Loading

தன்னை நோக்கி அழுத்த நடையுடன் வந்த ஆடவனைக் கண்டு திருதிருவென விழித்த உத்ஷவி, “இரு… நானே தரேன்.” என்றாள் தடுத்து.

திருடியப் பொருட்களை, இரு பாக்கெட்டுகளிலிருந்தும் எடுத்து நீட்ட, அதனை வெடுக்கெனப் பிடுங்கிய ஸ்வரூப், “இன்னொரு தடவை எதையாவது திருடுன, அறைஞ்சுடுவேன்.” என்று கண்டித்தான்.

அதற்கு அவர்களுக்கு பின்னால் நின்றிருந்த விஹானா, “அய்யயோ… அவள் சாப்பிடாம வேணும்ன்னா இருப்பா, ஆனா திருடாம இருக்க முடியாது. அவள் டிசைன் அப்படி” என்றவள் ‘கிளுக்’ என சிரிக்க,

“என்னமோ கவர்மெண்ட் போஸ்ட் மாதிரி பெருமையா சொல்ற.” என முறைத்தான் ஜோஷித்.

உத்ஷவியை அழுத்தத்துடன் பார்த்த ஸ்வரூப், “சரி… வா. நீ கேட்ட கூலிங் கிளாஸை தரேன்.” என்று விட்டு முன்னே நடக்க, “என்ன இவனே தரேன்னு சொல்றான்.” என யோசித்த உத்ஷவி, சஜித் எதையோ கூறி, அக்ஷிதாவைத் தனியே அழைத்துச் செல்வதைக் கண்டாள்.

அவளுக்கு ஏதோ தவறாகப் பட, இங்கு ஜோஷித்தும் விஹானாவைத் தனியே இழுத்துச் சென்றதில், ‘என்னமோ பிளான் பண்றானுங்க’ என உணர்ந்து கொண்டு, யோசனையுடன் ஸ்வரூப்பின் பின்னே சென்றாள்.

தேஜஸ்வின் தான், ஸ்வரூப்பின் உத்தரவுக்காக ஹாலிலேயே காத்திருக்கத் தொடங்கினான்.

சஜித்தின் பின்னால் சென்ற அக்ஷிதா, “என்ன காட்ஸில்லா, எதுக்கு என்னை கூப்பிட்ட?”எனக் கேட்டிட,

நக்கல் நகைப் பூத்தவன், “உனக்கு ஒண்ணு காட்டணும்ன்னு தான் வர சொன்னேன்” என்றபடி, சுவற்றோடு மறைந்திருந்த ஒரு கதவை அவனது போன் மூலமே திறக்க வைத்தான்.

‘இது என்ன தானா திறக்குது’ என வியப்புடன் பார்த்த அக்ஷிதா, ஒரு லாக்கர் முழுக்க அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தப் பணத்தைக் கண்டு மலைத்து நின்றாள்.

இங்கு, விஹானாவிற்கும் அதே நிலை தான். ‘லாக்கரைத் தேடுறதுக்கு பதிலா, உன் போனை ஆட்டைய போட்டு இருந்தா, இந்நேரம் நாங்க திருடிட்டு கிளம்பி இருக்கலாம் போலயே’ எனத் தனக்குள் எண்ணிக்கொண்டவளின் எண்ணத்தை உணர்ந்து கொண்ட ஜோஷித்,

“ரொம்ப யோசிக்காத. உன்னால என் போனை அன்லாக் கூட பண்ண முடியாது.” என்று அவளது பரந்த எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போட்டவன்,

“இந்த பணத்துக்காக தான இப்படி திருடுறீங்க. இதுல இருக்குற மொத்தத்தையும் நான் தரேன்.” என்று கையைக் கட்டிக்கொண்டு கூறினான்.

‘எது? மொத்தத்தையுமா?’ என வாயைப் பிளந்தவளுக்கு, ப்ராஜக்ட் செய்யாமலேயே லைஃப்டைம் செட்டில்மென்ட் கிடைத்தது போல குதூகலிப்பு.

உத்ஷவியின் கண்ணை உறுத்தும், கூலிங் கிளாஸை அணிந்தபடி, அவள் முன் ஒரு காலை சுவற்றில் மடக்கி, ஸ்டைலாக நின்ற ஸ்வரூப் அவ்தேஷ், காட்டிய மொத்தப் பணத்தையும் கண்டு உத்ஷவிக்குப் பேச்சே எழவில்லை.

அவளை ஆராயும் பார்வை பார்த்தவன், “உனக்கு வேலை வைக்காம, இதை எல்லாத்தையும் உனக்கே தரேன் திருடி. ஆனா,” என நிறுத்தி,

“நீ எதை திருட வந்த, உன்னை திருட அனுப்புனது யாருன்னு எனக்கு தெரியணும். சொன்ன சொல் மாறமாட்டேன். உண்மையை சொன்னா, உன்னை பணத்தோட இந்த ரூமை விட்டு அனுப்புவேன். இல்லன்னா உன் பொணத்தை, இதே லாக்கர்க்குள்ள வச்சு ஃபிரீஸ் பண்ணிடுவேன். சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.” என்று விட்டு கண்ணை மூடி சிந்தித்து,

“வாட் தட் இரிடேட்டட் நேம்?” என தாடையை தடவியவன்,

“எஸ். உத்ஷவி! ரைட்? ம்ம். சரி சொல்லு!” என்றான் பெருமூச்சு விட்டு.

“இந்த மிரட்டுற வேலை எல்லாம் என்கிட்டே வேணாம். உன் பணமும் வேணாம். ஒழுங்கு மரியாதையா எங்களை விட்டுடு.” என்றவளுக்கு, அவனது மிரட்டல் சற்று நடுக்கத்தைக் கொடுத்தது.

“ரியலி. என் பணம் உனக்கு வேணாமா? சரி வேற என்ன வேணும்? ஜூவெல்ஸ்?” என விழியுயர்த்திக் கேட்டு, மற்றொரு லாக்கரைத் திறக்க, அங்கோ தங்கமும் வைரமும் நிறைந்துக் கண்ணைக் கூச வைத்தது.

பணத்தை வியந்துப் பார்த்த அக்ஷிதா, “சே! நான் கூட உன்னை கஞ்சப் பிசுனாரின்னு ரொம்ப கலாய்ச்சுட்டேன் காட்ஸில்லா. உனக்கு எவ்ளோ இளகுன மனசு” என அவனை ஐஸ் வைத்தவளுக்கு, பேசாமல் உண்மையைச் சொல்லி, கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டுக் கிளம்பி விடலாமா என்று தான் தோன்றியது.

பணத்தைப் பார்த்ததும், கை வேறு நமநமத்தது.

விஹானாவிற்கும் அதே எண்ணம் தான். ஆனால், அவர்களை நம்பி உண்மையைக் கூறுவதில் தான் சிக்கல். உண்மைத் தெரிந்தப் பின்பு, ஏமாற்றி விட்டால்?

உத்ஷவி, ஸ்வரூப்பை முறைத்துப் பார்த்தாள்.

“உன் இன்டென்ஷன் என்னன்னு எனக்கு புரியுது ஸ்வரூப். உன்ன நம்புற அளவு நான் முட்டாள் இல்ல.” என்றவளைக் கண்டு இளநகை புரிந்தவள், “நான் நினச்ச அளவு நீ புத்திசாலியும் இல்ல.” என மட்டம் தட்டினான்.

“ஆனா, பாரு… உன் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் இன்டெலிஜெண்ட். நீங்க யாரு, எதை திருட வந்தீங்க. யாரு உங்களை திருட அனுப்புனான்னு முழு தகவலும் உளறி கொட்டிட்டாங்க.” என்றான் சன்ன சிரிப்புடன்.

அதில் திகைத்த உத்ஷவி, “இல்ல நீ பொய் சொல்ற. அவங்க சொல்லிருக்க மாட்டாங்க.” என்றாள் உறுதியாக.

“சொல்லிட்டாங்களே திருடி” என அவளைப் பாவம் போல பார்த்தவனின் பார்வையில் எரிச்சல் மிகுந்தது அவளுக்கு.

அவளது எரிச்சலில் குளிர் காய்ந்தவனை முறைத்தவாரே, “சொல்லிருக்க முடியாது. ஏன்னா, அவங்களுக்கே எதை திருடப் போறோம்ன்னு தெரியாது. எனக்கே மேலோட்டமா தான் தெரியும்.” என்று வெப்ப மூச்சை வெளியிட்டாள்.

“இது நல்ல சமாளிஃபிகேஷனா இருக்கே. உன் பாஸ் உனக்கு நல்லா ட்ரைனிங் குடுத்து இருக்கான் ஷவி.” என வஞ்சப் புகழ்ச்சி செய்தான்.

விஹானா, தடுமாறியது ஒரு கணம் தான். மறுநொடியே, “என்னடா, என்னை போட்டு வாங்குறியா?” என்றாள் முறைப்பாக.

“வாட்எவர். உனக்கு தேவை பணம் தான். அதை நான் தரேன். உண்மையை சொல்லு. சிம்பில்.” எனத் தோளைக்குலுக்கினான் ஜோஷித்.

அவனை அமைதியாகப் பார்த்தவள், “ஒருவேளை ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி, இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்துருந்தா, நான் கண்டிப்பா உண்மையை சொல்லிருப்பேன். ஆனா, இப்ப முடியாது.” என உறுதியாகக் கூறினாள்.

ஜோஷித்தின் புருவம் உயர, “ஏன் இந்த மூணு மாசம் என்ன ஸ்பெஷல்?” எனக் கேட்டான் கேள்வியாக.

“அப்போ நான் தனியா இருந்தேன். இப்ப, என் கூட ரெண்டு ப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்களுக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன்.” என்றவளின் கூற்றில், அவனது முகத்தில் சிறு வியப்பு!

“ஆர் யூ மேட்? இவ்ளோ பணம் உனக்கு வேணாமா?” எனப் பரிதாபம் பொங்க அவன் கேட்க, அவளோ அந்தப் பணத்தை பாவமாகப் பார்த்து விட்டு, “வேணாம்.” என்றாள் முகத்தை சுருக்கி.

மற்ற இருவருமே உண்மையைக் கூறாததை காதில் மாட்டி இருந்த ப்ளூடூத் வழியே தெரிந்து கொண்ட சஜித், அத்தனைப் பணத்தையும் ஆவலாகப் பார்த்த அக்ஷிதாவைக் கண்டு இறுகினான்.

“நீ பார்த்தது போதும், உண்மையை சொல்லிட்டு கிளம்பு!” என்றவனுக்கு ஏனோ ஒரு வித கடுப்பு எழுந்தது.

“எதே? உண்மையா? அதெல்லாம் சொல்ல முடியாது. ஷவி என்னை கொன்னே போட்டுடுவா. ஏற்கனவே, உன் பர்ஸை அடிச்சதுக்கு என்னை திட்டுனா தெரியுமா.” எனத் தலையை ஆட்டிக் கூறியவள்,

“அது மட்டும் இல்ல, இந்த ப்ராஜக்ட் முடிஞ்சுட்டா, மூணு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் போயிடுவோம். அப்பறம், திரும்ப நான் தனியா தான் ஹாஸ்டல்ல இருக்கணும். அது ரொம்ப கடுப்பு. அதனால, நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன்.” என்றாள் பிடிவாதமாக.

அத்தனை நேரமும் இருந்த எரிச்சலும் கடுப்பும் மெல்ல மறைய, பெண்ணவளை நிதானமாக ஏறிட்டது சஜித்தின் விழிகள்.

ஆக, எந்தப்பக்கம் இருந்தும் உண்மை வரவில்லை என்றுணர்ந்ததும் ஆத்திரம் பெருகியது ஸ்வரூப்பிற்கு.

உத்ஷவியைக் கண்டு உஷ்ணப்பார்வை வீசியவன், “ஓகே ஃபைன். நீ சொல்ல வேணாம். உன் பாஸ் சொல்லுவான்.” என இளக்கார நகையுடன் தேஜாவை போனில் அழைக்க, அவன் அடுத்த ஐந்து நிமிடத்தில், ஒருவனை ரத்தக்களரியுடன் ஸ்வரூப்பின் அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவனைக் கண்டதும், உத்ஷவி திகைத்துப் போய், “பாஸ்” என முணுமுணுக்க, “உன் பாஸே தான். காட்ஸ் கிரேஸ். நேத்து உன்னை இவன் கம்பெனில பார்த்தது நல்லதா போச்சு. இல்லன்னா, நீயும் உன் பாஸும் என்ன சுத்தல்ல விட்டு இருப்பீங்க இல்ல. வெல். இப்பவாவது உண்மையை சொல்றியா… இல்ல, உன் பாஸ்க்கு விழுந்த அடியெல்லாம் உன் ப்ரெண்ட்ஸ்க்கும் சேர்ந்து விழுகணுமா?” என்றதும் விலுக்கென நிமிர்ந்தாள்.

அடி வாங்கி பழக்கப்பட்ட மேனி தான். ஆனாலும், தன்னை நம்பி வந்த இரு பெண்கள் தன்னால் காயப்படுவதை அவள் விரும்பவில்லை.
அவளையும் மதித்து, அவளுடன் தோழமை பாராட்டியவர்கள் ஆகிற்றே.

யோசனையில் மூழ்கியவளைக் கண்டு பொறுமை இழந்தவன், ப்ளூடூத்திலேயே, “அந்த பொண்ணுங்களை அங்கேயே சாவடிங்கடா.” என்று கோபத்துடன் கூற,

அதில் சட்டென, “வேணாம் டைனோசர். உனக்கு உண்மை தான வேணும். நான் சொல்றேன். உன் தம்பிங்க ரெண்டு பேரும் தடிமாடுங்க மாதிரி இருக்கானுங்க. அடிச்சா, நீங்க தான் கொலை கேஸ்ல உள்ள போவீங்க.” எனக் கடுப்படித்தாள்.

பின், அவளே “இவர் பேர் ராகேஷ். என் பாஸ்…” என இரத்தம் வழிய அரை மயக்கத்தில் முட்டி இட்டு இருந்தவனைக் கை காட்டிக் கூறியவள்,
“ஏதாவது டாக்குமெண்ட் இல்லன்னா யார்க்கிட்ட இருந்தாவது ஏதாவது முக்கியமான பொருளைத் திருடணும்ன்னா அதை நான் தான் திருடி தருவேன்.” என்றாள்.

இடுங்கியப் புருவத்துடன், “டாக்குமெண்ட்ன்னா என்ன மாதிரி டாக்குமெண்ட்?” என ஸ்வரூப் கேட்க,

“எதுவா இருந்தாலும், சொத்து பத்தின டாக்குமெண்ட், கம்பெனி சீக்ரட் பத்தின ஃபார்முலா, இன்னும் நிறைய.” என்றவளைத் தீயாய் முறைத்தவன், “இப்போ என்கிட்ட என்ன டாக்குமெண்ட்டை திருட வந்த?” என்றான் உறுமலுடன்.

அவளோ பதில் சொல்லாமல் விழிக்க, அவனுக்கோ கோபத்தை சிறிதும் அடக்க இயலவில்லை.

அதில், உத்ஷவியின் கன்னத்தில் பளாரென அறைந்தான். அவள் தான், அவன் அடித்தது கூட உறைக்காமல், கன்னத்தைத் தேய்க்கக் கூட செய்யாமல், அவனை முறைத்தாள். கன்னமென்னவோ வீங்கி சிவந்து விட்டது. ஆனால், அவள் முகத்தில் தான் வலியின் ரேகைகள் சிறிதளவும் இல்லை.

அது அவனை என்னவோ செய்திருக்க வேண்டும்! முன்னந்தலை கேசத்தை அழுத்தத்துடன் கோதிக் கொண்டவன், கை முஷ்டியை சுவற்றில் குத்திக் கொண்டான். ஏன் இத்தனை கோபம் என அவனுக்கும் புரியவில்லை. பெண்ணவளை அறைந்ததற்காகவா? அல்லது, உண்மையைக் கூற மறுப்பதற்காகவா?

அவனது வெறிப்பிடித்தத் தோற்றம் உத்ஷவிக்கு லேசாய் கிலி பரப்ப, “ஏதோ, சித்தூர் கன்ஸ்ட்ரக்ஷன் சம்பந்தமான டாக்குமெண்ட்ஸ் இங்க இருக்குன்னு பாஸ் சொன்னாரு. இங்க நீங்க வச்சுருக்குற ஒரே டாக்குமெண்ட் அது தான்னு சொன்னதுனால, நான் அதை பத்தி தெளிவா கேட்கல.” என முணுமுணுப்புடன் கூறினாள்.

“சித்தூர் கன்ஸ்ட்ரக்ஷன் டாக்குமெண்ட்டா? அதை வச்சு என்ன செய்வீங்க?” எனக் கூர்மையுடன் வினவ,

“அதுலாம் எனக்கு தெரியாது. எடுத்துக்கொடுக்குறது மட்டும் தான் என் வேலை. அதை வச்சு என்ன செஞ்சா எனக்கு என்ன?” என்றாள் அசட்டையாக.

அந்நேரம் மற்ற நால்வருமே அங்கு வந்து விட, ஸ்வரூப் ராகேஷ் என்பவனை ஓங்கி மிதித்தான்.

அரை மயக்கத்தில் இருந்தவன், சரட்டென விழித்துக் கொள்ள, “என்னடா செய்வீங்க டாக்குமெண்ட்ஸை வச்சு?” என்றான் கர்ஜனையுடன்.

இன்று காலையிலேயே, உத்ஷவியைப் பற்றி விசாரித்து, அவள் யாரைத் தொடர்பு கொண்டாள் என்பதை தெரிந்து, அவனைப் பிடித்து விட்டான். ஆனால், அவனோ கல்லை விழுங்கியவன் போன்று, ஒரு வார்த்தை கூட பேசாமல் ஸ்வரூப்பின் ரத்த நாளங்களை கொதிக்கச் செய்தான்.

ஏதோ பெரிய சூழ்ச்சி உள்ளது எனப் புரிந்தவனுக்கு, திருட வந்தவர்களே உண்மையை கூற இயலும் என்றுணர்ந்து உண்மையையும் வாங்கினான்.

மயக்கம் கலைந்த ராகேஷை, ஜோஷித்தும் தன் பங்கிற்கு சப்பென அறைந்து, “எதுக்காகடா திருட சொன்ன?” எனக் கேட்டான் ஆத்திரத்துடன்.

“திருட சொன்னேனா? நானா? நீங்க எல்லாம் யாரு?” எனக் கேட்ட ராகேஷை மூன்று பெண்களும் அதிர்ந்து பார்த்தனர்.

“யோவ் பாஸ். என்ன மாட்டிக்கிட்டதும் ஆக்டிங்க போடுறியா?” என உத்ஷவி முறைக்க,

அவளைக் கூர்மையாகப் பார்த்தவன், “நீ யாரு” எனக் கேட்டதில், மூன்று பெண்களுக்கும் சர்வமும் அடங்கிப் போனது.

ஸ்வரூப் உத்ஷவியைக் கடுமையுடன் ஏறிட, “டேய் டைனோசர், இவன் பொய் சொல்றான்டா. நேத்து தான் இவனை பார்த்துட்டு வந்தேன்.” எனப் பதறிட,

அக்ஷிதாவோ, “ஒருவேளை நீங்க அடிச்ச அடில, இவனுக்கு எல்லாம் மறந்துடுச்சோ.” என்றாள் விழிகளை உருட்டி.

விஹானா, “பாஸ் என்னை கூடவா தெரியல. நான் தான் உங்க லேபர் விஹானா. நீங்க என் பாஸ் நேசமணி… ச்சி ராகேஷ்.” என வடிவேலு பாணியில் கூறிட,

உத்ஷவி, “இப்ப ஞாபகம் வருதா பாஸ்?” என்றாள் அவனை உத்துப் பார்த்து.

அவனோ முகத்தை சுளித்து, “நீங்க யாருன்னே தெரியலன்னு சொல்றேன். என்னை எதுக்கு பாஸ்ன்னு கூப்புடுறீங்க. என்னை விடுங்க முதல்ல.” என்று அங்கிருந்து ஓட முயல, சஜித் அவனைப் பிடித்து அடக்கினான்.

“நீ நேத்து இவளைப் பார்த்து பேசுனன்னு எனக்குத் தெரியும் ராகேஷ். தேவையில்லாம நடிக்காத…” என்று ஸ்வரூப் அதட்டும் போதே, அவனிடம் ஒரு வித்தியாசம் தெரிந்தது.

நாக்கை வெளியில் நீட்டி, வேக வேகமாய் மூச்சு வாங்கியவன், திடீரென இரு கைகளையும் கால்களையும் நாய் போல வைத்து, நான்கு கால் பாய்ச்சலில் அங்கும் இங்கும் ஓடினான்.

அதனைக் கண்ட அத்தனை பேருக்கும் விசித்திரமாக இருந்தது.

உத்ஷவியோ, “பாஸ்… எங்களை ஞாபகம் இல்லன்னு பொய் சொல்லி எங்களுக்கு தர்ம அடி வாங்கி தந்தாலும் பரவாயில்ல. இப்படி நாய் மாதிரி நடிச்சு, காமெடி பண்ணாதீங்க பாஸ். பார்க்கவே சகிக்கல.” என்னும் போதே, அக்ஷிதா, “நாய் மாதிரி நன்றியுள்ளதா இருக்கணும்ன்னு நமக்கு டெமோ காட்டுறாரோ?” என்றாள் மிரண்டு.

“ஏய் வாயை மூடுங்கடி.” என ஜோஷித் அவர்களை அடக்கி விட்டு, “இவன் ஏன் இவ்ளோ வியர்டா பிஹேவ் பண்றான்” என்றான் குழம்பி.

அதே குழப்பம் மற்றவர்களிடமும் தெரிந்திட, ஸ்வரூப் ராகேஷின் அருகில் செல்லும் போதே, அவன் மீண்டும் நான்கு கால் பாய்ச்சலில் சஜித்தின் அருகில் சென்று அவன் கையில் நகங்களால் பிராண்டி வைத்தான்.

“ஆத்தாடி…” என அக்ஷிதா அங்கிருந்து கட்டிலில் ஏறி நின்று கொள்ள, விஹானாவோ ஜோஷித்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

சஜித் வலியில் முகத்தைச் சுருக்கிட, இரு ஆடவர்களும் பதறினர்.

“சஜி!” என ஸ்வரூப்பும் ஜோஷித்தும் அவனருகில் வரப்போக, அந்நிலையிலும், “யாரும் என் பக்கத்துல வந்து பாசத்தைக் கொட்ட வேண்டிய அவசியம் இல்ல. இவ்ளோ நாளா எப்படி இருந்தீங்களோ அப்படியே இருங்க.” என்று கோபமும் வேதனையும் கலக்கக் கூற, இருவரும் உணர்வற்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

உத்ஷவியோ, “உங்கமேல பாசத்தை கொட்டிக்க வேணாம். எங்களை காப்பாத்துங்கடா. இந்த பரதேசி, ஏன் இப்ப நாய் மாதிரி நடிச்சுட்டு இருக்குன்னு தெரியல.” என ராகேஷ் அருகில் வந்ததில், துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள்.

அவனோ, மேலும் சில நொடிகள் அங்கும் இங்கும் தாவி தாவி, அனைத்தையும் கடிக்க முயல, அங்கிருந்த ‘ப்ளக் பாய்ண்ட்’ வயர்களை எல்லாம், இழுத்துப் பிராண்டி கடித்ததில், மின்சாரம் தாக்கப்பட்டு, அப்போதே உடல் துடித்து இறந்தே போனான்.

ஒரு கணம், அவ்வறையில் பலத்த மௌனம் நிலவியது. யாருமே இதனை எதிர்பார்க்கவில்லை என்பது, அனைவரின் அதிர்ந்த விழிகளிலும் புலப்பட, அவனது உயிரற்ற உடல், உத்ஷவியின் காலுக்கு அருகில் வந்து விழுந்தது.

அதில் தான், விரித்து வைத்த வாயையும் கண்ணையும் மூடியவள், “ஆ… நாய் பேயா மாறிடுச்சு” என அலறி, ஸ்வரூப்பின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டதில் தான், ஸ்வரூப்பிற்குமே சுயநினைவு வந்திட, சகோதரர்கள் மூவருமே திகிலுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

முதலும் முடிவும் நீ!
மேகா!

ஹாய் டியர்ஸ். அடுத்த பதிவு திங்கள் கிழமை தான். ஒரு குட்டி ட்ரிப் போறேன். வந்து கதையை கன்டினியூ பண்றேன் டியர்ஸ். அண்ட் இது முழுக்க முழுக்க எண்டெர்டைன்மென்டன் பர்போஸ்க்காக எழுதுற ஸ்டோரி. இதுல லாஜிக், ரியாலிட்டி எதுவும் எதிர்பாக்காதீங்க. ஸ்டார்டிங்க்ல அதுனால தான் ஃபாண்டசின்ற ஜார்னரை சொன்னேன். beyond the ரியாலிட்டி தான் கதை. அதோட, லவ், காமெடி, சஸ்பென்ஸ் த்ரில்லர்.
இவங்களோட சேர்ந்து, நம்மளும் உண்மையை தேடி அலையலாம்.😀

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
56
+1
2
+1
5

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  2 Comments

  1. Indhu Mathy

   பிளான் A ல அவ்தேஷ் பிரதர்ஸ் மொக்கை வாங்கிட்டாங்க….🤪🤪🤪

   பாஸ் அ கண்டுபிடிச்சும் யூஸ் இல்லாம போயிடுச்சு…😞 இவன் ஏன் இப்படி பண்ணான் கடைசில செத்தும் போயிட்டான்…😰 இதுக்கு பின்னாடி பெரிய சதி இருக்கு போல…😱😱😱😱😱😱

   இந்த சதி தெரியாம நம்ம க்யூட் திருடீஸ் வந்து இதுல சிக்கிட்டாங்க… 😳😳😳