Loading

பத்மாவதி அவரின் வாழ்த்தை தெரிவித்து விட்டு கீழிறங்கும் வேளையில் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு நிமலை நோக்கி நெருங்கிய சித்துவை அவர் பார்த்து விட்டார். நெருங்கியது நிமலை நோக்கி இருந்தாலும் அவளின் குறி நேதிராவை நோக்கி தான் இருந்தது. அவளை பற்றி அனைத்தும் பத்மாவதிக்கு தெரிந்திருந்ததால் அவளின் எண்ணம் புரிந்திட உடனே சுதாரித்தவர் நிமல் நேத்ராவின் முன் சென்று நின்றிட, நேத்ராவை குறிவைத்த தோட்டா பத்மாவதி அம்மாவின் நெஞ்சில் பாய்ந்தது. சற்றும் எதிர்பாரா வகையில் அச்செயல் நிகழ்ந்திட எல்லோரும் சுதாரிக்கவே சில நிமிடம் ஆனது. 

அடி பட்டு சரிந்தவரை நிமல் தன் மடியில் கிடத்திட, நேத்ரா கதறி துடித்துக் கொண்டிருந்தாள். நேத்ராவிற்க்கு மட்டுமல்ல நிமல் சரணுக்கும் அவர் மிகவும் நெருங்கியவர் தான், அதிலும் நேத்ராவின் நட்பு கிடைக்க காரணமே அவர் தானே. கண்ணீருடன் எல்லோரும் அவரை சூழ்ந்திருக்க நொடியில் சுதாரித்த சரண் எழுந்து வேகமாக ஓடினான். 

நிமலின் கைகளில் நேத்ராவை ஒப்படைத்த பத்மாவதி, தன் இரத்தம் நிறைந்த கைகளில் ஒருமுறை இருவரின் கண்ணங்களையும் வருடியவர் சிரித்த முகமாகவே தன் உயிரை விட்டிருந்தார். தான் பெற்று, வளர்க்காத பிள்ளைகளுக்காக அவர் தன் உயிரையே கொடுத்து, எதற்கும் கலங்காத பெண்ணாய் உயிர் விடும் போதும் சிரித்த முகமாகவே சென்று விட்டார். உண்மையில் அவர் தான் இப்போது நேத்ராவின் அன்னையாய் தெரிந்தார்.

அவரின் முகத்தையே பார்த்து அழுது அழுது அப்படியே மயங்கி சரிந்தாள் நேத்ரா. நிமலுக்கும் துக்கம் தாளவில்லை. அவன் கையிலிருந்த இரத்தத்தை பார்க்க பார்க்க கோபம் அதிரிகரித்து கண்கள் சிவந்து கொலைவெறியில் அமர்ந்திருந்தான். ஆனந்தமாய் இருந்த இடம் இப்போது இரத்தத்துடன் துக்கமாய் காட்சி அளித்தது. 

நேரம் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன. ஆசிரமத்தின் குழந்தைகள் அனைத்தும் ஒருபுறம் அழுது கொண்டிருக்க, நேத்ராவை என்ன சொல்லியும் யாராலும் சமாதானப் படுத்த முடியவில்லை. யாருமில்லா சூழ்நிலையில் இருந்த போது ரகுவின் குடும்பத்திடம் இருந்து காப்பாற்றி, அடைக்கலம் குடுத்து காத்து, பின் மீண்டும் துன்புற்ற போது உதவி செய்து என எவ்வளவோ செய்தவர், இன்று மீண்டும் தனக்காக அவர் தன் உயிரையே குடுத்திருப்பது அவளை கவலையின் உச்சத்திற்கே செல்ல வைத்தது. எல்லோரும் அங்கிருக்க, அப்போது தான் நினைவு வந்தவனாக நிமல், சரண் மட்டும் இல்லாதிருப்பதை அறிந்தான். 

உடனே அவனை அழைக்க அவன் சொன்ன இடத்திற்கு உடனே கிளம்பிச் சென்றான் நிமல். 

 

சரண் எங்கே????? இப்போது நிமல் எங்கு செல்கிறான்????? அது மட்டுமில்லாமல் ரகு ஏன் சித்துவிடம் நிமலை விட்டு நேத்ராவை கொலை செய்ய சொல்ல வேண்டும்????……. 

எல்லோரும் பத்மாவதி அம்மாவையே பார்த்துக் கொண்டிருக்க, ஏற்கனவே சித்து வந்ததை கவனித்திருந்த சரண் நிலையை அறிந்தவன், வேகமாக அவளை நோக்கி ஓடினான். இருந்தும் சரண் வாசலை அடைவதற்குள் சித்து காரில் ஏறி சென்று விட்டாள். அவளை பின் தொடர்ந்து சென்றவன் அவள் செல்லும் இடத்தை அறிந்து கொண்டான். அதே நேரம் நிமலும் ஃபோன் செய்ய அவனையும் அவ்விடம் கிளம்பி வரச் சொல்லியவன் மீண்டும் அவளை தொடர்ந்தான்.

எல்லோரும் ஒவ்வொரு நிலையில் இருக்க, அனைத்திற்கும் காரணமான ரகுவோ, தன் எண்ணம் அனைத்தும் வெற்றி பெறுவதை எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு எப்படியும் சித்து காரியத்தை முடித்திருப்பாள் என்ற நம்பிக்கை. 

ரகுவிற்கு நிமலனை கொன்றாவது நேத்ராவை அடைவது தான் திட்டமே. பணத்தின் மீதான ஆசை அவனை பலவாறு யோசிக்க வைத்தது. அதன் பலன்….. தான் செய்வது மட்டுமே சரி என்று நினைத்தவன் சித்துவை பகடை காயாய் பயன்படுத்தி நிமலனை கொல்ல நினைத்தான். சித்துவிடம் அவளின் பழியுணர்வை தூண்டி விட்டவன், உன்னை திருமணம் செய்யாமல்.. நேத்ராவை காதலித்து உன் கண் முன்னே திருமணமும் செய்து, உன்னை அடித்து அவமான படுத்திய நிமலனை நீ சும்மா விடக்கூடாது. உனக்கு கிடைக்காத ஒருத்தன் வேறொருத்திக்கு சொந்தம் ஆக விடக் கூடாது என பலவாறு அவளை மூளை சலவை செய்தான். அவனின் திட்டப் படியே சித்துவும் நடந்து கொள்ள நிமலனை கொல்ல முடிவெடுத்தாள். ஆனால் ரகுவிற்கு சித்து வைத்த பெரிய டுவிஸ்ட், மேடையில் நிமல் நேத்ராவை ஜோடியாய் பார்த்தவள் பொறாமையிலும், நிமல் தனக்கு கிடைக்காமல் போன காரணம் நேத்ரா தான் என்ற கோபத்திலும் அவளை குறி வைத்தாள். ஆனால் அவளே எதிர்பார்க்காத ஒன்று பத்மாவதி அம்மா வந்து விழுந்தது தான். நிமிடத்தில் ஏதேதோ நடந்து விட, சித்து எல்லோரின் பதட்டத்தையும் பயன்படுத்தி வெளியேறினாள். எல்லாவற்றிற்கும் காரண கர்த்தாவாகிய ரகுவிற்கு அவன் செய்த செயலின் பலன் அவனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. பணத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று நினைத்தது அவன் தவறா????? இல்லை பணத்தின் மதிப்பை தவறாய் புரிய வைத்த பெற்றோரின் தவறா?????

எப்போதும் நம் தேவைக்காக மட்டும் தான் பணம் இருக்க வேண்டுமே தவிர, பணம் மட்டுமே தேவைகளாக மாறி விடக் கூடாது.

பணம் இன்று வரும் நாளை போகும். ஆனால் அன்பான உள்ளங்களை இழந்தால் மீண்டும் பெற முடியாது. இழப்பு இழப்பு தான். 

இதை கண்ணதாசன் தன் பாடலில் அழகாய் கூறியிருப்பார்

 

காசு என்ற சொல்லின் பொருள் குற்றம்

என்பது

காசு வர ஓடி விடும் சுற்றம் என்பது

நாணயம் என்றால் அதன் பேர் நேர்மை

என்பது

நல்லவர்க்கு காசு பணம் தேவையற்றது

பகவானின் மணியோசை கேட்கின்றது

பணம் என்னும் பேராசை மறைகின்றது….

எந்த நிலை வந்தால் என்ன

நல்ல வழி நான் செல்வது

இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்

பணம் பணம் பணம்…..

எனவே தேவைக்கு பணத்தையும், வாழ்க்கைக்கு அன்பையும் சேமித்துக் கொள்ளலாம். மீறி தேவைக்கு அன்பையும் வாழ்க்கைக்கு பணத்தையும் சேர்த்தால், மிஞ்சுவது தனிமை மட்டுமாக தான் இருக்கும்.

இங்கு சித்து சென்று கொண்டிருந்தது அவர்களின் பண்ணை வீட்டிற்க்கு தான். சித்துவிற்க்கு நிமல் மேல் ஆசை ஏற்பட்டதற்கு காரணம் அவனின் அழகும் அவனின் வசதியும் தான். முதலில் அவன் கிடைக்கவில்லை என்று கோபப்பட்டவள் ரகுவுடன் சேர்ந்து தவறு செய்தாலும் சரணின் மிரட்டலில் பயந்து அந்த இரண்டு வருடங்கள் அமைதியாக தான் இருந்தாள். ஆனால் மீண்டும் அவள் கண்முன்னே நிமல் நேத்ரா திருமணம் நடந்தது அவளின் ஆற்றாமையை உணர்த்த நொந்து போனவள், மீண்டும் ரகுவுடன் கூட்டுச் சேர்ந்தாள். 

கூடா நட்பு இதோ அவளை கொலை செய்யவும் வைத்து விட்டது. ரகுவின் பேச்சினை கேட்டதன் பலன் இப்போது அவளினால் ஒரு உயிர் பிரிந்து விட இதோ பயந்து ஓடிக் கொண்டிருக்கிறாள்.

கூடா நட்பு கேடு விளைவிக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்….

 

அவள் வீட்டை அடைந்து விட, நிமலனுக்காக காத்திருந்த சரண் நிமல் வந்ததும் அவனுடன் உள்ளே நுழைந்தான். இருவரும் கண்டது………….

??????????????????????????????

 

 

 

தொடரும்……prabhaas💝💝💝

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்