236 views

அத்தியாயம் 14

இன்னும் சமாதானம் ஆகாத தன்  செல்ல தங்கையிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.ஆனால் சுபாஷினி அவள் கூறியது காதில் விழாதது போல் , புத்தகத்தில் கவனம் செலுத்த,

” சுபா ! நீ செம்ம கோபத்துல இருக்க – ன்னுத் தெரியும். நான் வேணும்னே மறைக்கல.அவங்களைப் பத்தி எதுக்கு மறுபடியும், மறுபடியும் பேசிக்கிட்டுன்னு தான் மறைச்சுட்டேன் “

” சரி க்கா. விடு. அவங்களைப் பத்திப் பேசறது உனக்கு அவ்ளோவா பிடிக்கல, அன்கம்ஃபர்டபிளாக இருக்குன்னா நான் இனிமேல் பேசல. நான் மெட்டீரியல் கலெக்ட் பண்ணிட்டு இருக்கேன். டைவர்ட் ஆகாம இந்த வேலையையாவது பண்றேன் ” என்று கூறிவிட,

அன்றைய நாள் முழுவதும் அவள் சுபாஷினியை, சமாதானம் செய்ய பலமுறை முயன்று, தோற்றுப் போனாள்.

அடுத்த நாள் காலையில், இவர்களது முக மாறுதல்களைக் கவனித்த சிவசங்கரி,
” இளா ! சுபா ! கிளம்புங்க “

அவர்களை அலுவலகம் மற்றும் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.

இளந்தளிர் தன் அலுவலகம் சென்ற பிறகு,
மாப்பிள்ளையின் புகைப்படத்தை அனுப்பி வைத்த தரகரிடம், ‘ இன்னும் பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை ‘ என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவிக்கச் சொல்லி விட்டார் சிவசங்கரி.

தன் பெரிய மகள் திருமணத்தை நினைத்தெல்லாம் கலங்கவில்லை, கவலை கொள்ளவில்லை, தங்கையின் பாரா முகம் தான் பாடாய்ப்படுத்துகிறது என்பது அவருக்குத் தெரியாது அல்லவா !

முன்பு போல், இப்போதும் மிதுனா கண்டு கொள்வது போல், இருந்து விடக் கூடாதென்று,
தளிர் தன் வதனத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு, வேலையைப் பார்க்கலானாள்.

” ஃபைல்ஸ் எல்லாம் சரியா இருக்கு. இன்னைக்கு வேலையை சீக்கிரம் முடிச்சுட்டோம். கொஞ்ச நேரம் பேசுவோமா இளா? “
மிதுனா அவளிடம் கேட்க,

” இன்னும் அடுத்த வேலை உடனே வரப் போகுது மிது.இதுல பேச எங்க நேரம் இருக்கு. லன்ச் ஹவர் – ல கூட சாப்பிட நேரம் பத்தாம இருக்கு ” சலித்துக் கொண்டாள் தளிர்.

” அடுத்த வேலை வர்ற வரைக்கும் பேசலாமே ? புதுசா நீ சலிச்சுக்கிற இளா ! முன்னப் போல ப்ரிஸ்க் ஆக இல்லை “

ஆக இவளும் தன்னை கணித்துக் கூறி விட்டாள்  ! குழப்பம் தோய்ந்த மூளையையும், மனதையும் வைத்துக் கொண்டு, புத்துணர்வாக வலம் வர இவளால் எப்படி இயலும்? தங்கையின் மனோபாவத்தை நினைத்து வருந்திக் கொண்டு இருக்கிறாளே!

” அதெல்லாம் இல்லை மிது ” என்று சமாளித்தாலும், இந்த சமாளிப்பு விஷயங்கள் இவளுக்கேப் பிடிக்கவில்லை. எதையும் இப்படி சமாளித்து, கடந்து போய் விட மாட்டாள் தளிர்.
அதற்குச் சரியான காரணங்களைச் சொல்லி விடுவாள் இப்போது எல்லா விஷயங்களுக்கும்
அவளால் நொண்டிச் சாக்குகள் தான் சொல்ல முடிகிறது.

” ப்ச்..! ” என்று வெளிப்படையாக சொல்ல, மிதுனாவிற்கோ, தான் பேசிய விஷயத்தால் தான் இப்படி சலித்துக் கொள்கிறாளோ ! என்று தோன்றிட,

” சாரி இளா ! நீ எப்பவும் கன்ஃப்யூஸ்ட் ஆக இருக்க மாட்ட! இன்னைக்கு தோணுச்சு, அதான் கேட்டுட்டேன். ” என்று விளக்கம் அளித்திட,

உடனே பதறிய இளந்தளிர்,
” அச்சோ…! இல்லை மிது! நானும் அதையே தான் நினைச்சேன். நீ எதுக்கு இப்போ சாரி கேட்டுட்டு இருக்க? ப்ளீஸ்! ” என்று தன் மனநிலையை  உணர்த்திட்டாள்.

”  சரி . வா வொர்க் பாக்கலாம் “

கல்லூரி முடிந்து வந்து, அறைக்குள் அடைந்து கொண்ட சின்ன மகளை யோசனையாகப் பார்த்த சிவசங்கரி,

” சுபா! இளாவுக்கும், உனக்கும் என்ன சண்டை?
முகத்தை உம்முன்னே வச்சுக்கிட்டு இருக்கீங்க? “
அவர் கேட்டதும்,

” சும்மா எங்களுக்குள்ள எப்பவும் வர்ற சண்டை தான்மா! உங்களுக்குத் தெரியாததா? “
என்று கூற,

” அப்படித் தெரியலயே ! சீக்கிரம் பேசிடுவீங்களே! ஆனா இப்போ லேட் ஆகுதே?  இளாவும் வரட்டும் கேக்குறேன் “
என்று அவர் சென்று விட,

சுபாஷினி ” அக்கா…! போச்சு..! “என்று தலையை உலுக்கிட, அதற்குள் இளந்தளிர் இவளின் மனதைக் குளிர்விக்க, ஐஸ்க்ரீமை வாங்கிக் கொண்டு, வீட்டிற்குள் வந்தாள்.

அதனை உடனே தங்கையிடம் கொடுக்க நினைத்து,
அவளைத் தேடிச் செல்ல,
” சுபா! இந்தா உன்னோட ஐஸ்க்ரீம்! மறக்காம வாங்கிட்டு வந்துட்டேனே! “
அதை அவளிடம் சமர்ப்பித்தாள்.

அக்கா! அம்மா இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து உனக்கும், எனக்கும் என்ன சண்டை? ஏன் இவ்ளோ நேரம் பேசாமலேயே இருக்கீங்கன்னு கேட்டாங்க! “

” என்ன சுபா அம்மாவே கேட்டுட்டாங்களா? “
இவளும் பதறி விட்டாள்.

பின்னே இவர்களைக் கண்காணிக்கக் கூடத் தேவியிராது. ஒருவர் மாற்றி ஒருவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு இருப்பது சிவசங்கரிக்குக்  கண் கூடாகவே தெரிகிறதே!

இளந்தளிர் வீட்டிற்கு வந்தது தெரிந்ததும், அங்கே வந்து விட்டார் அன்னை.

” இப்போ ரெண்டு பேரும் ராசியாகிட்டீங்க ! அம்மா எதையும் கவனிக்கலன்னு மெத்தனமாக இருக்காதீங்க. உங்களோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி! எதையோ மறைக்கிறா மாதிரியே தோனுது. பாத்துக்கோங்க “

ஒரு தாயாய் இன்று வரை இவர் தனது மகள்களை கண்ணும் , கருத்துமாக மட்டுமல்லாமல், பாதுகாப்பாகவும் வளர்க்கிறார்.

அவர்கள் அன்று மருத்துவமனையில் இருந்து வரும் போது நேர்ந்த கால தாமதம் இவரின் மனதைக் கலவரப்படுத்தி விட, இன்னுமே மகள்களின் சுதந்திரத்தில் தலையிடாமல், பாதுகாப்பை கவனிப்பதில் முனைப்பாக உள்ளார்.

கணவர் இருந்த போதும், சிவசங்கரியும் அவருமே இணைந்து தான் இளந்தளிர் மற்றும் சுபாஷினியின்  படிப்பிலிருந்து அனைத்தையும்

சரிசமமாகப் பார்த்துக் கொண்டு இருந்ததால்  இப்போது கணவர் இறந்த பிறகு தன்னாலான வரை இவர்களை நல்வழியில் வழி நடத்திக் கொண்டு இருக்கிறார்.

ஆனால், நேற்றிலிருந்து இளா, சுபா – வின் முகங்கள் களையிழந்தாற் போலிருந்ததைக் கண்டு இவருக்கு சம்சயம் ஏற்பட்டது.

அம்மா சென்றதும், தன் கைகளில் இடம் பெற்றிருந்த பனிக்கூழைப் பார்த்து விட்டு, தமக்கையிடம் திரும்பினாள்.

” ஏன் க்கா! இந்த ஐஸ்க்ரீம் வாங்கிட்டு நான் சமாதானம் ஆகனுமா ? * என்று கேட்டாள்.

” சண்டே வாங்கிக் கொடுக்க மறந்துட்டேன்ல சுபா! அதான் இன்னைக்கு வாங்கிட்டு வந்தேன். இதுனால நீ சமாதானம் ஆக வேண்டாம் ” என்று கூம்பிப் போன முகத்துடன் கூற,

” இந்த மாதிரி நீ செஞ்சா தான் நான் கோபம் மறந்து பேசனும்னு இருக்கா ? என்ன க்கா? அங்க தியேட்டர் – ல வருத்தமாச்சு தான்! அக்காவே இப்படி பண்ணிட்டாங்களே – ன்னு. ஆனால் அதுக்கு முன்னாடியே நீ அவர்களைப் பத்தி பேசறது பிடிக்காது ன்னு சொல்லி இருந்த தான  ! நான் தான் ஒரு எக்ஸைட்மெண்ட் ல கூப்பிட்டுட்டேன் . அவங்களுக்குமே சங்கடம் ஆகி இருக்கும். சாரி க்கா “

 

பூரித்துப் போன அக்காவோ தங்கையை மகிழ்வுடன் அணைத்துக் கொண்டாள்.

” இட்ஸ் ஓகே சுபா. ஒன்னுமே இல்லை. வா உனக்கு பூஸ்ட் போட்டுத் தரேன் “

இன்று தாயிடம் பேசி இவளுக்கு இன்று மட்டும் சலுகையாக பூஸ்ட் போட்டுக் கொடுத்தாள்.

சண்டை மறந்து, அக்காவும், தங்கையும் இவ்வாறு குதூகலமாகப் பேசுவது கண்டதும், தாய்க்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அதே சமயம் இவர்கள் போக்கு சந்தேகத்தைக் கொடுக்கவும் செய்தது.

எதாவது அவ்வாறிருந்தால் ,
எப்படியும் விஷயம் தன்னிடம் வந்து விடும், இல்லையேல் காலம் தாழ்த்தாமல் தானே அவர்களிடம் கேட்டு விடலாம் என்பதே அவரது எண்ணம்.

🌺🌺🌺🌺🌺

‘ சரி மறந்துருவோம் ‘

இளந்தளிரைப் பற்றித் தான் மனதில் நினைத்துக் கொண்டு இருந்தான் கோவர்த்தனன்.

அவனும் , அவனது நண்பனும் வீடு செல்லும் நேரமாதலால், வண்டியை இயக்கிக் கொண்டு இருந்தவன், இளந்தளிரை மறக்கவும் முடிவு செய்திட்டான்.

ஹரீஷ், ” நண்பா ! என்ன முணுமுணுத்துட்டே இருக்க? ”

இவன் மெல்லியதாக தன் மனதிற்குக் கூறிக் கொண்டது ஹரீஷிற்கும் கேட்டு விட்டது போலும்.

” இல்லடா. பாட்டு ஹம் செய்துட்டு இருந்தேன் நண்பா “

 

” அப்படியா நண்பா, சரி நண்பா ” அவன் சொன்னதை ஹரீஷ் நம்பவில்லையே! அதனாலேயே கிண்டல் செய்ய ஆரம்பித்து விட,

” போதும் நண்பா. கண்டுபிடிச்சுட்ட தான? அப்பறமும் ஏன் கிண்டல் பண்ற? “

இவனும் சிரித்து விட,

” இன்னும் அது என்ன விஷயம்ன்னு நீ சொல்லவே இல்லையே ? “

” அது…! இனிமே எதையும் கவனிக்காம எப்பவும் போல இருக்கலாம்னு டிசிஷன் எடுத்துருக்கேன் ” எனக் கூறிட ,

” ஓஹோ…! எதையுமா? யாரையுமா? ” ஆருயிர் நண்பன் அவனிடத்தில் பொய் பலிக்குமா ! “

” யாரையும் தான் நண்பா ” கோவர்த்தனன் திடமாகவே உரைத்திட,

” ம்ம்..! ஏன் அப்படி ? ” தெரிந்து கொள்ளக் கேட்டான் ஹரீஷ்.

” யாருக்கும் நம்மளால பிரச்சினை வந்துடக் கூடாதுல்ல ஹரீஷா! “

” நல்லது கோவர்த்தனா ! அட்லீஸ்ட் ஃப்ரண்ட்ஷிப் – ஐ எதிர்பார்த்த ! ஆனால்  என்னைக் கேட்டா இதுவே சரி தான். நானும் ஏதோ ஓவரா பிஹேவ் பண்ணி இருக்கேன் டா.

இப்போயாவது சுதாரிச்சோமே ” இவனும் ஆமோதித்து விட்டான்.

கோவர்த்தனன், இளந்தளிர் இவர்களில் யாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள விழையாமல் இருந்தனர்.

 

இளந்தளிர் தாயிடம் திருமணத்திற்கு சம்மதித்து விட,

” நல்லா யோசிச்சு சொல்லு இளா! உன்னை ப்ரஷர் பண்ண வேணாம்னு தான் நானும் அடுத்து கேட்டுக்கல. இந்த வயசில தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லல. நீ மனசளவுல கல்யாணத்துக்கு தயார் – ன்னு உணர்ந்தா சொல்லு ”

மூத்த மகளிடம் எதையும் அவசரத்தில் முடிவெடுத்து விடாதே என்று வலியுறுத்தினார்.

அவளது மனப்பக்குவம் தெரிந்திருந்தாலும் ,  திருமணத்தைப் பற்றிய பேச்சை ஆரம்பித்திருந்தாலும் உடனுக்குடன் அதை நிறைவேற்றிட அவர் எண்ணியதில்லை.

‘ இப்போதிருந்தே யோசிக்கட்டும் ‘ என்று தான் அவளிடம் முன்னரே பேச்சை எடுத்தார்.

மாப்பிள்ளையும் பார்த்து வைத்து விட, இவளது ஒப்புதல் கிடைத்தாலும் உடனே கல்யாணம் என்றில்லையே! பொறுமையாக மகளின் திருமண விடயங்கள் நடந்தேறட்டும் என்று சொல்லியது அவரது மனம்.

கணவர் இருந்திருந்தாலும் இதையே தான் கூறியிருப்பார் .

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *