டி. உன்கூட நான் ஆயிரம் வருஷம் வாழ்ந்த திருப்தி எனக்கு கிடைக்கும்.. ஏண்டி என்னை இப்படி மாத்துன. ரொம்ப முத்திடுச்சுல” என்று உருக்கமாய் ஆரம்பித்து, குறும்பாய் முடித்தான்.

அவளுக்கு கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது அவனின் அன்பில். அவன் கேட்டதற்கு கண்ணில் நீருடனும், உதட்டில் சிரிப்புடனும், ம்ம் என்று தலையாட்டி விட்டு, அவனை கட்டி அணைத்து கொண்டு கதறி அழுதாள்.

துருவிற்கு தான் பதட்டமாகி விட்டது.

” ஹே என்னடா ஆச்சு. ஏன் இப்படி அழகுற.” என்று கேட்க,

அவள் “ப்ளீஸ் துருவ் நான் அழுகணும். எனக்கு அழுகை வருது. என்னை அழுக விடுங்க” என்று சொல்லி மீண்டும் அவன் மீதே சாய்ந்து கொண்டு அழுக ஆரம்பித்தாள்.

துருவ் “சாரிடா உன்னை கேட்காம நான் தாலி போட்டு விட்டது தப்பு தான் ப்ளீஸ் அழுகாத உதி” என்று அவன் கண்ணும் தன்னிச்சையாய் கலங்க,

அவள் வெடுக்கென்று நிமிர்ந்து, “டேய் லூசு புருஷா. இது ஆனந்த கண்ணீர் டா. அது கூட தெரியாமல் நீ என்னதான் லவ் பண்ணுறியோ.” என்று குறும்புடன் கேட்க, அவன் அவளை சீண்டி சிவக்க வைத்தான்.

“அடப்பாவிங்களா… பிளாஷ் பேக்ன்னு சொல்லி ஒரு படமே ஓட்டறீங்களேடா.” என்று விது வாயில் கை வைக்க,

அர்ஜுன், “இதெல்லாம் அநியாயம் டா. அந்த உதி பக்கி இவ்ளோ மேட்டரை எங்ககிட்ட சொல்லவே இல்லை… உண்மைய சொல்லு! உங்க குழந்தைங்க எல்லாம் எந்த ஸ்கூல் ல படிக்குதுங்க” என்று துருவிடம் நக்கலாக கேட்க,

மீரா, “ஆனால் உத்ராவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை அண்ணா. இப்போ அவங்க ஏன் உங்களை தெரிஞ்ச மாதிரியே காட்டிக்க மாட்டுறாங்க.” என்று கேள்வி கேட்டதும்,

விது, “இவள் தான் பங்கு கரெக்ட் ஆ கேள்வி கேக்குறா” என்று அர்ஜுனிடம் முணுமுணுத்தான்.

இதில் அஜய் கண்ணில் வழிந்த நீருடன் உதட்டை கடித்துக் கொண்டு, துருவை பார்க்க கூட இயலாமல், நிலத்தில் முகத்தை புதைத்து, இறுகி நின்றிருந்தான்.

துருவ் இப்பொழுது அஜயவே பார்க்க, அர்ஜுனும் அஜயை பார்த்தான். ஏதோ மனதில் சரி இல்லை என்று பட,

“அஜய் உனக்கு என்ன பிரச்சனைன்னு தெரியுமா?” என்று கேட்டதும், அவன் குலுங்கி அழுகை ஆரம்பித்தான்.

அனைவரும் இவன் ஏன் அழுகிறான் என்று பதறி அவனை தேற்ற, துருவ் மட்டும் எதையோ வெறித்துக் கொண்டிருந்தான்.

அன்று இரவு வெகு நேரம், கப்பலில் கொஞ்சி விட்டு, இருவரும், வீடு வந்து சேர்ந்தனர். அப்பொழுதும், துருவ் உத்ராவை விட்டு, சிறிதும் நகரவில்லை.

அவளை உரசியபடியே அவளுடன் பேசிக்கொண்டே இருந்தான்.

உத்ராவிற்கு அவனின் அருகாமை நாளை எல்லாம் இருக்காதே என்று மனது பாரமாக அவனுடனே ஒட்டிக்கொண்டு திரிந்தாள்.

பின், “அவ்ளோ நல்லவனாடா நீ.. நான் கூட நீ…” என்று அவள் சொல்ல வர,

அவன் “ம்ம் நான்” என அவளை பார்த்து கேட்க,

“இல்லை நீங்க… அப்படி கேட்டதும்”  சொல்ல முடியாமல் தவித்தவளின், நெற்றியில் முட்டியவன்,

“உன் ஆசைப்படி, உன் வீட்ல இருக்குறவங்க முன்னாடி உன்னை என் பொண்டாட்டி ,ஆக்கிட்டு அப்பறம் திகட்ட திகட்ட உன்னை எடுத்துகிறேன் ஹனி” என்றான் ரசனையாக.

மேலும், “அப்போதான் உனக்கு சந்தோசம், அஜய்கிட்ட என்ன பதில் சொல்றதுன்னு நீ பயப்படவும் வேணாம்.” என்று சொன்னதும், அவள் திகைத்து அவனைப் பார்த்தாள்.

அவன் சிறிதாய் புன்னகைத்து  “உன் எண்ணத்துல கூட நான் தான் ஹனி இருக்கேன். நீ உன் யோசனையை கூட என்கிட்டே இருந்து மறைக்க முடியாது.”

“யப்பா போதும். ரொம்ப முத்திடுச்சு. கூடிய சீக்கிரம் பைத்தியம் ஆகிடுவீங்க” என்று நக்கலடித்ததும்,

அவன் “ஆமா ஏற்கனவே அப்படி தான இருக்கேன்.” என்று விட்டு, அவளின் பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

அவள் கிளம்பும் நேரமும் வந்தது.

பெட்டியெல்லாம் எடுத்துக் கொண்டு, அவள் கிளம்புகையில் “போறியாடி பொண்டாட்டி?” என்று அவன் ஏக்கமாய் கேட்க,

அவள் “கண்டிப்பா போகணுமா புருஷா?” என்று அவன் கை விரலை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.

துருவ் பெருமூச்சு விட்டு, “ஹனி. ஊர்ல போய் கேம் விளையாடிகிட்டு, யார்கிட்டயாவது வம்பு இழுத்துகிட்டு, நைட் ஷோ படத்துக்கு போய்கிட்டு, இருக்க கூடாது.” என்றவன், அவள் காதை பிடித்து திருகி,

“காலைல இயர்லியா எந்திரிச்சு, ஆஃபீஸ் போகணும், முக்கியமா மீட்டிங்ல மத்தவங்க பேசும்போது தூங்க கூடாது. புரியுதா!

சேட்டை பண்ணாம குட் கேர்ள் ஆ வேலை பார்க்கணும். ஹ்ம்ம்?” என்று அவளுக்கு சிறு பிள்ளைக்கு சொல்வது போல் அறிவுரை  சொல்ல,

அவள் “ஓகே குருநாதா. குருவை மிஞ்சிய சிஷியா ஆகி உங்களையே மிரள வைக்கிறேன் பாருங்க” என்று அவனிடம் சொல்ல, அவன் புன்னகைத்து விட்டு, “ஆல் தி வெரி பெஸ்ட் டி பொண்டாட்டி. என் உதி என்னைக்கும் யார்கிட்டயும் தோத்து போகக்கூடாது ஓகே வா.” என்றவன், “சரி வா கிளம்பலாம்” என்றான்.

அவள் “ஹெலோ பாஸ் நீங்க எங்க வரீங்க” என்று கேட்டதும் அவன் “ஏர்போர்ட்க்கு தான்” என்றான்.

உத்ரா, அவன் கழுத்தை கட்டி கொண்டு, “வேணாமடா புருஷா, நீ வந்தா என்னால, பிளைட் ஏறவே முடியாது. அப்பறம் நான் திரும்ப உன் கூடவே வந்துடுவேன். நீ வராத துருவ் ப்ளீஸ்.” என்று முகத்தை சுருக்கி கெஞ்ச, அவனுக்கு தான் அவளை அனுப்ப மனமே இல்லை.

துருவ் “ஏர்போர்ட் வரைக்கும் உன்னை பார்த்துகிட்டே இருப்பேன்ல உதி. நானும் வரேன் டி” என்று சொன்னதும்,

அவள் ம்ஹும் என்று மறுப்பாய் தலையாட்டி விட்டு, “உன் கார் கீ குடு.
நான் அதுல போறேன். நீ என்கூட வர மாதிரி இருக்கும். நீ அப்பறம் வந்து கார எடுத்துக்க.” என்று அவனிடம் சாவியை வாங்கினாள். அவன் எவ்வளவோ மறுத்தும் அவள் கேட்கவே இல்லை.

ஒருவழியாய் அவனிடம் கொஞ்சி விட்டு அவள் கிளம்ப, அவள் கையை பிடித்து இழுத்து மூச்சு முட்டும் அளவுக்கு இறுக்கி அணைத்தவன், “கிளம்புறியாடி” என்று மேலும் இறுக்கினான்.

அவள் அவனின் இறுக்கத்தில் சிக்கி தவித்து, “துருவ்..” என்று முனங்க, முரட்டுத்தனமாய் அவளின் இதழ்களை சிறை செய்தான்.

சில நிமிடங்கள் அவளை அவன் கட்டுக்குள்ளேயே வைத்து விட்டு, பின், “உதி. எனக்கு நீ போட்டுருக்குற டிரஸ் வேணும்… குடுத்துட்டு போ” என்றதும்,

அவள் முழித்து, “எதுக்கு” என்று கேட்டாள்.

  “உன் ட்ரெஸ்ஸை கட்டி பிடிச்சிகிட்டே தூங்க தான். உன் வாசம் என்கூடவே இருக்கணும்டி…” என்று கிறக்கமாக சொல்ல, அவள் புன்னகைத்து விட்டு, வேறு உடையை மாற்றி விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

வெளியில் சென்றவள் திரும்ப உள்ளே வந்து, “நீங்க ஓகே தான துருவ் நான் கிளம்பலாம்ல.” என்று அவனிடம் கேட்க,

அவன் சிறு சிரிப்புடன் ம்ம் என்று தலையாட்டினான்.

சரி என்று வெளியில் சென்றவள் மீண்டும் உள்ளே வந்து, “ஒழுங்கா சாப்பிடுங்க எப்ப பாரு வேலை வேலைன்னு இருக்காதீங்க. அப்பா, அம்மா சண்டை போட்டா, பொறுமையா பேசிப்பாருங்க. நீங்களும் சேர்ந்து டென்ஷன் ஆகாதீங்க. சரியா.”என்று விட்டு, “கிளம்பவா புருஷா” என்று கேட்க, அவன் நன்றாக சிரித்து விட்டு, “கிளம்பு டி” என்றான்.

“பை…” என்றவள் ஏதோ தோன்ற மீண்டும் அவனை வந்து இறுக்கமாக அணைத்து கொண்டு, அவன் முகம் முழுதும் முத்தம் இட தொடங்கினாள்.

“லவ் யு துருவ். டெயிலி எனக்கு போன் பண்ணிடுங்க. காலைல எந்திரிச்சதும் எனக்கு வீடியோ கால் பண்ணிடுங்க. மன்த்லி ஒன்ஸ் ஆவது என்னை பார்க்க வந்துடுங்க இல்லைனா நானே கிளம்பி வந்துடுவேன். உடம்பு சரி இல்லைன்னா போய் ஊசி போட்டு ரெஸ்ட் எடுங்க. பயமா இருக்குனு உடம்பை கெடுத்துகாதீங்க” என்று அவள் பேசிக்கொண்டே இருக்க,

அவள் அன்பில் உருகியவன் “ஓகே டி பொண்டாட்டி. உனக்கு பிளைட்க்கு டைம் ஆச்சு கிளம்பு…” என்று மனமே இல்லாமல் ஒரு வழியாய் அவளை அனுப்பி வைத்தான்.

அவள் சென்று ஐந்து நிமிடங்கள் தான்  ஆனது, ஆனால் அவனுக்கு தான் ஏதோ ஒரு யுகம் கடந்தது போல் இருந்தது. பின், அவள் கண்ணில் படாமல் ஆவது, அவளை பார்த்து விட்டு வரலாம் என்று அவள் பின்னே சென்றான்.

அப்பொழுது அவனுக்கு ஒரு போன் வர, அதில் அவனின் செகரட்டரி ஒருவன் “சார்… உங்களை யாரோ டார்கெட் பண்ணிருக்காங்க. உங்களுக்கு ஆபத்து இருக்கு நீங்க எங்க இருக்கீங்க” என்று கேட்க,

அவன் “நான் டிரைவிஙல இருக்கேன்…” என்றதும்,

“சார் உங்களை ஆக்சிடென்ட் பண்ண பிளான் பண்ணிருக்குறதா எனக்கு தகவல் வந்திருக்கு. நீங்க ஜாக்கிரதையா இருங்க.

உங்க காரை அங்க ஸ்டாப் பண்ணிட்டு வேற கார்ல போங்க… உங்க ஆடி காருக்கு தான் குறி வச்சுருக்காங்க” என்று அவன் சொன்ன நிமிடத்தில் துருவ்

“நோ நோ நோ… அதுல உதி போயிருக்கா” என்று அவன் காரின் வேகத்தை கூட்டி விரைய, அவளுக்கு போன் செய்து கொண்டே இருந்தான்.

ஆனால் அவள் போனை சைலென்டில் போட்டிருந்ததால், அவளுக்கு அவன் அழைப்பு தெரியவில்லை.

ஒருவழியாய், அவள் சென்ற கார், துருவின் கண்ணில் பட்டு விட, வேகமாய் அவன் சென்று அவள் காரை நிறுத்துவதற்குள், எங்கிருந்தோ வந்த ஒரு லாரி அவள் சென்ற காரை அடித்து தூக்கி விட்டு சென்றது.. அந்த விபத்தில், துருவ் சென்ற காரும் க்ராஸ் ஆக, அவனின் காரும் தலை குப்புற விழுந்தது.

அதில் துருவிற்கு தான் தலை, கை கால் என பலமாய் அடிப்பட, ரத்தம் வழிய கிடந்தவனுக்கு அப்பொழுதும், உத்ராவின் நினைவு தான்.. அவளை காப்பாற்ற வேண்டும் என்று கடினப்பட்டு எழுந்து வந்து, அவளை பார்க்க, அவளும் தலையில் அடிபட்டு மயங்கி இருந்தாள்.

துருவ் கண்ணை கூட முழிக்க முடியாமல், “உதி. பொண்டாட்டி என்னை பாருடி. உதி”.. என்று பலவீனமாய் அழைக்க,

பின் சுதாரித்து, அவசர அவசரமாய், அவளை மருத்துவமனைக்கு தூக்கி சென்றான்.

அவளை ஐ சி யு வில் விட்டு விட்டு, அவன் வெளியில் வர, அவள் கழுத்தில் இருந்த செயினும் அவன் சட்டையோடு வந்து விட்டது.

அவனுக்கு கைகள் எல்லாம் நடுங்கி, “என் உதிக்கு ஒன்னும் ஆகாது, அவள் என்கிட்டே வந்துடுவா.. அவளுக்கு ஒன்னும் இல்லை” என்று நினைக்கும் போதே அவன் மயங்கி இருந்தான்.

பின், அவனுக்கு சிகிச்சை கொடுத்து, அவன் கண் விழிக்கவே இரண்டு நாட்கள் ஆனது.

எழுந்தவன் முதலில் கேட்டதும், “உத்ரா எங்க ? என் உதி எங்க?” என்று தான்.

மருத்துவர், அவனை அமைதி படுத்தி, அந்த பெண் பிழைத்து விட்டாள.. பயப்பட எதுவும் இல்லை என்று சொன்னதும், “நான் அவளை பார்க்கணும் உடனே பார்க்கணும்” என்று கத்தினான்.

மருத்துவர், அவளும், இப்பொழுது தான் மயக்கத்தில் இருந்து விழித்தாள், பெரிய டாக்டர் அவளிடம் பேசிக்கொண்டிருக்கிறார், என்று சொல்ல சொல்ல கேட்காமல், அங்கு அழைத்து செல்ல சொன்னவன், அவளை அங்கு கண்டதும் தான் நிம்மதி ஆனான். மருத்துவர் ஏதோ பேசிக்கொண்டிருக்க, தன்னை கட்டு படுத்திகொண்டு, திரைக்கு பின்னால் நின்றவன், அவர்கள் பேசியதை கேட்க ஆரம்பித்தான்.

டாக்டர் உத்ராவிடம், “ஹலோ மை சைல்டு. ஹொவ் டூ யு ஃபீல் நொவ்” என்று கேட்க,

அவள் “பெட்டெர் டாக்டர்.” என்றாள்.

பின், அவளைப் பற்றிய விவரங்கள் கேட்க, அவளும், அனைத்தும் சொன்னாள், அவள் படிப்பிலுருந்து, வீட்டில் இருப்பவர்கள் முதல் அனைத்தும் சொன்னாள்.

அவர், “நீங்க எதுக்கு லண்டன் வந்தீங்க” என்று கேட்க, அவள் “என் அப்பா இங்க தான் இருக்காரு அவரை பார்க்க வந்தேன்.” என்றதும்,

“அப்பாவை பார்துடீங்களா”
அவள் திருதிருவென முழித்தாள்.

“அ அ அது அப்பா அப்பா” என்று திணற, அவர், “ரிலாக்ஸ் ரிலாக்ஸ் நீங்க எப்போ லண்டன் வந்தீங்க” என்று கேட்க, அவள் “ஜூன் 6” என்றாள்.

அவர் சிறிது யோசித்து விட்டு, “இன்னைக்கு டேட் டிசம்பர் 6. இந்த ஆறு மாசமா நீங்க உங்க அப்பாவை பார்க்கவே இல்லையா” என்று கேட்க,

அவள் “என்ன நான் வந்து ஆறு மாசம் ஆகிடுச்சா. நான் நான் ஊருக்கு வந்தேன். வந்ததும் இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கேன் அது மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கு.. நான் நான்” என்று அவள் தலையை பிடித்து கொண்டு,  பேச,அவர் “ஓகே ஓகே ரிலாக்ஸ் நீங்க இப்போ எதுவும் யோசிக்காதீங்க கொஞ்ச நேரத்துல அதுவே ஞாபகம் வந்துடும்” என்று சொல்லிவிட்டு, செல்ல, துருவ் தான் சிலையாக அமர்ந்திருந்தான்.

“என் உதிக்கு என்னை ஞாபகம் இல்லையா. இந்த ஆறு மாசத்துல என்ன நடந்ததுன்னு அவளுக்கு ஞாபகமே இல்லையா. இல்லை இல்லை அவள் எப்படி என்னை மறப்பாள், அவள் என் பொண்டாட்டி என்னை மறக்க மாட்டாள்” என்று தன்னை சரி செய்து கொண்டு உள்ளே செல்ல போக,

அந்த டாக்டர், அவனை தடுத்து, “மிஸ்டர் துருவேந்திரன் இப்போ நீங்க அவங்களை பார்க்குறது அவங்களுக்கு சேஃப் இல்லை. அவங்களுக்கு தலைல அடிபட்டதுல அம்னீசியா வந்துருக்கு.

அதுல அவங்க ஊருக்கு வந்ததுக்கு அப்பறம் நடந்த எல்லாத்தையும் மறந்துட்டாங்க. அவங்க பார்த்த மனுஷங்க, அவங்க செஞ்ச விஷயங்கள் எதுவுமே இப்போ அவங்க ஞாபகத்துல இல்லை.

ஒருவேளை அவங்களுக்கு உங்களை ஞாபகம் இல்லைன்னா, அவங்க அதை யோசிச்சு யோசிச்சு, டிப்ரெஸ்ஸின்க்கு போய்டுவாங்க…

இந்த நேரத்துல அவங்க ஸ்ட்ரெஸ் ஆகுறது அவங்க உயிருக்கே பாதிப்பு ஏற்படுத்தும்” என்று அவர் சொல்ல, சொல்ல அவன் உள்ளுக்குள் உடைந்து போனான்.

“அவளுக்கு எப்போ ஞாபகம் வரும் டாக்டர்” என்று தவிப்புடன் கேட்க, அவர் “ம்ம் எப்போன்னு சொல்ல முடியாது… இப்போ கூட ஞாபகம் வரலாம் இல்லை வராமலே போய்டலாம்…” என்று சொல்ல, கண்ணீரில் கரைந்தான்.

இருந்தும், எப்படியும் அவளுக்கு என் ஞாபகம் வந்துவிடும் என்று காத்திருந்தவனுக்கு ஒரு வாரம் ஆகியும் அவளுக்கு எந்த ஞாபகமும் வரவில்லை.

மேலும், அவள் அஜயை அங்கு வரச்சொல்ல, அவனுக்கு மட்டும் தான் அவளுக்கு நடந்த விபத்தும், அதில் அவள் சில விஷயங்களை  மறந்ததும் தெரியும். அவளின் நிலையைக் கண்டு, தவித்தவன், அவள் உடனே இருந்தான்.

வீட்டில் சொல்ல போகலாம் என்று அவன் நினைக்கையில், உத்ரா பிடிவாதமாக வீட்டில் அவள் மறந்த விஷயத்தை சொல்லவே கூடாது என்று  விட்டாள்.

மேலும், மருத்துவர், அஜயிடம், “இந்த ஆறு மாதத்தில் அவள் வாழ்வில் என்ன நடந்தது” என்று தெரிந்து கொள்ளும்படி வற்புறுத்த, அவன் அதனை அசட்டையாக விட்டு விட்டான்.

ஏதாவது முக்கியமாக இருந்திருந்தால் அவளே சொல்லி இருப்பாள் என்று நினைத்தவன், அவனுக்கு தெரிந்த விஷயத்தை மட்டும் உத்ராவிடம் சொல்லி இருந்தான்.

அவளறியாமல் தினமும் அவளை சென்று பார்க்கும் துருவ் அவளுக்கு என் ஞாபகம் இன்றாவது வந்துவிடுமா என்று ஏங்கி போய் பார்ப்பான்.

  அங்கிருந்து கிளம்பும் நாளில், உத்ரா, “அஜய், எனக்கு ஒரு மாதிரி இருக்குடா” என்று சொன்னதும்,

அவன் “என்ன ஆச்சு உதி என்ன பண்ணுது” என்று பதட்டத்துடன் கேட்க,

“தெரியலடா ஏதோ பண்ணுது எனக்கு நெஞ்செல்லாம் வலிக்குது.
.” என்று நெஞ்சை பிடித்துக் கொள்ள, அவன் அரண்டு விட்டான்.

மருத்துவரும் வந்து அனைத்து டெஸ்டும் எடுக்க, அவளுக்கு ஒன்றுமே இல்லை என்று சொல்லி விட்டனர்.

ஆனால் அவள் தான் பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொண்டாள். “எனக்கு ஏதோ பண்ணுது. எனக்கு என்னமோ பண்ணுது” என்று கத்தியவளை கண்ணீருடன் பார்த்த அஜய் இவளுக்கு என்ன ஆனது என புரியாமல் முழித்தான்.

பின், அவளுக்கு மயக்க ஊசி போட்டு தூங்க வைக்க, அஜய் மருத்துவரை பார்க்க சென்றிருந்தான்.

அவளையே கவனித்து கொண்டிருந்த துருவ். கலங்கிய கண்களுடன்  அவள் அருகில் சென்று

“ஏண்டி பொண்டாட்டி, என்னை மட்டும் மறந்த. ஒரு செகண்ட் கூட நீ என்னை மறக்க கூடாதுன்னு நினைச்சேன் ஹனி. இன்னைக்கு உனக்கு என் ஞாபகம் மட்டும் எப்படி டி இல்லாம போச்சு.

என்னால முடியலடி. நீ இல்லாமல் நான் எப்படி ஹனி இருப்பேன். இதுக்கு நான் அந்த ஆக்சிடென்ட்ல செத்தே போயிருக்கலாம் டி. நரக வேதனையா இருக்கு உதி. நீ என்னை யாருன்னே தெரியாம இருக்குறது” என்று அவள் மேல் படுத்து கொண்டு கதறி அழுதான்.

பின் தன்னை கட்டுப்படுத்தி கொண்டு, “உனக்கு என் ஞாபகம் வராம, நான் உன் முன்னாடி வரமாட்டேன் உதி. நீ என்னை யாருன்னு கேட்குற அந்த ஒரு கேள்வியை சத்தியமா என்னால தாங்க முடியாது. நான் போறேண்டி. உன்னை விட்டுட்டு போறேன்.” என்றவன்,

அந்த செயினை அவள் கழுத்தில் போட்டு விட்டு, “இப்போ உன் மனசு அமைதியாகிடும் உதி. எப்பவாவது என் ஞாபகம் உனக்கு வந்தா, என்னை தேடி வந்துடு உதி. உனக்காக மட்டும் தான் நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்.” என்றவன்,

அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு, இவ்வளவு நாள் செய்த ப்ரொஜெக்டையும், மேலும், தொழிலில் நுணுக்கங்களையும், இவ்வளவு நாள் அவன் சொல்லி கொடுத்த அனைத்தையும், ஒரு பென்ட்ரைவில் பதிவேற்றி, அவள் பேகில் வைத்து விட்டு, அவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு கண்ணில் நீர் வழிய சென்று விட்டான்.

என்னை உன்னிடம்
விட்டு செல்கிறேன் ஏதும்
இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்

ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
ஏன் இந்த பிாிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்

உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என் உயிா் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான் ஓஓஒ…

பெண்ணே உந்தன்
ஞாபகத்தை நெஞ்சில்
சோ்த்து வைத்தேனே
உன்னை பிாிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

அங்கேயே முட்டி போட்டு அமர்ந்து, கண்ணீர் விட்டு கத்தினான் துருவேந்திரன்.

“என் உதி என்னை மறந்துட்டாடா. என் உதி என்னை மறந்துட்டா. இப்போ கூட நான் அவளுக்கு எல்லாத்தையும் ஞாபகப்படுத்தி, அவள் எனக்கு வேணும்னு நினைச்சு வரல, அவளை சுத்தி நிறைய ஆபத்து இருக்கு. அதை தடுக்கணும்னா நான் இங்க வந்தே ஆகணும் அதான் வந்தேன். அதை சரி பண்ணிட்டு நானே இங்க இருந்து போய்டுவேன்”  என்று அழுதவனை பார்க்கவே அனைவர்க்கும் நெஞ்செல்லாம் பிசைந்தது.

அர்ஜுனும், விதுனும் இப்படி ஒரு விஷயம் நடந்ததே தெரியாமல் இருந்திருக்கிறோமே என்று தன்னையே நொந்தனர். மீராவிற்கு துருவின் நிலைமையை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

அர்ஜுன், இறுகி போய்  இருந்த அஜயை ஓங்கி ஒரு அறை அறைந்து, “ஏண்டா ஏண்டா எங்க கிட்ட சொல்லல.”என்று அவனை பளார் பளார் என அறைந்தான்.

விதுன் “டேய் விடுடா அவன் என்ன தெரிஞ்சா சொல்லாமல் இருந்தான்.” என்று அவனை தடுக்க, அர்ஜுன், அவனை அடிப்பதை நிறுத்தவே இல்லை.

” என்கிட்டயாவது சொல்லிருக்கலாம்லடா அவளுக்கு எப்படியாவது ட்ரீட்மெண்ட் பார்த்துருக்கலாம். அட்லீஸ்ட் அவள் லைஃப்ல என்ன நடந்ததுன்னாவது தெரிஞ்சுருந்துக்கலாம்ல டா. அப்படி என்னடா உனக்கு அசால்ட்டு தனம்.” என்று அவனை அடிக்க, அஜய் கண்ணீருடன் அமைதியாய் வாங்கிகொண்டான்.

“போடா வெளிய! என் கண்ணு முன்னாடி வராத. போயிரு அப்டியே போ” என்று கத்த,

மீரா, “அர்ஜுன்,” என்று அவனை அழைத்ததில், அர்ஜுன் மீராவை பார்க்க, அவள் திகைத்த பார்வையை கண்டு, அவனும் அவள் பார்த்த திசையை பார்க்க, அங்கு எதையுமே நம்பமுடியாத நிலையிலும், உச்ச கட்ட அதிர்ச்சியுடனும், கண்ணில் நீர் எல்லாம் வற்றி துருவையே பார்த்திருந்த உத்ராவை கண்டவர்கள் அதிர்ந்து விட்டனர்.

துருவும் அப்பொழுது தான் அவளை கவனித்தான். அவனுக்கு என்ன செய்வது என்று கூட தெரியாமல் அவளைப் பார்க்க, அவள் ஒன்றும் புரியாமல், அங்கிருந்து பிரம்மை பிடித்தவள் போல், வெளியில் வந்து விட்டாள்.

துருவ் ‘உதி என் பொண்டாட்டி’ என்று சொல்லும் போதே அவள் அங்கு வந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்தாள்.

அழுது கொண்டே, அவள் வீட்டிற்கு சென்றவள் அறைக்கு வந்து, அனைத்து பொருட்களையும் போட்டு உடைத்தாள்.

“நோ நோ” என்று தலையை பிடித்து கொண்டு யோசித்து பார்த்தவளுக்கு தான் அவன் சொன்ன எதுவுமே ஞாபகம் வரவில்லை.

தான் ஒருவனை இவ்வளவு காதலித்தோமா என்று கூட அவளுக்கு தெரியவில்லை.

அவனை ஒரு திமிர் பிடித்தவனாகவும், கெட்டவனாகவும், பெண் பித்தனாகவும் மனதில் ஏற்றி இருந்தவளுக்கு, சட்டென்று அதனை மாற்றி அவன் சொன்னதை மனதில் ஏற்ற முடியவில்லை.

“இல்ல அவன் பொய் சொல்றான். இப்டிலாம் நடந்துருக்காது. நோ நோ” என்று கத்தியவள், அனைத்தையும் போட்டு உடைக்க, அப்பொழுது தான் அவள் அணிந்திருந்த செயினை பார்த்தாள்.

அன்று அவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தவளுக்கு, அந்த செயின் அவள் கழுத்தில் வந்ததற்கு பிறகு, அவள் மனம் அமைதியாகி விட்டது. இப்பொழுது அதனை நினைத்தவள், அந்த செயினை கையில் பிடித்து கொண்டு, அதனையே வெறித்தவள். துருவ் சொன்ன அனைத்தையும் மீண்டும் நினைத்து பார்த்தாள்.

உன்னாலே கண்கள்
தள்ளாடி உறங்காமல் எங்கும்
என் ஆவி

நீராவியாய் என்னை
நீ மோதினாய் உன் பாா்வையில்
ஈரம் உண்டாக்கினாய்

நீ தொட தொட
நானும் பூவாய் மலா்ந்தேன்
நான் என் பெண்மையின்
வாசம் உணா்ந்தேன்

முன் ஜென்மம்
எல்லாம் பொய் என்று
நினைத்தேன் உன் கண்ணை
பாா்த்தேன் மெய் தானடா

உருவங்கள் எல்லாம்
உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாதடா

இந்த கலவரத்தில், அவள் அடிபட்டிருந்த கையில் தையல் பிரிந்து ரத்தம் வந்தது. அதில் மொத்தமாய் அவள் மயங்கி சரிய, துருவ் வந்து அவளை தாங்கி கொண்டான்.

உறைதல் தொடரும்….
-மேகா..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
59
+1
4
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.