Loading

——————

அனைவரின் மனதையும் காப்பியன் தயார் நிலைக்குக் கொண்டுவந்தான்.

“சார் கடைசியா ஒரு கேள்வி” மதுபல்லவி.

“கேளுங்க மதுபல்லவி” காப்பியன்.

“எங்களை எங்க கடத்தி வச்சிருந்தீங்க?”

“நீங்க எல்லோரும் அண்டார்டிகா கண்டத்தில் இருந்தீர்கள்” காப்பியன்.

அனைவரும் வாயைப்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஏன்?”  மதுபல்லவி.

“செவ்வாய் கிரகம் நம் பூமிக்கு அடுத்த கிரகம். சூரியனிலிருந்து சற்று அதிக தொலைவு என்றும் கூறலாம். அதனால் அங்க குளிர் அதிகமாக இருக்கும். செவ்வாயின் வளிமண்டலத்தில் ஆக்சிசனின் அடர்த்தி மிகக்குறைவு. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், அங்கு செயற்கை உயிர்வளி இல்லாமல் மனிதனால் சுவாசிக்க முடியாது. கதர்வீச்சுகளும் அதிகம். நம் ஓசோன் அடுக்கு போல் அங்கு எதுவும் இல்லை. அதனால் உங்கள் அனைவரையும் ஒரு செயற்கை கூண்டிற்குள் சில தினங்கள் வாழ வைத்தோம்” காப்பியன்.

“புரியல” திருநல்லன்.

“நீங்க வாழ்ந்தது கிட்டத்தட்ட செவ்வாய்ல நாங்க கட்டியிருக்க செயற்கைக் கூண்டு. செவ்வாய்ல முழுக்க முழுக்க கார்பன் டையாக்சைட்தான். அதில் கொஞ்சமே கொஞ்சம் ஆக்சிசன் இருக்கு. அதனால அங்க போனா விண்வெளி உடை இல்லாம வெளில போக முடியாது‌. முழுக்க முழுக்க மூடப்பட்ட ஒரு கட்டிடத்திற்குள் வாழ்ந்தாகணும். அதை பைலட் ஸ்டேஜ்ல பூமில செஞ்சு , உங்களை வாழவும் வச்சுப் பார்த்தோம். அதில் உங்கள் யாருக்கும் ஒன்னும் ஆகலை” காப்பியன்.

இதைக் கேட்டதும் அனைவரும் வாயைப்பிளந்தனர்.

என்ன? செயற்கைக் கூண்டிற்குள் இத்தனை நாள் வாழ்ந்தோமா என்று சிந்தனையுடன் காப்பியனைப் பார்த்தனர்.

அவர்களின் திகைப்பைப் பார்த்தவன் மீண்டும் தொடர்ந்தான்.

“அங்க வாழத் தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கு. அதாவது உள்ளுக்குள்ளே. எதற்காகவும் நீங்க வெளில போக வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே இருபது பேர் கொண்ட இரண்டு குழுக்கள் அங்கே போய் அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டனர். அவர்கள் அனைவரும் ஒருவகையில் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி சம்மந்தப்பட்ட வீரர்கள். நீங்கள் அனைவரும் அங்கு வாழப்போகும் சாதாரண பிரஜைகள்” காப்பியன்.

“சார்… க்ரீன் கார்ட் மாதிரி ஏதாவது உண்டா?” என்ற தணிகையை முறைத்தான் காப்பியன்.

“டேய்… இது உனக்கே ஓவரா இல்லை” இரட்டையர்.

“இதுல என்ன தப்பு இருக்கு. இவுங்க ஆராய்ச்சிக்கு நாம உயிரைப் பணயம் வச்சிருக்கோம். நமக்கு க்ரீன் கார்ட் மாதிரி ஏதாவது குடுக்கணும்ல. சரி அது இல்லைன்னா போகட்டும். செவ்வாயின் குடிமகன்னு ஆதார் கார்டாச்சும் குடுங்க சார்” என்று தணிகை வாயாட, காப்பியன் விழித்தான்‌.

“டேய்.. எப்படிடா இப்படிலாம் யோசிக்கிறீங்க. இது எங்க ப்ளான்லையே இல்லையே” காப்பியன்.

“சார்.. அவன் மூளையை எப்பவுமே ப்ரெஷா வச்சிருப்பான். என்னமோ இன்னைக்கு இத்தனைக் கேள்வி கேக்குறான்” வேதன்.

“டேய்…. உனக்கும் சேர்த்துதான் பேசுறேன்” தணிகை.

“ஆமா… இவன் பெரிய சுதந்திர போராட்ட வீரர். எனக்கும் சேர்த்து சுதந்திரம் வாங்குறாரு” வேதன்.

“சண்டைப் போட்டா என்ன நிலைமைன்னு ஏற்கனவே செயல்முறை விளக்கம் கொடுத்துருக்கோம். அப்பவும் புத்தி வரலை” காப்பியன்.

“ஆத்தாடி.. செவ்வாய்ல போய் சோறு இல்லைன்னு சொல்லிறாதீங்க சார்” சித்திரன்.

“டேய்.. நீங்க ரெண்டு பேரும் பேசாம வாய மூடிட்டு இருங்க” இரட்டையர்.

“ஆமா… எப்படி எங்களை தேர்ந்தெடுத்தீங்க” திருநல்லன்.

“இது என்ன கேள்விப்பா. இது என்ன நீட் தேர்வா? பரீட்டை வச்சு தேர்வு செய்ய” இரட்டையர்.

“இல்லம்மா.. அதுலையும் ஏதோ சூட்டமம் இருக்கு” திருநல்லன்.

“ஆமா சார்… திருநல்லன் சாரைத் தவிற மத்த எல்லாரும் சமீபமா மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ணிருப்பீங்க‌. அதுலேர்ந்து தேர்வு செஞ்சோம்” காப்பியன்.

“என்ன எல்லாரும் மாஸ்டர் ஹெல்த் செக்கப்பா?” ஆரு.

“நாங்க ரெண்டு பேரும் செக்கப் செஞ்சோம். அக்கா, சித்திரன் சார் செஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு. இவுங்க ரெண்டு பேரும் வாய்ப்பு இல்லையே” என்று நேரு வேதனையும் தணிகையையும் பார்த்தாள்.

மற்ற இருவரும் அவளை முறைத்தனர்.

“நானும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செஞ்சேன்” தணிகை.

“நானும்..” வேதன்.

“ஏதாவது ஹாஸ்ப்பிட்டலில் இலவசமா செஞ்சாங்களோ” என்று சத்தமாக சிந்திக்க, மற்ற இருவரும் கோபம் கொண்டனர். உண்மையில் இருவரும் இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர். பரிசோதனை செய்துகொண்டால் பணமும் பழமும் தருவதாகக் கூற, அவர்கள் இருவரும் பரிசோதனை செய்துகொண்டனர்

“அது இருக்கட்டும். அது ஏன் ஓ நெகட்டிவ் ப்ளட் குரூப்பா பாத்துத் தூக்குனீங்க” மதுபல்லவி.

“ஆமா… இதை மறந்துட்டோம்” இரட்டையர்.

“என்ன எல்லாரும் ஓ நெகட்டிவா?” காப்பியன்.

“என்ன நீங்களே அதிர்ச்சியாகுறீங்க” சித்திரன்.

“இது எனக்கும் புதுத் தகவல்” காப்பியன்.

“ஏன் என்னைக் கடத்துனீங்க?” திருநல்லன்.

“நீங்க சித்த வைத்தியர். யாருக்காவது ஏதாவது ஆச்சுன்னா உங்க உதவி தேவைப்படலாம். திராவிடன் மூலமா உங்களைப் பத்தி தெரிய வந்துச்சு. அதுவுமில்லாம நீங்க மீத்தேன் திட்டத்துக்கு எதிரா குரல் கொடுத்துருக்கீங்க. உங்களையும் சேர்த்துக் கடத்தினா கேஸ் திசைத் திருப்பின மாதிரி இருக்கும். அதுக்குள்ள எங்க காரியம் சாதிச்சுடலாம்னு திட்டம். அது இல்லாம எங்களுக்கு தேவையான டெஸ்ட் எல்லாம் உங்க எல்லாருக்கும் ரகசியமா எடுத்துட்டோம். இன்னும் நிறைய பேருக்கு எடுத்தோம். அதுல உங்க எல்லாருக்கும் க்ளீயர் ஆச்சு” காப்பியன்.

“அட பாவிங்களா.. எங்குட்டுலாம் போய் யோசிச்சிருக்காங்க” வேதன்.

“காப்பியன்.. உங்க நோக்கம் நல்லதா இருந்தாலும் எனக்கு போக இஷ்டமே இல்லை. ஆனா எனக்கு வேற வழியும் இல்லை. உங்ககிட்ட முரண்டுபிடிக்க முடியாதுன்னு நல்லா தெரியும்” மதுபல்லவி.

காப்பியன் அமைதியாக அவளைப் பார்த்தான்.

“இப்போ நிச்சயம் எங்களை செவ்வாய்க்கு அனுப்பிடுவீங்க. ஆனா என் கணவர் நிச்சயம் வருவார். இது அவருக்கு ரொம்பவே வித்யாசமான வழக்கு. அதனால கொஞ்சம் டைம் எடுத்துருக்கலாம். நாங்க அங்க போன சில நாளில் அவர் வர வாய்ப்பு இருக்கு. அடுத்த விண்கலம் தயாரா இருக்கட்டும். அப்புறம் இன்னொரு விஷயம். என் குழந்தையை என்னோட அம்மாக்கிட்ட கொடுத்துடுங்க. உங்க திட்டத்தில் இவ இருக்காளா என்ன?” என்றாள் சிறு கட்டளையாக.

இல்லை என்று தலையாட்டினான் காப்பியன். உண்மையில் குழந்தை அலர்விழி அவர்கள் திட்டத்தில் இல்லை. மதுபல்லவியுடன் குழந்தை இருந்ததால், சந்தேகம் வராமல் இருக்க, அவளையும் சேர்த்துக் கடத்தும்படி ஆயிற்று.

அவள் கூறியதைக் கேட்டதும் திராவிடன் கணியைப் பற்றிக் கூறியது நினைவில் வந்தது. அவன் நூல் பிடித்து வந்துவிட்டான். ஆனால் இன்னும் சென்னியை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால் அந்த வாய்ப்பை அவனே ஏற்படுத்த திட்டம் தீட்டினான். அவர்களின் நிறுவணம் மிகப் பொரியது. இந்தியாவுடன் இந்த திட்டம் ஒப்பந்தத்தில் இருந்தது. அண்டை நாடுகளுக்கு இந்த முயற்சி தெரியக்கூடாது என்பதாலே இந்த கடத்தல் நாடகம். செவ்வாய் கிரகத்தில் இவர்கள் கோலோச்சும் வரை அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.

அனைவரும் விண்வெளி உடையை அணிந்தாயிற்று‌. இன்னும் சற்று நேரத்தில் பயணம் மேற்கொள்ளப் போகின்றனர். என்னதான் காப்பியன் அனைத்தையும் விளக்கியிருந்தாலும் ,  மனதில் பயம் மூண்டிருந்தது.
அதற்கு காரணம் இருந்தது. செவ்வாய்க்கு பயணம் செய்வதை எளிதாக்கிவிட்டனர். ஆனால் இப்பொழுது செவ்வாய்க்கு பயணம் செய்தால் இரண்டு வருடம் திரும்பி வரமுடியாது.

ஏனெனில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறைதான் செய்வாய்யும் பூமியும் அருகில் வரும். செவ்வாய் சூரியனைச் சுற்றி வர 687 நாட்கள் எடுத்துக் கொள்றது. அதாவது பூமியின் இரண்டு வருடங்களுக்கு கொஞ்சம் குறைவான நாட்கள். பூமிக்கு அடுத்து இருக்கும் கோள் ஆதலால் அதன் சுற்றுப்பாதை பெரிது. பூமியைவிட செவ்வாய் கோள் மகவும் சிறியது. செவ்வாயின் விட்டம் பூமியின் விட்டத்தில் பாதியளவுதான். செவ்வாய் விட்டம் – 6790.
பூமி விடடம் – 12750.

இதனால் இரண்டு வருடத்திற்கு ஒருமுறைதான் பூமியும் செவ்வாயும் அருகில் நேர்க்கோட்டில் இருக்கும். அப்பொழுது விண்கலம் செலுத்தினால் குறைந்த நாட்களில் பயணம் மேற்கொள்ளலாம். நாட்கள் கடக்க கடக்க செவ்வாய் பூமியைவிட்டு விலகிச்சென்றுவிடும். அதாவது சூரியனின் ஒரு பக்கம் பூமியும் மற்றொரு பக்கம் செவ்வாயும் இருக்கும் நாட்களில் பயணம் சாத்தியப்படாது. அதனால் இப்பொழுது செல்லும் இவர்கள் ஒன்று உடனே திரும்ப வேண்டும். இல்லை இரண்டு வருடங்களுக்கு பிறகு பயணப்பட வேண்டும். இதைக் கேட்டதும் வாயைப் பிளந்தனர் அனைவரும். மதுபல்லவிக்கு செவ்வாயில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

திக்..‌ திக்… நொடிகள் வந்துவிட்டது. உலகை விடுத்து பயணம் மேற்கொள்ள அனைவரும் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் தங்கியிருக்கும் அறையின் பலகணியிலிருந்து பார்த்தால் விண்கலம் தயார் நிலையில் இருப்பது தெரிந்தது. விண்கலம் கிளம்புய் முன் செய்யப்படும் ப்ரப்பரேட்டரி டெஸ்ட் அனைத்தும் முடிந்துவிட்டது‌.

விண்கலத்தில் அனைவருக்கும் ஒரு இருக்கை. அதில் அமைதியாக அமரந்திருந்தனர். யாரும் யாருடனும் பேசவில்லை. அசாத்திய அமைதி. விண்கலத்தை செலுத்த போகும் விண்வெளி வீரர்கள் ஏதோ புரியாத மொழியில் பேசிக் கொண்டிருந்தனர்.

தேவையான அனைத்து செயல்முறைகளும் முடிந்துவிட்டது. விண்வெளியைத் தலைமைத் தாங்கி நடத்த காப்பியனும் வந்தான். இது சென்னி செய்த ஏற்பாடு. காப்பியன் சென்றால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தான் சென்னி. மேலும் பயமும் இருக்காது என்றும் நினைத்தான்.

விண்கலம் பெரும் அதிர்வை ஏற்படுத்தி பூமியைவிட்டுக் கிளம்பியது. உள்ளுக்குள் இருந்து எதுவும் பார்க்கமுடியாது. எதுவும் தெரியவும் தெரியாது. இனி செவ்வாய்க்கு சென்று சேரும்வரை உண்பதும் உறங்குவதும் மட்டுமே வேலை. இன்னும் சற்று நேரத்தில் பூமி புள்ளியாய் மறைந்துவிடும். வளி மண்டலத்தில் நுழைந்து அடிவளிமண்டலம், வெம்மடுக்குமண்டலம், இடைவளிமண்டலம், வெப்பவளிமண்டலம், புறவளிமண்டலம் என்று புவியின் ஒவ்வொரு வளிமண்டலங்களாக பயணம் செய்தது விண்கலம். மேலே போக போக ஈர்ப்புவிசை குறைந்ததை உணர முடிந்தது.

சாரளம் வழியாக பூமியைப் பார்த்தனர். அவர்களுக்கே ஆச்சர்யமாக இருந்நது. பூமி உருண்டையாக இருந்தாலும், இதுவரை அதை உணர்ந்ததில்லை. பூமியின் வளைவுகளை பார்த்தனர். தூரம் செல்லச் செல்ல, பூமி ஒரு பந்து போல் ஆனது. அதன் சுழற்சியையும் உணர முடிந்தது. பூமி ஒரு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட 1000 மைல், அதாவது சுமார் 1674 கி.மீ எனும் வேகத்தில் சுழல்கிறது. இது ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகம். ஆனால் நாம் இந்த வேகத்தை உணர முடியாது.

பூமியில் மனிதனின் கைவண்ணத்தில் எரிந்து கொண்டிருந்த வண்ண வண்ண விளக்குகள், கண்டங்களின் பிரிவினைகளாக இருந்தது. பூமியே ஏதோ மாயைப்போல் தோற்றமளித்தது. சூரியன் உதிப்பதை பூமியில் இருந்தே காண முடியும். ஆனால் விண்வெளியில் இருந்நு நிலவு உதிப்பதைப் பார்த்தனர் அனைவரும். சொல்ல வார்த்தைகள் இல்லை. சலிக்கவும் இல்லை. அலுக்கவும் இல்லை.

காப்பியன் அவர்களை உண்ண அழைத்தான். அவன் அழைத்ததும்தான் அவர்களுக்கு பசி என்ற ஒன்று இருப்பதே தெரிந்தது.

அங்கு நிறைய அலமாரி போல் இருந்தது. அதில் அவர்களுக்கான உணவுகள் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கதவிலும் தேதி எழுதியிருந்தது. அதில் அன்றைய தேதி இருந்த அலமாரியைத் திறந்து அதிலிருந்த உணவை எடுத்து வந்தான். அதை சூடுபடுத்தும் வசதி விண்கலத்தில் இருந்தது. அதில் சூடுபடுத்தி அனைவருக்கும் அளித்தான். அதை செய்வதற்குள் உண்மையில் திணறிவிட்டான். ஏனெனில் நடந்து கொண்டே செய்ய முடியாதே. பாதி நேரம் மிதந்து வந்தே அளித்தான்.

மூன்று இட்லிகளும், உலர் பழங்குளும் இருந்தது.

“சார்‌ இவ்ளோதான் சாப்பாடா?” ‌தணிகை.

“ஆமாடா.. ஏன் கேக்குற” காப்பியன்.

“இது எப்படி சார் பத்தும்?” வேதன்.

“அதெல்லாம் போதும். உங்க உடம்புக்கு எவ்வளவு கேலரி வேணுமோ அதை கேல்க்குலேட் பண்ணிக் கொடுத்திருக்காங்க” காப்பியன்.

“ச்ச… ஒரு ட்ரெஸ்க்கே இத்தனை கோடி செலவு செய்றாங்க. அப்போ சாப்பாடு செம்மையா இருக்கும்னு நினைச்சேன்” தணிகை.

“ஸ்பேஸ்ல என்ன சாப்பிடணுமோ அதைத்தான் கொடுக்க முடியும். பிரியானியும் மட்டன் சுக்காவும் எதிர்பார்த்தியோ?” காப்பியன்.

“ஆமா… ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு எதிர்பார்த்தேன்” தணிகை.

“மிஸ்டர் தணிகை… வீட்ல நீ இருக்கியா இல்லையானு கூட பாக்க ஆள் இல்லை” காப்பியன்.

“புரியிது சார்.. நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு. உனக்குலாம் ஓசி சோறே பெரிசுன்னுதானே சொல்ல வரீங்க” காப்பியன்.

மதுபல்லவி மட்டும் நிலையாக ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டிருந்தாள். தேவையிருப்பின் மட்டுமே எழுந்து கொள்ளும்படி உத்தரவு. அனைவரும் உண்டு முடித்த பின்னர் ஒரு துண்டு அல்வாவை எடுத்து அனைவருக்கும் கொடுத்தான் காப்பியன்.

“தணிகை… பிரியாணியும் இருக்கு.. கவலைப்படாத. அது நாளைக்கு மெனுல இருக்கு” காப்பியன்.

“அப்புறம் ஏன் சார் என்னை ஏமாத்துனீங்க” தணிகை.

“ரொம்ப எதிர்பார்க்காத. அது பலநாள் முன்னாடி செஞ்ச பிரியாணியாம்” ஆரு..

“ஏய்.. குந்தாணி.. ஓரமா போய் உக்காரு. சும்மா கலாய்ச்சுகிட்டு” தணிகை.

“அவ சொல்றது உண்மைதான். பின்ன நாளைக்கு இங்க பிரியாணி நானா செஞ்சு குடுக்க முடியும். பதப்படுத்தப்பட்ட பிரியாணிதான் இருக்கு” காப்பியன்.

“அதுக்கு தயிர் சோறே தேவலாம் சார்” நேரு.

“ஆனா தயிர் சாதத்தில் நமக்கு தேவைப்படுற கேலரி கிடைக்காது. இங்க நாம சாப்பிடுற சாப்பாடு எல்லாம் பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து, அதில் இருக்கும் சத்துக்களை சரிவிகிதத்தில் கொடுத்திருக்காங்க” மதுபல்லவி.

“ஏன்க்கா.. அதுக்கு இங்க ஒரு சமையக்கட்டு இருந்தா நாமளே சமைச்சுக்கலாம்ல..”வேதன்.

“என்னது சமையல்கட்டா?” காப்பியன்.

“ஆமா சார்.. எதுக்கு இம்புட்டு கஷ்டப்படணும். அரிசி பருப்புலாம் எடுத்துட்டு வந்துட்டா, ஜாலியா சமைச்சு சாப்பிடலாம்” தணிகை.

“டேய்… இது ஸ்பேஸ் ஷட்டில்டா..” காப்பியன்.

“இருக்கட்டும் சார்.. இவ்ளோ பெரிய ப்ளைட் கண்டுபிடிச்சு என்ன ப்ரயோஜனம். கடைசில சோறு இல்லைங்கிறீங்க. மனிஷன் பொறந்ததே சாப்பிடத்தான்” தணிகை.

காப்பியன் அவனை முறைக்க அனைவரும் சிரித்தனர்.

“நீ பாடு சமைக்கிறன்னு வெடிக்க வச்சுட்டா..” காப்பியன்.

“என்னது வெடிக்குமா?” சித்திரன்.

“பூமிக்கும் செவ்வாய்குகம் இப்ப உள்ள தூரம் எவ்வளவுன்னு தெரியுமா? 50 மில்லியன் கிமீ. இதுதான் இருக்கதுலே குறைவான தூரம். நீங்க நினைச்சே பாக்க முடியாத தூரம். நாம எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறோம் தெரியுமா?” காப்பியன்.

“போதும் சார் தலை சுத்துது” சித்திரன்.

“எப்பவுமே வேகம் அதிகமாக அதிகமாக ஆபத்தும் அதிகம்” காப்பியன்.

“சார்.. என்ன சார்.. கீழ இருக்கும்போது ஒரு ஆபத்தும் இல்லைனு சொல்லிட்டு, இப்போ இப்படி பயமுடுத்துறீங்க”‌ ஆரு.

“பயமுடுத்தலமா.. ஆபத்து இருக்கு. ஆனால் அதற்கெல்லாம் பாதுகாப்புகள் இருக்குன்னு சொல்ல வரேன். வெடிச்சாலும் மொத்தமா வெடிக்காது. நம்ம உயிரைக் காப்பாத்திக்க ஏகப்பட்ட வழி இருக்கு. அதில் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாம் ரொம்ப பேசிக்கானது” காப்பியன்.

“அதென்ன சார் இப்ப உள்ள தூரம். அது மாறுமா என்ன. திருச்சிக்கும் சென்னைக்கும் இருக்க தூரம் என்ன மாறிகிட்டேவா இருக்கும்” வேதன்.

“திருச்சியும் சென்னையும் பூமில இருக்கு. பூமி சூரியனை சுத்தி வருது. அதே மாதிரி செவ்வாய் சூரியனை சுத்தி வருது. ரெண்டும் ஒரே நேர்க்கோட்டில் எப்பவும் சுத்தாது. பூமியோட வேகம் வேற.  செவ்வாயோட வேகம் வேற. அதிகபட்சமான தூரம் 500 மில்லியன் கிமீ. அதாவது பத்துமடங்கு அதிகம்” என்று அவர்கள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு பொறுமையாக பதில் அளித்தான் காப்பியன்.

ஆரல் தொடரும்…

செவ்வாய்க்கு போய் வாழப் போறதை ரொம்ப சாதாரணம் போல் சொல்ல முடியாது. அதனால் கொஞ்சம் அதிகமாக தகவல்கள் இருக்கும் கதையில்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்