Loading

சர்ப்ரைஸ் யூடி… 🤩 தெய்வங்களா நான் இந்த ஸ்டோரி தான் 18+ content ன்னு சொன்னேன். அந்த எபின்னு சொல்லல. அதுக்காக என்னை இப்படியா கலாய்ப்பீங்க 🙃🙃🙃 அடுத்த யூடி பிரைடே குள்ள ஃப்ரீ யா இருந்தா தரேன் drs.🤩🤩 Thank u sooooo much for ur likes, CMnts, stickers❤️ intha ud padichutu CMnt panunga drs.

அத்தியாயம் 10

கவினின் அழைப்பை துண்டித்து விட்டு, எதிரில் நின்ற மனையாளை முறைத்தவன், “ஒரு டேஸ்ட்க்கு கொஞ்சம் போட சொன்னா, என்னடி கரண்டி நிறைய அள்ளிட்டு வர்ற? வா…” என அவளை இழுத்துக்கொண்டு உள்ளே சென்று, சிறிதளவு மட்டும் வெல்லம் சேர்க்க,

அவளோ, “ஆமா, வெல்லம் சேர்த்தா சாம்பார் இனிப்பாகிடாது?” என கேட்டாள் அதி தீவிரமாய்.

“எந்த ஒரு ரெசிபியும் அறுசுவையும் கலந்தா தான் ருசி குடுக்கும். அதுக்காக கொஞ்சம் வெல்லம் சேர்த்தா டேஸ்ட் இன்னும் நல்லா இருக்கும்…” என செஃப் போல பேசியவன், “இப்படி தான் யூ டியூப் சேனல்ல சொன்னாங்க.” என்றான்.

அவள் தான், கலகலவென சிரித்து விட்டாள். “ஐயோ முடியல!” என வயிற்றைப்பிடித்து சிரித்தவளுடன், அவனும் இணைந்து நகைத்தான்.

அதன் பிறகு, இருவரும் சேர்ந்தே சாப்பிட, “வாவ்! நிஜமாவே செம்மயா இருக்கு. என் அம்மா செய்ற மாதிரியே. ஒருவேளை அவங்களும் இவ்ளோ நாள் யூ டியூப் பார்த்து செஞ்சு தான் எங்களை ஏமாத்தி இருப்பாங்களோ?” என சிந்திக்கும் பாவனையுடன் கேட்க,

அவனோ, “இருக்கும். எதுக்கும் அவங்க போன் ஹிஸ்டரியை செக் பண்ணிடு.” என்றான் நக்கலாக.

அதில் சிரிப்பு பீறிட, இருவரும் உண்டு முடித்திட, கடிகாரத்தை பார்த்துக்கொண்டவன், “எனக்கு லேட் ஆச்சு மதி. நான் கிளம்புறேன். ஈவினிங் மீட் பண்ணலாம். பை.” என்றவன், மறக்காமல் உறங்கிக்கொண்டிருந்த மகனுக்கு நெற்றியில் முத்தமிட்டே கிளம்பினான்.

அவன் கிளம்பும் வரையிலுமே, இருவருக்கும் இதழ்கள் விரிந்தே இருந்தது. ஆரவ் சென்ற பிறகே, சிறிது சிறிதாக மனம் நிகழ்வுக்கு வர,

‘நான் என்ன பண்ணிட்டு இருக்கேன். நேத்து குடிச்சதை பத்தி கேட்கணும், பேசாம இருக்கணும்ன்னு நினைச்சா…’ என தன்னையே திட்டிக்கொண்டவள், ‘நம்மளால மனசு விட்டு சிரிக்க கூட முடியுதா? அவரு இருக்கும் போது மட்டும் எப்படி கலவையான உணர்வெல்லாம் கலந்தே வருது. பட் நம்ம நேத்து நினைச்ச அளவு மோசம் இல்ல. சொன்னா புருஞ்சுக்குவாரு.’ என ஏதேதோ சிந்தனைகளை அவனை சுற்றியே சுழற்ற விட்டாள்.

காரில் சென்று கொண்டிருந்தவனுக்கும் அதே நிலை தான். இன்று, அவன் பல நாட்களாக உழைத்த ப்ராஜக்ட் சம்பந்தமான மீட்டிங். கிட்டத்தட்ட அவனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முக்கிய நாள்.

ஆனால், அதை கூட விட்டு விட்டு, எப்படி அவளுடன் இயல்பாக ஒன்ற முடிகிறது என்ற வியப்பு இப்போதல்ல, அவளை திருமணம் செய்ய கேட்ட நாளில் இருந்து அவனுள் உதித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு பதிலாக, அவன் இதழ்கள் சிறு நகை மட்டும் கொடுத்துக்கொள்ளும்.

அலுவலகம் சென்றதுமே, அவசரமாக மீட்டிங் ஹாலுக்கு சென்றவன், அங்கு முறைத்த நண்பர்களை கண்டுகொள்ளாமல், சிறப்பான முறையில் அதனை நடத்தி வெற்றியும் கண்டான்.

மீட்டிங் முடிந்ததுமே, கவின், “என்ன சார்… சாம்பார் எப்படி இருந்துச்சு?” என நக்கலாகக் கேட்க,

“ம்ம் செம்ம டேஸ்ட் – ஆ இருந்துச்சாம்.” என்றான் ரசனையுடன்.

தன்விக் தான், “முழு புருஷனாவே மாறிட்ட நம்ம நண்பனை பாருடா.” என வராத கண்ணீரை துடைத்தபடி கவினின் தோள் மீது கை வைக்க, ஹேமா, நமுட்டு சிரிப்புடன், “எல்லாம் சண்டே வரை தான். அப்பறம் இருக்கு அவனுக்கு…” என்றாள்.

அதில் ஆரவ் ஏனென்று பார்க்க, “லயா டெல்லில இருந்து வர்றா!” என்றதுமே அவனுக்கு புரிந்து விட்டது. கூடவே, “அந்த லூசு ஏண்டி இப்ப வருது.” என நெற்றியில் கை வைத்துக் கொண்டான். ஆனால், முகம் இன்னும் மலர்ந்தது.

லயா அவர்களின் கல்லூரித் தோழி. ஐவரும் சேர்ந்து செய்யாத சேட்டையே இல்லை எனலாம். அதிலும் லயாவிற்கு ஆரவ் என்றால், உயிர், காதல் எல்லாம். அவள் வெளிப்படையாக காதலிப்பதை உரைத்தும் விட்டால் தான், ஆனால், ஆரவ் தான் முற்றிலும் மறுத்து விட்டான்.

அவளோ, “அதெல்லாம் முடியாது. நீ என்னை தான் கல்யாணம் பண்ணிக்கணும்.” என்று பிடிவாதம் பிடித்தாலும், அவர்களுக்குள் இருந்த நட்பு என்னவோ அப்படியே தான் இருந்தது.

ஆரவின் முதல் திருமணம் அப்போது தான், “அடேய். என்னை ஏமாத்திட்டீல. உன்னை சும்மா விட மாட்டேன் டா. என் சாவுக்கு நீ தான் காரணம்.” என மேலும் கீழும் மூச்சு வாங்க, அவனோ அசட்டையாக, “தயவு செஞ்சு சாவு.” என்றான் கிண்டலாக.

கூடவே, “நாளைக்கு ரிசப்ஷன் இருக்கு. உனக்கு பிடிச்ச ஐட்டம்ஸ் எல்லாம் பஃபேல இருக்கு. நீ இன்னைக்கு செத்துட்டா, உன் பேரை சொல்லி அதெல்லாம் நாங்களே சாப்பிட்டுக்குறோம்.” என்றதில்,
அவளோ சிலிர்த்து எழுந்து விட்டாள்.

“என்னடா? என்னை விட்டுட்டு கல்யாணம் பண்ணதும் இல்லாம, என் பங்கு சாப்பாடையும் சாப்பிட பிளான் பண்றியா. கொன்றுவேன் உன்ன. நான் நாளைக்கு பஃபே முடிச்சுட்டு சாகுறதா வேணாமான்னு முடிவு எடுத்துக்குறேன்.” என்றாள் வேகமாக.

அதில் அங்கு சிரிப்பலை தான் பரவியது. ஆனாலும், அவனுக்கு திருமணம் என்றதில் அவளுக்கு உண்மையான வருத்தமே. என்ன தான் விளையாட்டுக்கு என்றாலும், அவனின் மீது கொள்ளை பிரியம் அவளுக்கு. ஆனால், அதே பிரியம், அதே உணர்வு ஆரவிற்கும் அவள் மீது வரவேண்டுமே.

இதில், அவனுக்கு விவாகரத்து ஆனதில் முதலில் மகிழ்ந்தது என்னவோ லயா தான். “ஐயோ! நான் என்ன பண்ணுவேன் ஏது பண்ணுவேன். கையும் ஓடல. காலும் ஓடல. வா டா இப்பவாச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்.” என விளையாட்டு போல் உண்மையாகவே கேட்டும் அவன் சிறு முறுவலுடன் அமைதி ஆகி விட்டான்.

அனைவரின் முன்பு அப்படி கேட்டாலும், தனியாக “என்னடா ஆச்சு? டைவர்ஸ் பண்ற அளவு. ரெண்டு பேரும் ஹேப்பியா தான இருந்தீங்க. அவள் ஏதாவது தப்பு பண்ணிட்டாளா? சின்ன பொண்ணு தான. கொஞ்சம் புரிய வைச்சு இருக்கலாம்ல.” என எதுவுமே தெரியாமலேயே, அவனிடம் அவளுக்காக பரிந்து பேசியவள்,

“கஷ்டமா இருக்கா? சீக்கிரம் சரி ஆகிடும்.” என அவளுக்கே வலிப்பது போல ஆறுதல் அளித்தாள்.

இது தான். அவளின் இந்த அன்பிற்காக தான். இன்னும் கூட, அவளுடனான நட்பு தெளிந்த நீரோடை போல நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால், அவளிடமும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை உதிர்த்தான் இல்லை. டெல்லியில் தான், தன்னுடைய பி.எச்.டியை படித்துக்கொண்டிருந்தாள். அவளால் நிறைய நாட்கள் விடுமுறை எடுத்து அவனுடன் இருக்கவும் இயலவில்லை. அவனும் அதற்கு அனுமதிக்கவில்லை.

அவனுடனே இருக்கிறேன் என்றவளை வம்படியாக விமானம் ஏற்றி விட்டான். செல்லும் போது கூட எச்சரித்தாள், “மகனே. அடுத்து கல்யாணம்ன்னு பண்ணா அதை என்னை தான் பண்ணனும்” என்று.       

“ச்சி. ப்பே. வந்துட்டா… பெரிய நீலாம்பரி மாதிரி…” என அதனை சிறிதும் கண்டுகொள்ளாமல் வழியனுப்பி வைத்தான்.

இப்போதோ டாக்டர் பட்டம் வாங்கி விட்டு, சென்னைக்கு திரும்புகிறாள் என்றதும், “அவகிட்ட மேரேஜ் ஆன விஷயத்தை சொல்லாதீங்க. இங்க வந்ததும் தெரிஞ்சுக்கட்டும்” என்றான்.

கவின் தான், பேந்த பேந்த விழிக்க, அவன் விழிப்பதிலேயே, “உளறிட்டியாக்கும்?” என முறைப்பாக பார்த்த ஆரவிடம், இளித்து வைத்து சமாளித்தான்.

இரவு வீட்டிற்கு திரும்பிய ஆரவ், வான்மதியிடம் விளையாடிக் கொண்டிருந்த இஷாந்தை தூக்கி முத்தமிட்டு விட்டு, “அழுகாம இருந்தானா மதி?” எனக் கேட்க, “ம்ம். இப்ப தான் பாலும் குடிச்சான்.” என்றாள்.

அதில் திருப்தியானவன், அறைக்குள் சென்று அடைந்து கொள்ள, ‘இவரு எப்ப வருவாரு இன்னும் சாப்பிடவும் இல்ல.’ என மணியைப் பார்க்க அது 9 எனக் காட்டியது. முடிந்த அளவு மதியம் முழுதும் இஷாந்தை உறங்க வைக்காமல் விளையாட்டு காட்டியதில், அவனும் உறங்கி விட்டான்.

சில நிமிடங்களில் அவனே வெளியில் வந்து, “இஷு தூங்கிட்டானா?” எனக் கேட்க, “ம்ம்” என்றாள் அவனைப் பாராமல்.

“இவ்ளோ சீக்கிரம் தூங்கிட்டான்.” என கேட்டபடி, அவனைத் தூக்கியவன், தொட்டிலில் படுக்க வைத்து விட்டு வர, அவளோ இன்னும் நிமிரவே இல்லை.

லேசாக தள்ளாடிய கால்களையும், இறுக்கமாக வெளிவந்த குரலையும் வைத்து குடித்திருக்கிறான் என உணர்ந்து கொண்டவள், அறைக்கு செல்வதற்காக எழ போக, “சாப்டியா?” எனக் கேள்வியெழுப்பினான்.

“இல்ல.” என தலையசைக்க, “வெய்ட்” என்றவன், சமையலறைக்கு சென்று மதியம் செய்த சாம்பாரை சூடு காட்டி, தோசையும் ஊற்றினான், கையில் பீருடன்.

அவ்வப்பொழுது அதனை உள்ளே தள்ளிக்கொண்டு, இருவருக்குமாக தோசையை சுட்டு டைனிங் டேபிளுக்கு எடுத்து வந்தவன், “வந்து சாப்பிடு மதி” என அழைக்க, அவளுக்கோ அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது.

“எனக்கு வேணாம். பசிக்கல.” என நகர சென்றவளை தடுத்து நிறுத்தியது, டைனிங் டேபிளை டம்மென அவன் தட்டிய சத்தம்.

“உன்னை வான்னு சொன்னேன். பசிக்குதா இல்லையான்னு கேட்கல.” என்று கர்ஜித்தவன் அழுத்தத்துடன் அவளை நோக்கி காலடி எடுத்து வைக்க, அவளுக்கு கையெல்லாம் நடுங்கி விட்டது.

“நானே வரேன்.” என அவளே நாற்காலியில் சென்று அமர்ந்து கொள்ள, அவள் முகத்தின் மீது விழிகளை படிய வைத்தபடி குடித்தவனை, மெல்ல நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் பார்வை வேறு சில்லிட வைக்க, சட்டென்று குனிந்து கொண்டாள்.

அவசரமாக இரண்டு தோசையை உள்ளே தள்ளி விட்டு, அப்படியே எழுந்தவள் “சாப்பிட்டேன்” என்று அறைக்கு செல்லப்பார்க்க, “நில்லு” என்றவனின் உறுமல் கேட்டதில் கண்ணே கலங்கி விட்டது அவளுக்கு.

“எ… என்ன…?” குரல் எழும்பாமல் கேட்டவளின் கையைப் பிடித்தவன், “சாப்ட்டு ஹேண்ட் வாஷ் பண்ண மாட்டியா?” என ஆழந்த குரலில் கேட்டு, அவனே வாஷ் பேசினில் கழுவி விட்டு, “போ” என்க, அவளுக்கு அவன் கை கழுவி விட்டது கூட உணரவில்லை. விட்டதும், உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டாள்.

‘கடவுளே! இவரை என்னால புருஞ்சுக்கவே முடியல. திடீர்னு நல்லா இருக்காரு. திடீர்னு பயமுறுத்துறாரு. இவரு தினமும் இப்படியே பண்ணிட்டு இருந்தா, இங்க இருந்து கிளம்பிட வேண்டியது தான்.’ என தனக்கு தானே முந்தைய நாள் போல முடிவெடுத்துக் கொண்டு, உறங்கியும் போனாள்.

மறுநாள் காலையில் எழுந்ததும், ‘அவன் குட் மார்னிங் சொன்னாலும் நம்ம திரும்ப பேசக்கூடாது’ என்ற முடிவோடு, வெளியில் சென்றவள் இருவரையும் காணாமல் விழித்தாள்.

அதன் பிறகே, அடுக்களையில் ஆரவ் பேசும் சப்தம் கேட்க, அங்கு விரைந்தவள், ஒரு கையில் இஷுவை வைத்து அவனுடன் பேசியபடி, மறுகையில் சமையலில் ஈடுபட்டிருந்தான்.

அவளைக் கண்டதும், “குட் மார்னிங் மதி. உன் பேபி இன்னைக்கு காலைல சீக்கிரமே எந்திரிச்சுட்டான். இவனை பிடி” என்று அவளிடம் கொடுக்க, மீண்டுமாக அவனின் ‘உன் பேபி’ என்ற வாசகம் அவளை உணர்வுகளின் பிடியில் சிக்க வைத்தது.

“என்னை எழுப்பி இருக்கலாம்ல?” அவள் சிறிது ஆதங்கத்துடன் கேட்க, “உங்கிட்ட வரணும்ன்னு உன் ரூம் கதவையே பார்த்துட்டு இருந்தான். நல்லா தூங்குன. அதான் எழுப்பல.” என்றவன், “இன்னைக்கு என்ன பிளான்?” என்றான்.

அவளோ அதற்கு பதில் கூறாமல், “என்னை தேடுனீங்களா பேபி?” என இஷாந்தைக் கொஞ்சியபடி வெளியில் செல்ல, அவனும் வேலையை முடித்து விட்டு, வெளியில் வந்து, மறுபடியும் அதே கேள்வியைத் தொடுத்தான். 

“இன்னைக்கு எந்த பிளானும் இல்ல.” என அவனை பார்க்காமல் பதில் அளித்தவளை ஆராய்ந்தபடியே, “அவனை குடுத்துட்டு நீ டீய குடி.” என்றான்.

“எனக்கு வேணாம்.” பட்டென சொல்லி விட்டு, அமைதியாக இருந்தவளை நோக்கி சிறு நகையை வீசியவன், “மேடம் என் மேல கோபமா இருக்கீங்களோ?” என்றான் கையை கட்டிக்கொண்டு.

அதற்கும் அவள் மௌனம் காக்க, “மதியத்துக்கு குக் பண்ணி வைச்சிருக்கேன். ஒழுங்கா சாப்ட்டுரு.” என அக்கறையாகக் கூறியவனிடம்,

“தேவை இல்ல. எனக்கு வேணும்ன்னா நானே சமைச்சுக்குறேன். யூ ட்யூப் பார்த்து…” எனக் காட்டமாக பதிலளித்தாள்.

அதில் அவனே, “என்னால குடிக்கிறத நிறுத்த முடியாது மதி. டோன்ட் வொரி. குடிச்சுட்டு உங்கிட்ட தப்பா நடந்துப்பேன்னுலாம் நீ பயப்பட அவசியம் இல்ல. நான் சொன்ன சொல்லை எப்பவும், எந்த நிலைமையிலயும் மீற மாட்டேன். உன் விருப்பம் இல்லாம, உன்னை தொட மாட்டேன். வெல், நான் குடிக்காம இருக்கறதை விட, குடிக்கிறது தான் உனக்கும் நல்லது.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியவனை ஏனென்று நிமிர்ந்து பார்த்தாள்.

அதற்கு பதில் அளிக்காமல், “யூ நோ, நான் வோட்கா தான் குடிப்பேன். இப்ப உனக்காக தான் பீர்க்கு மாறிட்டேன். எத்தனை பாட்டில் குடிச்சாலும் போதை ஏற மாட்டேங்குது…!” என்றான் குறும்பாக.

அதில் அவள் முறைக்க, “பட், எவ்ளோ குடிச்சாலும் நான் ஸ்டெடியா இருப்பேன் மதி. இதுக்காக நீ என்மேல கோபப்படணும்ன்னா டெய்லி கோபப்படணும். சோ, ஸ்மைல் ப்ளீஸ்.” என சைகையில் சிரிக்க கூற, அவளோ புருவம் சுருக்கி அவனை வெறுமையாகப் பார்த்தாள்.

அப்பார்வை அவனையும் குடைய, “என்னை என்போக்குல விட்டுடு மதி. நான் செய்ற எதுவும் உன்னை பாதிக்காது. என்னை நம்பலாம்” என உறுதியளித்தவன், “யூ டியூப் பார்த்து சமைக்கிறேன்னு ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காத. நான் இருக்கும் போது அதெல்லாம் ட்ரை பண்ணலாம்.” என கண்டிப்பாக கூறி விட்டு அலுவலகத்திற்கு கிளம்ப, அவளுக்குத் தான் இன்னும் கோபம் சூழ்ந்தது.

“பெரிய மைசூர் மகாராஜா பாலசு. இவரு இல்லாம, இஷுவை ரூம்க்கு தூக்கிட்டு போக கூடாது. இவரு இல்லாம சமைக்க கூடாதுன்னு ரூல்ஸ் போடுறாரு. நம்ம சொன்னா மட்டும் இப்படி தான் இருப்பேன்னு அழுத்தமா சொல்லிட்டு போறது. எப்படியோ குடிச்சு குடல் வெந்து போங்க எனக்கு என்ன வந்துச்சு…?” என அவனை திட்டித் தீர்த்தவள், அவன் செய்யக்கூடாது என்று சொல்லி விட்டு சென்றதற்காகவே, இஷாந்தை தூங்க வைத்து, அடுக்களைக்கு சென்று தன் கைவரிசையை காட்ட எத்தனித்தாள்.

அதன் விளைவு, வெங்காயத்தை நறுக்குகிறேன் பேர்வழி என விரல்களில் ஆங்காங்கே கீறிக்கொண்டு “ஸ்ஸ்ஸ் ஆ!” எனக் கத்திக் கொண்டிருந்தாள்.

ஆனாலும் முயற்சியில் இருந்து பின் வாங்காமல், எதையோ சமைத்து வைத்தவள், சட்டியை அடுப்பில் இருந்து இறக்க போகிறேன் என்றெண்ணி, துணியை வைத்து தூக்காமல் வெறும் கையால் பிடித்து விட்டு, “ஆஆ” வென கையை உதறினாள்.

கை இரண்டும் சிவந்திருக்க, ‘பேசாம, சும்மாவே இருந்துருக்கலாமோ.’ என முகத்தை சுளித்தவள், கையை ஊதிக்கொண்டே இருந்தாள். அன்றென பார்த்து, ஆரவும் இரவு தான் வீடு திரும்பினான்.

இடையில் ஒரு முறை போன் செய்து, இஷாந்தின் நலத்தை மட்டும் கேட்டு விட்டு, உடனே வைத்தும் விட்டான்.

அன்றும் இரவு, முந்தைய நாள் போல் தான் நடந்தது. ஆனால், இன்று அவன் மீது பயம் எழவில்லை வருத்தமே மிகுந்தது. கூடவே, கை எரிச்சல் வேறு.

நல்லவேளையாக, அவன் வருவதற்குள், அவள் செய்து வைத்த சமையலை தடயம் தெரியாமல் குப்பையில் போட்டு பாத்திரத்தையும் சுத்தமாக கழுவி வைத்து விட்டாள்.

பின்னே அவன் வந்து சாதாரணமாக திட்டும் போதே கேட்க இயலாது. இதில் குடித்து விட்டு, வேறு திட்டுவான். என பயந்து தான் இவ்வேலையை பார்த்து வைத்தாள். அவள் செய்த உணவு வேறு தீய்ந்து விட்டது பாவம்.

சீக்கிரமே இஷாந்தையும் உறங்க வைத்து, தொட்டிலில் போட்டு விட்டு, அவன் வருவதற்குள் உறங்கி விடலாம் என அறைக்கு செல்ல போகையிலேயே அவன் வந்து விட்டான்.

அவனைக் கண்டதும் சிறிதாக இளித்து வைத்தவளை, ஒரு மாதிரியாக பார்த்தவன், “இஷு தூங்கிட்டானா?” என்று கேட்டுக்கொண்டே, அறைக்கு சென்று விட, அவளும் தலையாட்டி விட்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

அப்படியே விட்டு விடுவான் என்று தான் எண்ணினாள். ஆனால், அவன் சிறிது நேரத்திலேயே கதவைத் தட்ட, அவளுக்கு கிலி பிடித்தது.

“ஆரவ் நான் தூங்கிட்டேன்.” என்று சத்தம் கொடுத்தவள் தலையில் அடித்துக் கொண்டாள்.

“அது… எனக்கு சாப்பாடு வேணாம்.” என திருத்த, அவனுக்கோ ஒரே குழப்பம். என்ன ஆச்சு இவளுக்கு என்று. வாயில் இருந்த பானத்தை விழுங்கியபடியே, “தூங்குறப்ப கூட தெளிவா இருப்ப போல. முதல்ல கதவை திற.” என்றான் நக்கலுடன்.

வேறு வழியற்று கதவை திறந்தவள், அவனையும் அவன் கையிலிருந்த பாட்டிலையும் மாறி மாறி பார்த்து முகத்தை சுருக்கி விட்டு, “எனக்கு சாப்பாடு வேணாம் ஆரவ். இனிமே டின்னர் உங்க கூட சாப்புட்றதா இல்ல” என்றாள் வீம்பாக.

அவனோ அழுத்த முறைப்புடன், அவளை விழிகளால் விழுங்கியபடி மதுவை விழுங்க, அதுவே அவளை பதற்றத்தில் ஆழ்த்தியது. “இன்னைக்கு ஒரு நாள் சாப்புடுறேன்” என நொந்தவள், டைனிங் டேபிளில் அமர, அவனோ, அவளுக்கு கடையில் இருந்து சப்பாத்தியும் குருமாவும் வாங்கி வந்திருந்தான்.

அவள் வெகு அமைதியுடன், வெறும் சப்பாத்தியை அவசரமாக விழுங்க, “விக்கிக்க போகுது. குருமாவை ஊத்தி சாப்டு.” என்றான் உத்தரவாக.

“இல்ல. எனக்கு வெறும் சப்பாத்தி சாப்பிட தான் பிடிக்கும்.” என்று வம்படியாக சிறு புன்னகையைக் கொடுக்க, அவளையே கூர்பார்வை பார்த்தவன், “ஏதாவது திருட்டுத்தனம் பண்ணுனியா?” எனக் கேட்டான் தாடையை தடவியபடி.

அவளுக்கு தான் உண்ட சப்பாத்தி வெளியில் வரும் போல் இருந்தது. விழிகளும் சாஸர் போல் விரிந்திருக்க, “இல்லையே.” என்றாள் தோளைக்குலுக்கி.

“ஓ! அப்பறம் ஏன் கிட்சன்ல இருந்து தீயுற ஸ்மெல் வருது?” என அவளை ஆழமாய் பார்க்க, அவளுக்கு புரை ஏறியது.

“குடிச்சா, கண்ணு சரியா தெரியாது, நிதானம் இருக்காதுன்னு சொல்லுவாங்க. உங்களுக்கு மதியம் நான் சட்டியை தீய வைச்ச ஸ்மெல் இப்போ வரை வருதா?” பெருமூச்சுக்கள் விட்டு அவளே வாயை கொடுத்துக் கொள்ள,

“சோ, நான் சொன்னதை கேட்காம, சமைச்சுருக்க.” என கண்ணை சுருக்கி முறைத்தான்.

இதழ்களை ஈரப்படுத்திக்கொண்டவள், தைரியத்தை வரவழைத்து, “ஆமா, சமைச்சேன். நீங்க சொன்னா நான் செய்யணுமா?” என வீராப்பாக கேட்டு வைக்க, அவள் மீதிருந்த பார்வையை மாற்றாமல், பீரை உள்ளே இறக்கியவன்,

“இனிமே சட்டியை கருக விட்டா, ஜன்னலை திறந்து விடு. அப்போ தான் ஸ்மெல் போகும்” என்று கட்டளையிட, அவள் மானசீகமாக அவளையே அறைந்து கொண்டாள்.

‘அடுத்த தடவை ஜன்னலை திறந்து வைச்சுட்டு தான் சமைக்கணும்.’ என தனக்குள் முடிவெடுத்துக் கொண்டவளாய், சப்பாத்தியை பிய்க்க, அவன் உணர்வற்ற முகத்துடனே, அவளுக்கு குருமாவை ஊற்றி, “ம்ம்…” என்று விழியசைவிலேயே உண்ண சொல்ல, தன்னை நொந்து, குருமாவில் விரல்களை வைத்தவளுக்கு வெட்டுக்காயமும், சூடு பட்ட இடமும் எரிந்தது.

அவனிடம் முகத்தை மாற்றாமல் இருக்க அரும்பாடுபட்டவள், ஒரு கட்டத்தில் முடியாமல், “ஸ்ஸ்ஸ்ஸ்…” என தட்டிலிருந்து கையை எடுத்து, வாஷ் பேசின் தண்ணீரில் காட்டினாள்.

அதில் அடுத்த நொடி அவளை நெருங்கி இருந்தவன், “கையில என்னடி?” என புருவம் சுருக்கி வினவ,

“ஒ… ஒண்ணும் இல்லையே!” என இரு கையையும் பின்னால் மறைத்துக் கொள்ள, இன்னுமாக மூச்சுப் படும் தூரம் அவளை நெருக்கி, இரு கையையும் பிடித்துப் பார்த்தான். அவளுக்குத் தான் மூச்சு அடைத்தது.

வான்மதியின் உள்ளங்கைகளைப் பார்த்து அதிர்ந்த ஆரவ், “என்ன பண்ணி வைச்சுருக்க மதி. ஸ்டுப்பிட். இதுக்கு தான் சொன்னேன் நான் இல்லாதப்ப எதுவும் செய்யாத எங்கயும் காயம் ஆகிடும்ன்னு. அப்படி என்ன பிடிவாதம் உனக்கு? பாரு. நிறைய இடத்துல கீறி இருக்கு. கையே சிவந்து போற அளவு என்னடி பண்ணுன?” என குரலை உயர்த்தி திட்டினாலும், முகத்தில் வலி பரவி இருந்தது.

அவன் முகம் கொடுத்த பாவனைகளை வியப்புடன் விழிகளுக்குள் புகுத்தியபடியே, அசையாமல் நின்றவளிடம், “அடுப்புல இருந்த பாத்திரத்தை துணி இல்லாம கையால தூக்குனியா?” என நேரில் பார்த்தது போல் கேட்டதில், அவள் தான் அதிர்ந்தாள்.

பின், தலையை மேலும் கீழும் ஆட்டி ஒப்புக் கொள்ள, அவளை அறைய கையை ஓங்கியவன், “சப்புன்னு விட்டேன்னா தெரியும். என்ன ***** நீ கிட்சன்குள்ள போன.” இன்னும் அவன் வாயில் இருந்து என்ன என்ன கெட்ட வார்த்தைகளை அவள் செவி கேட்டதோ, கண்ணே கலங்கி விட்டது பெண்ணவளுக்கு.

அதில், கையை இறுக்கி மூடி தன்னை அடக்கிக்கொண்டவன், “உட்காரு” என அவளை நாற்காலியில் அமர பணித்து விட்டு, விறுவிறுவென அறைக்கு சென்று, கையில் மருந்துடன் வந்தான்.

அவளருகில் அமர்ந்து, கைக்கு அவனே மருந்து போட, அவளால் தடுக்கவும் இயலவில்லை. “ஸ்ஸ். வலிக்குது.” என கையை உருவிக் கொண்டவளை அழுத்தமாக முறைத்தவன்,

“வலிக்க தான் செய்யும். சூடு பட்டா இனிக்குமா?” என உறுத்து விழித்து விட்டு மருந்திட தொடர, அவள் தான் அவனின் கோபத்திலும் பேச்சிலும் உதட்டைக் கடித்து கண்ணீரை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

கவனமாக மருந்திட்டு முடித்தவன், கையை கழுவிக்கொண்டு மீண்டும் அவளருகில் அமர்ந்து அவளை ஒரு நொடி இமைக்காமல் உள்வாங்கி விட்டு, கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டான்.

அவனின் திடீர் செய்கையில் அவள் தன்னிச்சையாக பின்னால் நகர, மீண்டும் ஒரு இறுகளுடன் கையை பின்னிழுத்துக் கொண்டவன், மென்மையாக, “கேர்புஃல் – ஆ வேலை பாரு கண்ணம்மா. இந்த மாதிரி லூசுத்தனம் பண்ணுவன்னு தெரிஞ்சு தான கிட்சன்க்கு போகாதன்னு சொன்னேன். கஷ்டமா இருக்கு.” என உருகினான்.

அவனின் அழைப்பிலும், தனக்காக அவன் ஏந்திய வலியிலும் அவளுக்கு பேச்சற்ற நிலை தான்.

அவனின் கோபத்தைக் கூட தாங்கிக்கொள்ள இயலும் அவளால், அவனின் இந்த அன்பை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆரவோ, அவளை கவனியாமல், காயம்பட்ட கரங்களை நோக்கி குனிந்து முத்தமிட விழைய, அவள் விருட்டென கையைப் பின்னால் இழுத்துக் கொண்டாள்.

அதிலேயே அவனும் நிதானத்திற்கு வந்து, “சாரி…! நான் தப்பான எண்ணத்துல கிஸ் பண்ண நினைக்கல.” என அவளைப் பாராமல் பதில் கூறி விட்டு, தன்னை அடக்க இயலாமல், ஒரு பாட்டிலை எடுத்து ஒரே மூச்சாக குடித்தான்.

அவன் நிறுத்தவே மாட்டானோ என்ற பதற்றத்தில் அவனை தடுத்தவள், “போதும் ஆரவ்.” என்றாள் கெஞ்சலாக.

“ஐ வாண்ட் திஸ் கண்ணம்மா.” என அவனும் கெஞ்சலாகக் கேட்க,

‘நான் உனக்கு பொண்டாட்டியும் இல்ல. நீ எனக்கு புருஷனும் இல்ல. என்னை அப்படி கூப்பிடாத’ என கத்த வேண்டும் போல இருந்தது அவளுக்கு. ஆனால், சொல்ல முடியவில்லை. அவளுக்கும் பிடித்ததே அவ்வழைப்பு.

அவன் தான் உயிரிலிருந்து, தினம் தினம் அழைத்துப் பழகியவன் போல, மொத்த உணர்வையும் அவ்வொரு வார்த்தையில் குவித்து அழைக்கிறானே!

பின் என்ன நினைத்தானோ, குடிப்பதை நிறுத்தி விட்டு, முகத்தில் நீரை வாரி இறைத்து தன்னுணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து, தட்டில் இருந்த சப்பாத்தியை எடுத்து அவளுக்கு ஊட்ட எத்தனித்தான்.

அவளோ இறுக்கமாக, “எனக்கு வேணாம் ஆரவ். என் மேல இவ்ளோ அக்கறை காட்ட வேண்டிய அவசியம் இல்ல. இஷுக்காக மட்டும் தான் நம்ம உறவு.” என மீண்டுமொரு முறை நினைவு படுத்தினாள்.

“இஷு எனக்கு யாரு?” அவன் கூர்மையாக கேட்க, “என்ன கேள்வி இது. உங்க பையன்.” என்றாள் குழப்பமாக.

“இப்ப, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவன் உனக்கு என்ன முறை?” என மீண்டும் கேட்டான்.

அதில் முறைத்தவள், “நான் அவனுக்கு சித்… அம்மா தான்.” என உரிமையை நிலைநாட்ட, “அப்போ, என் பையனுக்கு அம்மான்னா எனக்கு என்ன முறை?” எகத்தாளமாக வெளிவந்தது இக்கேள்வி.

அவள் மௌனமாக இருக்க, “லுக் மதி. ஆஸ் அ ஹஸ்பண்ட் – ஆ எனக்கு உன்மேல எல்லா உரிமையும் இருக்கு. அதில சில உரிமையை தவிர, மத்த உரிமையைக் காட்ட உன் அனுமதி எனக்கு தேவை இல்லை. அதுல இதுவும் ஒண்ணு.” என்று விழிகளில் நெருப்பை உமிழ்ந்து அழுத்தமாக கூறியவன்,

“ம்ம். சாப்டு.” என மீண்டும் உணவை அவள் வாயருகில் கொண்டு சென்றான்.

அவளுக்கு விழிகள் கலங்கி நிற்க, மெல்ல கனிந்தவன், “சாப்டு கண்ணம்மா.” என கண்ணாலேயே கெஞ்ச, அதற்கு மேல் அவளால் மறுக்க முடியவில்லை.

அவன் கொடுத்த உணவை உண்ட படியே, “என்னை கண்ணம்மான்னு கூப்பிடாதீங்க!” என்றாள் அழுகுரலில்.

“ஏன்? பிடிக்கலையா?” கேட்டபடி, அவளை உண்ண வைத்தவனிடம்,

“பிடிச்சு இருக்கு. அதான் கூப்பிடாதீங்கன்னு சொல்றேன். ப்ளீஸ். எனக்கு எம்பாரிஸிங்கா இருக்கு.” எனத் தவிப்பாக கூற,

“ஓகே. கூல். உனக்கு எப்போ அப்படி கூப்பிட்டா கம்ஃபர்ட்டபிளா இருக்கோ சொல்லு. அப்போ கூப்புடுறேன்.” என அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டவனைக் கண்டு இன்னுமே அவளுக்கு வியப்பு தான்.

சில நொடிகள் இருவருக்கும் அமைதியில் கழிய, அவளே, “நான் கைல சூடு பட்டுக்குவேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டாள்.

அதில் மெலிதாய் புன்னகைத்தவன், “நானும் பல சூடு வாங்கி இருக்கேன்.” என்று ஆழந்த குரலில் கூற, அவள் சட்டென நிமிர்ந்தாள்.

இருவரின் விழிகளும் அவரவரின் வலிகளை, மற்றவர்களின் விழிகளில் தேடியது. வாய் மொழியாய் வெளிவராத வலிகள்… நயன மொழியில் மட்டும் வெளிப்பட்டு விடுமோ?

தேன் தூவும்…!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
58
+1
247
+1
7
+1
8

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  2. priyakutty.sw6

   Edhuku avar kudikaraaru..

   Avangala avruku munave theriumo…

   Ennvo vishyam iruku…

   Like…eppovachum idhuku munna madhi ah pathurukaro…?

  3. அருமையான குடும்பம் சார்ந்த காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.