Loading

உத்ரா பேசியதைக் கேட்டு, அவனால் அவனை கட்டுப்படுத்த முடியாமல், அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விட்டான்.

ஆனால் அதன்பிறகே தான் என்ன செய்தோம் என்று உணர்ந்து அவள் முகத்தைப் பார்க்க, அவன் கொடுத்த முத்தத்தில் அவளும் அதிர்ந்து, கன்னங்கள் சிவந்து போயிருந்ததை கண்டான். சட்டென்று அவளிடம் இருந்து விலகி “சா சாரி…” என்று முணுமுணுக்க, அவள் அவனை முறைத்து, மீண்டும் இழுத்து மடியில் போட்டுக் கொண்டாள்.

அவளின் செயலை ரசித்து மெலிதாய் முறுவலித்தவனை உத்ரா, “ஹ்ம்ம்! இன்னும் கொஞ்சம் சிரிச்சா தான் என்ன? உங்க வாயில இருந்து முத்து கொட்டிடுமா?” என்று கிண்டலடிக்க, துருவ் தான் “நீ எப்பவுமே இப்படித்தானா?” எனக் கேட்டான் கேலியாக.

அவள் “இல்லை” என தலையாட்டி “உங்க கிட்ட மட்டும் தான் இப்படி.” என்றாள் கண்ணை உருட்டி.

அன்று சைதன்யா அவளை லேசாய் தொட வந்ததற்கே அவனை அந்த மிரட்டு மிரட்டி, கரண்டியால் கையை குத்தியவளா தன்னை அவள் மடியில் படுக்க வைத்து, முத்தமிட்டதும் அழகாய் கன்னம் சிவப்பது? என்று சற்று அசந்து தான் போனான், அவள் தன் மேல் வைத்த காதலையும், நம்பிக்கையையும் கண்டு.

துருவ் அவளின் நெற்றியில் விழுந்த அவள் முடியை ஒதுக்கி, “நான் தான் உன்னை லவ் பண்ணவே இல்லைன்னு சொல்றேன். அப்பறம் எந்த நம்பிக்கைல நீ இப்டிலாம் பண்ற?” என அவளை ரசித்து கொண்டே கேட்க, அவள் அவனின் செயலில் சிவந்து, பின் முறைத்து,

“ஓ! லவ் பண்ணாதவங்க தான் நான் ஆஃபீஸ் வந்தப்போ என்னையவே முழுங்குற மாதிரி பார்த்தீங்களாக்கும்? என்னை லவ் பண்ணாம தான் அன்னைக்கு என் டிரஸ்ல ப்ளட் இருந்ததும், என் பின்னாடியே பாடி கார்டா  வந்தீங்களாக்கும்? அப்பறம், என்னை அந்த சைதன்யா அடிச்சா உங்களுக்கு ஏன் கோபம் வருது. நீங்க பாட்டுக்கு என்னை விட்டுட்டு போயிருக்க வேண்டியது தான. அவனுங்களால பாதிக்கபட்ட பொண்ணுங்களை கழட்டி விட்டமாதிரி” என்று கேட்க, அவன் பேந்த பேந்த விழித்தான்.

அது உண்மைதானே. அவர்களால் நிறைய பெண்களின் வாழ்க்கை கேள்வி குறியாய் இருந்ததும், அதில் நண்பர்களுக்கு பாதிப்பு வராமல் துருவ் அவர்களை பல விதத்திலும் காப்பாற்றியதும்.

“பொண்ணுங்கன்னா அவ்ளோ ஈஸியா போச்சுல்ல.” என்று அவனை கோபமாக பார்த்து கொண்டு கேட்க, அவன், “சாரி உதி…” என்றான் தவறு செய்து விட்ட குழந்தையாய்.

பின், “சத்தியமா நான் எதுவும் பண்ணல. எனக்கு அந்த பொண்ணுங்க யாருன்னு கூட தெரியாது” என்று சொன்னதும், உத்ரா “ஆமா அப்படியே நீங்க எதுவும் பண்ணிட்டாலும்” என்று முணுமுணுக்க அவன் “என்னது” எனக் கேட்டான் முறைப்பாக.

அவள் “ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல நீங்க தூங்குங்க” என்றாள் அதட்டலுடன்.

துருவ் தூங்காமல் அவளையே பார்த்து விட்டு, “நீயும் என்கூட சண்டை போடுவியா உதி?” என மென்மையாய் கேட்க, உத்ரா, “எதுக்கு துருவ் சண்டை போடணும்?” என்றாள் புரியாமல்.

“இல்லை என் அப்பா அம்மா சண்டை போடுற மாதிரி நமக்கு கல்யாணம் ஆனா நீயும் சண்டை போடுவியா?” எனப் பாவமாய் கேட்க, அவளுக்கு தான் ‘அச்சோ பாப்பா டா நீ’ என்று இழுத்து அணைக்க வேண்டும் போல் இருந்தது.

பின், “ஹெலோ பாஸ்! முதல்ல ப்ரொபோஸ் பண்ணனும், அப்பறம் லவ் பண்ணனும், அப்பறம் கல்யாணம் பண்ணும்போது தான் இந்த கேள்வி கேட்கணும்.  நீங்க என்ன ஸ்ட்ரைட்டா இந்த கேள்வி கேக்குறீங்க?” என்று கிண்டல் செய்ய, அவன் அவளை முறைத்து, “எத்தனை தடவைடி ப்ரொபோஸ் பண்றது” என்றான் சலிப்பாக.

உத்ரா தான் “அடிச்சு மண்டைய உடைச்சுடுவேன். நீங்க பண்ணதுக்கு பேர் ப்ரொபோஸ் ஆ? ஏதோ சாப்டியா நல்லாருக்கியான்னு கேக்குற மாதிரி ‘லவ் யு’ சொல்லிட்டு பெருசா ரொமான்டிக் ஹீரோ மாதிரி பேசுறீங்க.” என்றவள் அவனை தலையில் கொட்டினாள்.

அவன் சிரிப்பை அடக்கி கொண்டு, “தமிழ்நாட்டு பொண்ணுங்க எல்லாம், அச்சம் மடம் நாணம்ன்னு ரொம்ப அமைதியா, லவ் சொல்ல கூட வெட்கபட்டுக்கிட்டு இருப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். ஆனால் உனக்கு அதெல்லாம் வரவே வராதா? சரி அன்னைக்கு உன் டிரஸ்ல ப்ளட் இருக்குனு சொல்றேன். அதுக்கு கூட நீ பெருசா ரியாக்ஷன்லாம் கொடுக்கவே இல்லை. இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் தமிழ் பொண்ணுங்க ரொம்ப சென்சிடிவ்ன்னு கேள்விபட்டருக்கேன்” என்று அவளை சீண்டினான்.

உத்ரா, “அடப்பாவி, ரொம்ப அப்பாவி மாதிரி இருந்துகிட்டு, பொண்ணுங்களை பத்தி புட்டு புட்டு வைக்கிற. சார் எத்தனை பொண்ணுங்களை அப்படி பார்த்துருக்கீங்க ஹ்ம்ம்?” என புருவத்தை உயர்த்தி அவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்க்க,

அவனோ மிரண்டு “ஐயோ இல்லை தாயே. நான் தெரிஞ்சதை கேட்டேன் அவ்ளோ தான்” என்று அவளிடம் சரணடைந்தான்.

அதில் அவள் சிரித்து விட்டு, “நீங்க முதல்ல கேட்ட கேள்விக்கு உங்களுக்கு பதில் கிடைச்சுடுச்சு” என்றதில்  “என்ன பதில் உதி” என்று புரியாமல் கேட்டான்.

“சண்டை போடுவியான்னு கேட்டீங்கள்ள? நான் சண்டை போட வரும்போது, இப்படி சரண்டர் ஆகிட்டா, சண்டையே வராது” என்றாள் புன்னகைத்தபடி.

அவன் அவளை முறைக்க, உத்ரா அவன் முடியை கோதிக்கொண்டே,

“ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்க்கு நடுவுல சண்டை வரலாம் துருவ் தப்பு இல்லை. பட் அந்த சண்டைல, போட்டி பொறாமை ஈகோ இருக்க கூடாது. வெறும் லவ் மட்டும் தான் இருக்கணும். அப்படி இருந்து எவ்ளோ சண்டை வந்தாலும், அது அவங்க காதலையும், மத்தவங்களை பாதிக்காது.

என்னைக்கு அவங்க ரிலேஷன்ஷிப்ல  காதல் குறைந்து மத்தது அதிகம் ஆகுதோ, அன்னைக்கு அவங்களுக்கும் பிரச்சனை, அவங்க குழந்தைங்களுக்கும்  பிரச்சனை. நான் சண்டை போட மட்டேன்லாம் சொல்ல மாட்டேன். கண்டிப்பா கோபம் வந்தால், திட்டுவேன் சண்டை போடுவேன்.

பட் அடுத்த நிமிஷம் அதை மறந்துருவேன். நீங்களும் அப்படி இருந்துட்டா, எந்த பிரச்னையும் வராது” என அவனுக்கு விளக்கம் கொடுக்க, அவனுக்கு தான் அப்படியே அவளுடன் வாழ வேண்டும் போல் இருந்தது.

அவளையேப் பார்த்து கொண்டிருந்தவனிடம் அவள் மேலும், “அப்பறம் என்ன கேட்டீங்க? எனக்கு வெட்கம் தயக்கம்லாம் இல்லையான்னா? ஹ்ம்ம்… என் வீட்ல நான் மட்டும் தான் பொண்ணு. மத்த எல்லாருமே பசங்க தான். எனக்கு அண்ணனா, நண்பனா, சில நேரம் அத்தை பசங்களா இருக்குறது அர்ஜுனும் அஜயும் தான். அதுலயும் அர்ஜுன் டாக்டர் வேறயா.

இந்த டைம்ல அவன் தான் என்னை ரொம்ப கேரிங் ஆ பாத்துப்பான். சோ எனக்கு இதுலலாம் பெருசா தயக்கம் இல்லை. அண்ட் எனக்கு எந்த விஷயத்தை மறைச்சுலாம் பேச தெரியாது.. எதுவா இருந்தாலும் டைரக்ட் ஆ சொல்லிடுவேன். அதான் உங்களை லவ் பண்றதையும் சொல்லிட்டேன்..” என்று மீண்டும் ஒரு விளக்கம் கொடுக்க,

அவளை அமைதியுடன் ரசித்தவன், “அதெப்படி நான் ஒரு லைன்ல கேள்வி கேட்டா நீ 10 பக்கத்துக்கு பதில் சொல்ற?” என்று அவளை கிண்டல் செய்ய, உத்ரா தான் “டேய் போனா போகுதுன்னு உனக்கு விளக்கம் குடுத்தா உனக்கு கிண்டலா இருக்கா” என்று அவன் குமட்டிலேயே குத்தினாள்.

அவனும் சிரித்து கொண்டு, “எனக்கு தூக்கம் வருது!” என அவள் இடுப்பை கட்டிக்கொண்டு தூங்கி விட்டான்.

அடுத்து வந்த நாட்களில், ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராய் அவளுக்கு தொழில் சொல்லி குடுத்தான். அவளும் அவன் எடுக்கும் அதிரடி முடிவுகளையும், வேலையில் அவன் காட்டும் மின்னல் வேகத்தையும் வெகுவாய் ரசித்தாள். அவளின் பார்வையை கண்டு “என்ன” என்று அவன் விழி உயர்த்தி கேட்க, அவள் தோளை குலுக்கி கொண்டு “நத்திங்” என்பாள். அவனும் சிரித்து விட்டு, அமைதியாய் இருந்து விடுவான்.

ஆனால் ராத்திரி பகலாய் அவளை வேலை வாங்கி, ப்ரொஜெக்டை முடிக்கும் தருவாயில் வந்தான். அதற்கிடையில் அவனின் தொழிலில் பல சரிவுகள் என, மூச்சு விட கூட நேரம் இல்லாமல் சுற்றி கொண்டிருந்தான். அந்த மூவரும் அடுத்து எப்படி உத்ராவை தாக்குவார்கள் என்று புரியாமல், அவர்கள் மேல் ஒரு பார்வையை வைத்திருந்தான்.

எப்போதும் போல், அன்று அவள் வீட்டில் அனைவரிடமும் போனில் அரட்டை அடித்து கொண்டிருக்க, அவன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். உத்ரா, போனை வைத்து விட்டு என்ன என பார்க்க, துருவ் அவளருகில் வந்து அவளை நெருக்கி கொண்டு,

“ஒரு இடத்துக்கு போகணும் வா!” என்றான் மெல்லிய குரலில். அவளுக்கு தான் அவனின் நெருக்கத்தில் இமைக்கக் கூட முடியவில்லை.

மொத்தமாய் தன்னை மறந்தவளை பார்த்துப் புன்னகைத்தவன், அவளை அழைத்து கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றான்.

உள்ளே செல்ல போகையில், “உதி ஒரு வேலை இருக்கு மறந்துட்டேன். நீ உள்ள போய் வெயிட் பண்ணு நான் வந்துடறேன்” என்றவனை, அவள் ‘உன் கூட வந்தேன் பாரு’ என்று முறைத்தாள்.

பின் அவனைத் திட்டிக்கொண்டே உள்ளே செல்ல, அங்கு யாருமே இல்லை. ஒரு சிறு குழந்தை வந்து அவளிடம் ஒரு பொக்கேவை மட்டும் கொடுத்து விட்டு ஓடிவிட, ‘என்ன நடக்குது’ என புரியாமல், உள்ளே சென்றாள்.

அங்கு ஒரு அறைக்குள் சென்றிட, அந்த அறை முழுதும் பலூன்களால் நிரம்பி, அவளுக்கு பிடித்த, லாவெண்டர் பூக்களால் அலங்கரித்து, ஆங்காங்கே அவளின் வித விதமான ஓவியங்கள் இருந்தது. அதனைப் பார்த்து பிரம்மித்தவள் மேலும் உள்ளே செல்ல, அங்கு அவளுக்கு பிடித்த டெடி பியர் சுற்றி இருக்க, நடுவில் துருவ் அவளை வசீகரமாய் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

அவளுக்கு தான் அவள் கண்களையே நம்ப முடியவில்லை. அதிலும் தன்னவனின் பார்வை, வெட்கம் வராது என்று சொன்ன அவளுக்கே வெட்கத்தைக் கொடுத்தது. அவன் கண்ணைப் பார்த்து பேசும் அவளால், இன்று அவன் பார்த்த காதல் பார்வையில் அவன் கண்ணை பார்க்க முடியாமல், திணறினாள்.

மெதுவாக அவளை துளைக்கும் பார்வை பார்த்துக்கொண்டு அவள் அருகில் வந்தவன், “ஹாப்பி பர்த்டே ஹனி!” என அவள் காதில் கிசுகிசுத்தான்.

அதில் அவளுக்கு ‘புஸ்’ என ஆகி விட,  ‘டேய் இதை சொல்லவாடா காதல் மன்னன் ரேஞ்சுக்கு வந்த?’ என அவனை முறைத்தாள்.

அவள் எண்ணத்தை அறிந்தவன் “இதை சொல்ல மட்டும் இல்லை உதி” என்று விட்டு, அவள் கன்னத்தை தாங்கி அவன் காதலை அவள் இதழில் அவனின் இதழ்கள் மூலம் விளக்க ஆரம்பித்தான்.

மென்மையாய், அழுத்தமாய் அவள் இதழ்களில் அவன் கவி வரைய, அதில் உத்ரா மொத்தமாய் உறைந்தாள்.

சில நிமிடம் கழித்து அவளை விட்டவன் அவள் முகத்தையே பார்க்க, கண்ணை இறுக மூடிக்கொண்டு, கன்னங்கள் ரோஜாவை சிவந்து, இதழ் நடுங்க மேலும் கீழும் மூச்சு வாங்கி கொண்டிருந்தாள்.
அதில் மேலும் அவனுக்கு பித்து பிடிக்க, மீண்டும் அவளின் இதழில் தஞ்சம் அடைந்தான்.

உத்ராவிற்கு தான் நிற்க கூட முடியாமல், அவனின் முத்தம் அவளுக்கு கிறக்கத்தைத் தந்தது. அவனின் சட்டையை இறுக்கமாக பற்றி கொண்டு, அவனுக்கு அவள் ஒத்துழைக்க, அவன் மேலும் போதையாகி இதழ்களை மென்று கொண்டிருந்தான்.

இருவரின் முத்த சண்டையும் வெகு நேரம் கழித்தே முடிவுக்கு வந்தது அதிலும், உத்ரா தான் மூச்சு விட முடியாமல் அவனை தள்ளினாள். அதில் அவன் குறுநகையுடன் விலக, உத்ராவிற்கு அவனை பார்க்கவே முடியவில்லை.

அவனோ அவள் இடுப்பை வளைத்து, “நீ என்கூட சண்டை போட்டாலும் சரி, என் மேல கோபப்பட்டாலும் சரி, நான் சாகுற வரைக்கும் என் கூடவே இரு உதி. எனக்கு அதுவே போதும்” என்றவன் அவளை நிமிர்த்தி அவள் கண்ணை அவன் கண்ணோடு கலக்க வைத்து, “லவ் யு ஹனி… லவ் யு அ லாட்!” என காதலில் கரைந்து கூறிட,  அவள் தான் வியந்து விட்டாள், அவன் கண்ணில் தெரிந்த காதலில்.

‘எங்கடா வச்சிருந்த இவ்ளோ காதலை’ என்பது போல் தான் அவனை விழி விரித்து பார்த்தாள்.

அவன் சிரித்து விட்டு, “மேடம் யாருக்கோ எதுவுமே வராதுன்னு சொன்னீங்க ஹ்ம்ம்?” என்று புருவத்தை உயர்த்தி கேட்க, அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

இருந்தும், “போதும் டா சாமி இன்னைக்கு இந்த அதிர்ச்சியை தாங்கவே எனக்கு இன்னும் ஒரு வருஷம் ஆகும். இதுக்கு மேல எந்த அதிர்ச்சியும் காட்டாத” என்று அவனை கிண்டலடிக்க, அவன் அவளையே ரசனையுடன் பார்த்திருந்தான்.

அவளால் அதற்கு மேல் அவன் கண்ணை பார்க்க முடியவில்லை. “துருவ் அப்படி பார்க்காதீங்க!” என்று குரலே வெளியில் வராமல் சொல்ல, அவனும் அதே குரலில் “எப்படி பார்க்காதீங்க?” என்றான் கிசுகிசுப்பாக. அதில் அவள் குனிந்து கொண்டு, “ஐயோ எனக்கு வெட்கமா வருதே” என்று முகத்தை மூடி கொண்டாள்.

அதில் வாய் விட்டு சிரித்தவன், “உனக்கு அதெல்லாம் வருமா உதி? வாட் அ பிளசண்ட் சர்ப்ரைஸ்!” என கேலி செய்ய, அவள் வெட்கத்துடன் அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள்.

பின், அங்கு அவளுக்கு கேக் வெட்டி, அவளையே பார்த்து கொண்டு, அவளுக்கு ஊட்டி விட்டான். அதில் அவளுக்கு கண்கள் கலங்க, அதனை வாங்காமல் அவனையே பார்த்தாள்.

அதில் அவன் பதறி, “ஹே என்னடி ஆச்சு?” என்று கேட்க,

“இன்னைக்கு என் அம்மாவோட இறந்த நாள். அவங்க இருந்தப்ப தான் நான் கடைசியா பிறந்த நாள் கொண்டாடுனேன். அவங்க போனதுக்கு அப்பறம்  இந்த நாள்ல நான் எதுவும் பண்றதே கிடையாது. இன்னைக்கு என் பர்த்டேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் அழுகுரலில்.

அவன் அவளை நெஞ்சோடு சாய்த்து, “என் ஹனி ரொம்ப தைரியசாலி ஆச்சே. அவள் எதுக்குமே அழுது நான் பார்த்ததே இல்லை. இனிமேலும் பார்க்க கூடாது. அப்படி நீ அழுதா அது நான் இறந்த நாளா மட்டும் தான் இருக்கணும்” என்று அழுத்தி சொல்ல,

அதில் அவள் விலகி, “என்ன பேசுறீங்க துருவ்” என்று கண்ணை துடைத்துக் கொண்டு, “நான் அழுகல கண்ணு வேர்த்துடுச்சு” என்று குறும்பாய் சொன்னதும், ‘வாயாடி’ என்று அவளின் தலையில் கொட்டி கேக்கை ஊட்டினான். அவளும் புன்னகையுடன் வாங்கி கொண்டாள்.

அடுத்து வந்த நாட்களும் இருவருக்கும் ரம்மியமாய் இருந்தது. காலையில் எழுந்ததும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு தான் அவன் அடுத்த வேலையையே தொடங்குவான். தூங்கும் முன் அவள் இதழ்களை வதைத்து விட்டு, அவளுக்கு சாப்பாடு ஊட்டி, அவளை மடியில் படுக்க வைத்துக் கொண்டு கதை பேசுவான்.

அவள் அவனின் அன்பில் சிக்கி, திக்குமுக்காடினாள். அவனின் அதிக பட்ச காதலிலும், எல்லை மீறாத அவன் பார்வையை கண்டு அவனுள் அதிகமாய் அடங்கினாள்.

அவன் ஏதாவது வேலையில் இருந்தால் அவன் கன்னத்தில் முத்தமிடுவாள்.

“வேலை இருக்கு ஹனி. போய் உன் ப்ராஜக்டை பாரு” என்று துருவ் அடித்துத் துரத்த, அவனுக்கு அழகு காட்டி விட்டு செல்வாள்.

சில நிமிடத்தில் அவனே வந்து அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டு, “என்ன வேணுமாம் என் ஹனிக்கு”  என்று கேட்க,

அவள் “ஹய்ய! எனக்கு ஒன்னும் வேணாம்” என்று சிலுப்பி கொண்டதும், அவளின் கழுத்தினுள் முகம் புதைத்து, “ஒண்ணும் வேணாமா?” என்று கிறக்கமாகக் கேட்க, அதில் அவள் உருக்குலைந்து போவாள்.

கிட்டத்தட்ட அவளின் ப்ராஜெக்ட்டும் வெற்றிகரமாய் முடிவுக்கு வந்து, அவள் அப்பாவின் தொழிலை இவள் பெயரில் மாற்றும் பணியில் இருந்தார்.

அப்பொழுது அவருக்கு காஞ்சனா பல இடையூறுகளை கொடுக்க, உத்ரா அவள் அப்பாவிடம் நடந்தது அனைத்தையும் சொல்லி, துருவை பற்றியும் கூறினாள்.

அதில் அவர் சன்னமாக அதிர்ந்து, அவளிடமே “சாரி மா இவங்க இவ்ளோ தூரம் மோசமானவங்களா இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் தேவை இல்லாம உன்னை கஷ்டப்படுத்திட்டேன்.” என்று சொல்ல,

அவள் “அச்சோ என்னப்பா நீங்க… நீங்க நல்லது தான் பண்ணிருக்கீங்க. இல்லைன்னா, நான் இப்பயும் விளையாட்டுத்தனமா தான் இருந்துருப்பேன்” என்றாள் ஆறுதலாக.

அவர் இதற்குமேல் இதனை இப்படியே விட்டால் சரியாக வராது என்று தான், அவர்களுக்கு கொஞ்சம் பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, வியாபாரத்தை இவளிடம் கொடுத்து விட்டு,  மேலும், ரிஷியை லண்டனிலேயே தொழிலாளியாக வேலை பார்க்குமாறு கூறினார்.

பின், துருவிடமும்  நன்றி கூறி, இருவரையும் பார்த்தவர் அவர்கள் காதலையும் அறிந்து கொண்டார். துருவ் சிறு சிறு விஷயத்திலும், அவளிடம் எதையாவது கேட்டுக்கொண்டு, அவளிடம் அவன் நடந்துகொண்ட முறையை பார்த்து, அவருக்கு உத்ராவின் வாழ்க்கையை நினைத்த பயம் விலகியது.

உள்ளே துருவ் வெங்கடேஷிடம் பேசிக்கொண்டிருக்க, வெளியில், காஞ்சனாவும், ரிஷியும், உச்சகட்ட கோபத்தில் இருந்தனர். அதிலும் காஞ்சனாவிற்கு துருவின் மேல் தான் கடுங்கோபம். அவனை பழி தீர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு இருந்தாள்.

அப்பொழுது, சைதன்யாவும், வந்து விஷயத்தை அறிய, அவர்களை பார்த்த, உத்ரா “என்ன அடுத்து எப்படி யார் குடியை கெடுக்கலாம்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா?” என்று நக்கலாய் கேட்க, மற்றவர்கள் அவளை பார்வையாலேயே எரித்தனர்.

அவள் “ப்ச் சும்மா இப்படி முறைச்சுக்கிட்டு இருக்காம நாளைல இருந்து ரெண்டு பேரும் ஆபீஸ்க்கு வேலைக்கு போற வழியை பாருங்க. இனிமே உழைச்சாத்தான் ரெண்டு பேருக்கும் சாப்பாடு” என்க, ரிஷி அவளை அடிக்க வந்தான்.

அவள் அசையாமல், “என் மேல கை வைச்சா உன் அருமை நண்பனோட கையால செமத்தியா வாங்குவ பிரதர்… எப்படி வசதி?” என்று அவனை புருவத்தை உயர்த்தி மிரட்டினாள்.

சைதன்யா, “உனக்கு அவன் சப்போர்ட் பண்றான்ன்ற திமிருல பேசுறியா. எதை காட்டி அவனை மயக்குன. ம்ஹும்?” என்று கேள்வியாய் கேட்க,

உத்ரா, “அவரை என்ன உன்னை மாதிரி பொறுக்கின்னு நினைச்சியாடா. பொறுக்கி நாயே. அன்னைக்கு நீ என்னை அடிச்சதுக்கு எல்லாம் உனக்கு இருக்குடா. உன்னை வச்சு செய்றேன் இரு.” என்று அவனை கோபத்துடன் பார்த்தாள்..

பின், காஞ்சனாவிடம், “உன்கிட்ட ஒரு பழைய கணக்கு ஒன்னு தீர்க்க வேண்டியது இருக்கு. அதை தீர்க்காம விடமாட்டேன்” என்று சொல்லிவிட்டு, “நாளைல இருந்து நீங்க ரெண்டு பேரும் நான் என்ன சொல்றேனோ அதை தான் செய்யணும். இல்லை… இருக்குற பணத்தையும் புடிங்கிட்டு விட்ருவேன்.” என்று கூலர்ஸை மாட்டிக்கொண்டு ஸ்டைலாக ஒரு பார்வை பார்க்க, ரிஷி அவளை அடிக்க வர, அவன் கையை பிடித்தவள், மீண்டும் அவனை அறையப் போனாள்.

அப்போது “உத்ரா!” என்ற துருவின் அதட்டலான குரலில் நின்றவள், அவனைப் பார்க்க,

“இங்க என்ன பண்ற, உன்னை கார்ல தான வெயிட் பண்ண சொன்னேன். போ அங்க” என்று அதட்டலாய் சொல்ல, அவள் “துருவ் இவன் தான்” என பேச வந்ததில், “உன்னை போன்னு சொன்னேன். நான் சொன்னது காதுல விழுந்துச்சா இல்லையா” என்று கத்த அவள் முகத்தை சுருக்கி கொண்டு காரினுள் சென்று அமர்ந்தாள்.

அவர்களை பார்த்து முறைத்து விட்டு, காருக்கு சென்றவன் உர்ரென்று இருந்தவளிடம், “அவங்ககிட்ட ஏன் தேவை இல்லாமல் பேசிகிட்டு இருக்க” என்று அமைதியாய் கேட்க,

அவள் “அவன் தான் ஓவரா பேசுனான்” என்றதும், அவன் “யாரு ஆரம்பிச்சது” என்று கேட்க, அவள் அமைதியாய் இருந்தாள்.

துருவ் “இங்க பாரு உதி. இனிமே யார்கிட்டயும் இந்த மாதிரி லூஸ் டாக் விடாத… நம்ம சும்மா பேசிக்கிட்டே இருக்க கூடாது. எதுவா இருந்தாலும் செயல்ல தான் காட்டணும். இப்ப அவங்களை நீ இன்னும் ஏத்தி விட்டுட்டு வந்துருக்க. சைதன்யா ஒரு கிறுக்கன். அவன் நினைச்சது நடக்கணும்னா அவன் எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவான். அமைதியா இருக்க வேண்டிய நேரத்துல நம்ம அமைதியா தான் இருக்கணும் ஹனி” என்றான் அவளுக்கு புரியவைக்கும் விதமாய்.

உத்ராவும், தலையை ஆட்டிவிட்டு, “அதுக்காக அவனுங்க முன்னாடி நீங்க எப்படி என்னை திட்டலாம்” என்று கேட்டதும், அவன் மெலிதாய் சிரித்து விட்டு, “உன்னை அமைதியா போன்னு சொன்னா போயிருப்பியாக்கும். உன்னை பத்தி எனக்கு தெரியாதா” என்று நக்கலாக கேட்டான்.

அவள் அசடு வழிந்து விட்டு, அவனை பார்த்து இளிக்க, அவன் அவள் உதட்டை பிடித்து, “இப்படி சிரிச்சே சமாளி” என்று விட்டு, அழுத்தமாய் அதற்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு காரை கிளப்பினான்.

அதில் சிவந்தவள், “வர வர, நீ ரொம்ப ரொமான்டிக் ஹீரோவா மாறிக்கிட்டு இருக்க துருவ்” என்று நக்கலடித்தாள்.

மேலும் இரண்டு நாட்கள் சென்றிட, துருவின்  மடியில் அமர்ந்து, அவன் கழுத்தை கட்டி கொண்டு, இருவரும் கொஞ்சிக் கொண்டிருக்க, உத்ராவிற்கு போன் வந்தது.

அஜய் தான் அழைத்திருந்தான்.

“பங்கு எப்பிடிடா இருக்க” என்று கேட்டதும், அவன் “ப்ச் மிஸ் யு பங்கு. நீ எப்பதான் வருவ? இங்க அம்மா தான் உன்னை கேட்டுகிட்டே இருக்காங்க. அவங்களுக்கு நேத்து பிரஷர் வேற கூடிடுச்சு”  என்று தோழியை காணாத ஏக்கத்தில் சொல்ல, 

“என்னடா சொல்ற, என்னாச்சு அத்தைக்கு?”

“இப்போ பரவாயில்லை உன்னை பார்க்காம அவங்க இவ்ளோ நாள் இருந்ததே இல்லைல… அதான் அவங்க உன்னை பார்க்கணும்னு சொல்ல ஆரம்புச்சுட்டாங்க. நீ இல்லாமல் இங்க செம்ம போர் பங்கு. நீ ப்ரொஜெக்ட் பண்ணுனது வரைக்கும் போதும் இங்க கிளம்பி வா.” என்று அவன் பேச, சுஜி ஒரு புறம் அவளை வரசொல்லி வற்புறுத்தினாள்.

துருவ் தான் அவளையே பாவமாக பார்த்து கொண்டிருந்தான். என்னை விட்டு செல்கிறேன் என்று சொல்லிவிடாதே என அவளையே அவன் பார்க்க,

உத்ரா, “சரிடா நான் ஒரு ரெண்டு நாள்ல கிளம்பி வரேன்…” என்று சொல்லிவிட்டு போனை வைக்கவும், துருவ் அமைதியாய் அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்.

அவன் பின்னே சென்றவள், “துருவ்” என்று அழைக்க,

“என்னை விட்டு போய்டுவியா உதி. என்கூடவே இருப்பேன்னு சொன்ன? நமக்கு யாரும் வேணாம் உதி. சொந்தம் பந்தம் இதெல்லாம் என்னைக்காவது நம்மளை ஏமாத்திடும் உதி.

நம்ம ரெண்டு பேர் மட்டும் இங்க இருப்போம். உன் அப்பாவோட பிசினெஸ், சொத்து எதுவும் வேணாம். இந்த ப்ராஜக்ட் கூட, அவங்க உன்னை சின்னதா நினைச்சுட கூடாதுன்னு ஒரு சேலஞ்ச்காக தான் உன்னை பண்ண வச்சேன். என்கூடவே இருந்துடுடி. உன்னை பொத்தி பொத்தி நான் பாத்துக்குறேன்…”  என்று ஏக்கக்குரலில் கெஞ்சினான்.

உத்ரா, அவன் கையை பிடித்துக் கொண்டு, “என் துருவேந்திரன் இவ்ளோ வீக் கிடையாதே. அவர் அவரோட உத்ரா தனித்து இருக்கணும்னு தான நினைப்பாரு.

அவளுக்குனு ஒரு இன்டியூஜுவாலிட்டி இருக்கணும்னு நினைச்சு, அவளை யாரும் நெருங்க கூட பயப்படணும்னு சொல்லி, அவளை இவ்ளோ ஸ்ட்ராங் ஆக்குனாரு. இப்போ அவரே இப்படி அவர் உத்ராவோட தனித்துவத்தை வேணாம்னு சொல்றாரு” என்று அழுத்தமாய் கேட்க, அவன் அமைதியாய் அவளை பார்த்தான்.

“துருவ் எனக்கு என் ஃபேமிலிய ரொம்ப பிடிக்கும். அதே அளவு எனக்கு உங்களையும் ரொம்ப பிடிக்கும். அவங்க மட்டும் இல்லைன்னா நான் இந்நேரம் எப்படி இருந்துருப்பேன்னு எனக்கே தெரியாது துருவ்.

என் மேல அவங்களுக்கு கொள்ளை பாசம். என்னாலையும் அவங்களை விட்டுட்டு இருக்கவே முடியாது. அவங்க கிட்ட நான் எந்த விஷயத்தையும் மறைச்சதும் கிடையாது. உங்களை பத்தி மட்டும் தான் நான் இன்னும் சொல்லல.

சொன்னாலும் எல்லாரும் சந்தோசம் தான் படுவாங்க. ஏதோ எதுலயும் இன்டெரெஸ்ட் இல்லாமல் விளையாட்டுத்தனமா சுத்திகிட்டு இருந்த எனக்கு உங்களால தான், அப்பாவோட பிசினெஸ அந்த காஞ்சனாகிட்ட இருந்தும் ரிஷிக்கிட்ட இருந்தும் காப்பாத்தி, அதுல அச்சீவ் பண்ணனும்னு ஒரு ஆர்வமே வந்தது…

அவங்ககிட்ட இருந்து ஓடி ஒளியாம, அவங்களை என்னை நெருங்காதபடி திருப்பி அடிக்கணும்னு சொல்லிக்குடுத்துட்டு, இப்போ நீங்க குடுத்த நம்பிக்கையை நீங்களே உடைக்கிறீங்களே…” என்றவள்,

அவன் அருகில் சென்று, “ஆனால் எனக்கு இதெல்லாம் உங்களை விட முக்கியம் இல்லை. நான் ஒரு தடவை இந்தியா போய் எல்லார்கிட்டயும் உங்களை பத்தி சொல்லி,  அப்பா பிசினெஸ அஜயை பாத்துக்க சொல்லிட்டு திரும்பி நான் இங்கயே வந்துடறேன். அதுக்கு அப்பறம் நான் உங்ககூடவே இருக்கேன். ஹ்ம்ம்?” என்றாள் அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு.

  அவன் எதுவும் சொல்லாமல் அவளை விலக்கி விட்டு, வெளியில் சென்றான்.

உத்ராவிற்கு அவன் என்ன நினைக்கிறான் என்று புரியவே இல்லை. சில மணி நேரங்களுக்கு பிறகு வந்தவன், அவளிடம் ஒரு கவரை கொடுத்து விட்டு, அவள் அறைக்கு சென்று அவளின் உடைகளைப் பெட்டியில் அடுக்க ஆரம்பித்தான்.

உத்ரா புரியாமல் அந்த கவரை பிரித்து பார்க்க, அதில், பிளைட் டிக்கெட் இருந்தது. மேலும், சட்ட ரீதியாய், வெங்கடேஷின் பிசினெஸ் இவள் பெயருக்கே மாற்றப்பட்டு விட்ட பத்திரமும் இருந்தது.

துருவிடம் சென்றவள், அவன் அவள் உடைகளை எடுத்து வைத்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு, “துருவ் என்மேல கோபமா” என்று கேட்க,

அவன் அவளிடம் திரும்பி, “சாரி உதி. கொஞ்ச நேரத்துல நான் ரொம்ப சின்னப்பிள்ளைத்தனமா நடந்துக்கிட்டேன்ல. உன்னை எனக்கு அடங்கி இருக்க வைக்கணும்னு நான் யோசிச்சதே இல்லை உதி. நிஜமா நான் அந்த அர்த்தத்துல நான் சொல்லவும் இல்லை.

ஏதோ உன் மேல இருக்குற ஓவர் பொசெசிவ்னெஸ்ல அப்படி சொல்லிட்டேன். பட் இப்பயும் எனக்கு இந்த ரிலேஷன்ல எல்லாம் நம்பிக்கை இல்ல. ஆனால் உனக்கு பிடிச்ச உன் அர்ஜுன், அஜய், விது உன் பிரென்ட் சுஜி யாரையும் உன்னை விட்டு பிரிக்கணும்னு நினைக்க மாட்டேன் உதி.

எனக்கு எப்பவும் நீ நீயா தான் இருக்கணும். என் உதி எல்லார்கிட்டே இருந்தும் தனித்து தான் இருக்கணும். நீ ஊருக்கு போ உதி. பிசினெஸ்ல நீ நினைச்ச மாதிரி அச்சீவ் பண்ணு. பட் நீ நினைச்சது நடந்ததும் என்கிட்டயே திரும்பி  வந்துடு. எனக்கு நீ மட்டும் தான் எல்லாமே ஹனி” என்று நலுங்கிய குரலில் கூற, அவன் அவனின் நம்பிக்கையிலும், தன் மேல் அவன் வைத்த மதிப்பிலும், வியந்து அவனை இறுக்கமாக அணைத்து கொண்டாள்.

“லவ் யூ துருவ்” என்று அவன் நெஞ்சில் முத்தமிட,

அவன், “ஹனி. நாளைக்கு காலைல பிளைட்” என்று சொன்னதும், அவளுக்கு தான் மனதெல்லாம் பாரமாக இருந்தது.

“துருவ் நான் உங்ககூடவே இருந்துடறேன் நான் போகல” என்று பாவமாய் சொல்ல,

“இல்லடா நீ போயிட்டு வா.” என அவளை சமாதானப்படுத்தினான்.

பின், “உதி” என்று அவன் அழைக்க, அவள் நிமிர்ந்து என்னவென்று பார்த்தாள்.

“நான் உன்கிட்ட ஒண்ணு கேட்டா, நீ என்னை தப்பா நினைக்க மாட்டீல”

அவள், அவனை முறைத்து, அவன் கழுத்தை இறுக்கமாக கட்டிக்கொண்டு, “அடி வேணுமா உங்களுக்கு? உங்களை எப்படி நான் தப்பா நினைப்பேன்” என்று அவன் கன்னத்தைக் கடித்தாள்.

அதில் துருவ் புன்னகைத்து “நான் கேட்கவா?” என இழுத்ததும், 

“அட கேளுங்க துருவ்” என்றாள்.

“எனக்கு நீ வேணும் உதி.” என குழைவுடன் கூறியவனை, புரியாமல் பார்த்தவள், “நான் உங்ககூட தான இருக்கேன்” என்று கேட்க, அவன் அவளை அழுத்தமாய் பார்த்து, “எனக்கு நீ மொத்தமா வேணும். இப்பவே” என்று சொல்ல, அதன் பிறகே அதன் அர்த்தத்தை புரிந்து அவனையே திருதிருவென விழித்தாள்.

அவன் முழியை பார்த்து விட்டு, “என்ன ஹனி. நான் உன்னை மறுபடியும் ஏமாத்திடுவேன்னு நினைக்கிறியா?” என்று சற்று கமறிய குரலில் கேட்டதும், உத்ரா சட்டென்று துருவின் இதழில் இதழ் பதித்தாள்.

உறைதல் தொடரும்.
-மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
73
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்