மறுநாளே மாதவை மருத்துவமனையிலிருந்து அபார்ட்மெண்டிற்கு அழைத்து வந்தான் தஷ்வந்த். இந்த கலவரத்தில் இரு ஆடவர்களுமே ஊருக்கு செல்ல இயலவில்லை.
அங்கு சமையல் வேலைக்கு வந்த ரோஜாவின் தாய் ராணி தான், “பார்த்து இருக்க கூடாதாப்பா” என பரிகாசத்துடன் கூறி அவனுக்கு வேண்டியதை சமைத்து தந்தார்.
ரோஜாவிற்கும் விடுமுறையாக இருந்ததில், அவளும் அங்கு ஆஜராகி, மாதவை பார்க்கும் நேரம் எல்லாம் நக்கல் புன்னகை பூத்தாள்.
அதில் கடியான மாதவ், “இப்ப எதுக்கு பாட்டி நீ பல்ல பல்ல காட்டுற” என்று முறைக்க,
“அதொண்ணும் இல்ல டாக்டரே, பேஷண்ட்க்கு ட்ரீட்மெண்ட் குடுக்க படிக்க வேண்டியவரே, பேஷண்ட் ஆகிட்டாரே… அதுவும் வழுக்கி விழுந்து… “என்று ‘கிளுக்’ என நகைக்க, அவனுக்கோ புசுபுசுவென கோபம் வந்தது.
“நான் விழுந்ததுல யாருக்கு வருத்தம் இருக்கோ இல்லையோ, உனக்கும் உன் அக்காவுக்கும் மனசு குளுகுளுன்னு இருக்கும்ல…” என கடுப்பாக கேட்க,
“அப்ஸலியூட்லி!” என மேலும் கீழும் தலையாட்டியதில், “ஏய்… பாட்டி உன்ன…” என அடிக்க வந்தான் மாதவ்.
அதில் சிரித்தபடி ஓடி விட்டவள், “என்னை பிடிக்க முடியாது டாக்டரு” என்று அழகு காட்டிட, “நம்மளை சுத்தி ஒரே சூனிய பொம்மைகளா இருக்குங்க…” எனப் புலம்பிக் கொண்டான்.
இதற்கிடையில் தஷ்வந்த், மறக்காமல் மதனிடம் மன்னிப்பு கேட்டிருந்தான். அவனோ, “பரவாயில்ல சார். என்கிட்ட போய் சாரி எல்லாம் கேட்டுக்கிட்டு, நீங்க சாரி கேட்டதை மஹா கேட்டா, அவளோ தான்…” என்றான் நல்ல தொழிலாளியாக.
அவனை முறைத்த தஷ்வந்த், “என் ப்ரெண்டுகிட்ட நான் மன்னிப்பு கேட்குறேன். அதுக்கு அவள் என்ன சொல்றது…” என்றதில், மதன் மென்னகை புரிந்தான்.
பல முறை, அவனை பெயர் சொல்லி அழைக்கும் படி கேட்டு விட்டான். ஆனால், மாதவிடம் சகஜமாக பேசுபவன், தஷ்வந்திடம் எப்போதும் மரியாதையாகவே தான் நடந்து கொள்வான். அவன் மட்டுமல்ல, திரு, ரோஜா, ராணி என்று அனைவரும் அவனுக்கென்று தனி மரியாதை கொடுக்கவே செய்வர். சிறிதும் அவனது மரியாதைக்கு குறைவு சேர்ந்து விடக் கூடாது என்பது மஹாபத்ராவின் மறைமுகக் கட்டளை. அதனை மீறும் தைரியம் அங்கு யாருக்கும் இல்லை. தஷ்வந்திற்கும் சொல்லி சொல்லி அலுத்து விட, பின் அவன் போக்கிற்கு விட்டு விட்டான்.
அடுத்த மூன்று தினங்களில் மாதவின் உடல்நிலை ஓரளவு சீராக, “இருக்குற லீவ்லயாச்சு ஊருக்கு போகலாம் பாஸ். பாவம் என்னால நீயும் ஊருக்கு போக முடியல.” என்றவனின் சொந்த ஊர் திருச்சி.
அதில், சோபாவில் அமர்ந்து தீவிரத்துடன் போனை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த மஹாபத்ரா, நிமிர்ந்து இருவரையும் பார்க்க, அந்த நேரம் தஷ்வந்தும் அவளை தான் பார்த்தான்.
அவள் இதழ்களில் கண்ட கோண சிரிப்பில் சற்றே கோபம் எழ, மாதவை மட்டும் கிளம்ப சொன்னான். அன்றே அவனும் கிளம்பி விட, நேராக மஹாபத்ராவிடம் வந்த தஷ்வந்த்,
“நீ பண்றது உனக்கே நியாயமா இருக்கா பத்ரா. என்னை என் வீட்டுக்கு போக கூடாதுன்னு சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல. நீ என்ன என் லவரா? இல்ல என் பொண்டாட்டியா? அப்படியே அந்த உறவா இருந்தாலும், என் அப்பா அம்மா அக்காவை என்னால அவாய்ட் பண்ண முடியாது. நீ இதுல எதுவுமே இல்ல. உனக்காக, நீ சொல்றதுக்காக நான் இப்படி நாலு சுவத்தை வெறிச்சு பார்த்துட்டு இருக்கணுமா. இன்னைக்கு நான் ஊருக்கு போகணும். அவ்ளோதான்!” என்றவன் பிடிவாதத்துடன் நின்றான்.
அவளை மீறி கிளம்பி சென்று விட அவனால் முடியும் தான். ஆனால், அவளது கோபத்தின் அளவும் தெரிந்தவன். முட்டாள்தனமாக எந்த பிரச்சனையையும் இழுத்துக் கொள்ள அவன் தயாராக இல்லை. அது அவன் படிப்பையும் பாதிக்க நேரிடலாம்.
மருத்துவமனையில் நிகழ்ந்த நிகழ்வில், இளகிய மனதை இழுத்துப் பிடித்தவன், மீண்டும் அவளிடம் கண்டும் காணாதது போல இருந்து கொண்டான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த மஹாபத்ரா, “நான் உன் கேர்ள் ஃப்ரெண்ட் அமுலு” எனக் கண் சிமிட்ட, அவன் சலனமின்றி பார்த்தான்.
அப்பார்வையில் என்ன உணர்ந்தாளோ, “உன்னை எப்படி நான் நம்பி அனுப்புறது தஷ்வா. நீ எனக்கு அல்வா குடுத்துட்டு அப்படியே ஓடிட்டா?” என்று கன்னத்தில் கை வைத்து அப்பாவியாக கேட்க,
“அய்யயோ… அப்படியே இந்த அம்மா, என்னை விட்டுட்டு தான் அடுத்த வேலை பார்க்கும்… நான் வரலன்னு தெரிஞ்சா என் வீட்டுக்கே என்னை தேடி வந்து, எனக்கு இம்சை குடுக்க மாட்ட. உனக்கு அல்வா குடுத்துட்டு நான் எங்க போறது. எப்படினாலும் என் படிப்பை இங்க தான் கன்டினியூ பண்ணனும்.” என்று நக்கலுடன் ஆரம்பித்து தீவிரத்துடன் முடித்தான்.
“டிஸ்கன்டியூ பண்ணிட்டு சென்னைலயே ஜாயின் பண்ணிட்டீனா?” அவள் உதட்டைப் பிதுக்கிக் கேட்க,
தலையில் அடித்துக் கொண்டவன், “அங்க ஜாயின் பண்ணுனா, நீ என்னை நிம்மதியா விட்டுடுவியா?” என்றான் முறைப்புடன்.
“நெவர். ஐ நீட் யூ அட் எனி காஸ்ட்.” சர்வ நிச்சயமாக கூறியவளின் கூர் விழிகள் அவனை துளைத்தது.
“அப்பறம் என்ன டேஷுக்கு இவ்ளோ கேள்வி கேக்குற.” எரிச்சலின் உச்ச கட்டத்தில் இருந்தான் அவன்.
“ஒரு ஜி.கே க்கு தான் அமுல் பேபி.” என சிரித்தவள், “ஓகே…” என்றாள் மொட்டையாக.
அதிலேயே அவனுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
“இப்ப இந்த ஓகே எதுக்கு?” தட்டு தடுமாறி வினவ,
“நீ ஊருக்கு போறதுக்கு தான் அமுலு. போயிட்டு வா.” என்றவளின் பேச்சில் நம்பிக்கை இல்லாமல், “அப்படியே இதுக்குள்ள என்ன டிவிஸ்ட் வச்சு இருக்கன்னு சேர்த்து சொல்லிடு.” என்றான் பாவமாக.
வாய் விட்டு சிரித்தவள், “யூ சோ ஸ்வீட் அமுல் பேபி. என்னை பத்தி நல்லாவே புருஞ்சு வச்சுருக்க. ஆக்சுவலி, உன் கூட நானும் வரலாம்ன்னு…” என இழுக்க, அவனோ பதறி, “அப்படின்னா நான் ஊருக்கே போகல.” என்று கும்பிட்டான்.
“சில் அமுலு. அப்படி தான் நினைச்சேன். ஆனா, பாரு… இப்ப என்னால வரமுடியாது. சோ…” என்றதில்,
“சோ?” என புருவம் சுருக்கினான் தஷ்வந்த்.
“சோ… உன் கூட மதனும் வருவான்.” என்று முடித்திட, “எதே” என்று விழித்தான்.
“அவன் எதுக்கு என் கூட இலவச இணைப்பா? அவனை எல்லாம் கூட்டிட்டு போக முடியாது.” என்றதில்,
“சிம்பிள். அப்போ நீயும் ஊருக்கு போகாத.” என்று தோளை குலுக்கினாள்.
“திஸ் இஸ் டூ மச் பத்ரா.” தஷ்வந்த் கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிட,
“இப்போ மட்டும் இல்ல… காலேஜ் முடியிற வரை, நம்ம லிவ் இன் கன்டின்யூ ஆகுற வரை, நீ எப்ப ஊருக்கு போனாலும், அவனும் வருவான். இஷ்டம் இருந்தா போ. இல்லன்னா நம்ம ரெண்டு பேர் மட்டும் இங்க தனியா டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்.” என்றவளின் கடைசி வரிகள் மட்டும் கிசுகிசுப்புடனும், சில்மிஷத்துடனும் வெளிவந்தது.
அதில் விழித்தவன், மதனை வீட்டிற்கு வரக் கூறினான்.
அவனும் மேலே வந்து, இருவரையும் என்னவெனப் பார்க்க, “இப்ப இவனை என்னன்னு சொல்லி என் கூட கூட்டிட்டு போறது.” என தஷ்வந்த் மூக்கு விடைக்க கேட்டான்.
“பிரெண்ட்ன்னு சொல்லு. க்ளாஸ்மேட்ன்னு சொல்லு. வாட் எவர் யூ வாண்ட்.” என்றாள் அசட்டையாக.
“இவன்… ப்ரெண்ட்… க்ளாஸ்மேட்டு…” என்று மீண்டும் திரும்ப அழுத்திக் கூறியவன், “இவனை ஒரு தடவை நல்லா பாரு. மனசாட்சியை தொட்டு சொல்லு, மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட் மாதிரியா இருக்கான் இவன். மூஞ்சி முழுக்க தாடி மீசை, சட்டை பட்டனை இஷ்டத்துக்கு போட்டிருக்கான். பரட்டை தலை. பார்த்தா பத்து கொலை பண்றவன்னு பச்சையா தெரியுது. இவனை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போனா, என் அப்பா நான் ரௌடிசம் பண்றதா நினைச்சு, எனக்கு சாப்பாட்டுல விஷம் வச்சுருவாரு.” என்றான் கேலியுடன்.
மதனோ பேந்த பேந்த விழித்தபடி நிற்க, தாடையை தடவி சிறிது நேரம் யோசித்த மஹாபத்ரா, சற்று நேரத்தில் அமிஷிற்கும் ஆஷாவிற்கும் குறுஞ்செய்தி அனுப்பி வரக் கூற, அவர்களும் அங்கு ஆஜராகி விட்டதில், மதனுக்கு தான் ஐயோ என்றிருந்தது.
“பக்கா ரௌடியை எப்படி மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்டா மாத்துறது.” என்று புலம்பிக் கொண்ட அமிஷ் தலையை சொறிய, ஆஷாவிற்கு நடந்த சம்பாஷணைகளை கேள்விப்பட்டு சிரிப்பு பொங்கியது.
“என்ன அமி நீ. என்ன இருந்தாலும் மதனும் காலேஜ் ஸ்டூடண்ட் யூ நோ.” என நக்கலடிக்க,
“இவன் எங்கடி காலேஜ் போறான். எக்ஸாம் டைம்ல மட்டும் தான் ஸ்டூடண்ட் – ஆ இருக்கான். மத்த நேரம் எல்லாம் அடிதடி வேலை பார்க்கவே இவனுக்கு நேரம் சரியா இருக்கு.” அமிஷ் சலித்து விட்டு, “இருந்தாலும் நான் மனம் தளரமாட்டேன்.” என்று உறுதி பூண்டு, “டேய் வாடா…” என மதனை வெளியில் இழுத்துச் சென்றான்.
‘உனக்கு நான் என்னடா பண்ணுனேன். என் ஆளு முன்னாடி இப்படி அசிங்கப்படுத்திட்டியேடா’ என்ற ரீதியில் தஷ்வந்தை மானசீகமாக திட்டியபடி அமிஷுடன் சென்ற மதன், சில நேரங்களில் அவனுடனே திரும்பி வந்தான். வரும்போதே, நடையில் கூச்சமும், தயக்கமும் மின்னியது.
முடியை அழகாகத் திருத்தி, தாடியையும் மீசையையும் அளவாக ட்ரிம் செய்து, பிரவுன் நிற சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்து, அவனை அம்சமாக தயார் செய்து கொண்டு வந்திருந்தான் அமிஷ்.
அவனைக் கண்டதும் தஷ்வந்தும் மஹாபத்ராவும் விழிகளை உயர்த்தி பார்த்துக்கொண்டனர்.
ஆஷாவோ வியந்து, “வாவ் மதன்… நீ இவ்ளோ அழகான பீசாடா. இதே கெட் – அப் ஓட, காலேஜ்க்கு வந்த, உனக்கு பேன் ஃபாலோயிங் அள்ளும் போ.” எனப் புகழ்ந்திட, மதனுக்கு வெட்கமாகி விட்டது.
தஷ்வந்த் தான் அவன் பாவனையில் எழுந்த புன்னகையை கடினப்பட்டு அடக்கிக் கொண்டு, “தயவு செஞ்சு வெட்கம் மட்டும் படாதடா. ரொம்ப கேவலமா இருக்கு.” என்றான் கேலியாக.
அதில் அசடு வழிந்தவன், “நீங்க கிளம்பி வாங்க. நான் காருக்கு போறேன்” என யாரையும், முக்கியமாக ஆஷாவைப் பாராமல் ஓடியே விட்டான். அவள் பாராமல் இருக்கும் போதே, நெஞ்சம் எங்கும் காதல் வழியும். இப்போதோ அவனையே ஆராய்ந்த அவளது பார்வை, ஆடவனை திக்குமுக்காட வைத்தது.
ஒருவழியாக ஊருக்கு கிளம்பி விட்டவனை, மஹாபத்ரா தான் கட்டி அணைத்துக் கொண்டாள்.
“கண்டிப்பா நீ போகணுமா அமுலு. ஐ வில் மிஸ் யூ பேட்லி.” என அவளே அறியாத வாடிய குரலில் கூறி, அவனது நெற்றியில் இதழ் பதிக்க, பின்னால் நகர்ந்த தஷ்வந்த்,
“சத்தியமா நான் உன்னை மிஸ் பண்ண மாட்டேன். கொஞ்ச நாள் உன் இம்சை இல்லாம ஃபிரீ பர்ட்டா சுத்த போறேன்.” என மேலே பார்த்து ஃபீல் செய்து கூறியவன், ‘அப்பாடா தப்பிச்சோம்’ என்ற சந்தோஷத்தில் மிதந்தான்.
அவனை சலனமற்று ஏறிட்டவள், “கம் அகைன். என்னை மிஸ் பண்ண மாட்டியா?” அவள் கேட்ட தோரணையை கவனியாமல்,
“டெஃபினெட்லி நாட்!” உறுதியாக தலையசைத்தான்.
“என் ஞாபகமே வராதா?”
“நெவர். நான் ஏன் அங்க போய் உன்னை ஞாபகம் வச்சுக்கனும் பத்ரகாளி. நகரு லேட் ஆகுது.” என்று பையை தூக்க எத்தனிக்க,
அவன் முகம் பிடித்து திருப்பிய மஹாபத்ரா, “நீ என் இம்சை இல்லாம கொஞ்ச நாள் இருக்கலாம். பட் என் ஞாபகம் இல்லாம… உன்னால ஒரு செகண்ட் கூட கடத்த முடியாது. கடத்தவும் கூடாது… சோ… ஐ ஹேவ் நோ ஆப்ஷன்ஸ் அமுலு.” என அவன் விழி பார்த்து அழுத்தம் திருத்தமாக கூறியவள், அவன் உணரும் முன்பு, அவனிதழ்களில் தன்னிதழை பொருத்தினாள்.
வாழ்வா சாவா போராட்டத்தில் தவித்த தஷ்வந்த், அவளை தள்ளி விடுவதை கூட மறந்து திகைத்திருந்தான்.
லேசான அந்த இதழ் ஒற்றல், அவனுள் உணர்வுப் பேரலைகளை உண்டாக்கி சென்றது. கூடவே, சீற்றத்தையும்.
பட்டென அவளிடம் இருந்து விலகியவன், “நான் ஒன்னும் உணர்ச்சி இல்லாத ஜடம் இல்ல பத்ரா. நான் ஏற்கனவே சொல்லிட்டேன், என்கிட்ட நெருங்காதன்னு. உனக்கு பைத்தியமா பிடிச்சு இருக்கு.” என்று கத்தி விட்டான்.
அவளோ மெல்லமாக, “ம்ம் உன்மேல பைத்தியம் பிடிச்சு ரொம்ப நாளாச்சு அமுல் பேபி. நான் வேணும்ன்னு உன்னை நெருங்கல. நீ தான் என்னை மிஸ் பண்ண மாட்டேன்னு சொன்ன. அதான், என்னை ஞாபகம் வச்சுக்க இப்படி பண்ணேன். அட்லீஸ்ட் என்மேல கடுப்பாகியாவது என் ஞாபகம் இருந்துகிட்டே இருக்கும்ல.” என புன்னகை சிந்தியவள், “சரி வா… உன்னை சென்ட் ஆஃப் பண்ணிட்டு நானும் கிளம்புறேன்.” என்று அவன் கையைப் பற்றி இழுத்துச் சென்றாள்.
அவள் சொன்னது போன்றே, அவனது வீட்டில் இருந்த அத்தனை நாட்களும், மஹாபத்ராவின் நினைவு தான் அவனை ஆட்டுவித்தது.
அவளது இதழ் ஒற்றல் இல்லையென்றால் கூட, இதே போல் தான் இருந்திருப்பான். அது அவனுக்கும் நன்றாகவே தெரியும். வேண்டுமென்றே தான் அவளது நினைவு வராது என்று கெத்துடன் கூறியவனுக்கு எதிர்பாராத அவளது முத்தம் தவிப்பையே கொடுத்தது.
ஒருவாறாக விடுமுறை முடிந்து தஷ்வந்த் மீண்டும் ஹைதரபாத் வந்து சேர, அது நாள் வரையிலும் மஹாபத்ராவிடம் அவன் பேசவே இல்லை. அவளும் காலையிலும் இரவிலும் காலை வணக்கமும் இரவு வணக்கமும் கூறிக் கொள்வதோடு சரி. அவளும் போன் செய்யவில்லை.
அத்தனை நாட்கள் அவள் அவனை தொந்தரவு செய்யாமல் இருந்ததே அவனுக்கு பெரும் ஆச்சர்யம் தான்.
கூடவே, ‘ஆமா, நான் என்ன அவளோட லவரா, தினமும் எனக்கு கால் பண்ணி பேச… அவளை பொறுத்த வரை, இது ஜஸ்ட் லிவ் – இன் ரிலேஷன்ஷிப். ஐ ஆம் ஜஸ்ட் ஹர் பாய் பிரென்ட். அப்படித்தான அவள் சொல்லிட்டு இருக்கா. நான் அவளை விட்டு போனாலும் அவளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது… பிகாஸ் ஷீ ஆல்வேஸ் ரெடி ஃபார் செப்பரேஷன் அட் எனி டைம்.’ என்று உள்ளுக்குள் மருகிக் கொள்பவன், ஏனோ அந்நிலையை சுத்தமாக வெறுத்தான்.
‘அப்போ லவரா இருந்தா ஓகே வா? அவளை மாதிரியே அவள் உன்னை விட்டு போனாலும் உனக்கும் எந்த பாதிப்பும் இருக்காதா…’ எனக் கேட்ட மனசாட்சிக்கு பெருமூச்சை மட்டுமே பதிலாக கொடுத்தவனுக்கு, அப்படி ஒரு எண்ணமே கசந்தது.
முதலில் அவளது அழைப்புகள் அற்ற நாட்களை இயல்பாகக் கடந்தவனுக்கு, நாள் செல்ல செல்ல, ஒரு வித இறுக்கமும் கோபமும் சூழவே செய்தது. அதனை கட்சிதமாக தனக்குள் மறைத்துக் கொண்டவன், அபார்ட்மென்ட்டினுள் நுழைந்து பயணக் களைப்பில் சோஃபா மீது தொம்மென அமர்ந்து, தலையை பின்னால் சாய்த்துக் கண் மூடினான்.
சில நொடிகளில் நெற்றியில் இதழ் ஈரம் உணர்ந்தும், சில்லென்ற மனதை அடக்கிக் கொண்டு, கண்ணை திறவாமல் அதே நிலையில் அமர்ந்திருந்தான். இத்தனை நாட்களில் அவளது வாசம் அவன் நாசி அறியாததா! ஆனால், இப்போது ஒரு வித ஏமாற்றம் தாக்க அவளைக் காண கூட திராணி இல்லை அவனுக்கு.
அவர்கள் வருவதை மதன் மூலம் அறிந்திருந்த மஹாபத்ரா, அவனுக்கு முன்பே வீட்டிற்கு வந்து விட்டாள். தான் முத்தமிட்டும், அப்படியே அமர்ந்திருந்தவனைக் கண்டு, லேசாக பதற்றம் எழ,
“ஹே… ஆர் யூ ஆல்ரைட் அமுல் பேபி.” என்றாள் அவன் நெற்றியில் கை வைத்து.
அப்போதும், மூடிய விழிகளுடனே, “ம்ம்” என்றதில், சுருங்கிய புருவங்களை நீவி விட்டவள், “வாட் இஸ் ஈட்டிங் யூ தஷ்வா? மறுபடியும் உன் அக்கா ப்ராப்ளம் பத்தி யோசிக்கிறியா?” எனக் கேட்டதும் தான் பட்டென விழிகளைத் திறந்தான்.
அவன் வீட்டில் இருந்த அத்தனை நாட்கள் வரை, ஒரு முறை கூட அவன் மஞ்சுளாவின் காதல் பற்றி கேட்கவே இல்லையே. தந்தையும் அல்லது மதனும் எப்போதும் உடன் இருந்து கொண்டே இருந்ததால், அவனாலும் அடுத்து வேறு எதையும் யோசிக்க இயலவில்லை என்றாலும், குறைந்தபட்சம், கண்ணிலாவது அவளுக்கு நம்பிக்கை அளித்து இருக்கலாமே… என தன்னையே குற்ற உணர்விற்கு ஆளாக்கிக் கொண்டான்.
கதிரேசன் மஞ்சுளாவின் காதலை ஏற்காமல் போக, அப்படி வசீகரனை தான் திருமணம் செய்ய வேண்டும் என்றால், வீட்டை விட்டு செல்ல சொல்லி விட்டார். அவள் தான், தந்தையின் மனமாற்றத்திற்காக எந்த முடியும் எடுக்க இயலாமல் காத்திருந்தாள்.
அவசரமாக மஞ்சுளாவிற்கு போன் செய்தவன், அவள் அழைப்பை ஏற்றதும் “சாரி மஞ்சு. உன்கிட்ட, எதை பத்தியும் பேச கூட முடியல. ஏதோ ஒரு ஞாபகத்துல… ப்ச், ரொம்ப சாரி. அப்பா கொஞ்ச நாள்ல மனசு மாறிடுவாரு. இல்லன்னாலும், எப்டியாச்சு அவரை சம்மதிக்க வைக்கலாம்.” என்று படபடவென பேச, அவளோ உறக்க கலக்கத்தில் இருந்தாள்.
“அட நாயே… தூங்கிட்டு இருக்குறவளுக்கு போன் செஞ்சு ஏண்டா உளறிட்டு இருக்க.” என்று தலையை சொறிந்தவளுக்கு அவனது தவிப்பு புரியவில்லை.
சாதரணமாகவே, மஞ்சுளாவின் காதல் விஷயத்தில் அவன் ஆர்வம் காட்டியதில்லை. அதனால், இப்போதும் அவன் நடந்து கொண்டதில் அவளுக்கு ஒன்றும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. அதனாலேயே, “நானும் உன் மாம்ஸும் திருட்டு கல்யாணம் பண்ற மாதிரி கனவு ஏதாச்சு கண்டியாடா தம்பூ?” என்று சிறு வெட்கத்துடன் அவள் கேட்க,
“போடிங்… உனக்கு போய் போன் பண்ணுனேன் பாரு.” என்று கரித்துக் கொட்டி போனை வைத்தவன், அதன் பிறகே எதிரில் மஹாபத்ரா அவனை குறுகுறுவெனப் பார்ப்பதைக் கண்டான்.
அப்பார்வையை தவிர்த்து எழுந்தவனின், இரு தோள்பட்டையிலும் அழுத்தி அமர செய்தவள், “உன் அக்கா லவ் மேட்டரை கூட பேசாம, அப்டி என்ன ஞாபகத்துல இருந்த அமுல் பேபி… என் ஞாபகமா?” எனக் கண்சிமிட்டினாள் குறும்பாக.
“சில்லி. நான் போய் பத்து நாள்ல எனக்கு ஒரு போன் கூட பண்ணாத, உன்னை ஏன் நான் ஞாபகம் வச்சுக்கணும்.” என்று தோளைக் குலுக்கி, அவனது ஆதங்கத்தையும் அவனறியாமல் கொட்டி இருந்தான்.
அவளுக்கோ புன்னகை பீறிட்டு வெளிவரத் துடிக்க, அதனை அவனுக்கு காட்டாமல், அவனது மடியிலேயே அமர்ந்தவள், “சோ, நான் போன் பண்ணலன்னு, என் அமுல் பேபிக்கு என் மேல கோபம்… ஆம் ஐ ரைட்?” எனக் கேட்க, அவனோ திகைத்து பின்,
“உன் மேல கோபப்பட எனக்கு எந்த உரிமையும் இல்ல. லிவ் இன் ரிலேஷன்ஷிப்போட அடிப்படையே, இந்த கோபம், எதிர்பார்ப்பு, அக்கறை இது எதுவுமே இல்லாம இருக்குறது தான.” என்றான் விழிகளால் சாடி.
அவனது கோபம்… அவளுக்கே அவளுக்காக, அவள் மீதிருந்த எதிர்பார்ப்பில் அவளவன் காட்டிய கோபம் அவளுக்கு அத்தனை பிடித்தது.
“ஐ லைக் இட் அமுல் பேபி. திஸ் பொஸ்ஸஸிவ்நெஸ்… திஸ் ஆங்கர். ஐ லைக் இட் வெரி மச்.” என ரசித்துக் கூறியவள், ஆடவனையும் சேர்த்து மிச்சம் வைக்காமல் ரசித்து வைத்தாள்.
அவனோ அவளைத் தவிர வீட்டில் அனைத்தையும் பார்வையிட, அவனது முகம் பற்றி அவளை நோக்கி திருப்பியவள், “கொஞ்சம் ஒர்க் இருந்துச்சு அதான் கால் பண்ணல அமுலு…” என கொஞ்சலாகக் கூற, அவன் வெடுக்கென அவளது கையை தட்டி விட்டான்.
அதில், “அவுச்…” என தோள்பட்டையில் எழுந்த வலியில் வாய்விட்டு கத்தியதில், ஆடவன் பதறினான்.
“ஏய், என்ன ஆச்சு? எதுக்கு கத்துன?” புருவம் நெறித்துக் கேட்ட தஷ்வந்தின் கேள்வியில், இயல்பானவள் “நத்திங்…” என தலையசைக்க, அவன் தான் நம்பவில்லை.
“ஒண்ணும் இல்லாததுக்கா இப்படி கத்துன.” எனக் கேட்டவன், இன்னும் அவள் தோள்பட்டையை லேசாக பிடித்துக் கொண்டதில் கலவரமாகி, “நான் லேசா தான் பத்ரா தட்டி விட்டேன். என்ன ஆச்சு…?” என மீண்டும் வினவ, “நத்திங்டா. நீ போய் ப்ரெஷ் ஆகிட்டு வா. சாப்பாடு ஆர்டர் பண்ணிருக்கேன் சாப்பிடலாம்.” என அவனை விட்டு எழுந்தாள்.
அவனோ விடாமல், மறுபடியும் அவளது கையை பற்றி இழுக்க, அவள் வலியில் கத்தி, “டேய்… என்னடா பண்ற?” என முகத்தை சுருக்கினாள்.
“கைல என்னன்னு காட்டு.” தஷ்வந்த் விடாப்பிடியாக நிற்க, “ஒண்ணும் இல்ல தஷ்வா. ஜஸ்ட் ஒரு சின்ன சுளுக்கு.” என்று அவனை விட்டு நகர்ந்தவள், கையை மெல்ல நீவி விட,
“கைல சுளுக்கு வர்ற அளவுக்கு எவனை அடிச்ச?” அவனும் குதர்க்கமாக கேட்டான்.
“அது தெரிஞ்சு நீ என்ன செய்ய போற அமுல் பேபி. கம் லெட்ஸ் ஈட்.” என்றபடி டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தவள், அணிந்திருந்த டீ ஷர்ட்டின் தோள்பகுதியை கழுத்து வரை இழுத்து விட்டுக் கொண்டாள்.
எதையும் யோசியாமல், விறுவிறுவென அளவருகில் வந்த தஷ்வந்த், அவள் இழுத்து விட்ட டீ ஷர்ட்டின் தோள்பட்டையை பகுதியை கீழே இறக்கி விட, அவளோ அவனது தீண்டலை எதிர்பாராமல் தடுமாறினாள்.
தோள்பட்டையில் மிகப் பெரிய கட்டிட்டு இருப்பதில் அதிர்ந்தவன், “என்ன பத்ரா இவ்ளோ பெரிய இன்ஜ்யூரி? எப்படி ஆச்சு?” என்றிட,
டீ ஷர்ட்டை மேலே ஏற்றிக் கொண்டவள், “நாட் அ பிக் டீல் அமுல் பேபி. ஒன் வீக் முன்னாடி, குட்டி ஆக்சிடெண்ட், அதுல லேசா அடிபட்டு, கைல கண்ணாடி குத்திடுச்சு… தென், ஒரு சின்ன ஃபிராக்ச்சர் அவ்ளோ தான்.” என்றாள் சாதாரணமாக.
அவளை தீயாக முறைத்து வைத்தவன், “இதுக்கு பேர் குட்டி ஆக்சிடெண்ட். லேசான அடி, சின்ன ஃப்ராக்ச்சரா? இடியட். ஃபிராக்ச்சர் ஆன கையை ஏண்டி தொங்க போட்டுருக்க. டாக்டருக்கு தான் படிக்கிற. புத்தி இருக்கா இல்லையா? முட்டாள்.” என வாய்க்கு வந்தபடி திட்டினான் தன்னை மீறி எழுந்த பரிதவிப்பில்.
அவனுக்கு தெரிய வேண்டாம் என்று தானே, கையை தாங்க பயன்படும் ‘ஸ்லிங்’ எனப்படும் கவணை காரிலேயே கழற்றி வைத்து விட்டு வந்தாள்.
அதனைக் கூறாமல், “விடுடா. இதுக்கு அவ்ளோ சீன்லாம் இல்ல.” என அவனைப் பாராமல் கூற,
“ஸ்லிங் எங்க?” என்றான் இறுகிய முகத்துடன்.
“கார்ல… பட்” எனக் கூறி முடிக்கும் முன்பே, வேகமாக பார்க்கிங் நோக்கி சென்றான்.
அவளால் கார் ஓட்ட இயலாததில், திரு தான் அவளை அழைத்து வந்திருந்தான். அப்போது தான் திரு மூலம் நிகழ்ந்த விபத்தே மதனுக்கும் தெரிந்தது.
திருவை ஆத்திரத்துடன் ஏறிட்ட தஷ்வந்த், “அவள் தான் அறிவில்லாம நடந்துக்குறான்னா, நீங்களும் அவளுக்கு ஆமா சாமி மட்டும் தான் போடுவீங்களாடா…” எனக் கடிந்து விட்டு, ஸ்லிங்கையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தவன், கோபம் கொண்ட முகத்தை மாற்றாமல் அதனை அவளுக்கு மென்மையாக அணிவித்து, “பெயின் இல்லைல…? டேப்லட் போட்டியா?” என்றான் அதையும் சலனமின்றியே.
“பெயின் இல்லடா. ப்ராமிஸ்…” என தன் தலை மீது கை வைத்தவளைக் கண்டு, மெல்ல நிதானத்திற்கு வந்தவன், தட்டில் சாப்பாடை நிரப்பி, அவள் முன் நீட்டினான்.
“நீ சாப்பிடு…” அவள் புரியாமல் பார்க்க, “உன் அக்கறை ஒண்ணும் எனக்கு தேவை இல்ல. எனக்கு சாப்பிட்டுக்க தெரியும்.” என எரிந்து விழுந்தான்.
அவளுக்கு அடிபட்டதால் நேர்ந்த துடிப்பும், அதனை தன்னிடம் மறைத்து விட்டாளே என்ற ஆற்றாமையும் அவனை கொய்தது.
அடிபடாத வலது கையால், தட்டில் இருந்த இட்லியை பிய்த்து, அவன் முன் நீட்டிய மஹாபத்ரா, “ஓகே சமாதானம்! சிரி பாப்போம்.” என்று அவனை சமன்செய்ய முற்பட, அவனுக்கோ கோபமே பெருகியது.
“ப்ச், அமுல் பேபி… நீ சிரிச்சா, உன் கன்னத்துல ஆழமா குழி விழுகும் தெரியுமா… ஐ ஜஸ்ட் அட்மைர் தட். அண்ட் லவ் இட். பட் நீ என்னை பார்த்து சிரிச்சதே இல்ல இதுவரை. அன்னைக்கு ஹாஸ்பிடல்ல குட்டியா ஸ்மைல் பண்ணுன தட்ஸ் ஆல். அதுல உன் கன்னக்குழி அழகு தெரியவே இல்ல. சோ, இப்ப நல்லா சிரியேன். நான் கொஞ்ச நேரம் உன்னை சைட் அடிச்சுக்குறேன்.” மீண்டும் குறும்பு தலை தூக்க, மஹாபத்ரா அவனை சீண்டினாள்.
“உனக்கு என்ன தாண்டி வேணும். ஏண்டி என்னை இப்படி சோதிக்கிற. உன்னை விட்டு போய் தொலையவும் முடியல. நீ இல்லாம இருந்து தொலைக்கவும் முடியல. இதுக்குலாம் என்ன பேருன்னும் எனக்கு தெரியல. மொத்தமா உன்னை தலைமுழுகவும் தெரியாம, உன் பைத்திக்காரத்தனமான அன்ப பார்த்து நெருங்கவும் முடியாம, லூசாகிடுவேன் போல.
இதெல்லாம் உன்னால தான். இப்ப நான் என்ன பண்றது சொல்லு. கல்ச்சர், பேமிலின்னு எல்லாத்தையும் மறந்துட்டு, உன் கூட ஜாலியா இருக்கவா? இல்ல, உன்னையே மறந்துட்டு அடுத்த வேலையை பார்க்கவா? சொல்லு இப்ப நான் என்ன செய்ய?” கிட்டத்தட்ட பொறுமை மொத்தமும் இழந்து கத்தி தீர்த்தான் தஷ்வந்த்.
அவனையே கண்ணிமைக்காமல் பார்த்தவள், “உனக்கு என்ன தோணுதோ அதையே செய்.” என்றாள் மெல்லமாக.
“எனக்கு இங்க இருந்து போனா போதும்ன்னு தோணுது. செய்யவா?” விகல்பகமாக அவன் வினவ,
“நோ!” மறுநொடி மறுத்தாள்.
“இந்த லிவ் இன் ரிலேஷன்ஷிப்பை பிரேக் பண்ணலாம்ன்னு தோணுது. செய்யவா?”
“நோ!” இம்முறை பல்லைக்கடித்தாள் மஹாபத்ரா.
“நீ என்னை நெருங்கி வரும்போது டெம்ப்ட் ஆகி, உன்னை எடுத்துக்க தோணுது. அதையாவது செய்யவா?” விழிகளை உயர்த்தி அவன் விஷமத்துடன் கேட்க,
ஏதோ நினைவில் ‘நோ’ எனக் கூற வந்தவள், அதன் பிறகே அவன் கூறியதை உணர்ந்து “வாட்?” என்றாள் புருவம் சுருக்கி.
“ஆமா, ஒரு பொண்ணு இப்படி உரசிகிட்டே சுத்துனா, ஃபீலிங்ஸ் வர தான் செய்யும். நான் என்ன முற்றும் துறந்த முனிவரா… பதில் சொல்லு.” என அவளிடமே பந்தைக் கொடுத்தான்.
சில நொடிகள் அவனை சலனமின்றி பார்த்தவள், “ஒரு பொண்ணு உரசுனா உனக்கு ஃபீலிங் வரும்ன்னா, அப்போ என் இடத்துல யாரு இருந்தாலும் உனக்கு இதே ஃபீலிங்ஸ் வந்துருக்குமா?” நிறுத்தி நிதானமாக வினா தொடுத்தாள்.
ஒரு கணம் திகைத்தாலும், “ம்ம்” என அசட்டையாக தோளைக் குலுக்கியவனின் செய்கையிலேயே அவன் தடுமாறுவது உணர்ந்து, சிரிப்பை அடக்கியவள், “சியூர்… யார் இருந்தாலும்? மந்த்ரா இருந்தா…?” எனக் கூறி முடிக்கும் முன்,
“வாய மூடு பத்ரா. அவளை போய்…” என தலையை அழுந்தக் கோதி கொண்டான்.
“ஓகே… அப்போ உன் க்ளாஸ்ல இருக்குற மத்த பொண்ணுங்க, ஆர் வேற எந்த பொண்ணு இப்படி உன்னை கிஸ் பண்ணாலும், உரசுனாலும் நீ எல்லை மீறிடுவ? இஸ் இட்?” என குதர்க்கமாக கேட்க,
அவனுக்கு ஐயோ என்றிருந்தது. “ஆ… ஆமா.” சாதரணமாக சொல்ல நினைத்தும் அவனால் முகம் காட்டிய பதற்றத்தை மறைக்க இயலவில்லை.
அதனை ரசித்து வைத்தவள், “லிப்ஸ் பொய் சொல்லுது. ஐஸ் மெய் சொல்லுது. இதை நான் எதை கணக்குல எடுக்கட்டும் அமுல் பேபி.” சிரிப்புடன் தலை சரித்துக் கேட்டதில், அவனது மனம் தான் தாவி வெளியில் விழுந்தது.
“லீவ் இட். பசிக்குது.” என இத்தனை நேரம் கோபத்தில் கத்தியதை மறந்து, நல்ல பையனாக அமர்ந்து சாப்பிட எத்தனித்தவனைக் கண்டு முறுவல் பூத்தது பெண்ணவளுக்கு.
‘சோ ஸ்வீட் அமுல் பேபி…’ என கொஞ்சிக் கொண்டவள், மேலும் அவனை சோதியாமல், “நான் ஏற்கனவே சொன்னது தான் தஷ்வா, ஜஸ்ட் என்ஜாய் திஸ் மொமெண்ட். வேற எதையும் யோசிச்சு உன்னை குழப்பிக்காத. கான்செண்ட்ரேட் ஆன் யுவர் ஸ்டடீஸ்.” என்று அழுத்தமாக கூறியவளை புரியாமலே ஏறிட்டான்.
‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்ன்னு வாய் கிழிய சொல்றா. ஆனா, அப்படி ரிலேஷன்ஷிப்ல இருக்குறதுக்கு முக்கிய ரீசனே ஃபிஸிக்கல் நீட்ஸ், அண்ட் நோ கமிட்மெண்ட்ஸ் தான். ஆனா, இவள் இப்ப வரை கூட, அதை அக்செப்ட் பண்ணிக்கவே இல்ல. என்ன நினைப்புல தான் இவள் சுத்திட்டு இருக்கா… இவளை போட்டு வாங்க நானும் ஏதோ பொண்ணுக்காக அலையுறேன்ற மாதிரி கேள்வி கேட்டு வச்சுட்டேன். கருமம்… என்னை என்ன நினைப்பாளோ…!’ என தனக்குள் நொந்து கொண்டிருந்தான் தஷ்வந்த்.
சில நேரம், அவள் முத்தமிடுவதில் அவனுக்கும் உணர்வுகள் கிளர்ந்தெழுந்தாலும், அதனை எளிதாக அடக்கிக் கொள்வான் தான். அந்த உணர்வுகளை மீறி, உறவின் மீது அவன் வைத்திருக்கும் மதிப்பே அவள் மீது சிறு தவறான பார்வையை கூட வீச அனுமதித்தது இல்லை. அவள் கண்ணை தவிர வேற எங்கும் காணாது அவனது கண்கள்.
ஆனாலும், அவளது முத்தங்களில் சிலது அன்பின் வெளிப்பாடாகாவும், சிலது புரிந்து கொள்ள இயலா உணர்வின் வெளிப்பாடாகவுமே இருக்கும். நிச்சயமாக அம்முத்தங்களில் அவன் இதுவரை காமத்தை உணர்ந்ததில்லை. அந்த இதழ் ஒற்றலில் கூட, ஒரு வித தவிப்பு மட்டுமே நிறைந்திருந்ததை அவன் அறிவான். அதனாலேயோ என்னவோ, அவனும் அம்முத்தங்களை பெரியதாக எண்ணுவதில்லை. வெறும் அன்பின் வெளிப்பாடான முத்தம், நிச்சயம் காமத்தை கொடுக்காது. ஆனால், இந்த அன்பின் அடிப்படை தான் என்ன என்பதே அவனது பெரும் குழப்பம்.
ஏதேதோ சிந்தனைகள் தாக்க, பிய்த்த இட்லியையே பலமுறை பிய்த்து ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்டிருந்த தஷ்வந்தைக் கண்டு, புன்சிரிப்பு வீசியவள், “தஷ்வா” என்றழைத்தாள் கிசுகிசுப்பாக.
அதில் தான் சிந்தனை வலை அறுந்து அவன் நிமிர, அவளோ, “அப்போ அப்போ இந்த மாதிரி கோபப்பட்டு, குட்டி குட்டி சண்டை போடு அமுல் பேபி. செம்ம கிக்கா இருக்கு. ஐ ஜஸ்ட் லவ் திஸ்.” என்று காற்றிலேயே முத்தத்தை பறக்க விட்டாள்.
‘வெறும் என் கோபத்தை மட்டும் தான் லவ் பண்றியா? என்னை இல்லையா?’ என்ற கேள்வி அவனை துளைத்ததை வெளிக்காட்ட இயலாமல் முறைத்து வைத்தான் தஷ்வந்த்.
காயம் ஆறும்!
மேகா
ஹாய் டியர் ப்ரெண்ட்ஸ்… உங்க ரேட்டிங்ஸ், கமெண்ட்ஸ், ஸ்டிக்கர்ஸ் எல்லாம் பார்க்க ரொம்ப ஹேப்பியா இருக்கு. தேங்க் யூ சோ மச் ஆல் பார் யுவர் லவ் அண்ட் சப்போர்ட். சில நேரம் என்னால யாருக்கும் ரிப்லை பண்ண முடியல டியர்ஸ். சோ டோன்ட் மிட்டேக் மீ. என் பையன் என்னை வச்சு செய்றான்.🤭
ஸ்டோரில நிறைய குழப்பம், சிலருக்கு கடுப்பு கூட வரலாம். பட் ஸ்டோரி முழுசா முடியும் போது, கண்டிப்பா எல்லா கேள்விக்கும் பதில் இருக்கும். அண்ட் ஐ ஹோப் எல்லாருக்கும் கண்டிப்பா பிடிக்கும்.❤️
ஸ்டோரி படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க டியர் ப்ரெண்ட்ஸ். நான் ப்ரீ டைம்ல ரிப்லை பண்றேன். ஒன்ஸ் அகைன் தேங்க் யூ சோ மச்.🤩🤩