ஷைலேந்தரி சொன்ன செய்தியில் விஸ்வயுகா அதிர்ந்து போனாள்.
“என்னடி சொல்ற?”
“ஆமா விஸ்வூ, நாளைக்கு நம்ம மேட்ரிமோனி மூலமா நடக்க இருக்குற மேரேஜ்ல பொண்ணு சூசைட் பண்ணிக்கிச்சு!” என்றதும் பலத்த அதிர்வு அவளுக்கு.
“அட்ரஸ் எங்க?” யுக்தா கூர்மையுடன் தகவல் வாங்கி விட்டு கிளம்ப எத்தனிக்க, விஸ்வயுகா “நானும் வரேன்” என்றாள்.
ஷைலேந்தரியோ “எதுக்குடி நீ போற? மூச்சுப் பிடிக்க மயங்கி விழுகுவா” என்று கடிய, யுக்தா சில நொடிகள் யோசனைக்குப் பின் “கம்” என்றபடி வேகநடையுடன் வெளியில் சென்றான்.
பெசன்ட் நகர் பீச் ஹவுஸ்!
உற்றார் உறவினர்கள் எல்லாம் பிரம்மாண்ட வீட்டின் முன்பு கூடி இருக்க, இருட்டத் தொடங்கிய நேரம் அது.
25 வயது இளம் பெண் ரேஷ்மா. மறுநாள் திருமணத்திற்காக முழங்கை வரை அழகாக மெஹந்தி வைத்திருந்தாள்.
ஆனால், விருப்பமில்லாத திருமணம் என்று கைப்பட எழுதி, விஷம் குடித்து வாயில் நுரை தள்ள இறந்திருந்தாள்.
விழிகள் நிலைகுத்தி விட்டத்தைப் பார்த்தபடி இருக்க, லேசாய் புன்னகை செய்வது போல இருந்தது அவள் இதழ்கள்.
‘சிரிச்ச மாறியே செத்துருக்கா போல!’ என நொந்து போன விஸ்வயுகாவிற்கு மூச்சு திணறியது பயத்தில்.
யுக்தா அவளது இறந்த உடலை அங்கும் இங்கும் திருப்பிப் பார்த்து விட்டு, பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த க்ளவ்ஸை அணிந்து கொண்டான்.
அப்பெண்ணின் கன்னத்தை திருப்பிப் பார்த்தவன், அவள் கையைப் பிடித்து சோதித்தான். மேலும் சில சோதனைக்குப் பிறகு விஷ பாட்டிலையும் எடுத்து சிந்தனையுடன் பார்த்தவன், எவிடன்ஸை கலெக்ட் செய்யச் சொல்லி உத்தரவிட்டு விட்டு, மூச்சு விடவே சிரமப்பட்ட விஸ்வயுகாவை இழுத்துக் கொண்டு காருக்கே சென்றான்.
காரில் அவளை அமர வைத்து ஏசியை போட்டு விட்டவன், விரல்களால் அவள் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையைத் துடைக்க முயல, அவனது ஸ்பரிஸம் உணர்ந்ததும் வெடுக்கென தட்டி விட்டவள், “டோன்ட் டச் மீ” என்றாள் சினம் வழிய.
ஆனாலும் இன்னும் மூச்சு சீராகவில்லை என்பதை உணர்ந்தவன், டேஷ்போர்டில் வைத்திருந்த கோக் டின்னை எடுத்துக் கொடுத்தான்.
அவளோ வாங்க மறுத்து ஜன்னல் புறம் திரும்பிக் கொள்ள, தோள்களைக் குலுக்கிக்கொண்டு அவனே குடிக்கத் தொடங்கினான்.
அதில் அவளது முகம் அஷ்டகோணலானது. அவ்வளவு தான்!
அத்தனை நேரமும் இருந்த இளகிய தன்மை அவனிடம் முற்றிலும் காணாமல் போனது.
மற்றொரு கையால் அவள் கன்னத்தைப் பிடித்து திருப்பியவனின் விழிகளில் நெருப்பு ஜுவாலை.
“ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு. இல்ல மறக்காத மாதிரி சொல்லணுமா?” என கர்ஜிக்கும் நேரம், அவன் கையில் இருந்த கோக்கும் அவள் உடையில் கொட்டியது.
அதையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாதவன், இன்னும் இறுக்கமாக அவளது கன்னத்தை இறுக்கி “அப்படி என்னடி உனக்கு சுளிப்பா இருக்கு…” என்று பற்களை கடிக்க, அவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை.
“வி… விடு…” என முயன்ற மட்டும் அவனிடம் இருந்து நகர முயல, இன்னும் கொஞ்சம் கோக் அவள் மடி மீது கொட்டியது தான் மிச்சம்.
“யு யுக்தா ஜஸ்ட் லீவ் மீ” மொத்த பலத்தையும் உபயோகித்து அவனைத் தள்ளி விட்டவள், அவன் கன்னத்தில் பளாரென அறைந்தாள்.
“என்னடா நானும் பாத்துட்டே இருக்கேன் ஓவரா போற. உன் பலத்தை வச்சு என்னை அடக்கிடலாம்னு கனவு கூட காணாத யுக்தா. உனக்கும் இதான் லாஸ்ட் வார்னிங் இன்னொரு தடவை என்கிட்ட இப்படி ஹார்ஷா நடந்துக்கிட்டா உன்னை ஆளை வச்சு நானே கொன்னுடுவேன்…” என்று கண் சிவக்க மிரட்டினாள்.
ஆனாலும் இன்னும் கோபம் அடங்காதவனாய் அவளை வெறித்துக்கொண்டிருந்ததில்,
“இப்ப என்னடா உனக்கு… நான் ஒன்னும் உன்னைப் பார்த்து முகத்தை சுளிக்கல போதுமா. பைத்தியக்காரனாடா நீ. மெண்டல் ஹாஸ்பிடல்ல இருந்து தப்பிச்சு வந்த உனக்கு யாருடா சிபிஐ வேலையைக் குடுத்தது. டெட் பாடியை தொட்டுட்டு கையைக் கூட கழுவாம அப்படியே வந்து கோக்கை குடிக்கிற. எனக்கு குமட்டிக்கிட்டு வருது. நீ செய்ற வேலைக்குலாம் அப்படியே மூஞ்ச சிரிச்ச மாதிரியா வச்சுக்க முடியும். நீ எப்படி நடந்துக்குறியோ அதுக்கான ரியாக்ஷன்ஸ் தான் உனக்குக் கிடைக்கும்…” என மூச்சு விடாமல் பேசி முடித்தவள், உடையில் கொட்டி இருந்த கோக்கை எரிச்சலுடன் பார்த்தாள்.
பேபி பிங்க் குர்தி அது. அவளுக்குப் பிடித்த குர்தியும் கூட. அவளது ஆசை அஸ்வினி சித்தியின் தேர்வு. ‘இப்படி நாசம் பண்ணிட்டான் பரதேசி’ என்று இன்னும் கோபம் அடங்காமல் திட்டிக்கொண்டிருக்க, எதிரில் இருந்தவனோ சட்டென கோபம் வடிந்து கொஞ்சத் தொடங்கி விட்டான்.
“நான் தான் கிளவுஸ் போட்டு தான டெட் பாடியை தொட்டேன். அப்பறம் என்ன ஏஞ்சல்? உன் முகத்துல சின்னதா மாற்றம் தெரிஞ்சாலும் ஐ டோன்ட் நோ வை ரொம்ப கோபம் வருது” எனக் கண்ணை மூடி மூச்சை இழுத்து விட்டவன், “ஓகே இனிமே உங்கிட்ட நான் ஹார்ஷா நடந்துக்க மாட்டேன் ஓகே வா ஏஞ்சல்… ம்ம்” எனக் குனிந்து வார்த்தைகளில் தேன் தடவிக் கேட்க, அவள் முறைத்ததோடு நிறுத்திக்கொண்டாள்.
ஏசியைக் குறைத்து விட்டு, சில நிமிடங்கள் போனில் எதையோ தேடியவன், பின் காரை கிளப்பி நேராக மேக்ஸ் கடையின் முன் நிறுத்தினான்.
“வேற ட்ரெஸ் வாங்கி, இங்கயே போட்டுக்கோ ஏஞ்சல்” என்றதில் திரும்பி அவனை நோக்கி காரப்பார்வை வீசியவள் மெளனமாக அமர்ந்திருக்க,
“ப்ச், என் மேல தான் மிஸ்டேக் ஏஞ்சல். நான் சில விஷயத்துல பைத்தியம் தான். இப்போ ரீசன்ட் அடிக்டட் உங்கிட்ட மட்டும்…” என ரசனையுடன் கூற, ஏதாவது கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும் போல தோன்றினாலும் அதற்கும் ஆட்டம் ஆடித்தீர்ப்பான் என்ற எரிச்சலில் “உன் ஷர்ட்டைக் கழட்டிக் குடு” என்றாள்.
அவனோ புருவம் சுருக்கி “வாட்?” எனக் கேட்க, “உன் ஷர்ட்டை குடுன்னு சொன்னேன்…” என்றதும், அவனும் கழற்றிக் கொடுத்தான்.
உள்ளே ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்திருந்தவனின், இரு தடித்த புஜங்களும் கூறியது, தவறாமல் ஜிம்மிற்கு விசிட் அடித்து விடுவானென்று.
அவனது சட்டையை விஸ்வயுகா போட்டுக்கொண்டபிறகே அவளது மெல்லிய குர்தி ஈரம் பட்டு உடலோடு ஒட்டிக்கொண்டது புரிந்து தலையில் தட்டிக்கொண்டான்.
காரை விட்டு இறங்கி மறுபக்கம் ஜாக்கிங்கிலேயே வந்தவன், அவளுக்கு கதவைத் திறந்து விட அவள் அவனை நிமிர்ந்தும் பாராமல் இறங்கி கடையினுள் சென்றாள். அவனும் அவள் பின்னேயே வர, “நீ எதுக்கு வர்ற?” எனக் கேட்டாள்.
“தட்ஸ் மை டியூட்டி ஏஞ்சல்!” என அவளது கன்னம் தட்டி கையைப் பற்றி உள்ளே இழுத்துச் செல்ல, அவள் நாசுக்காக கையை உருவிக் கொண்டாள்.
விஸ்வயுகா ஆடைத் தேர்வில் மூழ்கி இருக்க, யுக்தா சாகித்யனின் கண்ணில் பட்டது அந்த சிவப்பு நிற டிசைனர் குர்தி.
“ஏஞ்சல்… இதைப் பாரேன். உனக்குன்னே டிசைன் பண்ணுன மாதிரி இல்ல” என்று குர்தியை நூலளவு இடைவெளியில் அவள் மீது வைத்துக் காட்ட, “இல்ல” என்றாள் அசட்டையாக.
“ஹ்ம்ம் சோ நான் செலக்ட் பண்றதை நீ போட்டுக்க மாட்ட அப்படி தான?” என ஒற்றைப் புருவம் உயர்த்தி வினவியதில், “கண்டிப்பா” என்றாள்.
“போட வச்சுட்டா?” அவன் கேட்ட தினுசில்,
” ட்ரை பண்ணிக்கோ!” என சவாலாய் பார்த்தவள் வேறொரு உடையை தேர்வு செய்து விட்டு ட்ரையல் ரூமிற்குச் சென்றாள்.
வெளியில் வரும் போது யுக்தா சாகித்யன் அலைபேசியில் புதைந்திருக்க, கையில் ஜூஸ் பாட்டில் இருந்தது.
அந்நேரம் அவளுக்கு அருகில் நின்றிருந்த இளம்பெண்கள் இருவர், யுக்தாவைப் பார்த்து தங்களுக்குள் பேசி கிசுகிசுத்துக்கொள்ள, விஸ்வயுகா காதைத் தீட்டினாள்.
“ஆளு ஹாட்டா இருக்கான்டி” என ஒரு பெண்ணும், “பார்க்க தான் அப்படி இருக்கான். பட் பழகுனா மிஸ்டர் கூல்டி. அவனோட கேர்ள் ப்ரெண்ட் ட்ரையல் ரூம்க்கு போய் இவ்ளோ நேரம் ஆச்சு, எவ்ளோ சமத்தா வாசல்லயே உக்காந்துருக்கான் பாரு. லவர் மெடீரியல்டி…” என்றாள் மற்றொருவள்.
அதனைக் கேட்ட விஸ்வயுகாவிற்கு சிறிது நேரத்திற்கு முன் அவன் கண்கள் வீசிய தீக்கங்கு நினைவிலாடியது.
‘இந்த டாக் மிஸ்டர் கூலா… தூரத்துல இருந்து பாக்காதீங்கடி பக்கத்துல இருந்து பாருங்க. பைத்தியம்டி இவன்’ என்று தனக்கு தானே நொந்து கொண்டவள், அவனை ஆராய்ந்தபடியே அருகில் வந்தாள்.
அவளை மேலிருந்து கீழ் வரை அளந்த யுக்தா, “கிளம்பலாமா?” எனக் கேட்க,
தலையை ஆட்டியவள், “அங்க ரெண்டு பொண்ணுங்க உன்னை தான் சைட் அடிச்சுட்டு இருக்காங்க. நீ ஏன் அவங்கள்ல ஒரு பொண்ணை இல்லைன்னா ரெண்டு பேரையும் செலக்ட் பண்ணி டேட் பண்ணக் கூடாது” எனத் திட்டம் கூற, அவனும் அப்பெண்களை ஒரு பார்வை பார்த்து விட்டு, “மே பி உன்மேல இருக்குற எக்ஸைட்மெண்ட் குறைஞ்சுட்டா அவங்க மேல பீலிங்ஸ் வரும்னு நினைக்கிறேன்… வில் ஸீ!” என அசட்டையுடன் கூறி விட்டு வெளியில் சென்றான்.
‘திமிரெடுத்தவன்…’ என அடிக்குரலில் சீறி விட்டு அவளும் காருக்குச் சென்றாள்.
அவளை நேராக அவளது அலுவலகத்தின் வாயிலிலேயே விட்டான்.
அவள் இறங்கும் முன்னே அவளது கைப்பற்றி நிறுத்தியவன், “என்கூட ஸ்பெண்ட் பண்ண வேண்டிய டைம் முடியிறதுக்கு இன்னும் 5 மினிட்ஸ் தான் இருக்கு ஏஞ்சல்!” எனக் குறுகுறுப்புடன் கூறியவனிடம் “சரி அதுக்கு என்ன இப்ப?” என்றாள்.
“அபாலஜிஸ் ஏஞ்சல்…” என்றவனது கூற்றும் புரியும் முன்னே, பாதி குடிக்காமல் வைத்திருந்த ஜூஸ் பாட்டிலை திறந்து அவள் மீது ஊற்றியே விட்டான்.
“டேய்ய்ய்ய்…” என அவள் கத்தியது எதுவும் அவன் காதில் விழவில்லை.
“என்னடா பண்ணி தொலைச்சுருக்க. எதுக்குடா இப்படி ஜூஸை கொட்டுன” என்று அவள் காட்டு கத்தாக கத்த,
“நான் குடுத்த ட்ரெஸ்ஸை நீ போடணுமே. சோ ஐ ஹேவ் நோ சாய்ஸ் ஏஞ்சல்” என கார் கதவில் மறைத்து வைத்திருந்த அவன் தேர்ந்தெடுத்த சிவப்பு நிற குர்தியை எடுத்துக் கொடுத்தவன், “கிரவுண்ட் ப்ளோர்ல ரெஸ்ட் ரூம் இருக்கா ஏஞ்சல். இதே ஈரத்தோட ஆபிஸ்க்குள்ள போனா உன் மரியாதை என்ன ஆகுறது சொல்லு” என்று வருத்தம் போல கூறிட, அவளுக்கோ கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. அதனைக் காட்டும் வழி தான் தெரியவில்லை.
“டிஸ்கஸ்டிங்” எனப் பொரிந்தவள், அந்த உடையை எரிச்சலுடன் வாங்கி விட்டு கீழ்த்தளத்தில் இருந்த ஒப்பனை அறைக்குச் சென்று மாற்றிக் கொண்டாள்.
அதனை அவனுக்குக் காட்டப் பிடிக்காமல் உள்ளிருந்தே ஏழாவது தளத்தில் அமைந்திருந்த அவளது அறைக்குச் சென்று விட, அவனும் நின்று அவளைப் பார்க்க ஆர்வம் காட்டாமல் காரைக் கிளப்பினான்.
இதழ்களில் ஏளனப் புன்னகை இப்போதும்…
அதன்பிறகு அவன் சென்றது அலுவலகத்திற்குத் தான்.
இரவு முழுதும் நடந்து முடிந்த கொலையைப் பற்றிய விசாரணையில் தான் மூழ்கி இருந்தான்.
இங்கோ வில்வயுகா உச்சகட்ட கடுப்பில் இருந்தாள்.
“அவன் என்னைக்கு என்கிட்ட செமத்தியா வாங்கி கட்டிக்கப் போறான்னு எனக்குத் தெரியல” என்று மற்ற மூவரிடமும் கொந்தளிக்க, நந்தேஷிற்கு தலையை வலித்தது.
“இது என்ன நம்ம மேட்ரிமோனிக்கு வந்த சோதனை? இந்த ப்ராஜக்ட்டோட ஈவண்ட் மேனேஜ்மென்ட்டையும் நான் தான பாத்துட்டு இருக்கேன்…” என்று குழம்பிட,
மைத்ரேயன், “யாரோ நம்மளை டார்கெட் பண்ணி பண்ற மாதிரி பீல் ஆகுது நந்து” என்றதில்,
ஷைலேந்தரி, “ஆனா நம்மளை யாரு மைதா டார்கட் பண்ணப் போறா. இப்படி கொலைப் பழி போடுற அளவு என்ன அவசியம் வந்துச்சு. எனக்கு ஒண்ணுமே புரியலையே… அண்ட் ஒன் மோர் திங், இந்த விஷயம் வெளில தெரிஞ்சா, நமக்கு பெரிய அடி. ஒரு ப்ரொபைல் கூட வராது” என்றாள் சோகமாக.
“விஷயம் வெளில வந்தா தான? வராது” என்று விஸ்வயுகா திட்டவட்டமாகக் கூற, “அதெப்படி வராம இருக்கும். அந்த சிபியை உருப்படாதவனே சொல்லிடுவானே” என மைத்ரேயன் சிடுசிடுத்தான்.
“அந்த உருப்படாதவனை வச்சு தான் நம்ம காரியம் சாதிக்கணும். இப்போதைக்கு இந்தக் கொலைக்கான காரணம் என்னன்னு அவன் மூலமா தான் தெரிஞ்சுக்க முடியும் மைதா” என்றவளின் இதழ்களில் அதே ஏளனம்.
“அவன் நினைச்சுட்டு இருக்கான், என்னை மடக்கி கார்னர் பண்ணிடலாம்னு, ஆனா கடைசியா முட்டாள் ஆகப்போறது அவன் தான்…” என்றவளின் முகத்தில் குரூரம் தோன்ற, பழைய கொலை வழக்கின் தகவல்களை கையில் வைத்தபடி அதே குரூரத்தை யுக்தாவும் கக்கினான்.
“முட்டாள் ஆகப்போறது நான் இல்ல யுகா. நீ தான்… அதுவரை உன்கிட்ட நிறைய ப்ளர்ட் பண்ணனும் போல இருக்கே. ரொம்ப போர் டாஸ்க்கா இருக்கும்னு நினைச்சேன். பட் ஓகே… சம்வாட் பெட்டர்” என்றவனின் மூச்சில் கூட வஞ்சம் விருட்சமாகியது.
மோகம் வலுக்கும்
மேகா
என்னதான் நடக்குது