“உன் பர்த்டே பங்க்ஷன்க்கு யார் யாரை இன்வைட் பண்ண போற ஆஷா?” நெளிந்தபடி கேட்ட அமிஷை புரியாமல் பார்த்தாள் ஆஷா.
“இத்தனை வருஷமா நான் எத்தனை பேர இன்வைட் பண்ணிருக்கேன்? புதுசா கேக்குற. நீ, உன் பேமிலி, மஹூ, அவ பேமிலி, அப்பறம் என் பேமிலி அவ்ளோ தான்.” என்றதில்,
“இந்த டைம் தஷ்வந்தை இன்வைட் பண்ண மாட்டியா…” என சந்தேகமாக கேட்டான்.
“அவனை இன்வைட் பண்றேன்னு மஹூட்ட கேட்டேன் அமி. அவள், எப்போவும் போல நம்ம மட்டும் செலெப்ரெட் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டா. அதுக்கு மேல என் இஷ்டம்ன்னு முடிச்சுட்டா… அதான், அவனை கூப்பிடல.”
“ஏனாம்? மத்த நேரம் மட்டும் அவன் கூடவே சுத்திட்டு இருக்கா… ஃபங்க்ஷன்க்கு கூப்பிட கூடாதாமா! நம்ம கூப்பிடலாம் ஆஷா.” என பொங்கி எழுந்தவனை வித்தியாசமாக பார்த்தாள்.
அவனுக்கொன்றும், தஷ்வந்த் மீது பாசமோ நட்புணர்வோ எதுவும் கிடையாது என்று அவளுக்கும் தெரியும் தான். அப்படி இருந்தும், இந்த பல்லி ஏன் திடீர்ன்னு பல்டி அடிக்குது… என ஒரு நொடி சிந்தித்தவளுக்கு, அதன் காரணத்தை கண்டுபிடிக்க அதிக நேரம் தேவைப்படவில்லை.
“உனக்கு மந்த்ராவை இன்வைட் பண்ணணும்ன்னா நேரடியா சொல்லுடா…” என கேலி செய்ததில் அசடு வழிந்தவன்,
“அவளை மட்டும் கூப்பிட்டா அவள் வரமாட்டாளே. அதான் இவனையும் கூப்பிட சொன்னேன்” என இளித்தான்.
பின்னே, அவளை பார்த்தே பல நாட்கள் ஆகி விட்டது. அவனது தங்கையும் பத்தாவது பரீட்சையை முடித்திருக்க, காரணமின்றி அவள் வீட்டிற்கு செல்லவும் இயலவில்லை.
காறி உமிழாத குறையாக அவனை முறைத்த ஆஷா, “கூப்பிட்டு தொலைக்கிறேன். ஆனா…” என இழுத்தவள், “மஹூ அவனை கூப்பிட வேணாம்ன்னு சொன்னா… அதான்…” என்றாள் குழப்பமாக.
“அதெல்லாம் அவன் வந்துட்டா, உலகத்தை மறந்து அவன் பின்னாடி சுத்துவா! பாத்துக்கலாம்.” என அசட்டையாக கூறியதில், அவளும் தஷ்வந்த், மாதவ், மந்த்ரா மூவரையும் அழைத்தாள்.
மாதவ் முதல் ஆளாக, “டின்னர்ல மட்டன் இருக்கும்ல…” எனக் கேட்டு மற்ற இருவரின் முறைப்பையும் வாங்கிக் கொண்டான்.
ஆஷா அவனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு, “இருக்கும் இருக்கும்” என்றிட, “அப்ப நான் வரேன் சீனியர்” என்றதில், மந்த்ரா கிள்ளி வைத்தாள்.
“உன்னையும் கூட்டிட்டு போறேன் கிள்ளாத மந்த்ரா.” என்று அவளை மேலும் கடுப்பேற்ற, ஆஷா சென்றதும், தஷ்வந்தும், மந்த்ராவும் அவனை மொத்தி எடுத்தனர்.
“ஐயோ காப்பாத்துங்க… காப்பாத்துங்க…” என்று கத்தியவனிடம்,
“அல்பம்… மட்டனுக்கு அலையுற” என்ற தஸ்வந்தின் கூற்றில்,
“உன்னால, உன் கேர்ள் ப்ரெண்டு எனக்கு மட்டனை கண்ணுல காட்ட மாட்டேங்குறாடா. அதான் சிக்கன், மீன் எல்லாம் நல்லா கொட்டிக்கிறீல. அதையும் சாப்ட்டா என்ன.” என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, மந்த்ரா அவன் முதுகில் பட்டென அடித்தாள்.
“ஸ்ஸ்… ஆ” என நெளிந்து அவள் புறம் திரும்பிய மாதவ், “அற்ப பதரே… அவன் அடிச்சா ஒரு நியாயம் இருக்கா. நீ ஏன் பஃபலோ அடிச்சுக்கிட்டே இருக்க.” என்றிட,
“அவள் கிட்ட என்னை கூட்டிட்டு வரேன்னு ஏண்டா கோர்த்து விடுற லூசு. நான் வர மாட்டேன்.” என்றாள் முறுக்கிக் கொண்டு.
“அதெல்லாம் முடியாது. இவனையும் அவன் கேர்ள் ப்ரெண்ட் தள்ளிட்டு போய்டுவா. நான் மட்டும் சோலோவா இருக்கணும். சோ நீயும் தான் வரணும்.” என்று பிடிவாதம் பிடித்து, அந்த வார இறுதியில் நடக்கவிருக்கும் ஆஷாவின் பிறந்தநாள் விழாவிற்கும் அவளையும் இழுத்து சென்றிருந்தான்.
விழா அன்று காலையில் தான், தஷ்வந்தை ஆஷா அழைத்து இருக்கிறாள் என்றே அறிந்த மஹாபத்ரா, அவனை வரவேண்டாம் எனக் கூற, அவனே வரும் எண்ணத்தில் இருக்கவில்லை தான். ஆனால், இவள் சொல்லி நம்ம கேட்கணுமா என்ற ஈகோவில்,
“என்னை இன்வைட் பண்ணிருக்கா. நானும் தான் வருவேன்” என்றான் வீம்பாக.
“பங்க்ஷனுக்கு என் நானாவும் வருவாரு. பரவாயில்லையா?” நக்கலாக மஹாபத்ரா கேட்டதில் விழித்தவன்,
“ப… பரவாயில்ல. எனக்கு என்ன பயம்… நீ வேணும்ன்னா, பாய் பிரெண்டுன்னு சொல்ல கஷ்டமா இருந்தா, லவர்ன்னு சொல்லிக்க.” என போட்டு வாங்கினான்.
அதில் கண்ணை சுருக்கி முறைத்தவள், “லுக் தஷ்வா. நமக்குள்ள இந்த லவர் புல்ஷிட் உறவெல்லாம் பேச்சுக்கு கூட வராது. இன்னொரு தடவை இப்படி உளறிட்டு இருக்காதா. மைண்ட் இட்.” கிட்டத்தட்ட மிரட்டி விட்டு சென்றதில் அவன் அதிர்ந்தான்.
ஏமாற்றம் நெஞ்சை தாக்குவதை உணர்ந்து செய்வதறியாமல் நின்றிருந்தவன், இதனை கையாளும் விதம் தெரியாமல் தளர்ந்தான்.
“லவர்” என்று வார்த்தையால் மட்டும் கூறவில்லையே. அவனுள்ளும் அவள் மீது தோன்றிய சிறு அன்பு பொறி அப்படி சொல்ல வைத்திருந்தது. ஆனால், பேச்சுக்கு கூட சொல்லப் பிடிக்காத வார்த்தையல்லவே அது!
முயன்று தன்னை அடக்கிக்கொண்டவனுக்கு, கல்லூரி வாழ்க்கை எப்போது முடிந்து இங்கிருந்து செல்வோம் என்றிருந்தது.
பிறந்த நாள் விழாவிற்கும் செல்ல தோன்றாதவனாய், பெண்ணவளின் நினைவிலேயே உழன்று கொண்டிருந்தான்.
ஆஷாவின் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் எப்போதும் போல களை கட்டியது.
அஸ்வதி – கல்யாண் தம்பதிகளின் ஒற்றைப் பெண் ஆஷா. கல்யாண் ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிய, பணத்திற்கும் மகிழ்விற்கும் குறைவில்லாத வாழ்வு தான். அவர்களுக்கு பிடிக்காத ஒன்றே ஒன்று, மஹாபத்ராவின் தோழமை மட்டுமே.
பெற்றோரின் பேச்சை இந்த விஷயத்தில் மட்டும் காதில் வாங்கிக்கொள்ளவே மாட்டாள். அவர்களும், மஹாபத்ராவை நேரில் பார்த்தால், பிடிக்காதது போல எல்லாம் நடந்து கொள்வதில்லை. அவள் இல்லை என்றால், அவர்கள் உலகமே சுற்றாது என்ற ரீதியில் நடித்து விடுவர்.
மற்றவர்கள் தன்னிடம் நடிப்பது கூட புரியாதவளில்லை அவள். அவளும், சிறு புன்னகையுடன் அவர்களை போல நடித்து விடுவாள். அவர்கள் நடித்து கஷ்டப்பட வேண்டாம் என்றே, அவளது பிறந்த நாள் விழா தவிர மற்ற எதற்கும் அவள் வீட்டிற்கு சென்றதில்லை.
மந்த்ராவும் மாதவும், ஆஷாவின் வீட்டினுள் நுழைய, மந்த்ராவின் விழிகள் அமிஷை வலுக்கட்டாயமாக தவிர்த்தது.
அவனோ, அவளை பார்ப்பது ஒன்றே தனது முழு நேர வேலை என்ற ரீதியில், பாவையின் மீது கண்ணாக இருக்க, அன்று அவள் அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற குர்தி அவனை மயக்கியது.
மந்த்ரா தான், தஷ்வந்தை தேடியபடி, “ஹே மாதவ். தஷு எங்கடா?” எனக் கேட்க,
“என்னை முதல்ல போக சொல்லிட்டு அவன் பின்னாடி வரேன்னு சொன்னான் மந்த்ரா… பாவிப்பய இன்னும் வரல. இவள் அவன் வராததுக்கும் என்னையும் சேர்த்து தான சாவடிப்பா.” என மஹாபத்ராவை பார்த்து நடுங்க,
அவளோ அவர்கள் ஆச்சர்யப்படும் விதமாக, தஷ்வந்த்தை பற்றி கேட்கவே இல்லை.
இதற்கிடையில், ஆஷா அழைத்ததுக்கென்று, ஹர்மேந்திரனும் கேசவனும் சில நிமிடங்கள் வந்து விட்டு சென்றனர்.
ஹர்மேந்திரன் தான், அமிஷை பிடித்து திட்டி தீர்த்து விட்டார்.
“உங்கிட்ட கேள்வி கேட்பேன்னு, நான் போன் பண்ணுனாலும் க்ளாஸ்ல இருக்கேன்னு கட் பண்ற… நேர்ல வர சொன்னா, வேலை இருக்குன்னு எஸ்கேப் ஆகுற. அவ்ளோ ஆகிடுச்சா உனக்கு?” என்று மிரட்டல் தொனியில் கேட்க, அவனோ மிரண்டு,
“ஐயோ இல்ல அங்கிள். நிஜமாவே எனக்கு படிக்கிற வேலை நிறைய இருந்துச்சு. ஈவ்னிங் ஸ்பெஷல் க்ளாஸ்லாம் முடிச்சுட்டு, நைட்டு லேட்டா தான் வீட்டுக்கே போறேன்னா பார்த்துக்கோங்க.” என பச்சையாக பொய் கூறினான்.
அதில் தணிந்தவர், “உன் ப்ரெண்டுக்கு படிக்கிற வேலை எல்லாம் இல்லையா? அவன் ஒரு ஆளுன்னு அவன் பின்னாடி சுத்திட்டு இருக்கா. என்ன இருக்கு ரெண்டு பேருக்குள்ள” என ஆழம் பார்த்தார் கோபமாக.
“நானும் சொல்லி பார்த்துட்டேன் அங்கிள். உங்க பொண்ணு கேட்டா தான. லின் இன் ரிலேஷன்ஷிப் அது இதுன்னு உளறிட்டு இருக்கா. விடுங்க அங்கிள் கொஞ்ச நாள்ல அவளே சரி ஆகிடுவா. காலேஜ் முடியிற வரை தான. அப்பறம் அவனும் ஊருக்கு போயிடுவான்.” என்றதில்,
“ரொம்ப சீரியஸ் ரிலேஷன்ஷிப்பா” எனக் கேட்டு அமிஷை ஆராய்ந்தார் ஹர்மேந்திரன்.
அவனோ, “சே சே… இல்ல அங்கிள். நீங்க ப்ரீயா விடுங்க” என்றதும் தான் அவரும் ஆசுவாசமானார்.
கூடவே, காலேஜ் முடியவும், ஊரை விட்டு இல்ல உலகத்தை விட்டே அவனை அனுப்புறேன் என்று மனதினுள் சூளுரைத்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார்.
அவர்களுக்குள் நிகழ்ந்த சம்பாஷணை புரிந்தாலும், எதையும் கேட்டுக்கொள்ளவில்லை மஹாபத்ரா.
அமிஷ் தான், நெஞ்சை தடவி விட்டுக்கொண்டு, இந்த மனுஷனை சமாளிக்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு என நொந்து திரும்ப, எதிரில் மந்த்ரா மாதவிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.
அந்நேரம், ஏதோ போன் வந்ததில் மாதவ் தள்ளி செல்ல, மந்த்ரா அங்கிருந்த தோட்டத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, அவளை தனியாக இழுத்துச் சென்றான் அமிஷ்.
“அமிஷ் விடுங்க. என்ன பண்றீங்க?” என அவள் கத்துவதை பெரியதாக எண்ணாமல், வீட்டின் பின் புறம் நிறுத்தியவன், “மிஸ் யூ மந்த்ரா” என்றான் அவளை ஆழமாக பார்த்தபடி.
அதில் தடுமாறியவள், “இதுக்கு தான் கூப்பிட்டீங்களா?” என்பது போல நகர,
அவள் கையை பிடித்தவன், “நீ என்னை மிஸ் பண்ணவே இல்லையாடி?” என முறைத்தான்.
“நான் ஏன் உங்களை மிஸ் பண்ணனும் அமிஷ். நம்ம ஒன்னும் அவ்ளோ க்ளோஸ் இல்ல” என வெட்டுவது போல பேசியவளிடம்,
“ம்ம். அவ்ளோ க்ளோஸ் இல்ல தான். ஆனா, மனசளவுல ரொம்ப க்ளோஸ்ஸா இருக்கியே.” என்று கூறிக்கொண்டே அவளருகில் நெருங்க, அவள் தள்ளி சென்றாள்.
“நான் கிளம்பணும். மாதவ் தேடுவான். தள்ளுங்க” என அவனை விலக்க முயற்சிக்க,
அவனோ,” யூ லுக் சோ காட்ஜியஸ் டுடே.” என்றான் குறுகுறுவென பார்த்தபடி.
சிவந்த கன்னங்களை அழுத்தமாக மறைத்தவள், “தேங்க்ஸ்” என்றாள் ஃபார்மலாக.
“வெட்கப்படுறதை கஷ்டப்பட்டு மறைக்காம இருந்தா இன்னும் பார்க்க அழகா இருக்குமே மந்து?” அமிஷ் சிரிப்புடன் கூறியதில், சற்று திகைத்தவள், “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல.” என்று மறுத்தாள்.
“நீ ஒத்துக்கிட்டா தான் உலகம் இடிஞ்சு விழுந்துடுமே.” என பெருமூச்சு விட்டவன்,
“உன்னை அடிக்கடி பார்க்க முடியல மந்து. எனக்கு ஒரு மாதிரி… சம்திங் கஷ்டமா இருக்கு” என தவிப்புடன் பின்னந்தலையை கோதிக் கொண்டவன், “உனக்கு அப்படி எதுவும் இல்லையா?” எனக் கேட்டான் வாடலுடன்.
மனதை மறைத்து, “இல்லை” என தலையாட்டியவள், கிளம்புவதிலேயே குறியாக இருக்க, “நல்லா நடிடி. அன்னைக்கு ஒரு நாள் பார்க்கிங்ல என் வண்டியை பார்த்துட்டு என்னை நீ தேடவே இல்ல…” என்றான் ஆதங்கமாக.
அதில் அதிர்ந்தவள், “இ… இ… இல்ல…” என பதற்றமாக, அமிஷ் முறைத்தான்.
“அது… அன்னைக்கு உங்களை தேடுனேன் தான். ஆனா, வந்து… நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. என் அப்பா உங்ககிட்ட ஏதோ சொல்ல சொன்னாரு அதான்…” என்று உளறி தள்ளினாள்.
“ஓஹோ…” என நக்கலாக பார்த்தவன், “என்ன சொல்ல சொன்னாரு உன் அப்பா…” என்று அழுத்தினான்.
இதழ்களை அழுந்த கடித்துக் கொண்டவள், “இவ்ளோ நாள் ஆகிடுச்சுல மறந்துடுச்சு” என முணுமுணுத்திட, பக்கென சிரித்து விட்டான்.
“ஆக, நீ எதையும் ஒத்துக்க மாட்ட அப்படி தான?” எனக் கேட்டவனின் சிரிப்பில் கடியானவள்,
“எதை ஒத்துக்கணும்” என்றாள் நிமிர்ந்து.
“என்னை தேடுறதை, என்னை மனசுக்குள்ள ஒரு ஓரமா லவ் பண்றதை…” என்றான் குறும்பாக.
“அப்டிலாம் ஒன்னும் இல்ல” என அவள் மறுக்கும் போதே, அவளை தடுத்தவன்,
“நீ ஒத்துக்க மாட்ட விடு. பட் நான் ஒத்துக்குறேன். உன்ன பார்க்காம பைத்தியம் மட்டும் தான் பிடிக்கலடி எனக்கு. ஐ மேட்லி லவ் வித் யூ. நம்ம ஏன் காலேஜ் முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்க கூடாது… நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் மந்து. முக்கியமா என்னை தூக்க சொல்ல மாட்டேன்.” தீவிரத்துடன் மனதை திறந்தவன், இறுதியில் கிண்டலுடன் முடித்தான்.
அவன் கல்யாணம் வரை செல்வான் என்றெல்லாம் எதிர்பாராதவள், “இங்க பாருங்க அமிஷ். இந்த காதல் கல்யாணம் இதெல்லாம் எனக்கு செட் ஆகாது. உங்களை எனக்கு பிடிக்கல. இனிமே இந்த பேச்சு வேணாம்” என்று கட் அண்ட் ரைட்டாக கூறியவளை,
“என்னை பிடிக்கல… இதை நான் நம்பனும்?” என முறைத்து பார்த்தான் அமிஷ்.
“நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம். நான் போறேன்…” என அவனை தாண்டி செல்ல போக, அவளது கரம் பிடித்து, அவளை நெஞ்சோடு இழுத்து அணைத்தவன்,
“இங்க பாரு மந்த்ரா. நான் உன்னை லவ் பண்றேன். உனக்கும் என்னை பிடிக்கும் ஐ க்னோ. ஆனா, ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிற?” என்றான் கடுப்பாக.
துள்ளி விலகிய மந்த்ரா தான், “உங்களை பிடிக்கும்ன்னு உங்க கிட்ட சொன்னேனா… இப்படி பொறுக்கி மாதிரி பிஹேவ் பண்ணாதீங்க அமிஷ். எனக்கு உங்களையும் பிடிக்கல, உங்க பழக்க வழக்கம் ப்ரெண்ட்ஸ் யாரையும் பிடிக்கல. இன்னொரு தடவை லவ், மேரேஜ்ன்னு முட்டாள்தனமா பேசாதீங்க. என்னால வாழ்க்கை முழுக்க உங்க பிரெண்டுகிட்டயும், உங்க ப்ரெண்டுக்காகவும் அடி வாங்க முடியாது.” எனக் கூறி முடிக்கும் போதே, அவளது கண்கள் கலங்கி இருந்தது.
“ஸ்டுபிட் மாதிரி பேசாத மந்த்ரா. நீ ஹர்ட் ஆகிருக்கன்னு புரியுது. ஐ ஆம் சாரி பார் தட். இன்னொரு தடவை அவள் உன்னை ஹர்ட் பண்ண மாட்டா. நானும் தான்…” என மேலும் பேசும் முன்னே,
“வேணாம் அமிஷ். உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது. என்னை விட்டுடுங்க.” என முடிவாக கூறி விட்டு சென்றவளை சரி செய்யும் வழி தெரியாமல் நின்றான் அமிஷ்.
நாட்கள் அதன்போக்கில் நகர, மஹாபத்ரா தஷ்வந்தின் உறவிலும் பெரிய மாற்றம் இல்லை. எப்போதும் போல அவனை அன்பால் குளிப்பாட்டினாள். அவனும் சில நேரம் உடைந்து, சில நேரம் அவளை தவிர்த்து, என தவிப்புடன் மாதங்கள் சென்றது.
இதற்கிடையில், தஷ்வந்தின் தமக்கை மஞ்சுளா, தந்தையை எதிர்த்து அவளது காதலன் வசீகரனை பதிவு திருமணமும் செய்து கொண்டாள்.
அதற்கு தஷ்வந்துடன் மதனும் உடன் சென்றிருந்தான்.
“உன் அப்பா ஒத்துக்கவே இல்லையா?” மஹாபத்ரா கேட்டதில், “அவருக்கு லவ்வுன்னாலே பிடிக்காது.” என வருத்தத்துடன் கூறினான் தஷ்வந்த்.
“ம்ம்…” என்றதோடு அவளும் எதை பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை.
இதற்கிடையில், கல்லூரியில் புது பிரச்சனை ஒன்று முளைத்தது.
மந்த்ரா போஸ்டிங் செல்லும் மருத்துவமனையில், ஆண் மருத்துவர் ஒருவர், ட்ரெயினிங் கொடுக்கிறேன் பேர்வழி என, மந்த்ராவிடம் சில்மிஷத்தை காட்டினார்.
முதலில் பல்லைக்கடித்து பொறுத்த மந்த்ரா, ஒரு முறை அவரை அடித்து விட்டாள். பெரிய அரசியல்வாதியின் மகனான லலித்திற்கு அவளது அடி ஈகோவை தூண்டியது.
அதனை மனதில் வைத்துக் கொண்டு, அவளது ட்ரெய்னிங்கை எத்தனை முடியுமோ அத்தனை கெடுத்தான். அவளால் அதற்கு மேலும் தாக்கு பிடிக்க இயலாமல், தஷ்வந்திடம் அழுதே விட்டாள்.
“அந்த லலித் ரொம்ப ஓவரா போறான் தஷு. அவன் பார்வையும் அவனும்… இந்த போஸ்டிங் முடியிறக்குள்ள நான் பைத்தியம் ஆகிடுவேன் போல. பயமா இருக்கு தஷு” என தேம்பியதில்,
“அறிவிருக்கா மந்த்ரா. இவ்ளோ நாள் ஏன் என்கிட்ட சொல்லல. உங்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ணிருக்கான் ராஸ்கல்… நாங்க எதுக்கு இருக்கோம்…” எனக் கடிந்து கொள்ள, மாதவும் திட்டினான்.
“இல்லடா… அவன் ஏதோ பொலிடீஷியன் பையனாம். அதான் எதுக்கு வம்புன்னு…” என்று இழுக்க,
“அட… அதை விட பெரிய இடம்லாம் நம்ம கை வசம் இருக்கும் போது நீ ஏன் பயப்படுற?” என மாதவ் மஹாபத்ராவை சுட்டி காட்டி பேச, மற்ற இருவரும் பதில் கூறவில்லை.
தஷ்வந்த் மட்டும், “அவள் கிட்ட எதையாவது உளறி வைக்காத. நம்மளே பார்த்துக்கலாம்.” என்று விட்டு, லலித்தை தனியாக சந்தித்து சுமூகமாக பேசி பார்த்தான்.
அவனோ, “நீ யாருடா… அவளுக்கு சப்போர்டுக்கு வர்ற… என்கிட்ட அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு, உங்கிட்ட மட்டும் பண்ணிக்கிட்டாளோ” என வாய்க்கு வந்ததை பேச, தஷ்வந்திற்கும் பொறுமை காணாமல் போனதில், அறைந்து விட்டான்.
“இன்னொரு தடவை அவளை தப்பா பேசுன… விஷ ஊசி போட்டு நானே கொன்னுடுவேன்.” என சண்டையிட, அவன் மீண்டும் சண்டையிட என அங்கு இருவரும் அடித்துக் கொண்டனர்.
மந்த்ரா தான், இருவரையும் தடுத்து, “வேணாம் தஷு. இவன்கிட்ட பேசுறது வேஸ்ட். வா போகலாம்…” என இழுத்து செல்ல, இவர்களை அங்கு அழைத்து வந்த மதன் தான், இருவரின் முகத்தையும் கண்டு, “ஏதாவது பிரச்சனையா” எனக் கேட்டான்.
“ஒன்னும் இல்லண்ணா.” என மந்த்ரா சமாளித்ததில், அவனும் அதனை விட்டு விட்டான்.
ஆனால், லலித் விடவில்லை.
கேவலம் காலேஜ் படிக்கிற பையன் என்னை அடிக்கிறதா என வஞ்சம் கொண்டவன், தஷ்வந்தை தாக்க, அவனது தந்தையின் அடியாட்களை செட் செய்தான்.
எப்போதும் நிழல் போல மதன் இருந்தாலும், அவன் போஸ்டிங் செல்லும் மருத்துவனைக்குள் அவன் வரவியலாதே. அதனால் மருத்துவமனைக்குள் வைத்தே, தஷ்வந்தை தாக்க முடிவு செய்து, அதனை நிறைவேற்றவும் செய்தனர்.
திடும்மென ஐந்தாறு ஆடவர்கள், தன்னை தாக்கியதில் நிகழ்வதை புரிந்து கொள்ளவே நேரம் தேவைப்பட்டது அவனுக்கு. அதற்குள், தலையிலும், கையிலும் காலிலும் பலமாக அடித்த அடியாட்கள், அவன் மயங்கியும் கூட விடவில்லை.
அந்நேரம் பார்த்து மஹாபத்ரா தஷ்வந்திற்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தாள்.
ஏனோ அவளால் அன்று ட்ரெய்னிங்கில் கவனம் செலுத்த இயலவில்லை. அவனைப் பார்த்தே தீர வேண்டும் என மனம் அடித்துக் கொள்ள, அவனைக் காண வரும் வழியிலேயே போன் அடித்து ஓய்ந்து போனாள்.
தன்னுடைய அழைப்பு எப்போது வந்தாலும் அதனை உடனே ஏற்க வேண்டும் என்றும், அல்லது ஏற்க முடியாத சூழ்நிலை என்றால், அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் குறுஞ்செய்தி அனுப்பி ஆக வேண்டும் என்பதும் அவளது கண்டிப்பான கட்டளை.
ஏதோ சரியில்லை என தோன்ற, மதனுக்கு போன் செய்து, உடனே தஷ்வந்தை பார்க்க சொல்ல, அவனும் உள்ளே சென்று அதிர்ந்தான்.
மதனைக் கண்டதும் அடியாட்கள் வேகமாக வெளியில் ஓடிவிட, ரத்த வெள்ளத்தில் மயங்கி இருந்த தஷ்வந்தை தூக்கி கொண்டு உடனடியாக வேறு மருத்துவமனைக்கு விரைந்தான்.
மஹாபத்ராவிடம் அவன் விஷயத்தை கூற, அவளோ முதலில் திகைத்து பின் வெறிகொண்ட மட்டும் வேகமாக காரை செலுத்தி, மருத்துவமனை வளாகத்தினுள் செல்ல, அங்கு தஷ்வந்திற்கு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
“நான் அவனை பார்க்கணும்…” என மருத்துவரிடம் அவள் சண்டையிட,
“கொஞ்சம் நல்ல அடி. இப்ப நீங்க பார்க்க முடியாது. ட்ரீட்மெண்ட் பண்ணிட்டு இருக்கோம்” என்று தடுத்தும்,
” நானும் மெடிக்கல் ஸ்டூடண்ட் தான். லெட் மீ இன்” என வெறிப்பிடித்தவள் போல கத்தினாள்.
அப்போதும் மருத்துவர் அனுமதிக்காததில்,
“இப்ப என்னை உள்ள விடல… இந்த ஹாஸ்பிடல் தரைமட்டமாகிடும். சாய்ஸ் இஸ் யுவர்ஸ்…” என கண்ணில் அனலை ஏற்றிக் கூறியதில், அதன் பிறகே அவள் யாரென்று தெரிந்தது அவர்களுக்கு.
அதற்கு மேலும் மறுக்க அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது…!
சுயநினைவின்றி படுத்திருந்த ஆடவனின் தலையில் வழிந்த ரத்தமும், கை கால்கள் கட்டிடப்பட்டிருந்த நிலையும் அவளை நிலைகுலைய வைத்தது.
இரத்தமும், காயமும் அவள் காணாததா. அசட்டையாக மற்றவர்களை காயப்படுத்தி பார்ப்பவளுக்கு, இன்று அவனது காயத்தையும் இரத்தத்தையும் காண இயலவில்லை. மூச்சு விடவே சிரமமாக இருக்க, கையை இறுக மூடி மூடி திறந்தவள்,
“அமுலு… லுக் அட் மீ. ஆர் யூ ஓகே… அமுல் பேபி.” என அவனை எழுப்பிக் கொண்டே இருந்தாள்.
விழிகள் சுரந்த கண்ணீர் அவளே அறியாதது. தாய் வீட்டை விட்டு சென்ற போது கூட மனவலியை தனக்குள் புகுத்திக் கொள்ளாத அழுத்தம் மிக்கவள்.
இப்போது ஏற்பட்ட மனவலியில் துடித்தாள். சில மணித்துளிகளுக்குள், அவளை ஆட்டுவித்திருந்தான் தஷ்வந்த்.
மயக்கம் தெளிந்து, சோர்வாக கண்ணை திறந்தவனுக்கு எதிரில் விழி சிவந்து உதடு துடிக்க அமர்ந்திருந்த மஹாபத்ராவே தெரிந்தாள்.
அந்நிலையிலும் அவளை விசித்திரமாக பார்த்து வைத்தவன், பேச வாய் எடுக்கும் முன், மஹாபத்ரா அவன் முகம் தாங்கி முத்தமிட தொடங்கினாள்.
“நீ ஓகே தான அமுலு. வலிக்குதா? பயந்துட்டேன் அமுலு. நீ கண்ணை திறக்கவே இல்லையா… ஐ வாஸ் சோ ஸ்கேர்ட்.” எனப் புலம்பியவளின் நடுங்கிய மேனி அவனை உலுக்க,
” ஒன்னும் இல்ல பத்ரா. ஐ ஆம் ஓகே.” என்றும் கூட அவள் நிதானமாகவில்லை.
“சியூர்…” என்றபடி, கட்டிட்டு இருந்த நெற்றியை மெல்ல வருடினாள்
“நிறைய ரத்தம் தஷ்வா… கைல கூட பெரிய கட்டு.” என பெரிய பெரிய மூச்சு வாங்கியவள்,
“பிரச்சனைன்னா என்கிட்ட சொல்ல வேண்டியது தான இடியட். நான் எதுக்கு குத்துக்கல்லாட்டம் இருக்கேன். ஏதாச்சு ஆகிருந்தா… நான்… நான்… இன்னொரு தடவை இப்படி பண்ணாத தஷ்வா. யூ மேட் மீ கிரேஸி.” என்று மொத்த உணர்வையும் கொட்டி தீர்த்தாள்.
வலிகள் கூட மறந்து போக, பைத்தியம் பிடித்தது போல அவன் முன் அமர்ந்து நடுங்கியும், உளறியும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தவளை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் தஷ்வந்த்.
“உனக்கு இதெல்லாம் புதுசா என்ன…” எனக் கேட்டு வைத்தவன், அவளிடம் பதில் வராமல் போகவும்,
“உங்கிட்ட நான் ஏன் சொல்லணும். நமக்குள்ள பிரச்சனையை ஷேர் பண்ணிக்கிற அளவு என்ன இருக்கு பத்ரா…?” என்றான் துளைக்கும் பார்வையுடன்.
ஏற்கனவே உணர்ச்சிகளில் பிடியில் இருந்தவள், “என்ன இல்ல நமக்குள்ள. யூ ஆர் மை எவ்ரிதிங். இதுக்கு மேல என்ன இருக்கணும். நீ எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் தஷ்வா. உனக்கு அது புரியுதா இல்லையா?” எனக் கத்தி தீர்த்தாள்.
அப்போதும், அவன் தவிப்புடன் பார்த்திருக்க, அப்பார்வையில் தளர்ந்தவள், மீண்டும் அவன் முகம் முழுதும் முத்த மழையை தொடர்ந்தாள், “யூ ஆர் மைன் அமுலு… நீ என் உயிருக்கும் மேல. ஐ ஆம் சோ மேட் ஆன் யூ” என அவளது ஒவ்வொரு முத்தத்திற்கும் அவளை மீறி முனகிக் கொண்டிருந்தாள், அவன் மனதில் ஒரு ஆழமான நேச விதையை தூவுவதை அறியாமலேயே!
காயம் ஆறும்!
மேகா