Loading

14 – விடா ரதி… 

 

ரகு வெளியே சென்றவன் எதையோ மறந்து மீண்டும் உள்ளே சென்றான். 

 

“என்னாச்சி அண்ணா ? எதாவது மறந்துட்டீங்களா?”, அவன் திரும்பி வருவதை பார்த்துக் கேட்டாள் சவி. 

 

“ஆமா சிஸ்டர்… ஒரு ஃபைல் மறந்துட்டேன்….”, எனக் கூறியபடி தன் அறைக்குச் சென்றான். 

 

உள்ளே ரதியும் என்ன புடவை அணியலாம் என்ற யோசனையுடன் தன் அலமாரியைக் குடைந்துக் கொண்டிருந்தாள். 

 

“இந்த விசேஷம் வந்தாலே என்னடா போட்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கு…. அவனுக்கு மேட்ச் அஹ் வேற இருக்கணும்… அந்த லூசு என்ன போடுமோ தெரியல….”, எனக் கொஞ்சம் சத்தமாகவே தனக்கு தானே பேசிக்கொண்டுப் புடவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

“மேல செல்ஃப்ல என்ன இருக்குன்னு பாக்கலாம்…”, என ஸ்டூல் போட்டு மேலே ஏறிப் பார்க்க, அவளின் டீ-ஷர்ட் அவளின் வயிற்றுக்கும் மேலே ஏறியது. 

 

உள்ளே வந்தவன் அவளின் கோலம் பார்த்து சற்று குறுகுறுத்து தான் போனான். மெல்ல நடந்து அவளின் இடையோடு தூக்கிச் சுற்றித் தனது கைகளில் ஏந்தி, அவளின் நாபியில் கிச்சு கிச்சு மூட்டவும், அவள் ஐயோ அம்மா எனக் கத்த கீழே இருந்த ஸ்வே மேலே ஓடி வந்தாள். 

 

“ஹேய் போகாத டி…”, எனக் கூறியபடி சவிதாவும் வெளியே இருந்து உள்ளே வந்தாள். 

 

அதற்குள் ஸ்வேதா அவர்கள் அறைக்குள் வந்திருந்தாள், உடன் சவியும் வந்து அவர்களின் விளையாட்டைப் பார்த்துச் சிரித்தபடி நின்றனர். 

 

அவர்களின் சிரிப்பு சத்தத்தில் ரதியும்,ரகுவும் அவர்களைப் பார்க்க, “ஹே காப்பாத்துங்க டி..”, என ரதி கூறினாள். 

 

“எதுக்கு? அப்படியே இரு…. இனிமே கதவை மூடிட்டு விளையாடுங்க நாங்க சத்தம் கேட்டு பதறிட்டு வராம இருப்போம்…”, ஸ்வே கூறிவிட்டு செல்ல, “அண்ணா… கடைக்கு லீவு சொல்லிடுங்க….”, எனக் கூறியபடிக் கதவை அடைத்துக் கொண்டுச் சென்றாள். 

 

“விடுங்க ரகு….”

 

“ராக்கி….”

 

“அச்சோ… விடுங்க ராக்கி… என் மானமே போச்சி…. அவளுங்க இத வச்சே இன்னும் பல வருசம் ஓட்டுவாளுங்க….”

 

“முடியாது டி… அதென்ன காப்பத்துண்ணு சொல்ற… நான் உன்ன அப்டி என்ன பண்ணிட்டேன்…”

 

“எதுவும் பண்ண முன்ன தானே சொல்ல முடியும்….”

 

“அப்போ இப்பவே பண்ணிடறேன்.. கடைக்கு லீவு சொல்லிடறேன் இரு.. .அந்த தங்கச்சி நல்லா ஐடியா தருது….”, என அவளை மெத்தையில் பொத்தென போட்டுவிட்டு கடைக்கு அழைத்தான். 

 

“ராக்கி… கம்முன்னு இருங்க.. வீட்ல ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க…. “, என அவள் அவன் அலைபேசியைப் பிடுங்க முயற்சித்தாள். 

 

அவன் அவளை தன் கைகளுக்குள் அடக்கியப்படி போக்கு காட்டிக்கொண்டிருந்தான். 

 

முழுதாக அவளைத் தனக்கு முன் கொண்டு வந்துக் கட்டிப்பிடித்துக் கொண்டு அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான். 

 

“ராக்கி..”, அவளுக்கே கேட்காத குரலில் அவனை அழைத்தாள். 

 

“கம்முன்னு இரு டி…. “, என அவன் மெல்ல முத்தத்தில் முத்திரைப் பதிக்க ஆரம்பித்தான். 

 

“கம்முனு இரு டா…. இப்போ வேணாம்….”, அவன் கைகளில் உருகியபடிக் கூறினாள். 

 

“வேற எப்ப வேணும்?”, வார்த்தைகளின் ஊடே கூட முத்திரைகள் நிற்கவில்லை. 

 

“அவங்க ஊருக்கு போனதுக்கப்பறம்….”

 

“ரொம்ப லேட் டி.. எனக்கு இப்போ வேணும்…”, என அவளையும் தன் முகம் பார்க்க நிற்கவைத்து முகத்தினை அளக்கத் தொடங்கினான். 

 

அவன் கட்டிக்கொண்டிருந்த இறுக்கத்தில் வேறு ஏதோ செய்தி தெரிய, அவனை தன்னுள் புதைத்தபடி அவள் பேசினாள். 

 

“என் ராக்கிக்கு என்னாச்சி?”, எனத் தலையைக் கோதியபடி மென்மையாகக் கேட்டாள். 

 

“எப்படி டி உடனே புரிஞ்சிக்கற? இப்போது அவன் இறுக்கம் வேறு விதமாக கூடி அவளை தன் மடியில் அமர்த்தி அவளின் தோளில் தலை சாய்த்துக் கொண்டான். 

 

“புரிஞ்சிக்கறேன்-ன்னு சந்தோசமா கேக்கறியா சலிப்பா கேக்கறியா டா?”, அவனுக்கு நன்றாகக் கழுத்தைச் சாய்த்து இடம் கொடுத்தாள். 

 

“கொஞ்ச நேரம் முன்ன நீ பேசினியே.. .அத நெனைச்சேன்…. கொஞ்சம் சங்கடமா இல்ல என்ன உணர்வுண்ணு எனக்கு புரியல.. ஒருமாதிரி இருந்தது….”, இப்போது அவளை தன் முகத்திற்கு நேராகத் திருப்பி அமரவைத்து அரவணைத்துக் கொண்டான். 

 

“சரி என்னன்னு சொல்லு…”, இப்போது அவள் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டு கேட்டாள் . 

 

“ஆழமான நேசம் எனக்கு உன்மேல வருமான்னு சந்தேகம்…. வெறும் கடமைக்கு-ன்னு நான் உன்கூட வாழக்கூடாது…. “

 

“சரி… அப்பறம்….”

 

“உன்கூட ரொம்ப நாள் வாழணும்… நம்ம பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி தனியா அனுப்பிட்டு நாம லவ் பண்ணணும்…. உன்கூட சண்டை போடணும்… நம்ம பாணில கோவத்த போக்கணும்…. தினம் உன்னை கட்டிப்பிடிச்சு தூங்கணும் …. உன் காதல்ல நானும், என் காதல்ல நீயும் ஸ்பாயில் ஆகணும்….. “

 

இப்போது அவள் தான் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக் கொண்டாள். 

 

“என்னடி அமைதியாகிட்ட….”, பதில் இல்லாது போக அவளைப் பார்த்தான். 

 

சில நொடிகள் அவன் கண்களை பார்த்தவள் அவன் இதழில் அழுந்த முத்தமிட்டாள். பல நிமிடங்கள் அது நீளவும், மூச்சிற்காக அவனை விடுவித்துவிட்டு மீண்டும் இதழணைத்தாள். 

 

அவன் தான் இப்போது திணறிக்கொண்டு இருந்தான் அவளின் முத்த அணைப்பில். 

 

தலைத் தூக்கிய காமமும் அந்த முத்தத்தின் காதலில் அமிழ்ந்து தான் போனது பாவையவளின் மனநெகிழ்ச்சியின் வெளிப்பாட்டில்… 

 

“ம்ம்… ரதி…. “, அவன் குரல் வெகுவாக உருகி வந்தது. 

 

அவள் மீண்டும் அவனை முத்தாட அருகில் வரவும், “போதும் டி… அப்பறம் நான் அமைதியா இருக்க முடியாது….” 

 

“ஸ்பாயில் ஆகலாம் டா என் செல்ல புருஷா….”, அவன் மூக்குடன் மூக்குரசி கண்மூடி அவன் சுவாசத்தை உள்ளிழுத்தாள். 

 

“நீ சரியா இல்ல இன்னிக்கி….”, அவன் சிரிப்புடன் அவளைத் தனக்கு பக்கத்தில் அமரவைத்துத் தண்ணீர் கொடுத்தான். 

 

“நான் நெறைய குடிச்சிட்டேன்…. நீ குடி…. “, எனக் கண்ணடித்து அவள் கூறவும், அவன் தான் வெட்கம் கொண்டு முகம் திருப்பித் தண்ணீர் குடித்துவிட்டு அவளைப் பார்த்தான். 

 

“இப்போ நீ சரியாகிட்டியா டா?”

 

“மம்… வேற மாதிரி இப்போ மாறிட்டு இருக்கேன்… லிமிட் தாண்ட முன்ன நான் கடைக்கு கிளம்பறேன்…. நீ ஃப்ரெண்ட்ஸ் கூட பேசிட்டு இரு….”

 

“பகல்லையே பேசி முடிச்சிட்டு வந்துடறேன்….“, என அவள் கண்ணடித்து கூறவும் அவன் அவளை தன் வயிற்றோடு கட்டிக்கொண்டு, “நீ அவங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு… அவங்க ஊருக்கு போகட்டும்…. நான் இப்போ தெளிவாகிட்டேன்…..”, எனக் கூறி அவளது உச்சந்தலையில் முத்தம் வைத்தான். 

 

அவன் அவளைப் பிடித்துக் கொண்டிருக்கும் வித்தியாசத்தில் இப்போது அவளும் முகம் மலர்ந்து அவனை வழியனுப்பி வைத்துவிட்டு, முகம் கழுவிக் கொண்டு மீண்டும் உடைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி 10 நிமிடத்தில் அனைத்தும் எடுத்து வைத்து விட்டு கீழே அவர்களுக்கு உதவி செய்தபடி மதிய உணவை முடித்துக் கொண்டு அரட்டையில் இருந்தனர் மூவரும். 

 

 

“என்ன ரதி அண்ணா விட்டு பிரிஞ்சி இருக்க முடியாம தவிக்கராரு போல? “, சவி கிண்டல் செய்தாள். 

 

“உன் புருஷன் உன்னை இப்போ வரை விட்டு இருக்க முடியாம ஃபோன் மேல ஃபோன் அடிக்கறப்போ நாங்க எல்லாம் ஜூனியர் லெவல் தான் சவி..”, அவளும் கிண்டல் செய்தாள். 

 

“சரி சரி…. போதும்…. இதுக்கு மேல போனா சென்சார் போடணும் .. நிறுத்துங்க செல்லங்களா….”, ஸ்வே இடைப்புகுந்தாள்.

 

“இன்னும் நாங்க பேசவே ஆரம்பிக்கல ஸ்வே…. “

 

“அதனால தான் நிறுத்த சொல்றேன்…. “

 

“இன்னும் ஸ்கூல் புள்ளைங்க மாறியே இருக்க சொல்லாத டி… கொஞ்சம் 18+பேசினா என்னவாம்?”, சவி சலித்தபடிக் கேட்டாள். 

 

“நீங்க எல்லாம் ஆரம்பிச்சா இடம் பொருள் பாக்காம பேசிகிட்டே போவிங்க அதுக்கு தான். என் புருஷன் இங்க தான் தூங்கிட்டு இருக்காரு.. அவரு வரப்போ தான் நீங்க ஏடாகூடமாக பேசுவீங்க.. அப்பறம் அதுக்கு ஒரு பஞ்சாயத்து நடக்கும்.. இது தேவையா?”

 

“சரி.. .அண்ணா இருக்காரு.. அதனால விடறேன்,… நாம கேர்ள்ஸ் ட்ரிப் போலாம் டி.. அதுக்கு ஒரு பிளான் போடுங்க….”

 

“நீ மொத இன்னொரு டிக்கெட் ரிலீஸ் பண்ணுற 

வேலைய பாரு…. அப்பறம் அதுலாம் பேசிக்கலாம்,….. சரி எப்போ ரெடி ஆக ஸ்டார்ட் பண்ணலாம்? எத்தன மணிக்கு அங்க இருக்கணும்?”, ஸ்வே. 

 

“6 மணிக்கு அவ வர சொன்னா…. 4 மணிக்கு ரெஃபிரேஷ்மெண்ட் முடிஞ்சி ஆரம்பிங்க…. நானும் அவருக்கு ஃபோன் பண்றேன்.. சாப்பிட கூட வரல இன்னிக்கி….”

 

“அதான் காலைல பலமா சாப்பிட்டு போனாருல்ல ரதி..”, சவி இப்போது விஷமமாகக் கூறிக் கண்ணடிக்க, “அவ்ளோ பலமா எல்லாம் சாப்பிடல டி…”, என ரதியும் கண்ணடித்துக் கூறினாள். 

 

“யாரு சாப்பிடல ?”, எனக் கேட்டபடி வருண் அங்கே வரவும் ரதியும், சவியும் சிரிப்பை வாயிற்குள் அடக்க முயன்று, முடியாமல் சிரித்தனர். 

 

“இந்த ஸ்வே தான் சரியா சாப்பிடல அண்ணா… ஸ்வே அண்ணாவ கவனி… “, எனக் கூறிவிட்டு இருவரும் வெளியே ஓடிவிட்டனர். 

 

ஸ்வேதா அவர்களை முறைத்தபடித் தலையில் அடித்துக் கொண்டு, “போய் பல்ல வெளக்கிட்டு வாங்க…. போங்க… “

 

“காலையிலேயே பண்ணிட்டேன் புஜ்ஜி….”

 

“மறுபடியும் பண்ணா தப்பில்ல.. இவளோ நேரம் தூங்கினீங்கல்ல… போங்க…”, அவள் அவரிடம் கத்திவிட்டு சூடு செய்த குழம்பை எடுத்து வைத்தாள். 

 

வெளியே அவர்கள் சிரிக்கும் சத்தம் கேட்டு ஸ்வேதா வெளியே சென்று அவர்களை முறைக்க அவர்கள் மீண்டும் கொல்லென சிரிக்க என சிரிப்பலைகளாக இருந்தது. 

 

“ரகு…. சப்பிட்டீங்களா? எப்ப வரீங்க? 6 மணிக்கு நம்ம மண்டபத்துல இருக்கணும்…. “

 

“ராக்கி…..”

 

“மரியாதையா நான் பேசறப்போ பக்கத்துல ஆள் இருக்காங்கன்னு புரிஞ்சிக்கணும்…”, பல்லைக் கடித்தபடிக் கூறினாள். 

 

“ஹான்… வேற என்ன என்ன புரிஞ்சிக்கணும் மேடம்?”, அவன் உல்லாசமாகப் பேச்சை வளர்த்தான். 

 

“அத தெளிவா தனியா பேசிக்கலாம்… எப்ப வரீங்க?”

 

“நீ இப்பவே சொல்லு கிஸ்ஸி….”

 

“என்னது? கிஸ்ஸியா?”

 

“ஆமா… காலைல குடுத்தியே மாத்தி மாத்தி…. அப்போ இந்த பேர உனக்கு வச்சிட்டேன்….”, கிறக்கமாக அவன் கூறியதும் இவளுக்கு கன்னம் சிவக்க ஆரம்பித்தது. 

 

“கடைல இருந்துட்டு என்ன பேசறீங்க நீங்க?”

 

“சரி… டென்ஷன் ஆகாத கிஸ்ஸி…. நான் 5 மணிக்கு வரேன்…. “, எனக் கூறி வைத்தான். 

 

அனைவரும் தயாராகி 6 மணிக்கு முன்னேயே மண்டபம் சென்றுச் சேர்ந்தனர். 

 

அங்கே பிரியா மற்ற தோழிகளுடன் அங்கே வந்தாள். ரதி அவளைக் கடந்துச் சென்று சுந்தரியைப் பார்த்து பேசிவிட்டு மேடையின் அருகிலேயே அமர்ந்துக் கொண்டாள். 

 

அனைவரும் பரிசுகள் கொடுத்துவிட்டு புகைப்படம் எடுப்பது என அடுத்த 3 மணிநேரங்கள் ரெக்கைக் கட்டிப் பறந்தது. 

 

பிரியா தவிப்புடன் ரதியை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

சவிதா சிறிது நேரம் பிரியாவுடன் தனிமையில் பேசிக்கொண்டு இருந்துவிட்டு மற்றவர்களுடன் கலந்துக் கொண்டாள். 

 

இனிதாக சுந்தரியும் முகுந்தனும் இணைந்த திருநாளும் கடந்தது. 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்