Loading

ஏர்போர்ட் வந்தடைந்தவர்கள், கொலம்பு விமான நிலையம் செல்லும் விமானத்தில் ஏறினர். ஸ்ரீ லன்கண் ஏர்லயன்ஸ் மூலம் ஜெய் கொலம்புக்கு பதிவு செய்து இருந்தான்.

விமானம் பயணம் இருவருக்கும் புதிது அல்ல. ஆனால் இருவரும்  சேர்ந்து செல்லும் முதல் பயணம். எனவே சூர்யா குஷியாக இருந்தான். தியாவுக்கு அப்படி எதுவும் இல்லை போலும் அமைதியாகவே இருந்தாள்.

விமானம் புறப்பட்டது கொலம்புவை நோக்கி. “தியா ஏதாவது பேசு தியா”, என்று அவள் கையை சுரண்டினான். அவனை திரும்பி ஒரு பார்வை பார்க்க, “இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல ஏதாச்சும் பேசலாம்ல்ல”, என்று பாவமாய் கேட்டான்.

“என்ன பேசணும்”, என்று கேட்டாள் தியா முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல். “அது..”, என்று யோசனை செய்தவன், சரி நீ எப்படியும் பேசமாட்ட நான் பேசுறத கேளு”, என்றவன் பேசத் தொடங்கினான்.

அவளும் வேறு வழியின்றி கேட்கத் தொடங்கினாள். கொலம்பு வந்து அடையும் வரை இதே தொடர்ந்தது.

கொழும்பு விமான நிலையத்தில் இருந்து மாலத்தீவில் உள்ள ஃபுள்ளிது தீவுக்கு வந்தடைந்தனர்.. அங்கிருந்து அவர்கள் தங்க வேண்டிய பயணியர் விடுதிக்கு செல்வதற்கு மகிழுந்தை ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தான் ஜெய்.

அவர்கள் அங்கே இருக்கும் வரை அந்த மகிழுந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவனிடம் கூறிய மகிழ்வுந்தின் உரிமையாளர் சாவியைக் கொடுத்துவிட்டு சென்றார்.

அவன் காரை கிளப்ப தியாவும் ஏறினாள். “இன்னும் கொஞ்ச நேரந்தான் தியா ஹோட்டல் போயிடலாம்”, என்று சொல்லிக் கொண்டே காரை இயக்கினான்.

“நீ பேசாம ரோட்டை பார்த்து வண்டிய ஓட்டு உனக்கு புண்ணியமா போகும்”, என்று அவனிடம் சொன்னவள் ஜன்னலின் புறம் தன் விழியை திருப்பிக்கொண்டாள். “உத்தரவு மகாராணி”,  என்றவன் சாலையில் கவனம் ஆனான். இதழின் ஓரம் சிறிய புன்னகை சிந்தினாள் தியா.

சிறிதுநேரம் கழித்து, “இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?”, என்று அவனிடம் கேட்டாள் “கொஞ்ச நேரம் தியா ஒரு  15 மினிட்ஸ்ல போயிடலாம்”, என்று அவன் கூற, “ஓ”, என்றவள் மீண்டும் வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.

இப்போதெல்லாம் அவனிடம் அவள் பேசும் ஓரிரு வார்த்தைகள் கூட சொல்லில் அடங்கா இன்பத்தை கொடுத்தது சூர்யாவிற்கு. காரணம் எதுவும் தெரியாவிட்டாலும் அவனிடம் இவ்வாறு பேசுவதில் தியாவிற்கும் ஏதோ ஓரிடத்தில் இன்பமாய் தான் இருந்தது அதை உணரத்தான் மறுத்தாள் தியா.

ஒருவழியாக அவர்கள் தங்க வேண்டிய பயணியர் விடுதிக்கு வந்து சேர்ந்தனர். அறைச் சாவியை பெற்றவன் தியாவை அழைத்துக்கொண்டு அறைக்கு சென்றான்.

மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது அந்த அறை கடலோரத்தை ஒட்டிய அறை என்று கூறலாம். ஜன்னலிலிருந்து பார்த்தாள் நீண்ட நீலக்கடலை காணலாம் அவ்வாறான அறையை மிகவும் தேடி பதிவு செய்திருந்தான் ஜெய்.

இருவருக்கும் உணவு வர அதை உண்டு முடித்தனர். நேற்றிலிருந்து நிற்காத பயணம் என்பதால் இருவருக்கும் களைப்பு சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது.

சூர்யா பொத்தென்று கட்டிலில் விழுந்தவன் உறங்கிய விட்டான். அவனை பார்த்து சிரித்தவள். பின் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு, விளக்கை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டவள், அடுத்த நொடி நித்ராதேவியிடம் சரணடைந்து விட்டாள்.

காலையில் சூரிய ஒளி கண்ணில் பட கண்களை கசக்கி கொண்டு எழுந்தாள் தியா. சூரியா இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருந்தான்.

ஒரு காலை மடக்கி கைக்குள் முகத்தைப் புதைத்து உறங்கிக் கொண்டிருந்தான் சூர்யா. அவனைப் பார்த்தவள், “நீ இன்னும் மாறவே இல்லை” என்று சொன்னவள், மெதுவாக அவன் தலையை வருடி விட்டாள். அவனிடம் சிறிது அசைவு தெரிய எழுந்து குளியல் அறைக்குள் சென்று விட்டாள்.

சிறிது நேரத்தில் அவள் குளித்து தயாராக அவள் பின்னே எழுந்தவன் தானும் குளித்துமுடித்து தயாராகி வந்தான்.

“போலாமா”, என்று கேட்க அவனை புரியாமல் பார்த்தாள் தியா. “என்ன பாக்குற”, என்று கேட்க, “எங்க போறோம்”, என்றாள்.

இது என்ன கேள்வி இங்க பார்க்கறதுக்கு செய்யறதுக்கு இவ்ளோ விஷயம் இருக்கு தெரியுமா? நீ என்னடானா எங்கன்னு கேட்கிற.. கம் கம் கம்”, என்று அவளை இழுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான். காலை உணவை முடித்து கொண்டு வெளியே வர,

“எங்க போறேன்னு சொன்னா தான் வருவேன்”, என்று பிடிவாதமாக அவள் சொல்ல, ” ஓகே சொல்றேன்.. மோதல நம்ம சண்ட் பங்க்ஸ் போறோம்.. அப்றம் டால்பின் க்ருஸ் போறோம் ஓகேயா இப்போ போலாமா”, என்று அவன் அவனை பார்த்து கொண்டே கேட்க சிறிது யோசித்தவள் சரி என்று தலையாட்ட இருவரும் கிளம்பினர்.

முதலில் சண்ட் பேங்க்ஸ் சென்றனர். அங்கு அவர்களை இறக்கிவிட்ட அந்த சிறு படகு உரிமையாளர், நீங்கள் சிறிது நேரம் இங்கு இருக்கலாம் நான் பிறகு வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன்.. என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

தியாவிற்கு அந்த இடம் மிகவும் பிடித்து இருந்ததுஅவன் அங்கிருந்த நாற்காலியில் அமர தியாவோ கால்கள் நனையுமாறு அந்த மணலில் அமர்ந்தாள்.

சிறிது நேரம் மௌனமாக கழிந்தது. தியாவிற்கு அந்த இடத்தின் வனப்பை காண இரண்டு கண்கள் போதவில்லை என்றே கூறலாம்.

அவள் முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சியை அதை பார்த்தவனுக்கு மனம் நிறைந்து போனது. சிறிது நேரத்தில் அவன் அருகில் சென்று அமர்ந்தான் . அவன் அமர்ந்ததே அறிந்தவள், அவனைப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் மீண்டும் அவ்விடத்தை ரசிக்க தொடங்கினாள்.

“பிடிச்சிருக்கா”, என்று அவன் கேட்க “ரொம்ப”, என்றாள் கைகளை ஆட்டி கண்கள் மின்னிட, ” தேங்க்யூ தியா”, என்றான், அந்த கடலை வெறித்தவாறு.

“நீ எதுக்கு சொல்ற நான் தானே உனக்கு சொல்லணும், நீ இங்க என்ன கூட்டிட்டு வந்தது ஒரு பெரிய தேங்க்ஸ்.. இந்த இடம் எவ்ளோ நல்லா இருக்கு பாரு”,  என்று உற்சாகத்தில் சொன்னாள் தியா.

“மெளிதாகப் புன்னகைத்தவன, “நான் அதுக்கு சொல்லல நீ என் கூட பேசறதுக்கு தேங்க்யூ சொன்னேன்..”, என்றான் அவள் புறம் திரும்பி அமர்ந்தவாறே,

அப்போது தான் அவளும் உணர்ந்தால் அவனிடம் ஒருமையில் உரிமையாக தான் பேசுவதை,

சட்டென்று மனம் ஏதோ எடுத்துரைக்க ஒரு நொடியில் வந்து சென்ற கடந்தகால நினைவுகளை விரட்ட வழி தெரியாமல் கண்களை இருக்கமாக மூடிக்கொண்டாள்.

மீண்டும் கண்களைத் திறந்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “ப்ளீஸ் தியா பேசாம இருக்காத பேசு”, என்று அவள் கைகளை பற்றிக்கொண்டான் எதுவும் பேசாமல் தன் கைகளை விடுவித்துக் கொண்டவள், எங்கோ பார்த்தாள்.

“தியா என்ன பாரு ப்ளீஸ்”, என்று அவன் கெஞ்ச, “நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்”, என்றாள் சத்தமில்லாமல்.

அதை கேட்டவன், “நல்ல வேணும் எனக்கு அவளே பேசுனா.. லூசு மாதிரி ஏதேதோ பேசப் போய் இப்படி ஆயிருச்சு”, என்று தன்னைத்தானே நொந்து கொண்டான் சூர்யா.

“இப்போ பீல் பண்ணி என்ன ராசா  ஆகப்போகுது”, என்று மனசாட்சி ஏளனம் செய்ய அதை அடக்கியவன்,

இல்ல நான் போக மாட்டேன் நீ என் கூட பேசி தான் ஆகணும்”,என்று அவளிடம் மல்லுக்கு நின்றான்.

“புரிஞ்சுக்கோ சூர்யா நீ நினைக்கிறது எல்லாம் எப்போவும் நடக்க போறது இல்ல நீதான் நிதர்சனத்தை ஏத்துக்கணும்”, என்று இப்போது அவனை பார்த்து சொன்னாள்.

அவள் பேசியதை உள் வாங்கியவன், நான் நினைக்கிறது நடக்காதா அப்படி நான் என்ன நினைச்சுட்டு இருக்கேன்.. சொல்லு.. ஏன்னா உன் கிட்ட பேசாம இருக்கிறதால நீ என்ன நினைக்கிறனு என்னால புரிஞ்சுக்க முடியல.. ஆனா உன்னால நான் என்ன நினைக்கிறேன் புரிஞ்சுக்க முடியுது இல்ல அதனால தான நான் நினைக்கிறது நடக்காதுன்னு சொல்ற…

அப்ப சொல்லு நான் என்ன நினைக்கிறேன் என்று அவளிடம் விதண்டாவாததிற்கு நின்றான்.

ப்ச் என்று சலித்துக் கொண்டவள், வேறு புறம் திரும்பிக் கொண்டாள், அவனை பாராமல்.

சட்டென்று அவனை வேகமாக தன் புறம் திருப்பியவன், “சொல்லு எனக்கு பதில் தெரியணும்.. நான் என்ன நினைக்கிறேன்னு..”, என்று அழுத்தமாக சொன்னான் அவள் கண்களை ஆழமாக பார்த்தவாறு.

“எனக்கு ஜோசியம் எல்லாம் தெரியாது சூர்யா.. நீ நினைக்கிற எல்லாத்தையும் அப்படியே சொல்ல.. என்ன பொறுத்த வரைக்கும் உன் மனசுல இப்போதைக்கு என்ன மாத்த முடியும்.. என்ன உன் கூட பழைய மாதிரி பேச வைக்க முடியும். ஏன் நாம சேர்ந்து வாழலாம்னு கூட நீ நினைக்கலாம்”, என்று அவள் அப்படியே சொல்ல திக்கென்று இருந்தது சூர்யாவிற்கு.

“என்ன சரியா சொல்லிட்டேனா” என்று அவள் கேட்க ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினாள். அவனை பார்த்து லேசாக புன்னகைத்தவள் அவன் பார்ப்பதற்குள் பார்வையை மாற்ற முயல, அவன் கண்களில் பிடிபட்டது அவளது செயல்.

அவள் மனதை புரிந்து கொண்டவன் “இவ்ளோ நேரம் நீ இப்போ சொன்ன என்னோட மனசுல இருக்க எல்லாம் நடக்குமா நடக்காதான்னு.. ஒரு சந்தேகம் இருந்துச்சு இப்போ நம்பிக்கை வந்திடுச்சு எல்லாமே நடக்கும்.. என்னோட ரதி எனக்கு கண்டிப்பா திரும்பவும் கிடைப்பா..”, என்று அவன் உறுதியாக சொல்ல, பாக்கலாம் என்றாள் சிறு சிரிப்போடு..

அவர்களை அழைத்துச் செல்ல அந்த படகின் உரிமையாளர் வர அவரோடு கரைக்கு வந்தவர்கள் மதிய உணவு அருந்தி விட்டு அடுத்ததாக டால்பின் க்ரூஸைக் காண சென்றனர்..

“இந்த சூர்யா பையன் போனதில இருந்து ஒரு போன் ஆச்சும் பண்றானா?. இல்ல நம்ம பண்னா தான் ஒழுங்கா எடுத்து பேசறானா.. அங்க என்ன நடக்குது எதுவுமே தெரியலையே.. இவன் எப்படி போனா எனக்கு என்ன.. என் தியா மா என்ன பண்றான்னு? தெரியலையே!

நம்ம இவனை நம்பி அனுப்பி இருக்க கூடாது.. தப்பு பண்ணிட்டியேடா ஜெய்.. இந்த லூசு பய..கிறுக்கு பயல நம்பி தியாவ அனுப்பியிருக்க கூடாது”,என்று தான் தான் அவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம் என்ற நினைவு கொஞ்சம் கூட இல்லாமல் சூரியா மேல் ஆதங்கப்பட்டு கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஜெய்..

அப்போது அங்கு சுவாதி ரிதுவை துரத்திக் கொண்டிருந்தாள். ஜெய் பார்த்ததும் ரிது அவனிடம் ஓடி வர, “அண்ணா.. அண்ணா காப்பாத்து உன்னோட வருங்கால பொண்டாட்டி கிட்ட இருந்து.. என்ன கொல்ல பாக்குற” என்று அண்ணனிடம் புகார் பத்திரம் வாசித்துக் கொண்டே அவனை சுற்றி ஓடினாள் ரிது.

“ஒழுங்கா தள்ளிப்போங்க ஜெய் இன்னைக்கு அவள நான் சும்மா விடமாட்டேன்”, என்று தானும் தன் பங்கிற்கு கத்திக்கொண்டே ரிதுவின் மண்டையை பிளக்க கையில் பூரிக்கட்டையோடு துரத்தினாள் சுவாதி..

ஜெயின் பின்னால் தஞ்சமடைந்த
ரிது, ஸ்வாதியிடம் சிக்காமல், போக்கு காட்டினாள்.

அண்ணா அண்ணா ப்ளீஸ் நான் காப்பாத்து.. அவள மட்டும் பிடிச்சுக்கோ.. நான் ஓடிடுவேன் அதுக்குள்ள.. நீ மட்டும் இதை பண்னா நான் உனக்கு ஒரு சூப்பர் விஷயம் சொல்லுவேன்.”, என்று அண்ணனிடம் ஒப்பந்தம் போட,

அதற்கு சரி என்றவன், இரண்டு அடிகள் முன்னால் வந்து ஸ்வாதியின் கைகளை வளைத்து தன்னோட அணைத்தவாறு பிடித்துக்கொண்டான்.

அவன் திடீரென்று இவ்வாறு செய்ய அதிர்ந்து சிலையென ஆனால் ஸ்வாதி.  இந்த சிறிய கேப்பை பயன்படுத்திக்
கொண்ட ரிது அங்கிருந்து ஓடி மறைந்தாள்.

சில நொடிகளில் தன்னை மீட்டு கொண்டவள், “விடுங்க..”,  என்றாள்.. கெஞ்சலாக ஜெய்யிடம்.. ஆனால்  அவனிடமிருந்து விடுபட எந்த முயற்சியும் அவள் செய்யவில்லை..

அவள் செயலில் சுவாரசியமானவன் “கேக்கல”, என்றான் வேண்டுமென்றே விடுங்கன்னு சொன்னேன்.. ஜெய் அத்தை கிச்சன்ல தான் இருக்காங்க பார்த்தா என்ன நினைப்பாங்க”, என்று அவள் பதற்றமாக கேட்க,

அவள் பதற்றத்தையும் அவஸ்தையும்  பார்த்து ரசித்தவன், “என்ன நினைப்பாங்க”, என்று அவளிடம் திருப்பிக் கேட்டான்..

அவன் அருகாமையில் சிவந்த கன்னங்களை மறைக்கவே பெரும் பாடுபட்டவள் இப்போது அவனிடம் பேச முடியாமல் தவித்தாள்.

“சொல்லு சுவாதி என்ன நினைப்பாங்க”, என்று மீண்டும் அவளை சீண்டினான்.  “விடுங்க ஜெய்”, என்று கொஞ்சலும் கெஞ்சலும் வந்தது அவளது குரல்..

அதில் இன்னும் இன்னும் தான் அவளிடம் நெருங்க அவனது மனமும் ஆசை கொண்டது. ஜானகி வரும் சத்தம் கேட்டவள் சட்டென அவனை தள்ளி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள்.

தன்னை திரும்பி பார்த்துக் கொண்டே செல்லும் அவளை விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தவன், “எங்கு போனாலும் என்கிட்ட தானே வரணும்”, என்றான் அவளுக்கு கேட்கும் வகையில் அதை கேட்டு சிரித்து கொண்டே சென்று விட்டாள்..

சிறிது நேரத்தில் காப்பியைக் கலந்து கொண்டு வந்த ஜானகி, “ஸ்வாதிமா இதை ஜெய் கிட்ட கொடுத்திடு.. தலை வலிக்குதுனு சொன்னான் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு”, என்று தன் மருமகளின் நிலை அறியாமல் காபி கப்பை திணித்து விட்டு சென்று விட்டார் ஜானகி.

“இந்த அத்தை எப்பவுமே இப்படித்தான்… இதே வேலையா போச்சு எப்போலாம் அவர்கிட்ட இருந்து தப்பித்தா போதும் வரேனோ அப்போலாம் கரெக்டா வந்து இதை அவங்கிட்ட குடு.. அதை அவங்கிட்ட குடுனு.. அவர் கிட்ட கொத்துவிடறதே வேலையா போச்சு.. இதெல்லாம் தெரிந்து செய்கிறார்களா தெரியாமல் செய்கிறார்களா.. ஒன்னும் தெரியல எல்லாம் அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம்..”, என்று நொந்து போனவள் ஜெயின் அறை வாசலில் உள்ளே எப்படி செல்வது என்று தயங்கிக் கொண்டே நிற்க,

“சும்மா தானே நிக்கிற இதை நினைச்சுக்கிட்டே நில்லு”, என்று அவளது நினைவு அவன் இதழ் முத்தம் பரிசளித்த நாளுக்கு சென்றது..

இடைவிடாமல் பேசி கொண்டே போன ஸ்வாதியின் பேச்சு தடை பட்டது.. அவள் கேள்விகள் அனைத்திற்கும் பதிலை தன் ஒற்றை இதழ் முத்தத்தில் அவன் கூற தொடங்க,

அவன் செயலில் அதிர்ந்த ஸ்வாதியின் விழிகள் பெரிதாய் விரிய, அவனோ அதிர்ச்சியில் விரிந்த அவளது விழிகளை பார்த்து கொண்டே தன் பணியை தொடர்ந்தான்.

அவனை தன்னிடம் இருந்து விலக்க கூட அவள் முற்படவில்லை. சில நிமிடங்கள் அவள் மூளை கூட செயல் பட மறுத்தது போலும்.

அவனே போதும் என்று அவளிடம் இருந்து விலகி, அவள் முகம் காண அவள் அப்படியே நின்றாள்., அவளை கண்டு புன்னகைத்தவன், “இன்னும் வேணும்னா கேட்கணும் இப்படியே நிக்கக் கூடாது ஸ்வா”, என்று அவள் செவிகளில் இதழ் உரச கூறினான்.

அவனது இந்த ஸ்பரிசத்தில் தன்னிலை அடைந்தவள், நூலிடை தூரத்தில் நின்றவனை தள்ளி விட்டாள். அவனோ சிரித்துக் கொண்டே இரண்டு எட்டுக்கள் பின்னால் போனான், அப்போதும் அவள் மீது இருந்த தன் பார்வையை அகற்றவில்லை.

அவனை முறைக்க முயல, அவளால் மருந்துக்கு கூட முறைக்க முடியவில்லை. மேலும் கன்னங்கள் வேறு செவ்வானதிற்கு போட்டியாக சிவந்து இன்னும் இன்னும் அவளுக்கு சதி செய்ய, அவளால் என்ன தான் செய்ய முடியும்.

இதற்கு மேல் இங்கு நிற்பது வம்பு இன்று எண்ணி கொண்டவள், அங்கிருந்து வேகமாக நகர பார்க்க, குடு குடுவென ஓடி வந்து அவளை வழி மறைத்தான். அவன் எதுவும் பேசாமல் வழியையும் விடாமல் நிற்க,

“நகருங்க ஆக்..”, என்று எப்போதும் இல்லாமல் இன்று அவன் பெயரை சொல்ல கூட வெட்கம் தடுக்க, நொந்து போனாள், ஸ்வாதி.

அவள் நிலையை பார்க்க இன்னும் இன்னும் தான் அவனுக்கு சுவாரசியம் கூடி கொண்ட போக, இன்னும் தான் அவளை சீண்ட மனம் ஆசை கொண்டது.

“கம் ஆன் ஸ்வா.. பேசு. எதுக்கு இப்டி வித்தியாசமா பிஹேவ் பண்ற.. என்னமோ கேட்க வந்தியே என்னனு சொல்லு “, என்று எதுவும் அறியாதவன் போல, சிரிப்பை அடக்கி கேட்க,

அவனது இந்த நக்கலில் இப்போது வெட்கம் போய் கோபமே வந்து விட்டது ஸ்வாதிக்கு, “அதெல்லாம் ஒன்னும் இல்லை.. வழி விடுங்க நான் போகணும்.”, என்று அவள் முறுக்கி கொள்ள,

அவளது இந்த பாவனை கூட அவனை மயக்க தவறவில்லை, “என்ன டா இது என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ஸ்வா என்ன பண்ணாலும் ரசிக்க தோணுது.. “, என்று மனதை கேள்வி கேட்க பதில் ஏதும் கிட்டவில்லை.

“ஓ.. மேடம்க்கு இப்போ திடீர்னு என்ன ஆச்சு.. கோவம்லாம் வருது.. என் ஸ்வாக்கு கோப பட கூட தெரியுமா”, என்றான் அவளை நோக்கி அழாமன பார்வை பார்த்தவரே,

“என் ஸ்வா”, என்ற வார்த்தையே அவளுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகளை பறக்க செய்ய, அமைதியாக நின்றாள்.

விளையாட்டை  கைவிட்டவன், “சரி கேளு.. உனக்கு என்ன தெரியனும்.. கேளு நான் பதில் சொல்றேன்”, என்று அவன் நேரடியாக கேட்க,

“அது.. அது வந்து ஆகாஷ்.. எனக்கு.. நான்.. என்ன .. அது நீ “, என்று அவள் ராகம் பாட, அவளை சுவாரசியமாக பார்க்க தொடங்கினான். அவன் பார்வையில் வந்த அரை குறை பேச்சும் காணாமல் போக,

“எனக்கு தெரியும்.. நீ என்ன கேட்க வரனு.. அதுக்கான பதில் வேணுமா.. நான் சொல்லணும் நீ நினைக்கறையா? ஸ்வா”, என்று காதல் பார்வை வீச,

அவள் என்ன சொல்வாள், அவனுக்கு தன் மீது காதல் உள்ளது என்பதை உணர்ந்து விட்டாள், இதற்கு மேல் அதை மீண்டும் கேட்க வேண்டுமா.. என்று அவள் எண்ண,

மனமோ அவன் வாயால் ஒருமுறை கேட்க தூண்டியது, அவள் பதிலுக்காக அவன் காத்திருக்க, என்ன சொல்வது என்று தெரியாமல், ஆம் இல்லை என்று மாறி மாறி தலையை ஆட்டினாள்.

அதில் சிரிப்பு தான் வந்தது அவனுக்கு. “சில விஷயங்கள சொல்றத விட சொல்லாம விடறது தான் அழகு ஸ்வா.. இதுக்கு மேல நான் சொல்லனுமா”, என்றவன் வாய் மொழி அவளுக்கு புரிந்தோ இல்லையோ,

“சொன்னால் தான் காதலா” என்ற அவன் விழி மொழி நன்றாகவே அவளுக்கு புரிந்தது.

“வேண்டாம்”, என்று சொன்னவள், “நான் போகவா”, என்று கேட்க, சிறு சிரிப்போடு வழிவிட்டான்.

வெளியே வந்து, தன் அறைக்குள் தஞ்சம் புகுந்தவளுக்கு மீண்டும் மீண்டும் அவன் ஸ்பரிசமும் அவன் வார்தைகளுமே நினைவில் புகுந்து இம்சித்தது.

அன்றில் இருந்து, இன்று வரை அவனை பார்த்தாலே இயல்பாக இருக்க முடியாமல் தவிக்கிறாள் பாவம் பாவை அவள். 

பல முறை தன் மனதிடம் கேட்டு விட்டாள், “இது தான் காதலா?. காதல் வந்தாள் இப்படி தான் இருக்குமா?”, என்று அந்தோ பரிதாபம் அதுக்கு மட்டும் பாவம் என்ன தெரியும்.

காதலிப்பது சுகம் என்றாள் ஒருவரால் காதலிக்க படுவதும் சுகம் தானே.. இருவரும் சொல்லி கொள்ள வில்லை என்றாலும் ஒருவர் மீது ஒருவருக்கு உள்ள அன்பையும் காதலையும் மற்றொருவர் உணர்ந்து தானே உள்ளனர்.

இவை அனைத்தையும் நினைத்து கொண்டே காபி குவளையோடு, ஜெய் அறை கதவின் அருகில் நிற்க, சட்டென கதவுகள் திறந்து அவளை உள்ளிழுத்து கொண்டு மீண்டும் மூடி கொண்டது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்