“பயந்துட்டியா ஏஞ்சல்?” தனது கழுத்தினுள் புதைந்திருந்த அவளது பூ முகத்தின் மென்மையை ரசித்தபடி மெல்லக் குனிந்து அவள் காதோரம் ஊதினான் யுக்தா சாகித்யன்.
அதில் வெடுக்கென நிமிர்ந்து, “சைக்கோ எதுக்குடா இப்படி செஞ்ச?” என மூச்சு வாங்கியவள், மறந்தும் இறந்து கிடந்தவனைப் பாராமல் கட்டுப்படுத்திக்கொண்டாள்.
“டெல்லில என் என்கவுன்டருக்கு மிஸ் ஆனவன், இப்ப சென்னைல மாட்டி இருக்கான். விடுவேனா… அதான் சட்டுன்னு ஒரு பிளான் போட்டு, நாங்க டீமா என்கவுண்டர் பண்ணிட்டு இருந்தோம். நீயும் வந்தா த்ரில் ப்ளஸ் ரொமான்டிக்கா இருக்குமேன்னு வர சொன்னேன் ஏஞ்சல்” என்றவனின் விரல்கள் அவள் கன்னத்தில் ஊற, இன்னும் பயத்தில் இருந்து தெளியாதவள் “எதே டீமா?” என்று திரும்பித் திரும்பிப் பார்த்தாள்.
சடசடவென நான்கு ஆடவர்கள், டிப் டாப்பாக உடையணிந்து யுக்தாவின் முன் நின்றார்கள்.
அவர்களிடம் ஹிந்தி மொழியில் ஏதோ உத்தரவு பணித்ததில் அவர்கள் அவசர கதியில் இறந்து போன ஆடவனை தூக்கிச் செல்ல, அதன்பிறகே அவனது கையை தட்டி விட்டு எழுந்தாள் விஸ்வயுகா.
“என் பயத்தை வச்சு டீஸ் பண்ணாத யுக்தா” மொத்தக் கோபத்தையும் திரட்டி சீறினாள்.
“ஓகே ஓகே… கூல் ஏஞ்சல். என் திறமையை நீ நேர்ல கண்டு ரசிப்பியேன்னு வர சொன்னேன்” என இழுக்க,
“ஒருத்தனைக் கொல்றதுக்கு பேர் திறமையா. அந்தக் கருமத்தை நான் ரசிக்க வேற செய்யணும். புல்ஷிட்” என சிடுசிடுத்தாள்.
“இல்லையா பின்ன… நான் சார்ஜ் எடுத்துக்கு அப்பறம், டெல்லில இருக்குற 80 பெர்சன்ட் க்ரிமினலை வாஷ் அவுட் பண்ணிருக்கேன். மீதி 20 பெர்சன்ட் மட்டும் இப்ப உன்னால தடை பட்டு உயிர் வாழ்ந்துட்டு இருக்காங்க… உன்னைப் பார்த்து தான் நான் இங்கயே உன்கிட்டயே ப்ரீஸ் ஆகிட்டேனே…” இரு கையையும் மேலே உயர்த்தி சோம்பல் முறித்தபடி சாவகாசமாக காதல் வசனம் பேசிக்கொண்டிருந்தான் யுக்தா சாகித்யன்.
“ச்சு… லவ் டயலாக் பேச ரொம்ப ட்ரை பண்ணாத. க்ரின்ச் பண்றன்னு பச்சையா தெரியுது” என்று அவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள,
சடுதியில் அவளை இடையுடன் சேர்த்து இழுத்து அணைத்தவன், “மே பி உங்கிட்ட நான் அப்ரோச் பண்ற முறை தப்பா இருக்கலாம் ஏஞ்சல். பட், எஸ்… நான் க்ரின்ச் தான் பண்றேன். உன் மேல ஓவர் ஆசையா இருக்கேன். ஓவரா அட்ராக்ட் ஆகுறேன். அண்ட் அப்சலியூட்லி எஸ், ஐ ஆம் இன் லவ் வித் யூ ஏஞ்சல்!” என்றான் உருக்கமாக.
அதே உருக்கம் அவன் விழிகளிலும் தெள்ளந்தெளிவாக வெளிப்பட, ஒரே ஒரு நொடி அவள் திகைத்துப் போனதென்னவோ உண்மை தான்.
வலுக்கட்டாயமாக அவனிடம் இருந்து விலகியவள், “என்னடா லஸ்டா பேசி என்னை உன் வழிக்கு கொண்டு வர முடியலைன்னு, லவ் டயலாக் விட்டுட்டு இருக்கியா? அப்படியே நீ பேசுறதுல நான் மயங்கிடுவேன் பாரு…” என்று அவள் முறைக்க,
“ஹே இப்பவும் நான் லஸ்ட்ல தான் பேசுறேன். என்னைப் பொறுத்தவரை லவ், லஸ்ட் ரெண்டும் ஒன்னு தான். ஒன்னு இல்லைன்னா இன்னொன்னு கிக்கா இருக்காது ஏஞ்சல்” என ரசனை மின்ன கூறினான்.
“ஓஹோ! அப்போ நீ என்ஜாய் பண்ணுன கேர்ள் ப்ரெண்ட்ஸ் எல்லாம் என்ன கேட்டகரி?”
கேட்க தேவையில்லாத கேள்வி எனும்போதும் அவளை மீறி கேட்டு விட்டாள்.
“ஹா ஹா” என சாலை அதிர சிரித்தவன், “யூ நோ வாட் ஏஞ்சல்… இந்தக் கை துப்பாக்கியைப் பிடிச்சு இருக்கு, க்ரிமினஸ்ஸோட இரத்தத்தைக் கூட பொரியல் பண்ணிருக்கு. ஆனா, உன்னை மாதிரி ஒரு சாப்ட் எலிகண்ட் ஏஞ்சலை டச் பண்ணதே இல்ல. ஐ ஆம் மிஸ்டர் க்ளீன் ஏஞ்சல். சும்மா உன்னை டீஸ் பண்றதுக்காக கேர்ள் ப்ரெண்ட்ன்னு பன் பண்ணேன். நீ ஜெலஸ் ஆகிட்டியோ?” என இரு புருவத்தையும் அகல விரித்தான்.
“ஜெலஸ் ஆகுற அளவு நீ வொர்த் இல்ல” திமிர் தலைதூக்க பதில் அளித்தவளிடம், “என் வொர்த் உன் கண்ணுக்குத் தெரியல ஏஞ்சல். தெரியும்போது ஷாக் ஆகிடுவ…” என்றவனின் இதழ்கள் மௌனப்புன்னகை வீசியது.
“யார் ஷாக் ஆகுறான்னு பார்க்கலாம்” அவளும் சவால் விட்டாள்.
அதில் அவன் அவளை ஆழ்ந்து பார்க்க, அவளோ “இப்படி பட்டப்பகல்ல பப்ளிக் நடமாடுற இடத்துல என்கவுண்டர் பண்றியே. வேற யார் மேலயாவது புல்லட் பட்டுருந்தா என்ன ஆகியிருக்கும்” என்றாள் முறைப்பாக.
“நல்லா சுத்திப் பாரு ஏஞ்சல். இங்க ஹோட்டல்ஸ்ல இருக்கிற ஆளுங்களை தவிர பப்ளிக் யாரும் இல்ல. 200 மீட்டர் டிஸ்டன்ஸ்லேயே இந்தப் பக்கம் வர்ற வெஹிகில்ஸ் எல்லாத்தையும் ரூட் மாத்தி விட்டாச்சு. ஹோட்டலை எல்லாம் க்ளோஸ் பண்ணுனா கிரிமினல் அலெர்ட் ஆகிடுவான். சோ, இங்க அவனைத் தவிர மத்த ஆளுங்களுக்கு தகவல் சொல்லியாச்சு. சோ பேனிக் ஆகத் தேவை இல்ல” என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவளை நெருங்கியபடி விளக்கினான்.
அவளும் அதன்பிறகே சுற்றுப்புறத்தைக் கவனித்தாள். துப்பாக்கிச் சத்தம் கேட்கவில்லை என்றாலும், ஒருவன் திடீரென இறந்து போனதில், யாரும் அலறி அடித்துக்கொண்டு ஓடவில்லை. கத்தவில்லை அவளைத் தவிர.
“சைக்கோவே என்கிட்டயும் சொல்லிருக்க வேண்டியது தான” மீண்டும் பொங்கினாள்.
“சொல்லிருந்தா கிக்கா ஒரு ஹக் கிடைச்சு இருக்குமா ஏஞ்சல்…” எனக் கண் சிமிட்டியவனை கொலையே செய்யத் தோன்றியது அவளுக்கு.
“ஓகே கூல்…” என அவள் நெற்றியில் விழுந்த கூந்தலை ஒற்றை விரலால் பின்னால் நகர்த்தியவன், “ஏதோ இம்பார்ட்டண்ட் விஷயம்னு சொன்ன?” என வினவினான்.
“உன்னால சொல்ல வந்ததையே மறந்துட்டேன்… கார்ல போய் பேசலாம். இங்க நிக்கவே அருவருப்பா இருக்கு” என்று முகத்தைச் சுளித்து விட்டு அவள் முன்னே நடக்க, அவனும் அவள் புறம் காந்தமாக இழுக்கப்பட்டு பின்னால் நடந்தான்.
“என்னடா போனவளை இன்னும் காணோம். வாங்க போய் பார்க்கலாம்” என்று ஷைலேந்தரி நச்சரிக்கும் போதே இருவரும் வந்துவிட்டனர்.
ஏழு பேர் அமரும் படியான பி. எம். டபிள்யூ காரின் பின் பக்கம் விஸ்வயுகாவுடன் அவன் ஏறிக்கொள்ள, கடைசி சீட்டில் மற்ற மூவரும் அமர்ந்திருந்தனர். ஓட்டுனரை வெளியில் நிற்க வைத்து விட்டு, விஸ்வயுகா தனது சந்தேகத்தைக் கூறினாள்.
“அபர்ணா என் அம்மாவோட அண்ணன் பொண்ணு. என் மினிஸ்டர் மாமா மண்டைல மொளகா அரைச்சியே அவரோட ஒரே பொண்ணு. ஸ்கூல் படிக்கும்போதே கனடா போய்ட்டா. காலேஜ் முடிச்சுட்டு தான் வந்தா. அவள் வந்ததுமே என் மாமா அவளுக்கு மேரேஜ் பண்ணி வைக்க நினைச்சாங்க.ஆனா அவள் நரேஷை லவ் பண்றதை பத்தி சொன்னதும் என் மாமா ஒத்துக்கல” என்றதும்,
“ஏன்?” என்றான் பக்கத்து கடையில் வாங்கிய சிப்ஸை வாயில் தள்ளியபடி.
“ஒரு கர்ட்டஸிக்காவது நமக்கு வேணுமான்னு கேட்குறானா பாரேன்” என்று ஷைலேந்தரி மைத்ரேயனிடம் கிசுகிசுக்க, நந்தேஷ் தான் “இப்ப சிப்ஸு ரொம்ப முக்கியம்” என்று முறைத்தான்.
விஸ்வயுகா அவனது கேள்வியைத் தொடர்ந்து, “நரேஷ் கொஞ்சம் மிடில் கிளாஸ். மாமா பொலிடீஷியன். சோ ஸ்டேட்டஸ்க்கு செட் ஆகாதுன்னு வேணாம்னு சொன்னாங்க. அவள் ஸ்ட்ராங்கா தான் இருந்தா, அதுக்கு அப்பறம் என்ன ஆச்சுன்னு தெரியல திடீர்னு அவளுக்கும் நரேஷுக்கும் பிரேக் அப் ஆகிடுச்சு. அந்த டைம்ல தான் நாங்களும் மேட்ரிமோனி ஆப் ஸ்டார்ட் பண்ணுனோம். அப்போ நிறைய ப்ரொபைல் கலெக்ட் பண்ணிட்டு இருக்கும் போது, ஸ்டார்ட் அப்னால எங்களுக்கு தெரிஞ்சவங்க ப்ரொபைலும் யூஸ் பண்ணுனோம். சோ அபர்ணா அவளோட ப்ரொபைல் குடுத்தா” என்று நிறுத்தும் போது மைத்ரேயன் ஆரம்பித்தான்.
“எங்களோட பிசினஸ் பத்தி தெரிஞ்ச என் ஸ்கூல் சீனியரும் அவனோட ப்ரொபைல் குடுத்தான். அந்த ப்ரொபைல் அபர்ணாவுக்குப் பிடிச்சுப் போய் அவனையே பேச சொன்னா… அங்கிளும் ஓகே சொல்லிட்டாரு.”
“அப்போ ஸ்டேட்டஸ் ப்ராபளம் இல்லையா?” புருவம் உயர்த்தி யுக்தா வினவ,
“என் சீனியர் அப்பவே வெல் செட்டில்டு. லாக்ஸ்ல சாலரி வாங்கிட்டு இருந்தான், பேமிலியும் ஹை ப்ரொபைல் தான். சோ ஸ்டேட்டஸ் பத்தி ப்ராபளம் இல்லன்னு ஓகே சொன்னாரு” என்றான் மைத்ரேயன்.
அதனைத் தொடர்ந்து நந்தேஷ், “எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி, அபர்ணா போன கார் ஆக்சிடெண்ட் ஆகி, அவள் ஸ்பாட்லயே இருந்துட்டா” என வருத்தத்துடன் கூற,
“எதனால ஆக்சிடெண்ட்?” என்ற யுக்தாவிடம், ஷைலேந்தரி பதில் அளித்தாள்.
“அவள் கனடால கூட படிச்ச ப்ரெண்ட்ஸை எல்லாம் இன்வைட் பண்ணிருந்தா. அவங்களும் பார்ட்டி கேட்டாங்க. சோ, ட்ரிங்க்ஸ் பார்ட்டி ஏற்பாடு பண்ணிருந்தா. அவளும் செம்ம குடி.”
“நீங்கள்லாம் எங்க இருந்தீங்க அப்போ?”
“நாங்களும் அந்த பார்ட்டி அட்டென்ட் பண்ணோம். பட் ட்ரிங்க் பண்ணல” என்றான் மைத்ரேயன்.
“ஏன்?” யுக்தா கேட்ட கேள்வியில் நால்வரும் விழித்தனர்.
“ஏன்னா… இதென்ன கேள்வி?” விஸ்வயுகா கேட்டதில்,
“ட்ரிங்க்ஸ் பார்ட்டில ஏன் ட்ரிங்க் பண்ணலைன்னு கேட்டேன். உன் பேமிலி ஒன்னும் கட்டுக்கோப்பான ஆர்தோடக்ஸ் பேமிலி இல்லை தான?” அவன் இதழ்களில் நக்கல் நகை.
“மைண்ட் யுவர் வர்ட்ஸ் யுக்தா” விஸ்வயுகா விழிகளில் நெருப்பைக் கக்க, “நான் கேட்டதுக்கு பதில் வரல” என்றான் அழுத்தமாக.
நந்தேஷோ சற்றே எரிச்சலுடன் “எங்க சித்திக்கு அந்தப் பழக்கம் பிடிக்காது. சோ நாங்களும் பண்ண மாட்டோம்” என்றிட,
“ம்ம்… ஓகே. சோ அபர்ணா ட்ரிங்க் பண்ணிருந்தா. அவளை ஏன் தனியா ட்ரைவ் பண்ண விட்டீங்க?” எனக் கேட்டான்.
விஸ்வயுகா, “அவளை நாங்க கூட்டிட்டுப் போறது தான் பிளான். ஆனா, எங்களுக்கே தெரியாம கார் எடுத்துட்டுப் போய்ட்டா. அப்படியும் அவளை பாலோ பண்ணிப் போறதுக்குள்ள ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு” என்றதில்,
“ம்ம்” என நெற்றியைத் தேய்த்தவன், “சோ இது கன்பார்மா ஆக்சிடெண்ட் தானா? இல்ல உங்களுக்கு அதுல சந்தேகம் எதுவும் வந்துச்சா?” என்றான் கூர்மையாக.
“அப்போ சந்தேகம் வரல. ஆனா நீ துருவி துருவிக் கேட்குறதை பார்த்தா இப்ப சந்தேகம் வர்ற மாதிரியே இருக்கு. நீ ஏன் ஒரு ஆக்சிடெண்ட்டை இப்படி நோண்டுற…” என நொந்து கேட்டவளிடம்,
மெலிதாய் புன்னகைத்தவன் “பழக்கதோஷம் ஏஞ்சல்” என்றான்.
“இப்போ உங்க டவுட் நரேஷ் மேல தான்ல” என அவன் வினவ, நால்வரும் தலையை ஆட்டினர்.
அதில் மைத்ரேயன் புறம் திரும்பிய யுக்தா, “வெல் உன் சீனியர் பத்தி சொன்னியே. அவனோட காண்டாக்ட்டும் வேணும். அவனையும் விசாரிச்சு வைக்கலாம்” என்றதில் மைத்ரேயன் எச்சிலை விழுங்கினான்.
“அது வந்து… அவன் ஒரு வருஷத்துக்கு முன்னாடி சூசைட் பண்ணிக்கிட்டான்” என்றான் மெல்ல.
அதில் மற்ற மூவரும் அதிர்ந்து அவனை நோக்க, விஸ்வயுகா “என்னடா சொல்ற? எங்ககிட்ட நீ சொல்லவே இல்லையே” எனப் பதறினாள்.
“சொல்லலாம்னு தான் நினைச்சேன். நீ ஏற்கனவே டெத் நியூஸ்லாம் கேட்டா ரெஸ்ட்லெஸ் ஆகுவ. ஆல்ரெடி நம்ம வீட்ல ரெண்டு டெத் நடந்து உன்னை டிஸ்டர்ப் பண்ணிருச்சு. அதான், சொல்லல விஸ்வூ” என்றான் வாடிய முகத்துடன்.
ஷைலேந்தரி “அவன் எதுக்குடா சூசைட் பண்ணுனான்” என புரியாமல் கேட்க, “தெரியல ஷைலா. ஏதோ பேமிலி ப்ராபளம்னு சொல்லிக்கிட்டாங்க. நானும் அதை பெருசா விசாரிச்சுக்கல” என்றதில்,
“சரி பர்ஸ்ட் நரேஷை பிடிச்சு விசாரிக்கலாம்” என்ற யுக்தா, “அவனைப் பார்த்தா உங்களுக்கு அடையாளம் தெரியும்ல. நான் கஸ்டடில எடுத்துட்டு சொல்றேன். அவன் தானான்னு கன்பார்ம் பண்ணுங்க” என்றதும் நால்வரும் ஒரே போல தலையசைத்தனர்.
“அண்ட் ஒன் மோர் திங்க்…” என யோசனையுடன் ஆரம்பித்தவன், “இறந்து போன ரெண்டு ஜோடிக்கும் எப்போ இருந்து இந்த பேச்சு வார்த்தை நடந்துச்சு. அவங்க பர்ஸ்ட் உங்களை எப்படி அப்ரோச் பண்ணுனாங்க. எனிதிங் லைக் தட்?” என்றான் விசாரணையாக.
“குறிப்பிட்டு சொல்ற மாதிரி இல்ல யுக்தா. நார்மலா எல்லா ப்ரொபைல் மாதிரி தான் இந்த ப்ரொபைலும் வந்துச்சு. அண்ட், ப்ரொபைல் ஓகேன்னா அவங்க பேமிலிக்குள்ள பேசிப்பாங்க. சோ… இதுல வியர்டா எனக்கு எதுவும் தெரியல” என சிந்தனையுடன் உரைத்தாள் விஸ்வயுகா.
“பைன்… உங்க மேட்ரிமோனில வர்ற ப்ரொபைல் என்ன பேஸிஸ்ல இருக்கும்?” அடுத்த வினாவை எய்ததில் மைத்ரேயன் பதிலளித்தான்.
“மிடில் க்ளாஸ், ஹை க்ளாஸ் எல்லாருமே ப்ரொபைல் குடுத்து வைப்பாங்க. ப்ரைஸ் ரிலேட்டடா சேஞ்சஸ் இருக்கும். ஸ்கீம்ஸ் இருக்கும்.”
“அது ஓகே… இந்த கொலையெல்லாம் சீரியல் கில்லர் தான் செய்றான்னா, கண்டிப்பா இந்த நாலு கொலையிலயும் காமன் திங்ஸ் நிறைய இருக்கணும். இப்போதைக்கு கொலை பண்ணப்பட்ட ஸ்டைல், அண்ட் உங்க மேட்ரிமோனி இது ரெண்டும் தான் காமனா இருக்கு. சோ, அது தவிர வேற என்ன காமன் இருக்க முடியும்?” என்று அவன் நால்வரையும் பார்க்க அவர்களும் யோசித்தார்கள். ஆனால், அதற்கு பதில் தான் தெரியவில்லை.
“ஆள் யாருன்னு ட்ரேஸ் அவுட் பண்ண முடியலையா சார்” ஷைலேந்தரி கேட்டதில், “சிசிடிவி புட் ஏஜ்ல சந்தேகப்படுற மாதிரி யாரும் இல்ல. இன்வெஸ்டிகேஷன் போயிட்டே இருக்கு. வில் ஸீ!” என்றான் தீவிரத்துடன்.
நரேஷை காவலில் எடுக்கும் பொருட்டு யாருடனோ போன் பேசியபடி யுக்தா கிளம்பி விட, இன்னும் நால்வரின் முகமும் தெளிச்சி பெறவில்லை.
நந்தேஷ் தான், “எனக்கு என்னமோ இவன் ராங் ரூட்ல இன்வெஸ்டிகேட் பண்றானோன்னு தோணுது. ஏன் இந்த நாலு கொலையையும் வேற வேற ஆள் செஞ்சுருக்கக் கூடாது. ஒரே ஆள் தான் செஞ்சுருப்பான்னு என்னால நம்ப முடியல” என்றதும் “இதை அவன்கிட்டயே கேட்டு இருக்க வேண்டியது தான?” என்றாள் விஸ்வயுகா.
“எதுக்கு அப்ப நீ தான கொலை பண்ணுனன்னு அவன் என்னைக் கொத்தா தூக்கவா. ஆணியே பிளக் பண்ண வேணாம். அவனாச்சு கொலையாச்சு” என்று பின் வாங்கியவனைக் கண்டு மற்றவர்கள் நமுட்டு நகை புரிந்தனர்.
—-
“மைத்ரா! சிவகாமி இன்னைக்கு என்னைப் பார்க்க வந்தாங்க” மைத்ரேயன் வீட்டினுள் நுழையும் போதே அவனது தாய் அகிலா அவனை வழிமறித்தார்.
“ஆண்ட்டி எதுக்கு உங்களைப் பார்க்க வந்தாங்க?” என அவன் புருவம் சுருக்கிக் கேட்க, “எல்லாம் உன் கல்யாண விஷயத்தைப் பத்தி பேச தான். உனக்கும் விஸ்வாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொன்னாங்க” என்றதில் அவன் திகைத்தான்.
“அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?”
“நான் சொல்றதுக்கு என்ன இருக்கு. நம்மளை விட ஸ்டேட்டஸ் எல்லாத்துலயும் ஒரு படி உயர்ந்தவங்க. அவங்க வீட்ல சம்பந்தம் வைக்க நான் வேணாம்னா சொல்லப்போறேன். விஸ்வான்னு சொன்னதும் யோசிக்காம சரின்னு சொல்லிட்டேன். அந்த வாயாடியை சொல்லாம இருந்தாங்களே… என்ன தான் ஒரே வீட்ல இருந்தாலும், ஷைலுவோட அப்பாவுக்கு பிசினஸ் கொஞ்சம் டவுன்னு தான் கேள்விப்பட்டேன். சரி அதை விடு. நல்ல நாள் குறிச்சுட்டு சொல்றேன்னு சொன்னாங்க” எனப் பேசிக்கொண்டே போக,
“அம்மா, அம்மா முதல்ல நிறுத்துங்க. இது விஸ்வாவுக்குத் தெரியுமா?” எனக் கேட்டான் நிதானமாக.
“எப்படியும் சிவகாமி சொல்லிருப்பாங்களே. உன் அப்பா வேற பிசினஸ் ட்ரிப்க்கு போயிருக்காரு. அவரை சட்டுன்னு வர சொல்லணும்” எனப் பேசியபடியே உள்ளே சென்றார்.
மைத்ரேயன் குழப்பத்துடன் அறைக்குச் செல்ல, சரியாக ஷைலேந்தரி அவனை அழைத்தாள்.
இதற்கு மேலும் தாமதிக்க கூடாதென்று ஒரு முடிவுடன் போனை எடுத்தவன், “சொல்லு ஷைலா” என்றிட, அவனது குரலைக் கவனியாதவள், “மைதா… நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்டா” என்றாள் குழறலாக.
“என்ன?”
“நம்ம மேட்ரிமோனிக்கு வந்த ப்ரொபைலை எல்லாம் பார்த்துட்டு இருந்தேன்டா. அதுல ரீசன்ட்டா ஒரு ஹாண்ட்ஸம் கை ப்ரொபைல் அப்லோட் பண்ணிருக்கான். பேர் அபிலாஷாம். அவனைப் பார்த்ததும் என் க்ரஷ் லிஸ்ட்ல இருக்குற யுக்தாவைத் தூக்கிட்டு இவனை இறக்கிட்டேன்டா. அது மட்டுமில்லாம இன்னும் எத்தனை நாளைக்கு தான் சிங்கிள் பார் எவர்ன்னு சுத்துறது. சோ, இவனைப் பத்தி விசாரிச்சு இவனையே கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டா என்னனு என் அடிமனசு என்னைப் பிராண்டுது. எவன் எவனோ நம்ம செஞ்ச ஆப்பால ஹனிமூன் போறான். நான் போகக்கூடாதா. போவேன். கண்டிப்பா போவேன். அந்த ப்ரொபைலை பிரைவேட் பண்ணி விடுடா. அப்படியே உன் அன்புத் தோழிக்காக அவனைப் பத்தி விசாரிச்சு வை… ம்ம்?” என அடுக்கிக்கொண்டே போக,
“ம்ம்…” என்றவனின் குரலில் இருந்த இறுக்கத்தை உணராமலேயே போனை வைத்து விட்டவள், “ஹய்யா நானும் கமிட் ஆகப்போறேன்” என்று மெத்தையில் குதித்துக் கொண்டிருந்தாள்.
சில நொடிகள் போனையே வெறித்துக் கொண்டிருந்த மைத்ரேயன் விஸ்வயுகாவிற்கே அழைக்க, அவள் அந்நேரம் யுக்தா சாகித்யனின் அறையில் தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.
அப்போது தான் சிவகாமி மூலமாக தகவல் அவளுக்கு வந்திருந்தது. எப்போதும் போல யுக்தா அவளை வார்த்தைகளால் சீண்டிக்கொண்டு மது அருந்திட, அதனைக் கூட கவனியாதவளுக்கு இது என்ன புது பிரச்சனை என்ற எண்ணமே தோன்றியது.
மைத்ரேயனின் எண்ணைக் கண்டதும் அழைப்பை ஏற்றவள் “சொல்லுடா!” என்றதில், அவன் “விஷயம் தெரியுமா?” என்றான் நேரடியாக.
“ம்ம்… இப்ப என்ன பண்றது?”
“கல்யாணம் தான் பண்ணனும். நீ இப்படியே தனியா இருந்துடலாம்னு பாக்குறியா? நம்மளே கல்யாணம் பண்ணிக்கலாமே விஸ்வூ” என்றவனின் அடிநெஞ்சில் மறைக்கப்பட்ட வேதனையை யாருமே அறியவில்லை.
மைத்ரேயனின் அழைப்பு வந்ததுமே யுக்தா காதைத் தீட்டி, கவனத்தை முழுக்க அவள் மீது வைத்திருந்தான்.
அவன் முன்னே திருமணத்தை மறுக்க விருப்பமற்று, “ஓகே டா… கல்யாணம் பண்ணிக்கலாம். நான் நேர்ல வந்து மீதியைப் பேசுறேன்” என்று வைத்து விட்டாள்.
கையில் இருந்த மதுக்குவளையை இறுக்கிப் பிடித்த யுக்தா சாகித்யனின் முகத்தில் அழுத்தம் அரங்கேறியது.
“கல்யாணம்?” எனக் கேட்டு அவளைக் கேள்வியுடன் பார்த்தான்.
“ம்ம் எனக்கும் மைத்ராவுக்கும்” என அவள் அசட்டையாகப் பதில் அளிக்க,
“ஓஹோ! ஆனா அது நான் இருக்குறவரை நடக்காதே…” என்றான் பல்லைக்கடித்து.
“அப்போ கிளம்பி போய்டு” அவள் தோளைக் குலுக்க,
“ஐ டோன்ட் லைக் திஸ் யுகா. இந்தப் பேச்சு இனி நமக்குள்ள வரக்கூடாது” என்றவனின் குரலில் கர்ஜனை மிகுந்திருந்தது.
அதனை எப்போதும் போல சட்டை செய்யாதவள், “ஒன் அவர் முடிஞ்சுது. நான் கிளம்புறேன். கல்யாண வேலை வேற பார்க்கணுமே!” என அவனை மேலும் சீண்டி விட்டு நகர எத்தனிக்க, அவளை ஒரே எட்டில் கைப்பற்றி இழுத்தவன், சூடான மூச்சுக்காற்று அவளைச் சுட நெருங்கி நின்றான்.
“நான் சொல்றது உன் காதுல விழுகல. என்னைத் தவிர எவனும் உன் சுண்டு விரலைக் கூட தொடக்கூடாது” விழிகளில் அனலைக் கக்கியபடி அவளது கரத்தைப் பின்னால் வளைத்தான்.
“விடு யுக்தா. பைத்தியமா நீ. உன்னைப் பார்த்து முழுசா ஒரு வாரம் கூட ஆகல. பாக்குற நேரமும் சைக்கோ மாறி பிஹேவ் பண்ற. முதல்ல என்னை விடு” என்று அவளும் உறும, மெல்ல அவளது கரத்திற்கு விடுதலை கொடுத்தவன்,
“ஓகே ஓகே… பைன். ஐ லவ் யூ ஏஞ்சல். அந்த உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு. இந்தக் கண்ணு என்னைத் தவிர எவனையும் உரிமையா பார்க்க கூடாது” என்றவனின் பைத்தியக்கார நிலை கண்டு அவளுக்குள் சினம் மூண்டது.
“என்னமோ உளறு. நான் கிளம்பனும் தட்ஸ் இட்” என்று அவள் போனை கையில் எடுத்துக்கொண்டு நகர,
“நாளைக்கே நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்தக் கல்யாண பேச்சு நின்னுடுமா?” யுக்தா அழுத்தம் திருத்தமாகக் கேட்க, அவள் திகைத்து நின்றாள்.
“டேய் உன்னைக் கல்யாணம் பண்றதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது. அதுக்கு நான் சிங்கிளாவே வாழ்ந்துட்டுப் போய்டுவேன். ஒரு வாரமே எப்ப முடியும்னு இருக்கு. இதுல கல்யாணம் பண்ணணுமாம்ல போடா வெண்ணை…” என்று கண்டமேனிக்குத் திட்டி விட்டு கதவைத் திறந்தாள்.
அவனோ தடித்த புஜங்கள் இறுக, “நில்லு ஏஞ்சல். பேசி முடிச்சுட்டுப் போ” என்றான் கட்டளையாக.
“நீ பேசுறதை எல்லாம் கேட்குற அளவு எனக்குப் பொறுமை இல்ல” என்றவள் மின்தூக்கிக்கு அருகில் சென்று விட, அவனோ அப்போதும் இடத்தை விட்டு நகராமல் கத்தினான்.
“ஏஞ்சல் ஜஸ்ட் ஸ்டாப் இட். ஐ வார்ன்ட் யூ” என எச்சரிக்க, அவளோ அதனைக் காதில் வாங்காமல் லிப்ட்டினுள் ஏறி விட்டாள்.
ஐந்தாம் மாடி வரை சென்று விட்ட லிப்ட் திடீரென நின்று போனதோடு அல்லாமல் அனைத்து விளக்குகளும் அணைந்து விட, சிறு புள்ளி வெளிச்சம் கூட தெரியாத அளவு கும்மிருட்டு சூழ்ந்தது.
இந்த தாக்குதலை எதிர்பாராத விஸ்வயுகா பயத்தில் அரண்டு, “ஆஆ” எனக் கத்தி கண்ணையும் காதையும் மூடிய படி கீழே அமர்ந்தாள்.
பெரும் மௌனமும், கடும் இருட்டும் அவளை குலைநடுங்க வைத்தது.
உடலெல்லாம் அச்சத்தில் உதற, “யுக்தா… யுக்தா…” எனக் கத்தக் கூட இயலாமல் அரற்றினாள்.
“ப்ளீஸ்டா லைட்டைப் போடு யுக்தா ப்ளீஸ்!” என கத்தும்போதே அவளையும் மீறி கண்கள் கலங்கி விழிநீர் கன்னத்தைத் தொட்டு விட்டது.
சில நொடிகளில் விளக்கும் வந்து விட, லிப்ட் மீண்டும் மேலேறி 13 ஆம் மாடியில் வந்து நின்றது.
அதனைக் கூட உணராதவன் கண்ணைத் திறக்க பயந்து, “யுக்தா டேய்ய்ய் யுக்தா…” என உளறிக்கொண்டிருக்க,
அவள் அமர்ந்திருந்த கோலம் கண்டு விறுவிறுவென லிப்ட்டினுள் சென்று அவளைத் தூக்கினான் யுக்தா சாகித்யன்.
“உன்னைப் பயமுறுத்துறது என் நோக்கம் இல்ல. பட், நீ என்னை அந்த நிலைமைக்குத் தள்ளுற ஏஞ்சல்” என ஆழ்ந்த குரலில் கூறியவன் இன்னும் கண்ணைத் திறவாமல் அவள் நடுங்குவது கண்டு, “ஓ காட் யூ ஆர் ஷிவரிங் யுகா” எனப் பதற்றம் கொண்டு அவளை மெத்தையில் அமர வைத்து, நெஞ்சுடன் அணைத்துக் கொண்டான்.
“ரிலாக்ஸ் ஏஞ்சல். ஜஸ்ட் ரிலாக்ஸ். கண்ணைத் திறந்து பாருடா…” என்று அவள் கன்னத்தைத் தட்டி உள்ளங்கையையும் தேய்த்து சிறிது நீரையும் பருகக் கொடுக்க, அவளோ கண்ணை இறுக்கி மூடிக்கொண்டே இதழ் நடுங்க ஏதோ உளறினாள்.
“ஏஞ்சல்! யுகா ஆர் யூ ஆல்ரைட் டியர்?” மென்மையிலும் மென்மையாய் கேட்டவன், அவளிடம் பதில் வராமல் போனதில், அவள் கன்னம் பிடித்து நிமிர்த்தி அவளது மென்னிதழ்களுடன் தன்னிதழை அழுத்தமாக பதித்தான்.
மோகம் வலுக்கும்
மேகா
யுகா உரிமை உணர்வு காதல் செம