10 – விடா ரதி…
சுந்தரியின் கழுத்தில் முகுந்தன் இறைவன் சந்நிதியில் மாங்கல்யம் சூட்டி, தன் சரிப்பாதியாக்கிக் கொண்டார்.
மகிழ்வுடன் ரதியும் ஸ்வேதாவும் அட்சதை தூவி இறைவனிடம் அவளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தித்தனர். எத்தனை எதிர்மறை எண்ணம் உள்ளவர்கள் இருந்தாலும் இது போல தூய்மையான அன்பும், ஆசியும் இருக்குமிடத்தில் நல் அதிர்வுகளே எப்போதும் மேலோங்கி நிற்கும்.
அப்படியான நல்லெண்ணம் கொண்ட சிலரால் தான் ரதியும் இப்போது தன்னவனுடன் இணைந்து இருக்கிறாள்.
“டேய்… இங்க பாரு டா… அது ரகுபதி தானே? அவன் இங்க என்ன பண்றான்?”, கூட்டத்தில் ஒருவன் ரகுபதியைப் பார்த்துவிட்டு அருகில் சென்றான்.
“பாரு மச்சி…. புது மாப்ள கணக்கா நிக்கறான்…”, அருகில் வந்தவன் வந்தவன் கூறினான்.
“புது மாப்ள தானே … போன வாரம் தானே கல்யாணமாச்சி இவனுக்கு….”, மற்றவன்.
“யாரு டா இவன கட்டின புள்ள? நிஜமா இதுவாது கூட வாழுமா இல்ல இதுவும் இன்னொருத்தன கட்டறதுக்கு இவன இப்போ பொம்மை கல்யாணம் பண்ணி இருக்கா?”
“அந்த புள்ளைய ஏதோ சொல்லி மிரட்டி வரவச்சி தாலி கட்டினதா பேசிக்கறாங்க மாப்ள….”
“அப்டியா? சரி… இவனுக்கும் வயசு ஆகுது… கண்ட கனவெல்லாம் களிக்க ஒரு பொண்ணு வேணும்ல….”, என அவன் சொல்லி முடிக்கும் முன் ரதி அவனை அறைந்து இருந்தாள்.
“யாருடா நீ? என் புருஷன்கிட்ட வரமொற இல்லாம பேசிக்கிட்டு நிக்கற? சங்க அறுத்துறுவேன்… அவர் முன்னாடி நிக்க கூட உனக்கு அருகத கெடையாது.. அந்த மானங்கெட்ட வீராசாமி மகன் தானே நீ? கட்டி வந்த பொண்ண வச்சி வாழ வக்கில்லாத பய…. நீ என் புருஷனப்பத்தி என்னடா பேசற?”, ஏகத்துக்கும் கோபத்தில் ரதியின் முகம் சிவந்தது.
“இந்தா பொண்ணு… என்ன கொஞ்சம் கூட மரியாத இல்லாம ஒரு ஆம்பளைய கைய நீட்டற ?”, கூட இருந்தவன் கேட்டான்.
“நீ அந்த சோமகுப்பத்து பிரசிடன்ட் மருமகன் தான? உனக்கு இவன் கூட என்ன பழக்கம்? அந்த தருதல கூட சுத்தற இன்னொரு தருதலையா நீ?”
“இந்தாம்மா.. என்ன உன் வாய்க்கு வந்தபடி பேசிட்டு இருக்க…. உன் புருஷன் கம்முன்னு நிக்கறான்னா என்ன அர்த்தம். நான் சொன்னது நெசம்… அதான் வாய் பேச முடியாம கம்முன்னு இருக்கான். நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு வாய் பேசற கைய நீட்டுற…. அப்பறம் ஊருக்குள்ள நீ இருக்க முடியாது பாத்துக்க….”, அடிவாங்கியவன் கூறினான்.
அதற்குள் அங்கே கூட்டம் கூடிவிட, அவரவர் அவரவர் இஷ்டத்திற்குக் கதைப் பேச ஆரம்பித்தனர்.
“அந்த மனுஷன் கால் தூசுக்கு பெறுமானம் இல்லாத சல்லிப்பய டா நீ…. என்ன என்னைய யாருன்னு தெரியலையா? ஸ்வர்ணரதி….. இதே ஊர்காரி தான்….. உன் வண்டவாளம் அத்தனையும் எனக்கு தெரியும்…. இன்னும் உன்மேல ரெண்டு கேஸ் இருக்குல்ல… இரு அசிஸ்டன்ட் கமிஷனர்கிட்ட பேசி உன்ன வரதச்சினை கொடுமை பிரிவுல உள்ள தள்ளிட்டு தான் வேற வேல….”, என உடனடியாக தனது ஃபோன் எடுத்துப் பேசினாள்.
“ரதி குட்டி…. வேணாம் விடு டா…. அவன் ஒரு அரலூசு…. “, மனதில் பொங்கிய மகிழ்ச்சியுடன் ரதியை சமாதானம் செய்தான்.
“நீங்க கம்முன்னு இருங்க…. இவன இன்னிக்கி ஒரு வழி பண்ணாம விட போறது இல்ல… இவன் பொண்டாட்டி என்கூட படிச்ச பொண்ணு தான் ஸ்கூல்ல…. நான் இங்க இல்லைங்கவும் எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிட்டானா? உங்ககிட்ட அவன் மன்னிப்பு கேக்கணும்….”, என அவனை முறைத்தபடிக் கூறினாள்.
“இவங்கிட்ட நான் எதுக்கு மன்னிப்பு கேக்கணும்… கட்ட இருந்த புள்ளைய வேற ஒருத்தனுக்கு கூட்டி குடுத்தவன் தானே இவன்..”, என சொல்லும் முன் ரகு அவனை அடித்திருந்தான்
“போனா போகட்டும்ன்னு அமைதியா இருந்தா ஓவரா பேசற நீ…. அவகிட்ட வாங்கினது பத்தலியா உனக்கு..? நானும் அடிக்க வேணாம்ன்னு பாத்தா ஓவரா துள்ளுற…. ஒழுங்கா அவகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு ஓடு…”
“புருஷனும் பொண்டாட்டியும் மாத்தி மாத்தி அடிக்கறீங்களா… இருங்க டா பேசிக்கறேன்…”
“இப்பவே பேசு.. பேசு டா…..”
ஐந்து நிமிடத்தில் போலீஸ் வர அவனை இழுத்துக்கொண்டுச் சென்றனர்.
“என்ன டி நிஜமா போலீஸுக்கு கால் பண்ணியா?”, ரகு அதிர்வுடன் கேட்டான்.
“ஆமா.. உன்ன மரியாத இல்லாம பேசினா விடுவேனா? ஆறு மாசம் உள்ள இருந்தா தான் இவன் வாய் அடங்கும்…. அவ்ளோ பேசறான் நீ பாட்டுக்கு கம்முன்னு இருக்க… திருப்பி நாலு அறை விடவேண்டியது தானே…” கோபத்தில் பொரிந்துக் கொண்டிருந்தவளைக் கண்களில் காதல் வழிய பார்த்துக் கொண்டிருந்தான்.
“ரதி… கம்முன்னு வா இந்த பக்கம்…. இந்தா தண்ணிய குடி…. என்னடி சட்டுன்னு கைய நீட்டிட்ட? “, சவிதாவும் ஸ்வேதாவும் அவளை சமாதானம் செய்துக் கொண்டிருந்தனர்.
சுந்தரி தூரத்தில் இருந்து மென்னகைப் புரிந்தாள். அதன்பின் சலசலவென்ற பேச்சுக்கள் தான் அன்று மதியம் வரையிலும் கேட்டுக்கொண்டிருந்தது.
அனைவரும் ரதியின் கோபத்தைக் கண்டு அதிர்ந்திருந்தாலும், அவள் அடித்ததைத் தான் பேசு பொருளாக்கி இருந்தனர். ஒரு பெண் எப்படி அவனை அடிக்கலாம் என்று முணுமுணுத்தனர்.
“ரதி…. வா வீட்டுக்கு போலாம்…. எனக்கு டயர்ட் ஆ இருக்கு…. இங்க என்னால தூங்க முடியாது போல…”, ஸ்வேதா அழைக்கவும் ரதி அவளை உடன் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.
“ஸ்வே… இந்த ரூம்ல படுத்துக்கோ…. டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா குடிக்க எடுத்துட்டு வரேன்….”, சாதாரணமாகப் பேசிவிட்டு மேலே சென்றாள்.
“அண்ணா…. மேடம் இன்னும் அதே ஃபார்ம்ல தான் இருக்கா போல… பாத்து பதனமா இருந்துக்கோங்க….”, ஸ்வேதா மெல்லக் கூறினாள்.
“பழைய ரதியா அவளை மாத்தனும்னா சில அடி வாங்கி தானே ஆகணும் தங்கச்சி…. நான் ஜூஸ் போடறேன்…. ஃப்ரெஷ் ஆகி வாங்க….”, எனச் சிரிப்புடன் அவன் செல்வதுக் கண்டு ஸ்வேதாவும் மென்னகையுடன் உள்ளே சென்றாள்.
ஜூஸ் போட்டு டேபிள் மேல் வைத்துவிட்டு இவனும் வேகமாக மாடி ஏறினான். அவள் புடவையை மாற்றாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்.
“ஹே பொண்டாட்டி… இன்னும் புடவை மாத்தலயா? நான் மாத்திவிடவா செல்லம்?”, எனக் கேட்டபடிக் கதவை அடைத்துவிட்டு அவள் அருகில் சென்றான்.
அவள் முறைப்புடன் அவனைப் பார்த்தபடி இருந்தாள்.
“என் வீர பொண்டாட்டிக்கு என்னாச்சி?”, அவள் அருகில் அமர்ந்து மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
“எதுக்கு அமைதியா இருந்த ராக்கி?”
“எப்ப?”
“அந்த எரும பேசறப்ப…”
“இதுமாதிரி பல பேச்ச கேட்டுட்டேன்.. அத எல்லாம் நான் கண்டுக்கறதே இல்ல டி…. இதைவிட மோசமா பேசி, அவனுங்கள நான் அடிச்சி அது தனி பஞ்சாயத்தாகின்னு பல பிரச்சன இத்தன வருசத்துல பாத்துட்டேன். ரோட்ல நாய் குறைக்கரதுக்கு எல்லாம் நாம நின்னு பதில் குடுக்கணுமா?”
“எனக்கு வந்த ஆத்தரத்துக்கு அவன அங்கேயே வெட்டி போடலாம்ன்னு இருந்தது. ஒழுங்கா ஒரு வேளை சோறு அவன் பொண்டாட்டிக்கு போட வக்கில்லாதவன் அவன்…. எனக்கு கோவம் கொறைய மாட்டேங்குது…”, எனத் தலையனையைத் தூக்கி எறிந்தாள்.
“அப்ப நான் கொறைக்கவா பேபி?”, என அவளை பின்னிருந்து அணைத்தான். இடையில் கை தவழ, கன்னத்துடன் கன்னம் உரசி சரசலீலை புரிந்துக் கொண்டிருந்தான் அவளின் கள்வன்.
அவனின் சமாதானத்தில் அவளும் தான் மெல்ல மெல்லக் கரைந்துக் கொண்டிருந்தாள்.
அவளின் முகமெல்லாம் அவன் இதழ்கள் ஊர்கோலம் போக ஆசைக்கொண்டு, மல்லிகையை வாசம் பிடித்த போதையில் மன்னவனும் தான் மனம் தடுமாறிப் பயணித்துக் கொண்டிருந்தான்.
பூவின் மொட்டிற்கு முத்தம் கொடுப்பதைப் போல, பெண்ணவள் முகம் முழுதும் பயணம் செய்த அவனது இதழ்கள் அவள் இதழை முட்டி நின்றது. அவளின் அனுமதிக்காக அவன் ஒரு நொடி அப்படியே நிற்க, அவன் செயலை அவளுடையதாக்கிக் கொண்டது பெண்மயில்.
சரசமோனத்தில் அரை மணி நேரம் கழிந்த பின் தான் இருவரும் சுயஉணர்வுப் பெற்றனர். தோழியின் நினைவு வரவும் அவசரமாக அவனை விலக நினைத்து எழுந்தவள் முந்தானை அவன் கைகளில் இருந்ததைக் கவனியாமல், மீண்டும் அவன் மேல் விழுந்து அவனைப் பித்துப் பிடிக்கச் செய்தாள்.
“விடு ராக்கி… ஸ்வே கீழ இருக்கா….”, அவளின் குரல் அவளுக்கே புதிதாகத் தோன்றியது.
“நான் ஜூஸ் போட்டு வச்சிட்டு தான் வந்தேன் செல்லம்…. நாம இன்னும் கொஞ்ச நேரம் கோவத்த குறைக்கலாம் டி….”, அவள் கழுத்தில் புதைந்தபடிக் கூறினான்.
“எனக்கு கோவம் போயிருச்சு…. “
“ஆனா எனக்கு கோவம் வந்திருக்கே இப்ப… நீ தான் குறைக்கணும்…”, மீண்டும் அவளை மோகத்தில் ஆழ்த்த முயற்சித்தான்.
“சரி மொத என்னை விடு.. இப்படி இறுக்கி பிடிச்சிட்டு இருந்தா எனக்கு மூச்சு முட்டுது….”
“எனக்கும் தான் காலைல உன்ன அப்படி பாத்ததும் மூச்சு முட்டுச்சி… எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா வெளிய காட்டிக்காம இருக்க…. “, என ஆரம்பித்து, அவள் காதில் ரகசியமாக மிச்சத்தை முடித்தான்.
“அச்சோ….. விடு ராக்கி.. நீ ரொம்ப மோசம்…. “, என அவன் நெஞ்சத்தில் முகம் புதைத்துக் கொண்டாள்.
“நீ தாண்டி ரொம்ப மோசம்…. “, என அவள் இதழை முற்றுகையிட்டான்.
மேலும் சில நிமிடங்கள் கரைந்த பிறகே அவளை விடுவித்தான்.
“சரியான பிடிவாதம் டா உனக்கு.. எதுக்கும் மசியமாட்டேங்குற….”
“உனக்கு மசியறனே டி…”, என அவன் மீண்டும் அவளைப் பிடிக்க வரவும், அவள் பாத்ரூம் உள்ளே சென்றுக் கதவடைத்துக் கொண்டாள்.
சத்தமாகச் சிரித்தபடி அவனும் வேறு உடை மாற்றி முகம் கழுவிக் கொண்டு கீழே சென்றான்.
ரதி கீழே வரும்போது தான் ஸ்வேதாவும் உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தாள். ஆனால் ரதியின் முகத்தில் இருந்த சிவப்பைத் தான் மறைக்க முடியாமல் திணறினாள்.
“என்ன டி முகம் இப்படி செவந்து இருக்கு?”, தோழியும் விசமமாக கிண்டல் செய்ய, அவள் இன்னமும் சிவந்துப் போனாள்.
ரகு கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றான்.
“நைட் டின்னர் போலாம் ரதி.. நீ சமைக்க வேணாம்…. ரெண்டு பேரும் பத்திரமா இருங்க….”, எனக் கூறிவிட்டு வாசலில் ஒருவரை இனி பாதுகாப்பிற்கு அமர்த்தவேண்டும் என்று எண்ணியபடிச் சென்றான்.
அவன் கடைக்கு சென்ற பத்து நிமிடத்தில் வாசலில் கடையில் வேலை செய்யும் ஒருவர் பாதுகாப்பிற்காக வந்தார்.
“வாங்க பச்சையண்ணா…. என்ன விசயம்?”
“வீட்டு பாதுகாப்புக்கு தம்பி வர வரைக்கும் இங்க இருக்கேன்ம்மா… அந்த வீராசாமி பையன அடிச்சிட்டீங்கன்னு தம்பி சொன்னாரு….”
“அவன் பேசின பேச்சுக்கு நாக்க அறுத்து இருக்கணும்னா….”
“அவனுக்கு தேவை தான்… பல பேர் இப்படி தம்பிய தரக்கொறைவா பேசி இருக்காங்க மா… இப்ப தான் தம்பி முகத்துல சந்தோசம் பாக்கறேன்… ரெண்டு பேரும் தீர்காயிசா சந்தோசமா வாழணும் “ என ஆசிர்வதித்துவிட்டு கேட் அருகில் இருந்த மரத்தின் அடியில் ஒரு நாற்காலிப் போட்டு அமர்ந்துக் கொண்டார்.
சிறிது நேரத்தில் மீனாவும், பிரியாவும் சவிதாவுடன் அங்கே வந்தனர்.