571 views

ரகுவரன் 17

“கண்டிப்பா இருப்பிங்க ரகு. ஆமா இப்ப உங்க பொண்டாட்டி எங்க இருக்காங்கன்னு தெரியுமா.”

“அதான் மேடம் தெரியல. அவளை நான் தேடாத இடமில்லை. அவள நினைச்சு இதயம் முரளியா என் மனசுக்குள்ள தினம் ஒரு பாட்டு பாடிட்டு இருக்கேன்.” நெஞ்சில் கை வைத்து தன்னைத்தானே ஆறுதல் படுத்திக் கொண்டான்.

“இந்த சிட்டுவேஷனுக்கு உங்களுக்கு ஏதாச்சும் பாட்டு பாடணும்னு தோணுதா ரகு.”

கண்ணில் சோகம் வழிந்தோடி காதல் தோல்வியில் தத்தளித்து மரண தருவாயில் இருக்கும் மன நோயாளி போல் பாவமாக தலையசைத்தவன்,

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள்
நீதான் என்னானதோ ஏதானதோ சொல்…..
காதல் ரோஜாவே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே தென்றல்

என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபக
சின்ன பூக்கள்
பாக்கையில்

வெள்ளி ஓடை பேசினால் சொன்ன
வாத்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சோகையில்
மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை
பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில் கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே…”.  சுவற்றில் சாய்ந்தவன் தலையை வானம் பார்க்க வைத்துக் கொண்டு பாடிக்கொண்டிருந்தான்.

அவன் தோரணையை பார்த்துக் கொண்டிருந்த மகிழினிக்கே பெரும் சந்தேகம் வந்துவிட்டது எது உண்மை என்று. அவன் காட்டும் நடிப்பிற்கு யாராக இருந்தாலும் நம்பி விடுவார்கள் அவள் தான் வேண்டுமென்றே ஓடி வந்து விட்டதாக.

“உங்கள பார்க்க எனக்கு ரொம்ப மன வருத்தமா இருக்கு ரகு. உங்க மனைவி கண்டிப்பா தனியா இருக்க வாய்ப்பே இல்லை. கூட பழகுன யார்கிட்டயாவது விசாரிச்சு பாருங்க.”

“நானும் விசாரிக்காத ஆள் இல்லை மேடம். என்னை விட்டுட்டு எவன் கூடயோ ஓடிப்போய்ட்டா. அவன் பேரு கூட ஏதோ ரேகன்னு கேள்விப்பட்டேன்.” என்றதும் அவன் நெற்றியை வாட்டர்பாட்டில் பதம் பார்த்தது.

இவ்வளவு நேரம் திட்ட மட்டுமே செய்த மகிழினி கடைசி வாசகத்தில் கொதித்து எழுந்து விட்டாள். என்றும் சுதாரிப்போடு இருப்பவன் இன்று வசமாக சிக்கிக் கொள்ள, “ஐயோ மேடம் என்னை யாரோ தாக்கிட்டாங்க…” என்று கதறி மகிழினியை மீண்டும் கட்டிப்பிடித்தான்.

“ஃபிராடு விடுடா என்னை”
….

“டேய் திரும்பவும் எதையாவது தூக்கி போட்டு மண்டைய உடைச்சிடுவேன்.”

….

“பொறுக்கி விடுடா.” பலம் மொத்தத்தையும் ஒன்று திரட்டி தள்ளிவிட்டாள் அவனை.

லேசாக தள்ளி விட்டதற்கு ஏதோ பாறை மேல் இருந்து விழுவது போல் பின்னால் சென்று விழுந்தவன் காந்தம் போல் மீண்டும் மனைவியை ஒட்டிக்கொண்டான். பார்த்துக் கொண்டிருந்த ரேகா புன்னகையோடு, “ரகு இவங்களை கட்டிப்பிடிக்கிறதை பார்த்தா உங்க பொண்டாட்டி திரும்பவும் கோவிச்சுக்கிட்டு போயிடப் போறாங்க.” என்றிட, கோபத்தோடு அவர்களை முறைத்தான் ரகுவரன்.

ஒன்றும் புரியாமல் ரேகா முழி பிதுங்கி நிற்க, “என் பொண்டாட்டிய பத்தி தப்பா பேசாதீங்க மேடம். அவ ஒன்னும் சந்தேகப்பிராணி கிடையாது. என்னை எந்த நிலைமையிலும் சந்தேகப்படாத தர்ம பத்தினி அவ.” என்றான்.

‘அது சரி’ என்பது போல் ரேகா அவனை தலையசைத்து பார்க்க, “அவ மட்டும் திரும்ப என் முன்னாடி வந்து நிக்கட்டும் திரும்பவும் எங்கயும் ஓட முடியாதபடி என் மனசுக்குள்ள பூட்டி வச்சிடுறேன்.” என்றவன் வருத்தமான முகத்தோடு மகிழினியை கட்டிப்பிடித்தான்.

“பொறுக்கி பயலே எத்தனை தடவை சொல்றது என்னை தொடாதன்னு.” வெடுக்கென்று அவனை விட்டு தள்ளி நிற்க,

“கோச்சுக்காதீங்க மேடம் பார்க்க என் பொண்டாட்டி மாதிரி அழகா இருக்கீங்களேன்னு கட்டிபிடிக்கிறேன், வேற ஒன்னும் இல்ல. அவ கூட உங்கள மாதிரி தான் நான் கிட்ட வந்தாலே பொறுக்கி ஃபிராடு’னு சொல்லி செல்லமா கொஞ்சுவா.” சிறிதும் வெட்கம் பார்க்காமல் அவள் அடிப்பதையும் தாண்டி பசை போல் கட்டிக்கொண்டான்.

“என்ன ரகு இது… பொசுக்கு பொசுக்குன்னு கட்டிப்பிடிக்கிறீங்க. இவங்களையே இப்படி கட்டிப்பிடிக்கிறீங்கன்னா உங்க பொண்டாட்டிய எந்த அளவுக்கு கட்டிப்பிடிப்பீங்க.”

“மேடம் இதுவே இந்த இடத்துல என் பொண்டாட்டியா இருந்தா என் பெர்பார்மன்ஸ் சும்மா தூள் கிளப்பி இருந்திருக்கும்.” என்றவன் மனைவியை விட்டு தள்ளி நின்று சட்டை கைகாலரை மடித்து விட்டான்.

அவன் அசைவுகளை உணர்ந்து கொண்ட மகிழினி முறைத்துக் கொண்டு அங்கிருந்த நகர பார்க்க, ரேகாவை பார்த்து கண்ணடித்தவன் பின்னால் சென்று கட்டி அணைத்தான். அவள் அடித்துக் கொண்டே விடுபட போராட, “இந்த மாதிரி தான் மேடம் இறுக்கமா கட்டிப்புடிச்சு நச்சு நச்சுன்னு இச்சு கொடுத்துட்டே இருப்பேன்.”  தொடர்ந்து கன்னத்தில் இதழ் பதித்துக் கொண்டே இருந்தான்.

மகிழினியின் கோபம் பெருமளவு அதிகமானது . ஆத்திரம் கடல் அளவு அவளுக்குள் உருவாக, “டேய் கடைசியா சொல்றேன் தள்ளிப்போ.” என்று எச்சரிக்கை மணி அடித்தாள்.

அவளை சிறிதும் மதிக்காதவன் ரேகாவை பார்த்து, “மேடம் நீங்க இருக்கிறதால என் பொண்டாட்டி மாதிரி இருக்க இந்த மேடம் கூச்சப்படுறாங்க கொஞ்சம் அப்படி திரும்பி நிற்கிறீங்களா.” என்று முன் வரிசை பற்களை படம் போட்டு காட்ட, தலையை திரும்பிக் கொண்டார் ரேகா.

பிரிவிற்கும் சேர்த்து இந்த நொடியை உபயோகிக்க நினைத்தவன் காதலோடு அவளை முற்றுகையிட, அருகில் இருந்த பீங்கான் அழகு பொருளால் அவன் மண்டையை பதம் பார்த்தாள் மகிழினி. நல்லவேளையாக ரத்த காயம் எதுவும் ஏற்படாமல் போனது. சத்தம் கேட்டு திரும்பிய ரேகா,

“மகி என்ன காரியம் பண்ணிட்ட. ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிப்போச்சுன்னா யார் என்ன பண்றது. படிச்ச பொண்ணு மாதிரியா பண்ற.” திட்டினார்.

“இவனுக்கெல்லாம் எதுவும் ஆகாது மேடம். என் உயிரை மொத்தமா வாங்கிட்டு தான் இவன் போவான்.”

“வாய மூடு மகி. உன்கிட்ட இந்த மாதிரி ஒரு பேச்சையும் செயலையும் நான் எதிர்பார்க்கல. கோபத்துல தப்பு செஞ்ச எத்தனையோ குற்றவாளிகளை நம்ம பார்த்து இருக்கோம். அடிக்கிற அளவுக்கு ரகு என்ன பண்ணிட்டாரு இப்போ.”

“என்ன மேடம் பண்ணல… என் குழந்தைகளை கூட பார்க்காம இங்க வந்து இருக்கிறதுக்கு காரணமே இவன்தான். என்னை பண்ணாத டார்ச்சர் இல்ல. ஒவ்வொரு நாளும் இவன் கிட்ட மாட்டிகிட்டு சித்திரவதை அனுபவிச்சி இருக்கேன்.” என்று லேசாக கண் கலங்கினாள்.

அவள் கண்ணீரில் கோபத்தை கைவிட்ட ரேகா யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் அமைதிக்காக்க, “பொண்டாட்டி” அழைத்துக் கொண்டு அவள் அருகில் சென்றான்.

“தயவு செஞ்சு என்கிட்ட வராத ரகு.” இரு அடி விலகி நின்றாள்.

“இவ்ளோ வெறுப்பை கொட்டுற அளவுக்கு நான் எதுவும் பண்ணல.”

“மனசாட்சின்னு ஒன்னு இருந்தா இந்த வார்த்தைய சொல்லுவியா ரகு.”

“உன்கிட்ட கேட்க எனக்கு உரிமை இல்லையா”

“உரிமை’ன்ற பேர்ல மெண்டல் டார்ச்சர் பண்ண.”

“என்னடி இப்படி எல்லாம் பேசுற?”

“இதைவிட மோசமா பேசினா கூட என் மன காயத்துக்கு ஆறுதல் கிடைக்காது. இங்க இருந்து தயவு செஞ்சு கிளம்பு. பசங்க நம்ம ரெண்டு பேரும் இல்லன்னா ரொம்ப ஏங்கிப் போவாங்க. கொஞ்ச நாள்ல நான் திரும்பி வரேன் அதுவரைக்கும் என்னை தொந்தரவு பண்ணாத.”

“என்னை பாரு”

….

“என்னை பாருன்னு சொன்னேன்.” சொல்லியும் பார்க்காமல் இருக்கும் மனைவியை வலுக்கட்டாயமாக திருப்பியவன்,

“நீ இல்லாம நானும் ரொம்ப ஏங்கிப் போய் இருக்கேன்.” விழிகள் சொல்லியது பேசிய வார்த்தை எந்த அளவிற்கு உண்மை என்று.

அவ்வழியில் தன் மீதான காதலை முழுவதுமாக உணர்ந்த மகிழினி அவனையே அசையாமல் பார்த்துக் கொண்டிருக்க, “காலைல இருந்து ராத்திரி வரைக்கும் உன் கூடவே இருந்து பழகிட்டேன் பொண்டாட்டி. ஒரு செகண்ட் கூட நீ பண்ணதை சரின்னு ஏத்துக்க முடியல. அப்படி பெருசா தப்பு பண்ணிட்டதா எனக்கு ஒன்னும் தோணல. அப்படியே நான் பண்ணது தப்பா இருந்தாலும் நீ இந்த முடிவ எடுத்திருக்க கூடாது. எவ்ளோ சண்டை வந்தாலும் அதை சேர்ந்து கடந்து வரணும்னு நீ தானடி சொன்ன. இப்ப நீயே மாத்தி பண்றது நல்லா இருக்கா?” பேசிக் கொண்டிருந்த ரகுவரனின் விழியில் இருந்து ஒரு சொட்டு நீர் வெளியேறியது.

இவருவரையும் கவனித்துக் கொண்டிருந்த ரேகா நாகரிகம் கருதி அவர் அறைக்கு சென்று விட, சிந்திய கண்ணீர் ஓடும் இடத்திற்கு மகிழியின் பார்வை சென்றது. மனைவியின் விழிகள் கீழ் இறங்குவதை கண்டவன் தாடையில் கை வைத்து தன்னை பார்க்குமாறு செய்து,

“எனக்கு நீ வேணும். அப்படியெல்லாம் உன்னை விட்டுட்டு போக முடியாது. கோபம் இருந்தா எவ்ளோ வேணா தண்டனை கொடு. உன் மனச காயப்படுத்துனதுக்காக மனசார எல்லாத்தையும் ஏத்துக்கிறேன். ஆனா இங்க இருந்து போகும்போது ரெண்டு பேரும் சேர்ந்து தான் வீட்டுக்கு போகணும்.” கணவனின் பேச்சும் பார்வையும் அவளை கட்டி போட,

“இந்த மாதிரி உன் கண்ணு என்ன பார்க்காம நேத்தெல்லாம் எவ்ளோ துடிச்சு போனேன்னு தெரியுமாடி? இந்த தண்டனையே போதும் பொண்டாட்டி. இதுக்கு மேல நீ விலகி இருக்கிறதை பார்க்க எனக்கு தெம்பு இல்ல.” இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அவனது மனைவி தடை சொல்லாமல் இந்த முறை அமைதியாக இருக்க, அணைப்பு அதிகமாகிக் கொண்டே சென்றது. கைக்கு வேலை கொடுத்தவன் உதட்டிற்கும் வேலை கொடுத்தான் கன்னத்தில் முத்தமிட்டு. முத்த சுவை முன்னேறு என்று கட்டளையிட, நெற்றியில் ஆரம்பித்து ஒவ்வொரு இடமாக அவளை வசப்படுத்தினான்.

கழுத்தில் மீசை உரசியதும் உணர்வு பெற்ற மகிழினி அவன் கன்னத்தைப் பிடித்து தள்ள, “ப்ளீஸ் டி பொண்டாட்டி.” வழக்கமாக மோகத்திற்கு அவன் சென்றதும் தடுக்கும் மனைவியிடம் சொல்லும் வாசகத்தை இன்றும் சொல்ல, அடங்கிப் போனது தடுத்த கைகள்.

மனைவியின் சம்மதத்தை உணர்ந்தவன் உரிமையோடு இதழை குறி வைத்தான். மகிழினி சுதாரிப்பதற்குள் உதட்டை அவளின் இதழுக்குள் நுழைத்தவன் மிக மென்மையாக கையாளாமல் அசுர வேகத்தை கையில் எடுத்தான்.

கோபமும் காதலும் அவளின் இதழ்களை சேர்ந்து நோகடிக்க, வலி சுர் என்று மண்டையை குடைந்தது. அதில் சுயம் பெற்றவள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து சோபாவில் தள்ளி விட்டாள்.

இதழ் சுவையில் தன்னை மூழ்க வைத்துக் கொண்டிருந்தவன் பலம் இழந்து இருக்கையில் விழ, “பொறுக்கி போடா இங்க இருந்து.” என்று விட்டு அறைக்குள் மறைந்து கொண்டாள்.

“இவ்ளோ பெர்பாமென்ஸ் பண்ணியும் வீணாகிடுச்சு.” என்ற புலம்பலோடு அவள் அறையை பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
29
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்