Loading

அத்தியாயம்  10 ❤

❤ குழந்தையவள் அடம் பிடிக்கிறாள் என்பதற்காக ,
அவளது கைகளில் என்னவனை நான் பொம்மையென ஒப்படைக்க வேண்டுமா  ❤️

மஹிமாவின் செய்கைகள் தீக்ஷிதாவிற்கு மேலும் மேலும் குழப்பத்தை அதிகரிக்க தலையே வெடித்து விடும் அளவிற்கு அவளது நிலை பரிதாபமாகி விட்டது.

தீக்ஷிதா ” தேவுடா ( கடவுளே ) இது என்ன பெரிய மண்டை வலியா இருக்கு.இந்த மஹிமா என்ன நல்லா குழப்பி விட்டுட்டு போய்ட்டா ! ஒருவேளை  எனக்குப் பதிலா  அவளைதஅ தான் கார்த்திக் லவ் பண்ணனும்னு , என்ன அவன் கிட்ட இருந்து பிரிச்சு விடப் பாக்குறாளா  ? ” தீக்ஷிதாவின் கண்கள் கார்த்திக்கை ஏறிட்டன.

நண்பனுடன் வெகு சுவாரஸ்யமாக  உரையாடிக் கொண்டு இருந்த அவனது துறுதுறு நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அவளை ஈர்க்க , தீக்ஷிதா ஒரு முடிவெடுத்து விட்டாள்.

கார்த்திக்கைப் பற்றி யார் என்ன சொன்னாலும், தான் அவனை காதலிப்பதை நிறுத்தப் போவதில்லை என்றும், அவனையும் காதலிக்க வைக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தாள்.

” என்னோட காதலுக்கு இடையில் அந்த மஹிமா மறுபடியும் குறுக்க வந்தான்னா , இந்த தீக்ஷிதா யாருனு அவளுக்குக் காட்றேன் ” என்று சபதம் எடுத்துக் கொண்டாள் தீக்ஷிதா.

கார்த்திக் ” டேய் மச்சி  ! என்னடா ! தியா உன்னைக் கண்டுக்கவே மாட்டேங்குறா  ? “

தமிழ்  ” நீ வேற வயித்தெரிச்சலைக் கிளப்பாத !”

கார்த்திக் ” ஏன்டா ! காலைல தான் தியா வந்தவுடனே ரொம்ப  எதிர்பாத்துட்டு இருந்த. இப்போ என்னடான்னா இப்படி சொல்ற  ? “

தமிழ் ” அவ வேற ஒருத்தரை லவ் பண்றாளாம்டா. அவனும் நம்ம காலேஜ் தான் “

கார்த்திக் ”  இத நீ புரப்போஸ் பண்ணும் போதே  சொல்லி இருக்கலாம்ல.இவ்ளோ லேட்டா சொல்றா “

தமிழ்  ” விடுடா . வேற ஏதாவது பேசு “

நீ எதுக்கும் கவலைப்படாதடா. உன் மனசுக்கு உன்னை மட்டுமே லவ் பண்ற ஒரு பொண்ணு வருவா “

தமிழ் ” வந்தா நல்லா தான் இருக்கும். ஆனா அப்படி யாரும் வருவாங்கனு நம்பிக்கை இல்லைடா “

கார்த்திக் ” நீயா எதையாவது லூசு மாதிரி யோசிக்காதடா.அதெல்லாம் வருவாங்க.வா வீட்டுக்குப் போகலாம் “இருவரும் வீட்டை அடைந்து உள்ளே சென்றனர்.

தமிழ் சோஃபாவில் அமர , கார்த்திக் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அவனருகில் அமர்ந்தான்.

அவன் தண்ணீரைக் குடித்து முடித்ததும்,

தமிழ்  ” இன்னைக்கு நைட் உன்னோட சமையல் தான் ஞாபகம் இருக்குல்ல ? “

கார்த்திக் ” நல்லாவே ஞாபகம் இருக்கு. ஆனா காய் இருக்கானு தெரிலயே  ? “

தமிழ் ” இருக்குதானுப் பாக்குறேன் ” என காய்கறிக் கூடையைப் பார்க்க அது காலியாக இருந்தது.

”  காய் எதுவுமே இல்லடா.வாங்கிட்டு தான் வரனும் “

அப்போ எட்டு மணிக்குப் போய் வாங்கிட்டு வந்துடலாம் “

தமிழ் ” அடேய் ! எட்டு மணிக்கா  ! எனக்கு இப்போவேப் பசிக்குதுடா “

கார்த்திக் ” ரொம்ப பசிக்குதுனா இன்னைக்கு டின்னர் வெளிய சாப்பிட்டுக்கலாமா  ? “

வெளிய வேணாம்டா. அந்தக் காசுக்கு காய் வாங்குனோம்னா ஒரு வாரத்துக்கு வீட்லயே சமைச்சுடலாம். அதுனால நாம ஏழு மணிக்கு கடைக்குப் போகலாம் “

கார்த்திக்கும் அதை ஆமோதித்தான்.

அப்போது அவனது மொபைல் ஒலிக்க,

” ஹலோ ஏய் சொல்லுடி ஹிமாவாரி  ! “

எது ஹிமாவாரியா  ? அப்டின்னுக் குழம்பாதிங்க. நம்ம கார்த்திக் சின்சான் பைத்தியம். அதுதான் தாமரையை ஹீமாவாரினு கூப்பிட ஆரம்பிச்சுட்டான்.

தாமரை அவனது காது செவிடாகும் படி கத்த ஆரம்பித்தாள்.

” டேய் ! என்ன அப்படிக் கூப்பிடாதடா. அப்பா இவன் என்ன ஹீமாவாரினுக் கூப்பிட்றான்பா  ? “

” ஏன்டி  கத்தற !!! உங்கள் அப்பா வெளிய கிளம்பிப் போய்ட்டாரு ” அம்மா அவளை அடக்கினார். கார்த்திக் சிரித்தான்.

” எருமை  ! உனக்குப் போய் கால் பண்ணி பேசுறேன் பாரு என்ன சொல்லனும். “

கார்த்திக் ”  எதுக்குக் கால் பண்ண  ? விஷயத்தைச் சொல்லு  ? “

” அம்மா தான்டா உனக்கு எப்போ லீவ் விடுவாங்கனு கேட்டாங்க.ஊருக்கு வர ஐடியா இருக்கா ? இல்லையா  ? “

கார்த்திக் ” லீவ் எப்போ குடுப்பாங்கனு தெரிலடி. சொல்லிட்டாங்கனா கண்டிப்பாக இந்த தடவை ஊருக்கு வர்றேன் “

”  நீ பேசனது போதும்.குடு ”  காஞ்சனா அவளிடம் இருந்து மொபைலை வாங்கினார்.

ஹலோ கார்த்தி  ! எப்படிப்பா இருக்க  ? ”  அவர்களது சம்பாஷணைகள் தொடர விட்டு விட்டு,

நாம் தீக்ஷிதா யாரென்று பார்த்து விடுவோம்.

கார்த்திக்கிடம் பேசிய மொழியிலேயே தெரிந்திருப்பீர்கள் அவளது தாயகம் ஆந்திராவில் ராஜமுந்திரி.அவளது அப்பா சுந்தர ரெட்டி.பெரிய தொழிலதிபர் . ஆனால் ஆந்திராவில் அவரது தொழிலிற்கு அவ்வளவு வரவேற்பு கிடைக்காததால் தமது தொழிலை தமிழகத்திற்குக் கொண்டு வந்து விட்டார். தீக்ஷிதா  பள்ளிப் படிப்பை அங்கே படித்து முடித்து விட்டு , பி. பி. ஏ -யும் தமிழகத்தில் படித்ததால் விரைவிலேயே தமிழ் கற்றுக் கொண்டாள்.அம்மா சத்யா சிறு வயதிலேயே இறந்து விட்டதால் தாயன்பிற்காக ஏங்கும் குழந்தையாகவே வளர்ந்தாள்.தந்தை பிரியம் காட்டினாலும் தாயின் இடத்தை நிரப்ப யாராலும் முடியவில்லை.

கார்த்திக் படிக்கும் அந்த கல்லூரியில் எம். பி. ஏ  சேர்ந்ததும் , அவனது நடவடிக்கை அவளை மிகவும் பாதிக்க ,மனதளவில் தனக்கு கார்த்திக்கை விட சரியான இணை யாரும் இல்லை என இந்த நான்கு மாதங்களில் கண்டு கொண்டாள்.அவளது முடிவு தவறு என யார் அவளுக்கு உணர்த்தப் போகிறார்கள் ???

விடுதியை அடைந்த மஹிமாவும் , ஶ்ரீயும் தங்களது அறைக்குள் நுழையும் போது திவ்யா காதில் மொபைலை வைத்துக் கொண்டே அவர்களை வரவேற்றாள்.

ஶ்ரீதேவி  ”  எப்போ பாத்தாலும் மொபைலை காதுல வச்சுட்டே அலையுறாளே ! இவளுக்கு வேற வேலையே கிடையாதா  ? “

மஹிமா ”  அவ என்னமோ பண்ணிட்டுப் போறா  ! விடு ஸ்ரீ “

இவர்கள் இரவு உடையை எடுத்துக் கொண்டு இருக்கும் போது ,

திவ்யா ” என்ன ரெண்டு பேரும் ட்ரஸ் சேஞ்ச் பண்ணப் போறிங்க  ! மறந்துட்டிங்களா ? வர்ற செவ்வாய் கௌரிக்குப் பர்த்டே.
கிஃப்ட் வாங்கப் போகனும்னு ப்ளான் பண்ணோம்ல. இன்னைக்கு நைட் போய் வாங்கிட்டு வந்துடலாம்  “

மஹியும் , ஶ்ரீயும் ”  ஆமா மறந்துட்டோம் !!!எத்தனை மணிக்குப் போகலாம்  ? “

திவ்யா ” ஏழு மணிக்குப் போய் வாங்கிட்டு சீக்கிரம் வந்துடுவோம் “

–  தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்